

முத்துப்பேட்டை, ஜுலை 27: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்பவானோடை தர்ஹாவில் மதநல்லிணக்க இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. தர்ஹா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹிப் தலைமை வகித்தார். ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். முன்னதாக டிரஸ்டி தமீம் அன்சாரி சாஹிப் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மா.மதிவாணன,; திருவாரூர் மாவட்ட எஸ்.பி.காளிதாஸ் மகேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் மதிவாணன் பேசுகையில்: இப்படி ஒரு புனித பாக்கியத்தை தந்த தர்ஹா நிர்வாகத்துக்கு நன்றி. மதங்களை கடந்து சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்து உள்ளது. நாம் செய்த ஒவ்வொரு காரியமும் நல்லதே செய்ய வேண்டும். நல்லதே கருதவேண்டும் என்றலாம் இஸ்லாத்தில் போதிக்கப்பட்டு வருவதை நான் பல இடங்களில் கேட்டு உள்ளேன். அனைத்திலும் சமாதானம் என்ற ஒரே வாக்கியத்தையே மையப்படுத்துகிறது. இஸ்லாத்தில் போதிக்கப்படும் அனைத்திலும் சமாதானத்தையே கூறப்படுகிறது என்பது மகிழ்ச்சியை தருகிறது, இந்த நாளில் சகோதரத்துவத்தில் நாம் வாழ வேண்டும். மத நல்லினக்கத்தோடு வாழ வேண்டும் என்று நாம் உறுதி எடுப்போம் என்றார். மாவட்ட எஸ்.பி காளிதாஸ் மகேஷ்குமார் பேசுகையில்: இந்த நாளில் சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தும் வகையில் விழா நடத்த கோரிக்கை வைத்தேன். செய்து கொடுத்த தர்ஹா நிர்வாகத்துக்கு நன்றியை தெரிவிக்கிறேன். அதே போல் இந்த இப்தார் நிகழ்ச்சியில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் இப்பொழுது நாம் காணமுடிகிறது. இது போல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். உங்களை போன்றவர்கள் ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி வட்டாச்சியர் மதியழகன், ஒன்றிய குழுத் தலைவர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, முன்னால் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி, இன்ஸ்பெக்டர்கள்: எடையூர் பாண்டியன், முத்துப்பேட்டை சண்முகவேல், ஒன்றிய கவுன்சிலர் ஜாம்பை கல்யாணம், ஜாம்பை இளைஞர் நற்பணி மன்றம் தலைவர் கண்ணன், குட்டியர் பள்ளி தலைவர் காதர் உசேன், தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், ரோட்டரி தலைவர் வேதசங்கர், வர்த்தகக்கழக தலைவர் ராஜாராமன், பொதுச்செயலாளர் ராமலிங்கம், விவசாயிகள் பிரிவு நிர்வாகி முருகையன், சமூக ஆர்வலர் சுல்தான் இபுராஹிம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முகம், புதுபள்ளி நிர்வாகி சிராஜிதீன், பேரூராட்சி கவுன்சிலர் நாசர், நகர காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னால் துணைத் தலைவர் கந்தவேல், மர்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் காளிமுத்து, தர்ஹா நிர்வாகி சேட்டு, திருத்துறைப்பூண்டி சிராஜிதீன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். முடிவில் தர்ஹா நூர் முகம்மது லெப்பை நன்றி கூறினார்.
.
முத்துப்பேட்டை, ஜுலை 27: முத்துப்பேட்டை அடுத்த பேட்டை அங்களம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பரமணியன்(45), மாட்டு வண்டியின் கூலி தொழிலாளியான இவரது மகள் மாரியசெல்வி(26)க்கு கடந்த 11.07.2014 அன்று பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவருக்கு திருமணம் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலில் நடைபெற்றது. அதற்காக தமிழக அரசின் திருமண உதவி திட்டத்தில் பணம் பெற கடந்த 22.06.2014 அன்று முத்துப்பேட்டை ஒன்றிய குழு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அன்றைய நாள் முதல் சுப்பிரமணியனை தினமும் ஒவ்வொரு ஆவனங்களை கேட்டு அலையவிட்ட கிராம நல அதிகாரிகள் இறுதியாக கடந்த 21.07.2014 திங்கள் அன்று சுப்பிரமணியன் வீட்டை கிராம நல அலுவலர் சீதா லட்சுமி தலைமையில் மூன்ற பெண் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் சுப்பிரமணியத்திடம் இதில் நிறைய பணிகள் இருப்பதாகவும், பத்தாயிரம் வரை செலவு இருப்பதாகவும் அலுவலர் சீதா லட்சுமி, சுப்பிரமணியத்திடம் பத்தாயிரம் பணம் கொண்டு வரும் படி கூறி சென்றுள்ளார்.
இந்த நிலையில் அடுத்த நாள் அலுவலகம் சென்ற சுப்பிரமணியன் தான் மிகவும் சிரமப்படுவதாகவும் அதனால் என்னிடம் பணம் இல்லை என்று கூறி உள்ளார். அதற்கு அலுவலர் சீதா லட்சுமி சும்மா சம்மா இங்கு வர கூடாது. இறுதியாக எட்டாயிரம் பணம் கொண்டு வந்து கொடுத்தால் தான் உதவி பணம் பெற்று தருவேன் என்று கோபமாக கூறி உள்ளார். இதனால் அதிர்ப்தி அடைந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் மாரிசெல்வி ஆகியோர் நேற்று முன்தினம் 24.07.2014 தேதி மீண்டும் அலுவலர் சீதா லட்சுமியை நேரில் சந்தித்த போது மீண்டும் அதே பாணியில் அலுவலர் சீதா லட்சுமி கூறி திருப்பி அணுப்பி உள்ளார். இதனால் மன உலைச்சல் அடைந்த சுப்பிரமணியன், நாகை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன் படி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.சிவஞான வடிவேல், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், சந்திரன், உதவி அலுவலர்கள் ரவி சந்திரன், பாண்டியன், சந்திரபாலன், அன்பழகன் ஆகியோர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம் 2.30 மணிக்கு அலுவலகத்தை கண்காணித்து கொண்டிருந்தனர். அப்பொழுது சுப்பிரமணியத்திடம் ரசாயணம் தடவிய ரூபாய் 8 ஆயிரம் பணங்களை கொடுத்து அனுப்பினர்.
அலுவலர் சீதா லட்சுமி பணத்தை பெற்று கொண்டு நாளை மீண்டும் ஒரு சான்று கொண்டு வரும் படி கூறினார். இதனை மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை பல மணி நேரம் சோதனையிட்டு அலுவலர் சீதா லட்சுமியை கைது செய்து கோர்டில் ஆஜர் படுத்த நாகை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட அலவலர் சீதா லட்சுமியின் கணவர் சேகர் ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலராக இருந்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசில் மாட்டி பணி நீக்கம் செய்யப்பட்டவர். தற்பொழுது திருத்துறைப்பூண்டி ம.தி.மு.க நகர செயலாளாராக உள்ளார். இச்சம்பவம் செய்தி மக்கள் மத்தியில் பரவியதால் முத்துப்பேட்டையில் பெரும் பரபர்பபு எற்பட்டு உள்ளது.
முத்துப்பேட்டை, ஜூலை 23: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ஷவ்வால் பிறை 5, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 02-08-2014 ஞாயற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை CR திருமண மண்டபத்தில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே எனது உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
இப்படிக்கு: M. முஹம்மது முஸ்தகீம். BE.
முத்துப்பேட்டை, ஜூலை 23: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ஷவ்வால் பிறை 6, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 03-08-2014 ஞாயற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை குத்பா ஜும்மாஹ் பள்ளிவாச லில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே எனது உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
இப்படிக்கு: M. முஹம்மது ஆசிக் ஹலீம்
12:41 PM
ஜுலை 18,
துபாய் அரசின் சார்பில் வருடந்தோறும் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டி நடைபெற்று வருகிறது.
சர்வதேச அளவில் சுமார் 80 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவிலிருந்து கேரளாவைச் சேர்ந்தவர் பங்கேற்றுள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி 18.07.2014
வெள்ளிக்கிழமை மாலை அல் மம்சாரில் அமைந்துள்ள கல்சுரல் மற்றும்
சயிண்டிஃபிக் அசோஷியேஷன் அரங்கில் நடைபெற இருக்கிறது.
The winners
will be awarded during the closing ceremony on Friday night at the
Cultural and Scientific Association in Al Mamzar.
சர்வதேச அளவிலான அரிய நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்போம்.
Dubai Quran contest ends with final performance
Last six of 78 finalists took to the stage on Tuesday night
9:14 PM
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சோசியல் டெமக்ராட்டிக் பார்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் கொய்யா மகாலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் லத்திப் தலைமை வகித்தார். கிளை தலைவர் தீன் முகம்மது வரவேற்று பேசினார். மாவட்ட பொது செயலாளர் நெய்னா முகம்மது முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது கலந்து கொண்டு பேசுகையில்: இந்திய அரசியலில் மே 24 ம் தேதிக்கு பிறகு நாட்டில் நடத்தர மற்றும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்பையும் மீறி பா.ஜ.க அரசு ஆட்சியை பிடித்து விட்டது. மனித லட்சனத்திற்கே தகுதி இல்லாத நரேந்திர மோடி இன்று இந்தியாவின் பரதமராகி விட்டார். இதற்கெல்லாம் மிக பெரிய சத்தியாக விளங்கிய ஊடகம் தான் காரணம். மேலும் நரேந்திர மோடி உழைப்பும் கொஞ்சம் இல்லை. ஒன்னறை வருடங்களில் 532 கூட்டங்களில் நரேந்திர மோடி பேசி இருக்கிரார். 3 லட்சத்துக்கு மேற்பட்ட மைல் தூரம் கடந்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு உள்ளார். 80 கோடி மக்களை அவர் சந்தித்து உள்ளார்.
இந்தியாவில் இதுவரை எந்த ஒரு தலைவரும் செய்தது இல்லை. கடைசியில் கழுதைக்கு வாக்கப்பட்ட நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளளோம். நரேந்திர மோடி பிரதமரானால் நான் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று நோபால் பரிசு பெற்ற அமரயசிங், எழுத்தாளர் ஆனந்த மூர்த்தி ஆகியோர் சொன்னார்கள். அந்த அளவிற்கு விரும்பத்தக்க மனிதர் நரேந்திரமோடி, அதனால் நாங்கள் நாட்டில் நடக்கும் அடக்கு முறைகளை கண்டு அஞ்ச மாட்டோம்.
அஞ்சாத இயக்கம் தான் எஸ்.டி.பி.ஐ என்பதை உணர்த்துவோம் இவர்களுக்கு வைக்கோ, விஜயக்காந்த், தமிழருவி மணியன் போன்றவர்கள் இடைதாரராக இருந்து சாதித்து விட்டனர். மொத்த்ததில் பா.ஜ.க வின் நரோந்திர மோடி பிரதமராகுவதை இந்த நாட்டின் யாராலும் தடுக்க முடியவில்லை என்றார். பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் பேசுகையில்: சென்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை சந்தித்த எஸ்.டி.பி.ஐ கட்சி இந்தியாவின் மிகபெரிய கட்சியாக நிகழ்கிறது.
அரசியல் அதிகாரத்தை வைத்து கொண்டு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயங்களை எப்படியல்லாம் முடக்க பார்க்கிறது என்பதை நாங்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். தற்பொழுது நாட்டில் பெரும்பான்மையாக சீட்டு பிடித்து ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு தங்களுக்கு சாதகமாகவும் மக்களுக்கு விரோதமாகவும் செயல்படுவதையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கோம். 2004 ஆம் ஆண்டு மிக பெரிய வீழ்;ச்சியை அடைந்த பா.ஜ.க. குஜராத்தில் நடந்த இனப்படுகொலைகள் தான் இதற்கு காரணம் என்று அன்றை பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் கூறப்பட்டது.
அதில் குற்றம் சாட்டப்பட்ட நரேந்திர மோடி தான் இன்று கதாநாயகனாக ஆக்கி பிரதமராக்கி உள்ளனர். அது போல் அமித்ஷா போன்றவர்கள் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்று அவர் பா.ஜ.கவின் தலைவர், பார்த்து கொள்ளுங்கள் செயல்பாட்டை, இந்தியாவின் சுதந்திரத்துக்கு பிறகு முஸ்லிம்களின் அரசியல் அதிகாரம் பிடுங்கப்பட்டவிட்டது.
2008ஆம் ஆண்டு நவம்பர் 26ந்தேதி நடந்த மும்பை குண்டு வெடிப்பில் முஸ்லிம்களை பாராபட்டசமாக பட்டுத்தி விட்டனர் என்றார். கூட்டத்தில் மாநில செயலாளர் அப்துல் சத்தார் உட்பட பலரும் பேசினார்கள். இதில் நிர்வாகிகள் முகம்மது யாசர், மீரா உசேன் சபீர் அலி உட்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் கிளை தலைவர் முகம்மது அசன் நன்றி கூறினார்.
3:17 PM
சங்கரன்கோவில், ஜூலை. 6–
சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்தவர்
ஜீவராஜ் (வயது 37). இந்து முன்னணி நகர செயலாளரான இவர், அவரது வீட்டருகே
கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து
சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜீவராஜை
அவரது முதல் மனைவி அய்யம்மாள் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். போலீசில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:–
எனது
கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் என்னுடன் தகராறு செய்வார்.
இதனால் அவரை நான் கண்டித்தேன். இருப்பினும் அவர் குடியை நிறுத்தவில்லை.
இதன் காரணமாக நான்அவரை பிரிந்து எனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டேன்.
என்
மீதான கோபத்தில் ஷர்மிளா என்பவரை 2–வதாக திருமணம் செய்து கொண்டார். இதனை
தட்டிக்கேட்ட என்னை அடித்து துன்புறுத்தினார். மேலும் நான் இருக்கும் போதே
ஷர்மிளாவுடன் உல்லாசம் அனுபவித்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
நேற்று முன்தினம் இரவு
ஷர்மிளா வீட்டில் இல்லை. மேலும் ஜீவராஜ் நல்ல குடிபோதையில் இருந்தார். இந்த
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட நான் ஜீவராஜின் கழுத்தை அரிவாள்மனையால்
அறுத்து கொலை செய்தேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து
விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
11:50 AM
இதே ரமலான் மாததில் நம்மை விட்டு பிரிந்த நம் பழனி பாபா அவர்களின் ஞாபகமாக.. சிறு நினைவூட்டல்...
இவர் இஸ்லாமிய சமூதாயத்திற்க்காக இறுதியாக முழு மூச்சோடு மேற்கொண்ட முயற்ச்சியான.. அனைத்து ஜமாத் ஓன்றிணைப்பை பாதியில் விட்டு பயணத்தை முடித்தார்.. ஆனால் 16 ஆண்டுகளாகியும் இன்னும் ஓற்றுமை என்பது எட்டா கனியாக இருப்பதை நினைத்தால் ஒருபுறம் வேதனையாகவும், சில சமயம் அசிங்கமாகவும் உள்ளது...
நம் பாபா அவர்களை பற்றி...
பழனிபாபாவின் தந்தை பெயர் முஹம்மது அலி, தாயார் பெயர் கதீஜாபீவி. இவரது இயற்பெயர் அஹமதுஅலி சொந்த ஊர் பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில்திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ள புதுஆயக்குடிஎன்னும் கிராமம். இவரது தந்தை நீலகிரி மாவட்டம்குன்னூரைச் சேர்ந்தவர். பாபா குன்னூரில் உள்ள செயிண்ட் ஜோஸப் காண்வென்ட்டில் கல்வி பயின்றார். பெற்றோர்களின் மறைவுக்குப்பின் புதுஆயக்குடியில்உள்ள முதலாளி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்தில் சின்னத்தம்பி என்று அழைக்கப்படும் தாய்மாமன் அப்துல் ரஹ்மான் அவர்களது பராமரிப்பில்பழனி கல்லூரியில் பட்டப்படிப்பை தொடங்கினார். படிக்கும் காலத்திலேயே தொடங்கிய துணிச்சலான பொதுவாழ்க்கை நடவடிக்கைகளால் குடும்பத்தார்களுக்கு சங்கடம் என்பதால் இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் முதன்முறையாகசென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்குள் பழனிபாபா நுழையத் தடை என அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் அறிமுகம் ஆனார். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்ட திமுக, எம்.ஜி.ஆரை எதிர்க்க இவரைப் பயன்படுத்திக்கொண்டது. தி.மு.க. அரசும் பின்னர் இவரை எதிர்த்த போது பாபாவின் சமுதாய பார்வை புதியபாதை காண வைத்தது. தமிழகம் முழுவதும் கேரளா, மும்பை உட்பட இந்தியாவின் பிற பகுதிகளிலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளிலும் சுற்றுபயணம் மேற்கொண்டு சமூகத்தின் பிரச்சனைகளை பேசினார். அரசியல் கலந்த சமுதாயப்பேச்சு தமிழகமெங்கும் அவருக்கு ஆதரவாளர்களை பெற்றுத் தந்தது. அவரது நடவடிக்கைகள் அவரை பல வழக்குகளில் சிக்கவைத்தது. தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA), தடா சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன்அவர்களின் பதவிக்காலத்தில் அரசு பணத்தில் திருப்பதிகோவிலுக்கு அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடுத்தார்.
முஸ்லிம் சமூகத்தில் பரவலாக இருந்த வரதட்சணை ,வட்டி போன்ற பழக்க வழக்கங்களுக்கு எதிராக குரல் கொடுத்தார். சந்தன கூடு, சமாதி வழிபாடு போன்ற பழக்கங்களைப் பின்பற்றிய முஸ்லிம்களை கடுமையாக சாடினார் பாபா. இதனால் முஸ்லிம்களின் ஒரு பிரிவினரின் கோபத்தை சம்பாதித்தார். எனினும் தனது கருத்துகளை ஜமாத்தார்கள் முன்னிலையிலேயே எடுத்து வைத்தார். பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்களுடன் நட்புறவு பேணி முஸ்லிம் மற்றும் இந்து சமுதாய ஒருங்கிணைப்புக்கு வழி வகுத்தார். பல மனித உரிமை போராளிகளோடு இணைந்து போராட்ட களங்கள் கண்டார்.பேரா.கல்யாணி,டாக்டர் சேப்பன் போன்றவர்களோடும் மக்கள் குடியியல் உரிமைக் குழு (PUCL) போன்ற மனித உரிமை அமைப்புகளோடும் இணைந்து செயல்பட்டார். இஸ்லாமிய மார்க்க விளக்கத்திலும் சிறந்த அறிவு பெற்றிருந்தார் பாபா. பல இஸ்லாமிய கொள்கை விளக்க கூட்டங்களில் பேசினார். சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் தனது இஸ்லாமிய கருத்துகளை எடுத்து வைத்தார்.
கிறிஸ்துவம் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார். பைபிள் மற்றும் கிறிஸ்தவம் தொடர்பாக கிருஸ்தவ பாதிரிமார்களோடு இவர் விவாதம் நடத்தினார். ராமகோபலய்யருக்கு மறுப்பு நூல் எழுதியதற்காகவும் பாபா கைது செய்யப்பட்டார். தான் நூல்கள் எழுதியது மட்டுமல்லாமல் இஸ்லாம் குறித்து மற்ற அறிஞர்கள் எழுதிய நூல்களுக்கும் உதவி செய்தார் பாபா. பேரா அ. மார்க்ஸ் எழுதிய முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுக்கதைகள் என்ற புத்தகம் வெளியிட நிதியுதவி அளித்தார். பாபரி மஸ்ஜித் தொடர்பாக WHO IS LAW ABIDING ON THE ISSUE OF BABRI MASJID? என்ற புத்தகம் தவிர ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியுள்ளார் பாபா. நூல்கள் எழுதியதோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கைகளையும் துவக்கினர் பாபா. புனிதபோராளி பத்திரிக்கையில் கடுமையான கட்டுரைகளை எழுதினார். முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் செயல்பாடுகளைப் பற்றி எழுதினார். இதனால் அவருக்கு இந்துத்வ அமைப்புகளுள் எதிரிகள் உருவாகினர்.
தனது இறுதிக்காலம் வரையிலும் பாட்டாளி மக்கள் கட்சியுடனும், கட்சியின் தலைவர்களுடனும் இணைந்து ஜிஹாத் கமிட்டியை அரசியல் ஈடுபாட்டோடு வழி நடத்திச் சென்றார். ஆரவாரமான மேடை பேச்சுக்களை விட்டு அமைதியான முறையில் ஆக்கபூர்வமான வேலைகளை கவனிக்க திட்டமிட்ட பாபா முஸ்லிம் ஜமாத்துகளை ஒருங்கிணைப்பதற்கான வேலைகளை ஆரம்பித்தார். தமிழகம் முழுவதும் ஜமாத்துகளை சந்திக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டார். இந்நிலையில்பொள்ளாச்சியில் தனது குடும்ப நண்பர் பசவராஜ் தனபால் என்பவர் வீட்டுக்கு வந்த பாபா அவரிடம் பேசி முடித்து விட்டு வெளியில் நின்ற தனது ஜீப்பில் ஏற முற்படும்போது தான் 1997 ஜனவரி 28ஆம் நாள் (ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் முதல்நாள்) இரவு பழனிபாபா 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
(இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்)
அர் ரஹ்மான் உங்களுக்கு சொர்கத்தில் உயர்ந்த படிதரங்களை தந்தருள் புரிவானாக-ஆமீன்..
11:34 AM
அதிரை புதுமனை தெருவை சேர்ந்தவர் ஹாஜா ஷரிஃப். அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்படும் இவரை காணாதவர்கள் இல்லை என சொல்லுமளவுக்கு அதிரையருக்கு மிகவும் பரிச்சையமானவர். சற்று மனநிலை பாதிப்படைந்தவர்.
இன்று இரவு பழஞ்செட்டி தெரு பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் வழி மறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். வலியால் துடித்துகொண்டிருந்தவரை அருகில் நின்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். தாக்கப்பட்டதில் கை எலும்பு முறிந்ததால் தற்போது அதிரை அரசு மருத்துவமனையில் மேற்கோள் சிகிச்சை எடுத்துவருகிறார். தகவலறிந்த நண்பர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்துவருகின்றனர். இந்த திடீர் சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
11:30 AM
பட்டுக்கோட்டை நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் என்.சுப்பையன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின் அவர் கூறியதாவது:–

பட்டுக்கோட்டை சாந்தான்காடு பகுதியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு வரைப்படம் தயார் செய்யப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு தயார் செய்தவுடன் அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
சுற்றுலாத்துறை உதவியுடன் ரூ.75 லட்சம் மதிப்பில் காந்தி பூங்கா புதுப்பிக்கப்பட்டு குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்படுவதுடன் நடைபாதையும் அமைக்கப்படும்.
அரசு மருத்துவமனையில் அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பழைய பேருந்து நிலைய காலி இடத்தில் திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும். பட்டுக்கோட்டை பேருந்து நிலையம், சுத்தமாகவும், சுகாதாரமாக வைப்பதற்கு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக சிறுநீர் கழிப்பதற்காக சிறுநீர் கழிப்பறை அமைக்க நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்கள் நெரிசலை குறைப்பதற்கு பேருந்து நிலையத்தில் உள்ள காலி இடத்தில் அடுக்கு மாடி கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடியம்மன் கோவில் ஏரிகரையில், நடைபாதை ஒருபகுதி முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பகுதிகளிலும் பொது மக்கள் பங்களிப்புடன் விரைவில் நடைபாதை அமைக்கப்படும். மேலும், ஏரி ஆழப்படுத்துவதுடன், கரைகளை பலப்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மணி கூண்டு அருகே ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் சிறு பாலம் மற்றும் பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை சாலை 1 கிலோ மீட்டர் அளவிற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடியே 95 லட்சம் மதிப்பில் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலை 1 கிமீ. நீளத்திற்கும் 10 மீட்டர் அகலத்திற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கோரிக்கைக்கேற்ப பண்ண வயல் சாலையில் ஓடக்கரை ஏரி அருகே லாரிகள் நிறுத்துவதற்கு இடம் சுத்தம் செய்யப்பட்டு தற்பொழுது பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரப்பெற்றுள்ளது.
பட்டுக்கோட்டை நகராட்சி–தஞ்சாவூர் சாலை ஆலடிக்குமுளையிலிருந்து மதுக்கூர் சாலை, பாபிபா வெளிப்பாளையம் வழியாக சூரப்பள்ளம் வரை 3.2 கிமீ அளவிற்கு ரூ.22 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைப்பதற்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பட்டுக்கோட்டையில் பல்வேறு துறைகளின் அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு வளர்ச்சிப் பணிகள் முழு அளவில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிகளுடன் நகர வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து பட்டுக்கோட்டை – அறந்தாங்கி சாலை மார்க்கெட் ரோடு போன்ற பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கு.தர்மராஜன், நகர் மன்ற தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர்பாபு, துணைத்தலைவர் வி.கே.டி.பாரதி, ஆணையர் ரெங்கராஜன், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ராஜா, பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் கருணாகரன், உதவி பொறியாளர் திருவள்ளுவன், நெடுஞ்சாலை உதவி கோட்டப் பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் மோகனா, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் தர்மலிங்கம், நிலைய மருத்துவ அலுவலர்கள் டாக்டர் சண்முகவேல், டாக்டர் பாஸ்கரன், மின்வாரிய செயற்பொறியாளர் சின்னையன், வட்டாட்சியர் பாஸ்கரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
5:45 PM
தென்காசி: குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் தாமதமாக துவங்கியதுடன் சாரலும்
தொடர்ச்சியாக இல்லாமல் ஏமாற்றி வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக
சாரல் பெய்து வருகிறது. குறிப்பாக குற்றாலம் மற்றும் அருவியின்
நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் நன்றாக
பெய்து வருகிறது. இதன்காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
ஐந்தருவியில் 5 பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. மெயினருவியில்
ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. புலியருவி,
சிற்றருவி, பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. முழு
வீச்சில் சீசன் தொடங்கியது.









ஆனால் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம்
சுமாராகவே இருந்தது. மெயினருவியில் நேற்று மதியம் சுற்றுலா பயணிகள்
குளித்துக் கொண்டிருந்தபோது 2 நீர்ப்பாம்புகள் தண்ணீருடன் விழுந்தன. இதை
பார்த்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு
ஏற்பட்டது. சிறிது நேரம் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுமார் 10 நிமிடம்
கழித்து பரபரப்பு அடங்கியதும் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.அதே போல் குற்றாலத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பாலருவி .குற்றாலத்தில் குளித்து முடித்த சுற்றுலா பயணிகள் பாலருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர் .இந்நிலையில் நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் ஆசிரியர் ஷேக்பரீத் குற்றாலத்திற்கு குடும்ப சுற்றுலா சென்றார் நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு பேட்டியளித்தார் .
..அவருடன் சென்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் முத்துப்பேட்டை நகர பொருளாளரும் ,நேனா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ஜனாப் ,ஹாஜி .ஹஜ் முஹம்மது உள்ளிட்டோரும் சென்றிருந்தனர் .
குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி ,செண்பக அருவி ,பழைய குற்றால அருவி ,ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் மனித கழிவுகள் ஆங்காங்கே அசுத்தமாக கிடப்பதாகவும் ,சிறுநீர் துர்நாற்றம் வீசுவதாகவும் , போதிய பராமரிப்பின்றி உள்ளதாகவும் ,குற்றம் சாட்டினார் .
இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளவதாகவும் ,இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார் .
மேலும் அருவியின் மைய பகுதிக்கு சென்று ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு குளிப்பதை காண முடிகிறது என்றும் ,இதனால் உயிரிழப்புகள் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார் .இதனை தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் போதிய காவல்துறையினரை அங்கு பணியமர்த்த வேண்டும் என்றும் ,காவலர்களுக்கு ஒலிபெருக்கி ,டார்ச் லைட் உள்ளிட்ட நவீன கருவிகள் வழங்கப்பட்டால் விபத்துக்களை தடுக்க எதுவாக இருக்கும் என்றும் கூறினார் .
மேலும் குற்றால அருவிகளில் மனிதர்கள் நடமாடும் பகுதிகளுக்குள் குரங்குகள் சுற்றிதிரிவதால் பயணிகள் ,மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாகவும் ,இதனை கட்டுபடுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ,சுற்றுலா பயணிகளின் பொருட்கள் மற்றும் உடமைகளை பாதுகாக்க தனியான அறைகள் கட்டப்பட வேண்டும் என்றும் அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார் .
சந்திப்பு :கொய்யா :முஜாஹிதீன்
ஜுன் 17: முத்துப்பேட்டை முஹையதீன் பள்ளித்தெரு மர்ஹும் சி.ப.முஹம்மது ஷேக்
தாவுது அவர்களின் மகனும், ஷேக் தாவுது, ஹாஜா முஹைதீன் சகோதரர்களின்
தகப்பனாருமாகிய " சி.ப. பஷீர் அஹமது" அவர்கள், இன்று (17.06.14) பகல் 2
மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப்பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின்
வேதனைகளிலிருந்தும், அவர்களைக் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும்
சுவர்க்கத்தில் நல்லடியார்களோடு இணைய வைப்பானாக!
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அறிவிப்வர்கள்
SPKM அமானுல்லா சகோதரர்கள்
8:29 PM
பட்டுக்கோட்டை டாக்டர் மீது வெடித்து கிளம்பும் புகார்கள்' என்ற தலைப்பில்
இந்தவார குமுதம் ரிப்போர்ட்டரில் செய்தி வெளிவந்துள்ளது. வாசித்தோர்
அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
8:22 PM
இப்போதெல்லாம் கள்ளத் தொடர்பு அதிகமாகிவிட்டது. ஆண் மட்டுமல்ல,
பெண்ணும் தடம் புரளுகிறாள். நாகரீக வளர்ச்சி அடைந்த நகரங்கள் மட்டுமல்ல,
கிராமப்புறங்களிலும் இந்த அவலம் அடிக்கடி நடைபெறும் காட்சியாகிவிட்டது.
இப்படி சமுதாயம் கெட்டுப்போக என்ன காரணம்? அந்த கலாச்சார சீரழிவை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
இங்கே ஒரு சிறப்புப் பார்வை :
1. தம்பதியருக்கு இடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே
இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தியடைய
முடியாதபட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு
ஆணின் உறவை நாடுகிறாள்.
அதேபோல தாம்பத்திய உறவின்போது, தனது உடல்
ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிகமாக
விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து
வேறு நபரை நாடுகிறாள்.
2. திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில
வருடங்களில் தம்பதியருக்கு இடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக்
குறையக்கூடும்.
திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன்
வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில்
பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும்
ஒரு இன்னொரு காரணம்.
3. திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும்
தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுகளும்,
கற்பனைகளும் அதிகம் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்த கற்பனைகள்
பொய்யாகும்போது - தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக
அமையும்போது, அவர்களில் சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வேறு
ஆண்களை நாடுகிறார்கள். இந்த உறவு மாற்றம் அவர்களுக்கு சரியென்றே படுவது
இன்னும் வேதனை.
4. வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத்
திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. வெளியுலகத்
தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு
போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்கு காரணமாகிறது. இதுதவிர, கணவனைவிட
அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரமும் அதிகமாக
இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும்,
விஷயங்களும் கிடைக்கின்றன. அதுபோகப் போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி
வகுத்து விடுவதும் உண்டு.
5. ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் தன்
கணவன் அல்லாத வேறு ஆண்களின் ஸ்பரிசத்திலும், அணைப்பிலுமே சுகம் காண்பதாக
உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். செக்ஸில் தினம் தினம் புதுமையை
நாடும் பெண்களும் உண்டு. அவர்கள் இப்படிப்பட்ட தகாத உறவில் சீக்கிரம்
விழுந்து விடுகிறார்கள். இந்த கசப்பான உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான்
ஆகவேண்டும். மனோதத்துவ சிகிச்சை ஒன்றுதான் இவர்களுக்கு ஒரே தீர்வு.
6. தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும்,
அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும்
பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று
இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.
கள்ளத்தொடர்பு - தடுக்க என்ன வழி?
1. மனைவியை செக்ஸ் விஷயத்தில் திருப்திப்படுத்தினாலே போதும். அவள் வேறு எந்த ஆடவனையும் தவறான பார்வைகூட பார்க்க மாட்டாள்.*
2. மனைவியின் எதிர்பார்ப்புகளை ஒவ்வொரு கணவனும் புரிந்துகொள்வது அவசியம்.
செக்ஸில் மட்டுமின்றி, அவளது எந்தவொரு எதிர்பார்ப்பையும் பெரும்பாலும்
நிறைவேற்ற தயாரானவனாக அவளது கணவன் இருக்க வேண்டும்.*
3. கணவன் இந்த
விஷயத்தில் திசை மாறிப்போக காரணம், மனைவியின் சரியான கவனிப்பு இன்மையே.
அதாவது, திருமணம் ஆன புதிதில் தங்களை விதவிதமாக அலங்கரித்து கணவனை
மகிழ்விக்கும் பெண்கள், திருமணத்திற்கு பிறகு அதை மறந்து விடுகிறார்கள்.
ஒரு குழந்தையும் பிறந்துவிட்டால், அந்த குழந்தையை கவனிக்கிறார்களேத் தவிர,
கணவனை கண்டுகொள்வது இல்லை. இந்த லிஸ்டில் இருக்கும் பெண்கள் சிலர்தான்
என்றாலும், எல்லாப் பெண்களும் இதை அறிந்து வைத்திருப்பது அவசியம்.*
4. எதிர்பார்த்த மனைவி அமையாதது, செக்ஸ் விஷயத்தில் தனது எதிர்பார்ப்புகளை
அவள் கண்டுகொள்ளாதது, மனைவியை விடவும் அழகான பெண்ணின் திடீர் நட்பு - இவையே
ஒரு கணவன் திசைமாறிப் போக முக்கிய காரணம். மனைவிமார்கள், தங்கள் கணவனை
நன்றாக கவனித்துக்கொண்டால் அவன் வேறு பெண்ணை நாடிப்போக வாய்ப்பு மிகக்
குறைவு.
- இவை எல்லாம் இருந்தாலும், துணை தவிர வேறு ஒருவருடன்
பாலியல் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அது மிகப்பெரும் குற்றம்
என்றும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நினைக்க வேண்டும். இல்லையென்றால், "கதவை
தாழ்ப்பாள் போட்டாலும், ஒரு பெண் நினைத்தால் கெட்டுப்போய் விடலாம்" என்ற உண்மைக் கூற்று நிச்சயமாகவே உண்மையாகிவிடும்.
அதே போல் இன்றைய நவீன யுகத்தில் செல்போன் மிகவும் இன்றியமையாதது ஆகிவிட்டது .இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை ,கன்னி பெண்கள் முதல் வயதான கிழவிகள் வரை அனைவரும் பயன்படுத்தி வரும் மிகவும் இன்றியமையாத சாதனமாகிவிட்டது .கள்ளதொடர்பின் ஆரம்பமே இந்த செல்போன் தொடர்பால்தான் என்பது முன்பு பலருக்கு புரியாமல் தெரியாமல் இருந்திருக்கலாம் ஆனால் இன்றைக்கு பலரும் செல்போன் கள்ளதொடர்புகளை நன்கு புரிந்து வைத்து இருக்கின்றனர் .செல்போன் பயன்படுத்தி வருவதால் இளம் வயது பெண்களுக்கு தவறான தொடர்புகள் ஏற்பட்டு அதன் மூலம் காதல் என்ற பெயரில் வீட்டை விட்டே ஓடி போகும் சூழ்நிலை உருவாகிறது . செல்போன் பயன்படுத்தி வரும் திருமணமான பெண்களுக்கும் கள்ள தொடர்புகள் ஏற்பட்டு செக்ஸ் தொடர்புகள் வைத்து தனது கணவரிடமும் தனது குடும்பாதாரிடமும் அகப்பட்டு தனது வாழ்க்கையையே சீரழித்து நடத்தை கேட்டவள் என்ற பட்டத்தை பெரும் அவல நிலையையும் இந்த செல்போன் பெற்று தருகிறது .
இதனை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் ?
வயது வந்த இளம் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் .அதே போல் திருமணமான பெண்கள் பயன்படுத்தும் செல்போன்களை தினமும் கணவர் அல்லது உடன் பிறந்த சகோதரர்கள் சோதனை செய்ய வேண்டும் .அதில் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்கமான பெண்களின் எண்கள் மட்டுமே சேவ்பண்ணி வைத்து கொள்ள
அனுமதியளிக்க வேண்டும் .அதே போல் ரீசார்ஜ் கடைகளுக்கு சென்று பெண்களின் செல்போன் எண்களை கொடுத்து ரீசார்ஜ் செய்வதை கண்டிப்பாக தடுக்க வேண்டும் .இதனால் தான் இன்று பெரும்பாலான பகுதிகளில் கள்ள தொடர்புகள் ஏற்ப்பட்டு கொண்டிருக்கிறது .இதற்கு மாற்றாக நூறு ரூபாய் பேக்கிலோ அல்லது தங்களுக்கு தேவை படும் தொகையின் அளவின் பேக்கிலோ உள்ள ரீசார்ஜ் கார்டுகளையே வாங்கி பயன் படுத்த அறிவுறுத்த வேண்டும் .
என்றென்றும் சமூக பணியில் ...
ஜே :ஷேக் பரீத்