முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!!!


முத்துப்பேட்டை செப்டம்பர் 14 : அன்பார்ந்த சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... இன்ஷா அல்லாஹ் இன்று வெளியிட இருந்த நமதுwww.muthupettaiexpress.com என்ற இணையத்தளமானது வருகிற 01 .10 .2011 ஆம் தேதி அன்று வெளியிட உள்ளது, என்பதை இதன் மூலம் தெருவித்துக் கொள்கிறோம். ஏனெனில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் வாசகர்கள் பல்வேறு வித மான கருத்துக்களை நமது முகவரிக்கு அனுப்பி உள்ளனர். மேலும் இது போன்ற பல்வேறு கருத்துகளும் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் வாசகர்கள் தங்களின் கருத்து, குறை, ஆலோசனை ஆகியவைகளை வருகிற 25.௦09.2011 ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்தால் மிகவும் நன்றாகவும் எங்களுக்கு பக்க பலமாகவும் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. தாங்கள் அனுப்பி வைக்கும் அனைத்து கருத்துக்களையும் அது முழுமை அடைந்த பின்னரே அவற்றை மசூர (Masoora) மூலம் ஆறைந்து அந்த கருத்துகளையே முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிர்வாகத்தினர் வெளியிடுவார்கள் என்று தெருவித்துக் கொள்கிறோம். உண்மை, மெண்மை செய்திகளின் வெண்மை இதுவே முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸின் தன்மை...புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.
muthupettaiexpress01@yahoo.com, info.muthupettaiexpress@gmail.com
இப்படிக்கு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

பெரியார் தாசன் என்கிற டாக்டர். அப்துல்லா ம.தி.மு.க வில் இணைந்தார்!!

சென்னை செப்டம்பர் 10 : திரைப்பட நடிகரும், முன்னால் பேராசிரியருமான முனைவர் அப்துல்லாஹ் தமது ஆதரவர்களுடன் நேற்று வைகோ முன்னிலையில் அவருக்கு சால்வை அணிவித்து ம.தி.மு.க வில் இணைந்தார். இந்நிகழச்சியில் ம.தி.மு.க துணைப் பொது செயலாளர் மல்லை சத்தியா, திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட ம.தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ராஸ்-அல்-கைமாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இந்தியர் தற்கொலை

துபாய் ,செப்டம்பர் 06 : ஐக்கிய அரபு குடியரசின் ராஸ்-அல்-கைமாவில் வசித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் வீட்டுக்குள் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

இது குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பூட்டிய வீட்டுக்குள் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்ட்ட வீட்டின் கதவை உடைத்து பார்த்ததில் 44 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஹால் சீலிங்கில் தூக்கில் தொங்கினார். 31 வயதுடைய பெண் படுக்கை அறையில் தூக்கில் தொங்கினார். 8 வயதுடைய சிறுமி மற்றொரு அறையில் முகத்தில் பிளாஸ்டிக் பையை மூடிக் கொண்டு இறந்து கிடந்தார். இவர்களது உடல்களை கைப்பற்றி தடயவியல் சோதனைக்காக அனுப்பி உள்ளோம் என்றார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் இவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும், மூவரும் கணவன், மனைவி மற்றும் மகளாக இருக்கக் கூடும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

தொகுப்பு

ரிபோர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்

மவுத் அறிவிப்பு "பாத்திமா சுல்தான்"


முத்துப்பேட்டை செப்டம்பர் 05 : மரைகாயர் தெரு பெரிய கச்சி மர்ஹும் அ.நே.ஷாகுல் ஹமீது மரைகாயர் அவர்களின் மகளும், மர்ஹும் அ.நே.சா. அப்துல் காசிம் மரைகாயர் அவர்களின் சகோதரியும், மர்ஹும் பி.த. ஹபீப் முஹம்மத் அவர்களின் மனைவியும், ஹாஜி முஹம்மத் ஆரிப் அவர்களின் மாமியாரும், அஹமது அன்சாரி, ஹாஜி. முஹம்மத் மன்சூர் இவர்களின் தாயாருமாகிய "பாத்திமா சுல்தான்" அவர்கள் நேற்று இரவு 11 .30 மணியளவில் மவுத்தாகிவிட்டர்கள். இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று காலை 10 மணியளவில் கொத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்.
A .N .A . குதுப்தின் மரைகாயர் அவர்கள்.

source from Muthupettai Express

ஜின்னா - இந்தியா, பிரிவினை, சுதந்திரம் - முக்கிய தகவல்கள்

செப்டம்பர் 05 : "ஜின்னா - இந்தியா, பிரிவினை, சுதந்திரம்" என்ற பெயரில் வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் எழுதியதை அடுத்து பாஜகவில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. பாஜகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பம் நாட்டுக்கு நல்லதல்ல என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவிக்கும் அளவு பாஜக நிலைகுலைந்தது. ஜஸ்வந்த் சிங் அந்த புத்தகத்தில் அப்படி என்னதான் கூறியுள்ளார் என்பதை இந்நேரம்.காம் வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்.ஜின்னா, இந்தியராக இருந்தார். இந்திய மண் தான் அவரை பெரும் தலைவராக உருவாக்கியது. ஒருங்கிணைந்த இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டுள்ளார்.

· சிறுபான்மையினர் என்ற கோஷம், பிரிவினைக்காகவே எழுப்பப்பட்டது. ஜின்னா பெடரல் அமைப்புடன் கூடி இந்தியா அமைய விரும்பினார். முஸ்லிம்கள் தனி அதிகாரத்துடன் வாழ விரும்பினார். இந்த கோஷம், படிப்படியாக எல்லா மட்டங்களிலும் பரவி, ஐக்கிய இந்தியா என்ற பெரிய மாளிகையை தகர்க்கும் அபாயத்துக்கு போனது. இதற்கு தீர்வு என்ன? "பிரிவினை ஒன்று தான் வழி' என்கிறார் ஜின்னா. நேரு, வல்லபாய் படேல் மற்றும் காங்கிரசில் உள்ள தலைவர்கள் இதற்கு ஒப்புக்கொள்கின்றனர். இப்படித்தான் பாகிஸ்தான் உதயமானது.

· ஜின்னா இந்துக்களையோ, இந்து மதத்தையோ எதிர்க்கவில்லை; காங்கிரஸ் கட்சியைத் தான் எதிர்த்தார். அதுதான் முஸ்லிம் லீகின் உண்மையான எதிரியாக திகழ்ந்தது. பீகார் உட்பட சில மாநிலங்களில் இந்து - முஸ்லிம் கலவரங்கள் உருவானபோது, முஸ்லிம்களை காக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது என்பதை நிரூபித்தார் ஜின்னா. அப்போது தான், இந்து ராஜ்யம் உருவாக்கப்படுமோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது.

· அவருடன் நான் பலமுறை உரையாடியதில் அவர் இந்துக்களுக்கு எதிராகவே இந்து மதத்திற்கு எதிராகவோ பேசியதில்லை.

· அவரது எதிர்ப்பு, போகப்போக தான் வெறுப்புணர்ச்சியை தூண்டிவிட்டது. அதிலும், காங்கிரஸ் தலைமை மீது அவருக்கு அதிருப்தி வேரூன்ற காரணமாகவும் இருந்தது என்று அவரது தனிச் செயலர் எம்.ஆர்.. பெய்க் கூறியுள்ளார்.

· இப்படிப்பட்ட பலகட்டங்களில் மதம் என்பது ஒரு பொருளாகவே இருந்ததில்லை. அவர் தன்னை மதவாதி என்று காட்டிக் கொண்டதே இல்லை. பிரிவினைக்கு பின், அவருக்கு அப்படிப்பட்ட தோற்றத்தை பாகிஸ்தான் தந்தது. பாகிஸ்தான், தனி நாடாக ஜின்னா தேவைப்பட்டார். அதுபோல, ஜின்னாவின் தேவைகளை பூர்த்தி செய்ய பாகிஸ்தான் தேவைப்பட்டது என்பதே உண்மை.

· சில கசப்பான உண் மைகளை சொல்லித் தான் ஆக வேண்டும். 1939 முதல் 1947ல் நாடு பிரிவினைக்குள்ளானது வரை பொறுப்பில் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு, நாட்டின் எதிர்காலம் பற்றிய உண்மைத் தன்மையை புரிந்து கொள்ளுதல், பரந்த கண்ணோட்டம், திடமான குறிக்கோள் போன்றவை இல்லாததை சொல்ல வேண்டும்.

· மவுலானா ஆசாத் தன் புத்தகத்தில் எழுதியது போல, பிரிவினையை தவிர்க்க இந்தியா மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இராணுவம், வெளியுறவு, தொலைத்தொடர்பு ஆகிய விஷயங்களில் பெரும் தன்னாட்சி அளித்து தனி மாநிலங்களை அமைத்திருக்கலாம். இந்த யோசனையை மகாத்மா காந்தி ஏற்றார். ஆனால், சர்தார் படேல் ஏற்கவில்லை.

· இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்றும் இன்று தனிநாடுகள். அடிப்படையில் சில விஷயங்களை மறக்க முடியாது. கடந்து போனது, கடந்ததாகவே எண்ணினாலும், மறைந்து விடாது. புதிதுபுதிதாக விஷயங்கள் உருவாகி, புதிதாக தகவல் வெளிவரத்தான் செய்யும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)