முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா -எதிர்த்தாரா ?எழுச்சியுடன் நடைபெற்ற ஆவணப்பட வெளியீட்டு விழா !!மக்கள் வெள்ளத்தால் மூழ்கியது திரையரங்கம் !!

பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா ஆவணப் பட வெளியீடு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை வடபழனி RKV ஸ்டுடியோ வில் எழுச்சியுடன் நடைபெற்றது!
ஆறு மணி முதல் மக்கள் வந்து குவியத் தொடங்கி மஹ்ரிபு தொழுகையை கூட்டாக அங்கேயே நிறைவேற்றிய பின்னால் நிகழ்ச்சி துவங்கியது! 

























அரங்கம் நிரம்பி கூடுதல் இருக்கைகள் போடப்பட்டும் போதாமல் நூற்றுக்கணக்கான மக்கள் நின்று கொண்டே பார்த்தனர்!

சுமார் ஒரு மணி நேரம் விறுவிறுப்பான காட்சிகளுக்கு பின் தேநீர் இடைவேளை! படம் ஏற்படுத்திய தாக்கத்தில் இடைவேளை க்கு பின்னும் கூட்டம் குறையவில்லை! எந்த குத்துப்பாட்டோ சினிமா நட்சத்திரங்களோ இல்லாத ஒரு ஆவணப் படத்துக்கு இவ்வளவு ஆரவார வரவேற்பா ? என திரையுலகினர் வியந்தனர்!

 அல்ஹம்து லில்லாஹ்! 

இயக்குனர்கள் அமீர் ஆர.கே செல்வமணி, ராஜ ராஜன், ஜெயமணி, சிபி சந்தர் ஆகியோரது உரைக்கு பின்னால் தமஜக ஷரீப், CMN சலீம், தமுமுக அப்துல் சமது ஆகியோர் உரை நிகழ்த்தினர்! 

நிகழ்ச்சியின் முடிவில் ஆவணப் படத்தின் குறுந்தகட்டை இயக்குனர் அமீர் வெளியிட திருமா பெற்று கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்!
இந்நிகழ்ச்சியில், திரையுலகினர் பத்திரிகை நண்பர்கள், மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் தஃவா குழுக்களை சேர்ந்த பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்!
நிகழ்ச்சியில் ஏராளமாக 


வந்து இருந்த முஸ்லிம் அல்லாத சொந்தங்களுக்கு தஃவா டெஸ்க் அமைத்து திருக்குர்ஆன் தமிழாக்கம் , இஸ்லாம் குறித்த நூல்கள் வழஙகப்பட்டது! அல்ஹம்து லில்லாஹ்!


ஆவணப் பட டிவிடி தொடர்புக்கு

இப்ராகிம் காசிம்- 9043940103

டிவிடி மொத்தமாக தேவைப்படும் வெளியூர் அன்பர்கள் கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் அனுப்பி பெற்று கொள்ளலாம்!
Bank : SBI Bank
A/c No : 33528766040
Branch : Mannady
Name : Ibrahim Kasim

முத்துப்பேட்டையில் விரைவில் உதயமாகிறது கொய்யா கார்ஸ்!!!

இன்ஷா அல்லாஹ்  முத்துப்பேட்டையில் கொய்யா கார்ஸ் எனப்படும் ஓர் புதிய கார் ஷோரூம் விரைவில் உதயமாக உள்ளது .முத்துப்பேட்டை ஆலங்காடு ECR அருகே திறக்கப்பட உள்ள கொய்யா கார்ஸ் ஷோரூம்,திறப்பு விழாவிற்கான அனைத்து ஆயத்த பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன .


























இது தொடர்பாக நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் .காம் இணையதளத்திற்கு பேட்டியளித்த கொய்யா கார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் உரிமையாளர் கண்ணியத்திற்குரிய A  .முஹம்மது சாதாத் அவர்கள் ,தங்களிடம் அனைத்து வகையான உயர்ரக கார்களும் கிடைக்கும் என்று கூறினார் .

மேலும் அனைத்து வகையான USED CARS  வாங்குவதற்கும் விற்பதற்கும் தங்களை அணுகலாம் என்றும் கொய்யா A .முஹம்மது சாதாத்  அவர்கள் கூறினார் .

தொடர்புக்கு :கொய்யா A . முஹம்மது சாதாத் -9659981181

முத்துப்பேட்டை களஞ்சியம் ரெடிமேட்சை சேதப்படுத்த முயற்சி -MGR மறைவுக்கு பின் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்ட அதிசயம் !!!

முத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் நடத்திய விநாயகர் ஊர்வலத்தையொட்டி இஸ்லாமியர்கள் வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது .பின்னர் முத்துப்பேட்டையில் ராசிக்பரீத் மற்றும் நவாஸ்கான் ஆகியோருக்கு சொந்தமான களஞ்சியம் ரெடிமேட்ஸ் மீது மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி சேதப்படுத்த முயற்சித்தனர் .

இதனை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் முத்துப்பேட்டை வர்த்தகர் சங்கத்தினர் ஒருநாள் கடையடைப்பு நடத்தினர் .இதனால் முத்துப்பேட்டையில் அனைத்துகடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன .



இதனை கண்ட பொதுமக்கள் முன்னாள் முதல்வரும் நடிகருமான எம் ஜி ஆர் .மறைவுக்கு பின் ஒட்டுமொத்தமாக கடைகள் அடைக்கபட்டிருப்பதாக கூறினார் .

முத்துப்பேட்டை தெற்கு தெருவில் TNTJ வின் மூன்றாவது கிளை !!!

ஏக இறைவனின் திருப்பெயரால் ....
அஸ்ஸலாமு அழைக்கும்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டையில் மூன்றாவது புதிய கிளை தெற்குத் தெருவில் உதயம் .


கடந்த 08.08.2014 அன்று முத்துப்பேட்டையில் தெற்குத் தெரு பகுதியில் ஏகத்துவத்தை எத்தி வைக்க மூன்றாவது கிளை உருவாகியுள்ளது. திருவாரூர் மாவட்ட தலைவர் பீர் முகம்மது தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கீழ் கண்ட நிர்வாகிகள் தேர்ந்த்டுக்கபட்டுள்ளனர் ..
தலைவர் :- முஹமது மீரான் (கட்டிநானா )
செயலாளர் :-ஷாஜகான்
பொருளாளர் :-முஹம்மது செக் தாவுது
இதில் மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக் , மாவட்ட துணைத்தலைவர் மிஸ்கின் மற்றும் மாவட்ட முன்னாள் மாவட்ட தலைவர் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர் .

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)