முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

கலாச்சார சீரழிவால் சிக்கித்தவிக்கும் இஸ்லாமிய சமூகம் ஓர் பார்வை.!!!



உலகம், ஏப்ரல் 23 : காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை. தன்னை மறந்து, தன்னைப் பெற்றவர்களை மறந்து, உற்றாரையும் உறவினரையும் மறந்து, சமுதாயத்தை மறந்து, சமயத்தை மறந்து… இப்படி எதார்த்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அந்தச்… சுகம் ஒன்றே இலட்சியம் என்று கிறுக்குப் பிடித்து அலையும் காதல் மோகம் தேவைதானா?

அல்லது கையிலிருக்கும் காசையும் கழுத்திலிருக்கும் நகையையும் பறித்துக்கொண்டு, கற்பையும் சூறையாடிவிட்டு அந்தக் காமுகன் ஓடிப்போகும்வரை சுற்றுச்சூழலையே மறந்துகிடந்தவள் நடுத்தெருவில் நிர்க்கதியாகக் கைவிடப்படுகிறாளே அந்தப் பேதைக்கு இக்கதி தேவைதானா?

அல்லது வங்கி இருப்பெல்லாம் இல்லாமலாகி, கையிலிருந்த கடிகாரமும் அலைபேசியும்கூட மார்வாடி கடைக்குப் போனபின்பும் அந்தக் காமுகியின் கோரப்பசி அடங்காமல், உடுத்திய வேட்டி மட்டுமே அந்த முட்டாள் பையனிடம் எஞ்சியிருக்கும் நிலையில், இனி உன்னை நம்பிப் பயனில்லை என்று கை கழுவிவிட்டு வேறொரு ஏமாளியைத் தேடி அந்த விலைமாது ஓடுகிறாளே, அவனுக்கு இந்த அவலம் தேவைதானா?

அல்லது இருவரும் இணைந்து சில ஆண்டுகள் ஆனந்தமாக வாழ்ந்து, குழந்தைகளையும் பெற்றுக்கொண்டுவிட்டு, பண நெருக்கடியோ மன நெருக்கடியோ ஏற்படும்போது, உன்னை நம்பி நான் வந்தேனே! என்று ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நொந்துகொண்டு, தற்கொலையில் அல்லது மணமுறிவில் போய் நிற்குமே! இந்தக் காதல் இருவருக்கும் தேவைதானா?

ஆய்வின் முடிவு
இதை நாம் வாதத்திற்காகவோ வருத்தத்திற்காகவோ குறிப்பிடவில்லை. ஆய்வின் முடிவு இதுதான்:

ஹெலன் ஃபிஷர் என்ற மேற்கத்திய ஆராய்ச்சியாளர் ஒருவர், காதலர்களின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தாராம்! 1. காமம் 2. உணர்வுபூர்வமான காதல் 3. நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் ஆகிய மூன்று வகையான உணர்வுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.

இவற்றில் காமம்தான் முதலிடத்தைப் பெற்றது. இரண்டாவது இடம் உணர்வுபூர்வமான காதலுக்கு. மிகமிகக் குறைவாகவே நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் மூளையில் தென்பட்டதாம்!
இப்போது சொல்லுங்கள்! காதல் என்ற பெயரில் காமம்தானே விளையாடுகிறது! இதில் போலி எது? அசல் எது என்பதை அவனோ அவளோ எப்படிப் பகுத்தறிய முடியும்?

அண்ணன் – தங்கையாகத்தான் பழகுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, இளம்பெண்ணின் தாயார் தன் கரத்தால் அன்போடு சமைத்துப்போட்டதையெல்லாம் பல நாட்கள் ருசித்துவந்த ஐந்து மாணவர்கள், ஒருநாள் அவளுக்குக் குளிர்பானத்தில் மதுவைக் கலந்துகொடுத்து, இரவு முழுக்க அந்த ஐந்து நாய்களும் கடித்துக் குதறிய சம்பவம் சென்னை மட்டுமன்றி, தமிழகத்தையே உலுக்கி எடுத்ததே! அவர்களில் சிவானந்தம் (19) என்பவன் பல ஆண்டுகளாக அவளைக் காதலித்தவனாம்!

இது காதலா? காம வெறியா? அதையும் தாண்டி, மற்றவனுக்குக் கூட்டிக்கொடுக்கும் ஈனத்தனமில்லையா இது?

அது மட்டுல்ல; மணவிலக்கு (டைவர்ஸ்) கோருவோரில் கணிசமான எண்ணிக்கையினர் காதல் திருமணம் செய்துகொண்டவர்களே என்பதும் ஆய்வின் முடிவாகும்.

எதையோ எதிர்பார்த்து கண்ணும் கண்ணும் உரையாடுகின்றன. எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவிட்ட பிறகு, அல்லது ஏமாற்றம் ஏற்பட்ட பிறகு அதே கண்கள் உரையாடாவிட்டாலும், சாதாரணமாகப் பார்த்துக்கொள்வதுகூட இல்லை. மறுக்க முடியுமா?

கலாச்சார சீரழிவு
கற்பும் காசும் பறிபோவதோடு காதல் போதை தெளிகிறதா என்றால், மார்க்கம் தாண்டிப்போய் ஓர் இறைமறுப்பாளனின் வாரிசை சமுதாயப் பெண்ணொருத்தி சுமக்கின்ற தாங்க முடியாத கொடுமையும் அல்லவா அரங்கேறிக்கொண்டிருக்கிறது! அல்லது ஒரு முஸ்லிமின் வாரிசு இறைமறுப்பாளியின் வயிற்றில் உருவாகி, அவள் மடியில் தவழ்கிறதே! என்ன சொல்ல?

பள்ளிவாசலுக்கு வந்திருப்பானோ வரவில்லையோ! ஓரிறைக் கோட்பாட்டை இதுவரை கைவிட்டிருக்கமாட்டான் அல்லவா? இன்று அவன் சர்ச்சில் அல்லது கோயிலில் காதலியுடன் வழிபாடு செய்கிறான். அல்லது நீ நீயாக இரு; நான் நானாக இருக்கிறேன் என்று சமத்துவம் பேசிக்கொண்டு, குழந்தைகளை நரகத்தில் தள்ளுகின்றான்.

திருக்குர்ஆன் என்ன சொல்கிறது தெரியுமா?
இணைகற்பிக்கும் பெண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களை நீங்கள் மணக்காதீர்கள். இணைவைப்பவள் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவளைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமைப் பெண்ணே சிறந்தவள்.

(அவ்வாறே,) இணைகற்பிக்கும் ஆண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைப்பாளன் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவனைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையே சிறந்தவன். அவர்கள் (உங்களை) நரகத்திற்கு அழைக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வோ தனது ஆணையின்பேரில் சொர்க்கத்திற்கும் பாவமன்னிப்பிற்கும் அழைக்கிறான். (2:221)

இன்று முஸ்லிம் சமுதாயம் சந்தித்துவரும் இழிவு நிலைக்கு எவ்வளவு பொருத்தமான, அழுத்தமான திருவசனம் பார்த்தீர்களா? பெற்றோர்களே! கையில் விளக்கைப் பிடித்துக்கொண்டே, நரகம் என்று தெளிவாகத் தெரிந்துகொண்டே உங்கள் கண்மணிகள் அதில்போய் விழுந்துகொண்டிருக்கிறார்களே! உங்களுக்கு எப்படி தூக்கம் வருகிறது? சோறு இறங்குகிறது? மானம், சூடு, சுரணை என்பதெல்லாம் உங்கள் சமுதாயத்திற்குக் கொஞ்சம்கூட இல்லையா என்று கேட்கும் மாற்றுமத நண்பர்களுக்கு என்ன பதில் சொல்வது?

மதம்விட்டு மதம்மாறி காதல் செய்வதற்கும் திருமணம் செய்வதற்கும் முஸ்லிம் பெற்றோர்களே சம்மதம் தெரிவிக்கும் அடுத்த கட்டத்திற்கு சமுதாயம் போய்விட்டதாகத் தெரிகிறது.

அண்மையில் சில திருமண அழைப்பிதழ்கள் பார்வைக்கு வந்தன. இரண்டிலும் மணமகன் முஸ்லிமல்லாதவன். மணமகள் முஸ்லிம் பெண். அவரவர் தத்தம் பெற்றோர் பெயர்களையும் ‘அவ்வண்ணமே கோரும்’ இடத்தில் முஸ்லிம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயர்களையும் கூச்சமின்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். பெற்றோர், உற்றார் உறவினர் இசைவின்றி இது நடக்குமா? சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

மறுமை நாளின் அடையாளம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பயனுள்ள) கல்வி அகற்றப்படுவதும் அறியாமை நிலைப்படுவதும் மது (மலிவாக) அருந்தப்படுவதும் விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும். (ஸஹீஹுல் புகாரீ – 80)

அண்மையில் ஒரு செய்தி படித்தேன்: காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி போன்ற நகரங்களில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும் அங்குள்ள மக்களின் வறுமை விகிதம் குறையவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வறுமையின் அளவு குறைவாக இருக்கிறது. இதற்குக் காரணம் விவசாயம். அங்கு விவசாயத் தொழில் பரவலாகவும் பாரம்பரியமாகவும் நடைபெறுவதால் பொதுமக்கள் பசி பட்டினியின்றி வாழ முடிகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,576 ஆக இருக்கிறது. தனிநபர் வருவாய் குறைவாக இருந்தாலும் அங்கு வறுமையின் விழுக்காடு 10.9 மட்டுமே. திருவாரூர் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,341; ஆனால், வறுமை 16.6 விழுக்காடு மட்டுமே.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை நிலங்களை விற்றுவிட்டு, வெளிநாடுகளுக்கு ஆண்கள் படையெடுத்துவிட்டனர். ஒரு சில முஸ்லிம்களிடம் மட்டுமே விவசாய நிலங்கள் உள்ளன. வெளிநாட்டு வாசல் ஒருநாள் அடைக்கப்பட்டால், நமது நிலை என்னவாகும் என்பதைச் சிந்திக்காமல், நிலங்களை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள்.

அயலகங்களில் ஆண்கள் பல மாதங்கள், சில வேளைகளில் பல ஆண்டுகள் தங்கிவிடும்போது உள்ளூரிலே பெண்கள் இயற்கையான உறவுகளுக்கு ஏங்குகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர், கார் ஓட்டுநர், பால்காரன், கேபிள் டி.வி. ஆபரட்டர், பொருட்கள் விற்க வருபவன், வங்கி ஊழியன், உறவுக்காரன் எனப் பல வகையான ஆண்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்குமான சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன.

“ஓர் ஆண் (அந்நியப்) பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம்! அங்கு மூன்றாவது ஆளாக ஷைத்தான் இருப்பான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (அபூதாவூத்)

நபியவர்களின் எச்சரிக்கை பல ஊர்களில் உண்மையாகிவருகிறது. அங்கெல்லாம் ஷைத்தானின் கொடி பறக்கிறது. அக்கொடியின் நிழலில் கற்பு பறிபோகிறது.

கண்ணின் விபசாரம் பார்வை; நாவின் விபசாரம் பேச்சு; மனமோ ஆசைப்படுகிறது; இச்சிக்கிறது. உறுப்பு அதை மெய்ப்பிக்கிறது; அல்லது (விலகி) பொய்யாக்கிவிடுகிறது. என்பதும் நபிமொழிதான் (ஸஹீஹுல் புகாரீ – 6243).

பார்வைக்கும் பேச்சுக்கும் ஏன் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்பது இப்போது தெரிகிறதா?
இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, சொகுசு வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடும் பெண்கள், தம் வீட்டு ஆண்கள் அனுப்பிவைக்கும் பணம் போதவில்லை என்று சொல்லி, கொடும் பாவத்தை ஒரு தொழிலாகவே செய்யும் துணிச்சல் பெற்றுவிட்டார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

தாயே மகளை அனுப்பிவைப்பதையும் மாமியாரே மருமகளை வண்டியில் ஏற்றிவிடுவதையும் உங்களால் நம்ப முடிகிறதா? என்னால் நம்ப முடியவில்லை. பிறகு தாய்மைக்குத்தான் என்ன அர்த்தம்? குடும்பத் தலைவி என்பதற்குத்தான் என்ன பொருள்?

தீக்குண்டத்தில் நிர்வாணமாக
நபி (ஸல்) அவர்கள், தாம் நரகத்தில் கண்ட காட்சிகளை விவரித்தார்கள்; அப்போது பின்வருமாறு கூறினார்கள்:
அடுப்பு போன்ற ஒரு பொந்து. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் தீ எரிந்துகொண்டிருந்தது. தீ அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால், மேற்பகுதி குறுகலாகயிருந்ததால் வெளியேற முடியவில்லை.)

தீ அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான், “இவர்கள் யார்?” என்று கேட்டேன். வானவர்கள், “இவர்கள்தான் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள்” என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரீ – 1386)

அழகான பெண்கள் வசிக்கும் பகுதியில் வடநாட்டுக் கும்பல் கடைகளைத் திறப்பார்கள். அடகு கடை, நகைக் கடை, துணிக்கடை போன்ற வணிகத் தலங்களைத் திறந்து, மறைமுகமாக விபசாரத் தொழிலையும் மேற்கொள்கிறார்கள். நகை வாங்க வரும் பெண்களுக்கு வலியச்சென்று உதவுவதுபோல் உதவி செய்து வலையில் சிக்கவைத்து, இனி திரும்ப நினைத்தாலும் திரும்ப முடியாத நெருக்கடியில் தள்ளிவிடுவார்கள்.

புதுவகை நகைகள்மீதும் துணிகள்மீதும் பெண்களுக்கு இருக்கிற மோகத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் இந்த அயோக்கியர்கள். மீளமுடியாத படுகுழியில் தள்ளிவிடுகிறார்கள். வெளியே சொன்னால் குடும்பத்தையே அழித்துவிடுவோம் என்ற மிரட்டல் வேறு.

இவர்களுக்கு வகைவகையான புரோக்கர்கள்; சட்ட சிக்கலில் இருந்து தப்பிக்க காவல்துறை, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என எல்லாரும் துணை; கூட்டணி. இந்தப் பாவத்திற்குத் துணைபோகின்றவர்களிலும் முன்னின்று ஏற்பாடு செய்கின்றவர்களிலும் கலிமா சொன்ன முக்கியப் புள்ளிகளும் இருப்பதுதான் வன்கொடுமை.

இது ஒரு பெரிய நெட்வொர்க் என்று சொல்லப்படுகிறது. திருமண வீடியோ, பள்ளி நிகழ்ச்சிகள் வீடியோதான் பெண்களுக்கு வலைவீச இவர்களுக்குச் சரியான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. இவ்வாறு சிக்கும் அழகான இளம்பெண்களை மாநிலம் தாண்டி விபசாரத்திற்கு அனுப்பிவைப்பதுடன், பாலியல் படங்கள் எடுக்கவும் போதைப் பொருள் கடத்தவும் இக்கயவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும்.
பெண்கள் மார்க்கத்திற்கு வெளியே; ஆண்கள் விரக்தியின் விளிம்பில். இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும். எப்படி என்பதுதான் தெரியவில்லை. யோசித்து யோசித்து தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.

இது பரவிக்கொண்டுவரும் பேராபத்து. அங்குதான்; இங்கு இல்லை என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் கவலையோடும் அச்சத்தோடும் இது குறித்து சிந்திக்க வேண்டும். தனிமையில் அழுது புலம்புவதில் புண்ணியமில்லை. எப்பாடு பட்டேனும் இந்தச் சமூகக் கொடுமையை, பெண்ணினத் தீமையை தடுத்து நிறுத்தியாக வேண்டும்!

பிப்ரவரி 14ஆம் தேதி ‘காதலர் தினம்’ என்றொரு கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஏறத்தாழ எல்லா நாடுகளும் சட்ட அனுமதி அளிக்கின்றன. இத்தகைய நரகச் சூழலில்தான் பண்பாடு மிக்க முஸ்லிம்களும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. நாம்தான் நம் வீட்டுப் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக இருந்து பாதுகாத்திட வேண்டும்.

நம் வீட்டு ஆடுகள் வேலியைத் தாண்டும் அளவுக்கு வந்துவிட்ட இன்றையச் சூழலில் வேலியே இல்லாவிட்டால் என்னவாகும் என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
பேராசிரியர்,
மெளலவி.அ.முஹம்மது கான் பாகவி

தமிழகத்தை உலுக்கிய இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு போராட்டம்







தமிழ்நாடு, ஏப்ரல் 23 : தஞ்சையில் மற்றும் சென்னையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய முஸ்லிம்களின் இட ஒதுக்கிட்டிற்கான எழுச்சி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்த எழுச்சி பேரணி தஞ்சை திலகர் திடலில் துவங்கி தஞ்சை ரயில் நிலையம் அருகே நிறைவுற்றது.பேரணி முடிவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இந்த இட ஒதுக்கிட்டிற்கான எழுச்சி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் ,பெண்களும் இதில் முஸ்லிம்களுக்கு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிசன் அடிப்படையில் மத்தியில் 10 % இட ஒதிக்கிடும்,தமிழகத்தில் 7 % இட ஒதிக்கிடும் வழங்க வேண்டும் என்று பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

அப்துல் ரசாக் (சென்னை)

உணவில் நச்சுத்தன்மை: கே.எஃப்.சிக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு!


சிட்னி,ஏப்ரல் 22:நச்சுத்தன்மை கலந்த உணவை சாப்பிட்டதால் ஏழு வயது சிறுமியின் மூளையில் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் உலகில் பெரும் செல்வாக்குடன் திகழும் கே.எஃப்.சி(கெண்டகி ஃப்ரைட்சிக்கன்) நிறுவனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் ஆஸ்திரேலிய குடும்பத்தினருக்கு ஆதரவான தீர்ப்பை நீதிமன்றம் வெளியிட்டது.

2005 அக்டோபர் மாதம் இவ்வழக்கு தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது. கே.எஃப்.சி நிறுவனத்தின் நச்சுத்தன்மை கலந்த ஃபாஸ்ட் ஃபுட்டை சாப்பிட்டதால் மோனிக்கா ஸமான் என்ற ஏழு வயது சிறுமிக்கு மூளை ஸ்தம்பித்துப் போனதாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கே.எஃப்.சி உணவை சாப்பிட்டதால் தங்களது மகளுக்கு இத்தகையதொரு நிலைமை ஏற்பட்டதாக கூறி 10 லட்சம் டாலர் நஷ்ட ஈடு கோரி மோனிக்காவின் குடும்பத்தினர் நியூ சவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றத்தை அணுகினர்.

கே.எஃப்.சியின் ட்விஸ் டர்ராப் என்ற உணவை சாப்பிட்டதால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைப் போலவே இந்த உணவை சாப்பிட்ட பல குடும்ப அங்கத்தினர்களும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

சிறுமி பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கோமா நிலையில் உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக கே.எஃப்.சி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் அல்லாஹ்வின் இறை இல்லம் தகர்ப்பு முஸ்லிம் மக்கள் ஆவேசம்..






இலங்கை, ஏப்ரல் 20௦: இலங்கை நாட்டில் சுமார் 60 வருடம் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான தம்புள்ள ஜும்மாஹ் பள்ளிவாசல் பேரினவாத சக்திகளான புத்தமத்தினரால் முற்றுகை இடப்பட்டுள்ளது. மேலும் இன்று வெள்ளி கிழமை ஜும்மாஹ் தொளுகைக்காக சென்ற முஸ்லிம் சகோதரர்கள் பள்ளியினுள் இருந்து வெளியில் வர முடியாதவாறு பேரினவாத சக்திகளால் பள்ளி வாசலை முற்றுகை இடப்பட்டுள்ளதாகவும் பள்ளியை நோக்கி கற்கள் வீசப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மேற்கூரை மட்டும் பள்ளியில் சிறு பகுதி மற்றும் பாதிப்பு அடைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது. அங்குள்ள ராணுவத்தினரும், போலிசாரும் பணியில் இருந்த போதும் அவற்றை கண்டு கொள்ளாமல் இருந்ததாக அங்குள்ள ஒரு நண்பர் மூலம் தெரியவருகிறது. இறைவனின் இல்லமான இப்பள்ளி வாசலை பாதுகாப்பதற்கு தங்களுடைய பிரார்த்தனைகளை அதிகம் கேட்குமாறு தம்புள்ளையில் தொழில் செய்துவரும் எமது சகோதரர்கள் கண்ணீருடன் எமது சமூகத்துக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் யூசுப் அலி

முத்துப்பேட்டை நகரில் திறப்பு விழா கண்டும் பயன்படாத புதிய பேருந்து நிலையம்...





முத்துப்பேட்டை, ஏப்ரல் 19: முத்துப்பேட்டை பேரூராட்சி பொது மக்கள் பயன்பெறும் வகையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நேற்று 18.04.2012 அன்று முதல் அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விழா நேற்று பேரூராட்சி தலைவர் கோ.அருணாசலம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி, தெருவிளக்கு சுகாதார முறையில் கழிப்பிடம் மற்றும் பயணிகள் தங்கும் அறை போன்ற வசதில்கள் சுமார் 1 லட்சத்து 5o ஆயிரம் மதிப்பீட்டு செலவில் பராமரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடத்தில் துவக்கப்பட்ட முதல் நாள் மட்டுமே அனைத்து பேருந்துகளும் நின்று சென்றுள்ளது. முத்துப்பேட்டை காவல்துறையினர் வாகன ஒலிபெருக்கி மூலம் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்துள்ளனர். இருந்தும் எல்லா பேருந்துகளும் அங்கு நிற்காமல் பழைய முறையையே கடைப்பிடித்து வருகின்றனர். இதற்க்கு தக்க நடவடிக்கை எடுக்கமா காவல்துறை, பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்க போகிறது என்று.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்)

முத்துப்பேட்டை: பழைய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுனர்களின் ஆலோசனை கூட்டம்






முத்துப்பேட்டை,ஏப்ரல் 17 : முத்துப்பேட்டையில் ஆட்டோ, மினிடோர் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் நல சங்கம் சார்பில் இன்று (17.04.2012) கொய்யா மஹாலில் காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் இச்சக்கத்தின் தலைவர் ஜனாப். ச.ச. பாக்கர் அலி சாஹிப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த சங்கம் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் சங்கத்தின் வளர்ச்சி குறித்தும் அவற்றின் குறைகள் குறித்தும் ஆலோசனை செய்யும் விதமாக, இதில் எல்லா ஆட்டோ ஓட்டுனர்கள், மினிடோர் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய ஆலோசனைகளை வழங்கினார்கள். இதில் சங்கத்தின் துணைத்தலைவர். திரு.K.G. சங்கர், செயலாளர் ஜனாப். M. ஜபருல்லாஹ், பொருளாளர். ஜனாப். M.J.சாதிக், மூத்த உறுப்பினர்K.S.H. சுல்தான் இப்ராஹீம் அவர்களின் முன்னிலையில் உறுபினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்)

ஒபாமா- புஷ் தலைகளுக்கு ஒரு கோடி பவுண்ட் பரிசு! -பிரிட்டன் எம்.பி., நசீர் அறிவிப்பு!


பாகிஸ்தான், ஏப்ரல் 16: பாகிஸ்தான் பேராசிரியர் ஹாபிஸ் முஹம்மத் சயீதின்தலைக்கு, அமெரிக்கா ஒரு கோடி டாலர் பரிசு அறிவித்தது.இது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் கேவலப்படுத்தும் செயல் என, தனது கடும் கண்டனத்தை வெளியிட்ட பிரிட்டன் எம்.பி., லார்ட் நசீர், இதற்க்கு பதிலடியாக, அமெரிக்காவின் இந்நாள் அதிபர் பராக் ஒபாமா முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபுள்யூ புஷ், ஆகிய இருவரின் தலைக்கும் ஒருகோடி இங்கிலாந்து பவுண்டுகள் பரிசை அறிவித்தார். இது, அமிரிக்கா சயீதுக்கு அறிவித்த பரிசை விட 50%கூடுதல் பரிசாகும். அமெரிக்க முன்னாள் மற்றும் இந்நாள் அதிபர், இருவரில் யாரை கொண்(று)டு வந்தாலும், அவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படும், என்று அறிவித்தார். பாகிஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்து பேசிய பிரிட்டன் எம்.பி., லார்ட் நசீர், விழா மேடையிலேயே, பகிரங்கமாக இதை அறிவித்தார். இதற்க்கான பணத்தை தனது வீடு, சொத்துக்களை விற்றேனும் தாம் கொடுக்க தயார், என்றும் அறிவித்தார்.

சவுதிக்கு உடனடி ஆட்கள் தேவை.!


சவூதி, ஏப்ரல் 14 : சவூதி இண்டர்வியு வரும் 16.04.12 அன்று திருச்சி யிலும், 17.04.12 அன்று சென்னையிலும் கீழ்க்கண்ட வேலைகளுக்கு நடைபெறுகிறது.

1. கவுண்டர் சேல்ஸ்மேன் (கடைக்குள் பாக்கெட் கோழி விற்பனைக்கு) 30 பேர் தேவை.
சம்பளம் : 800 + 200 + கமிசன்
வேலை நேரம் : 11 மணி நேரம் . வார லீவ் இல்லை. .வயது : 36க்குள்.
ஆங்கிலம் சிறிது புரிந்துகொள்ள பேச முடிய வேண்டும்.

2.கார்பெண்டர்கள் பேள்ளல்ட் செய்வதற்கு (15 பேர்) தேவை
சம்பளம் : 1300 ரியால். 12 மணி நேர வேலை.

3. ஆர்க் CO2 வெல்டர்கள் பேர் தேவை.
சம்பளம் : 1300 ரியால்.+ தங்குமிடம் . 12 மணி நேர வேலை

4. ஹெவி டிரைவர்கள் 5 பேர் தேவை.
சம்பளம் : 1300 ரியால். 12 மணி நேர வேலை,
மேலும் தொடர்புக்கு சென்னை யாசர்: 72005 00225
source from: www.mttexpress.com
நமது நிருபர்

சென்னை யாசர்.

SDPI -யின் திருவாரூர் மாவட்ட செயற்குழு கூட்டம்




திருவாரூர், ஏப்ரல் 13 : அன்று மாலை திருவாரூரில் தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா தலைமையில் நடந்தது.
வரவேற்புரை : நைனா முஹமது (மாவட்ட பொருளாளர்) மற்றும் மாவட்ட பொது செயலாளர் அப்துல் அஜீஸ் சிறப்புரை யாற்றினார்,
நன்றியுரை பாவா பஹுர்தீன் (மாவட்ட செயலாளர்) கூறினார்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

O .M .சுபைத் கான்

முத்துப்பேட்டையில் நடைபெற்ற மின் கட்டண உயர்வை கண்டித்து SDPI -யின் மாபெரும் ஆர்பாட்டம்






முத்துப்பேட்டை, ஏப்ரல் 13 : திருவாரூர் மாவட்ட முத்துபேட்டையில் SDPI நடத்திய தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி 12-04-12 காலை 11 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தலைமை : அப்துல் அஜீஸ் (மாவட்ட பொது செயலாளர்)
வரவேற்புரை : M. தப்ரே ஆலம் பாதுஷா (மாவட்ட தலைவர்)
முன்னிலை : அப்துல் லத்திப் (மாவட்ட துணை தலைவர்),
நைனா முஹமது (மாவட்ட பொருளாளர்),
பாவா பஹுர்தீன் (மாவட்ட செயலாளர்),
செல்லத்துரை (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க செயலாளர்).
கண்டன கோசம் : ஷேக் முஹிதீன் (நகர செயற்குழு)
கண்டன உரை : A. அபூபக்கர் சித்திக் (மாநில செயற்குழு உறுப்பினர்)
நன்றி உரை : A. முஹமது முஹைதீன் (நகர செயலாளர்). இந்த ஆர்பாட்டத்தில் 50 பேர்க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

நமது நிருபர்

O .M .சுபைத் கான்

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி ஆர்பாட்டம்.!!


முத்துப்பேட்டை, ஏப்ரல் 13 : முத்துப்பேட்டையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முத்துப்பேட்டை உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் திரு.R .பழனிச்சாமி தலைமை வகித்தார். மேலும் இதற்க்கு நிர்வாகி டி.வி.கந்த சாமி முன்னிலை வகித்தார், மாவட்ட பொதுக்குழு ராஜகோபால், மாவட்ட நிர்வாகி நாகப்பன், சி.செல்லத்துரை, ரெங்க சாமி, புலவர். ஜி.முருகையன், ஒன்றிய துணை பெருந்தலைவர் தெட்சினா மூர்த்தி, வட்டார செயலாளர் கா.ரவிச்சந்திரன் உள்பட இதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் T . ராஜேந்திரன் நன்றி கூறினார்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை,முஹம்மது யூசுப் (ஆலிம்)

முத்துப்பேட்டையில் N .வரதராஜன் மறைவு முன்னிட்டு ம.கம்யூனிஸ்ட் இரங்கல் ஊர்வலம்.


முத்துப்பேட்டை, ஏப்ரல் 13 : முத்துப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி என்.வரதராஜன் மறைவை முன்னிட்டு மாபெரும் இரங்கல் ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.வி.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ஊர்வலம் சித்தேரி குளக்கரையிலிருந்து புறப்பட்டு மண்ணை சாலை, பழைய பேருந்து நிலையம், டி.டி.பி. ரோடு வழியாக புதிய பேருந்து நிலையத்தை சென்று அடைந்தது. பின்னர் நடந்த இறங்கல் கூட்டத்தில் தி.மு.க.மாவட்ட துணைச் செயலாளர் MS . கார்த்திக், பேரூராட்சி தலைவர் கோ.அருணாச்சலம், அ.தி.மு.க.மாவட்ட துணைச் செயலார் வி.என்.சண்முகம் மாற்று திறநாளிகள் மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியன், தே.மு.தி.க. நகர செயலாளர் LMO . ஹபீப்கான், ம.தி.மு.க. நிர்வாகி நடராஜன், மா.கம்யூனிஸ்ட் நகர செயலாளர் ஏ. காளிமுத்து, இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், தா.மு.ஏ.ச.நிர்வாகி செல்லத்துரை, உள்பட பலரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சியில் மா.கம்யூனிஸ்ட் பாலகுமார் உள்பட கலந்து கொண்டனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, ரிப்போர்ட்டர் முஹம்மது யூசுப்

முஸ்லிம்களுக்கு மத்தியில் தனி இட ஒதுக்கீடு அமல்படுத்தகோரி PFI யின் மாபெரும் ஆர்பாட்டம்




சென்னை, ஏப்ரல் 12 : முஸ்லிம்களுக்கு மத்தியில் தனி இட ஒதுக்கீடு ! மாநிலத்தில் 7 சதவீத இட ஒதிக்கீட்டை அமல்படுத்தகோரி பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் பேரணி மற்றும் ஆர்பாட்டம் வருகிற 22 ஆம் தேதி சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் நடத்த உள்ளதாக தீர்மானித்துள்ளது என்று PFI யின் தமிழ் மாநில தலைவர் ஜனாப். ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் அறிவிப்பு. இது குறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேட்டியளித்தது பின் வருமாறு. இந்தியா முஸ்லிம்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு நிலைப் பற்றி அறிய மத்திய அரசு 2005 ஆம் ஆண்டு நீதிபதி இராஜேந்திர சச்சார் தலைமையில் கமிசன் ஒன்றை நியமித்தது. இவ்வறிக்கையை கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த கமிசன் மத்திய அரசிடம் சமர்பித்தது. அந்த அறிக்கையில் முஸ்லிம்கள் கல்வி, அரசு வேலைவாய்ப்பு போன்றவற்றில் இந்தியாவில் அவர்களின் விகிதாசாரத்தை காட்டிலும் மிகவும் கீழான நிலையில் இன்னும் சொல்லப் போனால் இந்தியாவில் முஸ்லிம்கள் தலித்கள், மலைவாழ் மக்களை விடவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர் என்பதை படம்பிடித்துக் காட்டியது.
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 13 .4 % முஸ்லிம்கள் இருக்கின்றனர். ஆனால்
ஐ.ஏ.எஸ். பணியில் முஸ்லிம்கள் 3 சதவிகிதமும்,
பட்டப்படிப்பு படித்தவர்கள் 3 சதவிகிதமும்,
ரயில்வே துறையில் 4 .5 சதவிகிதமும், (அதில் 98 .7 % பேர் கடைநிலை ஊழியர்கள்) இருந்து வருகின்றனர்.
25 .2 சதவிகிதம் முஸ்லிம்கள் வாழக்கூடிய மேற்கு வங்கத்தில் முஸ்லிம் அரசு ஊழியர்கள் 4 .7 சதவிதம் ஆவார்கள்.
25 .2 சதவிகிதம் முஸ்லிம்கள் வாழக்கூடிய உ.பி.யில் அரசு ஊழியர்கள் 7 .5 சதவிகிதம் ஆவார்கள். என்று முஸ்லிம்களின் அவல நிலையை பட்டியலிட்டது சச்சார் கமிசன். இதனைத்தொடர்ந்து 2007 ல் மற்றொரு கமிசனான நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிசன் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமாக இன்ருக்கின்றது, இந்நிலை மாற முஸ்லிம்களுக்கு ௧௦ சதவிகிதம் தனி இடஒதிக்கீடு வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்திருந்தது.
நீதிபதி சச்சார் கமிசன் இந்திய சமூகங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வு எனும் நோயைக் கண்டறிந்தது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிசனோ அந்நோய்க்காண நிவாரணம் இட ஒதிக்கீடுதான் என்றது. இந்த வரலாற்று அடிப்படையின் பின்னணியில்தான் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா முஸ்லிம்களுக்கு மத்தியில் 10 சதவிகிதம் தனி இடஒதிக்கீடு வழங்க வேண்டும், தமிழ் நாட்டில் 3 .5 சதவிகித இடஒதிக்கீட்டை 7 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் நடத்த உள்ளதாக தீர்மானித்துள்ளது என்று PFI யின் தமிழ் மாநில தலைவர் ஜனாப். ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தெரிவித்துள்ளார்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

அப்துல் ரசாக் (சென்னை)

கோவையில் சிறைவாசிகளை விடுதலை கோரி INTJ ஏப்ரல் 29 மாபெரும் ஆர்ப்பாட்டம்...


சென்னை, ஏப்ரல் 12 : சிறைவாசிகள் விடுதலைக்கான கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் கோவையில் வரும் ஏப்ரல் 29ம் தேதி கோவை கோட்டைமேடு இக்பால் திடலில் இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பில் நடைகிறது. இதில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர், தமுமுக அன்சாரி, திருமாவளவன் ஆகியோர் விடுதலை முழக்கமிட உள்ளனர். இதன் தொடச்சியாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர் அவர்களை சென்னையில் இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பில் நண்பர் உமர் கயன் மற்றும் எஸ் .நாஸர்தீன் சந்தித்தனர்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

ரிப்போர்ட்டர் அபு பைசல்

அம்மாபட்டினம் அருகில் அன்னை கதிஜா பெண்கள் கலைக்கல்லூரி விரைவில் துவக்கம்



அம்மாபட்டினம், ஏப்ரல் 09 : சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோ. CMN சலீம் அவர்களின் முயற்சியால் காரைக்கால்-இராமநாதபுரம் ECR நெடுஞ்சாலையில், அதிராம்பட்டினத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்மாபட்டினம் அருகே இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய அடிப்படையில் வருகிற கல்வி ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளது. 150 கல்வி ஆர்வலர்களின் முதலீட்டில் 6 கோடி ரூபாய் திட்டத்தில் உருவாக உள்ள இக்கல்வி நிறுவனத்தில் நீங்களும் முதலீடு செய்து பங்குதாரராக ஆகலாம். ஒரு பங்கு 4 இலட்சம் ரூபாய் என வரையறுக்கப்பட்டுள்ளது. சகோ. CMN சலீம் அவர்கள் குவைத் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, இன்ஷா அல்லாஹ் நேற்று 08 .04 .2012 துபைக்கு வந்துள்ளார், அமீரகத்தில் வாழும் சகோதரர்கள் 'அன்னை கதீஜா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியைப் பற்றிய முழு விபரங்களையும் பங்கு சேர்க்கை பற்றியும் அவரிடம் நேரடியாகக் கலந்து பேசலாம்.நம்முடைய கல்விமுறை இஸ்லாமிய மயமாக்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் இஸ்லாமியப் பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும், மார்க்கக் கல்வியை இறைவன் வகுத்துத்தந்த நெறிப்படிப் பேணி வளர்க்க வேண்டும், இறைவன் நாடினால் இந்தியாவில் நாளைய வரலாறு நம்முடையதாக மாறும்; தங்களுடைய ஆதரவையும் பங்களிப்பையும் தருமாறு கேட்டு கொள்கிறோம்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

தமிசுதீன் பிறப்பிடம் நாகைப்பட்டினம் இருப்பிடம் துபாய்

மோடிக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்;கிழியும் மோடியின் கோரமுகம்!



அமெரிக்கா, ஏப்ரல் 09 : குஜராத் முஸ்லிம்களின் இனப்படுகொலைக்கும் நரேந்திர மோடிக்கும் தொடர்பு இல்லை எனக் காட்டுவதற்காக சங்க்பரிவார சக்திகள் என்னதான் பகிரங்கமான முயற்சிகளை மேற்கொண்டாலும் உலக நடுநிலையாளர்கள் மத்தியில் மோடியின் ரத்தகரை இன்னும் மறையவில்லை என்பதை அவ்வப்போது சில நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில், உலக பயங்கரவாத நாடான அமெரிக்காவில் மோடி எனும் பயங்கரவாதிக்கு எதிராக ஆர்பாட்டம் நடந்துள்ளது. குஜராத் வன்முறைச் சம்பவங்களில் 10 -வது ஆண்டு தினத்தை அடுத்து குஜராத்தில் நிகழ்ந்த மதக் கலவரங்களில் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கும் பங்கு உண்டு என்று கூறி அவருக்கு எதிராக நியூயார்க்கில் 40 இந்திய - அமெரிகக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோசம் எழுப்பி ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இனப்படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பு என்ற பதாகைகளுடன் 100 -க்கும் மேற்பட்டவர்கள் மங்கட்டனில் உள்ள மகாத்மா காண்டி சிலைக்கு அருகே சனிக்கிழமை அன்று கூடி ஆர்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். ஏற்கனவே மோடியின் அமெரிக்க விசயத்திற்கு ஆண்டுதோறும் அமெரிக்க விசா மறுத்து வரும் நிலையில், மோடிக்கு எதிரான இந்த ஆர்பாட்டம் அமெரிக்கா மட்டுமின்றி உலக அளவில் மோடியின் கோர முகத்தை வெளிக்கட்டியிருக்கும் இல்லையா.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்,அபு மர்வா

முத்துப்பேட்டை அருகே 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.




முத்துப்பேட்டை, ஏப்ரல் 08 : திருவாரூர் மாவட்டங்களில் நேற்று காரில் கடத்தி வரப்பட்ட 1 லட்சம் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மது பாட்டில் கள் கடத்தி வரப்பட்டு திருவாரூர் மாவட்டங்களில் அதிக அளவில் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட S .P . சேவிய தன்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மதுவிலக்கு போலீசாரும் அந்தந்த காவல் சரக போலீசாரும் மது பாட்டில்களை கடத்தி வரும் காருகளை பறிமுதல் செய்வதுடன், கடத்தியவர்களின் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து புதுகோட்டைக்கு கடத்தி வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது, முத்துப்பேட்டை சரக DSP .கோபி அவர்களின் தலைமையில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், முத்துப்பேட்டை எடையூர் போலீசார் நேற்று உதயமார்த்தாண்டபுரம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வேகமாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் 1 லட்சம் மதிப்புள்ள 750 மில்லி கொண்ட 300 மது பாட்டில்கள், 180 மில்லி அளவு கொண்ட 480 மது பாட்டில்கள், இருந்தது அப்போது தெரியவந்தது. அதில் காரை ஓட்டிவந்த புதுகோட்டையை சேர்ந்த தாஸ் 41 என்பவரை கைது செய்தனர்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, முஹம்மது முஹைதீன்

யு.ஏ.இ யில் வேலை:இந்திய அதிகாரிகளின் அனுமதி கட்டாயம்!


புதுடெல்லி,ஏப்ரல் 07 : ஐக்கிய அரபு அமீரகத்தில்(யு.ஏ.இ) வேலை தேடும் இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய அதிகாரிகளின் அனுமதியை கட்டாயமாக்கும் திட்டம் நிறைவேற உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவியும், யு.ஏ.இ தொழில்துறை அமைச்சர் ஸக்ர் கோபாஷும் கையெழுத்திட்டுள்ளனர்.

வேலை பாதுகாப்பும், சம்பளமும் உறுதிச்செய்வதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இந்திய தொழிலாளிகளை ரிக்ரூட்மெண்ட் நிறுவனங்களும், வளைகுடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறுவோரும் மோசடி செய்வதாக புகார்கள் அதிகரித்துள்ள சூழலில் அரசின் இந்நடவடிக்கை ஆறுதலை தரும் என கருதப்படுகிறது.

17 லட்சம் இந்தியர்கள் யு.ஏ.இயில் பணிபுரிகின்றனர். புதிய சட்டத்தின் அடிப்படையில் வேலை ஒப்பந்தத்தில் தொழிலாளி, தொழில் உரிமையாளர் தவிர இந்திய அரசு அதிகாரிகளின் சம்மதமும் தேவையாகும்.

புனித காஃபாவை இழிவு படுத்திய ஆர்.எஸ்.எஸ்...!


ஹைதராபாத்,ஏப்ரல் 07 : ஆந்திர மாநிலம் சங்கரரெட்டி என்னும் இடத்தில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையில் 1.32 கோடி மதிப்பிலான பொருட்கள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டன. சங்கரரெட்டி பகுதி பா.ஜ.க தலைவரான பவான் குமார் தனது ஃபேஸ் புக் தள பக்கத்தில் முஸ்லிம்களின் புனித இல்லமான கஃபாவை இழிவுபடுத்தும் விதத்தில் புகைப்படம் வைத்திருந்ததால் இவ்வன்முறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வன்முறை சம்பவத்தில் முஸ்லிம் சமூக மக்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்களின் சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் கடைகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியுள்ளனர். வன்முறை நடைபெற்ற இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டபோது முஸ்லிம்களின் 58 கடைகள், 34 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது. வன்முறை தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.




பழைய பேருந்து நிலையம் அருகே வன்முறையில் ஈடுபட்டுபட்டவர்கள் அங்கிருந்த கடைகள், ஹோட்டல்கள் என முஸ்லிம்களின் வியாபார‌ ஸ்தலங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை கேள்விப்பட்ட சில முஸ்லிம் இளைஞர்கள் அப்பகுதிக்கு செல்ல முற்பட்டபோது அரசு கல்லூரி அருகே இருதரப்பினருக்கும் இடையே கல்வீச்சு நடைபெற்றள்ளது.
அச்சமயத்தில் அங்கிருந்த காவல்துறையினர் முஸ்லிம் இளைஞர்களை தடுத்து நிறுத்தியதோடு வன்முறையாளர்களை தப்பிக்கவிட்டனர்.
மறுநாள் காலையில் முஸ்லிம் வியாபாரிகள் ஒன்றினைந்து காவல்துறையினரை எதிர்த்து புகார் அளித்தனர். காவல்துறையினர் வன்முறையாளர்களை கண்டுகொள்ளாது தப்பிக்க விட்டதன் விளைவாகத்தான் அதிகள் அளவில் பொருட்சேதம் ஏற்பட்டதாக கூறினர்.
மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார், எஸ்.பி விக்டர் ஜான், டி.எஸ்.பி. சஞ்சேய் ஆகியோ வன்முறை நிகழ்ந்த இடத்திற்கு வந்த போது அவர்களுக்கு எதிராக பொதுமக்கள் கண்டனக் கோஷங்களை எழுப்பினர். வன்முறையாளர்களை தப்பவைத்துவிட்டு கோடிக்கணக்கான பொருட்கள் சேதப்படுத்தப்பட்ட பின்னர் காவல்துறை அதிகாரிகள் வந்து பார்ப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர். இந்தவன்முறை ஏற்பட்டதற்கு பா.ஜ.க எம்.எல்.ஏவே முழு காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியரின் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த பின்னர் சேதப்படுத்தப்பட்ட சொத்து மதிப்பின் விவரங்களை அரசுக்கு சமர்பித்து அதுத் தொடர்பாக அரசாங்கத்தில் சிபாரிசு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்பி வன்முறையில் ஈடுபடவேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
முன்னால் எம்.பி லால் ஜான் பாஷா தலைமையில் சிலர் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பவர்களிடம் விசாரணையை மேற்கொண்ட பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து காவல்துறையினர் மீது புகார் அளித்துள்ளனர். புகாரினை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்:
ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர் முஹம்மது ஆரிஃப் அஹமது பா.ஜ.க தலைவரின் இச்செயலை வன்மையாக கண்டித்துள்ளார். முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவதற்காகவே இவ்வாறான புகைப்படங்களை பா.ஜ.க தலைவர் தனது ஃபேஸ்புக் தளத்தில் உபயோகப்படுத்தியுள்ளார். பா.ஜ.க தலைவரின் இச்செயலை கண்டித்தும் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அமைதியாக ஊர்வலம் நடத்த முயன்ற முஸ்லிம் இளைஞர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டித்துள்ளார்.
மதச்சார்பற்ற கட்சிகளும் காவல்துறையினரும் இந்த வன்முறை சம்பவத்தில் பாகுபாட்டுடன் நடந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளர். இவ்வன்முறையில் முஸ்லிம்கள் மீதே குறிவைத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. நோமானியா மஸ்ஜித் மீது நடைபெற்ற கல்வீச்சும், முஸ்லிம்களின் கடைகள் சேதப்படுத்தப்பட்டதை பார்க்கும்போது இது நன்றாக புலப்படுகிறது. முஸ்லிம்கள் மீது மட்டும் காட்டும் பாகுபாட்டை நிறுத்திவிட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.
source from: www.mttexpress.com,
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், திருச்சி ஈசா, ASNS .அப்துல் பாரி, EKA . முனவ்வர் கான்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)