முத்துப்பேட்டை,அக்டோபர் 15 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு மனித நேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் மாஷா மாலிக் என்கிற முஹம்மத் மாலிக் அவர்களை ஆதரித்து மாநில துணை பொதுசெயலாளர் தமீமுன் அன்சாரி அவர்கள் ஆசாத் நகரில் பிரச்சாரம் செய்தார் அதில் பேரூராட்சி குருத்து மக்கள் குறைகளை கூற தொலைபேசி மூலம் SMS வசதியை கொண்டு வரப்படும் என்றும், மேலும் பேரூராட்சியின் செயல்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக, பேரூராட்சிக்கு என்று தனிதொரு இணையலதளம் உருவாக்கப் போவதாகவும் அவர் தெருவித்தார். முத்துப்பேட்டையின் அமைதி, நல்லிணக்கம், முன்னேற்றம் என்ற 3 அம்ச திட்டத்தின் படி, முத்துப்பேட்டையை முழுமையாக முன்னேற முயற்ச்சிகள் மேற்கொள்ளப் படும் என்றும் அவர் தெருவித்தார்.ரத்த தானம் முகாம், மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் சேவை, அவசரகால பாதுகாப்பு, இப்படிப்பட்ட சேவைகளை கடந்த ௧௬ ஆண்டுகளாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் செய்து வருகிறது. இவற்றை மக்கள் அன்கிகரிப்பால் மனித நேய மக்கள் கட்சி முத்துப்பேட்டை உள்பட பரவலாக வெற்றி பெரும் என்றும் அவர் தெருவித்தார். இந்த கூட்டத்தில் TMMK வின் மாநில செயற்குழு உறுப்பினர் தாஜுதீன், TMMk நகர தலைவர் சம்சுதீன், மற்றும் கழக தொண்டர்கள், மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான். AKL .அப்துல் ரஹ்மான்
முத்துப்பேட்டையில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் மனித நேய மக்கள் கட்சியினர்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment