முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!


முத்துப்பேட்டை, நவம்பர் 13 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வாழக்கூடிய மக்களின் கவனத்திற்கு. நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு மாப்பிளை அல்லது பெண் பார்ப்பவர்களா? உடனே அவர்களின் தகப்பனார் அல்லது அவர்களின் பாதுகாவலர்கள் தங்களுடைய தொலைபேசி எங்களை கீழே உள்ள மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். மேலும் மாப்பிள்ளை அல்லது பெண் இவர்களின் பெயர், வயது, நிறம், படிப்பு, பிறப்பிடம் , வாழுமிடம் , சகோதரர்களின் விபரம்,குடும்ப விபரம், தங்களுடைய கருத்து (எப்படி பட்ட மாப்பிள்ளை அல்லது பெண் தேவை) மாப்பிள்ளை போட்டோ விருப்பம் இருந்தால் பெண்ணின் போட்டோ ஆகியவைகளை எங்களுக்கு கிழே உள்ள மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் நாங்கள் இவற்றை www.muthupettaiexpress.com என்ற இணையத்தளம் மூலம் இவைகளை வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ். இதன் மூலம் தாங்கள் விரும்பும் மாப்பிள்ளை அல்லது பெண்ணை நீங்கள் தேர்வு செய்து ஈருலக வாழ்வில் வெற்றி பெற அல்லாஹ்விடம் துவா செய்கிறோம்.மேலும் பிற ஊரான அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, பட்டுக்கோட்டை, நாகைப்பட்டினம், நாகூர், காரைக்கால், தோப்புத்துறை, திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களில் உள்ளவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு முத்துப்பேட்டையில் மாப்பிள்ளை அல்லது பெண் பார்க்க விருப்பமுள்ளவர்களும் எங்களை தொடர்பு கொள்ளலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
தாங்கள் அனுப்பவேண்டிய மின் அஞ்சல் முகவரிகள் :
public.mttexpress@gmail.com, info.muthupettaiexpress01@gmail.com

இப்படிக்கு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

இஸ்லாமியர்களுக்கும்,கிறிஸ்தவர்களுக்கும் இலவச தொழிற் பயிர்ச்சி முகாம்:


முத்துப்பேட்டை, நவம்பர் 12 : தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம் (TAMCO) மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் (NFDC) இணைந்து இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இலவச தொழில்நுட்ப பயிர்ச்சி முகாமை நடத்தி வருகிறது. இதற்கான ஆவணங்களை கீழே கொடுக்கப் பட்டுல்லுள்ளது அவற்றை சரி பார்த்து அனுப்பவும்.
1 ) 10 ஆம் வகுப்பிற்கு மேல் படித்திருக்க வேண்டும்.
2 )18 வயதிலிருந்து 35 வடதிருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3 ) குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திருக்கு குறைவாக இருக்க வேண்டும்.
4 ) கடைசியாக படித்த மதிப்பெண் சான்று (MARK SHEET ), இட மாற்று சான்றிதல் (TC ) ஆண்டு வருமானச் சான்றுதல் (INCOME CERTIFICATE ) போன்றவை சமர்பிக்க வேண்டும்.
5 ) இந்த தொழில்நுட்ப பயிர்சிக்கு வகுப்பு ஒரு மாத காலத்திற்கு மட்டுமே நடைபெறும்
எனவே சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம், மற்றும் கிறிஸ்தவர், இவற்றை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் தொடர்புக்கு:

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (NFDC) கோ - ஆப் டெக்ஸ் வேர் அவுஸ் பில்டிங்
முதல் மாடி NO: 350 , பாந்தியன் சாலை,
எழும்பூர், சென்னை - 600 008 .
தொலை பேசி எங்கள்: 044 - 2819 2407 , 2819 2506 , 2819 1203 .
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
நமது நிருபர்

அக்பர் அலி. B.sc ., BL . (ஆசாத் நகர்)

முத்துப்பேட்டை மக்களும், மார்கத்தின் ஈடுபாடுகளும்?



முத்துப்பேட்டை, நவம்பர் 11 : முத்துப்பேட்டையில் ஒரு காலம் இருந்தது இங்கு முழுமையான மதரச இல்லாவிட்டாலும் கூட ஊரில் உள்ள பெரும்பாலான ஆண்களும், பெண்களும் இமாம்களுக்கு சமமாக மார்கத்தை விளங்கி குர்ஆனைத் தஜ்வீத் முறையில் ஓதி இமாமத் செய்கின்ற அளவிற்கு முத்துப்பேட்டை மக்கள் இருந்து வந்தார்கள். மேலும் பள்ளி வாசல்களிலேயே அதிக காலங்கள் தங்குபவர்களாகவும், அதிக தொடர்புடையவர்களாகவும் இருந்து வந்தார்கள். ஆனால் இன்றோ அந்த அளவிற்கு மார்கத்தை விளங்கியவர்களையும் அதிகமாக காணுவது என்பது வெறும் கேள்விக்குறியாகத்தான் தற்போது இருந்து வருகிறது. அதே சமயம் மார்க்கம் என்ற பெயரில் பல்வேறுப் பிரச்சனைகளை தினித்து வருகின்றார்கள். குறிப்பாக சொல்லபோனால் ஊரின் ஒற்றுமையை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் பள்ளியின் தொடர்பற்றவர்கலாகவும், மது, சூது, விபச்சாரம் ஆகியவைகளுக்கு அடிமைகளாகவும் இருந்து வருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் குர்ஆனை அரைகுறையாக ஓதி விளங்கியவர்கள் பள்ளிக்கிக்கூட தொழ வராத அவள நிலையை காண முடிகிறது. நம் ஊரில் உள்ள பள்ளிகள் எல்லாம் அதிக நேரம் பூட்டப் பட்டும் (தொழுகை நேரங்கள் தவிர்த்து), பள்ளியில் உள்ள குர் ஆன்களெல்லாம் புளிதியடைந்தும் காணப்படுகின்றன. கடந்த ரமலான் மாதத்தில் நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை உங்களுக்கு நினைவூட்ட கடமைபட்டுள்ளேன். அவை ஒரு பள்ளியில் ஒரு நாள் கூட ஒருவரும் குர்ஆனை எடுத்து ஓதவில்லை, அதன் காரணமாக குர்ஆன் அனைத்தும் உள்ளே உள்ள அறைகளில் வைக்கபட்டிருக்கிறது. இன்னொரோ பள்ளியில் தொழுவதற்கு இமாமைத் தவிர்த்து ஒரு ஆளை பார்த்தல் கூட அது ஒரு பெரிய விசயமாகத்தான் நமக்குத் தெருகிறது. ஏன் இந்த நிலை? மறுமையின் பயம் எங்கே போனது? அல்லாஹ்வின் அச்சம் எங்கே போனது? அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்கள் எங்கே போனார்கள்? அல்லாஹ் வின் பள்ளிகள் சபிக்க ஆரபித்து விட்டால் நம் மக்களில் நிலைமை என்னவாகும்? மறுமையில் நம்மவர்களின் நிலைமை என்னவாகும்?
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
இந்த நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும்:

1) முதலில் ஒவ்வொரு முஹல்லாவிலும் இஸ்லாமிய ஆரம்ப பாடசாலைகள் (மதரசாக்கள்) முழுமையாக ஆரம்பிக்கப் படவேண்டும் அதில் நம் குழந்தைகள் பங்கு பெற்று பயனடைய வேண்டும்.

2) ஒவ்வொரு மதரசாக்களிலும் நமது குழந்தைகளுக்கு குர் ஆனை தஜ்வீத் முறைப்படி முறையாக கற்றுகொடுக்க வேண்டும்.

3) குர் ஆனை முழுமையாக ஓதத்தெரியாத நமதூர் முதியவர்களுக்கும் அந்த அந்த முஹல்லாவில் மதரசாக்களை உருவாக்க வேண்டும்.

4) மேலும் எந்த ஒரு நல்ல விசயத்தையும் நம்மோடு நிறுத்திக்கொள்ளாமல், மற்ற மக்களுக்கும் நபி (ஸல் ) அவர்களின் வலியில் அவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும், மேலும் நன்மையின் பக்கம் மக்களுடைய ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.

சிந்திங்கள் நாம் அனைவரும் சொர்கத்திற்கு சொந்த காரவர்கலாக மாறலாம் நீங்கள் முயற்சித்தால் இன்ஷா அல்லாஹ்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ஆசிரியர்.சாலிஹ் முக்தார். (முத்துப்பேட்டை) ரிப்போர்ட்டர் இல்யாஸ்.

ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு.


உலகம்,நவம்பர் 11 : ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு மிகவும் முக்கியமானது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.இது குறித்து பிரிட்டனின் சிக்ரிட் கிப்சன் தலைமையிலான குழு ஆய்வுகளை நடத்தியுள்ளன.இந்த ஆய்வு முடிவு பற்றித் தெரிவித்துள்ள குழுவின் அறிக்கையில் மற்ற உணவு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சத்துகள் ஆகியவற்றை காலை உணவு தான் நிர்ணயிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்.பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றைக் காலையில் உட்கொண்டு வருவதனால் உடலுக்கு நோய் இல்லாமல் பாதுகாக்கின்றது எனக் கூறப்படுகின்றது.19 முதல் 64 வயது வரையில் உள்ளவர்களின் 12 ஆயிரத்து 68 மருத்துவ ஆவணங்களைப் ஆய்வு செய்தே இந்த முடிவுக்கு மருத்துவக் குழு வந்திருக்கிறது.இந்த மருத்துவக்குழுவின் அறிக்கையின் படி, பெரும் பாலானவர்கள் திட உணவுக்கு முன்பாக கோப்பி அல்லது தேநீர் போன்றவற்றை அருந்த விரும்புகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.பால் மற்றும் பருப்பு வகைகள் கல்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவற்றைத் தரும் என்பதால் அவற்றை எடுத்துக் கொள்வதே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

முத்துப்பேட்டை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:



முத்துப்பேட்டை, நவம்பர் 08 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே இந்த குடிநீர் பராமரிப்பின் காரணமாக வருகிற நவம்பர் 10 , 11 , 12 ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிதண்ணீர் இணைப்பு நிறுத்திவைக்கப்பட உள்ளது. எனவே பொது மக்கள் நாளை வரக்கூடிய தண்ணீரை மூன்று நாட்களுக்கு சேமித்து, குடிநீரை சிக்கனமாக செலவு செய்யுமாறு முத்துப்பேட்டை நிர்வாக அதிகாரி, மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் திரு.கோ.அருணாசலம் ஆகியோர் கேட்டுக்கொள்கிறார்கள். மேலும் இதற்க்கு பொது மக்கள் நல் ஆதரவு தருமாறும் கேட்டுக்கொள்கிறார்கள்.
source from www.muthupettaiepxress.blogspot.com, www.muthupettaiexpress.com
நமது நிருபர்

AKL .அப்துல் ரஹ்மான்

மவுத்து அறிவிப்பு: " ME .சேக் அலாவுதீன்"


முத்துப்பேட்டை, நவம்பர் 08 : கல்கேனித் தெரு மர்ஹும் M .முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மகனும், மர்ஹும் முஹம்மது இக்பால், முஹம்மது முஸ்தபா கமால் இவர்களின் மாமனாரும், MES . ஹாஜா நஜிபுதீன், MES . சாகுல் ஹமீது, MES . முஹம்மது இஷாக் இவர்களின் தகப்பனாருமாகிய ME . சேக் அலாவுதீன் அவர்கள் இன்று காலை 11 :30 மணியளவில் ஒர்தனாடில் உள்ள அவர்களது வீட்டில் மவுத்தாகி விட்டார்கள். (இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜீவூன்) அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

குறிப்பு: அன்னாரின் ஜனாசா முத்துப்பேட்டைக்கு கொண்டு வந்து அடக்கம் செய்ய உள்ளார்கள்.
அறிவிப்பவர்

MES . ஹாஜா நஜிபுதீன், MES . சாகுல் ஹமீது, MES . முஹம்மது இஷாக்

முத்துப்பேட்டையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஹஜ் பெருநாள் பண்டிகை.



















முத்துப்பேட்டை, நவம்பர் 07 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. சரியாக காலை 8 .30 மணியளவில் குட்டியார் பள்ளி வாசலில் தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் சுமார் 2 ,000 துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர். இதில் கொத்பா பள்ளி முஹல்லாஹ், அரபு சாகிப் பள்ளி முஹல்லாஹ், குட்டியார் பள்ளி முஹல்லாஹ், பேட்டை பள்ளி முஹல்லாஹ், முஹைதீன் பள்ளி முஹல்லாஹ், மதீனாப் பள்ளி முஹல்லாஹ், ரஹ்மத் பள்ளி முஹல்லாஹ், ஆகிய 7 முஹல்லாவை சேர்ந்த பள்ளி நிர்வாகத்தினரும்,முஹல்லாஹ் வாசிகளும் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள். இதனைத்தொடர்ந்து கொத்பா பள்ளி தலைமை இமாம் பயானும் நடைபெற்றது. இதன் பின்பு ஒவ்வொரு சகோதரரும் தங்களுடைய அன்பை பரிமாறிக் கொள்ளும் விதமாக ஒருவருக்கொருவர் சலாம் கூறி முஸாபா செய்து கொண்டனர். இந்த முஸாபா மூலம் இனம், மொழி, ஜாதி, ஏழை, பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் பார்க்காமல் இறைவனை மட்டும் முன்னிறுத்தி நடைபெற்றதால் இந்த நிகழ்வு அனைத்து மக்களுகளுக்கிடையே ஒரு பொன் சிரிப்பாகவே இருந்தன.

குறிப்பு: முத்துப்பேட்டையில் மொத்தம் 6 பள்ளி வாசல்களில் இன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

1) குட்டியார் ஜும்மாஹ் பள்ளி

2 ) மக்கா பள்ளி

3) புதுப் பள்ளி

4 ) ஆசாத் நகர் பள்ளி

5 ) தர்கா பள்ளி

6 ) நூர் பள்ளி

பெண்களுக்கான ஹஜ் பெருநாள் தொழுகை அந்த அந்த முஹல்லவை சேர்ந்த பெண்கள் அனைவருக்கும் அந்த அந்த முஹல்லாஹ் பள்ளி வாசல்களிலேயே நடைபெற்றது.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கத்தின் கூட்டு குர்பானி திட்டம் நிறைவேறியது.






முத்துப்பேட்டை, நவம்பர் 07 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் துபாயில் வாழக்கூடிய நமதூர் மக்கள் முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் என்ற பெயரில் கடந்த 29 வருடமாக பல்வேறு சாதனைகளும், முத்துப்பேட்டை ஏழை, எளிய மக்களுக்கு மாத உதவித் தொகையும், மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதி உதவித்தொகையும் இதன் மூலம் வழங்கி வருகின்றனர். மேலும் இதனைத் தொடர்ந்து இன்று தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாளை முன்னிட்டு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் சார்பில் இரண்டாவது முறையாக கூட்டு குர்பானி திட்டத்தின் மூலம் சுமார் 8 மாடுகள் அறுத்து முத்துப்பேட்டையில் உள்ள ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. இதில் முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கத்தின் முத்துப்பேட்டை பிரதிநிதி சோழநாடு. ஜனாப் .KM .நெய்னார் முஹம்மது, ஜனாப். ஹுமாயுன் கபீர், சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாப். PM . ஜாகிர் ஹுசைன், சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஜனாப். S .நஜுபுதீன், புதிய தலைவர்.ஜனாப். S .ஜாபார் ஹுசைன், சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஜனாப். MRS .ராவுத்தர் (செல்லாப்பா), மேலும் சங்கத்தின் முன்னாள் உதவி பொருளாளர் ஜனாப். நாசர், முஹம்மது ரபீக், முஹம்மது அசாருதீன் , சபீர் அஹமது (சிங்கப்பூர்) மற்றும் முத்துப்பேட்டையில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from www.muthupettaiexpress.com, www.muthupettaiexpress.blogspot.om
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா

மவுத்து அறிவிப்பு: "ஹதீஜா நாச்சியா"


முத்துப்பேட்டை, நவம்பர் 07 : அதிராம்பட்டினம் மர்ஹும் மு.ஆ நெய்னா முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹும் M .முஹம்மது இபுராஹீம் அவர்களின் மனைவியும், முத்துப்பேட்டை கரடி M .முஹம்மது யாசின் அவர்களின் சகோதரியும், கரடி.M .சேக் அப்துல் காதர், M .அக்பர் அலி ஆகியோரின் தாயாருமாகிய "ஹதீஜா நாச்சியா" அவர்கள் இன்று காலை 7 :15 மணியளவில் அதிராம்பட்டினம் நெசவுக்காரத்தெரு அவர்களது மகனார் இல்லத்தில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னாஹ் லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணியளவில் அதிராம்பட்டினம் மரைக்காப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.
source from www.muthupettaiexpress.com
அறிவிப்பவர்

கரடி. M .முஹம்மது யாசின்

மனைவிக்கு உணவு ஊட்டுவதர்க்கும் இறைவனிடத்தில் நற்க்கூலி உண்டு...


உலகம்,நவம்பர் 06 : அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர், உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஅது பின் அபிவக்காஸ் (ரலி) நூல், புகாரி 56 . என்ற நபிமொழிக்கேற்ப இப்படத்தில் உள்ள சகோதரர் நிறைவேற்றிவிட்டார். ஆனால் நமது நாட்டில் கணவன் சாப்பிட்ட எச்சில் இலையில் தான் மனைவி உணவு உண்ண வேண்டும் என்ற வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் இஸ்லாம் மார்க்கமோ மனைவியுடன் ஒன்றாக இருந்து உண்ணுதல் என்ற நிலையைத் தாண்டி, மனைவிக்கு ஊட்டிவிடச் சொல்கிறது. இவ்வாறு உணவு ஊட்டுகின்ற இந்த செயலுக்கு இன்றைவனால் நன்மையையும் அளிக்கப்படுகிறது. ஆம் மனைவியின் மீது பொழிகின்ற இந்த அன்பு இறைவனின் அன்பைப் பெற்றுத் தருகின்றது.
www.muthupettaiexpress.com
நமது நிருபர்

அஹம்மது சித்திக் (லண்டன்)

முத்துப்பேட்டையில் ஜாக் சார்பில் நடத்தப் பட்ட ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை..





முத்துப்பேட்டை, நவம்பர் 06 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஜாக் சார்பில் இன்று ஹஜ்ஜுபெருநாள் தொழுகை,நமதூர் ஜாமியா மஸ்ஜிதில் சரியாக காலை 7 மணிக்கு நடைபெற்றது. இதனைதொடர்ந்து டாக்டர்.முஹம்மது மீரான் அவர்களின் பயனும் நடைபெற்றது இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
source from www.muthupettaiexpress.com
நமது நிருபர்

முஹம்மது முஃபாரிஸ்

INTJ வின் பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க ரத யாத்திரை!


சென்னை, நவம்பர் 05 : INTJ வின் பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க ரத யாத்திரை வருகிற 19 .11 .2011 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற உள்ளதாக அதன் தலைவர் ஜனாப்.SM .பாக்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து சென்னை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்த ஜனாப்.SM .பாக்கர் அவர்கள், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 19 வது வருட நினைவு தினம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை ஒட்டியும், அயோத்தி நிலத்தை மீண்டும் மசூதியை எழுப்பிட வலியுறுத்தியும், இந்து, முஸ்லிம்களுக்கிடையே சமூக நல்லிணக்கத்தை பேணவும், வருகிற 19 .11 .2011 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத யாத்திரை துவக்கப்பட உள்ளதாக ஜனாப்.SM .பாக்கர் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் மேலப்பாலயத்திளிருந்து இந்த ரதயாத்திரை துவக்கப்பட உள்ளதாகவும் மேலும் தமிழகம் முழுவதும் பயணித்து பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6 ஆம் தேதியன்று சென்னையில் நிறைவுபெற உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். இந்த ரத யாத்திரையில் யாதவ மகா சபை தலைவர் டாக்டர். தி.தேவநாதன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல்.திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர். சேதுராமன், உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சாதி அமைப்பினர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்றும் SM .பாக்கர் மேலும் தெரிவித்தார்.இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது INTJ வின் துணைத் தலைவர் ஜனாப். முஹம்மது முனீர் சேட், பொருளாளர் ஜனாப். அபூ பக்கர் தொண்டியப்பா, துணைப்பொது செயலாளர் ஜனாப். சையது இக்பால், மாநில செயலாளர் ஜனாப். அபூ ஃபைசல் ஆகியோர் உடனிருந்தனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் உமர் முக்தார்.

மமக சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி முகாம்! வியந்தது பல கட்சிகள்!










சென்னை, நவம்பர் 03 : நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் மமக சார்பில் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒருநாள் நிர்வாக பயிற்ச்சி முகாமும், சான்றிதல் அளிக்கும் நிகழ்ச்சியும் சென்னை சிராஜ் மஹாலில் நேற்று நடைபெற்றது. மேகத்துடன் கூடிய மழைச்சாரலும் , குளிர்ந்த காற்றும், சென்னை மாநகரை இதமான ஒரு சூழலில் பரவசப்படுத்தி கொண்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்திருந்த பிரதிநிதிகளை தலைமை நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி வாழ்த்தியது அவர்களோ இனம் புரியாத சந்தோசத்தில் திளைத்தனர். இதனை அடுத்து பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA . அவர்கள் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார், பின்னர் புகழ்பெற்ற ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அபுல்ஹசன் அவர்களும், உள்ளாட்சி நிர்வாகத்தில் அனுபவம் பெற்ற திரு.தாஸ் அவர்களும், பத்தாண்டு கால நேரடி நிர்வாகத்தை பெற்ற சாத்தானி சிராஜ் அவர்களும் வகுப்புகளை எடுத்தார்கள். இந்த வகுப்பில் உள்ளாட்சி நிர்வாகம் என்றால் என்ன? மன்ற கூட்டங்களை நடத்துவது எப்படி? நிதியை எப்படி செலவு செய்வது? அதிகாரிகளை பயன்படுத்துவது எப்படி? மத்திய அரசு மாநில அரசுகளின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வது எப்படி? தங்கள் வார்டுகளில் செய்யக்கூடிய பணிகள் என்ன? என்னவெல்லாம் அதிகபட்சமாக செய்ய முடியும்? என பல்வேறு ஆக்கப்பூர்வமான விசயங்களை குறித்து அவர்களை விளக்கியபோது மமக பிரதிநிதிகள் அனைவரும் அங்கு மாணவர்களாக மாரிபோனார்கள். இந்நிகழ்சியை பதிவு செய்ய வந்த பத்திரிக்கையாளர்கள் இதுபோன்ற பயனுள்ள ஒரு நிகழ்ச்சியை இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் நடத்தியது இல்லை என்றும், மமக உண்மையிலேயே ஒரு வித்தியாசமான மாற்று அரசியல் காட்சியாகத்தான் இருக்கும் என்றும் அவர்கள் வியந்தார்கள். மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் சான்றிதல்கள் வழங்கப்பட்டது. முதலில் 156 பேர் தான் மமக சார்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டிருந்தது. நிகழ்ச்சி நடைபெற்ற அன்றைய தினம் இன்னொரு ஏழு பேர் எங்கள் பெயரை மக்கள் உரிமையில் ஏன் போடவில்லை என முறையிட்டு சான்றிதல்களை கேட்க தலைமை நிர்வாகிகள் கோபத்தின் உச்சிக்கே சென்றார்கள். இதுகுறித்து சில மாவட்டம் நிர்வாகிகளை பகிரங்கமாக கண்டித்து பேசிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள், தலைமைக்கு ஒழுங்கான தகவலை அனுப்பாததால் ஒருங்கிணைந்த முழு பட்டியலை ஒரு சேர வெளியிட முடியாமல் போனதை அப்போது சுட்டிக்காட்டினார். இதில் 35 பெண்கள், 2 கிறிஸ்தவர்கள், 9 இந்துக்கள் உட்பட மாமாகவின் 172 வெற்றியாளர்களுக்கும் சான்றிதல் வழங்கப்பட்டது. மதியம் விருந்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK .முனவ்வர் கான், ASNS .அப்துல் பாரி, அபு மர்வா

முத்துப்பேட்டையில் ஸ்டவ் அடுப்பு வெடித்து ஒருவர் படுகாயம்!




முத்துப்பேட்டை, நவம்பர் 03 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள பேட்டையில் ஜனாப்.ஜபருல்லா, வயது 33, என்வர் டீ கடை நடத்தி வருகிறார். இவர் காலை 5 .30 மணியளவில் தனது டீ கடையையை திறக்க சென்றார். அப்போது கடையில் உள்ள ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார். அது எதிர்பாராமல் திடீர் என்று வெடித்ததில் படுகாயம் அடைந்த அவரை அங்குள்ள பொது மக்கள் முத்துப்பேட்டையில் உள்ள தனியார் (மருதுதுரை) மருத்துவமையில் அனுமதிக்கப் பட்டு தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் சிகிச்சைக்கு மருத்துவர்கள் சுமார் 5 ஆயிரம் செலவாகும் என தெரிவித்துள்ளார்கள். எனவே இவரால் இந்த கட்டணத்தை கட்ட முடியாமல் தவித்து வருகிறார். எனவே நல்லுள்ளம் கொண்ட நமதூர் வெளிநாட்டு வாழ் சகோதர, சகோதரிகளே உங்களால் இயன்ற உதவியை செய்யுது அல்லாஹ்வின் அருளை பெற இதோ ஓர் அறிய வாய்ப்பு. இது குறித்து தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:
மஹாராஜா தமீம்: 99656 40543 .
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,EK .முனவ்வர் கான்,ASNS .அப்துல் பாரி, அபு மர்வா

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)