முத்துப்பேட்டை, ஜூலை 13: முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பேரூராட்சி பராமரிப்பில் குளங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான குளங்கள் தனியார் ஆக்கிரமிப்பால் தூர்ந்து அடையாளம் தெரியாமல் போய்விட்டது. இந்த நிலையில் நகரில் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பட்டறைக்குளம் சாக்கடை கழிவுநீரால் சூழ்ந்து ஆக்கிரமிப்புகள் நிறைந்து சாக்கடை குட்டையாக மாறியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு குளத்தை தூர்வார ஒதுக்கீடு செய்து தூர்வாரியதில் முறைகேடு நடந்ததாக குளம் தூர்வாரும் பனி நிறைவு பெறாமல் முடிந்தது.
இந்த குளத்தின் தடுப்புச் சுவர் ஐந்து லட்சத்தில் கட்டியதும் தற்பொழுது சாதமாகி உள்ளது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்த பட்டறை குளத்தை தூர்வார அரசு 27 இலட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதில் சில குளறுபடி ஏற்பட்டதால் பனி தாமதமானது. இந்த நிலையில் ஒதுக்கப்பட்ட 27 இலட்ச ரூபாயில் தூர்வாரப்பட்டால் குளத்தின் துப்புறவு பணியாளர்கள் வசிக்கும் பகுதியில் தடுப்புச் சுவர் கட்டி நடைபாதை அமைத்து டயல்ஸ் போட முடிவு செய்து பணியை நேற்று துவங்கினார்.
இதனால் பொது மக்கள் அதிருப்தி ஏற்பட்டது. இந்த நிலையில் பனி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது முத்துப்பேட்டை சோசியல் டேமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த தேசிய செயற்குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக், மாவட்ட பொதுச் செயலாளர் நெய்னா முஹம்மது, நகரத் தலைவர் மைதீன், துணைத்தலைவர் நிஷார், செயலாளர் ஷேக் முகைதீன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சியின் பொறுப்பாளர்கள் பணியை தடுத்து ஜெ.சி.பி. இயந்திரத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பானது. சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சிங்காரவேல் பேரூராட்சி பொறியாளர் முகம்மது ஆலிது ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சுமூகம் ஏற்படவில்லை. இதனால் பணியை நிறுத்திவிட்டு ஜெ.சி.பி. இயந்திரத்தை எடுத்துச் சென்றனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கூறுகையில் இந்த திட்டம் வேண்டாம் என்று அமைப்பினர் கூறியதின் அடிப்படையில் பணியை நிருத்தியுள்ளோம் என்றார்.
மேலும் இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த SDPI கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் அவர்கள், இந்த பணியை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இதனால் மக்கள் பணம் வீணாக சூறையாடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்க்கு நல்ல முடிவை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலருக்கு ஒரு கடிதமும் எழுதி கொடுத்துள்ளோம் என்றும் அந்த கடிதத்தின் பதிலை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
தொகுப்பு:
ரிப்போட்டர் முகைதீன் பிச்சை
0 comments:
Post a Comment