முத்துப்பேட்டை, ஜனவரி 05/15: முத்துப்பேட்டை அடுத்த ஜம்புவானோடை தர்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 150 -க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தர்காவை தாக்குதல் நடத்தியபோது முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தனி ஆளாய் நின்று உயிரை பெரிது படுத்தாமல் துணிந்து திருப்பி தாக்கி வன்முறை கும்பலை சேர்ந்த அனைவரையும் திருப்பி விரட்டியடித்தார். அதனால் மேலும் பெரிய சம்பவங்கள் தடுக்கப்பட்டது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர.; இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் கூறுகையில் பாதுக்காப்பு கவசங்கள் என்னிடம் இருந்திருத்தல் இந்த சம்பவங்கள் கூட நடந்திருக்காது என்றார்.
நமது நிருபர்
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை
0 comments:
Post a Comment