முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ஓடும் ரயிலில் ஒரு உரையாடல் !


நெல்லை, மார்ச் 05 : நெல்லை எக்ஸ்ப்ரெஸ் எழும்பூர் நிலையத்திலிருந்து புறப்பட்டது. என்னுடன் அமர்ந்திருந்த பயணக் கூட்டாளிகளைச் சுற்றிலும் பார்த்தேன் யார் யாரோ அறிமுகமில்லாத பல முகங்கள் அதில் என் அருகே அமர்ந்திருந்த ஓர் இளைஞரின் திருமுகம் என்னைக் கவர்ந்தது, அழகான ஷேவ் செய்யப்பட்ட -இளமையும் அமைதியும்தவழும் களையான முகம் . வயது முப்பத்தைந்து இருக்கலாம் அரைக்கை
ஷர்ட்டும் பேண்டும் அணிந்திருந்தார். "யாரோ ? நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் . " என்று எண்ணிக் கொண்டேன். புகை வண்டி புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் இரவு சிற்றுண்டியை முடித்துக் கொண்டு அந்த இளைஞர் மேலே அப்பர் பெர்த்தில் படுத்து விட்டார்.

உறங்கும் பயணிகளை தன் கற்பத்தில் சுமந்து கொண்டு உறங்காமல் ஓடிக் கொண்டிருந்தது அந்த நெல்லை விரைவுப் புகை வண்டி.

பலபல என்று விடிந்தபோது விருதுநகரில் அந்த இளைஞர் விழித்தார் கை கால் முகம் கழுவி காப்பியும் அருந்தி விட்டு உடை மாற்றத் தொடங்கினார் . மாற்று உடையில் அவரைக் கண்டதும் ஓரளவு திகைத்துத்தான் போனேன். ஆம் ! அத்துணை நேரமும் அவரை செல்வக் குடியில் பிறந்த ஒரு வாலிபர் எனக் கருதியிருந்த என் முன் அவர் ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரின் உடையில் காட்சியளித்தார் .

அருகில் அமர்ந்திருந்த அந்தக் கிறிஸ்தவப் பாதிரியாரைப் பார்த்ததும் அவருடன் ஏதாவது பேசவேண்டுமென என் துடுக்கு மனம் துடித்தது. நெல்லை வரை பொழுதும் போகவேண்டுமே

பேசத் தொடங்கினேன் ! சென்னையில் பாதிரியார்களின் மாநாட்டுக்கு சென்று வருவதாகவும் , பாளையம்கோட்டையில் வசிப்பதாகவும் அவர் தம்மைப் பற்றிக் கூறினார் . அவர்களின் மத குருவாக ஆவதற்குரிய கல்வி, பயிற்சி சடங்குகள் முதலியவைகளையும் இனிமையுடன் விவரித்தார் . நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அன்புடனும் கனிவுடனும் விளக்கம் கூறினார். அவரது பேச்சும் பதிலளித்த முறையும் சகஜமாகப் பழகிய விதமும் "இன்னும் ஏதாவது கேள் " என்று என்னைத் தூண்டிக் கொண்டே இருந்தன ! சரி ! நாம் என்ன கேட்டாலும் இவர் கோபப் பட மாட்டார் ! என்ற தைரியம் வந்து விட்டது எனக்கு !

" சார் ! உங்கள் கிறிஸ்தவ மதத்தைப் பற்றி எனக்கு சில சந்தேகங்கள் ! உங்களிடம் அதைக் கேட்டு நீக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் ! கேட்கலாமா சார் ? நீங்கள் தவறாக நினைக்க வில்லையென்றால் கேட்கிறேன் " என்று ஆரம்பித்தேன் !

"ஏன் ? தாராளமாகக் கேளுங்கள்" எனப் புன் முறுவல் பூத்தார் !

"சார் ! எங்களுடைய வேதத்திற்கு "குரான்" என்று பெயர் ! இந்தப் பெயர் அந்த வேதத்திலேயே சொல்லப் பட்டிருக்கிறது ! அதேபோல் உங்களுடைய வேதமாகிய பைபிளில் "பைபிள்" என்று எங்காவது வருகிறதா ?

"இல்லை !" - அவரது பதில் .

"அப்படியானால் உங்கள் வேதத்திற்கு "பைபிள்" என்று எப்படிப் பெயர் வந்தது ? யாரால் சூட்டப் பட்டது ? "

"நல்ல கேள்வி; ஆனால் உடனடியாக என்னால் பதில் சொல்ல முடியவில்லை "

"சார் ! வருத்தப் படக் கூடாது ! பதினேழு ஆண்டுகள் நீங்கள் பாதிரியார் ஆவதற்குப் பயிற்சி பெற்றும் இந்தச் சந்தேகத்திற்கு யோசித்துத் தான் பதில் சொல்ல வேண்டுமா ?"

" சார் ! இன்னொரு சந்தேகம் ! எங்களுடைய வேதமாகிய குர் ஆன் அரபி மொழியிலேயே அருளப்பட்டது. உங்களுடைய பைபிளை எந்த மொழியில் இயேசு கூறினார் ?"

"ஹிப்ரூ மொழியில்"

" சரி ! நாங்கள் இன்ஜீல் வேதம் சுர்யானி மொழியில் அருளப்பட்டதாக நம்புகிறோம் ! ஆனால் அந்த மொழி உங்களுக்கு தெரியுமா ? "

"தெரியாது !"

"அப்படியானால் நீங்கள் எந்த மொழியில் உங்கள் பைபிளை ஓதுகிறீர்கள் ?"

"ஆங்கிலத்திலும் தமிழிலும் , பிற மொழிகளிலும் "

"எங்கள் குர் ஆனை எடுத்துக் கொள்ளுங்கள் ! அது எந்த அரபு மொழியில் அருளப்பட்டதோ அதே மொழியில் ஒரு புள்ளியும் மாறாமல் இன்றளவும் உயிருடன் இருக்கிறது ! எங்களில் சின்னஞ் சிறு வயதினரும் அதை ஓதத் தெரிந்திருக்கின்றனர் ஆனால் உங்களுடைய வேதமாகிய பைபிளோ எந்த மொழியில் இயற்றப் பட்டதோ அந்த ஒரிஜினல் மொழியில் இன்று இல்லை என்று நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். இன்று உங்களிடம் இருப்பதெல்லாம் வெறும் மொழிபெயர்ப்புக்கள் மட்டுமே !"

"எந்த மொழியாக இருந்தாலும் அந்தந்த மொழிக்கென்று சில தனித் தன்மைகள் இருக்கும் ! ஆங்கிலமோ , தமிழோ அரபியோ எதுவாக இருந்தாலும் சரிதான் ! ஒரு மொழியிலுள்ள வேதத்தையோ , இலக்கியங்களையோ எவ்வளவுதான் திறமையுடன் பிற மொழிகளில் பெயர்த்தாலும் மூல நூலின் சாறை யதார்த்தத்தை பிற மொழிகளில் அப்படியே கொண்டு வந்திட முடியாது ! எப்படியும் சிறிது கூடவோ குறையவோ தான் மொழி பெயர்க்க முடியும் இல்லையா ? "

"ஆம்....உண்மைதான் !"

"அப்படியானால் உங்களுடைய பைபிள் மூல மொழியில் இல்லை என்பதால் அது தன் ஒரிஜினாலிட்டியை இழந்து விட்டது ! இப்போது உங்களுடைய கையில் இருக்கும் பைபிள் "ஒரிஜினல்" அல்ல என்று நான் சொன்னால் உங்களால் அதை எப்படி மறுக்க முடியும் ?"

"..........................." (பதில் இல்லை )

"இரவா வரம் பெற்ற உங்கள் இயேசுவின் வேத மொழி இறந்து விட்டது என்று சொல்வது உங்கள் வேதத்துக்கும் உங்கள் மதத்துக்கும் பெருமையா ? உங்கள் பைபிள் எப்படி உயிருள்ளதாக இருக்க முடியும் ?

"................................."(பதில் இல்லை)

சிறிது நேர மௌன இடைவெளி. எங்களுடன் அதே பெட்டியில் பயணம் செய்த மற்றவர்கள் அனைவரும் இந்து நண்பர்கள் எங்களது உரையாடலை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தனர் !

மீண்டும் தொடர்ந்தேன் !

"சார் ! இன்னும் ஒரு சந்தேகம் ! என்னுடைய தகப்பனாரை ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டான் என்று வைத்துக் கொள்வோம் .அந்தக் கொலைகாரனை மட்டுமல்ல அவன் பயன்படுத்திய துப்பாக்கியை எப்போது பார்த்தாலும் எனக்கு என் தந்தையின் நினைவும் , இந்தத் துப்பாக்கியால் அல்லவா என் தந்தை கொல்லப்பட்டார் என்ற ஆத்திரமும்தான் எனக்கு ஏற்படும் இல்லையா ?"

"துப்பாக்கியைப் பார்க்கும்போதெல்லாம் என் தந்தையைக் கொன்ற கருவி என்ற காரணத்தால் அவைகளின் மீது வெறுப்புதான் ஏற்படுமே தவிர "ஆஹா ! என் தந்தையைக் கொன்ற துப்பாக்கியே வா ! என் கண்ணே! " என்று அதன் மீது பிரியமோ வாஞ்சையோ ஏற்படுமா ? ஏற்படாதே ! ஏனெனில் சராசரி மனித இயல்பே அதுதான் ! கொலைக் கருவிகள் மீது மனிதனுக்கு நேசம் ஏற்பட எந்த நியாயமும் இல்லை . அல்லவா ?"

"ஆம் ! சொல்லுங்கள் "

" ஆனால் உங்கள் ஏசுவைக் கொன்ற கொலைக் கருவி சிலுவை ! அதில் அறைந்து தான் கொன்றார்கள் என்று நீங்கள் சாதிக்கிறீர்கள் ! அப்படியானால் உங்களுடைய பிதா -மகன்-பரிசுத்த ஆவியான கடவுளையே கொலை செய்யக் காரணமான அந்தச் சிலுவையின் மீது உங்களுக்கு வெருப்பல்லவா ஏற்படவேண்டும் ? மாறாக அதன் மீது அன்பும் பக்தியும் கொள்கிறீர்களே ! எப்படி ? தமது குருநாதரான கடவுளை கடவுளின் குமாரனை கொலை செய்த கொலைக் கருவியான
சிலுவையின் மீது பிரியம் கொள்ள உங்களுக்கு எப்படி மனம் வருகிறது ?இது மனித இயல்புக்கே முரண் அல்லவா ?"

"அது மட்டுமல்ல ! சாதாரணமாக கொலைக் கருவி யார் கையில் இருக்கிறதோ அவன்தான் கொலைகாரனாய்இருக்க முடியும் ! அல்லது அவனுக்கும் கொலைக்கும் எப்படியேனும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும் . இல்லையா ? சாதரணமாக இந்த முடிவுக்கே எல்லோரும் வருவர் !"

"ஆனால் கிரிஸ்துவர்கலாகிய நீங்கள் உங்கள் இயேசு பெருமானை கொலை செய்த ஆயுதத்தை கையிலும் கழுத்திலும் மாட்டிக் கொண்டு போற்று கிறீர்களே ! இதைப் பார்க்கும் எந்த மனிதனுக்கும் ஒருவேளை இயேசுவை நீங்கள் தான் கொலை செய்தீர்களோ என்ற சந்தேகம் வராதா ?"

"இயேசு கிருஸ்துவைசிலுவையில் அறைந்து கொன்ற யூதர்களுக்கு வேண்டுமானால் சிலுவை புனிதச் சின்னமாக விளங்கலாமே தவிர கிருஸ்துவர்கலாகிய உங்களுக்கு எப்படி அது புனிதமாக இருக்க முடியும்? "

"......................................" (பதில் இல்லை)

" சார் நான் என் மனதில் எழுந்த சில சந்தேகங்களைத்தான் கேட்டேன் ! நீங்களோ மௌனம் சாதிக்கிறீர்கள் ! ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் உங்களிடம் மறைந்து விட்டது போல் தெரிகிறது ! எனது கேள்விகளால் உங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டிருக்குமானால் நான் இனி கேட்கவில்லை ! சரியா சார் ?"

"இல்லை; வருத்தம் இல்லை ! ஆனால் எங்கள் கிருஸ்த்துவ மதத்தைப் பற்றி ஒரு முஸ்லிம் எப்படியெல்லாம் கருதுகிறார் எனபது குறித்து நேரடியாக அறிந்து கொள்ள இந்த உரையாடல் ஒரு வாய்ப்பு ! அதற்காக ரொம்ப தேங்க்ஸ் ! நீங்கள் கேட்ட கேள்விகள் எனது சிந்தனையைத் தட்டி எழுப்பியிருக்கிறது ! அதற்காகவும் நான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் ! "
பாதிரியாரான அந்த ரயில் நண்பர் இப்படிக் கூறி முடிப்பதற்கும் ரயில் நெல்லை சந்திப்பை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது, கைலாகு கொடுத்தபடி இருவரும் விடைபெற்றோம்.

(சிலேடைக் கவிஞர் சிராஜ் அப்துல் ஹை -என்ற நூலிலிருந்து பீ. எம் கமால்,கடையநல்லூர்)

ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க கூடாது: இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்.


வாஷிங்டன், மார்ச் 02 : ஈரானிடமிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் வாங்குவதற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவுக்கு நிர்பந்தம் அளித்து வருகிறது. இந்தியா, துருக்கி, சீனா ஆகிய நாடுகளுடன் இவ்விவகாரம் தொடர்பாக ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாக அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். அமெரிக்க செனட்டர்களுடன் நடத்திய சந்திப்பில் ஹிலாரி இதனை தெரிவித்தார். ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்தினால் இந்நாடுகளுக்கு எண்ணெய் நெருக்கடி ஏற்படாது என்றும், அமெரிக்கா முன்வந்து மாற்று வழிகளை உருவாக்கும் என்றும் ஹிலாரி கூறினார். மூன்று நாடுகளுடனும் கூடுதல் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. இந்நாடுகள் ஏற்கனவே நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. நமது அணு வல்லுநர்களும், தூதரக பிரதிநிதிகளும் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். ஈரான் மீது கூடுதல் தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.’ என்று ஹிலாரி கூறினார். அணுசக்தி துறையில் தனது சாதனையை ஈரான் வெளியிட்டதை தொடர்ந்து அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது. கடுமையான தடைகளை தொடர்ந்து அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் ஈரான் மீது விதித்தாலும் ஈரான் அசரவில்லை. சில ஐரோப்பிய நாடுகளுக்கு இனிமேல் எண்ணெய் ஏற்றுமதிச் செய்யமாட்டோம் என்று ஈரான் அறிவித்திருந்தது.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிபோர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டையில் மேலும் ஓர் அதிசயம்.!! முயல் உருவ உருளைக்கிழங்கு..




முத்துப்பேட்டை, மார்ச் 01 : முத்துப்பேட்டை மன்னார்குடி சாலையில் உள்ள திரு.செந்தில் குமார் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு காய்கறிகள் வெளிஊரிலிருந்து வரவழைக்கப்பட்டு வியாபாரம் செய்பவர். நேற்று அவர் காய்கறி கடைக்கு வந்த உருளைக்கிழங்கு மூட்டையை பிரித்த போது அதில் ஒரு உருளைக்கிழங்கு மட்டும் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டது. பிறகு அவற்றை பார்த்தபோது அசல் முயல் குட்டியைப்போல் உருவம் காணப்பட்டது. எனவே இதனை மக்கள் வேடிக்கையுடன் பார்த்து செல்கின்றனர்.
source from: www.muthupettaiexpress.com, www.mttexpress.com
தெகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், முஹைதீன் பிச்சை, ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டையில் கேஸ் சப்ளை செய்வதில் குளறுபடி பொது மக்கள் ஆவேசம்.!!



முத்துப்பேட்டை, மார்ச் 01 : முத்துப்பேட்டையில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சமையல் கேஸ் சிலிண்டர்களை திருத்துறைப்பூண்டியிலிருந்து இன்டன் கேஸ் சிலிண்டர்கள் மரியா கேஸ் நிறுவனம் சப்பளை செய்து வருகிறது. சமீப காலமாக கேஸ் சிலிண்டர்கள் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் எப்பொழுதாவது லாரியில் வந்து சிலிண்டர்களை சப்பளை செய்யும் போது பல்வேறு குளறுபடிகள், இடைத்தரகர்கள் தொந்தரவு என மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. என்று புகாருக்கு மேல் புகார் எழுந்துள்ளது ஆனால் சப்ளை செய்யும் நேரங்களில் போலிஸ் பாதுகாப்பு போடுவது வழக்கம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வழக்கம் போல் நேற்று புதிய பேருந்து நிலையம் பகுதியில் லாரியில் சிலிண்டர் விநியோகம் செய்தனர். அதில் மொத்தம் 290 சிலிண்டர் மட்டுமே கொண்டுவரப்பட்டன. ஆனால் நீண்ட வரிசையில் சுமார் 500 ௦௦க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். அப்படி சப்பளை செய்யும் போது இடைத்தரகர்கள் கூடுதலாக சிலிண்டர்களை பெற்று சென்றதால் அப்போது மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. உடன் அப்பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த முத்துப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ஜோதி முத்து ராமலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் சிலிண்டர்கள் வந்த வண்டியை முற்றுகையிட்ட மக்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகம் ஏற்பட்டு மறியலும் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் முத்துப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், முஹைதீன் பிச்சை,

உலகின் சக்தி வாய்ந்த நாடு கத்தார்...



நியூயார்க், பிப்ரவரி 29 : செல்வம் தான் அதிகாரம் எனில், உலகில் மிக சக்தி வாய்ந்த நாடு வளைகுடா நாடுகளில் கத்தார் தான் என்று பிரபல போர்ப்ஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் மொத்த வளத்தை அதன் மக்கள் தொகையால் வகுத்தால் கிடைப்பது தனி நபர் வருமானம். தனி நபர் வருமான அடிப்படையில் உலகில் முதல் நாடாக இருப்பது தான் கத்தார். உலகின் இயற்கை வாயுவில் மூன்றில் ஒரு பங்கை வைத்துள்ள இந்நாடு தன் பொருளாதாரத்தை உள்கட்டமைப்புக்காக தண்ணீராய் செலவழிக்கிறது என்றால் அது மிகையாகாது.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA . முனவ்வர் கான், அபு மர்வா, ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம்: போப் ஆண்டவர் அறிவிப்பு...


அமெரிக்கா, பிப்ரவரி 28 : உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் தான் என்று போப் ஆண்டவர் (பாப்பரசர்) விடுத்துள்ள அறிக்கையை மேற்கோள்காட்டி வத்திக்கான் என்ற இணையத்தளம் செய்தி ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் உலகில் அதிகம் பரவி வரும் மார்க்கங்களில் இஸ்லாம் தான் முன்னிலை வகிப்பதாகவும், கிருஸ்தவ மத நம்பிக்கையாலர்களைவிட மூன்று மில்லியன் அதிக எண்ணிக்கையுடையோராக முஸ்லிம்கள் உள்ளார்கள் என்றும், உலக அளவிலான மக்கள் தொகையில் நூற்றில் 17 .5 சதவீதத்தினர் கிறிஸ்தவர்கள் என்றால் அதில் 19 சதவீதத்தினர் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். வருடத்திற்கு சுமார் 40 ஆயிரம் பேர் இஸ்லாத்தில் இணைவதாகவும், கிறிஸ்தவ, யூத மற்றும் பிற மதத்தினர் இவ்வாண்டின் இறுதியில் தங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது என்றும் அப்போது அவர் தெரிவித்துள்ளார்.
source from: www.muthupettaixpress.com, www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டையில் கேஸ் தட்டுப்பாட்டை தடுக்க SDPI - யின் நகரக் கூட்டம்..





முத்துப்பேட்டை, பிப்ரவரி 28 : முத்துப்பேட்டையில் SDPI சார்பில் நகரக்கூட்டம் இன்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக இக்கட்சியின் மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா அவர்கள் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிரூபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த முத்துப்பேட்டை SDPI - யின் நகர தலைவர் ஜனாப். ரஹ்மத்துல்லாஹ் அவர்கள், முத்துப்பேட்டையில் நிலவிவரும் கேஸ் தட்டுப்பாடு குறித்தும், மேலும் ரேசன் கடையில் சரியான முறையில் பொருட்களை கொடுபத்தில்லை என்றும் அவ்வாறு கொடுக்கும் போது கொடுக்கப்படும் பொருட்களின் இடையை குறைத்தும் கொடுப்பதை தடுத்து நிறுத்தவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ரேசன் கடையில் பொருட்கள் கொடுக்கும் போது உரியவர் வந்து கையெழுத்து போட வேண்டும் என்பதை தடுத்து நிறுத்த தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜனாப். பாவா பகுருதீன், நகர செயலாளர் முஹம்மது முஹைதீன், துணைச் செயலாளர் நிஜாம், நகர செயற்குழு உறுப்பினர் நிசார் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
source from: www.mttexpress.com, www.muthupettaixpress.com
நமது நிருபர்

ரிப்போர்ட்டர் O .M . சுபைத் கான்.B .Tech தாவூத் கான் DCT .

முத்துப்பேட்டை தர்ஹாவின் அடிப்படை வசதிகளை அரசு உடனே துவக்க வேண்டும்



முத்துப்பேட்டை, பிப்ரவரி 28 : முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்ஹா கந்தூரி விழாக்கான அடிப்படை வசதிகளின் பணிகளை அரசு முன்கூட்டியே துவக்கப்பட வேண்டும் என்று தர்ஹா டிரஸ்டி ஜனாப். SS .பாக்கர் அலி சாஹிப் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முத்துப்பேட்டை தர்ஹாவின் முதன்மை டிரஸ்டி ஜனாப். SS .பாக்கர் அலி சாஹிப் அவர்கள், முத்துப்பேட்டையில் உள்ள செகுதாவூது தர்ஹா சுமார் ஆயிரம் ஆண்டை கடந்த வரலாற்று மிக்க தர்ஹாவாக காணப்படுவது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது என்றும், இந்த தர்ஹாவை காண வெளிநாடுகளிலிருந்தும், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்லும் ஓர் சிறந்த இடம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழக முதல்வர் அவர்கள் தமிழ் நாட்டிலேயே எந்த ஓர் தர்ஹாவிர்க்கும் செய்யாத பல லட்சம் ரூபாய் செலவில் பக்கதர்கள் நிறுத்தும் வாகனகளுக்கு தனியிடம் அமைக்க நிதி தந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த தர்ஹாவின் 710 ஆம் ஆண்டு கந்தூரி விழா வருகிற மார்ச் 24 ஆம் தேதி துவங்கப்பட உள்ளது என்றும், எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் , அடிப்படை வசதிகளான சுகாதாரம், தூய்மையான குடிநீர், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருத்தல், தடை இல்லா மின்சாரம், தெருவிளக்குகள், இவைகளை சீரமைத்து தர வேண்டும் என்று தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.
source from: www.muthupettaixpress.com, www.mttepxress.com
நமது நிருபர்

O.M. சுபைத் கான், B . Tech , அப்துல் அஜீஸ் B . Tech

ஆப்கான் மக்களிடம் ஒபாமா மன்னிப்பு கோரினார்...


அமெரிக்க,பிப்ரவரி 27 : ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தில் அண்மையில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்டதற்காக ஆப்கானிய மக்களிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார். அந்த எரிப்புச் சம்பவம் தவறுதலாக நடந்து விட்டது என்றும் அதற்காக தான் மிகவும் வருந்துவதாகவும் ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாயுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒபாமா தெரிவித்துள்ளார்.இதனிடையே ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் போராட்டங்களில் இன்று இரண்டு அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் நங்காஹர் மாகாணத்தில் உள்ள ஒரு அமெரிக்க-ஆப்கானிய இராணுவத் தளத்தை போராட்டக்காரர்கள் தாக்கிய போது, ஆப்கானிய இராணுவ உடையில் இருந்த ஒருவரால் இந்த இரண்டு அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அந்தப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்துமாறு உள்ளுர் பள்ளிவாசல் ஒன்று அழைப்பு விடுத்தது என்று பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரும் இன்று கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏழு மாகாணங்களில் குரான் எரிப்பு தொடர்பில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதிகளில் இதுவரை குறைந்தது நான்கு பேர் பலியாகியுள்ளனர்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

அபு மர்வா

திருவாரூரில் SDPI நடத்திய மாபெரும் ரயில் மறியல் போராட்டம்..






திருவாரூர், பிப்ரவரி 27 : திருவாரூர் முதல் காரைக்குடி வரை உள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதையை கடந்த 31 .12 .2012 அன்று அகல ரயில் பாதையாக மாற்றப்பட வேண்டி கம்பன் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. ஆனால் கடந்த 6 வருடங்களாகியும் அகல ரயில் பாதைக்கான எந்த முயற்சியும் எடுக்கப்பட வில்லை. தஞ்சை மண்டலத்துக்கு உட்பட்ட 3 பகுதிகளில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு 3 புதிய ரயில் தடம் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மயிலாடுதுறை முதல் காரைக்குடி வரை அகல ரயில் பாதை அமைக்கப்படுவதற்காக 404 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும் இன்று வரை இந்த வேலைகளை செய்யாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். இவற்றை உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி SDPI சார்பில் நேற்று திருவாரூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த, இப்போராட்டத்திற்கு தலைமை வகித்த SDPI - யின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A .அபூபக்கர் சித்திக் அவர்கள், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் வழியாக உள்ள ரயில் பாதையை நிரந்தரமாக தடைசெய்யக்கூடிய ரீதியில், திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி, வடச்சேரி, பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி வரை அகல ரயில் பாதை அமைக்க கூடிய முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றும், ஒருகால் அப்படி நடந்தேறி விட்டால் இந்த பாதை நிரந்தரமாக விடப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் திருவாரூர் முதல் காரைக்குடி வரை உள்ள அகல ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் அனைத்து மக்களையும் ஒன்று சேர்த்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த SDPI தயாராக உள்ளது என்று அப்போது அவர் தெரிவித்தார்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

O.M .சுபைத் கான் B.Tech. சாதிக் திருவாரூர்

முத்துப்பேட்டையில் அதிசயம்: ஒரு மட்டைக்குள் இருதேங்காய்.!!!



தம்பிக்கோட்டை, பிப்ரவரி 27 : முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீலக்காட்டை சேர்ந்த திரு. மயில் நாதன் என்பவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தினந்தோறும் வெளி மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான தேங்காய்களை ஏற்றுமதி செய்து வருகிறார். அப்படி ஏற்றும் தேங்காய்களை ஆட்கள் மூலம் அவற்றை உரித்து சாக்கு பைகளில் கட்டுவது வழக்கம். அந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு தேங்காய் மற்றும் சற்று வித்தியாசத்துடன் காணப்பட்டது. அந்த தேங்காவை ஒரு தொழிலாளி மிக கனமாக உரித்தார் அதில் ஒரு மட்டைக்குள் இரு தேங்காய் இருப்பதை கண்ட அவர் வியந்து போனார். நாம் இரு தேங்காய் மட்டை உடன் ஒட்டி இருப்பதாய் பார்த்திருப்போம் அல்லது ஒரு தேங்காய்க்குள் இரு பருப்பு இருப்பதை பார்த்திருப்போம், ஆனால் ஒரு மட்டைக்குள் இரு தேங்காய் இருப்பதை இப்பொழுதுதான் நாம் பார்த்திருக்கிறோம். உண்மைலே இது ஒரு அதிசய தேங்காய் என்று கூறியுள்ளார் திரு. மயில் நாதன். இவற்றை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், முஹைதீன் பிச்சை, EKA . முனவ்வர் கான், ASNS .அப்துல் பாரி, அபு மர்வா

உலக வரை படத்திலிருந்து இஸ்ரேலை அழித்து விடுவோம், ஈரான் கடும் எச்சரிக்கை.!!!


ஈரான், பிப்ரவரி 27 : எங்கள் நாட்டின் மீது போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போய்விடும்" என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் அணு உலைகள் மீது கட்டுப்பாடு விதிக்க அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டதால் ஈரான், அமெரிக்கா இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது அறிந்ததே. இதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலும் ஈரானைத் தாக்கப் போவதாகத் தெரிவித்தது. இந்நிலையில் ஈரான் மீது போர் தொடுக்கப்படுமானால் இஸ்ரேல் என்ற ஒரு நாடே இல்லாமல் போய்விடும் என்று ஈரானின் இராணுவத்துறை அமைச்சர் ஜெனரல் அஹம்மது வதீதி எச்சரித்துள்ளார்."எங்களைத் தாக்கி அழித்துவிடலாம் என்று இஸ்ரேல் கருதினால் அது தப்புக்கணக்கு. அப்படி ஒரு தாக்குதல் எங்கள் நாட்டின் மீது தொடுக்கப்பட்டால், இஸ்ரேலை முற்றிலுமாக அழித்துவிடுவோம்." என்ற அமைச்சர் வதீதி எவ்வகையான தாக்குதல் என்பதைத் தெரிவிக்கவில்லை. வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் அமைச்சரின் பேட்டியால் மேலும் பதற்றம் கூடியுள்ளது.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

முஹம்மது நாஜீம்

முத்துப்பேட்டையில் நடைபெற்ற அதிசய சம்பவம்



முத்துப்பேட்டை, பிப்ரவரி 26 : முத்துப்பேட்டையில் உள்ள SPKM தோட்ட வளாகம், மக்கா பள்ளிவாசல் அருகில் உள்ள VMS . நெய்னா முஹம்மது அவர்களின் வீட்டு தோட்டத்தில் அதிசய வாழை மரம் ஒன்று மரத்திற்கு நடுவில் பிளந்து கொண்டு வாழைத்தார் மற்றும் பூவுடன் வெளிப்படுத்தியது. அப்பகுதியில் இதனைக்கான பொது மக்கள் அனைவரும் வந்து அவற்றை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
source from: www.mttexpress.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com
நமது நிருபர்

சு.இனா. (எ) KSH சுல்தான் இப்ராஹீம்

காரைக்கால் ஜாமியா புஷ்ரா மகளீர் கல்லூரிக்கு உதவிட வாரீர்!


காரைக்கால், பிப்ரவரி 25 : கடந்த 20 ஆண்டுகளாக பெண்களுக்கு குர்ஆன், சுன்னா அடிப்படையில் இஸ்லாமிய கல்வியை போதித்து வருகின்றது. எந்த இயக்கத்தை சாராமலும் நல்லுள்ளம் கொண்டு முஸ்லிம் சகோதர சகோதரிகளின் மாதாந்திர சந்தா உதவியுடன் உள்ளூர் முஹல்லாவால் நடத்தப்பட்டு வரும் இதனால் பல்வேறு மாணவிகள் நல்ல முறையில் தேர்ச்சி பெற்று தங்களுடைய ஊர்களிலேயே தனி மதரசக்காலை நடத்தும் அளவிற்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே இக்கலூரியில் பயின்று வரும் மாணவிகளுக்கு கீழ்க்கண்ட சில உபகரண பொருட்கள் தேவைப்படுகிறது.
(1 ) குளீர்காலங்களில் குளிப்பதற்கு வாட்டர் ஹீட்டர் 2 .
(2 ) கியாஸ் தட்டுப்பாடு எனில் இக்னீசியன் அடுப்பு.
(3 ) ஃபிரிஜ் - 1
(4 ) கிரைண்டர் - 1
(5 ) டெலிபோன் (காலர் ID ஸ்பீக்கருடன்)
(6 ) கம்பியூட்டர் & பிரிண்டர்
(7 ) மிக்ஸி
(8 ) மைக் செட் (ஆம்லிபார்)
எனவே நல்லுள்ளம் கொண்டவர்களே தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தொடர்புக்கு:

தலைவர்: 98438 47277 . செயலாளர்: 94435 73462 . பொருளாளர்: 98431 25819.வளைகுடா நாட்டில் உள்ளவர்கள் தொடர்புக்கு லெப்பை: 0096599189521.

ஜெமீலா பர்வீன் காரைக்கால்.

source from: www.mttexpress.com
நமது நிருபர்

K.T. ராசிக் அஹமது

முத்துப்பேட்டை ஆசாத்நகர் பள்ளிவாசலில் இன்று போடப்பட்ட (ஸ்லாப்) மேல்தளம்.




முத்துப்பேட்டை, பிப்ரவரி 25 : முத்துப்பேட்டையில் உள்ள ஆசாத் நகர் ஜும்மா பள்ளிவாசல் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இரண்டாவது முறையாக இப்பள்ளி வாசலின் மேல்தளம் இன்று காலை 10 ௦ மணியளவில் அப்பள்ளியின் நிர்வாகிகள் தலைமையில் போடப்பட்டது. இதில் முத்துப்பேட்டை யை சேர்ந்த அனைத்து முஹல்லாவாசிகள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
sourcew from: www.mttexpress.com
நமது நிருபர்

தமீம் அன்சாரி (ஆசாத் நகர்)

முத்துப்பேட்டையில் உள்ள கொய்யா மசாலா தொழிற்சாலைக்கு உடனடி ஆட்கள் தேவை..


முத்துப்பேட்டை, பிப்ரவரி 22 : முத்துப்பேட்டையில் உள்ள பிரபலமான கொய்யா மசாலா என்ற தொழிற்சாலைக்கு உடனடியாக கீழ்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது.
அனுபவமிக்க SALES REPRESENTATIVE (if any Degree), வயது 25 முதல் 40 வரை இருந்தால் நல்லது. மாத சம்பளம் 15,000 இதற்கு மேல் தங்களின் தகுதிக்கு ஏற்ப அதிகமான சம்பளம் வழங்கப்படும்.மேலும் நல்ல அனுபவம் மிக்க VAN DRIVER தேவைப்படுகிறது. வயது 30 முதல் 45 வரை இருத்தல் வேண்டும். மாத சம்பளம் 6500 தங்களின் தகுத்திக்கு ஏற்ப அதிக சம்பளம் வழங்கப்படும்.மேலும் LADY SUPERVISOR (if any டிகிரி) வயது 30 முதல் 45 வரை இருத்தல் வேண்டும். மாத சம்பளம் 4000 முதல் அதற்கு மேலும் தங்களின் தகுத்திக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். இதில் திருத்துறைப்பூண்டி, மதுக்கூர், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, நாச்சிகுளம், எடையூர் மற்றும் மல்லிப்பட்டினம் ஆகிய ஊர்களிலிருந்து வருபவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
மேலும் தொடர்புக்கு: முஹமது சாதிக்: 99944 92222, MAIL ID: koyyahmasala@gmail.com
source from: www.mttexpress.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

காய்தே மில்லத் அவர்களின் ஆவணப்படம் குறித்து ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் பேட்டி...








சென்னை, பிப்ரவரி 21 :1972 ல் இறந்து போன காய்தே மில்லத் அவர்களைப்பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்கு என்ன காரணம்? என்ற தலைப்பில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு பிரபல சமூக ஆர்வலர் மற்றும் பிரபல எழுத்தாளர் அளூர் ஷாநவாஸ் அவர்கள் அளித்த பேட்டி பின்வருமாறு:

தமிழகத்தில் ஆவணப்படங்கள், குரும்படங்கள் என்கிற மாற்று ஊடகம் ஓர் 50 ஆண்டுகளுக்கு முன்னரே செயல்பட்டு வருகிறது. அண்ணல் காந்தியடிகளைப்பற்றி AK . செட்டியார் என்பவர் 1940 களிலேயே ஆவணப்படம் எடுத்துவிட்டார். அன்றிலிருந்து இன்று வரை சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக கணக்கிலடங்காத ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய விடுதலைக்காகப் போராடிய அனேக தலைவர்களைப்பற்றி ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன .பகத்சிங் முதல் பாரதியார் வரை பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறு காட்சி வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தலைவர்கள் மட்டுமல்லாது கலை இலக்கிய தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய பல்வேறு ஆளுமைகளின் வரலாறும் ஆவணப்படமாக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் நாம் வாழும் காலத்திலேயே நம்மோடு வாழக்கூடிய எழுத்தாளர்கள் ஜெயகாந்தனைபற்றயும் இந்திரா பார்த்த சாரதியைப் பற்றியும் கூட ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் நீண்ட நெரிய ஆவணப்பட வரலாற்றில் முஸ்லிம் அரசியல் தலைவர்களைப்பற்றியோ கலை இலக்கியத் தளத்தின் பங்களிப்பு செலுத்திய முஸ்லிம் ஆளுமைகளைப்பற்றியோ எந்த பதிவும் இல்லை. தமிழக அரசியல் வரலாற்றில் அதிர் வலைகளை ஏற்படுத்திய தந்தை பெரியாரைபற்றியும் தமிழக முதல்வராக இருந்து வரலாறு படைத்த காமராஜரைப் பற்றியும் திரைப்படமே எடுத்துவிட்டனர். இவர்களோடு சமகாலத்தில் அரசியல் நடத்திய கண்ணியத் தலைவர் காய்தே மில்லத் பற்றி ஒரு ஆவணப்படங்கூட இல்லாதது வேதனையாக இருக்கின்றது. இன்றைய தொழில் நுட்ப யுகத்தில் காட்சி வடிவில் ஒரு செய்தியை சொல்லுவதின் மூலம் ஏற்படக்கூடிய தாக்கம் அளவிட முடியாதது. காட்சி வடிவில் செய்யப்படும் ஓர் பதிவு மிக எளிதாகவும் விரைவாகவும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து விடுகிறது. திரைப்படம் எடுக்கும் அளவிற்கு அந்த ஊடகத்தைப் பற்றிய புரிதலும் வலிமையையும் முஸ்லிம்களுக்கு இல்லை என்பதால் காய்தே மில்லத் பற்றிய காட்சி வடிவம் எந்த பதிவும் இல்லை. திரைப்படம் தான் எடுக்க முடியவில்லை, ஓர் ஆவணப்படமாவது எடுக்கலாமே என்கிற ஆவலில்தான் அந்த முயற்சியில் இறங்கி இன்று காய்தே மில்லத் பற்றிய ஆவணப்படத்தை உருவாக்கி வெளியிடும் நிலைக்கு வந்திருக்கிறோம்.

காய்தே மில்லத் ஆவணப்படம் உருவாக்கத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன...?

காய்தே மில்லத் அவர்களைப்பற்றி ஆவணப்படம் உருவாக்க வேண்டும் என்கிற ஆவலைத்தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை. 40 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்ட ஓர் தலைவர் என்பதால் அவரைப்பற்றிய எந்த ஓர் காச்சிப்பதிவும் இல்லை. அவருடைய நன்குரிப்புகலையும், புகைப்படங்களையும் வைத்த்திருக்கும் அவரது வாரிசுகள் அவற்றை தந்து ஒத்துழைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன் அதுவும் நடக்கவில்லை. இந்த! அந்தா! என்று இழுத்தடித்ததை தவிர ஒரு துண்டு காகிதத்தைகூட அவர்கள் தந்து உதவ வில்லை.படம்பிடிக்க வேண்டும் என்று இறங்கிய நானும், பட உருவாக்கத்திற்கு தேவையான பொருளாதார செலவுகளை ஏற்றுக்கொண்ட சமுதாய புரவலர் ஒருவரும் விரகத்தி அடைந்தது தான் மிச்சம். காய்தே மில்லத் அவர்களைப்பற்றி 2 , 3 புத்தகங்களும் ஒரு மலரும் தான் அவரைப்பற்றிய ஓர் வரலாற்றுப் பதிவாக எங்களிடம் இருக்கின்றது.அவற்றைக் கொண்டு என் கோணத்தில், என் பார்வை யில் இன்னொரு புத்தகம் எழுத முடிமே தவிர காட்சி வடிவில் அவரது வரலாற்றை பதிவு செய்ய நான் என்ன செய்வது.? காட்சி வடிவில் பதிவு செய்ய வேண்டுமானால் அவரது அசைவுகள் ஒவ்வொன்றும் காட்சி வடிவில் வேண்டும். அதற்க்கு புகைப்படங்கள் தான் பெரிதளவும் பயன்படும். புகைப்படங்களை வைத்திருக்கும் அவரது வாரிசுகள் அவற்றை தர மறுக்கும் போது அதை வைத்து படமெடுப்பது? ஆனாலும் தொய்வடையாமல் எப்படியாவது காய்தே மில்லத் அவர்களின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்கிற உறுதியோடு மாற்று வழிகளை கையாண்டு ஆவணப்படத்தை எடுத்து முடித்துள்ளோம். காய்தே மில்லத்தின் அரசியல் அசைவுகளை ஓவியங்களாக வரைந்து படத்தில் காச்சிப்படுத்தி உள்ளோம். அவரோடு அரசியல் நடத்திய ஆளுமைகளை சந்தித்து உரையாடி அவர்களின் கருத்துக்களின் மூலம் காய்தே மில்லத்தை நினைவு கூர்ந்துள்ளோம்.

காய்தே மில்லத் வாரிசுகள் ஒத்துழைக்க மறுத்தாலும் காய்தே மில்லத் உருவாக்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கம் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.இன்ஷா அல்லாஹ் மிகப்பெரிய வெளியிட்டு விழாவை நடத்தவும் உலகம் முழுவதும் ஆவணப்படத்தை திரையிடவும் , அதனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பேற்றுள்ளது.
source from: www.mttexpress.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS.அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா

சவூதியில் பிரபல டூர்ஸ் & ட்ராவல்ஸ் நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை..


சவூதி, பிப்ரவரி 20 : சவூதியில் பிரபல டூர்ஸ் & ட்ராவல்ஸ் நிறுவனத்திற்கு, IATA TICKETING, STAFF, ACCOUNTANT, CLIENT ஆகிய பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது. சம்பளம் சவூதி ரியால் 2000 - 2500 விருப்பம் உள்ளவர்கள் இதற்கான நேர்முகத் தேர்வு வருகிற பிப்ரவரி 22 சென்னையில் நடைபெற உள்ளது. மேலும் தொடர்புக்கு: சென்னை யாசர்: 72005 00225
source from: www.mttexpress.com , www.muthupettaiexpress.com
நமது நிருபர்

யாசர் சென்னை

சவூதியில் பொறியியல் படித்தவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு...


சவூதி, பிப்ரவரி 20 : சவூதி அரேபியாவில் உள்ள பிரபல நிறுவனத்திற்கு கீழ்கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது. அதில் BE- ELECTRICAL, MECHANICAL, CIVIL ENGINEER இவைகளில் BE படித்தவர்கள் குறைந்தது மூன்று முதல் ஐந்து வருடம் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். மாத சம்பளம் சவுதி ரியால், 42 ,000 முதல் 70 ,000 வரை தங்க இடம், உணவு முற்றிலும் இலவசம். இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 21 ,22 பிப்ரவரி சென்னையில் நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் தொடர்புக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: யாசர் சென்னை : 72005 00225.
source from www.mttexpress.com
நமது நிருபர்
யாசர் சென்னை

மவுத்து அறிவிப்பு: "ஆய்ஷா அம்மாள்"


முத்துப்பேட்டை, பிப்ரவரி 20 : PKT ரோடு மர்ஹும் அஹமது மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹும் SK நெய்னார் முஹம்மது அவர்களின் மனைவியும், மர்ஹும் காய்கறி கடை SK . சுல்தான் மரைக்காயர் அவர்களின் சகோதரியும், மர்ஹும் M . முஹம்மது ஜலாலுதீன் அவர்களின் தாயாரும், H . காதர் முஹைதீன், H . சர்புதீன் ஆகியோரின் சகோதரியும், SK . முஹம்மது அமீன், M . நெய்னா முஹம்மது, P . அமானுல்லாஹ் ஆகியோரின் மாமியாரும், ராஜா என்கிற K . முஹம்மது ஜியாவுதீன், நிசார் அஹமது, மைநூர்தீன், முர்சித் ஆகியோரின் பாட்டியாரும், ஹபீப்கான் பிரதர்ஸ் அவர்களின் மாமயுமாகிய "ஆய்ஷா அம்மாள்" அவர்கள் நேற்று மாலை 5.30 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 .30 மணியளவில் குத்பா பள்ளி வாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்
H . காதர் முஹைதீன்

நமது நிருபர்

KM . காதர் கனி (பாடகர்)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)