முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் குறித்த ஓர் பார்வை...














முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 20 : முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சியினரும் ஒன்று சேர்ந்து அவரவர்களுக்கு தெரிந்ததை மிக சிறப்பான முறையில் பேனர்களை வைத்து குட்டியார் பள்ளி வாசல் மற்றும் ஆசாத் நகர் பள்ளி வாசலை சுற்றி அலங்கரித்துல்லானர். இது குறித்த ஓர் பார்வையாக நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
source from:www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

முத்துப்பேட்டையில் கோலாகலமாக கொண்டாடப் பட்ட நோன்பு பெருநாள் ஓர் பார்வை.













முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 20: முத்துப்பேட்டையில் இன்று நோன்பு பெருநாள் தொழுகை சரியாக 7.30 மணியளவில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுத்தெரு திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களும், ஆண்களும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர். தொழுகைக்கு பின்பு சிறப்பு பயனும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து குட்டியார் ஜும்மாஹ் பள்ளிவாசலில் சரியாக 9 மணியளவில் தொழுகை நடைபெற்றுது. இதனைத்தொடர்ந்து ஆசாத் நகர் ஜும்மாஹ் பள்ளி வாசாளில் தொழுகை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சிறப்பு பயானும் நடைபெற்றது. பயன் முடிந்த வுடன் ஒவ்வொரு சகோதரரும் தங்களுடைய அன்பை பரிமாறிக்கொண்டனர். மேலும் புதுத்தெரு பள்ளிவாசல் மற்றும் மக்கா பள்ளி வாசலிலும் பெருநாள் தொழுகை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,

வேற்றுமைகளை மறந்து முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் - மஸ்ஜித்துல் அக்ஸா இமாம்


ஜெருசலம் 13 : இஸ்லாத்தில் மூன்று முக்கிய புனித மஸ்ஜிதுகளில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸாவில் ரமலானின் நான்காவது வெள்ளிக்கிழமையன்று மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையில் பங்கேற்றனர்.

இஸ்ரேலின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி லட்சக்கணக்கான மக்கள் பரிசுத்தமான மஸ்ஜிதில் நடந்த ஜும்ஆவில் கலந்துகொண்டனர்.

மஸ்ஜிதுல் அக்ஸாவில் ஜும்ஆ உரை நிகழ்த்திய இமாம் தனது உரையில் கூறியது: ‘ஃபலஸ்தீன் மற்றும் புனித மஸ்ஜிதான மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பது உலக முஸ்லிம்களின் கடமையாகும். இவற்றின் பாதுகாப்பு என்பது உலக முஸ்லிம்களின் நம்பிக்கையில் உட்பட்டதாகும். எல்லா வேற்றுமைகளையும் மறந்து முஸ்லிம்கள் ஒன்றிணைந்து குத்ஸின் விடுதலைக்காக பாடுபட வேண்டும்’ என கூறினார்.

மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் குப்பத்துஸ்ஸுஹ்ராவின் முற்றங்கள் ஆண்கள் மற்றும் பெண்களால் நிரம்பி வழிந்தன. ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஃபலஸ்தீன் மற்றும் இதர நாடுகளில் உயிர் தியாகம் புரிந்த முஸ்லிம்களுக்கு ஜனாஸா தொழுகையும்(இறந்தவர்களுக்கான பிரார்த்தனை) சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றன.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

சவூதி அரேபியா மன்னர் அப்துல்ல்லா கண் திறந்தார் - மியன்மார் முஸ்லிம்களுக்கு உதவி


மியான்மர்,ஆகஸ்ட் 13 : கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு, 250 கோடி ரூபாய் (இந்திய மதிப்பு) பெறுமானமுள்ள உதவிகளை சவுதி அரேபியா அரசு வழங்க உள்ளது.

கடந்த ஜூன் மாதம், முஸ்லிம்களின் குடிசைகளை, தீ வைத்து கொளுத்தி விட்டதாகக் கூறி, பெரிய அளவில் கலவரம் மூண்டது. பாதுகாப்பு கருதி, ஏராளமான முஸ்லிம்கள், தங்கள் தாயகமான வங்கதேசத்துக்குள் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

மியான்மரில் உள்ள முஸ்லிம்கள் அந்நாட்டு ராணுவத்தால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதை, இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கண்டித்துள்ளன. இதற்கிடையே இந்த மாநாட்டின் உறுப்பினரான சவுதி அரேபியா, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் முஸ்லிம்களுக்கு, 250 கோடி ரூபாய் பெறுமானமுள்ள உதவிகளை அறிவித்துள்ளது. இந்த நிவாரணப் பொருட்களை உடனடியாக மியான்மருக்கு அனுப்ப, சவுதி மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு? கவனிப்பாரா தமிழக முதல்வர்??


புதுக்கோட்டை, ஆகஸ்ட் 11 : புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் சிறுமருதூர்.அங்கு இஸ்லாமிய மக்களும், உடையார் இன மக்களும், முக்குலத்தோர் இன மக்களும் , தலித் மக்களும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். இஸ்லாமிய மக்களுக்கு நிலம் சொத்துகள் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது இவற்றின் மீது நெடுங்காலமாக கண் வைத்து இருந்த அந்த ஊரை சார்ந்த ராஜநாயகம் என்பவர் அங்கு வாழ்ந்து வந்த 30 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களை குண்டர்களை கொண்டு அடித்து சித்திரவதை செய்து கொடுமை படுத்தினார், பின்பு அனைவரின் சொத்துகளையும் பறித்து கொண்டு அந்த மக்களை ஊரை விட்டே விரட்டி விட்டார். எந்த வம்புக்கும் போகாத அந்த அப்பாவி மக்கள் எதிர்க்க தைரியம் இல்லாத நிலையில் அவர்கள் இன்று எங்கு இருக்கிறார்கள் , உயிரோடுதான் இருக்கிறார்களா? இல்லையா என தெரிய வில்லை. இந்த பிரச்சினையை கிளப்பிய சில சமுதாய அமைப்புகள் கூட வாங்க வேண்டியதை வாங்கி கொண்டு அமைதியாய் இருந்து விட்டன.

அந்த அப்பாவி மக்களை விரட்டியதோடு இல்லாமல் அங்கு அமைந்து இருந்த பழமையான ஜும்மா பள்ளிவாசலும்தரை மட்டமாகி உள்ளது.இவ்வளவு அநியாயம் நடந்தும் இந்த விஷயம் வெளி உலகத்துக்கு வராமல் மிகவும் கவனமாக பார்த்துகொண்டார் ராஜநாயகம்.

கடந்த பொது தேர்தலில் அறந்தாங்கி தொகுதிக்கு நல்ல பிள்ளையாக சீட்டும் வாங்கி தி.மு.க. ஆட்சியில் மேல் மக்கள் இருந்த வெறுப்பின் காரணமாக இவரும் அந்த அலையில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவுடன் அதிகாரம் கைக்கு வந்து விட்டது என்ற மமதையில் அந்த விரப்பட்ட மக்களில் ஒருவரான நைனா முகமது என்பவர் வாசித்த வீட்டை அபகரித்து இன்று அந்த வீட்டில் தான் குடி இருக்கிறார்.
பள்ளிவாசல் இருந்த இடத்தின் மேல் தார் சாலை போட்டு பள்ளிவாசல் இருந்த அடையாளமே இல்லாமல் செய்து விட்டார். ஆனால் வருவாய் துறையின் பதிவுகளில் இவை அனைத்தும் தெளிவாய் உள்ளது. இன்று வரை ராஜநாயகம் வசிக்கும் வீடு அந்த இஸ்லாமிய சமுதாய நண்பர்கள் பெயரில் தான் அணைத்து ரெக்கார்டுகள் உள்ளன. பள்ளிவாசலை இடித்து அதன் மேல சாலை போட்டு எல்லா வற்றையும் அபகரித்து உள்ளார். பாதிக்க பட்டவர்கள் கேட்கவே பயபடுகின்றனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை. உயிரோடுதான் உள்ளார்களா என்பது கூட சந்தேகமாக உள்ளது.

எல்லோரையும் விரட்டி விட்டு இன்று அவர் மட்டும் சந்தோசமாக இருக்கிறார்..

சமூக சேவகர்கள் யாராவது இதை தட்டி கேட்டால் தன்னுடைய பதவி அதிகாரங்களை காட்டி மிரட்டுகிறார் . இவரால் அ. இ. அ. தி. மு.க கட்சிக்கும் தூய்மையான ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படும் சூழல் உள்ளதால் இதன் உண்மை நிலைமையை தமிழகமுதல்வர்
உளவுத்துறையின் மூலமாக அறிந்து அவர் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் , இஸ்லாமிய அமைப்புகள் , மனித உரிமை இயக்கங்கள் போன்றவை முன் வர வேண்டும். எந்தவித பிரச்சனையிலும் ஈடுபடாத அந்த மக்களின் நிலைமை என்று என்ன வென்றே தெரியவில்லை. அதிகாரம், குண்டர்களின் துணை என வலம் வரும் இவரை போன்றவர்களை எதிர்ப்பது கொஞ்சம் சிரமம் தான். ஆனால் மக்கள் சக்தி ஒன்று சேர்ந்தால் சர்வாதிகாரன் ஹிட்லருக்கு ஏற்பட்ட நிலைமை தான் இவரை போன்றவர்களுக்கும் ஏற்படும் என்பதனை நாம் தெரிய படுத்துவோம்..

தயவு செய்து இந்த செய்தியை படிக்கும் அனைத்து நண்பர்களும் இதை share செய்யவும். எங்காயாவது ஒளிந்து வாழும் அந்த மக்கள் வெளிச்சத்தின் முன்னே வர ஒரு தைரியம் கிடைக்கும்.
கேட்க கூட நாதி இல்லாத அந்த இஸ்லாமிய குடும்பங்களுக்காக சகோதருக்காக நம்மால் ஆனா உதவியை செய்வோம்.

வெளி உலகத்துக்கு வராமல் இருக்கும் இந்த செய்தியை வெளி உலகத்திற்கு எப்படி கொண்டு வந்து அவர்களுக்கு தண்டனை வாங்கி தந்து பாதிக்கப்பட்ட அந்த மக்கள் தன்னுடைய சொந்த வீட்டுக்கு செல்லும் நாளை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.. மக்களே ஒன்று கூடுங்கள்..
source from: www.muthupettaiexpress.blogspot.com
தகவல் - முஹம்மது யூசுப், கோட்டைப்பட்டினம்,

முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியினர் நடத்திய 3 ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி.









துபாய், ஆகஸ்ட் 11 : முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியினர் சார்பில் மாபெரும் மூன்றாம் ஆண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமான முறையில் துபாயில் உள்ள அல் தவார் பார்க் என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுமார் 5 மணியிலிருந்து முத்துப்பேட்டை மக்கள் கூட்டம் கூட்டமாக அல் தவார் பார்க்கை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக மிக ஆர்வத்துடன் படையெடுத்து வந்த வண்ணமாய் காட்சியளித்தது.

இங்கு நோன்பு திறப்பதற்காக நோன்பு காஞ்சி, பல்வேறு விதமான பல வகைகள், ஜூஸ்கள், மற்றும் பேரிச்சை பழங்கள் ஆகியவைகள் இப்தார் விருந்திற்காக வைக்கப்பட்டிருந்தது. மேலும் சரியாக 6 மணிக்கெல்லாம் அல் தவார் பார்க் முத்துப்பேட்டை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. பின்னர் சரியாக 7.05 மணியளவில் நோன்பு திறக்கப்பட்டு மக்ரிப் தொழுகையும் இங்கு நடைபெற்றது. தொழுகையின் முடிவின் போது சிறப்பு பயானும் இங்கு நடைபெற்றது. பின்னர் சிறப்பு விருந்தும் அளிக்கப்பட்டு, இந்த நிகழ்ச்சி மிகவும் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

மேலும் நிகழ்ச்சியின் முடிவில் முத்துப்பேட்டை சகோதரர்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய அன்பை பரிமாறிக்கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும், இது போன்ற நிகழ்ச்சி துபாய் வாழ் முத்துப்பேட்டை நண்பர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது என்றும் இதில் கலந்து கொண்ட அனைவரும் வாழ்த்தினார்கள். மேலும் இது தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் இறைவனிடம் பிராத்தித்தனர். இந்நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிகளை முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணி நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

துபாயிலிருந்து முத்துப்பேட்டை J .சேக் பரீது

முத்துப்பேட்டை பேரூராட்சி விவசாய நிலத்தை அபகரிக்க முடிவு, தமிழக முதல்வருக்கு கோரிக்கை.


முத்துபேட்டை, ஆகஸ்ட் 09 : முத்துப்பேட்டை தெற்குக்காடு பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்பி உள்ள தனது கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

முத்துப்பேட்டை தெற்குக்காடு புல எண் 102 - 9 ல் உள்ள மானாவரி நிலமானது 1980 ஆம் ஆண்டு எனது பெயரில் பதிவு செய்ப்பட்ட நஞ்சை நிலத்தினை சாகுபடி செய்து வருகிறேன். அரசுக்கு செலுத்த வேண்டிய வாயிதாக்கலையும், இன்றுவரை செலுத்தி வருகிறேன். தற்போது முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தால் திட கழிவு மற்றும் பாதாள சாக்கடை அமைக்க எனது நிலம் கையகப்படுத்தப்பட போவதாக நிறைவேற்றப்பட போவதாக தகவல் அறிய பெற்றேன்.

இந்த சம்பவம் எங்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்தி உள்ளது. அம்மா அவர்களே மேற்படி பேரூராட்சி நிர்வாகம் சரியாக ஆய்வு செய்யாமல் குறிப்பாக எனது நிலத்தை கையகப்படுத்த தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். அம்மா... ஏற்கனவே நான் எனது பட்டா நிலத்தில் E.C.R. ரோட்டுக்கு இடம் கொடுத்துள்ளேன். மீண்டும் பேரூராட்சி நிர்வாகம் எனது நிலத்தை கையகப் படுத்தினால் நான் முற்றிலுமாக பாதிக்கப் படுவேன்.

சாகுபடி செய்யப்படாத தரிசு நிலங்கள் எனது விலை நிலத்தின் அருகே ஏராளமாக உள்ளன. இது பேரூராட்சி நிர்வாகத்தினருக்கும் நன்றாகவே தெரியும். இதை விடுத்து குறிப்பாக எனது விலை நிலத்தை மட்டும் கையகப்படுத்த நினைப்பது எந்த வகையில் நியாயமாகும். அரசு ஆணை குறிப்பில் சாகுபடி செய்யப்படாத நிலங்கள் அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்ற உத்தரவு பிரப்பிக்கப்பட்டுலத்தை நான் அறிவேன். எனவே அம்மா அவர்கள் சம்மந்தப்பட்ட வருவாய்த்துறை மட்டும் பேரூராட்சி நிர்வாகத்துறை அலுவலர்களுக்கு எனது விலை நிலத்தை ஆக்கிரப்பிப்பு செய்யாதவாறு உரிய உத்தரவிட்டு தீர்மானத்தை ரத்து செய்யவும், உரிய ஆவணம் செய்யும்படி பணிவுடன் வேண்டுகிறேன். மேலும் எனது விலை நிலம் பள்ளப் பகுதியாகும். பேரூராட்சி நிவாகம் ஏற்படுத்தும் எந்த திட்டங்களும் வீணாகும், "இந்த திட்டத்தின் கீழ் எங்களது விலை நிலத்தை கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும்" இவ்வாறு தனது மனுவில் கூறி உள்ளார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

'நான் அல்லாஹ்வை தேர்ந்தெடுத்துள்ளேன்' - ஒரு நடிகையின் பேட்டி...


உலகம், ஆகஸ்ட் 07 : பிரசித்திப் பெற்ற எகிப்திய திரைப்பட நடிகையான ஹனான் துர்க் நடிப்புத் தொழிலை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.“நானும் இனிப்பும்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் இதனை அறிவித்தார்.

“ஹிஜாபும், நடிப்பும் ஒத்துப்போகுமா? என்பது குறித்து நான் குழப்பத்தில் இருந்தேன். ஆனால், நடிப்புத் தொழிலில் இருந்து விலகி இருப்பதே சிறந்தது என எனக்கு தோன்றுகிறது. நான் அல்லாஹ்வை தேர்ந்தெடுத்துள்ளேன். ஆனால், நடிப்புத் தொழில் ஹராம் என நான் கருதவில்லை. மத ரீதியான கலை நிகழ்ச்சிகளிலும் இனி நான் பங்கேற்கமாட்டேன்” இவ்வாறு ஹனான் துர்க் தெரிவித்துள்ளார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நன்றி - தூது

மவுத்து அறிவிப்பு: "முஹம்மது மைதீன்"


முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 07 : ஆசாத் நகர் K.S. காதர் நெய்னா மலை அவர்களின் மகனும், அதிரை S.M. அபூபக்கர் அவர்களின் மருமகனும்,செய்து இபுறாஹீம் மர்ஹும் தாவூத் சுல்தான், மர்ஹும் ஜமால் முஹம்மது, தஸ்தகீர் இவர்களின் தம்பியும், மர்ஹும் மெளலா அபூபக்கர், மர்ஹும் செய்து அலி இவர்களின் மைத்துனரும், நெய்னா முஹம்மது, அன்வர் சுல்தான், ஜஹபர் அலி இவர்களின் மச்சானும், சேக்மைதீன், அமீர் இவர்களின் மாமாவும், பகுருதீன், ஜாஹிர், கலிமுல்லாஹ் இவர்களின் சஹலையும், அபூபக்கர், நசுபுதீன் இவர்களின் மாமனாருமாகிய முஹம்மது மைதீன் அவர்கள் நேற்று இரவு 12.15 மணிக்கு மவுத்த்காகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்). அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணிக்கு ஆசாத் நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்

k. தஸ்தகீர் அவர்கள்

நமது நிருபர்

K.M. காதர் கனி (பாடகர்)

அபுதாபியில் உள்ள ETISALAT என்ற தொலைபேசி நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை.


அபுதாபி, ஆகஸ்ட் 04 : பிரபல எதிசலாத் என்ற தொலைபேசி நிறுவனத்திற்கு கீழ் கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். நேர்முகத் தேர்வு வருகிற 11-08-2012 சென்னையில் நடைபெறும்.

SL: Position: No's: Salary:
1. Telecom Engineers 15 4,000 - 6,000 Dhs
2. Senior Telecom Technicians 20 3,000 - 5,000 Dhs
3. Junior Telecom Technicians 30 2,000 - 3,500 Dhs
4. Network Riggers 30 1,500 - 2,500 Dhs

மேலும் தொடர்புக்கு யாசர்: 7200500225.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

யாசர்

முத்துப்பேட்டை பேரூராட்சி உள் கூட்டத்தில் நடந்தது என்ன.? ஓர் நேரடி ரிப்போர்ட்.


முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 04: முத்துப்பேட்டை மன்ற கூட்டம் கடந்த 27.07.2012 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணிக்கு துவங்கியது. இப்பேரூராட்சி மன்ற கூட்டத்தில் சில பொருட்கள் மீது கருத்துக்கள் கூறப்பட்ட போது நடைபெற்ற கருத்துரையாடல்களை மக்களின் கவனத்திற்கு சமர்பிக்கின்றோம்.

பேரூராட்சி மன்ற கூட்டத்தின் போது சிவா ஐயப்பன் என்பவர் சென்ற மாத கூட்டத்தில் ஒத்திவைப்பு செய்யப்பட தீர்மானங்களை மேற்கோள் காட்டி இந்த மாத கூட்டப் பொருளில் (அஜெண்டாவில்) காட்டப்படாமால் தன்னிச்சையாக மீண்டும் செலவினங்களுக்காக ஒப்புதல் கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டுல்லாதே அது ஏன்.? என்றும் சென்ற மாத செலவின வவுட்சர்களும் இந்த மாத செலவின வவுட்சர்களும் மன்ற உருபினர்களுக்கு காட்டப்படாமல் மறைக்கப்படுகிரதே இதுவும் ஏன்.? என்ற இரு கேள்விகளை எழுப்பினார்.

இதற்க்கு பதிலளித்த பேரூராட்சி மன்றத் தலைவர் நாங்கள் மட்டும் பார்த்தல் போதுமானது உங்களிடமெல்லாம் காட்ட தேவை இல்லை என்றும், மேலும் உதவி இயக்குனர், கலெக்டர் யாரிடத்திலும் புகார் செய்து கொள் என்றும் கூறி உள்ளார். இவ்விவாதத்தின் போது கலந்து கொண்ட பாவா பகுருதீன் அவர்கள் மன்ற உறுபினர்கள் கவுன்சிலர்களை பார்க்க உரிமை உண்டு என்றும், இது கடந்த கால கட்டத்தில் செயல்முறைப்படுத்தப்பட்ட ஒன்றாகும் என்றும் அப்போது அவர் கூறியுள்ளார். மன்ற உருபினர்களுக்கு வரவு செலவு வவுத்கார்களை பார்க்க அனுமதிக்க வில்லை என்றால் ஒப்புதல் கேட்டு தீர்மானம் கொண்டு வருவது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.இது தலைவர் கூறும் பதில் சரியானதல்ல என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் ஒத்திவைக்கப்பட்ட பொருளை மீண்டும் சேர்க்காமல் விட்டு விடுவது எந்த விதத்தில் நியாயம் என்றும், கடந்த காலம் கொண்டு வரப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட அப்ரூவல் வாங்காமல் வீடு கட்டுபவர்களுக்கு அபராதமாக ரூபாய் 10,000 ஆயீரம் வித்திக்க வேண்டும் என்ற தீர்மானமும், பேரூராட்சி அனுமதி இல்லாமல் குடிநீர் இணைப்பு எடுத்தவர்களுக்கும், அடிபைப்பு, மோட்டார் வைத்துள்ளவர்களுக்கும் ரூபாய் 5௦௦௦ ஆயீரம் அபராதம் விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் மக்களுக்கு குறிப்பிட்ட காலமாக 6,மாதம் அல்லது 3 மாதம் அவகாசம் கொடுத்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி ஒத்திவைக்கப்பட்ட தீர்மானங்களையும், E.O. தன்னிச்சையாக நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி மிரட்டும் செயலில் ஈடுபடுவது ஏன் என்றும் அவர் வாதித்துள்ளார். இது சரிதான என்று வாதித்தபோது ஆளும் கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்கள் அவரவர் வார்டு பிரச்சனைகளை மட்டும் தான் பேசணும் என்றும் அடுத்த வார்டு பிரத்கானைகளை எப்படி பேசுவது என்றும், மேஜைகளை தட்டிக்கொண்டும், கூச்சலிட்டுக்கொண்டும், சத்தமிட்டு வாதம் செய்பவர்களை மிரட்டும் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
தொடரும்...
source from: www.muthupettaixpress.com, www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

முத்துப்பேட்டையில் பூட்டிய அறைக்குள் நடந்த பேரூராட்சி கூட்டத்தில் பயங்கர ரகளை.!!


முத்துப்பேட்டை, ஜூலை 30 : முத்துப்பேட்டை பேரூராட்சியின் சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் கோ. அருணாச்சலம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி அலுவலக மாடியில்தான் கதவுகள் திறந்த நிலையில் நடைபெறுவது வழக்கம், ஆனால் கூட்டம் துவங்குவதற்கு முன்பு கதவுகள் பூட்டப்பட்டு பூட்டிய அறைக்குள் துவங்கிய கூட்டம் சில மணி நேரத்தில் ஆ. ஊ.., என்றும் அய்யோ, அம்மா, என்றும் கடுமையான புரியாத வாக்குவாதமும் சேர்களை தூக்கி வீசியது, டேபிளை தட்டிய சத்தமும் நீண்ட தூரத்துக்கு கேட்டது. அதில் பழைய பேருந்து அருகில் என்பதால் பயணிகள், வியாபாரிகள், மற்றும் பொதுமக்கள் சப்தத்தை நோக்கி ஓடினார்கள். பின்பு பூட்டிய அறைக்குள் அந்த சப்தம் வருவதால் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், பயத்திலும், அதிர்ச்சியிலும் அலுவலகத்தை சூற்றி நின்று வேடிக்கைப் பார்த்தனர். முத்துப்பேட்டை அசம்பாவிதம் நிறைந்த ஊர் என்பதால் இவற்றை பெயந்து சில பேர் ஓட்டமும் பிடித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவியது.

இது குறித்து 9 வது வார்டு கவுன்சிலர் பாவா பகுருதீன் கூறியதாவது:
இங்கு பிரச்சனை நடக்கபோகிறது என்று தெரிந்த செயல் அலுவலரும், ஏ.1.கிலார்டும், திருவாரூர் கூட்டத்திற்கு போறோம் என்று சொல்லிவிட்டு அவர்கள் ஒளிந்து விட்டனர். இதில் கணக்கு வழக்குகளை கேட்டால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணி இந்த நாடகத்தை நடத்தி தப்பித்துல்லார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து 13 வார்டு கவுன்சிலர் நாசர் கூறியதாவது:
எனது வார்டில் பைப்பு விரிவாக்கம் பணிகள் செய்து தருமாறு எனது தலைவரிடம் கேட்டுக்கொண்டிருக்கும் போது, 9 வது வார்டு கவுன்சிலர் பாவா பகுருதீன் குருக்கிட்டதால்தான் இந்த பிரச்சை அதிகமானது என்று அவர் தெரிவித்தார். மேலும் இதில் ரகளை ஏற்பட்டது உண்மைதான் என்றும், டேபில், சேர் உடைய வில்லை என்றும் அவர் தெரிவித்தார்.ஆனால் பூட்டிய அறைக்குள் எதோ மர்மம் உள்ளதாக போது மக்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

முத்துப்பேட்டை தர்ஹாவில் நடைபெற்ற மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..







முத்துப்பேட்டை, ஜூலை 29 : முத்துப்பேட்டை ஜாம்புவோனோடையில் நேற்று மாபெரும் மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தர்ஹா முதன்மை அறங்காவலர் S.S. பாக்கர் சாஹிப் தலைமை வஹித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழக உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் ஆர். காமராஜ் கலந்து கொண்டு நோன்பு திறந்தார், அப்போது அவர் பேசியதாவது. இந்த நோன்பில் இஸ்லாமிய சகோதரர்கள் ஒரு மாதா காலம் தங்களின் உடலை வர்த்தி நோன்பு இருப்பது என்பது மிகப்பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கிறது என்றும், மேலும் இந்த சகோதரர்களிடம் கலந்து கொண்டு நோன்பு திறப்பதில் மிகவும் சந்தோசப்படுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜாதி, மதம் பாராமல் தமிழகத்தில் புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப் படுகின்றன. என் ரமலான் மாதத்தில் கூட 2000 பள்ளிவாசலுக்கு நோன்பு கஞ்சி காட்ச அரிசி வழங்கி உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இப்பகுதியின் சுற்றுலா தளமான லாகூன் பகுதிக்கு விரைவில் நிதி வழங்கப்படும் என்றும் மேலும் இந்த நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட அனைவரும் காலம் முழுவதும் அண்ணன் தம்பிகளாக வாழ வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் கே. உலகநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட்சமி, அம்பிகாபதி, ஒன்றிய kulu தலைவர் R.K.P. நடராஜன், கோட்டூர் ஒன்றிய குழுத்தலைவர் ஜீவானந்தம், அ.தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் வி.என்.சண்முகம், முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் கோ. அருணாச்சலம், வர்த்தக கழகத் தலைவர் ராஜாராம், துணைத் தலைவர் முஹைதீன் பிச்சை, பொதுச் செயலாளர் ராமலிங்கம், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் செம்பை ராமச்சந்திரன், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் முஹைதீன் அடுமை, ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக தர்ஹா டிரஸ்டி தமீம் அன்சாரி வரவேற்று பேசினார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
நமது நிருபர்

O.M. சுபைத் கான்,

மவுத்து அறிவிப்பு: " ஹாஜிமா ஆசியா மர்யம்"


முத்துப்பேட்டை, ஜூலை 29 : அலியார் சந்து மர்ஹும் ஹாஜி முஹம்மது அவிக்கனார் அவர்களின் மனைவியும், முஹம்மது அலி, முஹம்மது யூனுஸ் ஆகியோரின் தாயாரும், இம்ரான், இர்ஃபான் ஆகியோரின் பாட்டியாரும், S.M. யூசுப் அவர்களின் மாமியாருமாகிய "ஹாஜிமா ஆசியா மர்யம்" அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)

அண்ணாரின் ஜனாஸா இன்று இரவு 7 மணியளவில் குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்
முஹம்மது அலி சகோதரர்கள்.

source from: www.mttexpress.com
நமது நிருபர்

K.M. காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டை குத்பா பள்ளி வாசலில் தொழுகை நேரம் அறிவிக்கும் மின்னணு இயந்திரம்.



முத்துப்பேட்டை, ஜூலை 29: முத்துப்பேட்டை மரைக்காயர் தெருவில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட குத்பா பள்ளி வாசலில் தொழுகை நேரம் அறிவிக்கும் புதிய மின்னணு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் திருவாரூர் மாவட்டத்திலேயே இந்த பள்ளியில் தான் முதலாக வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளியில் பல்வேறு சகோதர சகோதரிகள் தங்களது நன்கொடைகளை வாரி வழங்கி வருகிறார்கள். அதன் அடிப்படையில் இந்த புதிய மின்னணு இயந்திரத்தை ஜனாப். அல்ஹாஜி B.A. மைநூர்தீன் அவர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
நமது நிருபர்

O.M.சுபைத் கான்

மவுத்து அறிவிப்பு: "முஹைதீன் பக்கீர்"


முத்துப்பேட்டை, ஜூலை 26 : தெற்குத் தெரு மர்ஹும் அஹமது ஹாஜா அவர்களின் மகனும், பேட்டை அய்துருஸ் சகோதரர்களின் சிறிய தகப்பனாரும், மர்ஹும் நெய்னா மூஸா, மர்ஹும் அப்துல் மஜீத், அப்துல் ரஹ்மான் ஆகோயோரின் மச்சானும், நாட்சிக்குளம் காதர் முஹைதீன் அவர்களின் மாமனாரும், அப்துல் மஜீத் அவர்களின் பாட்டனாரும், தாஜ் ஹோட்டல் ஷாஜஹான் அவர்களின் தகப்பனாருமாகிய "முஹைதீன் பக்கீர்" அவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்). அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் அரபு சாஹிப் பள்ளிவாசல் மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.
source from: www.mttexpress.com
அறிவிப்பவர்.
H .முஹம்மது பாதீம்

நமது நிருபர்

K.M .காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டையில் விரைவில் திறப்பு விழா காண தயாராகும் ஆசாத் நகர் பள்ளி வாசல்.






முத்துப்பேட்டை, ஜூலை 26 : அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக... திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்மா மஸ்ஜித் அழகிய வடிவமைப்பில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிவுற்று திறப்பு விழாவும் காண உள்ளது. (அல்ஹம்து லில்லாஹ்) இந்த இறை இல்ல கட்டுமானப் பணிகளுக்கு இந்த நோன்பு நாட்களில் தங்களுடைய சதக்க, ஜக்காத் ஆகிய உங்களது நன்கொடைகளை வாரி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எவர் ஒருவர் இவ்வுலகில் அல்லாஹ்வுக்காக ஒரு மாளிகையை கட்டுவரோ, அவருக்காக அல்லாஹ் மறுமையில்(சுவர்கத்தில்)அழகிய மாளிகையை கட்டுகிறேன் என தனது திருமறையாம் குர்ஆனில் கூறியுள்ளான். இதனை உணர்ந்து சகோதர, சகோதரிகள் தங்களது நன்கொடைகளை அல்லாஹ்வின் ஆலய கட்டுமானப் பணிகளுக்கு வாரி வழங்குகள். அல்லாஹ்வின் அருளை பெறுங்கள். தங்களது நன்கொடைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

MOHAMED JALALUDEEN
A/C,NO: MJ2 609201022473
ICICI BANK
MUTHUPET. BRANCH

மேலும் தொடர்புக்கு
வழக்கறிஞர். ஜனாப். தீன் முஹம்மத்.
தொலைபேசி எங்கள்: 0091 - 98655 57556, 99654 18801.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
இப்படிக்கு

ஆசாத் நகர் பள்ளி நிர்வாகம்.

தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)