1:23 PM
தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்ட முஸ்லிம்கள்!!
தீவிரவாத மதமாக சித்தரிக்கப்பட்ட இஸ்லாம்!!
இதனால் முஸ்லிம்கள் அனுபவித்த இன்னல்கள் இடைஞ்சல்கள் கணக்கில் அடங்காது!!
பொய்யய்யே திரும்ப திரும்ப சொன்னால் அதை உண்மையாக்கி விடலாம் என்ற கோயபல்ஸ் தத்துவத்தை பின்பற்றி
முஸ்லிம்கள் மீது அவிழ்த்து விடப்பட்ட பொய்கள் ஏராளம்!!
இது அனைத்தயும் உடைத்து எறிந்து பொய்யை அம்பலப்படுத்தி
உண்மையை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்ட தவ்ஹித்ஜமாத் எடுத்த திட்டம்தான்
""தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்""
இது எதிர்பார்த்தைவிட அதிகமாக பிறமத சகோதரர்களிடம் போய் சேர்ந்து இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்
1:25 PM
முத்துப்பேட்டை பைத்துல்மால் சார்பில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மிக அற்புதமாக நடைபெற்றது .சரியாக மாலை 6:30 மணிக்கு புதுப்பள்ளி இமாமின் கிராஅத் துடன் நிகழ்ச்சி தொடங்கியது .
அதனை தொடர்ந்து பைத்துல் மால் நிர்வாகி சலீம் பைத்துல் மாலின் அவசியம் குறித்து விளக்கி பேசினார் .பின்னர் முத்துப்பேட்டை அனைத்து பள்ளிவாசல்களின் ஜமாஅத் நிர்வாகிகள் ,மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்தி பேசினர் .
இதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் லியாகத் அலி அவர்கள் முத்துப்பேட்டை பைத்துல்மால் வழங்கிய ஆம்புலன்சை பொது மக்கள் பயன்பாட்டிற்காக அர்பணிப்பு செய்தார் .
ஆம்புலன்சின் சாவியை முத்துப்பேட்டை பைத்துல்மாலின் தலைவர் இலுமுல்லா சனுபர் பெற்றுகொண்டார் . முத்துப்பேட்டை பைத்துல்மாலின் பொருளாளர் மீரா உசேன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் . மாலிக் ரஹ்மான் நன்றியுரையாற்றினார் .
ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சியை காண முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் திரளாக குழுமி இருந்தனர் .இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற கொய்யா மஹால் மக்கள் வெள்ளத்தால் மூழ்கி பெரும் விழாக்கோலம் போல் காட்சியளித்தது .
இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு சாப்பாடு பரிமாறப்பட்டது .
கொய்யா மஹாலின் வெளிப்புறத்தில் முத்துப்பேட்டை பைத்துல்மால் வழங்கிய ஆம்புலன்ஸ் வாகனம் சுழல் விளக்கு எரியவிடப்பட்ட நிலையில் மக்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன .இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்ததுடன் புகைப்படங்களும் எடுத்து கொண்டனர் .
முத்துப்பேட்டையில் பைத்துல்மால் விருப்பு வெறுப்பற்ற ஒரு வலுவான மக்கள் இயக்கமாக உருவெடுக்க வேண்டுமென்று முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றது .
தொகுப்பு :ஜே :ஷேக்பரீத்
10:05 AM
அனைவருக்கும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் சென்றடையும் நோக்கில் முத்துப்பேட்டை சந்தைமுழுவதும் மற்றும் முத்துப்பேட்டை கடைவீதி ,பேருந்துநிலையம் ஆகிய இடங்களில் தீவிரவாத எதிர்ப்பு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
8:53 PM
இந்திய தேசிய லீக் பார்ட்டி "ஆல் இந்தியா மஜ்லிஸ் எ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி " யாக மாற்றப்படுகிறது..!
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் .தடா ஜெ.அப்துல் ரஹிம் ,மௌலவி அலீம் அல்புஹாரி, ஏர்வாடி காசிம், அலி அப்துல்லாஹ் ,மதுரை அலி உள்ளிட்ட INLP -னர்
ஹைதராபாத் - தாருஸ்ஸலாம் சென்று AIMIM இன் "அக்பருத்தீன் உவைசி " அவர்களை சந்தித்தனர்..!
தமிழகத்தில் இயங்கும் தங்களின் அமைப்பான இந்திய தேசிய லீக் பார்ட்டி ஐ கலைத்து விட்டு "ஆல் இந்தியா மஜ்லிஸ் எ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி " யாக மாற்றிவிடுகிறோம் என்று உறுதி அளித்துள்ளதாக தாருஸ் ஸலாம் செய்திகள் தெரிவிக்கின்றன .
12:41 PM
கடந்த சில நாட்களாகவே யுவன் ஷங்கர் ராஜாவின் மூன்றாவது திருமணம் பற்றிய செய்திகள் வலைதளங்களில் உலாவி வருகின்றன. ஆனால் இந்த செய்திகள் குறித்து இதுவரை யுவன் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை
.
இந்நிலையில் யுவனின் சகோதரியும், பாடகியுமான பவதாரிணி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, ஆமாம் என்னுடைய சகோதரர் முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ளார். நான், கார்த்திக் ராஜா, அப்பா அனைவருமே யுவனின் அந்த முடிவை ஏற்றுக் கொண்டுள்ளோம்.
அதேபோல் அவர் மூன்றாவது திருமணம் செய்ய இருக்கிறார். ஏனென்றால் அவர் செய்து கொண்ட இரண்டு திருமணங்களும் ஒரு சில தனிப்பட்ட காரணங்களால் அவருக்கு ஒத்து வரவில்லை. யுவனுக்கு குழந்தைகளும் இல்லை, யாரையும் அவர் ஏமாற்றவும் இல்லை. அவர் குடிப்பதோ, புகைப்பதோ கிடையாது.
15 வயதிலிருந்தே இசையமைத்துக் கொண்டிருக்கும் யுவன், எப்போதும் அப்பாவின் இசையைப் பின் பற்றியதே கிடையாது. அவருக்கென தனியாக ஒரு ஸ்டைலை ஏற்படுத்திக் கொண்டு, அதில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார்.
100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் இப்போது வெற்றிகரமான இசையமைப்பாளராக இருக்கிறார்.
அவருடைய குடும்ப உறுப்பினர்களாலேயே யுவன் விமர்சிக்கப்படுவதைப் பார்க்கும்போது ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. அவர் தன்னை நிரூபித்திருக்கிறார், இனிமேலும் நிரூபிப்பார், தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருப்பார். எல்லாவற்றையும் விட மனிதமே முக்கியமானது. யுவன் நல்ல மனிதரே!’’ என்று டுவிட் செய்துள்ளார்.
4:16 PM
முத்துப்பேட்டையில் எதிர்வரும் 31-10-2014 வெள்ளியன்று முத்துப்பேட்டை பைத்துல் மாலின் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற உள்ளது
.கொய்யா மஹாலில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் அனைத்து முஹல்லாவை சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் ,மருத்துவ பெருமக்கள் ,இந்து கிறிஸ்தவ பெரியோர்கள் ,காவல்துறை அதிகாரிகள் ,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் .
முத்துப்பேட்டை பைத்துல்மாலின் நிர்வாகிகளான மீரா உசேன் ,இல்முல்லா சனுபர்,சலீம் ,நைனா முஹம்மது உள்ளிட்ட நிர்வாகிகள் இதற்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் .