துபாய்,செப்டம்பர் 02 : ஐக்கிய அரபு அமீரகத்தில் உணவகங்கள் மற்றும் அலுவலகங்களில் பராமரிப்புப் பணியாளர்களாக பணிபுரிவதற்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் கூறியுள்ளது.
இந்தப் பணிகளுக்கு உடனடியாக பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மனுதாரர்கள் 30 வயதை கடந்தவர்களாக இருத்தல் கூடாது.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நிறைவான ஊதியம், இலவச தங்குமிடம், மிகை நேர பணி ஊதியம் மற்றும் துபாய் நாட்டின் சட்டத் திட்டத்துக்கு உட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்.
எனவே, விருப்பமும் தகுதியும் உள்ள ஆடவர்கள் தங்களின் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் புகைப்படத்துடன் எண் 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையார், சென்னை-600 020 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசின் நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு உடனடியாக தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்கள் அறிய, இந்த நிறுவனத்தை 2448 4278/69 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று அதன் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரசு அமீரகத்தில் பணிபுரிய இளைஞர்கள் தேவை...
தொகுப்பு
ரிபோர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment