முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

உள்ளாட்சி தேர்தல் குறித்து மக்கள் மன்றத்தை சந்திப்பது என SDPI முடிவு: மா.செ. பேட்டி!!!



முத்துப்பேட்டை 01 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்று நடைபெற்ற வேட்பு மனு பரிசிலனையில் தாக்கல் செய்த அனைத்து மக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒரு நபர் மட்டும் வாபஸ் பெற்றுள்ளார், அதன் அடிப்படையில் தற்போது 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலைத்த SDPI யின் மாவட்ட தலைவர் ஜனாப் தமரே ஆலம் அவர்கள் அளித்த பேட்டி பின் வருமாறு, முஸ்லிம்களில் இருக்கக் கூடிய நபர்கள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த ஏற்பாடு செய்தனர். அதில் தகுதியான வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்குவதை விட்டு விட்டு கடந்த 5 ஆண்டுகளில் சட்ட மன்ற தேர்தலில் அனைத்து மக்களால் துடைத்தெரியப்பட்ட முத்துப்பேட்டை பேரூராட்சியை நிர்வாகித்து மக்கள் பணத்தை சூறையாடிய தி.மு.க.விற்கு ஆதரவான நிலையை மக்கள் மீது திணித்தனர், அதனால் இந்த கருத்துக்கு SDPI வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட தலித்துகள், கிருஸ்தவர்கள், இன்னும் குறைவாக இருக்கக் கூடிய பல்வேறு சாதியினரை ஆதிக்க சாதியினரால் தொடர்ந்து அடக்கு முறைக்கு உள்ளக் கப்பட்டு வருகின்றனர். மேலும் கட்சி தனக்கு போட்டியிட வாய்ப்பு தந்ததை வேட்பாளர் தனது கட்சி தலைவர்களிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெரும் அவல நிலையம் நடந்தேறியது என்பது மிகவும் வேதனைக் குரிய விஷயம், அல்லாஹ் விற்கு அடிபணிய வேண்டிய நாம் இவர்களின் காலில் விழுவது மிகவும் வேதனை. (muthupettai express) இதிலிருந்து மீட்டெடுத்து ஒட்டு மொத்த மக்களுக்கும் அவர்களுடைய உரிமைகள் கிடைபதற்காக தேர்தல் களத்தில் SDPI இறங்கியுள்ளது. எனவே முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து மக்களும் ஆதரவு தந்து வெற்றி பெற செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெருவித்தார். SDPI யின் மாநிலச் செயலாளர் ஜனாப்.A. அபூபக்கர் சித்திக் உடனிருந்தார்.
Source From Muthupettai Express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)