புதுடெல்லி,அக்டோபர் 16 : ஊழலுக்கு எதிராக ரதயாத்திரை நடத்தும் அத்வானி யாத்திரையை நிறுத்திவிட்டு மக்களிடம் மன்னிப்புக்கோர தயாராக வேண்டும் என சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கூறியுள்ளார்.வளர்ச்சியின் இரண்டாவது அப்போஸ்தலராக பா.ஜ.க உயர்த்திக் காட்டிய கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா கைதான சூழலில் ஊழல் எதிர்ப்பு முழக்கத்தை எழுப்ப பா.ஜ.கவுக்கு உரிமையில்லை. எடியூரப்பாவை தவிர அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மேலும் 3 பேர் சிறையில் இருப்பது பா.ஜ.கவின் கொள்கை வறட்சியை வெளிச்சம்போட்டு காட்டுகிறது என இ.அபூபக்கர் கூறினார்.அன்னா ஹஸாரேவை முன்னிறுத்தி ஊழல் எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தேசிய அரசியலில் எழுச்சிப்பெற நடத்திய பா.ஜ.கவின் முயற்சி தோல்வியை தழுவியுள்ளது.சங்க்பரிவார் அமைப்புகள் பிரசாந்த் பூஷணின் மீது தாக்குதல் நடத்திய பிறகு ஹஸாரேவின் சாயம் மேலும் வெளுத்துள்ளது. இதர வழிகள் ஒன்றும் இல்லாததால் ஹஸாரே மெளன விரதத்தை கடைப்பிடிக்கிறார். அத்வானி ரதத்தை கர்நாடகாவுக்கு திருப்பி மக்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும்.’ இவ்வாறு அபூபக்கர் கூறினார்.
நமது நிருபர்
சித்திக் அஹ்மத் (லண்டன்)
ரத யாத்திரையை நிறுத்துவிட்டு அத்வானி மன்னிப்புக்கோர வேண்டும்: எஸ்.டி.பி.ஐ
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment