6:34 PM
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் கடந்த 28 ஆம் தேதி பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் சமூக விரோதிகள் கடைவீதியில் நின்று கொண்டிருந்த நான்கு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது பயங்கர ஆயுதங்களை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தினர் .
இதனால் நிலைகுலைந்து போன அந்த அப்பாவி இளைஞர்கள் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து நடு ரோட்டிலேயே சாய்ந்தனர் .இதனை அறிந்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் சகோ .தடா ரஹீம் அவர்கள் மல்லிப்பட்டினத்திற்கு நேரில் சென்று விசாரித்தார் .
மல்லிப்பட்டினம் கலவரத்தில் தொடர்புடைய பாஜக வை சேர்ந்த பத்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர் .இந்நிலையில் மல்லிப்பட்டினம் கலவரத்தின் பின்னணியில் உள்ளவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் தமிழக டிஜிபி ராமானுஜத்திடம் தடா ரஹீம் நேரில் சென்று மனு அளித்தார் .
பின்னர் நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் பேசிய அவர் ,மல்லிபட்டினம் கலவரத்தை பின்னணியில் இருந்து தூண்டியவர்கள் , காரணமானவர்கள் இன்னும் கைது செய்ய படவில்லை என குற்றம் சாட்டினார் . முத்துப்பேட்டையை சேர்ந்த பாஜக வினருக்கும் கலவரத்தில் தொடர்பு இருப்பதாகவும் ,முத்துப்பேட்டையிலிருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் மூன்று மூன்று பேராக மல்லிப்பட்டினத்திற்கு வந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார் .
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உருவப்படம் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனங்களுடன் பாஜக வினர் வந்ததை அதிராம்பட்டினம் மற்றும் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளதாகவும் ,அதில் முத்துப்பேட்டையில் அமைதியையும் மதநல்லினக்கத்தையும் தொடர்ந்து சீர்குலைத்து வருபவனும் ,சிலை கடத்தல் கும்பலில் மிக நெருங்கிய தொடர்பு உள்ளவனும் ,பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளவனும் , முத்துப்பேட்டையில் மத கலவரத்தை தூண்டியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படவனுமான மகேஷ் என்பவனை அடையாளம் தெரிந்த அப்பகுதி பொதுமக்கள் கண்டுள்ளதாகவும் ,இதனை அப்பகுதி மக்களே தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார் .
இந்த கலவரமானது ஏதோ திடிரென தன்னிச்சையாக நடந்த கலவரம் அல்ல என்றும் ,இது முன்கூட்டியே பல்வேறு நபர்களால் நன்கு திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் அவர் தெரிவித்தார் .தமிழக முதலமைச்சர் மாண்புமிகுஅம்மாஅவர்களின்பொற்காலஆட்சியில்தமிழகம்வளமானதாகவும் ,
அமைதி பூங்காவாகவும் திகழ்வதாகவும் ,ஒரு சில சமூக விரோதிகள் மத கலவரங்களை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆட்சிக்கு களங்கம் கற்ப்பிக்க முயல்வதாகவும் ,எனவே இவர்கள் போன்ற சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் தடா ரஹீம் கூறினார் .
7:12 PM
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்கள் மிகுந்த கவலையளிப்பதோடு ,சமூக நல்லினத்திற்கும் மதஒற்றுமைக்கும் விடப்பட்ட சவாலாகவே பார்க்க முடிகிறது .கடந்த மாதம் மல்லிப்பட்டினத்தில் கடைவீதியில் நின்றுகொண்டிருந்த அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் நான்கு பேரை பத்துக்கும் மேற்பட்ட சமூக விரோத கும்பல் பயங்கர ஆயுதங்களை கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தியது .
இதனால் அப்பகுதி முழுவதும் ஒருவித பதற்றமான சூழ்நிலை ஏற்ப்பட்டது . தஞ்சை மாவட்ட காவல்துறையினரின் துரித நடவடிக்கையினால் சம்பவத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் .
காவல்துறையினரின் சிறப்பான நடவடிக்கையினால் மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் ,சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது .இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பது மட்டுமில்லாமல் காவல்துறை அதிகாரிகளுக்கு தங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர் .
மல்லிப்பட்டினத்தில் மனிதநேயத்தையும் ,பொதுஅமைதியையும்,மதநல்லினக்கத்தையும் வளர்க்க வேண்டும் .மதநல்லிணக்கத்தை கொண்டு வரவேண்டும் என்றால் இரத்த தான முகாம்கள் ,இலவச மருத்துவ முகாம்கள் ,கல்வி உதவிகள் உள்ளிட்டவைகளை அந்த ஊரில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களுக்கும் குறிப்பாக நமது தொப்புள் கொடிஉறவுகளான இந்து சகோதரர்களுக்கு வழங்கிட வேண்டும் .
மேலும் நட்புறவை வலுப்படுத்த மதநல்லிணக்க விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் .பல நூற்றாண்டுகளாக இந்துக்களும் முஸ்லீம்களும் அண்ணன் தம்பிகளாகவும் மாமன் மச்சான்கலாகவும் கடைபிடித்து வரும் வாழ்க்கை நெறிகளை கடைபிடிக்க வேண்டும் .
அதே போல் காலம் காலமாக நடைமுறை வழக்கத்தில் உள்ளது போல் இஸ்லாமிய பண்டிகை காலங்களின் போது வீட்டில் சமைக்கும் உணவு பண்ட வகைகளை இந்து சகோதரர்கள் வீட்டிற்கு கொடுப்பதை அதிகரிக்க வேண்டும் .மேலும் வன்முறையில் ஈடுப்பட்ட ,ஈடுப்பட்டு கொண்டிருக்கும் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களது பெற்றோர்களிடம் நாம் காலம் காலமாக கடைபிடித்து வரும் சகோதரத்துவத்தை விளக்கி கூற வேண்டும் .
இப்படி செய்வதினால் மதநல்லிணக்கம் ,மனிதநேயம் மற்றும் பொது அமைதி ஏற்படுவதோடு மட்டுமில்லாமல் அப்பகுதியில் வாழும் அனைத்து சமுதாய மக்களிடையே ஒரு புதிய மறுமலர்ச்சி ஏற்ப்படும்
.இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் ,மதநல்லிணக்கம் காப்போம் ...
மதநல்லிணக்கம் காக்க முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் என்றென்றும் துணை நிற்கும் .
அன்புடன்......
ஜே ;ஷேக்பரீத்
ஆசிரியர்
MA .JOURNALISM AND MASS COMMUNICATION
முத்துப்பேட்டையில் அனைத்து சமுதாய மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான மகளிர் கல்லூரி விரைவில் மிக பிரம்மாண்டமான முறையில் கட்டி எழுப்பப்பட உள்ளது .இந்த கல்லூரியை முத்துப்பேட்டையை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் மனித நேயருமான ஹாஜி .MA .தமீம் அவர்கள் கட்டி எழுப்ப உள்ளார்கள் .இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது .முழுக்க முழுக்க பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கட்டப்படும் இந்த கல்லூரிக்கு ரஹ்மத் சிராஜ் மகளிர் கல்லூரி என்று பெயரிடப்பட்டுள்ளது .ஹாஜி MA தமீம் அவர்களின் மக்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம் ..ஆமீன்
12:30 PM
கடந்த 28 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் கும்பல்களால் நான்கு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கப்பட்டனர் .
ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக கும்பல்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் அர்ஷத் ,முஹமது மைதீன் ,அமீன் ,மற்றும் நூருல் அமீன் ஆகியோர் ரத்த காயங்களுடன் உயிர் தப்பினர் .இதில் அமீன் என்ற இளைஞர் ஊனமுற்றவர் என்பதால் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் சிக்கிகொண்டார் .
இதனால் கவலைக்கிடமான அமீன் தஞ்சையில் உள்ள மீனாட்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .அர்ஷத்,முஹம்மது மைதீன் மற்றும் நூருல் அமீன் ஆகியோர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் செய்தி குழுவினர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்தனர் .அப்போது தங்கள் மூன்று பேரையும்ஒரே படுக்கையில் (BED ) தங்க வைத்திருப்பதாக குற்றம் சாட்டினர் .இதனையடுத்து நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் செய்தி குழுவினர் தமிழக சுகாதாரத்துறை ,தஞ்சை மாவட்ட முதன்மை மருத்துவர் ,தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் ,ஆகியோருக்கு தகவல் அனுப்பினர் .
இந்நிலையில் தஞ்சை மருத்துவகல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் இன்று தனித்தனியே படுக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது .(அல்லாஹு அக்பர் )
4:21 PM
கடந்த அன்று மல்லிப்பட்டினத்தில் உள்ள கடைவீதியோரம் அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் நான்கு பேர் நின்றுகொண்டிருந்தனர் .அப்போது சுமார் 30 க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் தேசவிரோத கும்பல் 10 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்து அங்கு நின்றுகொண்டிருந்த அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் 4 பேரையும் சராமரியாக அவர்கள் கைகளில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி விட்டு கண் இமைக்கும் நேரத்திற்குள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர் .
ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் தாக்கியதில் அர்ஷத் (26),நூருல் அமீன் (22), முஹமது மைதீன் (26),மற்றும் அமீன் (20) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர் .இதில் அமீன் என்றநபர் கால் ஊனமுற்றவர் என்பதால் அங்கிருந்து ஓடமுடியாமல் பயங்கரவாதிகளின் கோர தாக்குதலில் முழுமையாக சிக்கி கொண்டுள்ளார் .
இதனால் அதிராம்பட்டினம் ,முத்துப்பேட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பதற்றமானது . இதனை அறிந்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் சகோதரர் .தடா .ஜே .அப்துல் ரஹீம் அவர்கள் செனையிலிருந்து நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள ஆசிரியர் ஷேக் பரீத் வீட்டிற்கு விரைவாக வந்து சேர்ந்தார் .
பின்னர் அங்கிருந்து தடா ரஹீம் மற்றும் அவர்களுடன் வந்திருந்த சகோதரர்களுடன் முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள ஆசிரியர் ஷேக் பரீத் , உள்ளிட்டோர் சரியாக 3:30 மணியளவில் மல்லிபட்டினம் சென்றடைந்தனர் .தடா ரஹீம் அவர்கள மல்லிப்பட்டினம் வருவதை முன்கூட்டியே அறிந்துகொண்ட அந்த ஊர் இளைஞர்கள் பெரும் திரளாக குழுமி இருந்தனர் .
நம்மை கண்ட அவர்கள் அனைவரும் நாங்கள் வந்த வாகனங்களை சுற்றிக்கொண்டு நம்மை அன்போடு வரவேற்று மல்லிப்பட்டினம் பள்ளிவாசலுக்குள் அழைத்து சென்றனர் . ஜமாஅத் நிர்வாகிகளை சந்திக்க முயற்சித்தோம் அனால் பலனில்லை பின்னர் அங்கே திரண்டிருந்த இளைஞர்கள் பட்டாளத்தின் மத்தியில் தடா ரஹீம் அவர்கள் கலந்துரையாடினார் .அப்போது இஸ்லாம் வன்முறையை ஆதரிக்கவில்லை என்றும் ,ஆனால் அநீதி நடப்பதை தட்டி கேட்க வலியுறுத்துவதாகவும் கூறினார்
.ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள ஒவ்வொருவரும் ஆயுதம் வைத்து கொள்ள வேண்டும் என்றும் ,ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் தாக்க வந்தால் அவர்களை திருப்பி அடிக்க வேண்டும் என்றும் கூறினார் .அப்போதுதான் நாம் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட முடியும் என்றும் கூறினார் .அப்போது அங்கே குழுமி இருந்த இளைஞர்கள் அல்லாஹு அக்பர் ,அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டனர் ..இதனால் அந்த பகுதியே சிறிது நேரம் பரபரப்பானது .
.இதனை மோப்பம் பிடித்த உளவுத்துறையினர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பள்ளிவாசல் அருகில் வந்து நின்றனர் .அவர்களை கண்டு சற்றும் பொருட்படுத்தாத இளைஞர்கள் கூட்டம் ,கலவரத்தால் பெரிதும் பாதிப்பிற்குள்ளான பழமை வாய்ந்த தர்காவிற்கு நம்மை அழைத்து சென்றனர் .அங்கே ஆர் எஸ் எஸ் தேச விரோத ,பயங்கரவாத கும்பல் ,தர்காவின் சுற்றுச்சுவர் ,காத்தாடிகள் ,டியுபு லைட்டுகள் ,சுவிட்சு போடுகள்,உள்ளிட்டவைகளை அடித்து உடைத்துள்ளனர் .
பின்னர் அங்கிருந்து மல்லிபட்டினம் இளைஞர்கள் பட்டாளத்துடன் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை நோக்கி விரைந்தோம் .
சரியாக இரவு 8 மணிக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி சென்றடைந்தோம் .பின்னர் 26 ஆவது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நூருல் அமீன் ,அர்ஷத் ,முஹம்மது மைதீன் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம் .
அப்போது எங்களிடம் பேசிய அர்ஷத் ,நூருல் அமீன் ,மற்றும் முஹம்மது மைதீன் ஆகியோர் ,தாங்கள் மூவரையும் ஒரே படுக்கையில் படுக்க வைத்திருப்பதாகவும் ,தங்களுக்கு மிகவும் பொடுபோக்காக சிகிச்சையளித்து வருவதாகவும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர் .
உடனே மருத்துவமனையின் டீன் ஐ சகோ தடா ரஹீம் மற்றும் முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் செய்திக்குளுவினர் சந்திக்க முயற்சித்தோம் ஆனால் அவர் எங்களை சந்திக்க மறுத்துவிட்டார்
இதனைத் தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கால் ஊனமுற்றவரான அமீன் அவர்களை பார்வையிட தஞ்சைபுதிய பேரூந்து நிலையம் எதிரே உள்ள மீனாட்சி மருத்துவமனைக்கு விரைந்தோம் .அங்கே அவசர சிகிச்சை பிரிவில் அமீன் சிகிச்சை பெற்று வருவதால் தடா ரஹீம் மட்டும் உள்ளே சென்று பார்வையிட அனுமதிக்கபட்டார் .பின்னர் அந்த மருத்துவமனையில் இருந்த அமீனின் உறவினரை தடா ரஹீம் சந்தித்து ஆறுதல் கூறினார் .
நேரடி களத்தொகுப்பு :ஜே :ஷேக்பரீத்
சென்னை, மே 31: இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன். பிரபல நடிகை மோனிகாஇஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன். தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு‘அழகி’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர் மோனிகா. அதன்பின் ‘பகவதி’,
‘சண்டக்கோழி’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர, வேடங்களில் நடித்து வந்தார். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ மற்றும் ‘சிலந்தி’ ஆகிய படங்கள் இவருக்கு பெயர் பெற்று தந்தது. இவர் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். மோனிகா என பெயர் கொண்ட இவர் தற்போது எம்.ஜி.ரஹீமா என பெயர் மாற்றிக் கொண்டுள்ளார்.
இஸ்லாம் மதத்திற்குமாறியதுபற்றிஇவர்
கூறியதாவது:-
நான் இஸ்லாம் மதத்தை 2010-ல் இருந்தே பின்பற்றுகிறேன். எனது தந்தை கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். என் தாய் இந்து மதத்தை சேர்ந்தவர். நான் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளேன்.நான் மதம் மாறுவதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த என் பெற்றோர்கள் பிறகு சம்மதித்தனர்.
நான் நடிகையாக இருப்பதால் வெளியில் செல்வதற்கு சிரமமாக
இருந்தது. அதனால் பர்தா அணிய ஆரம்பித்தேன். இதுஎனக்குசவுகரியமாகவும்
சுதந்திரமாகவும் இருந்தது. அதன்பிறகுபர்தாஅணிவதால் இஸ்லாம்மதத்தை பற்றி தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டேன். இஸ்லாம் மதத்தின் கொள்கைகள்
எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நான் யாருடைய கட்டாயத்திற்காகவும்
மாறவில்லை. இனி சினிமாவில் நடிக்க
மாட்டேன். எனதுபெயரைஎம்.ஜி.ரஹிமாஎன்றுமாற்றிவிட்டேன்
என அவர் தெரிவித்தார்.
மல்லிபட்டினம், மே 29: மல்லிபட்டினத்தில் இஸ்லாமிய இளைஞர் கள் மீது R.S.S.பயங்கரவாதிகள் கொலைவெறிதாக்குதல் தடத்தினர் அதில் நான்கு பேரில் ஒருவருக்கு கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார். அவற்றில் நூருல் அமீன் 26, அமீன் 27, முஹம்மது மைதீன் 30, அர்ஷாத் 26, இதில் அமீன் என்பவர் அபாயகரமான நிலையில் உள்ளார் என்பதும் இவர் ஊன முற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நமது நிருபர்:
AKL. அப்துல் ரஹ்மான்