முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை SDPI - யின் வளர்ச்சிநிதி வசூல் இயக்கம் பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை


முத்துப்பேட்டை, பிப்ரவரி 07 : சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா SDPI ஆல விருச்சமாய் வேரூன்றிட நிதி தாரீர் என்று வளர்ச்சி நிதி வசூல் இயக்கம் என்று பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை ஒரு மாதம் நடைபெற உள்ளது எனவே இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு திருவாரூர் மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், SDPI கட்சி ஆல விருச்சமாய் வேரூன்றிட அதிகமான நிதிகள் தேவைப்படுகிறது என்றும் எனவே இதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதில் தேச நலன், சமுதாய முன்னேற்றம், நமது சந்ததிகளின் எதிர்காலம், அநீதிக் கெதிரான போராட்டங்கள், உரிமைக்குரல், மக்கள் சேவைப்பணிகள், தேர்தல் கலங்கள் ஆகிய அனைத்தும் கொண்டு ஓர் களமாக விளங்கிட உதவிட வாரீர் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தொடர்புக்கு: 98654 27777 , SDPI மாவட்ட பொருளாளர். நெய்னா முஹம்மது: 96583 37915 , SDPI மாவட்ட செயலாளர். அப்துல் அஜீஸ்: 99427 05536

நமது நிருபர்

K .எர்சாத் அஹமது, TR . அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டையில் நடைபெற்ற வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்...


முத்துப்பேட்டை, பிப்ரவரி 07 : முத்துப்பேட்டையில் நேற்று அனைத்து கட்சி சார்பில் வீரவணக்கநாள் என்ற மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தினார்கள். இந்த பொது கூட்டத்தில் ஏராளமான பேச்சாளர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு இக்கூட்டத்தை சிறப்பித்தனர். மேலும் DMK மாவட்ட துணைச் செயலாளர் MS . கார்த்திக், தலைமை பேச்சாளர் பெர்ணார்ட், கரூர் சேகர், தஞ்சை மன்னர்மன்னன் ஒன்றிய செயலாளர் சிவ சாமி ஆகியோர் கலந்து கொண்டு அவரவர் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from: www.muthupettaiepxress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

முத்துப்பேட்டையில் குடி போதையால் நாயை கட்டிபிடித்து தூங்கிய இளைஞர்...



முத்துப்பேட்டை, பிப்ரவரி 07: முத்துப்பேட்டையில் உள்ள மிகவும் பிரபலமான காளியம்மன் கோயில் வாசலில் இன்று மதியம் கடுமையான குடிபோதையில் ஒரு இளைஞர் பல மணிநேரம் ஒரு நாயுடன் தூங்கினார். இதனை கோயிலுக்கு வந்த பக்கதர்கள் மற்றும் பொது மக்கள் வேடிக்கையுடன் அந்த விசித்திர காட்சியை கூட்டம் கூட்டமாக பார்த்து சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் அந்த நாயும், இளைஞரும் எழுந்து போகாததால் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பும் அதிகமான கூட்டம் கூடின. பின்பு அங்கு வந்த சில இளைஞர்கள் குச்சியை வைத்து இவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்களா அல்லது செத்து விட்டார்களா என்று குத்தி பார்த்தனர். அப்போது நாய் எழுந்து ஓடியது. அதன் பின்பு அந்த இளைஞன் போதையில் அந்த நாயை தேடிய காட்சி மக்கள் மத்தியில் பெரும் காமடியை ஏற்படுத்தியது. பின்பு இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் அந்த வாலிபரை விசாரித்ததில் அந்த நபருக்கு வாய்பேச முடியாது என்றும், அவருக்கு வயது 30 ஐ தாண்டி விட்டதாகவும் அப்போது தெரியவந்தது.மேலும் இவர் பழைய பேருந்து நிலைய வட்டாரத்தில் லோடு ரிக்க்ஷா ஒட்டி வந்தவர் என்றும், அப்போது அப்பகுதி மக்களிடம் எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்றும் அதற்கான தொகையை தான் தருவதாகவும் அசைவுகளால் கூறிவந்துள்ளார். இந்த மன உளைச்சளின் காரணத்தால் தான் இவர் எந்நேரமும் போதையில் இருந்து வருகிறார் என்று பொது மக்கள் தெரிவித்தனர்.
source from; www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

முத்துப்பேட்டை தர்ஹாவில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்ட மீலாது நபி விழா..




முத்துப்பேட்டை, பிப்ரவரி 07 : முத்துப்பேட்டை அடுத்த ஜம்போனோடையில் உள்ள தர்ஹாவில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர். இந்த விழா தர்ஹா தலைமை நிர்வாகி ஜனாப். S .S . பாக்கர் அலி சாஹிப் தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
source from www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை,ரிப்போர்ட்டர் இல்யாஸ்

முத்துப்பேட்டையில் சிலிண்டர் வாங்க வந்த பொது மக்கள் தத்தளிப்பு.!!!









முத்துப்பேட்டை , பிப்ரவரி 04: முத்துப்பேட்டையில் கடந்த ஒரு மாதமாக சிலிண்டர் விநியோகம் இல்லாமல் பொது மக்கள் மிகவும் சிரமத்தில் இருந்து வந்தனர். அதன் அடிப்படையில் இன்று "HP GAS " நிறுவனத்தினர் மரைக்காயர் தெருவில் உள்ள குத்பா பள்ளி வாசல் திடலில் வந்து, முன் பதிவு செய்த கூப்பனுக்கு இன்று விநியோகம் செய்தனர். இதனால் பொது மக்கள் கூட்டம் அலைமோதியதால் பொலிசாரின் மேற்பார்வையில் விநியோகம் செய்யப்பட்டன.இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர், அனால் HP GAS நிறுவனத்தினர் வெறும் 280 சிலிண்டர் மட்டும் எடுத்து வந்தனர். இதனால் அதிக நேரம் வரிசையில் காத்து கிடந்த பொது மக்கள் வெறும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் HP GAS நிறுவனத்தினரிடம் கேட்டதற்கு இன்னும் 2 நாட்களுக்குள் மீண்டும் சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என்றும், அப்போது அவர் தெரிவித்தார். பொதுமக்கள் சிலிண்டரை பெறுவதற்கு தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யும் முறைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

நமது நிருபர்

TR .அப்துல் ரஹ்மான்,

மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி என்ன?


பிப்ரவரி 03 : உங்கள் நண்பரோ அல்லது உறவினருடனோ போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு வந்தால். அப்போது நீங்கள் என்ன முதலுதவி செய்ய வேண்டும்?
1.நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்.
2.ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்
3.நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும்.
4.நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்
5.இந்த சிகிச்சையுடன் சிறந்த மருத்துவரின் சிகிச்சைக்கு நோயாளியை உட்படுத்தல் வேண்டும்

மாரடைப்பிற்கு உரிய முறையில் சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தவிர்கலாம்.
என்னென்ன சிகிச்சைகள் கொடுக்கப்பட வேண்டும்?

1.மாரடைப்பு ஏற்பட்டால் உடனடி மருத்துவ கவனிப்பும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் அவசியம்.
2.மாரடைப்பு ஏற்படும் ஆரம்பகால நிமிடங்களும்,நேரங்களும் இக்கட்டானவை. முதலில் கரோனரி தமனி எனப்படும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள கட்டியைக் கரைக்கும் மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.
3.இதயத்துடிப்புகள் கண்காணிக்கப்பட்டு இயல்புக்கு மாறான துடிப்புகளுக்குரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. வலி நீக்கும் மருந்துகளை நோயளிக்குக் கொடுத்து ஓய்வெடுக்க செய்ய வேண்டும்.
4.இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்பட்சத்தில்,அதனைக்குறைக்கத் தகுந்த மருந்துகள் அளிக்கப்படுதல் வேண்டும்.
5.நோயாளியின் வயது,மாரடைப்பின் தாக்கம்,இதயம் பாதிக்கப்பட்டுள்ள அளவு மற்றும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மாறுபடும்.
பல நேரங்களில் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பினை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாஸ்டி, பலூன்களைக்கொண்டு இரத்தக்குழாய்களை விரிவடையச்செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகளாக இருக்கலாம்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

அப்துல் ஹமீது (துபாய்)

மவுத்து அறிவிப்பு " சே.கு.மு.அப்துல் ரஜாக் "


முத்துப்பேட்டை, பிப்ரவரி 03: SPKM தோட்ட வளாகம் மர்ஹும் சே.கு.மு.முஹம்மது ஸாலிஹ் அவர்களின் மகனும்,சே.கு.மு.சா.அப்துல் வஹாப் அவர்களின் சகோதரரும், A .ஜெகபர் அலி, A .தாஜுதீன், A .சகாப்தீன் ஆகோயோரின் தகப்பனாரும், MH . நெய்னா முஹம்மது, PKP . காதர் உசேன், க.வ.சே.நே.அப்துல் சமது ஆகியோரின் மாமனாரும், மர்ஹும் முஹைதீன் ஷேக் அலி, மர்ஹும் அஹமது ஜலாலுதீன்,KM.ஜலாலுதீன், KM.ஷேக் தாவூது, KM.தாஜுதீன், மர்ஹும் KM.அப்துல் லத்தீப் ஆகியோரின் மச்சானுமாகிய " சே.கு.மு.அப்துல் ரஜாக் " அவர்கள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று காலை 11.30 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
source from. www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்
சே.கு.மு.சா.அப்துல் வஹாப்

நமது நிருபர்
K.M. காதர் கனி (பாடகர்)

ஈரானில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேற்றம்


டெஹ்ரான்,பிப்ரவரி 03 : ஈரான் நாட்டில் மருத்துவக்கல்வி பயின்று வரும் நான்கு இந்திய மாணவர்களை அந்நாட்டு அரசு வெளியேற்றியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் 4 முதல் 10 ஆண்டு காலமாக மருத்துவம் மற்றும் பல்வேறு மேற்படிப்புகளை ஈரான் அரசு வழங்கும் உதவி மூலம் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தேதிகளுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த ரஷீன் என்ற மாணவர் ஒருவர் கடந்தாண்டு ஜூலை மாதம் 21ம் தேதி தன்னுடைய மாநிலத்திற்கு திரும்‌பி வந்துள்ளார். அதே போல கான்பூர், ஜம்முகாஷ்மீர் மாநிலம் உட்பட பல்வேறு மாநிலத்தை சேர்‌ந்த மாணவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியாவிலிருந்து சென்று மாணவர்கள் அதிகம் படிக்கும் நாடுகளின் வரிசையி்ல் ஈரான் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதற்கு முன்பு ஈரான் மாணவர்கள், இந்தியாவில் உள்ள உள்ளூர் அமைப்புகளின் தூண்டுதல் காரணமாக வெளிநாட்டு கொள்கைகளை எதிர்‌த்து போராடுவதாக உளவுத்துறை தகவல் அளித்ததன் அடிப்படையில் 2009ம் ஆண்டில் 32 மாணவர்களை இந்தியா வெளியேற்றியது. இதற்கு இந்திய தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று ஈரான் தரப்பில் கூறப்பட்டது. மேலும், ஈரான் மற்றும் இந்தியா இடையே மாணவர்களை வெளி‌‌யேற்றும் போராட்டத்திற்கும் மற்ற அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்‌கும் சம்பந்தமில்லை என்று இரு தரப்பு அரசு தெரிவித்துள்ளது.

முத்துப்பேட்டை அடுத்து உதய மாத்தாண்டபுரத்தின் பறவைகள் சரணாலயம்.







முத்துப்பேட்டை, ஜனவரி 31: முத்துப்பேட்டை அடுத்து உதயமார்த்தாண்டபுரம் (நாட்சிகுலத்தில்)பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. டிசம்பர் 1998 - ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சரனாலயம் பல்வகை நீர்வகை இடம் பெயரும் நீர்பரவைகலான நாமக்கோழி, சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை, வக்கா, பெரிய வெள்ளை கொக்கு போன்ற வைகளின் இருப்பிடமாக விளங்குகிறது. இச்சரனாலயத்தின் மொத்த பரப்பளவு 46 ஹெக்டேர் ஆகும். இச்சரனாலயம் இயற்கையிலேயே நீர்பாசனத்திர்க்காக பயன்படுத்தப்படும் ஏரியாகும். இப்பகுதிக்கு தன்னேரானது மேட்டூர் நீர் தேக்கத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் முதலும், வடகிழக்கு பருவகாற்றின் மூலம் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் முடியவும் வந்தடைகிறது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் முடிய இப்பகுதி வறண்ட நிலையில் காணப்படுகிறது. அருகிலுள்ள பெரூரான முத்துப்பேட்டை இச்சரனாலயத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. இச்சரனாலயத்திற்கு திருவாரூரிலிருந்து 65 கி.மீ மற்றும் தஞ்சாவூரிலிருந்து 68 கி.மீ. தூரத்தில் சாலை வழியாக வந்தடையலாம். அருகிலுள்ள முத்துப்பேட்டை ரயில் நிலையம் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. இச்சரனாலயத்திற்கு பறவைகள் செப்டம்பர் முதல் வரத் தொடங்குகின்றன. பறைவைகளின் எண்ணிக்கை அதிக பட்சமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுமார் 10,000 க்கு மேல் காணப்படுகிறது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நத்தை கொத்தி நாரை இனங்கள் அதிகமாக காணப்படுவதே குறிப்பிடத்தக்க அம்சமாகும். இச்சரணாலயத்தில் அல்லிவகை, பெரம்புவகை நீரித்தாவரங்கள் போன்ற பல்வேறு வகையான தாவர வகைகள் உள்ளன. இச்சரணாலயத்தில் உள்ள மிதக்கும் நீர்த்தவரங்களின் மீது வால் அள்ளிக் குருவி போன்ற பறவை இனங்கள் இனப்பெருக்கம் செய்து வருகின்றன. இவற்றை எல்லாம் பார்வை இட பார்வையாளர்களுக்கு இங்கு இரண்டு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், TR .அப்துல் ரஹ்மான்

தனியார் மையமாகும் தமிழக அரசு பேருந்துகள்...!!!


சென்னை,ஜனவரி 30 : தமிழகம் முழுவதும் பேருந்து போக்கு வரத்து இந்திய சுதந்திரம் அடைந்த பிறகும் தனியார் வசமே இருந்தது. தி.மு.க. ஆட்சி காலத்தில் பேருந்து போக்கு வரத்து அரசுடைமையாக்கப்பட்டு தனியார் முதலாளிகளை ஓயா வைத்தது.ஆனால், போக்குவரத்தின் அத்தியாவாசியப் பொருட்களின் விலையேற்றத்தாலும், உலக சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்புக் குரைவாலும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை சில்லரைக்கசுகள் அளவிலேயே பேருந்து பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. ஆனால், போக்குவரத்துக் கழகம் நிறைந்த லாபம் ஈட்டும் துறையாக மாறியதும் அரசியல் அங்கே சதிராட்டம் போட, அதிகாரிகளும் கை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டதோடு கூட்டுக்கொல்லைகலையும் நிகழ்த்தினர்.எல்லாம் போக தற்போது முதல்வராக பதவி ஏற்ற ஜெயலலிதா மக்கள் எப்படியிருந்தாலும் பயனித்துதானே ஆகா வேண்டும் என்ற அசைக்க முடியாத எண்ணத்தில் பேருந்து பயணக்கட்டணத்தை எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்த்தினார், காரணம் அரசுக்கு நட்டமாம். இதையெல்லாம் விட தொடர்ந்து அரசுக்கு நட்டம் ஏற்படுவதால், அரசுப் பேருந்து வழித்தடங்களில் 45 சதவிகிதத்தை தனியாரிடம் கொடுக்கலாமா என்று தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்த ரகசிய ஆலோசனை விவரத்தை தி.மு.க.வின் தொழிற்சங்கமான 'தொழிலாளர் முன்னேற்றக் கழகப் பேரவை' தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளின் தகவல் பலகைகளில் எழுதி வெளி உலகிற்கு சொல்லியது. சென்னை போக்குவரத்து கழகத்தில் 3 ,140 பேருந்துகள், மாவட்டங்களில் உள்ள நகரப் பேருந்துகள் 6 ,595 பேருந்துகள், மாவட்டப் பேருந்துகள் 8 ,007 , விரைவுபேருந்து மாநிலத்திற்குள் 545, மாநிலத்திற்கு வெளியே 359 , மலை சர்விஸ் 521 ஆகா மொத்தம் 19 ,167 அரசுப் பேருந்து வழித்தடங்கள் உள்ளன. இதில் 45 சதவீதம் அரசு பேருந்து வழித்தடங்களை, அதாவது ௯,௫௦௦ அரசுப் பேருந்து வழித்தடங்களை தனியார் வசம் கொடுக்கப்படும். இதில் 6 ,000 வழித்தடங்கள் அரசுக்கு லாபம் தரும் வழித்தடங்களும் அடங்கும். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் செயலாளர் நடராசன் உண்மைதான் 45 சதவீத அரசுப் பேருந்து வழித்தடங்களை தனியாரிடம் கொடுக்க முடிவு செய்துள்ளது என்றார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் அறிய போக்குவரத்துத்துறை செயலர் பிரபாகரன்ராவ் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டதற்கு தலைவர் மீட்டிங்கில் இருக்கிறார், தலைவர் செயலரை பார்க்கபோயிருக்கிறார், என்று அவருடைய உதவியாளர் பதிலுரைத்தனர். ஆனால் அவர் அலுவலகத்தில் தான் இருந்தார், கடைசிவரை செயலருடன் பேச இணைப்புக் கொடுக்க வில்லை. ஆகா, அரசுப் பேருந்து தனியார் வசம் என்னும் விவகாரம் ஆலோசனை அளவிலேயே தற்போது இருக்கிறது என்பது உறுதியாகிறது. இந்த ஆலோசனையே முடிவாக உறுதியாகுமானால் தமிழக மக்கள் போக்குவரத்துச் சங்க தொழிலார்கள் தொடர்ந்து போராட்டத்தில் இறங்குவது தவிர்க்க முடியாததாகி விடும்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்.

ஈரான் அணுசக்தி நிலையங்களை அழிக்க அமெரிக்காவிற்கு சக்தி இல்லை...


வாஷிங்டன்,ஜனவரி 29: பூமிக்கு அடியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குவதற்கான மிக சக்தி வாய்ந்த வெடிக்குண்டை தயாரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.தற்போது அமெரிக்கா ராணுவத்தின் கைவசமிருக்கும் பங்கர் பஸ்டர் வெடிக்குண்டால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிக்க முடியாது. இதனை புரிந்துக்கொண்ட அமெரிக்கா புதிய வெடிக்குண்டை தயாரிக்க திட்டம் வகுத்துள்ளது. இதனை குறிப்பிட்டு பெண்டகன் அமெரிக்க காங்கிரஸிற்கு ரகசிய அறிக்கையை இம்மாதம் அளித்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத பாதுகாப்பு துறை அதிகாரியை மேற்கோள்காட்டி வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் கூறுகிறது.பூமிக்கு அடியில் உள்ள பாறைகள் மற்றும் காங்க்ரீட் சுவர்கள் ஆகியவற்றை துளைத்து உள்ளே செல்லும் சக்திமிகுந்த 20 வெடிக்குண்டுகளை தயாரிக்க பெண்டகன் இதுவரை 33 கோடி டாலர் தொகையை செலவிட்டுள்ளதாக பத்திரிகை கூறுகிறது. போயிங் நிறுவனம்தான் இக்குண்டுகளை தயாரித்து வருகிறது.பெரும் பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிக்க பங்கர் பஸ்டர் குண்டுகளுக்கு வலு இல்லை என்பதை கடந்த வியாழக்கிழமை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா ஒப்புக்கொண்டார்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EKA .முனவ்வர் கான், அபு மர்வா, ASNS .அப்துல் பாரி

அபுதாபியில் வேலைவாய்ப்பு விழா: வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு...


அபுதாபி,ஜனவரி 29 : தனியார் துறையில் கூடுதல் உள்நாட்டினரை ஈர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அபுதாபியில் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு விழா 3 நாட்கள் நடைபெற இருக்கிறது.ஜனவரி 31, பிப்ரவரி 1, 2 தேதிகளில் அபுதாபி நேசனல் எக்ஸிபிஷன் சென்டரில் ‘தவ்தீஃப்’ என்ற பெயரில் இவ்விழா நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நிதி மற்றும் வங்கியல் துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் இவ்விழாவில் பல்வேறு வேலைவாய்ப்புக்கான நபர்களை தேர்வுச் செய்கின்றன.உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்பை நோக்கமாக கொண்டு இவ்வேலை வாய்ப்பு விழா நடத்தப்பட்டாலும் மூன்றாவது நாள்(பிப்ரவரி-2) அனைத்து வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு விழாவில் பங்கேற்கும் வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் வேலைத் தேடுவோர் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். ஜனவரி 31-ஆம் தேதி காலை 11 முதல் மாலை 7 மணி வரை உள்நாட்டினருக்கு(யு.ஏ.இ) மட்டுமே அனுமதி.பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 முதல் மதியம் 2 மணி வரை உள்நாட்டு(யு.ஏ.இ) பெண்களுக்கு மட்டும்.மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரை உள்நாட்டு(யு.ஏ.இ) ஆண்களுக்கு மட்டும்.பிப்ரவரி 2-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.இந்த வேலை வாய்ப்பு விழாவில் பங்கேற்க விரும்புவர்கள் www.tawdheef.ae என்ற இணையதளத்திற்கு சென்று முன்னரே பதிவுச் செய்துக்கொள்ளவும்.இந்த வேலைவாய்ப்பு விழாவில் பங்கேற்கும் முக்கிய நிறுவனங்கள்: அபுதாபி ஏர்போர்ட்ஸ் கம்பெனி, அபுதாபி கமர்ஸியல் வங்கி, அபுதாபி நேசனல் இன்சூரன்ஸ் கம்பெனி, அபுதாபி நேசனல் ஹோட்டல்ஸ், அபுதாபி போலீஸ், அபுதாபி இன்வெஸ்ட்மெண்ட் அதாரிட்டி, அபுதாபி இஸ்லாமிக் வங்கி, அபுதாபி டூரிஸம் அதாரிட்டி, கமர்ஸியல் பேங்க் ஆஃப் இண்டர்நேசனல், டால்பின் எனர்ஜி, எமிரேட்ஸ் நியூக்ளியர் எனர்ஜி கார்ப்பரேசன், எமிரேட்ஸ் அலுமினியம், எமிரேட்ஸ் ட்ரைவிங் கம்பெனி, இத்திஹாத்(Ethihad), எடிசலாத்(Etisalat),ஃபர்ஸ்ட் கல்ஃப் வங்கி(Firstgulf bank), ஜெனரல் ஹோல்டிங் கார்ப்பரேசன், HSBC வங்கி, முபாதலா, நேசனல் பேங்க் ஆஃப் அபுதாபி, பெட்ரோஃபாக் எமிரேட்ஸ், பிரசிடன்ஸியல் கார்ட், யு.ஏ.இ எக்ஸ்சேஞ்ச், யாஸ் மரினா சர்க்யூட் ஆகியன இவ் வேலைவாய்ப்பு விழாவில் கலந்துக் கொள்வதாக இதுவரை அறிவித்துள்ளன. மேலும் கூடுதல் நிறுவனங்கள் இவ்விழாவில் பங்கேற்கும்.நிறுவனங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து வேலை தொடர்பாக விசாரிக்கலாம். பயோடேட்டா தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படும். வேலைவாய்ப்பு விழாவையொட்டி பல்வேறு நிறுவனங்களின் மனித வளத்துறைகள் நடத்தும் செமினார்களில் இலவசமாக கலந்துக் கொள்ளலாம்.உள்நாட்டினருக்கு(யு.ஏ.இ) மட்டும் தனியாக இண்டர்வியூ அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகமான உள்நாட்டினருக்கு வேலை வழங்குவோம் என பிரபல வங்கிகள் அறிவித்துள்ளன. எமிரேட்ஸ் என்.பி.டி(ENBD) இவ்வாண்டு குறைந்தது 250 உள்நாட்டினரை பணியில் அமர்த்தும். கடந்த ஆண்டு 462 பேரை நியமித்தது.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

அபு மர்வா, J .ஷேக் பரீத் (துபாய்),

முத்துப்பேட்டை பேரூராட்சியின் அதிரடியான இறுதி முடிவுகள்,செயல் அலுவலர் தகவல்.


முத்துப்பேட்டை, ஜனவரி 28 : முத்துப்பேட்டை பேரூராட்சியின் அதிரடியான சில இறுதி முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. அவை பின் வருமாறு.
(1) முத்துப்பேட்டை பேரூராட்சி 1 முதல் 18 வார்டுகளில் உள்ள வீட்டு குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதை தவிர்க்கவும், தவறும் பட்சத்தில் காவல்துறை அலுவலர்கள் முன்னிலையில் வீடுகளில் மின் மோட்டாரை பறிமுதல் செய்வதுடன் அதற்கான செலவு தொகைகள் அனைத்தும் அந்தந்த வீட்டு உரிமையாளரிடம் வசூலிக்காப்படும். மேலும் கோர்ட் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
(2) சாலைகளில் திரியும் ஆடு, மாடுகளை அந்தந்த உரிமையாளர்கள் தங்களது வீடுகளில் கட்டிவைத்துக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் ஆடு, மாடுகளை காவல்துறை உதவியுடன் பிடித்து அடுத்த ஊர்களில் கொண்டு போய் விடப்படும்.
(3) பன்றியை வைத்துக்கொள்பவர் பன்றியினை அந்தந்த உரிமையாளர்கள் அதற்கான பாதுகாப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது முத்துப்பேட்டையில் இல்லாமல் வேறு பகுதிகளில் கொண்டு போய்விட வேண்டும். தவறும் பட்சத்தில் பன்றிகளை பிடித்து பேரூராட்சி மூலம் அப்புறப்படுத்தப்படும்.
(4) முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஆக்ரமனங்கள் அனைத்தும் எடுத்துவிட வேண்டும். தவறும் பட்சத்தில் ஆக்ரமனங்கள் எடுத்து அதற்க்கான செலவுத்தொகையையும், தங்களிடம் வசூலிக்கப்படும். (குடிநீர் மின்மோட்டார்கள் எடுப்பது தவிர மற்றவர்களுக்கு கால அவகாசம் இல்லை) என்பதை இதன் மூலம் இறுதியாக தெரிவிக்கப்படுகிறது.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EKA .முனவ்வர் கான், அபு மர்வா, TR .அப்துல் ரஹ்மான்,

முத்துப்பேட்டை TNTJ (ஆசாத் நகர் கிளை) சார்பில் மாபெரும் இரத்ததான முகாம்...







முத்துப்பேட்டை, ஜனவரி 26 : 63 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் காளி இரத்த வங்கி இணைத்து மாபெரும் இரத்த தான முகாமை பழைய வின்னர்ஸ் ஸ்கூல் கட்டிடத்தில் இன்று காலை நடத்தினார்கள்.இதற்க்கு TNTJ திருவாரூர் மாவட்ட செயலாளர் ஜனாப். M .I . இஸ்மத் பாட்சா அவர்கள் தலைமை வகித்தார். பின்பு Dr. சண்முக சுந்தரம் (காளி இரத்த வங்கி தஞ்சாவூர்), Dr . இளங்கோ MBBS .,MRSH ., (Lion) FCP , Dr . முருகேசன் MS . FAC ., Dr . மீரா உசேன் MD ., Dr .கணேஷ். MBBS ., Dr . அபுதாஹிர்.MBBS ., வழக்கறிஞர் G .உமர் கத்தாப்.MA .BL. ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.இந்த இரத்த தான முகாமில் சுமார் 40 பேர் கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை கொடுத்தனர். இந்த இரத்ததானம் முகாம் முத்துப்பேட்டை II (ஆசாத் நகர் கிளை) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

TR .அப்துல் ரஹ்மான், K .எர்சாத் அஹமது,

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கத்தின் சேவைகளும் மக்களின் வரவேற்ப்பும்..


முத்துப்பேட்டை, ஜனவரி 26 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டி மற்றும் முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமிர்ற்கு முத்துப்பேட்டை மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பு வந்துள்ளது.நடந்து முடிந்த இலவச மருத்துவ முகாமின் சோதிக்கப்பட்ட மருத்துவத்தின் ரிசல்ட்டை இன்று வெளியிடப்பட்டது. அதில் சுமார் 250 நபர்களுக்கு தங்களுடைய பெயர் மற்றும் வீட்டு முகவரி மற்றும் இரத்த குறியிடு ஆகியவைகளை அடையாள அட்டை வடிவில் வடிவமைக்கப்பட்டு அவற்றை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அதில் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் A .ஹாஜ நஜுபுதீன், சோழநாடு க.மு. நெய்னார் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இது போன்ற நல்ல சேவைகளை செய்து வரும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டி மென் மேலும் வளர இறைவனை துவா செய்கிறோம் என்று முத்துப்பேட்டை மக்கள் கூறினார்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

TR .அப்துல் ரஹ்மான், K .எர்சாத் அஹமது

முத்துப்பேட்டை ஆ.நெ.பள்ளியில் கொண்டாடப்பட்ட குடியரசு தின விழா...









முத்துப்பேட்டை,ஜனவரி 26 : முத்துப்பேட்டையில் உள்ள பிரபலாமான பள்ளி கூடம் ஒன்றான நமதூர் ஆ.நெ. தொடக்கப்பள்ளி தான் என்று எல்லோராலும் கூராப்படும். ஏனெனில் இந்த பள்ளி கூடத்தில் பயின்றவர்கள் தற்போது முன்னணி நிறுவத்தில் தலைவராக பணியாற்றி வருகின்றனர். அந்த அளவிற்கு பல்வேறு தலைவர்களை உருவாக்கிய பெருமை இந்த பள்ளி கூடத்திற்கு சேரும். மேலும் இப்பள்ளி குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் மேலாளர் ஜனாப். நத்தர்சா, மற்றும் மேலாளர் ஜனாப். NM . முஹைதீன் அப்துல் காதர், ஜனாப். டாக்டர். முஹம்மது மீரா லெப்பை, EX .DCO ,ஜனாப். காதர் முஹைதீன், மற்றும் SDPI 9 வது வார்டு கவுன்சிலர் M. பாவா பகுருதீன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from www.muthupettaiexpress.blosgpot.com
நமது நிருபர்

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNSஅப்துல் பாரி,EKAமுனவ்வர் கான், அபு மர்வா

மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு...


சென்னை, ஜனவரி 25 : தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- விண்ணப்பம் எப்போது?
ஹஜ் பயணம் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) கடைசி வாரத்தில் வெளியிடப்படும். ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மார்ச் 1-ந் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள் 31-ந் தேதி ஆகும். ஏப்ரல் மாதம் கடைசி வாரம் குலுக்கல் நடைபெறும். ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மே மாதம் 31-ந் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும்.
நாடு முழுவதும் 28 மையங்களில் செப்டம்பர் மாதம் 19-ந் தேதி முதல் அக்டோபர் 20-ந் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். அக்டோபர் 26-ந் தேதி அராபத் நாள் ஆகும். ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு நவம்பர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை விமானம் மூலம் நாடு திரும்பலாம். சர்வதேச பாஸ்போர்ட் கட்டாயம் .ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவோர் இப்போதே சர்வதேச பாஸ்போர்ட் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த தகவலை அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் மூலமாகவும், மாநில ஹஜ் கமிட்டி தலைவர்கள் வாயிலாகவும் அறிவிக்கச் செய்துள்ளோம். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் 70 வயது ஆனவர்களுக்கு குலுக்கல் இல்லாமலேயே அனுமதி வழங்கப்படும். அவருக்கு துணையாக ஒருவர் ஹஜ் பயணம் செய்யலாம்.
தமிழக கோட்டா அதிகரிப்பு
தமிழகத்திற்கான ஹஜ் பயணிகள் அடிப்படை கோட்டா இந்த ஆண்டு 11 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்காக முயற்சி மேற்கொண்டு வெற்றி ஈட்டித்தந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 442 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். இந்திய ஹஜ் கமிட்டி எடுத்த சிக்கன நடவடிக்கை காரணமாக, ஹஜ் பயணச் செலவு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.193 கோடி மிச்சமாகியது.
சென்ற ஆண்டு ஹஜ் பயணத்தின்போது மக்கா, மதீனா நகரங்களில் விடுதி கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டும் அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஹஜ் பயணிகளுக்கான விமான கட்டணமும் அதிகரிக்கப்படவில்லை.
நடவடிக்கை உறுதி
இந்தியாவில் இருந்து அழைத்துச்செல்லப்படும் ஹஜ் பயணிகள் வாடகை கட்டிடங்களில்தான் தங்கவைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு வசதியாக மெக்கா, மதீனா பெருநகரங்களில் ஹஜ் இல்லங்களை கட்டுவதற்கு இந்திய ஹஜ் கமிட்டி பரிசீலனை செய்து வருகிறது. ஒருமுறை ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் 5 ஆண்டுகள் கழித்தே மறு பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வேண்டுவோர் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.
யாராவது இந்த விதிமுறையை மீறி 5 ஆண்டுகளுக்குள் மறு ஹஜ் பயணத்திற்கு முயன்றால் அவர்களின் பயணம் ரத்து செய்யப்படும். விமானத்திற்குள் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டாலும் இதே நடவடிக்கை தான். அரசு கோட்டா மூலமான ஹஜ் பயணத்திற்கு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் மூலம் பயணம் மேற்கொள்ள முயற்சி செய்வோர் மீதும் இதே நடவடிக்கை தான் எடுக்கப்படும்.
கர்நாடகாவில் ஹஜ் இல்லம்
எனது வேண்டுகோளை ஏற்று, கர்நாடகாவில் மாநில ஹஜ் இல்லம் கட்டுவதற்கு அம்மாநில முதல்-மந்திரி சதானந்தா கவுடா நடவடிக்கை எடுத்துள்ளார். ஹஜ் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 15-ந் தேதி மதியம் 12 மணிக்கு பெங்களூர் ஹெக்டே நகரில் நடைபெற உள்ளது.
அதேபோல், பெங்களூர் தேவனஹல்லி – சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 3.17 ஏக்கர் பரப்பளவில் கர்நாடகா அரசு சார்பில் ஹஜ் கர் என்ற ஹஜ் இல்லம் கட்டப்பட உள்ளது. இதற்கு இந்திய ஹஜ் கமிட்டி தன் பங்காக ரூ.21/2 கோடி வழங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
source from www.muthupettaiexpress.blogspot.com

நமது நிருபர்

ஷேக் அஸ்லம் அஹமது

முத்துப்பேட்டை TNTJ சார்பில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்...








முத்துப்பேட்டை, ஜனவரி 25 : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) & திருவாரூர் வண்டாம்பானை லயன்ஸ் கண் மருத்துவமனை மற்றும் திருவாரூர் மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் IOL (லென்ஸ்) பொருத்தும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம், இன்று காலை நமது மஸ்ஜித் நூற் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை TNTJ வின் நகர தலைவர் ஜனாப். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தலைமை ஏற்றார். பின்னர் இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஜனாப். புஹாரி, நகர பொருளாளர் ஜனாப். ஜாகிர் உசேன், துணைத்தலைவர் ஜனாப். அப்துல் வக்கீல், துணைசெயலாளர் ஜனாப். முஹம்மது லுக்மான் ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

K . எர்சாத் அஹமது, TR .அப்துல் ரஹ்மான்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)