முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ஜெர்மனி, பிரான்சைத் தொடர்ந்து இத்தாலியும் தற்போது பர்தாவுக்குத் தடை!!!

ஆகஸ்ட்18: ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்சைத் தொடர்ந்து இத்தாலியும் தற்போது முஸ்லிம் பெண்கள் அணியக்கூடிய புர்காவைத் தடை செய்துள்ளது!
பெண்ணியவாதிகள் மத்தியில் இது வரவேற்கதக்க விஷயம் என்றாலும், இந்த விஷயத்தை, முஸ்லிம் மக்கள் மீது கலாசாரரீதியாகவும், மேற்கத்திய நாட்டு அரசுகள், கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறையின் ஒரு அங்கமாகவே பார்க்கவேண்டும்.
ஏற்கனவே டென்மார்க்கில் ஒரு பத்திரிகை முஸ்லிம்களின் போற்றுதலுக்குரிய முகமது நபி (ஸல்) அவர்களை கேலிச்சித்திரமா போட்டது. அதைதொடர்ந்து வளைகுடா நாடுகள் மொத்தமும், உலகத்துலேயே பாலுக்கு பேர்போன டென்மார்க்கிலிருந்து ஏற்றுமதியாகிற பொருட்கள தடை செய்ததன் மூலம் தங்கள் எதிர்ப்பை காட்டினர்.
இருந்தபோதும், மேற்கத்திய நாட்டு அரசாங்கங்கள், முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்தவில்லை.
இந்த இடத்தில் ஒருவிஷயத்தை சொல்லவிரும்புகிறேன். எனக்குதெரிந்த ஒரு டாக்டர், முப்பது வருடங்களுக்குமுன் அமெரிக்காவில் செட்டில் ஆனவர். அவர் ஒரு முஸ்லிம். அமெரிக்க குடிஉரிமை பெற்றவர். வருடம் ஒருமுறை இந்தியா வந்து செல்வார். இவ்வாறு அவர், ஒவ்வொரு முறையும் இந்தியாவிலிருந்து அமெரிக்கா திரும்பும்போதும், அமெரிக்க குடிஉரிமை அதிகாரிகளால் தேவையில்லாத கேள்விகள் கேட்கப்பட்டு, கிட்டத்தட்ட அவமான படுத்தபடுவாராம். எதிர்கேள்வி கேட்டால் தேவையில்லாத பிரச்சனை என்று அவர் அதை ஒவ்வொருமுறையும் சகித்துகொள்வாராம். அவரின் வீட்டு மற்றும் அலுவலக தொலைபேசிகள் ஒட்டு கேட்கபடுகிறதாம். அவரின் வங்கி கணக்கும் கண்காணிக்க படுதாம். இத்தனைக்கும் அவர், மதத்தின் மீது அவ்வளவு பற்றான நபரும் கூட கிடையாது. இவருக்கே இந்த நிலைஎன்றால், மதத்தின் மீது பற்றுள்ள அப்பாவி முஸ்லிம் மக்களின் கதி என்ன என்பதை யோசித்துபாருங்கள்.
எனவே இத்தடைக்கு எதிரா, முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து மதத்தவரும், மதமே இல்லைன்னு சொல்றவங்களும் குரல் கொடுக்கணும்! ஏனென்றால் இது ஒரு மதத்தை தழுவிய மக்களுக்கு எதிரான அடக்குமுறை. உலகில் அடக்குமுறை எந்தவடிவத்தில் இருந்தாலும் அதை எதிர்த்து குரல் எழுப்பபடவேண்டும்.
நமது நிருபர்

உமர் முக்தார்

பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்பதற்கான ஆதாரம்

ஆகஸ்ட்18: அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹ்...
பர்தாவைப் பற்றியும் அதன் அவசியம் மற்றும் அதன் அளவு பற்றியும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன.பெண்கள் அவர்களுடைய அழகை அந்நிய ஆண்களுக்கு மத்தியில் வெளிப்படுத்துவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.இந்நிலையில் முகத்தையும் முன்கைகளையும் மறைக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதில் உலமாக்களிடையே கருத்து வேறுபாடுள்ளது.

ஆனால் முகத்தையும் முன்கைகளையும் மறைக்கக்கூடாது என்று தமிழகத்தில் ஒரு கருத்து பரப்பப்பட்டு வருகின்றது. ஏனென்றால் இஸ்லாத்தில் இதற்கான ஆதாரமில்லை என்றும் இதன் மூலம் திருட்டு,விபச்சாரம்,நடிகைகள் தவறாக பயன்படுத்துதல்,தவறு செய்வதற்கு வாய்ப்பு தருகின்றது போன்ற கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.ஆனால் முகத்தையும் முன்கைகளையும் மறைக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் இருக்கின்றது.

அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா கூறுகின்றான்

நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்(33:53)

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக.அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன். மிக்க அன்புடையவன்.(33:59)

இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்.தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்…………….(வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்.(24:31)

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்.(33:33)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் கூறுகின்றார்கள்

இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!'' என்று இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஃஹாரி-1838

மேற்கண்ட ஹதீஸில் பெண்கள் முகத்திரையையும்கையுறைகளையும் பயன்படுத்தியுள்ளார்கள்.அதனாலேயே நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இஹ்ராமில் தடுத்துள்ளார்கள். ஆனால் இந்நேரங்களில் கூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மனைவியர்களும் மற்ற முஸ்லிமான பெண்களும் தங்களுடைய முகங்களை மறைத்துள்ளனர். அதற்கான ஆதாரம்

ஆயிஷா ரதியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள்.

நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுடன் இஹ்ராமில் இருந்தபோது,வாகனக்காரர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தனர்.அவர்கள் எங்களுக்கு நேராக வருகின்ற போது பெண்களில் ஒவ்வொருவரும் தம் முகமூடிகளைத் தலைகளிலிருந்து முகங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்வார்கள்.அவர்கள் எங்களை கடந்து சென்று விட்டால் முகங்களை திறந்துக் கொள்வோம்.- அபூ தாவூத்

இவ்விஷயத்தில் புரிந்துக்கொள்வதற்கு அதிகமான ஆதாரங்கள் உள்ளன.மேலும் இவ்விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எல்லா உலமாக்களும் குழப்பம் ஏற்படுமென்ற பயமிருக்கின்றபோது பெண் தனது முகத்தை மறைப்பது கட்டாயம் என்பதில் ஏகமனதாக முடிவெடுத்துள்ளனர்.சில நிர்பந்தமான நேரங்களில் முகத்தைத் திறந்து கொள்ளலாமென்ற விஷயத்திலும் ஒத்துப்போகின்றனர்.(உதாரணத்திற்காக சிகிச்சைக்காக மருத்துவரிடம் தனது முகத்தை திறந்துக் கொள்ளலாம்).

இந்தக் காலத்தில் குழப்பங்கள் அதிகமாக இருக்கின்றன.எங்கும் பரவலாக காணப்படுகின்றது.தீயவர்கள்தான் கடைவீதிகளிலும் மற்ற இடங்களிலும் திரிகின்றனர்.அழகை வெளிப்படுத்துவதில் முகமே முக்கிய பங்கு வகுக்கின்றது.


இந்த சூழ்நிலையில் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியில் செல்வதே சிறந்ததாகும்.

குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய ஊர்களில் திருமணமாகாத பெண்கள் இப்பொழுது முகத்தை முழுவதுமாக மறைத்துக்கொண்டே வெளியில் வருகின்றனர்.ஆனால் முகத்தை மூடக்கூடாது என்ற கருத்தின் மூலமாக முஸ்லிம் பெண்களின் கண்ணியம் சீர்குழைவதற்கான வாய்ப்புகள்இருக்கின்றன.ஆகையால் இதுபோன்ற விஷம கருத்துக்களுக்கு எதிராக நாம் நம்முடைய பெண்களை பாதுகாப்பது முக்கியமான கடமையாகும்.
இளம் பெண்கள் அந்நிய ஆண்களுக்கு மத்தியில் முகத்தை வெளியில் காட்டக்கூடாது என்பதற்கான ஆதாரம் கீழே உள்ள இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் (எந்த) சில சந்தர்பங்களில் இளம் பெண்கள் அந்நிய ஆண்களுக்கு மத்தியில் முகத்தை வெளிக்காட்டலாம் என்பதற்கான ஆதாரமும் கீழே உள்ள இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு:
ரிப்போட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்!!!!!

ஆகஸ்ட் 17: ஆஹா! இதோ பார்! சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி!

தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகி தங்கியிருக்கும் அரபு நாட்டின் அறைகளில் தான்.

(அரபு நாடு என்றவுடன் அங்கு பணிபுரியும் எல்லோருமே இப்படித் தான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மார்க்கப் பணிகளுக்காகவும், மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்பதற்காகவும் மட்டுமே தங்கள் விடுமுறை நாட்களை அர்ப்பணிக்கும் சகோதரர்களும் அரபகத்தில் இருக்கின்றார்கள். இங்கு நாம் குறிப்பிடும் சங்கதிகளும் அரபகத்தில் நடக்காமல் இல்லை. வீடியோவில் பெண்கள் போஸ் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்)

ஆக அந்த அறையே ஒரு சிறிய வீடியோ திரையரங்காக மாறி நிற்கும். இந்த வீடியோ படப்பிடிப்பு எங்கு நிகழ்ந்தவை?எல்லாம் நம் வீட்டுத் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான்.

நம் வீட்டில் கல்யாணம் என்றதும் வீடு களைகட்டி நிற்கின்றது. வீடியோ இல்லாத திருமணமா? என்று கேட்கும் அளவுக்கு வீடியோ கலாச்சாரமும் அநாச்சாரமும் கொடி கட்டிப் பறக்கின்றது.

வீதியில் உலாவரும் வீடியோ கேமரா

கல்யாணம் வீட்டில் நடந்தாலும் முதன்முத­ல் காட்சியாவது முச்சந்தியில் நிற்கும் பள்ளிவாசல் அல்லது தர்ஹா மற்றும் ஊரின் புகழைச் சொல்கின்ற புராதனச் சின்னங்கள் தான். இதன் பின் காலையில் கல்யாண வீட்டுக்குள் கேமரா நுழைந்து டீ காப்பி சப்ளை, டிபன், மணமகன் மணமகள் அலங்காரம் என்று மணமகனும் மணமகளும் மணவறையில் நுழைகின்ற வரை கேமரா பின் தொடர்ந்து சென்று ஒரு வழியாக்கி விட்டுத் தான் வெளியேறும்.

மணமகன் இல்லத்தி­ருந்து துவங்கி, வீதி வீதியாகச் சென்று மணமகள் இல்லத்திற்கு அல்லது மண்டபத்திற்குச் சென்று திருமண ஒப்பந்தம் முடியும் வரையிலும் அத்தனையும் படமாக்கப்படுகின்றன.
குறிப்பாக இந்தக் கேமரா, பெண்கள் விருந்து பரிமாறும் போது,அங்க அசைவுகள் அனைத்தையும் கிளிக் செய்யத் தவறுவதில்லை. அதாவது அங்கிங்கு அசைந்து, வந்த விருந்தாளிகளை விழுந்தடித்துக் கவனிக்கும் பெண்களை கேமராமேன் குறி தவறாது பார்த்துக் கொண்டிருக்கின்றான். பற்றாக்குறைக்கு அவனுக்குப் பக்க துணையாக லைட் பிடிக்க இன்னொரு எடுபிடியாள் வேறு!

வேலை செய்கின்ற பெண்களுக்கு நிர்ப்பந்தமாக ஆடை விலகல் நடைபெறத் தான் செய்யும். ஆனால் இவையெல்லாம் ஒளிப்பதிவாகிக் கொண்டிருக்கின்றன என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.
திருமணத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் முத­ல் கேமரா மேன்களின் பார்வைகளுக்கு செழிக்க செழிக்க விருந்தாகின்றனர்.

அதன் பின்னர் துவக்கத்தில் நாம் கூறியது போல் அறைகளில் பலரும் உட்கார்ந்து கிரிக்கெட் கமென்டரியைப் போன்ற வர்ணனையுடன் ரசித்துப் பார்க்கும் ஆடவர்களின் பார்வைக்கு இப்பெண்கள் விருந்தாகின்றனர். இவ்வாறு பார்வைகளில் படரவும் தொடரவும் இந்த வீடியோப் பதிவுகள் வகை செய்கின்றன.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக திருமணம் செய்து கொள்ளப் போகும் மணமகன் கூட பெண்ணைப் பார்த்திருக்க மாட்டான். அதற்கு முன்பாகவே கேமராமேன் மணப்பெண்ணை ரசித்துப் பார்த்து விடுகின்றான். பவுடர் பூசி, நகைகள் அணிந்து,வண்ண ஆடைகளுடன் முழு நிலவைப் போல் அமர வைக்கப்பட்டிருக்கும் இந்த மணப்பெண்ணை நோக்கித் தான் கேமரா நிலைகுத்தி நிற்கின்றது.

இப்படி மணப்பெண் முதற்கொண்டு, நமது மனைவி, மக்கள்,சகோதரிகள், கொழுந்தியாக்கள் என்று அனைவர் மீதும் பாயும் கேமராவைப் போன்றே இந்த கேமராமேனின் பார்வையும் வளைத்து நிற்கின்றது. இதில் மிகமிக வேதனைக்குரிய விஷயமும் வெட்கக்கேடான விஷயமும் என்னவென்றால் இந்த வீடியோக்களுக்கு நம் வீட்டுப் பெண்கள் கூச்ச நாச்சமின்றி போஸ் கொடுப்பது தான்.

ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! ”(நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!) தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்என்ற (24:31) வசனத்தை அல்லாஹ் அருளிய போது, அவர்கள் தங்கள் கீழாடை(யின் ஒரு பகுதி) யைக் கிழித்து அதைத் துப்பட்டா ஆக்கிக் கொண்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி), நூல்: புகாரி 4758

இதே கருத்தைக் கொண்ட செய்தி அபூதாவூதில் 3577வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது. அதில் ஆயிஷா (ர­லி) அவர்கள் அன்சாரிப் பெண்களைப் பாராட்டுவதாக இடம் பெற்றுள்ளது.

தன்னை மறைத்துக் கொள்வதில் முன்னணியில் நின்ற அந்த நபித்தோழியர் எங்கே? இன்று வீடியோவுக்குப் போஸ் கொடுக்கும் இந்தப் பெண்கள் எங்கே?

ஒரு காலத்தில் ஒரு பெண் சினிமாவில் காட்சியளிக்கின்றாள் என்றால் சமூகம் அவளைக் காறித் துப்பியது. ஆனால் இன்றோ நடிகைகளுக்கெல்லாம் சமூக அந்தஸ்து வழங்கப்பட்டது போல் ஒரு போ­லித் தோற்றம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது. இப்படி ஒரு போ­லித் தோற்றம் இருந்தாலும் மற்ற சமுதாய மக்களிடத்தில் கூட, ஒரு பெண் பல பேர் முன்னிலையில் நேரிலோ அல்லது வீடியோவிலோ காட்சியளிப்பது வெறுப்பிற்குரிய காரியமாகவே கருதப்படுகின்றது. இவர்களிடத்திலேயே வெட்கம் தன் வேலையைக் காட்டும் போது ஒரு முஸ்­லிமிடத்தில் இந்த வெட்க உணர்வு எப்படி இருக்க வேண்டும்?

ஈமான் (இறை நம்பிக்கை) அறுபதுக்கும் மேற்பட்ட கிளையாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: புகாரி 9

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஓர் இறைநம்பிக்கை கொண்ட பெண் அடுத்தவர் முன் காட்சியளிக்க முன்வர முடியுமா?இப்படிப்பட்ட பெண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சுவனத்தின் வாடை கூட நுகர முடியாது என்று எச்சரிக்கை செய்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (­லி), நூல்: முஸ்­லிம் 3971

பெண்கள் ஆண்களின் முன்னால் காட்சிப் பொருளாகத் தோன்றுவதன் மூலம் சுவனத்தில் நுழையும் பாக்கியத்தை இழந்து விடக் கூடாது. இப்படி வீடியோவில் பதிவாகி காட்சிப் பொருளாகும் பெண்கள் ஒரு தடவை மட்டும் பாவம் செய்யவில்லை. அந்த வீடியோ கேஸட்டுகள் எப்போதெல்லாம் ஆண்களால் பார்க்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் பாவம் பதியப்படும் நிலையை அடைகின்றார்கள்.

ரோஷம் இழந்த ஆண்கள்

இஸ்லாம் மனிதர்களுக்கு ரோஷ உணர்வை ஊட்டுகின்றது. பின்வரும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இதைத் தெளிவாக உணர்த்துகின்றார்கள்.

என் மனைவியுடன் ஓர் ஆண் இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்என்று ஸஅத் பின் உபாதா (ர­லி) அவர்கள் கூறினார்கள். இந்தச் செய்தி நபி(ஸல்) அவர்களை எட்டிய போது, ”ஸஅதின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரை விட அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் என்னை விடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால் தான் வெளிப்படையான மற்றும் மறைவான மானக்கேடான செயல்கள் அனைத்தையும் தடை செய்து விட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புபவர் அல்லாஹ்வை விட வேறெவரும் இல்லை. அதனால் தான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பி வைத்தான். அல்லாஹ்வை விட மிகவும் புகழை விரும்புபவர்கள் வேறெவருமில்லை. அதனால் தான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ர­லி), நூல்: புகாரி 6846, 7416

ஒரு மனிதனுக்கு ரோஷம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக உணர்த்துகின்றது. ஆனால் இந்த விஷயத்தில் ஆண்கள் ரோஷமிழந்து நிற்கின்றார்கள். அதனால் தான் மணம் முடிக்கப் போகும் தானே சரியாகப் பார்த்திராத நிலையில் ஒரு கேமராக்காரன் பார்த்து அவளது அழகை ரசிப்பதற்கு அனுமதிக்கின்றான். இதுபோன்று தனது வீட்டுப் பெண்கள் அனைவரையும் காட்சிப் பொருளாக ஆக்கி, அதை அடுத்தவர்களின் பார்வைகளுக்கு விருந்தாகப் படைக்கின்றான்.

இது இவனது ரோஷ உணர்வு முற்றிலும் உலர்ந்து போய் செத்து விட்டது என்பதையே காட்டுகின்றது. இதில் ஏகத்துவவாதி என்று கூறுவோர் கூட விதிவிலக்காக இல்லை. அவர்களது வீட்டிலும் திருமண உரை என்ற பெயரில் வீடியோ எடுக்கப்பட்டு, அதில் குடும்பப் பெண்களை எல்லாம் அரங்கேற்றும் அவலத்தை நடத்தி விடுகின்றார்கள்.

திருமணங்களில் வீடியோ கலாச்சாரம், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் இஸ்லாமிய சமூகத்தைத் தொற்றி நிற்கும் ஒரு கொடிய தொற்று நோயாகும். அந்நிய ஆடவர்களின் பார்வைகளில் நம்முடைய பெண்கள் விருந்தாகும் வீடியோ கலாச்சாரத்தையும் இதை அடிப்படையாகக் கொண்ட திருமணங்களையும் ஏகத்துவவாதிகள் புறக்கணிக்க வேண்டும். இத்தகைய கலாச்சார சீரழிவை விட்டும் நமது சமுதாயத்தைக் காக்க வேண்டும்.

போட்டோக்கள்

கல்யாண வீட்டில் வீடியோ எடுப்பது சமீபத்தில் வந்த புதிய கலாச்சாரம் என்றால் போட்டோ எடுத்தல் என்பது புரையோடிப் போன ஒரு பழக்கமாக நீண்ட காலமாக நமது சமுதாயத்தில் உள்ளது.
இங்கும் மணமகளை கேமராக்காரன் முதன்முத­ல் பார்த்து தனது கேமராவைப் போலவே கண் சிமிட்டிக் கொள்கின்றான். வீடியோ கேஸட்டாவது பிளேயரில் போட்டால் தான் படம் தெரியும். ஆனால் இந்த போட்டோக்களோ ஆல்பங்களில் சேகரிக்கப்பட்டு அவரவர் தங்கியிருக்கும் அறைகளிலுள்ள மேஜைகளில் பார்வைக்கு வைக்கப்படுகின்றது.

போட்டோக்கள் விஷயத்தில் பாஸ்போர்ட், அடையாள அட்டை,டிரைவிங் லைசன்ஸ் போன்ற அவசியத் தேவைகளுக்காகவும்,ஆதாரங்களுக்காகவும் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் இவையன்றி அநாவசியமாக போட்டோ எடுத்து அதைப் பாதுகாத்து வைப்பதன் மூலம் நாம் பாவமான காரியம் செய்தவர்களாகின்றோம். இத்தகைய உருவப்படங்கள் வீட்டில் இருக்கையில் மலக்குகள் வருவது கிடையாது.
நாயோ உருவப்படமோ உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதல்ஹா (ர­லி), நூல்: புகாரி 3322

ஆயிஷா (­லி) வீட்டுக்கு நபி (ஸல்) அவர்கள் வருகின்ற போது உருவப்படங்களைக் கண்டு உள்ளே பிரவேசிக்க மறுக்கின்றார்கள் என்பதை புகாரி 3226 ஹதீஸில் காண முடிகின்றது.

எனவே நமது வீட்டில் அருளைச் சுமந்து வரும் மலக்குகள் உள்ளே வருவதற்குத் தடையாக அமைகின்ற இந்த உருவப் படங்களை விட்டும் நாம் தவிர்ந்திருக்க வேண்டும்.

இது மட்டுமின்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி திருமண வீடியோவினால் ஏற்படும் அனைத்து தீமைகளும் திருமண போட்டோக்களாலும் ஏற்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இது போன்ற தீமைகளை விட்டும் நாம் விலகியிருப்போமாக!


முஃமின்களே! நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி),நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்-குர்ஆன் 24:31)


நமது நிருபர்
அப்துல் ஹமீது.PGDCA (துபாய்)
நன்றி, இப்படிக்கு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்

PFI அணிவகுப்பு - அலறும் அதிகாரிகள் - Parade Paper News






நமது நிருபர்

H . தமீம் நியாஸ் (துபாய்)

அனைத்து வாசகர்களுக்கும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரசின் ஒரு முக்கிய அறிவிப்பு.....


முத்துப்பேட்டை ஆகஸ்ட் 14 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றேண்டும் நிலவட்டுமாக. கடந்த சில நாட்களாகவே முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் என்ற இணையத்தளத்தில் செய்திகள் ஏதும் போடவில்லை. ஏனெனில் www.muthupettaiexpress.blogspot.com என்ற இனையதளம் இன்ஷா அல்லாஹ் தற்போது www.muthupettaiexpress.com என்ற சர்வருடன் இணைக்க அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இன்ஷா அல்லா விரைவில் முடிவுற்ற பின்பு தங்களின் பயன் பட்டிக்கு வரும் என்பதை இதன் மூலம் தெய்ரிவித்துக் கொள்கிறோம். இந்த விஷயத்தை தாமதம் படித்தியதற்கு சற்று அமைதிகாகவும்.

முத்துப்பேட்டையில் தொடரும் கொள்ளைகள். தி.மு.க. மாவட்ட து.செயலாளர்.எம்.எஸ்.கார்த்திக் மீது பாய்ந்தது பல வழக்குகள்!!!

முத்துப்பேட்டை ஆகஸ்ட் 12 : கடந்த ஆச்சியில் வெள்ள நிவாரணம் வழங்குவதிலும் குழப்பங்கள் நடப்பதாக தமிழகம் முழுவதும் பரவலாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. சாலை மறியல் போராட்டத்தை நடத்தி நாகை, திருவாரூர் மாவட்டத்தை ஸ்தம்பிக்க வைத்தனர் மக்கள். இதன் விளைவாக யானைக்கு சோழப்போரியை போட்ட கதையாக ருபாய் 5 ஆயிரம் நிவாரண தொகைக்கு பதிலாக 500 , 800 , 1200 என வழங்கப்பட்டது
குறிப்பாக முத்துப்பேட்டையில் வழங்கப்பட்ட 30 லட்சம் ரூபாய்யில் முக்கால் வாசிக்கு மேல் ஆண்ட தி.மு.க. கட்சியின் திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் எம்.எஸ்.கார்த்திக் கையாடல் செய்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செயல் அலுவலர் முனியசாமி, விஏஓ ஜெயசிம்மன், வருவாய் ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர் மன்னார்குடி ஆர்.டி.ஓ மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் புகர் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் எம்.எஸ். கார்த்திக் மீது பிரிவு 409 , 465 ,467 ,469 ,471 ,477 ஏ, 120 பி,மிறிசி, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டது. கையாடல் செய்தது, ஆள்மாறாட்டம், போலி கையொப்பம் போடப் பட்டது, என பல்வேறு குற்ற பிரிவுகளால் பொலிசார் எம்.எஸ்.கார்த்திக்கை கைது செய்ய தேடிவருகின்றனர். கூண்டுக்குள் சிக்கிய கிளியாய் தவித்து வருகிறார் கார்த்திக். அதன் பின்னணி பற்றி ஆராய்ந்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. திருவாரூர் மாவட்ட முன்னாள் ஊராச்சி தலைவரும், உறுப்பினருமான காம்ரேட் பிபி என அழைக்கப்படும் கீவளூர் பக்கிரிசாமீ காலமானார். அதற்கான மாவட்ட ஊராச்சி உறுப்பினர் இடைத் தேர்தல் 20 .07 .2010 ல் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டார். தி.மு.க. சார்பில் பொது குழு உறுப்பினர் நா.வு.சிவசாமி கோஷ்டியை சேர்ந்த ஆடலரசனுக்கு அமைத்க்கர் மதிவாணன் கோஷ்டியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் தம்பி கண்ணனுக்கு இடயே பலத்த போட்டி நிகழ்ந்தது. இறுதியில் மாவட்ட செயலர் பரிந்துரை இன் பேரில் கண்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வேட்பலரகப் போட்டியிட்டார் .
தேர்தலில் அழகிரி பார்முலா பயன்படுத்தப்பட்டது. சிறிமி வேட்பாளர் 40 ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று வெற்றி வேட்பாளர் ஆனார். தி.மு.க கோஷ்டியை சேர்ந்த பாண்டியன், எம்,எஸ்.கார்த்திக் பக்கிரிசாமியை எதிர்த்து மீண்டும் வாக்கு என்னும் படி கூறினார். இதனை ஏற்க மறுத்து தேர்தல் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான கி.தங்கவேலு அமைதி காத்தார்.
கார்த்திக் ASP . அபிசபுவிடம் தகறாரு செய்ய இருவரும் கட்டி புரண்டனர். இதனை கண்ட சக போளிசர்கள் இருவரயும் சமாதனப் படுத்த இவ்வளவுக்கும் காரணம் நீதானட என DRO ஐ தாக்க முயன்றனர்.உயருக்கு அஞ்சிய தேர்தல் அதிகாரியும், DROK , தங்க வேலுவையும் குளியலறையில் வைத்தே பூட்டினார் கார்த்திக். உய்ருக்கு அஞ்சி ஓடிய DRO தங்கவேலுவை 3 முறை மாவட்ட ஆசியர் சந்திர சேகரனுக்கு போன் செய்துள்ளார். நோ ரேச்போன்சே தி.மு.க. வினர் வெளியேறியவுடன் சக வருவாய் அலுவலர் DRO ஐ பத்திரமாக மீட்டு வந்தனர்.
இச்செயலை கண்டித்தும் DRO ஐ கொலை செய்ய முயன்ற கார்த்திக்கை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய என அரசு பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என பல்வேறு அமைப்புகள் ஆர்பாட்டங்களை நடத்தின. ஆனால் ஆளும் (ஆண்டுள்ள) தி.மு.க. அரசு கண்டு கொள்ளவே இல்லையாம் - வெள்ள நிவாரண மோசடி வலக்கை ஆச்சி மாறியதும் கச்சி மாறும் என்பது போல சரியான DRO , ச்ல்வராஜ் மூலம் வழக்கு போட்டு சரியான நேரத்தில் செக் வைத்து விட்டார் DRO பி.தங்கவேல். சுமார் 15 லட்சத்திற்கு பேரூர் மன்ற தலைவர் கார்த்திக் கையாடல் செய்துள்ளார். இதன் அடிப் படையில் அவர் மீது வழக்கு போடப் பட்டது என்றார். இது குறித்து தேர்தல் அதிகரி தங்கவேல் நான் அவரிடம் பேச மாட்டேன் அவர் என்னிடம் பேச மாட்டார். தேர்தலின் போது நடந்த சம்பவத்திற்கும் தொடர்பு கிடையாது மேலும் உங்களுக்கு தகவல் தேவை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் கேளுங்கள் என்றார்.
இது தொடர்பாக கார்த்திக்கை தொடர்பு கொண்டு கேட்ட போது பதில் ஒன்றும் கூற வில்லை. ஆனால் 26 .01 .2011 புதிய தமிழகம் சந்தித்த போது இது தொடர்பாக எதிர் கட்சியன் குற்ற சாட்டை மறுத்தார். நிவாரணம் கட்சி பாகுபாடின்றி வழங்கப்பட்டு வருகின்றது. ஆளும் கட்சி இனருகே நிவாரணம் வழங்கப் பட்டிருந்தால் மாவட்ட செயலர் பூண்டி கலைவாணன் ஊரான கோரடச் செரிக்கும் என் ஊரான முத்துப்பேட்டைக்கும் வழங்கப் பட்டிருக்கும் . ஆனால் இன்று வரை நிவாரணம் வழங்கப் படவில்லை நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிக்கும் தில்லு முள்ளுக்கும் அரசு அதிகரிகலே காரணம் இதற்கு ஆளும் தி.மு.க. வினரை குறை சொல்வது தவறு. என்றார்.

நன்றி.

எடையூர், பாலா

புதிய தமிழகம். 2011

மவுத் அறிவிப்பு:"ஹாஜா சர்புதின்"

முத்துப்பேட்டை அகஸ்ட் 08 : தெற்குத் தெரு பேட்டை ரோடு மர்ஹும் M.K. சுல்தான் முஹிதீன், மர்ஹும் M.K. காதர் முஹைதீன், மர்ஹும் M.K. ஷேக் நூர்தின் இவர்களின் தம்பி மகனும், மர்ஹும் M. காதர் உசேன் அவர்களின் தம்பியும், M.K.S பரக்கதலி அவர்களின் மைத்துனரும் M. முஹம்மத் சாதிக் ப்ரோதேர்ஸ் அவர்களின் மச்சானும், M.K. முஹம்மத் ராவுத்தர் அவர்களின் மகனுமஹிய செல்ல வாப்பா என்ற "ஹாஜா சர்புதின்" அவர்கள், நேற்று முத்தினம் இரவு 7 மணியளவில் அஜ்மான் துபாயில் மவுத்தாஹி விட்டார்கள், (இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹீ ராஜிவூன்)
அன்னாரின் ஜனாசா துபாயில் நல்லடக்கம் செய்யப்ப் படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்:

பாரி ஹாஜி M. முஹம்மத் ஷேக்.

உலகில் மிக பயங்கரமான "Autorun" வைரசை தடுக்கும் மிக இலகுவான முறை

ஆகஸ்ட் 07 : உலகில் மிக பிரசித்திபெற்ற வைரஸ்களில் ஒன்று Autorun.inf ஆகும். இவ்வகை வைரஸ்கள் மிகவும் பயங்கரமானதும் கணணி பாவணையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இப்போது பார்ப்போம் எப்படி Autorun வைரஸ் ஐ தடுப்பது என்று.

01. Run command ஐ (Ctrl + R) திறந்து gpedit.msc என டைப் செய்து ok பட்டனை அழுத்துங்கள்.

02. பின் ஒரு pop-up windows காட்சித்தரும் அதில் Administrative Templates கீழ் System என்பதை தெரிவு செய்யுங்கள்

03. அங்கு Turn Off Autoplay என்பதை டபல் கிலிக் (double click)செய்யுங்கள்.

04. பிறகு வரும் pop-up windows வில் Turnoff Autoplay என்பதற்கு கீழுள்ள Enabled என்பதையும் Turnoff Autoplay on இல் All drives தெரிவு செய்யுங்கள்.

05. இப்பொழுது நீங்கள் பென் ட்ரைவ்வை திறக்கும் வரை அது திறக்காது.

நன்றி-லங்காசிறி


கீழே கொடுத்திருக்கும் வார்த்தைகள் கணினியில் நாம் சில இடங்களில் உபயோகிக்கும் வார்த்தைகள் அதற்கான முழு விரிவாக்கமும் உள்ளது.

ADSL - Asymmetric Digital Subscriber Line
AGP - Accelerated Graphics Port
ALU - Arithmetic Logic Unit
AMD - Advanced Micro Devices
ASCII - American Standard Code for Information Interchange
ASIC - Application Specific Integrated Circuit
ASPI - Advanced SCSI Programming Interface
AT - Advanced Technology
ATX - Advanced Technology Extended
BIOS - Basic Input Output System
BNC - Barrel Nut Connector
CAS - Column Address Signal
CD - Compact Disk
CDR - Compact Disk Recorder
CDRW - Compact Disk Re-Writer
CD-ROM - Compact Disk - Read Only Memory
CFM - Cubic Feet per Minute
CMOS - Complementary Metal Oxide Semiconductor
CPU - Central Processing Unit
DDR - Double Data Rate
DDR-SDRAM - Double Data Rate - Synchronous Dynamic Random Access Memory
DIMM - Dual Inline Memory Module
DRAM - Dynamic Random Access Memory
DPI - Dots Per Inch
DVD - Digital Versatile Disc
DVD-RAM - Digital Versatile Disk - Random Access Memory
ECC - Error Correction Code
EDO - Extended Data Out
EEPROM - Electrically Erasable Programmable Read-Only Memory
EPROM - Erasable Programmable Read-Only Memory
FC-PGA - Flip Chip Pin Grid Array
FDC - Floppy Disk Controller
FDD - Floppy Disk Drive
FPS - Frame Per Second
FPU - Floating Point Unit
FSAA - Full Screen Anti-Aliasing
FSB - Front Side Bus
GB - Gigabytes
GBps - Gigabytes per second or Gigabits per second
GDI - Graphical Device Interface
GHz - GigaHertz
HDD - Hard Disk Drive
HSF - Heatsink-Fan
IC - Integrated Circuit
IDE - Integrated Drive Electronics
IRQ - Interrupt Request
LAN - Local Are Network
LCD - Liquid Crystal Display
LDT - Lightning Data Transport
LED - Light Emitting Diode
MAC - Media Access Control
MB - MotherBoard or Megabyte
MBps - Megabytes Per Second
Mbps - Megabits Per Second or Megabits Per Second
MHz - MegaHertz
MIPS - Million Instructions Per Second
MMX - Multi-Media Extensions
NAS - Network Attached Storage
NAT - Network Address Translation
NIC - Network Interface Card
OC - Overclock (Over Clock)
PC - Personal Computer
PCB - Printed Circuit Board
PCI - Peripheral Component Interconnect
PDA - Personal Digital Assistant
PCMCIA - Peripheral Component Microchannel Interconnect Architecture
PGA - Professional Graphics Array
PLD - Programmable Logic Device
PM - Private Message / Private Messaging
PnP - Plug 'n Play
POST - Power On Self Test
PPPoA - Point-to-Point Protocol over ATM
PPPoE - Point-to-Point Protocol over Ethernet
PQI - PQI Corporation
PSU - Power Supply Unit
RAID - Redundant Array of Inexpensive Disks
RAM - Random Access Memory
RAMDAC - Random Access Memory Digital Analog Convertor
RDRAM - Rambus Dynamic Random Access Memory
ROM - Read Only Memory
RPM - Revolutions Per Minute
SASID - Self-scanned Amorphous Silicon Integrated Display
SCA - SCSI Configured Automatically
SCSI - Small Computer System Interface
SDRAM - Synchronous Dynamic Random Access Memory
SECC - Single Edge Contact Connector
SODIMM - Small Outline Dual Inline Memory Module
SPARC - Scalable Processor ArChitecture
SOHO - Small Office Home Office
SRAM - Static Random Access Memory
SSE - Streaming SIMD Extensions
SVGA - Super Video Graphics Array
TB - Terabytes
TBps - Terabytes per second
TEC - Thermoelectric Cooler
UART - Universal Asynchronous Receiver/Transmitter
USB - Universal Serial Bus
UTP - Unshieled Twisted Pair
VCD - Video CD
VPN - Virtual Private Network
WAN - Wide Area Network
XGA - Extended Graphics Array
XMS - Extended Memory Specification

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)