முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் இன்று தேசவிரோதிகளின் ஊர்வலம்!





முத்துப்பேட்டை, செப்டம்பர் 17: முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் என்றாலே ஒரு வித பதற்றம் தொற்றிக்கொள்ளும் காரணம் காவிகளின் கலவர திட்டங்களும், காவல்துறையின் நெருக்கடிகளும்தான். ஆம் தமிழகம் முழுவதும் இந்த ஊர்வலம் நடந்துவிட்டாலும் கடைசியாகத்தான் முத்துப்பேட்டையில் நடத்த தேதி குறிப்பார்கள் காவிகளின் இராமகோபலன்,சிபிஆர்,ஹெச் ராஜா போன்ற வெறியர்கள் தலைமையில் காவிகள் குடிகாரர்களாக மாறி காவிதுணிகளை தலையில் கட்டிக்கொண்டு முஸ்லிம்களின் பகுதிகளுக்குள் ஊர்வலமகா வருவார்கள். அப்படி வருபவர்கள் அமைதியாகவோ அல்லது சாமிகளில் கோஷங்களையோ போட்டுச்சென்றால் அதனால் யாருக்கும் எந்த இடையூறும் இல்லை ஆனால் இவர்கள் போடும் கோஷமா மததுவேசத்தை வெளிப்படுத்தி கலவரத்தை தூண்டுவதாக அமையும் பத்துகாசு முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு, இந்தியா இந்து நாடு ஓடு ஓடு பாகிஸ்தானுக்கு ஓடு, இந்த படை போதுமா இன்னம் கொஞ்சம் வேனுமா போன்ற கோஷங்களையும் அறுவருக்கத்தக்க செயல்களையும் செய்துகொண்டே செல்வார்கள். இடையில் சில இடங்களில் கற்களை கொண்டு முஸ்லிம் சொத்துக்கள் தாக்கப்படும். 



ஊர்வலத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே 3000 த்துக்கும் காவலர்கள் பாதுகாப்பு பணிகளுக்கு இறக்கப்படுவார்கள், ஐ.ஜி தலைமையில் பல மாவட்ட எஸ்.பிக்களின் கண்காணிப்பில் பல்வேறு டிஸ்பிக்களின் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு ஆங்காங்கே நிறுத்தப்படுவார்கள். மெயின் ரோட்டிற்கு வரும் அனுத்து சாலைகளும், வழிகளும் தட்டிகளை கொண்டும், கம்புகளை கொண்டும் அடைக்கப்படும். பல்வேற்று கண்காணிப்பு கேமராக்கள் சுழன்று கொண்டே இருக்கும், வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் என தயார் நிலையில் நிறுத்தப்படும். ஊர்வலத்தன்றோ அல்லது அதற்கு முன்பு நாள் மாலையோ காவல்துறையின் பிரமாண்ட ஊர்வலம் வலம் வரும். ஊர்வலத்தின் இரு பக்கமும் காவல்துறை அணிவகுத்து செல்வார்கள். இருந்தாலும் கலவரக்காரர்களை கட்டுபடுத்த முடியாது அந்தளவிற்கு அவர்களின் கூச்சலும் செயல்களும் அமைந்திருக்கும். 



இதோ அன்றைய வந்துவிட்டது இன்றுதான் 17-09-2013 மாலை 3.00 மணிக்கு ஜாம்புவனோடையிலிருந்து புறப்படும் காவிகளின் ஊர்வலம் ஜாம்புவனோடை தர்ஹா வழியாக கோரையாற்று பாலத்தை கடந்து ஆசாத்நகர் பள்ளிவாசல்,கடைத்தெருக்களை அடையும் பின்னர் அங்கிருந்து மீராஉசேன் மருத்துவமனைக்கு செல்லும் அப்போது அங்கே கோவிலூர், மருந்தங்காவெளி, காளியம்மன் கோவில் தெரு போன்ற பல பகுதிகளில் இருந்து வருகை தந்து தயாற் நிலையில் நின்றுகொண்டிருக்கும் பிள்ளையார்களின் காவிக்கூட்டம் இந்த ஊர்வலத்தோடு இணைந்துகொள்ளும் அதோடு பழைய பேரூந்து நிலையத்தை அடைந்து நியூ பஜார் வழியாக புதுப்பள்ளிவாசல், பங்களாவாசல், ஓடக்கரை, அரக்காசு அம்மா தர்ஹா, ரஹ்மத் ஸ்கூல், ரஹ்மத் பெண்கள் பள்ளிவாசல், ரஹ்மத் பள்ளிவாசல், யாகூப்சாரின் பிரிலியன்ட் ஸ்கூல் வழியாக முஸ்லிம்களின் பகுதிகளுக்குள் சென்று செம்படவான் காடு வழியாக சென்று அங்கிருந்து பாமினியாற்றில் கரைக்கப்படும். ((இதற்கு முன்பு பங்களாவாசலில் இருந்து முஸ்லிம்களின் முக்கிய பகுதிகளான பெரியக்கடைத்தெரு வழியாக முகைதீன் பள்ளிவாசல், குட்டியார் ஜூம்ஆ பள்ளிவாசல், அரபு சாகிபு பள்ளிவாசல் வழியாக சென்றுகொண்டிருந்த ஊர்வலத்தினர் கடுமையாக பிரச்சணைகளை உருவாக்கியதால் நீதிமன்றத்தில் உத்தரவுப்படி மேலே கூறிய வழிகளை மாற்றிவிட்டனர்))



நேற்றய முன்தினம் முதல் முத்துப்பேட்டையில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. காவலர்களின் கடுமையான கட்டுபாடுகள் முஸ்லிம்களை மன உலைச்சலுக்கு ஆளாக்கியுள்ளன. பெரியக்கடைத்தெரு மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள முஸ்லிம்கடைகளை மட்டும் குறிவைத்து உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளிகளின் முகவரிகள்,தொலைபேசி நம்பர்கள் விசாரிக்கப்பட்டு காவல்துறையால் வாங்கப்பட்டுள்ளன. ஏவனோ ஊர்வலம் நடத்துவதற்கு முஸ்லிம்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. அனைத்து பகுதிகளும் கண்காணிப்பு கேமராக்கள் என்று தற்போது புதிதாக கண்கானிப்பு கூண்டுகள் அமைக்கபட்டும் கண்கானிக்கபடுகின்றன. இரண்டுநாட்களாக அறிவிக்கப்படாத காவல்துறையின் கட்டுப்பாட்டுக்கள் முத்துப்பேட்டை கொண்டுசெல்லப்பட்டுள்ளன. 



காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் சிலவற்றை பாராட்டலாம் ஆனாலும் பாதுகாப்பு என்ற பெயரில் சில அத்து மீறல்களையும் நாம் கண்டிக்கிறோம். இத்தனை ரணகளங்களையும் தாண்டி, அரசுக்கு பல்லாயிரம் கணக்கில் செலவுகள் வைக்கப்பட்டும், பொதுமக்களின் அன்றாட வாழ்கைக்கு சவால் விடபட்டும், சில அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டும், பொதுமக்களின் கலவர பயத்திற்கு நடுவிலும் நடைபெறும் இந்த காவிகளின் ஊர்வலம் தேவைதானா... அரசோ அல்லது கவால்துறையோ இதனை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்தாமல் ஏன் இவ்வளவு சிறமங்கள் எடுக்க வேண்டும். 



இன்று 17-09-2013 இன்னும் சற்று நேரத்தில் துவங்கி வர இருக்கும் காவிகளின் ஊர்வலம் மூலம் எந்த பதற்ற சூழ்நிலைகளும் உருவாகிவிடாமல் இருக்க அனைத்து தரப்பும் அமைதிகாக்க வேண்டும் எனவும் அன்பு வேண்டுகோள் வைக்கிறோம். நாய்கள் ரோட்டில் கற்றிக்கொண்டு சென்றாலும் அதனை காவல்துறை பார்த்துக்கொள்ளும் என்று முஸ்லிம்களும் மவுனம் காப்பதே சாலச்சிறந்தது. அதனையும் மீறி காவிகள் கலவரங்களை தூண்டினால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாரான நிலையிலும் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். 



இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற கலவர ஊர்வலங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்பதே முத்துப்பேட்டை அல்ல தமிழக அனத்தை தரப்பு மக்களின் வேண்டுகோள்.....



நமது நிருபர்:

முத்துப்பேட்டை முகைதீன்

1 comments:

  1. இப்படி காட்டுமிராண்டி தனமாக கத்தும் இந்த காவி வெறியர்களின் அத்துமீறலை கண்டிக்க வக்கில்லாத அரசு, இஸ்லாமிய அப்பாவி மக்களை தீவிரவாதி என்று பட்டம் சூட்டி உள்ளே தள்ளுகிறது. இந்த குடிகார குழப்பவதிகலுக்கு காவல்துறையின் பாதுகாப்பு கொடுக்கிறது. இப்படி நாட்டில் கலவரங்களை தூண்டும் அபாய சக்திகளை முடக்கி, இதுபோன்ற அபாயகர ஊர்வலங்களை அனுமதிக்காமல் நாட்டின் மக்களை காப்பாற்ற அரசு முன்வரும்போதுதான், இன் நாட்டின் இறையாண்மை காக்கப்படும். insha allah

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)