முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் தனியார் பஸ்ஸிலிருந்து இறங்க அடம் பிடித்த ''குடி''மகன்



முத்துப்பேட்டை, ஜனவரி 17: முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு அற்புதம் என்ற தனியார் டவுன் பஸ் சென்று வருகிறது. வழக்கம்  போல் நேற்று பகல் 1 மணிக்கு முத்துப்பேட்டையிலிருந்து புறப்பட ஆயத்தமாகி இருந்தது. அதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஜீன்ஸ் பேண்ட், கருப்பு டீ சர்ட் அணிந்த ஒரு இளைஞர் கடும் குடி போதையில் ஏறி உள்ளார். நடத்துனர் சுதாகரிடம் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள துவரங்குறிச்சிக்கு டிக்கெட்டும் எடுத்து உள்ளார். அவர் இறக்கும் ஸ்டாப் வந்தும் இறங்கவில்லை, பொறுத்து பார்த்த பஸ் பட்டுக்கோட்டைக்கு சென்றது, அங்கேயும் இறங்காததை கண்ட நடத்துனர் சுதாகர் அந்த குடிமகனிடம் கேட்டும் முறையான பதில் இல்லை. பின்னர் மதியம் 2.20 க்கு பட்டுக்கோட்டையிலிருந்து பஸ் புறப்பட்டது மீண்டும் அந்த குடிமகன் இறங்கும் துவரங்குறிச்சி வந்தும் இறங்காததை கண்ட நடத்துனர் இறங்கும் படி கூறியதற்கு இறங்க அடம் பிடித்து உள்ளார். 

மீண்டும் பஸ் முத்துப்பேட்டை வந்து கொண்டு இருந்தது, கடும் குடி போதையில் இருந்த அந்த இளைஞர் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் சீட்டின் அடியில் உட்கார்ந்து வாந்தியும் எடுத்து உள்ளார். இதனால் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியது, சரியாக 3.15 மணியளவில் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் வந்து சேர்ந்தது பஸ், அங்கேயும் இறங்க அடம் பிடித்தார். மிகவும் நோந்துபோன டிரைவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு பஸ்ஸை ஓட்டி வந்தார். பின்னர் அங்கு பணியில் இருந்த காவலர்கள் சண்முகநாதன், ஜீவா ஆகியோர் குடி மகனிடம் பல மணி நேரம் போராடி நைசாக பேசி பின்னர் கீழே இறக்கி விடப்பட்டார். இந்த சம்பவம் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முகைதீன் பிச்சை

உலக நாயகன்? கமலுக்கு உலக பொதுமறை வழங்கும் INTJ!



சென்னை, ஜனவரி 17: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எங்கும் தஃவா, எதிலும் தஃவா என்ற கொள்கையை மையமாக கொண்டு, எக்களதையும் தஃவா களமாக மாற்றி இஸ்லாத்தை நோக்கி அழைத்து விடுத்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ் 

இவ்வழிமுறையை பின்பற்றி கடந்த வாரம் விஸ்வரூபம் என்ற திரைப்படம் சம்மந்தமாக நடிகர் கமலஹாசனை சந்தித்த இஸ்லாமிய கூட்டமைப்பில் முக்கிய இடத்தை பெற்றுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத், நடிகர் கமலின் திரைபடங்களில் இடம் பெற்றுவரும் இஸ்லாமிய விரோதப்போக்கை கண்டித்து, முஸ்லிம்கள் யாரும் பயங்கரவாதிகளோ, தீவிரவாதிகளோ, வந்தேறி வந்த அந்நியர்களோ அல்ல, இம்மண்ணின் மைந்தர்கள், ஒரு தொப்புள் கொடி உறவுகள் என்று கூறி, இஸ்லாத்தை பற்றி விளக்கி, இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி அழைப்பு விடுத்து, திருமறை குர்ஆன் தமிழாக்கத்தையும் INTJ துணை தலைவர் முஹம்மது முனீர் அன்பளிப்புச் செய்தார்.

உலக நாயகன் என்ற போலியான புனைப் பெயர்களால் அழைக்கப்படும் நடிகர் கமல் போன்றோரை, உலகம் போற்றும் உத்தமர், எம்பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வழிமுறையை பின்பற்றி வாழச்செய்ய, அல்லாஹ் போதுமானவன். 

எனவே நடிகர் கமல் அவர்கள் நேர்வழி பெற இறைவனை பிராத்திக்கும் படி நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:

ஜெ. சேக்  பரீது 

பட்டுக்கோட்டையில் மத கலவரத்தை தூண்ட முயற்ச்சி!



பட்டுக்கோட்டை ஜனவரி 16: நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை அண்ணா நகர் பள்ளியில் இமாம்மாக இருக்கும் மைதீன் அப்துல் காதர் பிலால் அவர்கள் இரவு சுமார் 11 மணியளவில் வலவன்புறத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது குடிபோதையில் பிரச்சனை செய்து கொண்டு இருந்த பாலா,சிற்றரசு,சிரஞ்ஜீவி ஆகியோரின் தலைமையிலான 15 பேர் கொண்ட ரவுடி கும்பல் அந்த வழியே சென்று கொண்டு இருந்த இமாம் அவர்களை காமக் குரோதமான வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். 

இதனை அறிந்த இமாம் அவர்களுடைய மாமனார் தடுக்க சென்றுள்ளார். அவரை துளுக்க நாயே உங்களை இத்தோடு ஒழித்துவிடுவோம் என்று கூறி அவரையும் தாக்கியுள்ளனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட SDPI-ன் நகர தலைவர் அமானுல்லாஹ் அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சனையில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து விளக்கிவிட்டுள்ளார். அப்போது உன்னையும் கொல்லாமல் விட மாட்டோம் என கூறி பைப், உருட்டுக்கட்டை, அரிவாள் போன்ற கடுமையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர், மேலும் இமாம் அவர்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர். 

இந்த சம்பவத்தை கண்டித்து கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய ரவுடிகளை கைது செய்ய வழியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ஜமாத்தார்கள் சார்பில் மணிகூண்டிலிருந்து ஊர்வளமாக சென்று DSPI -யிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த ஊர்வளத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:
ஜெ . சேக் பரீது  

திருத்துறைபூண்டி வழக்கறிஞர் சங்க பொருளாளராக முத்துபேட்டை தீன் முஹம்மது தேர்வு :



முத்துபேட்டை, ஜனவரி 16: முத்துப்பேட்டை நகர மனித நேய மக்கள் கட்சியின் செயலாளராக இருப்பவர் தீன் முஹம்மது .32 வயதாகும் இவர் த.மு மு. க வில் மாநில மாணவரணி செயலாளர் , உட்பட மாவட்ட ,நகர ,பொறுப்புகளை வகித்தவர் .திருச்சி சட்டக்கல்லூரியில் 2003 ஆம் ஆண்டு சட்டம் பயின்று ,பின்னர் 2005 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை திருத்துறைபூண்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் .இந்நிலையில் பார் கவுன்சில் பொருளாளராக தேர்வாகி இருப்பதற்கு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .


நமது நிருபர்:
A .முஹம்மது ஷபான் .DCE 

தமுமுகவை காப்பி அடித்து சிலர் கட்சி நடத்துகிறார்கள் :மாலிக் பேட்டி :


முத்துப்பேட்டை, ஜனவரி 12: 
ஏன் இந்த பொதுக்கூட்டம்?
முத்துபேட்டையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமானப் பணி மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது.ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி அதை உடனே திறந்திட கோரியும்,முத்துப்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துணை மின்நிலையம் அமைக்க கோரியும்,முத்துப்பேட்டையை தனி தாலுக்காவாக அறிவிக்க கோரியும் இந்த பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளோம் .

2.த.மு.மு.க மற்றும் ம.ம.க-வின் வளர்ச்சி எப்படி உள்ளது?
திருவாரூர் மாவட்டம் முழுவதும் மது கடைகளுக்கு எதிரான பிரச்சாரம், அந்நிய முதலீட்டுக்கு எதிரான பிரச்சாரம் வீரியமாக நடைபெற்றது.காவிரி நீரில் தமிழகத்திற்க்குள்ள உரிமையை நிலைநாட்ட தலையில் கருப்பு முண்டாசு கட்டி போராட்டம் நடைபெற்றது.இஸ்லாமிய இளைஞர்களும் மாற்றுமத அன்பர்களும் த.மு.மு.க மற்றும் ம.ம.க-வில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

3.முத்துப்பேட்டையில் த.மு.மு.க வீழ்ந்து விட்டதாக சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்களே?
தமிழக மண்ணில் முஸ்லீம்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க,வீதிக்கு வந்து போராடத்தெரியாத நிலையை மாற்றி போராட்ட களத்திற்கு அழைத்து வந்த பெருமை த.மு.மு.க-வையே சாரும். கொடி வேண்டாம், போராட்டம் வேண்டாம்,அரசியல் வேண்டாம்  என்று நேற்று கூறியவர்கள்,இன்று த.மு.மு.க-வை பார்த்து ஈயடிச்சான் காப்பி வேலையை செய்து வருகிறார்கள். நாங்கள் ஒரு போதும் வீழமாட்டோம், பீனிக்ஸ் பறவையை போல் எழுந்து நிற்ப்போம்.

4.உள்ளாட்சி மன்ற தேர்தலில் உங்களின் வேட்பு மனுவை வாபஸ் வாங்குமாறு பலர் கூறியும் நீங்கள் பின் வாங்கி விட்டதாக கூறப்படுகிறதே?
இதை சொல்பர்கள் முதலில் இறைவனுக்கு அஞ்சி கொள்ளட்டும் நான்தான் பலரிடம் போய்எடுத்துச் சொன்னேன். ஆனால் அவர்கள் பதவி வெறியில் ஆணவத்தோடு பதில் கூறினார்கள் .நாங்கள்தான் இந்த ஊருக்கு தியாகம் செய்தவர்கள் என்று சொன்னார்கள்.அது என்ன தியாகமோ?
 சந்திப்பு :ஜே :ஷேக் பரீத் 

முத்துப்பேட்டையில் சாலை பணியை உடனே துவங்க வேண்டும் SDPI ஆர்பாட்டம்.!!!




முத்துபேட்டை, நவம்பர் 28 : முத்துப்பேட்டை தெற்குக் காடு கொய்யா தோப்பு மங்களூர் இணைப்பு புதிய சாலை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பனியும் துவங்கி செயல்பட்டு வந்தது. இதில் ஆக்கிரபிப்பு செய்த ஒரு சிலர் இந்த பணியை தடை செய்ய முயற்சித்து வருவதால் அப்பகுதியில் பெரும் பிரச்சனையும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதனை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் கோர்ட்டு வரை சென்ற இந்த பிரச்சனையை அரசு பல நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் அந்த பணியை உடனே துவங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அப்பகுதி மக்களும் SDPI கட்சியுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்க்கு நகர தலைவர் முஹைதீன் தலைமை வகித்தார். நகர துணைத் தலைவர் சேக் முஹைதீன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் A .அபூபக்கர் சித்திக் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட பொருளாளர் நெய்னா முஹம்மது, SDPI நகர செயலாளர் காளிமுத்து, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜபருல்லா, தம்பு சாமி உள்பட பலரும் ஆர்பாட்டத்தில் பேசினார்கள். பேரூராட்சி முன்பு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார். 
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை  

மவுத்து அறிவிப்பு:"M.நூருல் ஹிபா (3 வயது குழந்தை)"



முத்துப்பேட்டை, நவம்பர் 22 : S.P.K.M. தோட்டவளாகம் S.K.M.அப்துல் காதர் அவர்களின் பேத்தியும், கட்டிமேடு ஜனாப்M.அப்துல் ஹாதி அவர்களின் பேத்தியும், A.முஹம்மது ரியாஸ்தீன் அவர்களின் மகளும்மாகிய M.நூருல் ஹிபா (மூன்று வயது குழந்தை) (11.11.2012) அன்று காலை 11.00 மணியளவில் மவுத்தாகி விட்டது. (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா (11.11.2012) அன்று  இரவு 9.00 மணியளவில் கட்டிமேடு பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதை அறிவிக்கிறார்கள்.

அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்யவும்.

இந்த அறிவிப்பை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்

Source from: Ameeraham Muththuppettai islaamiya nala sangam 
அறிவிப்பவர் :-

S.K.M.அப்துல் காதர் - துபை. 

தொடர்புக்கு:-

S.K.M.அப்துல் காதர்                : 00971 – 050 - 7643388

A.முஹம்மது ரியாஸ்தீன்          : 0091 - 9789335170

A.முஹம்மது நியாஸ்             : 00971 – 050 – 8535765


குவைத்தில் உள்ள பிரபல நிறுவனத்திற்கு கீழ் கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவை

குவைத், நவம்பர் 12 : குவைத்தில் உள்ள "Integrated Logistics Co Kuwait" பிரபல நிறுவனத்திற்கு கீழ் கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவை: டிரைவர், லேபர், ரிக்கர் உள்ளிட்ட 10 பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப் படுகிறது. இன்னும் 2 நாட்களுக்குள் தங்களுடைய பாஸ்போட் காப்பியை கீழ் கண்ட இரு முகவரிக்கு அனுப்பி வைக்கவும். 

For labour 60 KDwith over time around 100 KD

For Rigger 70 KDwith over time around 120 KD

For driver 80 KD with over time around 150 KD 

(must have Indian heavy license). 

Yearly one month vocation with one month salary


public.mttexpress@gmail.com, muhmdirfan@gmail.com 

மேலும் தொடர்புக்கு:


துபாய் இலியாஸ்: 00971 - 562730116

குவைத் இர்பான்: 00965 - 67723389

நமது நிருபர் :

முஹம்மது இர்பான் (குவைத்)

மவுத்து அறிவிப்பு: "H.ஹம்சா அம்மாள்"




முத்துப்பேட்டை, நவம்பர் 05 : புதுமனை தெரு மர்ஹும் H. ஹபீப் ராவுத்தர் அவர்களின் மனைவியும்N.S.ஹாஜா கமால்,N.S.பஷீர் அஹமது, N.S.ஜகபர் அலி, இவர்களின் சிறிய தாயாரும், S.அமீருதீன் அவர்களின் பாட்டியாவும், முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் தலைவர் H.ஷேக் தாவூது அவர்களின் தாயாருமாகிய H.ஹம்சா அம்மாள் அவர்கள் நேற்று (04.11.2012) இரவு 9.30 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று (05.11.2012) மாலை 5.00 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்

S.அமீருதீன் (AJMAN – U.A.E).

தொடர்புக்கு:-

H.ஷேக் தாவூது                                 - 0091 -9715036338

M.அப்துல் சமது (ரோஜாஸ் ரெடிமேட்)   - 0091 - 9942698669 

N.S.பஷீர் அஹமது                     - 00971 - 050 - 2568579

N.S.ஜகபர் அலி                                    - 00971 – 050 -6554010

S.அமீருதீன்                                          - 00971 – 056 - 7494715

நமது நிருபர் 

K.M. காதர் கனி (பாடகர்)

திருவாரூர் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் கார்த்திக் அவர்களின் புது மனைப் புகுவிழா ..







முத்துப்பேட்டை, அக்டோபர் 28 : முத்துப்பேட்டையில் நேற்று தி.மு.க. கட்சியின் திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் M.S. கார்த்திக் அவர்களின் புகுமனை புகுவிழா மிக சிறப்பாக திறக்கப்பட்டது. இதில் திருவாரூர் மற்றும் தி.மு.க. கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். 
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

முத்துப்பேட்டையில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை...



முத்துப்பேட்டை, அக்டோபர் 28 : முத்துப்பேட்டையில் நேற்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை குத்பா பள்ளி, புதுப் பள்ளி, நூர் பள்ளி, ஆசாத் நகர் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது. அவற்றில் சில புகைப்படக் காட்சிகள் உங்கள் பார்வைக்கு..
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் துபாய்யில் நடைபெற்ற 30 ஆம் ஆண்டு விழா...

  








துபாய், அக்டோபர் 27 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் 30 ஆம் ஆண்டு விழா சார்ஜா அல் குவையர் மார்கெட் அருகில் சுமார் மாலை 7 மணியளவில் நடைபெற்றது. இதில் முத்துப்பேட்டையை சேர்ந்த அனைத்து பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஹசன் அலி கிராத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். N. சேக் தாவூது அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு வரவேற்ப்புரை நிகழ்த்திய TES. யூசுப் சுகைல், சிறப்பு விருந்தினர்கள் M. ஜாபர் அலி (துபாய் இஸ்லாமிய வங்கியின் தலைவர்), KAM . ஹாரூன் ராசீத் (கமர்சியல் வங்கியின் துணைத் தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சங்கத்தின் செயல்பாடு குறித்து சங்கத்தின் தலைவர் H. சேக் தாவுது விரிவாக விளக்கி கூறினார். இதனைத் தொடர்ந்து  PM. ஜாகிர் உசேன் மற்றும் M. அப்துல் ரஹ்மான் சிறப்புரையாற்றினார்கள். கடந்த 29 ஆம் ஆண்டில் உள்ள சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை S. ஜஹபர் உசேன் அவர்கள் வாசித்து காட்டினார். இந்நிகழ்ச்சியின்  இறுதியாக சபீர் ஸாலிஹ் அவர்கள் நன்றயுரை ஆற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து இரவு சிறப்பு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ் 



நபிகளாரை இழிவாக பேசிய இந்துமுன்னணி :கமிஷனரை சந்தித்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்





புளியந்தோப்பு, அக்டோபர் 22 : புளியந்தோப்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் நபிகளாரை இழிவாகப் பேசிய இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரண்டு தினங்களாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் போராடிக் கொண்டுள்ளன. 

இதனால் போலிஸ் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பிகக் இந்து முன்னணியினர் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு கமிசனர் அலுவலகம் முற்றுகை இட முயன்றனர். இதை அறிந்த எஸ்.எம்.பக்கர், செய்யது இக்பால்.பிர்தவ்ஸ் உள்ளிட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளும் இஸ்மாயில், சிக்கந்தர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும் கமிஷனரை சந்தித்து 'கடவுள் கொள்கை பற்றிய ஒரு தஃவா நோட்டிஸ் போட்டவர்களை கைது செய்' என பிரச்சனையை திசை திருப்ப இந்து முன்னணியினர் நாடகம் ஆடுகின்றனர். 

இதை நீங்கள் அனுமதிக்க் கூடாது இல்லை என்றால் இது மிகப் பெரிய பிரச்னையாக வெடிக்கும் என்று வலியுறுத்தினர். அனைத்தையும் கமிசனர், சம்பந்தப்பட்ட இருவரும் தலைமறைவாகி விட்டதால் தேடி வருகிறோம் கைது செய்வது உறுதி என கூறினார். வெளியில் பத்த்ரிக்கையாலர்களை சந்தித்த எஸ்.எம்.பாக்கர் நபிகளாரை இழிவுபடுத்தும் எவரையும் முஸ்லிம்கள் மன்னிக்க மாட்டார்கள் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம் என பேட்டியளித்தார்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:

ஷேக் பரீத்






மவுத்து அறிவிப்பு: "KMS. காதர் பாட்சா"



முத்துப்பேட்டை, அக்டோபர் 21 : புதுத் தெரு மர்ஹும் KM.சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் KMS . மன்னர் என்கிற ராவுத்தர் அவர்களின் சகோதரரும், KMS . நிஜாம் அவர்களின் தகப்பனாருமாகிய "KMS. காதர் பாட்சா" அவர்கள் இன்று இரவு 8.30 மணிக்கு மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:

ASNS.அப்துல் பாரி 

SDPI கட்சியின் கலெக்டர் அலுவலகம் முற்றுகை :பரபரப்பு காட்சிகள் :










திருவாரூர், அக்டோபர் 20 : SDPI கட்சியின் சார்பாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அக்டோபர் 17 லில் சென்னையில் தலைமை செயலகத்தையும்,பிற இடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிடும் போராட்டத்தை ஷோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா அறிவித்திருந்தது. இதை மெய்ப்பிக்கும் வகையில் திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்படுவதற்காக SDPI கட்சி தொண்டர்கள் தயாராயினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாகனங்களில் படையெடுத்து வந்தவண்ணம் இருந்தனர். கூட்டம் கூட கூட போராட்டக்களமாய் உருவெடுத்ததை உணர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை சீர்படுத்தினர்.

சரியாக காலை 11 மணிக்கு ரயில்நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்ட SDPI கட்சியினர்தமிழக அரசே தமிழக அரசேமதுவிலக்கை அமுல்படுத்து, டாஸ்மாக்கை இழுத்துமூடு, என்ற கோசத்துடன் கடைவீதி, மார்கெட் வழியாக மணிகூண்டு வந்தடைந்தனர் .

கூட்டத்தில் SDPI கட்சியின் மாநில செயலாளர் A. அபூபக்கர் சித்திக் கண்டன உரை நிகழ்த்தினார். பின்னர் மணிக்கூண்டிளிருந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். ஒன்றன் பின் ஒன்றாக கைதுசெய்யப்பட்ட அனைவரும் திருவாரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறைவைக்கப்பட்டனர். சிறைவைக்கப்பட்ட அனைவரும் மாலை 4 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
source from: www.muthupettaiexpress.com
களத்தொகுப்பு:

ஜே .ஷேக் பரீத்


முத்துப்பேட்டையில் "பிரியாவிடை" பெற்ற பழமை வாய்ந்த மீட்டர் கேஜ் பேசென்ஜர் ரயில்..



முத்துப்பேட்டை, அக்டோபர் 20 : முத்துப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் நூற்றாண்டுகளை கடந்த மிகவும் பழமை வாய்ந்த வழி தடமாகும். இங்கிருந்து சென்னை முதல் காரைக்குடி வரை பல்வேறு ரயில்கள் சென்று வந்தன. இதனால் சுற்றுலாதலமான முத்துப்பேட்டை மக்கள் என்றும் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் ரயில்வே துறை இந்தியா முழுவதும் படி படியாக எல்லா வழி தடங்களையும் அகல ரயில் பாதையாக மாற்றினார்கள். ஆனால் முத்துப்பேட்டையை உள்ளடக்கிய திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான பாதை மட்டும்  மாற்றப்படாமல் இருந்தது. 

இந்த நிலையில் இந்த வழி தடங்களையும் மாற்ற நிதி வந்த நிலையில் படி படியாக பணிகள் துவங்க ஆரம்பிக்கப்பட்டன. அதன் வகையில் காரைக்குடி, திருவாரூர் பகுதிகளில் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மீதி உள்ள பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி திருவாரூர் வரை பழமை வாய்ந்த பேசென்ஜர் ரயில் சென்று வந்தன. இந்த அனைத்து வழித்தடங்களும் பிரிக்கப்பட்டு பணிகள் துவங்க இருப்பதால் நேற்றுடன் இந்த பேசென்ஜர் ரயிலை நிறுத்த தென்னக ரயில்வே முடிவு செய்து அறிவிக்கப்பட்டன. இதனை முன்னிட்டு பேசென்ஜர் ரயில் கடைசி பயணமாக திருவாரூரிலிருந்து நேற்று காலை முத்துப்பேட்டைக்கு வருகை தந்தது. முத்துப்பேட்டை வர்த்தக கழகம் சார்பில் தலைவர் இரா. இராஜாராமன், கெளவர தலைவர். திருஞானம், ஆகியோர் தலைமையில் பிரியா விடைபெறும் ரயில் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேசென்ஜர் ரயிலுக்கு பெரிய அளவில் மாழை அணிவித்தும் டிரைவருக்கு இனிப்பு வழங்கியும் வழி அனுப்பி வைத்தனர். 

இந்த நிகழ்ச்சியில் வர்த்தகக் கழக பொதுச் செயலாளர் எம்.எஸ். ராமலிங்கம், துணைத் தலைவர் முஹைதீன் பிச்சை, செயற்குழு உறுப்பினர் அசோகன், ரோட்டரி துணை மண்டல ஆளுநர் மெட்ரோ மாலிக், நுகர்வோர் பாதுகாப்பு கழகம் நிர்வாகி சுல்தான் இபுறாஹீம், SDPI கட்சியின் நகர பொறுப்பாளர் நிசார் அஹமது, சேக் முஹைதீன், முஹம்மது முஹைதீன், மற்றும் வர்த்தக கழக நிர்வாகிகள், வியாபாரிகள் பள்ளி மாணவர்கள், பாயணிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

TNTJ.P. ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் பூரண குணமடைய பிரார்த்திப்போம்




சென்னை, அக்டோபர் 13: இஸ்லாமிய பிரசாரகரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  நிறுவனருமான சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு வலது தோள்பட்டையில் கேன்சர்கட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .அவர் பூரண குணமடைந்து மீண்டும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் சமுதாய பனி செய்வதற்கு வல்ல ரஹ்மானிடம் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்திகிறது ... இந்த சகோதரருக்கு அல்லாஹ் விடம் துவ செய்ய வேணுமாய் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 
source from: www.muthupettaiexpress.com
இப்படிக்கு :

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்



முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் 30 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு.









துபாய்,அக்டோபர் 13 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் 30 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி துபாய் டெனாட்ட பார்க்கில் சரியாக 8.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக M. முஹம்மது அலி கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். இக்கூட்டத்திற்கு மூத்த ஆலோசனைக் குழு உறப்பினர் ஜனாப். M. முஹம்மது ஹிலால் அவர்கள் தலைமை வகித்தார். சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து H.ஷேக் தாவூது அவர்கள் சிறப்புரையாற்றினார். 

இதனைத் தொடர்ந்து கடந்த 29 ஆம் ஆண்டின் சங்கத்தின் அனைத்து செயல்பாடுகள் குறித்து தலைவர் S. ஜஹபர் உசேன் அவர்கள் உரைநிகழ்த்தினார். இதனை தொடர்ந்து பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தேர்தல் கண்காணிப்பாளராக M. சாகுல் ஹமீது அவர்கள் நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறுபினர்கள் மற்றும் ஊர்வாசிகள் அனைவருடைய ஒத்த கருத்தோடு ஏக மனதாக புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தார்கள். 

ஆலோசனை குழு உறுப்பினர் P.M. ஜாகிர் உசேன் அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார். மேலும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்களின் விபரம்: 

தலைவர்: H. ஷேக் தாவுது

இணை தலைவர்: M.R.S. அஹமது ராவுத்தர் (செல்லாப்பா)

துணை தலைவர்: K.S.N. ஹசன் குத்தூஸ் 

பொதுச் செயலாளர்: M.A.K. ஹிதாயத்துல்லாஹ் 

இணைச் செயலாளர்: H. தாவூது  கான்

துணைச் செயலாளர்: T.E.S.யூசுப் சுஹைல்

பொருளாளர்: M. சஹாப்தீன், S. ஜஹபர் உசேன் 

மக்கள் தொடர்பாளர்கள்: M.A.K. சிராஜுதீன், A.ஆசாத் காமில் 

தகவல் தொடர்பாளர்கள்: ASNS. அப்துல் பாரி, A. முஹம்மது இல்யாஸ் 
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், 


முத்துப்பேட்டை: காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த கணவன், பெண் தற்கொலை முயற்சி.!



முத்துப்பேட்டை, அக்டோபர் 12 : முத்துப்பேட்டையில் உள்ள செம்படவன்காடு பாமணி ஆற்றில் இளம்பெண் குத்தித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூரை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகள் மீனா (27) பீகாம் பட்டதாரியான இவர் கடந்த ஒருவருடம் தனது தாயார் உடல் நிலை சரி இல்லாததால் ஜாம்புவோநோடை தர்ஹாவில் வேண்டுதலுக்காக தனது தாயாருடன் மீனா தங்கி உள்ளார். 

பல மாதங்கள் தங்கி உள்ள மீனா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியை சேர்ந்தவர் சேக் அப்துல் காதர் அவர்களின் மகன் மீரா உசேன் மீது காதல் ஏற்பட்டு கடந்த வருடம் இருவரும் கோவிலில் வைத்து ரகசிய திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் தனது தாயாரும் இறந்து விட்டார். இந்த நிலையில் மதுக்கூரில் உள்ள மீனாவின் அண்ணன் வீட்டில் இருவரும் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். 

அப்போது மீரா உசேனும் அங்குள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மீராஉசேன் அடிக்கடி காணமல் போவதும் திரும்ப வருவதுமாக இருந்துள்ளார். இந்த நிலையில் மீராஉசேனுக்கு ஏற்கனவே ஆலங்காட்டை சேர்ந்த பெண்ணுடன் திருமணமாகி உள்ள சம்பவம் தெரிகிறது அதிர்ப்த்தி அடைந்த மீனா மீரா உசேனிடம் சண்டை போட்டதாக தெரிகிறது. மேலும் மீரா உசேனை காணவில்லை. மேலும் மீனா எங்கும் தேடியும் கிடைக்காததால் முத்துப்பேட்டைக்கு வந்து முதல் மனைவியிடம் விசாரித்தார் அப்போது முதல் மனைவிடம் தங்கி உள்ளதாக தெரிகிறது. மேலும் இருவரும் மீனாவை  திட்டியதாக கூறப்படுகிறது. 

மேலும் மீரா உசேன் மீனாவை பார்த்து நான் இனிமேல் உன்னிடம் சேர்ந்து  வாழமாட்டேன் என்றும் உறுதியுடன் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்பப்த்தி அடைந்த மீனா என்ன செய்வது என்று நடந்தே பல மீட்டர் தூரம் சென்றுள்ளார். மேலும் இதனால் ஆத்திரம் அடைந்த மீனா இனி நம்ம வாழ்க்கை கிடைக்காது என்று எண்ணி ஒரு வெள்ளை பேப்பர் தாளில் என் சாவுக்கு காரணம் மீரா உசேனும் அவரின் முதல் மனைவியும் தான் காரணம் என்று எழுதி வைத்து விட்டு செம்படவன் காடு பாமணி ஆற்று பாலத்தின் மீது ஏறி குத்தித்து உள்ளார். 

இதனைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த வேல்முருகன், ஸ்டாலின், அழகர் ஆகியோர் குதித்த பெண்ணை காப்பாற்றி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மீனாவை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், ஏட்டு சந்திரமோகன் ஆகியோர் விசாரித்து மீனாக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மீனா தற்போது 5 மாதம் கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்ப்பட்டது.   
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)