முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ரதயாத்திரையை வெற்றிப்பெறச்செய்ய லஞ்சம்: பா.ஜ.க தலைவர் சஸ்பெண்ட்


புதுடெல்லி, அக்டோபர் 16 : ஒரு புறம் பா.ஜ.கவின் தென்னக ஹீரோ எடியூரப்பா ஊழல்புரிந்து சிறையில் அடைக்கப்பட்ட வேளையில் ஊழலுக்கு எதிராக எல்.கே.அத்வானி நடத்தும் காமெடி யாத்திரையை குறித்து பரபரப்பான செய்திகளை வெளியிட பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் அளித்தது தொடர்பாக பா.ஜ.க ஊடக பிரிவு தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஊடக பிரிவைச் சார்ந்த சியாம் குப்தாதான் லஞ்சம் அளித்தது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதேவேளையில் லஞ்சம் கொடுத்து பத்திரிகையாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க எம்.பி கணேஷ்சிங், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நாகேந்திர சிங் ஆகியோர் மீது பா.ஜ.க நடவடிக்கை எடுக்கவில்லை.ஊழலுக்கு எதிராக அத்வானி நடத்தும் ரதயாத்திரையை வெற்றிப் பெறச்செய்ய பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் வழங்கியது சர்ச்சையை கிளப்பியிருந்தது.கடந்த புதன்கிழமை பா.ஜ.க எம்.பி நாகேந்திரசிங் அழைத்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் லஞ்ச பணம் விநியோகிக்கப்பட்டது. பத்திரிகையாளர்களுக்கு பத்திரிகை அறிக்கைகளுடன் அளித்த உறையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும் வழங்கப்பட்டிருந்தன.

நமது நிருபர்

புர்கானுதீன் (கனடா)

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)