சேதுபாவாசந்திரம், அக்டோபர் 01 : புதுபட்டினம் மஸ்ஜிதுர் ரஹ்மான் புது பள்ளி வாசலைத் தாக்கிய காவி தீவிர வாதிகளை உடனே கைது செய்யக்கோரியும், அதற்கு உறுதுணையாக செயல் பட்ட சேது பாவாசத்திரம் காவல் துறை ஆய்வாளர் ரவீந்திர பூபதியை பனி நீக்கம் செய்யக் கோரியும், TNTJ (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்) மாநில தலைமையகம் மாபெரும் முஸ்லிம்களின் காவல் நிலையம் முற்றுகை போராட்டத்தை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் (30.09.2011) சுமார் 5 மணியளவில் திருவாரூர், ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் சுமார் 15 ஆயரம் முஸ்லிம் ஆண்களும் பெண்களும் சேதுபாவா சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்து கலந்து கொண்டு சம்மந்தப்பட்ட அதிகரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் காவி தீவிர வாதிகளின் அட்டூளியத்திருக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றும் மேலும் இது போன்ற கோசங்களை எழுப்பியது. இந்த கோசம் விண்ணை பிளக்க வைத்தது.muththuppettai express இது குறித்து அப்போது அங்கு பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மை குழு உறுப்பினர்,ஜனாப். பக்கீர் முஹம்மத் அல்தாபி பேசும் போது, நாங்கள் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை என்றும் இந்திய மண்ணிற்கு சொந்தகாரவர்கள் என்றும், கூறினார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரியையும், காவி தீவிர வாதிகளையும் உடனே நடவடிக்கை எடுக்க வில்லை என்றாள் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய காலங்களில் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டத்தை இந்த TNTJ தலைமையகம் அறிவிக்கும் என்பதை இதன் மூலம் தெருவித்துக் கொள்கிறேன்.
Source from muththuppettai express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்
நமது நிருபர்
ஹாஜா மைதீன்
TNTJ நடத்திய மாபெரும் காவல் நிலையம் முற்றுகை போராட்டம்!!!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment