புளியந்தோப்பு, அக்டோபர் 22 : புளியந்தோப்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் நபிகளாரை இழிவாகப் பேசிய இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரண்டு தினங்களாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் போராடிக் கொண்டுள்ளன.
இதனால் போலிஸ் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பிகக் இந்து முன்னணியினர் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு கமிசனர் அலுவலகம் முற்றுகை இட முயன்றனர். இதை அறிந்த எஸ்.எம்.பக்கர், செய்யது இக்பால்.பிர்தவ்ஸ் உள்ளிட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளும் இஸ்மாயில், சிக்கந்தர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும் கமிஷனரை சந்தித்து 'கடவுள் கொள்கை பற்றிய ஒரு தஃவா நோட்டிஸ் போட்டவர்களை கைது செய்' என பிரச்சனையை திசை திருப்ப இந்து முன்னணியினர் நாடகம் ஆடுகின்றனர்.
இதை நீங்கள் அனுமதிக்க் கூடாது இல்லை என்றால் இது மிகப் பெரிய பிரச்னையாக வெடிக்கும் என்று வலியுறுத்தினர். அனைத்தையும் கமிசனர், சம்பந்தப்பட்ட இருவரும் தலைமறைவாகி விட்டதால் தேடி வருகிறோம் கைது செய்வது உறுதி என கூறினார். வெளியில் பத்த்ரிக்கையாலர்களை சந்தித்த எஸ்.எம்.பாக்கர் நபிகளாரை இழிவுபடுத்தும் எவரையும் முஸ்லிம்கள் மன்னிக்க மாட்டார்கள் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம் என பேட்டியளித்தார்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:
ஷேக் பரீத்
முத்துப்பேட்டை, அக்டோபர் 21 : புதுத் தெரு மர்ஹும் KM.சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் KMS . மன்னர் என்கிற ராவுத்தர் அவர்களின் சகோதரரும், KMS . நிஜாம் அவர்களின் தகப்பனாருமாகிய "KMS. காதர் பாட்சா" அவர்கள் இன்று இரவு 8.30 மணிக்கு மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:
ASNS.அப்துல் பாரி
திருவாரூர், அக்டோபர் 20 : SDPI கட்சியின் சார்பாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அக்டோபர் 17 லில் சென்னையில் தலைமை செயலகத்தையும்,பிற இடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிடும் போராட்டத்தை ஷோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா அறிவித்திருந்தது. இதை மெய்ப்பிக்கும் வகையில் திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்படுவதற்காக SDPI கட்சி தொண்டர்கள் தயாராயினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாகனங்களில் படையெடுத்து வந்தவண்ணம் இருந்தனர். கூட்டம் கூட கூட போராட்டக்களமாய் உருவெடுத்ததை உணர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை சீர்படுத்தினர்.
சரியாக காலை 11 மணிக்கு ரயில்நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்ட SDPI கட்சியினர், தமிழக அரசே தமிழக அரசே, மதுவிலக்கை அமுல்படுத்து, டாஸ்மாக்கை இழுத்துமூடு, என்ற கோசத்துடன் கடைவீதி, மார்கெட் வழியாக மணிகூண்டு வந்தடைந்தனர் .
கூட்டத்தில் SDPI கட்சியின் மாநில செயலாளர் A. அபூபக்கர் சித்திக் கண்டன உரை நிகழ்த்தினார். பின்னர் மணிக்கூண்டிளிருந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். ஒன்றன் பின் ஒன்றாக கைதுசெய்யப்பட்ட அனைவரும் திருவாரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறைவைக்கப்பட்டனர். சிறைவைக்கப்பட்ட அனைவரும் மாலை 4 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
source from: www.muthupettaiexpress.com
களத்தொகுப்பு:
ஜே .ஷேக் பரீத்
முத்துப்பேட்டை, அக்டோபர் 20 : முத்துப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் நூற்றாண்டுகளை கடந்த மிகவும் பழமை வாய்ந்த வழி தடமாகும். இங்கிருந்து சென்னை முதல் காரைக்குடி வரை பல்வேறு ரயில்கள் சென்று வந்தன. இதனால் சுற்றுலாதலமான முத்துப்பேட்டை மக்கள் என்றும் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் ரயில்வே துறை இந்தியா முழுவதும் படி படியாக எல்லா வழி தடங்களையும் அகல ரயில் பாதையாக மாற்றினார்கள். ஆனால் முத்துப்பேட்டையை உள்ளடக்கிய திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான பாதை மட்டும் மாற்றப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் இந்த வழி தடங்களையும் மாற்ற நிதி வந்த நிலையில் படி படியாக பணிகள் துவங்க ஆரம்பிக்கப்பட்டன. அதன் வகையில் காரைக்குடி, திருவாரூர் பகுதிகளில் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மீதி உள்ள பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி திருவாரூர் வரை பழமை வாய்ந்த பேசென்ஜர் ரயில் சென்று வந்தன. இந்த அனைத்து வழித்தடங்களும் பிரிக்கப்பட்டு பணிகள் துவங்க இருப்பதால் நேற்றுடன் இந்த பேசென்ஜர் ரயிலை நிறுத்த தென்னக ரயில்வே முடிவு செய்து அறிவிக்கப்பட்டன. இதனை முன்னிட்டு பேசென்ஜர் ரயில் கடைசி பயணமாக திருவாரூரிலிருந்து நேற்று காலை முத்துப்பேட்டைக்கு வருகை தந்தது. முத்துப்பேட்டை வர்த்தக கழகம் சார்பில் தலைவர் இரா. இராஜாராமன், கெளவர தலைவர். திருஞானம், ஆகியோர் தலைமையில் பிரியா விடைபெறும் ரயில் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேசென்ஜர் ரயிலுக்கு பெரிய அளவில் மாழை அணிவித்தும் டிரைவருக்கு இனிப்பு வழங்கியும் வழி அனுப்பி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வர்த்தகக் கழக பொதுச் செயலாளர் எம்.எஸ். ராமலிங்கம், துணைத் தலைவர் முஹைதீன் பிச்சை, செயற்குழு உறுப்பினர் அசோகன், ரோட்டரி துணை மண்டல ஆளுநர் மெட்ரோ மாலிக், நுகர்வோர் பாதுகாப்பு கழகம் நிர்வாகி சுல்தான் இபுறாஹீம், SDPI கட்சியின் நகர பொறுப்பாளர் நிசார் அஹமது, சேக் முஹைதீன், முஹம்மது முஹைதீன், மற்றும் வர்த்தக கழக நிர்வாகிகள், வியாபாரிகள் பள்ளி மாணவர்கள், பாயணிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை
சென்னை, அக்டோபர் 13: இஸ்லாமிய பிரசாரகரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிறுவனருமான சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு வலது தோள்பட்டையில் கேன்சர்கட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .அவர் பூரண குணமடைந்து மீண்டும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் சமுதாய பனி செய்வதற்கு வல்ல ரஹ்மானிடம் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்திகிறது ... இந்த சகோதரருக்கு அல்லாஹ் விடம் துவ செய்ய வேணுமாய் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
source from: www.muthupettaiexpress.com
இப்படிக்கு :
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்
துபாய்,அக்டோபர் 13 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் 30 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி துபாய் டெனாட்ட பார்க்கில் சரியாக 8.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக M. முஹம்மது அலி கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். இக்கூட்டத்திற்கு மூத்த ஆலோசனைக் குழு உறப்பினர் ஜனாப். M. முஹம்மது ஹிலால் அவர்கள் தலைமை வகித்தார். சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து H.ஷேக் தாவூது அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 29 ஆம் ஆண்டின் சங்கத்தின் அனைத்து செயல்பாடுகள் குறித்து தலைவர் S. ஜஹபர் உசேன் அவர்கள் உரைநிகழ்த்தினார். இதனை தொடர்ந்து பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தேர்தல் கண்காணிப்பாளராக M. சாகுல் ஹமீது அவர்கள் நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறுபினர்கள் மற்றும் ஊர்வாசிகள் அனைவருடைய ஒத்த கருத்தோடு ஏக மனதாக புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தார்கள்.
ஆலோசனை குழு உறுப்பினர் P.M. ஜாகிர் உசேன் அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார். மேலும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்களின் விபரம்:
தலைவர்: H. ஷேக் தாவுது
இணை தலைவர்: M.R.S. அஹமது ராவுத்தர் (செல்லாப்பா)
துணை தலைவர்: K.S.N. ஹசன் குத்தூஸ்
பொதுச் செயலாளர்: M.A.K. ஹிதாயத்துல்லாஹ்
இணைச் செயலாளர்: H. தாவூது கான்
துணைச் செயலாளர்: T.E.S.யூசுப் சுஹைல்
பொருளாளர்: M. சஹாப்தீன், S. ஜஹபர் உசேன்
மக்கள் தொடர்பாளர்கள்: M.A.K. சிராஜுதீன், A.ஆசாத் காமில்
தகவல் தொடர்பாளர்கள்: ASNS. அப்துல் பாரி, A. முஹம்மது இல்யாஸ்
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
முத்துப்பேட்டை, அக்டோபர் 12 : முத்துப்பேட்டையில் உள்ள செம்படவன்காடு பாமணி ஆற்றில் இளம்பெண் குத்தித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூரை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகள் மீனா (27) பீகாம் பட்டதாரியான இவர் கடந்த ஒருவருடம் தனது தாயார் உடல் நிலை சரி இல்லாததால் ஜாம்புவோநோடை தர்ஹாவில் வேண்டுதலுக்காக தனது தாயாருடன் மீனா தங்கி உள்ளார்.
பல மாதங்கள் தங்கி உள்ள மீனா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியை சேர்ந்தவர் சேக் அப்துல் காதர் அவர்களின் மகன் மீரா உசேன் மீது காதல் ஏற்பட்டு கடந்த வருடம் இருவரும் கோவிலில் வைத்து ரகசிய திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் தனது தாயாரும் இறந்து விட்டார். இந்த நிலையில் மதுக்கூரில் உள்ள மீனாவின் அண்ணன் வீட்டில் இருவரும் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.
அப்போது மீரா உசேனும் அங்குள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மீராஉசேன் அடிக்கடி காணமல் போவதும் திரும்ப வருவதுமாக இருந்துள்ளார். இந்த நிலையில் மீராஉசேனுக்கு ஏற்கனவே ஆலங்காட்டை சேர்ந்த பெண்ணுடன் திருமணமாகி உள்ள சம்பவம் தெரிகிறது அதிர்ப்த்தி அடைந்த மீனா மீரா உசேனிடம் சண்டை போட்டதாக தெரிகிறது. மேலும் மீரா உசேனை காணவில்லை. மேலும் மீனா எங்கும் தேடியும் கிடைக்காததால் முத்துப்பேட்டைக்கு வந்து முதல் மனைவியிடம் விசாரித்தார் அப்போது முதல் மனைவிடம் தங்கி உள்ளதாக தெரிகிறது. மேலும் இருவரும் மீனாவை திட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் மீரா உசேன் மீனாவை பார்த்து நான் இனிமேல் உன்னிடம் சேர்ந்து வாழமாட்டேன் என்றும் உறுதியுடன் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்பப்த்தி அடைந்த மீனா என்ன செய்வது என்று நடந்தே பல மீட்டர் தூரம் சென்றுள்ளார். மேலும் இதனால் ஆத்திரம் அடைந்த மீனா இனி நம்ம வாழ்க்கை கிடைக்காது என்று எண்ணி ஒரு வெள்ளை பேப்பர் தாளில் என் சாவுக்கு காரணம் மீரா உசேனும் அவரின் முதல் மனைவியும் தான் காரணம் என்று எழுதி வைத்து விட்டு செம்படவன் காடு பாமணி ஆற்று பாலத்தின் மீது ஏறி குத்தித்து உள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த வேல்முருகன், ஸ்டாலின், அழகர் ஆகியோர் குதித்த பெண்ணை காப்பாற்றி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மீனாவை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், ஏட்டு சந்திரமோகன் ஆகியோர் விசாரித்து மீனாக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மீனா தற்போது 5 மாதம் கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்ப்பட்டது.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை
முத்துப்பேட்டை, அக்டோபர் 11: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சமூக பணியாற்றியவர் ஷேக்பரீத் .இவர் முத்துப்பேட்டையில் உள்ள மரைக்காயர் தெருவை சார்ந்தவர் .த .மு .மு .க .வில் ஆரம்ப காலத்தில் அடிப்படை உறுப்பினராக தனது அஸ்தி வாரத்தை துவக்கிய ஷேக்பரீத் பின்பு நகர செய்தி தொடர்பாளர் ,நகர மருத்துவ சேவை அணி செயலாளர், நகர துணை செயலாளர் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர், என்று படிப்படியாக உயரம் நோக்கி சென்றார் . பிறகு சிறிது காலம் இவர் சென்னையில் பணியாற்றிகொண்டிருக்கும்போது தென் சென்னை மாவட்ட மாணவரணி செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கபட்டார் . வின் தொலைக்காட்சியில் வளைகுடா செய்திபிரிவின் துணை ஆசிரியராக பணியாற்றியவர் . இளம் வயதிலேயே பத்திரிக்கை துறையில் ஆர்வம் கொண்ட இவர் த.மு.மு.க வின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான மக்கள் உரிமை ,மற்றும் வேறு சில பத்திரிக்கைகளிலும் ஆக்கங்கள் மற்றும் மக்கள் பிரச்சனைகளை எழுதி வந்தார் .
கடந்த சுனாமி பேரழிவின் போது நாகை ,கீச்சாங்குப்பம், நாகூர்,திருப்பட்டினம், காரைக்கால், போன்ற பாதிக்க பட்ட இடங்களில் மக்கள் பணியாற்றியவர். மதவாத, தேசவிரோத, பா.ஜ .க . இந்து முன்னணி, ஆர் .எஸ் .எஸ் போன்ற வகுப்புவாத சக்த்திகளை எதிர்ப்பதை தனது உயிர் மூச்சாய் கொண்டவர். முத்துப்பேட்டையில் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக, கடந்த 8 ஆண்டுகளாய் சகோதரத்துவத்தை உண்டாகும் கைப்பந்து போட்டிகளை மாநில அளவில் நடத்தி அணைத்து சமுதாய மக்களின் கவனத்தை ஈர்த்தவர் .கடந்த ஆண்டு நடை பெற்ற விளையாட்டு போட்டியில் ,பா .ஜ .க .வில் மத்திய அமைச்சராக இருந்து பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அறந்தாங்கி திருநாவுக்கரசரை அழைத்து வந்து பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியவர் .
அறந்தாங்கி திருநாவுக்கரசர் முத்துப்பேட்டைக்கு இவர் நடத்திய விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள வந்த போது ,இவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் சாலைமறியலில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது .
நமது நிருபர் : AKL. அப்துல் ரஹ்மான்
சென்னை :அக்டோபர் 11: போராட்டம் நடத்திய அமைப்புகளை விட்டு விட்டு போராட்டம் கூடாது என அறிக்கை விட்ட காசிமியை அமெரிக்க தூதரக் அதிகாரிகள் சந்திப்பது ஏன் என்று புரியவில்லை!
படத்தை நீக்கா விட்டால் எங்கள் மக்களை கட்டுப்படுத்த முடியாது என இவர் சொன்னாராம்! கட்டுப் படுத்த இவர் யார்? சென்னை கிடுகிடுக்கும் போராட்டததை நடத்திய இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவரா? அல்லது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏதேனும் அமைப்பின் பிரதிநிதியா?
போராட்டமே கூடாது என மக்களின் உணர்வுகளை மழுங்கடிக்கப் பார்த்த இவர் மக்கள் இனி பெட்ரோல் குண்டு வீசுவார்கள் என்று சொன்னதைக் கேட்டு அமெரிக்க அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தார்கள் என கதை அளப்பதேன்?
மொத்தமே 2 இமாம் இருக்கும் மக்காப் பள்ளியின் தலைமை [!?] இமாம் என தன்னைத்தானே அழைத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையில் தமிழகத்தின் தலைமை இமாமாக தன்னைக் காட்ட முயற்சிப்பதேன்?
தன்னையும் தன் பள்ளியையும் காக்கவே அடுத்த இயக்கங்களை நம்பி இருக்கும் இவர்
தன்னை அமெரிக்க தூதரகத்தை காக்கும் ஆபத் பாந்தவனாக காட்ட முயல்வது ஏன்?
தொகுப்பு :ஜே :ஷேக் பரீத்
முத்துப்பேட்டை, அக்டோபெர் 08 : முத்துப்பேட்டையில் இன்று காலை காரைக்
குடியிலிருந்து திருவாரூர் செல்லும் ரயில் முத்துபேட்டையில் கைகாட்டி இறக்காததால் நடு ரோட்டில் அதிக நேரும் நின்று கொண்டிருந்தது. இதனால் முத்துப்பேட்டை
யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
source from:
www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை
முத்துப்பேட்டை, அக்டோபர் 07 : தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் முத்துப்பேட்டை கிளைகள் சார்பாக தமிழகத்தில் மக்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருவதுடன் சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதை அறிந்தும் மழை வேண்டி புதுத் தெரு ASN தெருவில் நடைபெற்றது. நூர் பள்ளி தலைமை இமாம் மற்றும் மாநில பேச்சாளர் அல்தாப் ஹுசைன் அவர்கள் நபிவழி முறைப்படி தொழுகை நடத்துவது எப்படி என்றும் அதனால் என்ன பலன் கிடைக்கும் என்றும் சிறப்புரை நிகழ்த்திவிட்டு தொழுகையை நடத்தினார். இதில் TNTJ நகர செயலாளர் முஹம்மது புஹாரி, பொருளாளர் கே.சுஹைபுகான், துணைத் தலைவர் அப்துல் வக்கீல், துணைச் செயலர் முஹம்மது லுக்மான், மாநில நிர்வாகி அன்சாரி, மற்றும் பிர்தவ்ஸ்கான், நஜிபுதீன், கட்டினானா, துபாய் சேக்காதி, நுகர்வோர் அமைப்பு நிர்வாகி சுல்தான் இபுறாஹீம், உட்பட ஏராளமான பெண்களும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை
முத்துப்பேட்டை ,
அக்டோபர் 07 :
SDPI கட்சியின் சார்பாக மது ஒழிப்பை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன .கடந்த 2 ஆம் தேதி முத்துப்பேட்டையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் நூற்று கணக்கானோர் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது .இந்நிலையில் வருகின்ற 11 ஆம் தேதி மது ஒழிப்பை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .இது குறித்து அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் ,மற்றும் மாவட்ட தலைவர் பாவா பகுருதீன் இருவரும் கூட்டாக அறிவித்தது பின்வருமாறு:
SDPI கட்சியானது சமுகதீமைகளுக்கு எதிராய் போராடக்கூடிய ஒரு மக்கள் இயக்கமாகும் .மது என்பதுசமூகத்தை வலிகெடுக்க கூடிய ஒரு கொடிய அரக்கனாக உள்ளது . இன்றைய சூழ்நிலையை எடுத்து பார்த்தால், முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை ,கல்லூரி மாணவர்கள் முதல் பள்ளிக்கூட மாணவர்கள் வரை, குறிப்பாக இளைய சமுதாயம் மதுவின் கோரப்பிடிக்குள் சிக்கித்தவிக்கும் ஒரு அவல நிலை இந்த தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது . ஒருபுறம் நலத்திட்டங்களை வழங்கிவரும் தமிழக அரசு ,மறுபுறம் வீதியெங்கும் மதுக்கடைகளை திறந்து குடும்பங்களை சீரழிக்கும் வேலைகளையும் செய்து வருகிறது .எனவேதான் தமிழக அரசின் கவனங்களை ஈர்க்கும் வகையில் ,பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரி இந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டங்களை SDPI கட்சி நடத்தி வருகின்றது .
SDPI நடத்திய மது ஒழிப்பு போராட்டத்தை கண்ட அணைத்து அரசியல் கட்சிகளும் ,இன்று மதுவிற்கு எதிராய் வாய்திறக்க ஆரம்பித்துள்ளது .திருவாரூர் மாவட்ட SDPI கட்சியின் சார்பாக வருகிற 17 -10 -2012 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளது .மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் மாவட்டத்திலிருந்து அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க இருக்கிறார்கள் .இவ்வாறு தனது பேட்டியில் கூறியுள்ளார்கள் .
source from: www.muthupettaiexpress.com
சந்திப்பு : ஜே .ஷேக் பரீத்
முத்துபேட்டை, அக்டோபர் 01 : முத்துப்பேட்டை கிளை 2 (ஆசாத் நகர்) ன் சார்பாக பெண்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் 29-9-2012 அன்று ரஹ்மத் நகர் சகோ.இம்ரான் கான் அவர்கள் இல்லத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் தாவா சம்மந்தமான ஊக்கமும், எந்த முறையில் தாவா செய்யவேண்டும் என்றும், இதில் கலந்துக்கொள்வது எப்படி என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் நடைபெற்ற இக்கூட்டத்தில் நூர் மஸ்ஜித் இமாம் சகோதரர். அல்தாப் ஹுசைன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்) இக்கூட்டத்தில் சுமார் 80 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர். கிளை தலைவர் சகோதரர். அப்துல் அஜீஸ் அவர்கள் நன்றி உரையாற்றினார்.
source from: www.muthupettaiexpress.com
நன்றி - TNTJ முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை, செப்டம்பர் 28 : முத்துப்பேட்டையில் இந்துக்களும் ,முஸ்லீம்களும் பழங்காலந்தொட்டே அண்ணன் தம்பிகளாக சகோதர வாஞ்சையுடன் பழகி வருகின்றனர் .கடந்த 20 ஆண்டுகளாக விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் ஒரு வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி ,இந்து முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கோடு மதக்கலவர தீயை மூட்டிவிட்டு அதில் குளிர்காய்ந்து வருகின்றனர் இந்து முன்னணி ,
ஆர் .எஸ் .எஸ் .போன்ற தீவிரவாத சக்திகள் .
இந்நிலையில் இந்த வருடம் முத்துப்பேட்டையில் இந்துமுன்னனியின் சார்பாக இருபதாம் ஆண்டு விநாயகர் ஊர்வலத்தை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர் .முத்துப்பேட்டையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்றுவிடாமல் இருக்க ,திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருமுறையும் ,முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஒருமுறையும் இருசமுதயத்தை சார்ந்தவர்களையும் அழைத்து அமைதிக்கான ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .நடந்து முடிந்த இந்த இருகூட்டங்களிலும் நீதிமன்றம் அனுமதித்த பாதையில் மட்டும்தான் செல்லவேண்டும் என்றும் ,பிறமதங்களை புண்படுத்தும் கோஷங்களை எழுப்பக்கூடாது என்றும் ,ஊர்வலத்தை விரைவாக நடத்திமுடிக்கவேண்டும் என்றும் ,உள்ளூர்வாசிகள் மட்டுமே இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் ,வெளியூர்களிலிருந்து வருபவர்களை இந்த ஊர்வலத்தில் அனுமதிக்க கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர் .
இந்நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன் பேட்டையில்,உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சட்டவிரோதமான முறையில் மூன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வந்தனர் இந்துமுன்னணியினர் . .பேட்டையிலிருந்து அரபுசாகிபு பள்ளிவாசல் வழியாக ஊர்வலமாக பங்களாவாசல வந்தடைவதற்காக வைக்கப்பட்டிருந்த அந்த சட்டவிரோதமான மூன்று சிலைகளையும் கைப்பற்றி காவல்நிலையத்திற்கு எடுத்து வந்தனர் முத்துப்பேட்டை காவல்துறையினர் .
இதை பெரிதுபடுத்தி ,முத்துப்பேட்டையில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுருந்த இந்துமுன்னணியினர் ,பேட்டையில் பா.ஜ .க .வின் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் நேற்று உண்ணாவிரதம் என்ற பெயரில் ஒரு கலகலத்து போன ,காமெடி நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர் .பேட்டையில் உள்ள அனைத்து இந்துக்களையும் உசுப்பேற்றி ,இஸ்லாமியர்களுக்கு எதிராய் சிண்டுமுடித்து விடலாம் என்ற கற்பனையோடு திட்டம் தீட்டப்பட்ட இந்த காமெடி விரதத்தில் ஒருசிலரை தவிர மெஜாரிடியான இந்துக்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்ததால் இந்த உண்ணாவிரதம் பிசுபிசுத்துப்போன காமெடி விரதமாய் காட்சியளித்தது .
source from:www.muthupettai express.com
தொகுப்பு :
துபாயிலிருந்து ஜே .ஷேக்பரீத் .
முத்துப்பேட்டை, செப்டம்பர் 28 : முத்துப்பேட்டையில் சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் கடுமையான இன கலவரத்தால் பாதிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் பொது மக்கள் சுமார் 4 லட்சம் பேர் உடைகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனை அறிந்த முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இனையதள நிர்வாகிகள் தீவிரமாக முத்துப்பேட்டை பகுதிகளில் ஆடைகளை சேகரித்தது. இதில் சிறுவர்கள், மற்றும் பெரியவர்கள் அனைவரும் தங்களுடைய உடைகளை குத்பா பள்ளி வாசலில் கொண்டு வந்து குவித்தனர். இதில் பல நாட்களாக இரவு பகல் பாராமல் தரம் பிரிக்கப்பட்டு அட்டைப்பெட்டிகளில் கட்டப்பட்டன. கட்டப்பட்ட அந்த அனைத்து பெட்டிகளையும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிர்வாகத்தினர் சென்னை மக்கா மஸ்ஜிதில் கொண்டு சேர்த்தனர். மேலும் வசூல் செய்யப்பட அனைத்து துணிகளும் வருகிற செவ்வாகிழமை அன்று மூன்று கண்டைனர் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று அந்த நிர்வாகம் தெரிவித்தது.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை
இராமநாதபுரம், செப்டம்பர் 26 : இராமநாதபுரம் நகரில் இன்று தமுமுக, எஸ்.டி.பி.ஐ,
ஐ.என்.டி.ஜே , சுன்னத் ஜமாத்தார்கள் , அனைத்து உலமா பெருமக்கள், அனைத்து
ஊர் ஜமாத்தினர்கள். இதர இஸ்லாமிய இயக்கங்கள், சங்கங்கள் ஆகியோர் இனைந்த
இராமநாதபுரம் மாவட்ட அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் சார்பாக
இஸ்லாமியர்களின் உயிருனும் மேலான முஹம்மது
நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தி படம் எடுத்தவர்களையும் அதை கண்டிக்க
மறுக்கும் அமெரிக்கர்களையும் அந்த திரப்படத்தை வெளியிட்டுள்ள அனைத்து
வலைத்தளங்களையும் தடை செயய மறுக்கம் மத்திய அரசை கண்டித்தும் ஒரு மாபெரும்
கண்டன பேரணியும் கண்டன பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
இராமநாதபுரம்
நகர் கொல்லம்பட்டரை தெருவில் உள்ள இராமநாதபுரத்தின் மிக பழமையானதும் ,
முதல் பள்ளியுமான கொல்லம் பட்டறை பள்ளியில் இருந்து துவங்கிய இந்த
பேரணிக்கு ஆலிம் கிராஅத் ஓத அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின்
ஒருங்கினைப்பாளரும் கொல்லம்பட்டறை தெரு ஜமாத் நிர்வாகியுமான ஜனாப்
முத்தலிப் அவர்கள் துவக்கி வைத்தார்கள். பேரணியை வழி நடத்தும் விதமாக
அனைத்து இயக்கத்தவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்த்தர்கள் , மாவட்டத்தின்
அனைத்து ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள், அனைத்து இயக்க நிர்வாகிகள் வீர
முழக்கமெழுப்பி கண்டன கோசங்களை உணர்ச்சி பொங்க ஒஞ்கி ஒலித்து வந்தார்கள்.
அல்லாஹ்வின்து£தர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், «لا يؤمن عبد حتى أكون أحب
إليه من أهله وماله والناس أجمعين உங்கள் குடும்பத்தினரைவிட உங்கள்
செல்வத்தைவிட உங்களுக்கு விருப்பமானவர்களைவிட என்னை அதிகமாக நேசிக்காதவரை
நீங்கள் ஒருவரும் மூஃமின்கள் ஆகமாட்டீர்கள் (அறிவிப்பாளர் ; அனஸ்(ரலி),
நு£ல் ; புஹாரி, முஸ்லிம்)
இந்த நபிமொழிக்கினங்க
மாவட்டமெங்கிலும் இருந்து இசுலாமிய வீர இளைஞர்கள் ஆர்ப்பரித்து வரலாறு
காணாத வகையில் ஆயிரக்கணக்கில் கண்டன பதாகைகளை கையில் ஏந்தி சின்க்கடை
வீதியெங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து அன்னல் நபியை இழிவு
படுத்தியதை கண்டித்தும் மாநபியின் வீர வேங்கைகள் கோசம் எழுப்பி பேரணியாக
தெருவெங்கும் நடந்து வந்தது இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கும் காணத
சரித்திர சம்பவம். இன்று தங்கள் கண்டனங்களை பதிவு செய்யும் வகையில்
இராமநாதபுரத்தில் உள்ள அனைத்து இசுலாமிய வியாபார நிறுவனங்களும்
அடைக்கப்பட்டிருந்தன. பொங்கி எழுந்த வீர இசுலாமியர்களின் ஆர்பரிப்பில்
இராமநாதபுரம் தினறியது. தப்புக்கணக்கு போட்டு வாகனங்களில் வந்து
முஸ்லிம்களை பீதியடைய செய்யலாம் என்று திறலாக குவிக்கப்பட்டிருந்த
காவல்துறை எம் மாவட்ட இசுலாமிய வீரவேங்கைகளின் ஆக்ரோசத்தில் பின்வாங்கியது.
பேரணியி்ன் பின்னர் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்த்தில் முதலாவதாக
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பேச்சாளர் முகவை அப்துல் ஜமீல்
வீர உரையுடன் துவக்கினார் பின்னர் த.மு.மு.க வின் பேச்சாளர் ஜனாப் கோவை
செய்யது அவர்கள் ஆக்ரோசத்துடன் கண்டன உரை நிகழ்த்தினர் அதன் பின்னர்
உரையாற்ற வந்த முகவையின் மைந்தன் இந்திய தவ்ஹித் ஜமாத்தின் எஸ்.எம்.
பாக்கர் அவர்கள் தனது சிம்மக் குரலில் கண்டனத்தை பதிவு செய்தார்கள் ,
நிகழ்சியின் இறுதியில் த.மு.மு.க வின் சகோ. அன்வர் அவர்கள் நன்றியுரை கூற
கண்டன பொதுக்கூட்டம் இனிதே முடிந்தது.நிகழ்ச்சிகளை அனைத்து இஸ்லாமிய மக்கள்
கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர் ஜனாப் முத்தலிப் அவர்கள் தொகுத்து
வழங்கினார்கள்.
முகவை மாநகர சரித்திரத்தில் திரன்டிராத
கூட்டமிது. காவல்துறையும் உளவுத்துறை உட்பட ஏனைய அனைத்து மக்களும்
திரன்டிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் ஓழுக்கமான கூடலை பார்த்து
ஆச்சர்யத்தில் வியந்தனர். கூட்டத்தில் சிறப்பம்சமாக பெண்கள் வரவேண்டாம் என
கூறியும் பெரியபட்டினம் என்ற இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் கிராமத்தை
சேர்ந்த நூற்றுக்கணக்கான பென்கள் வாகனங்களில் வந்து மேடையின் பின்புறம்
அமர்ந்திருந்தது வியப்பாக இருந்தது. நமது உயிரினும் மேலான முஹம்மது நபி
(ஸல்) அவர்களை இழிவுப் படுத்திய அமெரிக்க கயவர்களை கண்டித்து நடந்த இந்த
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்த்தில் பங்கெடுத்து அன்னல் நபிகளுக்கெதிரான
அநீதிக்கு கண்டன் தெறிவித்தவர்களாக சரித்திரத்தில் தங்களை இம்மக்கள் பதிவு
செய்து கொண்டனர்.
source from: www.muthupettaiexpress.com
நன்றி - செங்கிஸ்கான் ஆன்லைன்