முத்துப்பேட்டை, அக்டோபர் 16 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு சித்திக் மச்சன் என்கிற அபூபக்கர் சித்திக் அவர்கள் வாக்கு சேகரித்தார் இதன் பின்பு பேசிய அவர், அரசியல் என்பது மிகப் பெரிய ஒரு அறியானத்திற்கு சொந்தமானது என்றும், நமது பகுதிகளில் இருக்கக் கூடிய மாவட்ட ஆட்சி தலைவராக இருக்கட்டும், காவல் துறை அதிகாரிகளாக இருக்கட்டும், வருவாய்துறை அதிகாரியாக இருக்கட்டும் இவை அனைத்தையும் ஆட்டிப்படைக்க கூடிய சக்தி அரசியலுக்கு உண்டு என்றும், நல்லவர்கள் ஒதுங்கிக் கொண்ட காரணத்தினால்தான் கெட்டவர்களின் கூடாரமாக மாறிவிட்டது என்றும், நாம் இதை பார்த்து கொண்டு இருந்தோமையானால், இதற்கு ஒரு சிறிய உதாரணம் நம்மளுடைய பகுதிகளில் சாக்கடை நீர் ஓடிக் கொண்டிருக்கின்றது, மறு நாள் பார்த்தல் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது, எனவே இதை கேட்பதற்கு நாதி இல்லை என்று மக்கள் தவித்துக் கொண்டு இருந்தார்கள். இதை அரசியலில் மலிந்து கொண்டிருக்கின்ற சாக்கடைகளை துடைத்தெரிவதற்குத் தான் SDPI கட்சியானது அரசியலில் களம் இறங்கி உள்ளது. மேலும் ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவரவர் சதவீதத்திற்கு தகுந்தார் போல் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி துவக்கப்பட்டதுதான் இந்த SDPI . மேலும் முத்துப்பேட்டையில் வசிக்கும் மக்களின் சொத்து வரிகளை இந்த பேரூராட்சி நிர்வாகம் சொத்து வரிகளில் முறைகேடு, குடிநீர்களில் முறைகேடு, இன்னும் மக்களுக்கு சேவைபுரிவதில் முறைகேடு, கல்விக்குழு தலைவராக இருக்கக் கூடிய பேரூராட்சி தலைவர் பள்ளிகளுக்கு செய்ய வேண்டிய பல நலத்திட்டங்களை செய்யவில்லை என்றும் பள்ளிகளில் படிக்ககூடிய மாணவர்களுக்கு ஆசிரியர்களை நியமிப்பதும் இல்லை என்றும், இதை எல்லாம் போக்குவதற்கு இறைவன் மீது ஆணையாக எந்த நிதியிலும் ஒரு ரூபாய் கூட ஊழல் செய்ய மாட்டோம் என்று வாக்குறிதி கொடுக்கின்றேன் என்றும் அவர் தெருவித்தார்.சிலர் நீ எப்படி ஊழல் செய்யாமல் இருக்க போகிறாய் பாப்போம் என்று கேட்டார்கள், அதற்கு ஒரு உதாரணம் அன்ன துறை அவர்களும், கக்கன் அவர்களும், ஜீவா அவர்களும், காமராஜ் அவர்களும் ஊழால் செய்யாமல் இருந்து தனது பணியை திறன்படா செய்த வரலாறு உண்டு, இவர்களுக்கு முடியும் என்றால் நான் முஹம்மத் நபி வரலாறை படித்தவன், இந்த அபூபக்கர் சித்திகள் ஊழல் செய்யாமல் இருக்க முடியும், எனவே என்னை வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி.EK .முனவ்வர் கான்.அபு மர்வா
முத்துபேட்டையில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் SDPI கட்சியினர்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment