நடிகை நயன்தாரா மன அமைதி பெறுவதற்காக தமது ஆசிரமத்துக்கு வருமாறு நித்யானந்தா ஆசிரமம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாம்.
கதாநாயகர்கள் சிலர் இவருடன் நெருக்கமாக நட்பு வைத்துக்கொள்ள நெருங்கியும் அவர் பிடிகொடுக்கவில்லை. முழு கவனமும் சினிமாவிலேயே இருக்கிறது. நிறைய படங்களில் பிசியாக இருக்கிறார்.
இந்த நிலையில் ஏமாற்றங்களால் விரக்தியில் இருக்கும் நயன்தாராவுக்கு மனஅமைதி கிடைக்க செய்யும் முயற்சியில் நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் நித்யானந்த ஆசிரமத்துக்கு வருமாறு நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நிறைய பெண்கள் ஆசிரமத்துக்கு வந்து தியானம், யோகா மூலம் கவலைகளை மறக்கிறார்கள். எனவே நீங்களும் ஆசிரமத்துக்கு வந்து மன அமைதி பெறுங்கள் என்று அழைத்துள்ளனர்.
நயன்தாரா கிறிஸ்தவராக இருந்தாலும் காதலுக்காக இந்து மதத்துக்கு மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நித்யானந்தா ஆசிரம பக்தர்களின் அழைப்பை நயன்தாரா இதுவரை ஏற்கவில்லையாம்.
0 comments:
Post a Comment