முத்துப்பேட்டையில் அனைத்து கட்சியும் இணைந்து நடத்திய கடையடைப்பு மற்றும் ஆர்பாட்டம் ஓர் பார்வை
முத்துப்பேட்டை, ஜூன் 22: குவைத் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கும் முத்துப்பேட்டையை சேர்ந்த S. சுரேஷ் மற்றும் சித்தாம்பூர் C. காளிதாஸ் ஆகியவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி குவைத் அரசு விடுதலை செய்வதற்கு இந்திய அரசும், தமிழக அரசும் முயற்சி எடுக்க வலியுறுத்தி முத்துப்பேட்டையில் இன்று அனைத்து கட்சி சார்பில் மாபெரும் கடையடைப்பு மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இவற்றின் புகைப்படத்தை இங்கு காணலாம்.
தொகுப்பு:
ரிப்போட்டர் முஹைதீன் பிச்சை
முத்துப்பேட்டையில் நாளை கடை அடைப்பு மற்றும் கண்டன ஆர்பாட்டம்...
முத்துப்பேட்டை, ஜூன் 21: குவைத் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கும் முத்துப்பேட்டையை சேர்ந்த S. சுரேஷ் மற்றும் சித்தாம்பூர் C. காளிதாஸ் ஆகியவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி குவைத் அரசு விடுதலை செய்வதற்கு இந்திய அரசும், தமிழக அரசும் முயற்சி எடுக்க வலியுறுத்தி முத்துப்பேட்டையில் நாளை கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்பாட்டம் நடத்த வர்த்தகர்களும், வியாபாரிகளும், பொதுமக்களும் இப்போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். எனவே நாளை காலை சரியாக கடையடைப்பு 9 மணிமுதல் 12 மணிவரையும், இதன் தொடர்ச்சியாக சரியாக 10 மணியளவில் முத்துப்பேட்டை கஸ்டம்ஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டமும் நடைபெற உள்ளது.
தொகுப்பு:
AKLT . அப்துல் ரஹ்மான்
உத்ரகாண்ட் பெரு வெள்ளம் தமிழக அரசுக்கு SDPI கோரிக்கை :
சென்னை, ஜூன் 21: எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அவர்கள் இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் :
உத்ரகாண்ட் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக உத்ரகாண்டில் மிகப்பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஆறுகளில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
மத்திய மாநில அரசுகளின் வேகமான நிவாரணப் பணிகள் பாராட்டுக்குரியது. மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்து தேவையான நிதியுதவிகளை அறிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மழைக்காலங்களுக்கு முன்பாகவே முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது சேதங்களை தடுக்க உதவும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்தோர் மற்றும் உடமைகளை இழந்தோருக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் உத்ரகாண்டில் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மௌத்து அறிவிப்பு: "ஹபிபுனிஷா"
P .M .காதர் முஹைதீன் DCTO ..+91 94435 89431.
நன்றி: ரஷித் அலி - முத்துபேட்டை.
நன்றி: ரஷித் அலி - முத்துபேட்டை.
விபத்தில் மரணித்த பள்ளி மாணவர்கள் ஒரே இடத்தில் அடக்கம்
புதுக்கோட்டை, ஜூன் 20: புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் மரணித்த பள்ளி மாணவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப் பட்டது.
புதுக்கோட்டை அருகே நேற்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வல்லநாடு என்ற இடத்தில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக எதிரே அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மாணவர்களை ஏற்றிவந்த பால் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொருங்கியது.இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 9 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு கடயக்குடி அருகில் குண்டாற்றங்கரையில் பொக்கலின் மூலம் குழி தோண்டப்பட்டது. அனைத்து மாண வர்களின் உடல்களும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு பெற்றோர்கள், சக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு ஒரே குழியில் வரிசையாக அடுக்கி அடக்கம் செய்யப்பட்டது.
மவுத்து அறிவிப்பு: "ஹசன் ஹுசைன் நெய்னா மலை"
முத்துப்பேட்டை, ஜூன் 18: திமிலத் தெரு ஆட்டப்ப சந்து மர்ஹும் தே. சீனா. முஹம்மத் அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹும். பட்டாணி அப்பா என்கின்ற அஹ்மத் லப்பை மரைக்காயர் அவர்களின் மருமகனும், ஆசாத் நகர் தே. சீனா. நெய்னா முஹம்மத் திமிலத் தெரு மர்ஹும் ஹனிபா, தே. சீனா. சாகுல் ஹமீது, தே. சீனா. தாவூத் இபுராஹிம்,தே. சீனா. செகுராவுத்தர், தே. சீனா, ஜெகபர் அலி, இவர்களின் சகோதரரும், பங்காளி மர்ஹும் முஹைதீன் பக்கீர், முஹம்மத் ஹனிபா, சாகுல் ஹமீது இவர்களின் மச்சானும், புது பட்டினமம் பசீர் அஹ்மத், சேதுபாவா சத்திரம் ஜமால் முஹம்மது, மத்துக்கூர் அன்வர்தீன், ஆகியோரின் தகப்பனாரும், முத்துப்பேட்டை கவுன்சிலர் பாவா பகுருதீன் இவரின் மாமனாருமாகிய, " ஹசன் ஹுசைன் நெய்னா மலை அவர்கள் இன்று மாலை 6 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் அரபு சாஹிப் பள்ளி வாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
தே. சீனா. நெய்னா முஹம்மது
நமது நிருபர்:
பாடகர் K.M. காதர் கனி
முத்துப்பேட்டையில் நூறு (122) வயதை தாண்டிய மூதாட்டி மரணம்...
முத்துப்பேட்டை, ஜூன் 18: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்ஹாவை சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவரது மனைவி ஆமினா அம்மாள் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்துள்ளார். (இன்னா லில்லாஹி வ இன்னா இல்லை ஹீ ராஜிவூன்) இவருக்கு வயது 122 என்று எல்லோராலும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில ஆவணங்களை வைத்து பார்க்கும் போது வயது 100 ஐ தண்டுகிறது என்று தெருகிறது. மேலும் இவர் இதுவரை 4 தலைமுறையினரை கண்ட இந்த மூதாட்டியின் நல்லடக்கம் தர்ஹா மையவாடியில் நல்லடக்கம் செயப்பட்டது.
தொகுப்பு
முஹைதீன் பிச்சை
தொகுப்பு
முஹைதீன் பிச்சை
முத்துப்பேட்டை அருகே குடிசைக்குள் வேன் புகுந்து பெண் பலி!!!
முத்துப்பேட்டை, ஜூன் 10: தூத்துக்குடியில் இருந்து மீன் லோடு ஏற்றிக் கொண்டு ஒரு வேன் வேளாங்கண்ணி நோக்கி வந்தது. இந்த வேன் இன்று காலை 7 மணியளவில் முத்துப்பேட்டையை அடுத்த உப்பூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வேன் நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள குடிசை வீட்டு முன் நின்ற 10-ம் வகுப்பு மாணவன் சபரிவாசன் மீது மோதி விட்டு நிலை தடுமாறி குடிசைக்குள் புகுந்தது. அப்போது குடிசைக்குள் இருந்த மகாலிங்கம் மனைவி பானுமதி (45), அவரது மகன் அசோகன் (20), பக்கத்து வீட்டை சேர்ந்த பிரியா மற்றும் சபரிவாசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை 108 ஆம்புலன்சில் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பானுமதி பரிதாபமாக இறந்தார்.
காயம் அடைந்த 3 பேருக்கும் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் தூத்துக்குடியை சேர்ந்த சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிக உடலுறவு சில சமயம் திடீா் மரணத்தை ஏற்படுத்தும்..!!மருத்துவர்கள் தரும் தகவல்கள் :
உலகம், ஜூன் 08:செக்ஸ் என்பது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. அதே செக்ஸ்தான் உயிருக்கும் ஆபத்தாகிவிடுகிறது. உச்சபட்ச ஆர்கஸம் திடீர் மரணங்களைக் கூட ஏற்படுத்துமாம். எந்த மாதிரியான சமயங்களில் செக்ஸ் மரணங்கள் ஏற்படுகின்றன என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உறவுகொள்ளும் போது அதுவே ஆபத்தாகி திடீர் மரணங்கள் ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்குமாம், ரத்த அழுத்தம் கூடுவதோடு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு திடீர் மரணங்கள் சம்பவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
தாம்பத்ய உறவுக்கு முன்னதாக தம்பதியர் மது அருந்துவதும், புகைப்பதும் கூட ஆபத்தானது என்கின்றனர் நிபுணர்கள். அதேவேகத்தில் செக்ஸில் ஈடுபடுவது இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துமாம். எனவே தேவையற்ற உற்சாக பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்.
ஒரே நாளில் அதிக முறை ஆர்கஸம் ஏற்படுவதும் ஆபத்து. இது மனரீதியான ஒரு அழுத்தத்தையும், மன உளைச்சளையும் ஏற்படுத்தும் ஓவர் செக்ஸ் மரணத்தையும் ஏற்படுத்தும்.
போதை பொருட்களை எடுத்துக்கொண்டு அதேவேகத்தில் உறவுக்கு துணையை கட்டாயப்படுத்துவது ஆபத்தாகிவிடும். போதையின் வேகத்தில் உறவின் போது வன்முறையான செயல்களில் ஈடுபடுவதும் திடீர் மரணம் சம்பவிக்க காரணமாகிறது.
ஹைபர்டென்சன், இதயம் தொடர்பான நோய்களை உடையவர்கள் அதிகமான அளவில்
உறவில் ஈடுபட நேர்ந்தால் ரத்தம் வேகமாக பாய்ந்து உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
அதிக தூரம் பயணம் செய்துவிட்டு அதே வேகத்தோடு செக்ஸில் ஈடுபடுவதும் ஆபத்தானதாம். பயணக்களைப்பில் இருப்பவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்துக்கொண்டு நன்றாக குளித்துவிட்டு பின்னர் தேவை எனில் உறவில் ஈடுபடலாம். இல்லையெனில் சந்தோசத்திற்காக ஆரம்பிக்கும் செயல் சங்கடத்தில் ஏன் மரணத்தில் கூட முடிந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உறவுகொள்ளும் போது அதுவே ஆபத்தாகி திடீர் மரணங்கள் ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்குமாம், ரத்த அழுத்தம் கூடுவதோடு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு திடீர் மரணங்கள் சம்பவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
தாம்பத்ய உறவுக்கு முன்னதாக தம்பதியர் மது அருந்துவதும், புகைப்பதும் கூட ஆபத்தானது என்கின்றனர் நிபுணர்கள். அதேவேகத்தில் செக்ஸில் ஈடுபடுவது இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துமாம். எனவே தேவையற்ற உற்சாக பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்.
ஒரே நாளில் அதிக முறை ஆர்கஸம் ஏற்படுவதும் ஆபத்து. இது மனரீதியான ஒரு அழுத்தத்தையும், மன உளைச்சளையும் ஏற்படுத்தும் ஓவர் செக்ஸ் மரணத்தையும் ஏற்படுத்தும்.
போதை பொருட்களை எடுத்துக்கொண்டு அதேவேகத்தில் உறவுக்கு துணையை கட்டாயப்படுத்துவது ஆபத்தாகிவிடும். போதையின் வேகத்தில் உறவின் போது வன்முறையான செயல்களில் ஈடுபடுவதும் திடீர் மரணம் சம்பவிக்க காரணமாகிறது.
ஹைபர்டென்சன், இதயம் தொடர்பான நோய்களை உடையவர்கள் அதிகமான அளவில்
உறவில் ஈடுபட நேர்ந்தால் ரத்தம் வேகமாக பாய்ந்து உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
அதிக தூரம் பயணம் செய்துவிட்டு அதே வேகத்தோடு செக்ஸில் ஈடுபடுவதும் ஆபத்தானதாம். பயணக்களைப்பில் இருப்பவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்துக்கொண்டு நன்றாக குளித்துவிட்டு பின்னர் தேவை எனில் உறவில் ஈடுபடலாம். இல்லையெனில் சந்தோசத்திற்காக ஆரம்பிக்கும் செயல் சங்கடத்தில் ஏன் மரணத்தில் கூட முடிந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
ஆசாத்நகர் புதியபள்ளிவாசல் திறப்புவிழா குறித்து தொழிலதிபர் அல்மஹா ஹைதர் அலி பேட்டி:
முத்துப்பேட்டை, ஜூன் 06: பல்வேறு பணிகளுக்கிடையில் பிசியாக இருந்த அன்பு சகோதரர் தொழிலதிபர் S M ஹைதர் அலி அவர்களை நாம் சந்திக்க சென்றோம்,நம்மை கண்டவுடன் மிகவும் மரியாதையுடன் வரவேற்ற அண்ணன், நாம் கேட்ட கேள்விகளுக்கு சலனம் இல்லாமல் இன்முகத்துடன் பதிலளித்தார்.
கே: ஆசாத் நகர் புதிய ஜும்ஆ பள்ளிவாசல் திறப்புவிழா எப்போது?பள்ளிவாசல் கட்டுமான பணிகள் யாவும் முடிவடைந்து விட்டதா?
பதில்: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வருகிற ஜூன் 28-06-2013 அன்று புதிய பள்ளிவாசல் திறப்புவிழாவினை வைத்துள்ளோம் .பள்ளிவாசல் கட்டுமான பணிகள் அனைத்தும் 98% முடிவடைந்துவிட்டது .மீதமுள்ள பணிகள் கூடிய விரைவில் முடிவடைந்து விடும்.
கே: இந்த புதிய பள்ளிவாசலானது தனிப்பட்ட நபரால் கட்டப்படுகிறதா?அல்லது பொதுமக்களிடமிருந்து வசூல் செய்து கட்டபடுகிறதா?
பதில்: முதலில் இந்த பள்ளியை நான் மட்டும் தனிப்பட்ட முறையில் கட்டிகொடுக்கலாம் என்று நிய்யத் வைத்திருந்தேன். ஆனால் இதில் பொது மக்களின் பங்களிப்பும் இருந்தால் மிகவும் சிறப்பாகவும், ஏற்றமாகவும் இருக்கும் என்று பலர் என்னிடம் கருத்து கூறியதால் இந்த பள்ளி கட்டுமான நிதியை செல்வந்தர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவரிடமும் நிதி பெற்று கட்டியுள்ளோம்.
கே: பள்ளிவாசல் கட்டுமான பணியின் மொத்த செலவு எவ்வளவு?
பதில் : பள்ளிவாசல் கட்டுமான பணியின் மொத்த செலவு ரூபாய் 3 கோடியாகும்.இந்த கட்டுமான பணியின் கணக்குகள் யாவும் பொதுவுடமையாக்கப்படும்.
பதில்: முத்துப்பேட்டையை சுற்றியுள்ள சுமார் 4 அல்லது 5 மாவட்டங் களிலிருந்து மக்கள் வந்து கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
திறப்புவிழாவிற்கான ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளன?பெண்களுக்கு என சிறப்பு ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளனவா?
பதில்: திறப்புவிழா எர்பாட்டிற்கான அத்துனை பணிகளும் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.இதில் ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் தனி இட வசதிகள் செய்யப்பட உள்ளன.
கே : இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் யார் யார் கலந்து கொள்ள இருக்கிறார்கள்?
பதில்: குவைத் நாட்டினுடைய ஷேக் அப்துல் லத்தீப் (அல்முஹன்னதி) அரபி சிறப்புவிருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார்.மற்றும் சிங்கப்பூர் தொழிலதிபர்கள் MA. முஸ்தபா, MA.தமீம்,வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் M .அப்துல் ரஹ்மான் MP. மற்றும் பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
கே: இந்த திறப்புவிழா நிகழ்ச்சியில் சிறப்பு பயான் செய்வதற்காக உலமாக்கள் ஆலிம்கள் யாரேனும் வர உள்ளனரா?
பதில் : கண்டிப்பாக, இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு பயான் செய்வதற்காக அதிரை அப்துல் லத்தீப் ஆலிம்சா, கான் பாகவி, அன்னை கதீஜா கல்லூரியின் முதல்வர் சாஜிதா பானு ஆலிமா, உத்தமபாளையம் ராவுத்தரப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர். அப்துல் சமது சாஹிப், மற்றும் கோவை அப்துல் அஜீஸ் பாகவி ஆகியோர் சிறப்பு பயான் செய்ய இருக்கிறார்கள்.
கே: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தை பற்றி நீங்கள் என்ன கூற நினைக்கின்றீர்கள் ?
பதில்: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் மிக சிறப்பாக செயல்படுகிறது .முத்துப்பேட்டையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு செல்கிறது.முத்துப்பேட்டை செய்திகள் மட்டுமின்றி நம் சமுதாயத்திற்கு எதிராய் நடக்கும் கொடுமைகளையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.அதுமட்டு மில்லாமல் மரண அறிவிப்புகள்,திருமண நிகழ்வுகள்,மருத்துவ தகவல்கள், சமுதாய மற்றும் அரசியல் தலைவர்களுடன் நேர்காணல் என்று பல்வேறு சிறப்பு அம்சங்கள் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் உள்ளது. நீங்கள் மென்மேலும் வளரவேண்டும் .உங்கள் பணியை நான் பாராட்டுகிறேன்.
சந்திப்பு: ஜே: ஷேக்பரீத்
முத்துப்பேட்டை SPKM தெருவில் தீப்பிடித்து எறிந்த வாகனங்கள் :போலீசார் விசாரணை
முத்துப்பேட்டை, மே 31: முத்துப்பேட்டையில் உள்ள SPKM தெருவில் அதிகாலையில் 2 மணியளவில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது .இந்த விபத்தில் ஒரு போலேரோ, ஒரு பைக், ஒரு புல்லெட், ஒரு சைக்கிள் ஆகிய வாகங்கள் தீயில் கருகின. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். தீப்பற்றி எறிந்த போலேரோ GT கோல்டன் ஜஹபர் அலிக்கு சொந்தமானது என்று சொல்லப்படுகிறது.
தகவல்: M.M. பைசல் BBA
முத்துப்பேட்டையில் நடந்த கொடூர விபத்து மனிதநேயப்பணியில் த மு மு க
முத்துப்பேட்டை, மே 29: முத்துப்பேட்டையில் 27.5.13 காலை 8 மணியளவில் சுந்தரம் புறவழிச்சாலையில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். மற்றொருவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். இந்த சாலை விபத்தினை கேள்விப்பட்ட உடன் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் உதவி செய்யும் தமுமுக ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்தது. அப்பகுதியை சார்ந்த கிராம மக்கள் இறந்தவரின் உடலினை பொது மக்கள் பார்ப்பார்கள் என்பதற்காக, அவசர அவசரமாக முகத்தினை மூடி விட்டார்கள். ஏனெனில் இறந்தவரின் தலை பகுதியானது பலத்த அடிப்பட்டதால் சம்பவ இடத்தில் சிதறி கிடந்தது.
கோட்டைப்பட்டினம் – கோட்டை ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 35) த.பெயர். பெரியசாமி, அதே ஊரை சார்ந்த மூர்த்தி (வயது 40) தந்தை பெயர். பிச்சை. கோபால் மற்றும் மூர்த்தி இருவரும் ஆடு விற்கும் தொழில் செய்பவர்கள்.
இருவரும் ஆடு விற்கும் தொழில் சம்மந்தமாக திருத்துறைப்பூண்டி சென்று விட்டு தம்பிக்கோட்டையில் உள்ள ஒரு வியாபாரியை சந்திப்பதற்காக ஆலங்காடு புறவழிச்சாலை வழியாக பைக்கில் வந்து கொண்டு இருந்தனர். அப்பொழுது சுந்தரம் பகுதியில்; எதிரே வந்த கிரேன் மீது பைக் மோதி சம்பவ இடத்தில் கோபால் இறந்து விட்டார். காயமடைந்த மூர்த்தியை முத்துப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு விட்டு, அவரேயும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.
காலை 8 மணிக்கு நடந்த சம்பவமாக இருந்தாலும் அதிகளவில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இருப்பினும், பொது மக்கள் மத்தியில் பீதியையும், கவலையையும், பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டுப்பாளையம் ஸ்டேஷன் மாஸ்டரிடம் அப்துல்ரஹ்மான் M.P கோரிக்கை:

உதயமார்த்தாண்டபுரம், மே 25: ஊட்டி செல்ல வேலூரில் இருந்து வந்து இருந்த முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்கள் நீலகிரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் மேட்டுபாளையம் வந்தார் அவரை நகர நிர்வாகிகள் வரவேற்றனர், பின்னர் மலை ரயிலில் அவருக்கென இடம் ஒதுக்கபட்டுஇருந்தது .
நீலகிரி எக்ஸ்ப்ரஸில் வந்தபயணிகளில் 2,3 நபர்களுக்கு மட்டும் தான் இடம் கிடைத்தது மற்றவர்களுக்கு இடம் இல்லை நீலகிரி எக்ஸ்பிரஸ் வருவதற்கு முன்பாகவே இருக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டது, இதனால் வைடிங் லிஸ்டில் உள்ள பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர், இதனை சரியாக வரைமுறை படுத்துமாறு ஸ்டேஷன் மாஸ்டரிடம் அப்துல் ரஹ்மான் M P அவர்கள் கோரிக்கை விடுத்தார்,
மன்னார்குடியில் தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு: விவசாயி அடித்துக்கொலை
விவசாயி சேவையனின் முதல் மனைவி கடந்த 25 வருடங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு ஓடி விட்டார். இதையடுத்து அவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் 2-வது மனைவியும் நோய்வாய்ப்பட்டு திடீரென இறந்து விடவே சேவையன் மனவிரக்தியில் காணப்பட்டார். இதனால் பக்கத்து வீட்டில் வசித்துவந்த தம்பியின் மனைவி தவமணி அவருக்கு ஆறுதல் கூறி வந்தார். இருவரும் வெளியிடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தனர்.
மேலும் அழகிரி சென்னைக்கு அடிக்கடி சென்று விடுவதால் தவமணிக்கும் சேவையனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் அழகிரிக்கு சந்தேகம் ஏற்ப்பட்டது. இதை தொடர்ந்து சென்னையில் இருந்து திடீரென ஊருக்கு திரும்பி வந்த அழகிரி சேவையனுடன் தகராறில் ஈடுபட்டார். இதேபோல் நேற்று நள்ளிரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த அழகிரி எனது மனைவியுடன் நீ தனிமையில் உல்லாசமாக இருக்கீறாயா? என்று கூறி வீட்டின் அருகே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சேவையனின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அண்ணன் இறந்து விட்டதை அறிந்த அழகிரி அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.
தகவல் அறிந்த வடுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அழகிரியை தேடிவருகிறார்கள். கள்ளத்தொடர்பு காரணமாக தம்பி அண்ணணை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானி, பாக்கர் ஆகியோரை சேர்க்க சதி.! காஞ்சி ஜைனுல் ஆபிதீன் பேட்டி.
பெங்களூர், மே 24: மத்திய சிறையில் கிச்சான் புகாரி உள்ளிட்ட நான்கு சகோதரர்களையும் சந்தித்தோம் 30 நாட்கள் காவல்துறை விசாரணையில் இருந்த புகாரி, பஷீர் ஆகியோரை முதல் 15 நாட்கள் கடுமையாக சித்தரவதை செய்துள்ளனர் கர்நாடக காவல்துறையினர்.
மதானி சொல்லித்தான் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியாக ஒப்புகொள்ள வேண்டும் எனவும்,INTJ தலைவர் பாக்கர் செய்யும் உதவிகள் என்ன என்றெல்லாம் கேட்டு மிகவும் கடுமையான முறையில் அடித்துள்ளனர்.
நன்கு உடல்வாகு கொண்ட முரட்டு காவல்துறை நபர்கள் நன்றாக மதுவருந்தி விட்டு கீழ்க்கண்டவாறு சித்திரவதைகளை செய்வார்களாம்.
1.பஞ்சாப் கட் - கால்தொடைகள் மீது காவலர்கள் ஏறிக்கொள்ள சிலர் முதுகை சுவற்றின் மீது சாய்த்தவாறு வைத்து விட்டு கால்களை சுவற்றின் பக்கம் வளைப்பார்கள்.
2.எரோப்லன் மெதட் - கை கால்களை கட்டி மாட்டுக்கு லாடம் கட்டுவது போல் அந்தரத்தில் தொங்கவிட்டு அடிப்பது.
இப்படி அடித்தபோது சில நேரங்களில் அவருக்கு சிறுநீர்,விந்து வெளி வந்து விட்டதாம்.
3.நிர்வானபடுத்தி விட்டு பிறப்புறுப்பில் தொடைகளில் பெற்றோலை ஊற்றி விட்டு மிளகாய் பொடி தூவியுள்ளனர்.அந்த வேதனையை பார்த்து ரசித்து சிரித்துள்ளனர்.
4.குடிகார காவலர்கள் அடிக்கும்போது வழியில் எவ்வளவு கத்தினாலும் விட மாட்டார்கள்.
மயக்கமடைந்தாள் பல்ஸ் பார்த்து சுடு நீர் ஊற்றி ஒத்தடம் கொடுத்து விட்டு pain killer spray அடித்து விட்டு மீண்டும் அடிப்பார்கள்.
5.அடிக்கும் போது வலி தாங்காமல் அல்லாஹ் என்று கத்தினால் கூபுட்றா உன் அல்லாஹ்வை வரானா பாப்போம் என்று கிண்டல் செய்வது.
இவ்வளவு கொடுமைகளையும் சந்தித்து பொறுமையோடு துஆ செய்யுங்கள் என்று கூறிய சகோதரர் களுக்காக துஆ செய்வோம்.சட்ட ரீதி யாக ஒற்றுமையாக பாசிச காவல் துறையை எதிர் கொள்வோம்.வாய்பிருந்தால் பெங்களூர் சிறை சென்று சகோதரர்களை சந்தியுங்க
இவ்வாறு ஜைனுல்ஆபிதீன் கூறினார்.
முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஹாஜி. C.M .இப்ராஹீம் மரணம்
அதிராம்பட்டினம், மே 23: கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சின்னத்தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் M. நவாஸ்கான், மற்றும் M. ரெஜிஸ்கான் ஆகியோரின் தகப்பனாரும், H. தீன் முஹம்மது, M. அயூப்கான், Y. அன்சாரி முஹம்மது ஆகியோரின் மாமனாரும், முன்னாள் கால்பந்தாட்ட வீரர் - தமிழக வேளாண் விற்பனைத்துறை ஆய்வாளர் - அதிரை பைத்துல்மால் இணைச்செயலாளருமாகிய ஹாஜி. C.M. முஹம்மது இப்ராஹீம் அவர்கள் இன்று ( 23-05-2013 ) அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் நல்லடக்கம் இன்று மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
ஹாஜி C.M. முஹம்மது இப்ராஹீம் - நினைவலைகள்!
அதிரை பைத்துல்மாலுக்குச் சொந்தமான பல்லாவரம் கட்டிடம் குறுகிய காலத்துக்குள் கிரயம் செலுத்தப்படவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எழுந்தபோது,வெளிநாடுகளிலுள்ள அதிரையர்களிடமிருந்து நிதிதிரட்டுவதற்காகச் சென்ற குழுவில் மர்ஹூம் C.முஹம்மது இப்ராஹிம் சாச்சா அவர்களும் இடம்பெற்றார்கள்.
பைத்துல்மால் நடத்திய குர்ஆன் மாநாடாகட்டும்,கூட்டுகுர்பானி திட்டமாகட்டும், இன்னும் பிற சேவைகளில், இவர் தன்னார்வலராக இணைந்து இவர்கள் செய்த களப்பணிகள் தற்கால இளைஞர்களே வெட்கப்படுமளவுக்கு பம்பரமாகச் சுழன்று சிறப்பாகச் செயல் பட்டதை அறிந்துள்ளேன்.
பைத்துல்மாலின் மாதாந்திர அமர்வுகளில் தவறாது கலந்துகொண்டு தகுந்த ஆலோசனை வழங்கவும் தவறியதில்லை. பைத்துல்மால் சார்பில் நடக்கும் இலவச திருமணங்களிலும் மணமக்களின் ஹக்கில் தன்பங்கு உதவிகளையும் வழங்கி பலரது துஆவிற்கு அருகதையாகியுள்ளார்கள்.
இவருடன் பழகியதில் இவரின் எளிமையையும்.. அமைதியையும் கண்டு வியந்துள்ளேன். ஹாஜி C.M.முஹம்மது இப்ராஹிம் சாச்சாவின் மவுத்து அவரது குடும்பத்தாருக்கு மட்டுமின்றி பைத்துல்மாலுக்கும் நிச்சயம் பெரும் இழப்பு என்றால் மிகையில்லை. எனினும், நிச்சயிக்கப்பட்ட மரணத்திலிருந்து விதிவிலக்கு யாருமில்லை என்ற இறைநியதியை ஏற்று அன்னாருக்காக துஆ செய்வோமாக.அல்லாஹ் அவர்களது நல்லறங்களைப் பொருந்திக்கொண்டு நற்கூலியை வழங்குவானாக. ஆமின்.
முத்துப்பேட்டையில் நடக்கும் விளையாட்டு போட்டிகளை ஊக்குவித்த C .M .இப்ராஹீம் :
அதிராம்பட்டினம், மே 23: முத்துப்பேட்டை சூப்பர் கிங்ஸ்கைப்பந்து கழகம் சார்பாக இளைஞர்களால் வருடாவருடம்முத்துப்பேட்டை கொத்பா பள்ளி திடலில் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருவது யாவரும் அறிந்த ஒன்று .பொதுவாகவே விளையாட்டு போட்டிகள் நடத்தவேண்டுமென்றால் பரிசுகள் கொடுப்பவர்களை (SPONSORSHIP )தேடி பிடிப்பது என்பது இயலாத ,மிகவும் கடினமான காரியமாகும் .
கடந்த நான்கு ஆண்டிற்கு முன் 10 பேர் கொண்ட அணியின் நிர்வாகிகள் பரிசை பெறுவதற்காக ((SPONSORSHIP ) அதிரைக்கு சென்றிருந்தோம் .முதலில் அதிரையில் உள்ள முக்கியஸ்தர்கள் ,செல்வந்தர்கள் ,மற்றும் அரசியல் பிரபலங்களை சந்திப்பது என்று முடிவெடுத்தோம் .பின்னர் ஒருசில பிரபலங்களை சந்தித்தோம் .பலன் ஒன்றும் இல்லை .
பரிசு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் அனைவரும் கடற்கரை தெருவில் உள்ள ஒரு ஆள மரத்தடியில் அமர்ந்தோம் .அப்போது அங்கே அதிரை சார்ந்த மாநில அளவிலான விளையாட்டு வீரர் சாகுல் வந்தார் ,பின்னர் இங்கே ஒரு ஆள் இருக்கிறார் வாருங்கள் போய் சந்திப்போம் என்று கூறி எங்களை கடற்கரை தெருவிற்கு உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றார் .
அந்த வீட்டிற்கு சென்ற மறுகணமே ஒரு வயதான தோற்றத்தில் ,இளைஞர் போன்ற சுருசுருபோடு நம்மை ஒருவர் வரவேற்று வீட்டின் உள்ளே அழைத்து சென்றார் .அனைவருக்கும் தேநீர் விருந்து கொடுத்து கவனித்த அவர் உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று பணிவாக கேட்டார் .அப்போது நாங்கள் அனைவரும் ஒருமித்த குரலில் விளையாட்டு போட்டி நடத்துவதற்கு பரிசு உதவி செய்ய வேண்டும் கடைசி பரிசான நான்காவது பரிசு வழங்கினால் போதும் என்று கூறினோம் .உடனே அந்த வயதானவர் குறிக்கிட்டு நான் நான்காவது பரிசெல்லாம் தரமுடியாது ...முதல் பரிசுதான் கொடுப்பேன் என்று தமாசாக பேசி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் .பின்னர்தான் அந்த நபர் மதிப்பிற்கும் ,மரியாதைக்கும் உரிய C .M .இப்ராஹீம் என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம் .
முத்துபேட்டை சூப்பர் கிங்ஸ்வருடாவருடம் நடத்தும் விளையாட்டு போட்டிகளுக்கு முதல் பரிசை கொடுப்பது மட்டுமில்லாமல் ,போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வந்து வாழ்த்துரையும் வழங்கிவிட்டு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது .
மாறாத நினைவுகளுடன் : ஜே. ஷேக் பரீத்
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!
உலகம், மே 23: ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான்.
குறிப்பாக உங்களது துணை வருத்தத்திலோ அல்லது கவலையிலோ இருக்கும்போது நீங்கள் அவருக்கு தோள் கொடுத்து நின்று ஆறுதல் அளிக்கும்போது அவருக்குக் கிடைக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் சொல்லில் வடிக்க முடியாதது.
அன்பாலும், பாசத்தாலும், அக்கறையாலும், பரிவாலும் உங்களது வார்த்தைகளால் அவரது புண்ணுக்கு நீங்கள் போடும் மருந்து மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது. நமக்கென்று ஒரு தோள் இருக்கிறது, நமக்காக ஒரு உயிர் இருக்கிறது, நம்மை தூக்கிச் சுமக்க ஒரு சுமை தாங்கி இருக்கிறது என்ற நினைப்பே பலருக்கு சோர்வையும், சோகத்தையும் தூக்கிப் போட்டு விட உதவுகிறது.
உங்களது துணைக்கு உடல் நலம் சரியில்லையா, மன வருத்தத்தி்ல இருக்கிறாரா அல்லது ஏதாவது பயத்தில் இருக்கிறாரா.. கவலையேபடாதீர்கள், ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள். அப்படிய பறந்து போய் விடும் அவரது கவலைகள்.
கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லலாம்…
இது ஒரு உபாயம்.சிலருக்கு கட்டி அணைத்து தோளோடு தோள் சேர்த்து, தலையை வருடிக் கொடுத்து, முதுகைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறும்போது அதை அவர்கள் விரும்புவார்கள். இது எல்லோருக்குமே பிடித்தமான விஷயமும் கூட. இது ஒருவகையான பாசம் பரிவு கலந்த அரவணைப்பு. எத்தகைய துன்பத்தில் இருந்தாலும் இந்த கட்டிப்பிடிக்கு முன்பு அது கால் தூசுதான். எனவே வருத்தமெல்லாம் அப்படியே கரைந்து போய் விடும்.
உனக்காக நான் இருக்கிறேன் கண்ணம்மா, கண்களில் ஏன் இந்தக் கவலை. எல்லாவற்றையும் மறந்து விடு, நிம்மதியாக இரு. உனக்கான தோள் நான். என் மீது உன் பாரத்தை ஏற்றிவிட்டு, நிம்மதியாக இரு என்று சொல்லும்போது அவர்களுக்கு்க கிடைக்கும் அந்த பாதுகாப்பு உணர்வுக்கு ஈடு இணையே கிடையாது.
கவனத்தைத் திருப்புங்கள்
சிலருக்கு தேவையில்லாத பயம், கவலை வந்து மனதை வருத்தும். அதுபோன்ற சமயங்களில் அவர்களை அந்தப் பிரச்சினையிலிருந்து திசை திருப்ப முயற்சியுங்கள். ஜாலியாக ஏதாவது பேசுங்கள், வேறு டாப்பிக் குறித்து அவர்களது சிந்தனையை திருப்புங்கள். அதையே நினைத்துக் கொண்டு பயப்படாதே என்று தட்டிக்கொடுங்கள். அவர்களுக்கு ஊக்கமாக, பக்கபலமாக இருந்து, அவர்களின் பயத்தைப் போக்குங்கள். அவரது மனதுக்கு இதமாக ஏதாவது பேசிக் கொண்டிருங்கள்.
மனம் விட்டு பேசச் சொல்லுங்கள்
சிலருக்கு பிரச்சினையை யாரிடம் சொல்லி அழுவது என்ற குழப்பம் இருக்கும். அப்போது அவரிடம் உங்களைப் புரிய வையுங்கள். என்னிடம் கொட்டி விடு, எல்லாவற்றையும் வெளியில் போட்டு விடு, பிரச்சினையை சொல் நான் தீர்வு சொல்கிறேன் என்று நம்பிக்கை அளியுங்கள். அவர் சொல்லும்போது அக்கறையுடன் கேட்டு அவருக்குப் பொருத்தமான தீர்வை சொல்லுங்கள். நிச்சயம் அவருக்கு ஆறுதல் கிடைக்கும்..
உங்கள் துணையின் கண்களிலிருந்து நீர் வழியும்போது அதை வேடிக்கைப் பார்க்காமல், அதைப் பரிகாசம் செய்யாமல், உண்மையான பாசத்தோடும், நேசத்தோடும், காதலோடும், அன்போடும் நீங்கள் அணுகும்போது தானாகவே அந்தக் கண்ணீர் நின்று போகும். அன்பைக் கொட்டி நீங்கள் தரும் ஆதரவு அவருக்கு ஒரு தாயின் மடியைப் போலவே காட்சி தரும்.
எனவே உங்கள் துணை சோரந்திருக்கும்போது நீங்கள் தாயாக மாறி அவருக்கு இளைப்பாறுதலைக் கொடுங்கள்…!
மலட்டுத் தன்மையை குணமாக்க, ஆண்மையை அதிகரிக்க, மருத்துவர்கள் கூறும் தகவல்கள் :
உலகம்,
மே 23:
இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள்.
ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
* காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் குல்கந்து இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.
* பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.
* சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.
மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும்.
48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்
கர்ப்பமாக இருக்கும்போது உறவு வைத்துக் கொள்ளலாமா? மருத்துவர்கள் தரும் தகவல்கள்..
![]() |
உலகம், மே 17: முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது. கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த குழப்பங்களும், பயமும் கர்ப்ப காலத்தின்போது உறவிலிருந்து பலரையும் விலக்கிக் கொண்டு சென்று விடுகிறது.
கர்ப்ப காலத்தின்போது பெண்கள் மனதளவிலான மாற்றங்களை சந்திக்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டவர்களாக பெரும்பாலான பெண்கள் அச்சமயத்தில் இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் போனாலோ அல்லது திருப்திக் குறைவு ஏற்பட்டாலோ அது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அது கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும்.
கணவரிடமிருந்து போதிய ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்காமல் போனால் அவர்களுக்குள் பெரும் ஏமாற்றம், எரிச்சல், பசியின்மை உள்ளிட்டவை ஏற்படும். இந்த எதிர்பார்ப்புகள் செக்ஸ் உறவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை அல்ல.
இந்த மாற்றங்களை, பாதிப்புகளை பெரும்பாலான ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. அல்லது நிவர்த்தி செய்ய முயலுவதில்லை. அதற்குப் பதிலாக சிம்பிளாக டாக்டரிடம் கூட்டிக் கொண்டு காட்டுவதையே விரும்புகிறார்கள்.
கர்ப்ப காலத்தின்போது தங்களது மனைவியரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும். செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பினால் முறையான, இருவருக்கும் மனம் ஒத்த நேரத்தில் அதைச் செய்ய முயல வேண்டும். மாறாக மனைவியை அதற்காக வற்புறுத்துவது கூடாது.
கர்ப்ப காலத்தின்போது பெரும்பாலான பெண்களுக்கு கணவரின் அருகாமை மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. அது உடலுறவாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் முத்தம், அன்புப் பரிமாற்றங்கள், நெருக்கமாக இருப்பது ஆகியவற்றைத்தான் பெரும்பாலான பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதேசமயத்தில் கர்ப்ப காலத்தின்போது தாராளமாக உடலுறவு வைத்துக் கொள்ளலாம்.
அதுபோன்ற தருணங்களில் வழக்கமான முறையில் (மேலே ஆண், கீழே பெண்) செக்ஸ் உறவை வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மாறாக கீழே ஆண், மேலே பெண் முறையில் செக்ஸ் உறவை பேணலாம். அல்லது இருவரும் அமர்ந்த நிலையில் கூட செக்ஸ் உறவை மேற்கொள்ளலாம். இதன் மூலம் வயிற்றின் மீது அழுத்தம் ஏற்படாது. இது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு நல்லது. மேலும் இயக்கமும் கூட நிதானமாக, மெதுவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
கர்ப்பம் தரித்து 6 முதல் 12 வாரம் வரை செக்ஸ் உறவைத் தவிர்ப்பது நல்லது. அந்த சமயத்தில் உறவு வைத்துக் கொண்டால், கரு கலைந்து போய் விட வாய்ப்பாகி விடும். அதேபோல கர்ப்ப காலத்தின் கடைசி இரண்டு மாதங்களின்போதும் செக்ஸ் உறவு கூடாது. இதனால், பனிக்குடம் உடைந்து குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
அதேபோல கர்ப்ப காலத்தின் 4 முதல் 7வது மாதம் வரை தேவைப்பட்டால் மட்டுமே செக்ஸ் உறவைக் கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தின்போது வாய் வழி உறவு மற்றும் ஏனல் செக்ஸ் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு அந்த சமயத்தில் உடல் அழகும், பொலிவும் சற்று குறைவதும், குலைவதும் இயற்கை. இதனால் அந்த சமயத்தில் தங்களது பார்ட்னர்கள் மீதான ஈர்ப்பு ஆண்களுக்குக் குறைவதுண்டு. இந்த சமயத்தில்தான் பல
ஆண்கள் வேறு பெண்களை நாடுவதும் நடக்கிறது. ஆனால் இது தவறு, இந்த சமயத்தில்தான் மனைவிக்குத் துணையாக, அவருக்கு ஆறுதலாக, பரிவை பொழிய வேண்டிய தருணம் என்பதை பல ஆண்கள் மறந்து விடுகிறார்கள்.
தாரத்தின் அழகை விட தாய்மையின் அழகைத்தான் அப்போது ஆண்கள் முக்கியத்துவம் தந்து பார்க்க வேண்டும். மனைவியின் மன ஓட்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கு நல்ல வடிகாலாக இருக்க வேண்டியது ஆண்களின் கடமை.
பாதுகாப்பான முறையில், பாதுகாப்பான தருணத்தில் உடல் உறவைக் கொள்ள முடியும் என்பதைப் புரிந்து கொண்டு அதுதொடர்பான அறிவை வளர்த்துக் கொண்டால் கர்ப்ப காலத்திலும் கூட தம்பதிகள் கலகலப்பாக இருக்க முடியும்.
Subscribe to:
Posts (Atom)
.gif)









.jpg)







.jpg)


