முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

எப்போது திறக்கப்படும் இந்த பள்ளிவாசல் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸின் நேரடி ரிப்போர்ட்..!!






திருவாரூர், ஜூலை 21 : திருவாரூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே நிலையம் அருகில் ஐக்கிய ஜமாத்திற்கு சொந்தமான சுமார் 60 ௦ ஆயிரம் ஸ்கொயர் பீட்டில் நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களில் உள்ள ஒரு சிறிய பகுதியில் கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்னதாக கட்ட துவங்கினார்கள். அதற்க்கு எல்லா விதமான அரசு அனுமதிகளும் பெற்று அனைத்து பணிகளும் முடிவுறும் தருவாயில் உள்ளது. இதில் பள்ளி மக்தப் மதரசாவும் மேலும் வெளியூரூ வாசிகள்தொழுகைக்கு உரிய இடமாகவும் அமைக்கக் கூடியவை அடையாளப் படுத்தும் விதமாக மினாராவை அப்போது எழுப்பினார்கள். இவற்றை விரும்பாத சில சமூக விரோதிகள் பல்வேறு இடையூறுகளை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மினாராவை இடிக்க வேண்டும் என்ற சூழலுக்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். இந்த செய்தியை அறிந்த பாப்புலர் ஃபிரண்டாப் இந்தியாவின் (PFI) நிர்வாகிகள் மற்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளமும் நேரில் சென்று சம்பந்தப்பாட்ட நபர்களை அணுகி சட்ட ரீதியான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் நிலையில் இருக்கிறோம். மேலும் இந்த இடத்தின் பணிகளை விரைவில் முடித்து பொது மக்களின் பயன் பாட்டிற்கு விட குறிகிய காலங்களே உள்ளன. இது குறித்து தொடரும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தின் வேட்டை...
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
நமது நிருபர்

AKLT .அப்துல் ரஹ்மான், யூசுப் அலி (ஆலிம்),

மவுத்து அறிவிப்பு: ராஜா முஹம்மது (என்கிற) முஹம்மது அலி ஜின்னா


முத்துப்பேட்டை, ஜூலை 20 : சரிப் தெரு மர்ஹும் ஹாஜி வா.மு.வாட்சா முஹைதீன் அவர்களின் மகனும், ஆசாத் நகர் மர்ஹும் A.M. ஷாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், M. முஹம்மது தம்பி, M. அப்துல் ரஹ்மான் இவர்களின் சிறிய தகப்பனாரின் மகனும், ஷாகுல் ஹமீது, முஹம்மது யூசுப், முஹம்மது இபுறாஹீம், நிஜாம் மன்சூர் ஆகோயோரின் சகோதரரும், அதிராம்பட்டினம் K.M. முஹம்மது அலியார் அவர்களின் மைத்துனரும், ஆசாத் நகர் அஜீஸ் வாத்தியார், தீன் முஹம்மது, தாஜுதீன் ஆகியோரின் சகலையும், ஆசாத் நகர் பகுருதீன் சகோதரர்களின் மருமகனுமாகிய ராஜா முஹம்மது என்கிற முஹம்மது அலி சின்ன அவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5.30 மணியளவில் முஹைதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்.
வா.மு. முஹம்மது யூசுப் & சகோதரர்கள்

நமது நிருபர்

K.M. காதர் கனி (பாடகர்)

உயிரை எடுக்கும் மொபைல் ஃபோன்கள் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்...!!!


இந்தியா, ஜூலை 05 : நாட்டின் செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை டிசம்பரில் மட்டும் 94.7 (1.07%) லட்சம் அதிகரித்து 89.38 கோடியானது. நவம்பரில் இது 88.43 கோடியாக இருந்தது. எம்.பி.பி.எஸ். முடித்து தாராபுரத்தில் பயிற்சி மருத்துவராக இருந்த துடிப்பான பெண் அவர். சென்னையிலுள்ள தனது வீட்டுக்கு விடுமுறைக்காகச் சென்றபோது நடந்தது அந்த அதிர்ச்சிகரமான விபத்து. ரயிலில் அடிபட்டு இறந்த அவரை அடையாளம் காணவே முடியவில்லை. அவரைக் கண்டறிய உதவியது அவரது மொபைல்போன். உண்மையில், அந்த மொபைல்போனால்தான் அவர் ரயிலில் அடிபட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்பாதையைக் கடந்தபோது மொபைல்போனில் பேசியபடியே சென்றதுதான் அவர் செய்த தவறு. தூரத்தே ரயில் வருவது குறித்து பலர் அவரை கூக்குரலிட்டு எச்சரித்தும் அது அவரது காதில் விழவே இல்லை. விளைவாக, திறமையான மகப்பேறு மருத்துவராக விளங்கியிருக்க வேண்டிய அவர், சிறு வயதிலேயே பரிதாபமான முறையில் பலியானார்.

மாடிப் படியில் இறங்கும் போது செல்ஃபோனில் உள்ள மிஸ்ஸுடுகால்களை பார்த்துக் கொண்டே இறங்கிய ரவீந்தர் கால்தவறி விழுந்து பலத்த காயத்துடன் மருத்துவாமனையில் அனுமதிக்கப் பட்டு சமீபத்தில் உயிரிழந்தார்.

அடுத்து கோவையில் நடந்த சம்பவம் ஒன்று. அண்மையில் தான் திருமணமான வாலிபர் அவர். புது மனைவியுடன் மொபைல் போனில் பேசியபடியே ரயில்பாதையைக் கடந்தார். அருகில் ரயில் வருவதுகூடத் தெரியாமல் மனைவியுடன் பேசிக்கொண்டே இருந்தவர், அப்படியே போய்ச் சேர்ந்துவிட்டார். அவரை அடையாளம் காட்டியதும், உண்மையில், அந்த மொபைல்போனால்தான் அவர் ரயிலில் அடிபட்டு இறந்தார்.

இதுபோன்ற நிகழ்வுகள் சமீபகாலமாக அடிக்கடி நடக்கின்றன. ரயில்பாதையில் மட்டுமல்ல, சாலைகளிலும் கூட மொபைல் போன் பேசியபடி நடை பயில்பவர்களால் விபத்துகள் நேரிடுகின்றன. குறிப்பாக, "மொபைல்போன் மேனியா' என்று குறிப்பிடத் தக்க போக்கு தற்போதைய இளம்பெண்களை ஆட்டிப் படைக்கிறது. இதன் சமூக பாதிப்புகள் பற்றி தனிக் கட்டுரையே எழுதலாம்.

சாலையில் நடந்தபடியே மொபைல்போன் பேசாத பெண்களை பத்தாம்பசலிகள் என்று ஒதுக்கிவிடலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு மொபைல்போன் இளைஞிகளை ஆட்டிப் படைக்கிறது. இதனால் அவர்களுக்கும் ஆபத்து, சாலையில் செல்லும் வாகனங்களுக்கும் ஆபத்து என்பது புரிவதே இல்லை.

சாலைவிபத்துகளை ஆய்வு செய்த காவல்துறை, பெரும்பாலான விபத்துக்களுக்கு மொபைல்போன் பேசியபடி இளைஞர்கள் வாகனத்தை இயக்குவதே காரணம் என்பதைக் கண்டறிந்தது. தற்போது போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்கள் வாகனங்களை இயக்குகையில் மொபைல்போன் பேசுவது போலவே, சாலையில் நடந்து செல்லும்போது பெண்கள் மொபைல்போன் உபயோகிக்கின்றனர். ஆனால் இதை யாரும் ஆபத்தானதாகக் கருதுவதில்லை. கவனச்சிதறலை உருவாக்குகிறது என்பதாலேயே வாகனங்களை ஓட்டும்போது மொபைல்போன் பேசுவது தடை செய்யப்படுகிறது. நடந்து செல்வோருக்கும், சாலையைக் குறுக்கே நடந்து கடப்பவருக்கும் கூட, மொபைல்போன் பேச்சு கவனச்சிதறலை ஏற்படுத்துவதில்லையா?

மொபைல்போன் பேச்சு நமது கவனத்தை முற்றிலும் சீர்குலைக்கிறது. மறுமுனையில் பேசுபவரின் உணர்வுகளுடன் ஒன்றிவிடுவதே இந்தக் கவனச் சிதறலுக்குக் காரணம். மறுமுனையில் பேசுபவரின் முகம் நமது மனக்கண்ணில் நிழலாடலாம்.

அதே நினைவில் சாலையைக் கடந்தால் என்ன ஆகும்? ஒழுங்காக வாகனத்தை இயக்குபவரும் இதனால் விபத்தில் சிக்கலாம்.

நவீன சாதனங்களை நமது வசதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்து, அந்தச் சாதனங்களின் அடிமையாக நாம் மாறி வருகிறோம். மொபைல்போன் இல்லாத உலகை கற்பனை செய்ய முடியாத நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம்.

நமது மொபைல்போன் சார்பு அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது.

பலநாள் பட்டினி கிடந்தவன் விருந்துச் சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுவது என்று புரியாமல் தன்மீது வாரி இறைத்துக் கொள்வது போல, நமது மொபைல்போன் பயன்பாடு இருக்கிறது.

தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத காலங்களில் பேச முடியாத முந்தைய தலைமுறைகளுக்கும் சேர்த்துப் பேசித் தீர்த்துவிடுவது என்று, இப்போதைய தலைமுறையினர் கங்கணம் கட்டிவிட்டனரா?

மொபைல்போன் பயன்படுத்தாமல் இருப்பது இனி சாத்தியமில்லை. நடந்து செல்வோர் மொபைல்போன் பேசுவதைத் தடுக்கவும் வழியில்லை. ஆனால், ரயில்பாதை, சாலைகளைக் கடக்கும்போதேனும் மொபைல்போன் பேசாமல் செல்லலாமே?

கட்டாயமாக போன் பேச வேண்டுமானால், சில நிமிடங்கள் சாலையோரமாக நின்று பேசித் தீர்த்துவிட்டுச் செல்லலாமே? "போய்ச் சேர' அப்படி என்ன அவசரம்? அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல். இத்தகைய அரிய, இனிய மனித வாழ்க்கையை மொபைல்போன் பேச்சுக்காக இழக்க வேண்டுமா? இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டும்.

தொகுப்பு

உயிரை எடுக்கும் மொபைல் ஃபோன்கள் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்...!!!
இந்தியா, ஜூலை 03 : நாட்டின் செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை டிசம்பரில் மட்டும் 94.7 (1.07%) லட்சம் அதிகரித்து 89.38 கோடியானது. நவம்பரில் இது 88.43 கோடியாக இருந்தது. எம்.பி.பி.எஸ். முடித்து தாராபுரத்தில் பயிற்சி மருத்துவராக இருந்த துடிப்பான பெண் அவர். சென்னையிலுள்ள தனது வீட்டுக்கு விடுமுறைக்காகச் சென்றபோது நடந்தது அந்த அதிர்ச்சிகரமான விபத்து. ரயிலில் அடிபட்டு இறந்த அவரை அடையாளம் காணவே முடியவில்லை. அவரைக் கண்டறிய உதவியது அவரது மொபைல்போன். உண்மையில், அந்த மொபைல்போனால்தான் அவர் ரயிலில் அடிபட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்பாதையைக் கடந்தபோது மொபைல்போனில் பேசியபடியே சென்றதுதான் அவர் செய்த தவறு. தூரத்தே ரயில் வருவது குறித்து பலர் அவரை கூக்குரலிட்டு எச்சரித்தும் அது அவரது காதில் விழவே இல்லை. விளைவாக, திறமையான மகப்பேறு மருத்துவராக விளங்கியிருக்க வேண்டிய அவர், சிறு வயதிலேயே பரிதாபமான முறையில் பலியானார்.

மாடிப் படியில் இறங்கும் போது செல்ஃபோனில் உள்ள மிஸ்ஸுடுகால்களை பார்த்துக் கொண்டே இறங்கிய ரவீந்தர் கால்தவறி விழுந்து பலத்த காயத்துடன் மருத்துவாமனையில் அனுமதிக்கப் பட்டு சமீபத்தில் உயிரிழந்தார்.

அடுத்து கோவையில் நடந்த சம்பவம் ஒன்று. அண்மையில் தான் திருமணமான வாலிபர் அவர். புது மனைவியுடன் மொபைல் போனில் பேசியபடியே ரயில்பாதையைக் கடந்தார். அருகில் ரயில் வருவதுகூடத் தெரியாமல் மனைவியுடன் பேசிக்கொண்டே இருந்தவர், அப்படியே போய்ச் சேர்ந்துவிட்டார். அவரை அடையாளம் காட்டியதும், உண்மையில், அந்த மொபைல்போனால்தான் அவர் ரயிலில் அடிபட்டு இறந்தார்.

இதுபோன்ற நிகழ்வுகள் சமீபகாலமாக அடிக்கடி நடக்கின்றன. ரயில்பாதையில் மட்டுமல்ல, சாலைகளிலும் கூட மொபைல் போன் பேசியபடி நடை பயில்பவர்களால் விபத்துகள் நேரிடுகின்றன. குறிப்பாக, "மொபைல்போன் மேனியா' என்று குறிப்பிடத் தக்க போக்கு தற்போதைய இளம்பெண்களை ஆட்டிப் படைக்கிறது. இதன் சமூக பாதிப்புகள் பற்றி தனிக் கட்டுரையே எழுதலாம்.

சாலையில் நடந்தபடியே மொபைல்போன் பேசாத பெண்களை பத்தாம்பசலிகள் என்று ஒதுக்கிவிடலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு மொபைல்போன் இளைஞிகளை ஆட்டிப் படைக்கிறது. இதனால் அவர்களுக்கும் ஆபத்து, சாலையில் செல்லும் வாகனங்களுக்கும் ஆபத்து என்பது புரிவதே இல்லை.

சாலைவிபத்துகளை ஆய்வு செய்த காவல்துறை, பெரும்பாலான விபத்துக்களுக்கு மொபைல்போன் பேசியபடி இளைஞர்கள் வாகனத்தை இயக்குவதே காரணம் என்பதைக் கண்டறிந்தது. தற்போது போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்கள் வாகனங்களை இயக்குகையில் மொபைல்போன் பேசுவது போலவே, சாலையில் நடந்து செல்லும்போது பெண்கள் மொபைல்போன் உபயோகிக்கின்றனர். ஆனால் இதை யாரும் ஆபத்தானதாகக் கருதுவதில்லை. கவனச்சிதறலை உருவாக்குகிறது என்பதாலேயே வாகனங்களை ஓட்டும்போது மொபைல்போன் பேசுவது தடை செய்யப்படுகிறது. நடந்து செல்வோருக்கும், சாலையைக் குறுக்கே நடந்து கடப்பவருக்கும் கூட, மொபைல்போன் பேச்சு கவனச்சிதறலை ஏற்படுத்துவதில்லையா?

மொபைல்போன் பேச்சு நமது கவனத்தை முற்றிலும் சீர்குலைக்கிறது. மறுமுனையில் பேசுபவரின் உணர்வுகளுடன் ஒன்றிவிடுவதே இந்தக் கவனச் சிதறலுக்குக் காரணம். மறுமுனையில் பேசுபவரின் முகம் நமது மனக்கண்ணில் நிழலாடலாம்.

அதே நினைவில் சாலையைக் கடந்தால் என்ன ஆகும்? ஒழுங்காக வாகனத்தை இயக்குபவரும் இதனால் விபத்தில் சிக்கலாம்.

நவீன சாதனங்களை நமது வசதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்து, அந்தச் சாதனங்களின் அடிமையாக நாம் மாறி வருகிறோம். மொபைல்போன் இல்லாத உலகை கற்பனை செய்ய முடியாத நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம்.

நமது மொபைல்போன் சார்பு அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது.

பலநாள் பட்டினி கிடந்தவன் விருந்துச் சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுவது என்று புரியாமல் தன்மீது வாரி இறைத்துக் கொள்வது போல, நமது மொபைல்போன் பயன்பாடு இருக்கிறது.

தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத காலங்களில் பேச முடியாத முந்தைய தலைமுறைகளுக்கும் சேர்த்துப் பேசித் தீர்த்துவிடுவது என்று, இப்போதைய தலைமுறையினர் கங்கணம் கட்டிவிட்டனரா?

மொபைல்போன் பயன்படுத்தாமல் இருப்பது இனி சாத்தியமில்லை. நடந்து செல்வோர் மொபைல்போன் பேசுவதைத் தடுக்கவும் வழியில்லை. ஆனால், ரயில்பாதை, சாலைகளைக் கடக்கும்போதேனும் மொபைல்போன் பேசாமல் செல்லலாமே?

கட்டாயமாக போன் பேச வேண்டுமானால், சில நிமிடங்கள் சாலையோரமாக நின்று பேசித் தீர்த்துவிட்டுச் செல்லலாமே? "போய்ச் சேர' அப்படி என்ன அவசரம்? அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல். இத்தகைய அரிய, இனிய மனித வாழ்க்கையை மொபைல்போன் பேச்சுக்காக இழக்க வேண்டுமா? இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டும்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

அபு மர்வா

முத்துப்பேட்டையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான இரு கார்கள்..


முத்துப்பேட்டை, ஜூலை 03 : முத்துப்பேட்டையில் இன்று அதிகாலையில் நேருக்கு நேராக மோதிக்கொண்டு இரு கார்களும் நாசமடைந்துள்ளது. இன்று அதிகாலையில் திருத்துறைப்பூண்டியிலிருந்து வந்த காரும் பட்டுக்கோட்டையில் இருந்து வந்த காரும் முத்துப்பேட்டை ECR பகுதியில் நேருக்கு நேராக மோதிக்கொண்டது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களை தஞ்சாவூர் அரசு மருத்துவமைக்கு கொண்டு சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
source from: www.mttexpress.com, www.muthupettaixpress.com,
நமது நிருபர்

கோவிலூர் லக்ஷ்மணன்

முத்துப்பேட்டையில் அடையாலம் தெரியாத வாகனம் மோதி டிராக்டர் டிரைவர் பிணம்.


முத்துப்பேட்டை, ஜூலை 03 : முத்துப்பேட்டையில் நேற்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி டிராக்டர் டிரைவர் கணபதி இறந்து கிடந்தார். நேற்று அவர் ECR பாதை வழியில் வாக்கிங் சென்று கொண்டிருக்கும் போது எதிர் பாராமல் அவர் எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
source from: www.mttexpress.com, www.muthupettaixpress.com
நமது நிருபர்

AKL .அப்துல் ரஹ்மான், யூசுப் அலி (ஆலிம்)

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் புதிய வெளியிடு ஓர் பார்வை.


முத்துபேட்டை,ஜூலை 03 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தற்போது வெப் டிசைன், வெப் ஹோஸ்டிங் என்ற புதிய விளம்பரத்தை உங்கள் முன்பு அறிமுகம் செய்துள்ளது. இதில் என்னவெனில் வர்த்தகம் சார்ந்தவை, விளையாட்டு சார்ந்தவை, செய்திகள் சார்ந்தவை, சமூகம் மற்றும் சமுதாயம் ஆகிய பெயரில் வலைத்தளம் உருவாக்குவது குறித்து உங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளோம் தாங்கள் விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இதை மிக குறைந்த விலையில் உங்களுக்கு டொமைன் நேம் மற்றும் வெப் ஹோஸ்டிங் செய்து தரப்படும்.
MTT EXPRESS இணையதளத்தின் புதிய வெளியிடு:
1) Domain Name Registration
2) Web Design
3) Web Site Management
4) Web Hosting
5) Web Based Email
6) Hosted Exchange
இவைகள் மற்றும் சமுதாய பொதுக் கூட்டம் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கு எங்களிடம் MTT EXPRESS மூலமாகவும், மற்றும் தனியாகவும் நேரடி ஒலிபரப்பு செய்ய விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரம் அறிய
public.mttexpress@gmail.com, 00971- 553871984, 00971 - 558006543, 0091 - 9944783244, ஆகிய எங்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
source from: www.mttexpress.com, www.muthupettaixpress.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நடத்திய பரிசளிப்பு விழா ஓர் பார்வை...







முத்துப்பேட்டை,ஜூன் 19 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய வினா, விடை போட்டி 30.05.2012 முதல் 30௦.06.2012 வரை கடந்த 1 மாதமாக மிக சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசுபெற்ற முதல் மூன்று நபர்களை ஊக்கவிக்கும் விதமாக நேற்று மாலை 4.30 மணிக்கு நமது முஹைதீன் பள்ளி வாசால் மதரசாவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. U. பத்ரு ஜமான் (அரூஷி) முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் துணைத் தலைவர் அவர்கள் தலைமை வகித்தார். M.ஷேக் மியான் (பேஸ் இமாம் அரபு சாஹிப் பள்ளி வாசல்) அவர்கள் முன்னிலை வகித்தார். பின்னர் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக க.மு.நெயினார் முஹம்மது (சோழநாடு) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள தலைவர் EKA. முனவ்வர் அஹமது கான் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு நன்றியுரை வழங்கி நிறைவு செய்தார். இதில் இமாம்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

பரிசு பெற்றவர்களின் விபரம்:

முதல் பரிசு ரூபாய்: 1000 பெற்றவர். J. லாமியா புதிய காளியம்மன் கோவில் தெரு முத்துப்பேட்டை.

இரண்டாம் பரிசு ரூபாய்: 750 பெற்றவர். M. செய்து அஹமது கபீர், திமிலத் தெரு முத்துப்பேட்டை.

மூன்றாம் பரிசு ரூபாய்: 500 பெற்றவர். ANA. ஹாஜா நஜுபுதீன், புதுத் தெரு முத்துப்பேட்டை.

பரிசு வழங்கியவர்களின் விபரம்:

முதல் பரிசு வழங்கியவர், A. அல் அமீன் (SDPI 13 வது வார்டு கிளை).

இரண்டாம் பரிசு வழங்கியவர், S. ஜஹபர் உசேன்.

மூன்றாம் பரிசு வழங்கியவர், P.M. ஜாஹிர் உசேன்.

தேநீர் உதவி வழங்கியவர்களின் விபரம்:

M.A.K. ஹிதாயத்துல்லா. DCHT,
P.M. ஜாஹிர் உசேன்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைத்தளத்தின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com, www.muthupettaixpress.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்.

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய ஆலோசனைக் கூட்டம் ஓர் பார்வை.


துபாய், ஜூன் 17: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய ஆலோசனைக் கூட்டம் டேரா துபாயில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ASNS. அப்துல் பாரி அவர்கள் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் மற்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் மூலம் உதவிகள் வழங்குவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் மற்றும் தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் புதிய நிர்வாகிகளும் இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தீர்மானங்கள்:
1) ஏழை எளிய மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்குத் தேவையான உதவிகளை வழங்குவது.என முடிவெடுக்கப்பட்டது.
2) IFS, IAS, IPS போன்ற படிப்புகளுக்கு ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது.
3) முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் இவற்றை வீடு வீடாக எடுத்துரைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
4) பத்திரிகை துறையில் பின்தங்கிய மானாவ, மாணவியர்களுக்கு மத்தியில் இத்துறையின் ஆர்வத்தை எடுத்துரைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
5) குழந்தைகள் தொழிலாளர் முறையை அடியோடு ஒழிக்க பாடுபடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

புதிய நிர்வாகிகளின் விபரம்:

கெளரவ தலைவர்:
AKL.L.முஹமது மன்சூர்.

தலைவர்:
EKA.முனவ்வர் அஹமது கான். BHM,

துணைத் தலைவர்:
U.பத்ரு ஜமான் (அரூசி)

பொதுச் செயலாளர்:
ASNS.அப்துல் பாரி

செயலாளர்கள்:
M.முஹைதீன் பிச்சை,
M.சலாஹுதீன்
யூசுப் அலி (ஆலிம்)

துணைச் செயலாளர்:
J.ஷேக் பரீது. DHM,

பொருளாளர்:
M.A.K.ஹிதாயத்துல்லா. DCHT,

துணைப் பொருளாளர்:
H.தமீம் நியாஸ். DEE,

இணையத்தள ஆலோசகர்கள்:
M.செய்யது அப்துல் ரஹ்மான் (பூ கொய்யா)
A.சாதாத் பாட்சா ( கொய்யா)
P.M. ஜாகிர் உசேன்
I. அப்துல் ஹமீது.B.Com, PGDCA
M.சித்திக் ரஹ்மான். Bsc,

ஒருங்கிணைப்பாளர்கள்:
A.முஹம்மது இல்யாஸ். MBA. MA. Journalism & Mass Communication.
T.E.S.சுகைல்

நிருபர்கள்
AKLT.அப்துல் ரஹ்மான். BBA,
S.ஷாகுல் ஹமீது (தண்டையா)
K.எர்சாத் அஹமது. MCA,
O.M.சுபைத் கான். BE,
கோவிலூர் லட்சுமணன்
எடையூர் பாலா
source from: www.muthupettaiexpress..blogspot.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

முத்துப்பேட்டையில் SDPI கட்சியின் நகர கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு.





முத்துப்பேட்டை, ஜூன் 17 : முத்துப்பேட்டை சோஷியல் டெமாக்ரட்டிக் பார்டிஆஃப் இந்தியா சார்பில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நகர கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் புதிய நகர நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இதில் 21.06.2012 அன்று SDPI கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா மிக சிறப்பாக நடத்த இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் விபரம்:
தலைவர். S. நிஷார் அஹமது, துணைத்தலைவர் சேக் மைதீன், செயலாளர் பாட்சா, துணைச் செயலாளர். ஷாகுல் ஹமீது, பொருளாளர் சலீம், மற்றும் நகர செயற் குழு உறுப்பினர் ஷேக், பெரோஸ் கான், யாசிர், ஹபீப் கான், நெய்னா முஹமது, முஹைதீன், ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா, மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன், மாவட்ட பொருளாளர் நெய்னா முஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
source from: www.muthupettaiexpress.blogspotcom
நமது நிருபர்

O.M. சுபைத் கான்

முத்துப்பேட்டையில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பேரணி.



முத்துப்பேட்டை, ஜூன் 16 : முத்துப்பேட்டை புதுத் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. மாணவர் சேர்க்கை பேரணியை உதவித்தொடக்கல்வி அலுவலர் ரகுராமன், இன்பவேணி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. கல்விக்குழு தலைவர் மெட்ரோ மாலிக், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் திரு. வ.க. ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுல்தான் இபுராஹீம் ஆகியோர் தலைமை வகித்தனர். இப்பேரணி புதுத் தெரு, காளியம்மன் கோவில் தெரு, ஆஸ்பத்திரி தெரு வழியாக பள்ளியை வந்தடைந்தது. சேர்க்கை பேரணியில் ஆசிரியர்களான இராமகிருஷ்ணன், ஆசிரியை முத்துலட்சுமி, அமிர்தம், துர்கா தேவி மற்றும் உறுபினர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமையாசிரியர் ஆரோக்கிய அந்தோணி ராஜ் நன்றி கூறினார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

யூசுப் அலி ஆலிம், AKL .அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டையில் உயர் மின் அழுத்த மின் கம்பம் பழுதடைந்து விழும் அபாயம்..



முத்துப்பேட்டை, ஜூன் 16 : முத்துப்பேட்டையில் பட்டுக்கோட்டை சாலை பழைய வின்னர்ஸ் ஸ்கூல் வாசலில் உயர் மின் அழுத்த மின் கம்பம் உள்ளது. அதே இடத்தில் தற்போது தலைமை தபால் நிலையம் உள்ளது. அங்கு உயர் மின் கம்பம் அது இரும்பு போஸ்டில் உள்ளது. அதிலிருந்துதான் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. கீழ் தளத்தில் உள்ள மின்கம்பம் கீழே விழும் அபாயம் இருக்கின்றது. எந்நேரத்தில் கீழே விழும் என்ற அபாயம் அந்த பகுதி மக்களுக்கு அச்சமாகவே உள்ளது. மேலும் அந்த பகுதி எந்நேரமும் மக்கள் அலைமோதும் பகுதி முக்கியமான இடங்கள், கடைகள், முக்கிய பள்ளிவாசல்கள்,முக்கிய அலுவகம் பள்ளிக்கூடம் ஆகியவைகள் இரவு பகல் மக்களின் நடமாடும் பகுதிகளாகும். அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் செல்லும் பகுதியாகும்.அந்த பகுதியில் இந்த மின்கம்பம் அறுந்து கீழே விந்தால் அதிக உயிர்சேதம் ஏற்படும்.இந்த நிலை குறித்து மக்கள் அதிகம் புலம்பி வருகின்றனர். இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு நிர்வாகி சுல்தான் இபுராஹீம் (சு.இனா) அவர்கள் கூறியதாவது. இந்த மின் கம்பத்தால் பலரது உயிர்கள் பலியாகும் நிலை உள்ளது என்றும் ஆனால் மின்சார வாரியம் இவற்றை சரி செய்யாமல் அலட்சியப்படுத்தி வருகிறது.அரசு இந்த நிகழ்வுகள் நடந்து முடிந்த பிறகுதான் சரி செய்வார்கள். ஒரு மின்வாரிய ஊழியர் மரத்தில் ஏறினாலே கம்பம் முறிந்து கீழே விழுந்து விடும் தருவாயில் உள்ளது. இந்த நிலைக்கு மின்சார வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்குமா பொறுத்திருந்து பாப்போம்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

AKL .அப்துல் ரஹ்மான், U .பத்ரு ஜமான் (அரூஷி)

முத்துப்பேட்டை மக்களுக்கு பயன் பட தயாராக இருக்கும் ஆசாத்நகர் பாலம்..



முத்துப்பேட்டை, ஜூன் 11 : முத்துப்பேட்டை ஆசாத நகர் ஜாம்வோனோடை புதிய இணைப்பு பாலம் விரைவில் திறப்பு விழா கண்டு மக்களின் பயன் பாட்டிற்கு தயாராக உள்ளது. அதன் காட்சியை இங்கு பாப்போம்..

நமது நிருபர்

ரிப்போர்ட்டர் கோவிலூர் லக்ஷ்மணன்

முத்துப்பேட்டையில் தி.மு.க. ஜாம்பை கல்யாணம் காரை உடைத்த R.S.S. தீவிரவாதிகள்..!!!




முத்துப்பேட்டை, ஜூன் 07 : முத்துப்பேட்டை ஜாம்வோநோடையில் நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் அந்த பகுதிகள் முழுவதும் மின் விளக்கு மற்றும் ஸ்பீக்கர் கட்டப்பட்டு பாட்டுகள் ஒழிக்கப்பட்டன. அவற்றில் கருப்புதான் எனக்கு புடித்த கலரு என்று பாடலை கேட்ட RSS தீவிரவாதிகள் அந்த பாட்டை போடா கூடாது என்றும், இந்த பாட்டை போட்டால் எங்களுடைய தலைவன் பெயர் வருகிறது என்றும் கூறி வாய்த்தகராறில் இறங்கினர். இதனால் அங்குள்ள பொது மக்களுக்கும் கலவர காரவர்களுக்கும் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை கேட்ட முத்துப்பேட்டை தி.மு.க. ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திரு. ஜாம்பை கல்யாணம் அவர்கள் காதுக்கு எட்டியது. அப்போது அவர் இருவருக்கும் மத்தியில் சமரசத்தை ஏற்படுத்த முயற்சித்தார். இதுபுடிக்காத R.S.S. தீவிரவாதிகள் மத்தியில் மேலும் ஆத்திரம் அடைந்து அங்கு நிறுத்தப்பட்ட ஜாம்பை கல்யாணம் அவர்களின் காரை உடைத்து சேதப்படுத்தினர். இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விரைந்தனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட முத்துப்பேட்டை பிஜேபி முருகானந்தம், மற்றும் மகேஷ் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடிவருகின்றனர். இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டை வாழக்காய் பச்சில் மிருக உருவங்கள்..!!!




முத்துப்பேட்டை, ஜூன் 07 : முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் வடைகடை உள்ளது. இந்த கடையில் எந்நேரமும் கூட்டமாக இருந்தது. இந்த நிலையில் அந்த கடை மாஸ்டர் முஹம்மது இபுராஹீம் போட்ட வாழைக்காய் பஜ்ஜிகளில் ஒரு பஜ்ஜி முயல் உருவத்தில் இரண்டு முயல் கட்டி பிடித்து பாசத்தை பரிமாற்றம் செய்வது போலவும், இன்னொரு செம்மறி ஆடு அமர்ந்து அசை போடுவது போலவும் இருந்தது.இவற்றை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
தொகுப்பு

அகலத்.அப்துல் ரஹ்மான்,

முத்துப்பேட்டையில் நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது..!




முத்துப்பேட்டை, ஜூன் 02 : முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக கலை இலக்கிய நிகழ்வு விடிய விடிய நடைபெற்றது. முன்னதாக மண்ணை சாலை ரயில்வே கேட்டிலிருந்து மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இச்சங்கத்தின் நிர்வாகி டாக்டர். கே. இளங்கோ தலைமை வகித்தார். இச்சங்கத்தின் ஒன்றிய செயலாளர் திரு.கே.வி.ராஜேந்திரன், சி.பி.எம்.நகர செயலாளர் ஏ. காளிமுத்து, சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் முருகையன், துணைச் செயாளர் ஆர்.எஸ்.ராமநாதன், காங்.பிரமுகர் நா.ஜீவானந்தம், உள்பட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். அப்போது ஊர்வலமாக குமரன் பஜார், பழைய பேருந்து நிலையம், திருத்துறைப்பூண்டி சாலை வழியாக ஆசாத் நகர் பழைய பேருந்து நிலையம் சென்று விழா மேடையை அடைந்தனர்.மேலும் இதில் பல்வேறு அமைப்பு நிர்வாகிகளும் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் தஞ்சை ஜான் பீட்டரின் தப்பாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் ஆகியதும் நடைபெற்றது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

AKLT.அப்துல் ரஹ்மான்,

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நடத்திய வினா,விடையும், வெற்றி பெற்றவர்களின் விபரமும்..


முத்துப்பேட்டை, ஜூன் 02 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய மாபெரும் வினா விடை போட்டி மிக சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் அதிகமான வாசகர்கள் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக பதிலளித்தனர். மேலும் இந்த போட்டியில் கலந்து கொண்ட முதல் மூன்று பரிசை பெற்ற வாசகர்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்படும். மேலும் இதில் கலந்து கொண்டு அனைத்து வாசகர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் தங்களுடைய வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

வெற்றி பெற்றவர்களின் விபரம்:

முதல் பரிசு பெற்றவர் J.லாமிய அவர்கள் புதிய காளியம்மன் கோவில் தெரு முத்துப்பேட்டை, 30 கேள்விக்கு 26 பதில்.சரியானவை

இரண்டாவது பரிசு பெற்றவர் ம.கபீர் அவர்கள் தெற்கு தெரு முத்துப்பேட்டை, 30 கேள்விக்கு 24 பதில்.சரியானவை

மூன்றாவது பரிசு பெற்றவர் ஆ.நே. ஹாஜா நஜுபுதீன் அவர்கள் புதுத் தெரு முத்துப்பேட்டை, 30 கேள்விக்கு 18 பதில் சரியானவை
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

பெற்றோல் விலையை கண்டித்து திருவாரூரில் SDPI நடத்திய மாபெறம் ஆர்பாட்டம்...





திருவாரூர், ஜூன் 02 : SDPI திருவாரூர் மாவட்டம் சார்பாக பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு 01 /06 /2012 அன்று மாலை 4 .30 மணிக்கு நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுசா அவர்கள் தலமை தங்கினார் , மாவட்ட தொழிற்சங்க தலைவர் அப்துல் கரீம் , மாவட்ட பொருளாளர் நைனா முஹம்மது, நன்னிலம் தொகுதி கமிட்டி உறுப்பினர் அப்துல் ஹமித், ஆகியோர் கலந்து கொண்டனர் . .மாநில செயற்குழு உறுப்பினர் A .அபூபக்கர் சித்திக் அவர்கள் சிறப்புரை ஆற்றினர் .மாவட்ட செயலாளர் N .m .பாவா பக்ருதீன் கண்டன உரை ஆற்றினார் .ஷேக் முஹைதீன் நகர செயற்குழு கண்டன கோஷம் ஆற்றினார் .இறுதியாக மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் A . முஹம்மது பைசல் அவர்கள் நன்றி உரை ஆற்றினார் இதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அணைத்து கிளை நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் .இதில் நூற்றுகணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்

தொகுப்பு

AKL .அப்துல் ரஹ்மான், யூசுப் அலி (ஆலிம்)

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய கேள்வி பதில் போட்டி ஓர் பார்வை


முத்துப்பேட்டை, மே 31 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் நடைபெற்ற வினா விடை போட்டி குறித்த ஓர் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு தருகிறோம்..

1) இவ்வுலகில் மனிதனையும், ஜின்களையும் அல்லாஹ் எதற்காக படைத்தான்.?
(A) நன்றாக வாழ்வதற்கு (B) பிறருக்கு உதவி செய்ய (C) தன்னை வணங்குவதற்காக (D) ஏதும் தெரியாது.

விடை: (C) தன்னை வணங்குவதற்காக
2) இந்த உலகில் அல்லாஹ் வால் சபிக்கப்பட்ட சமுதாயம் எது?
(A) இந்து சமுதாயம் (B) கிருஸ்தவ சமுதாம் (C) புத்த சமுதாயம் (D) யூத சமுதாயம்.

விடை:(D) யூத சமுதாயம்
3) உலகில் முதன் முதலில் ராணுவத்தை (எல்லைப் பாதுகாப்புப் படையை) அறிமுகம் செய்தவர் யார்?
(A) அலி (ரலி) (B) உமர் (ரலி) (C) பிலால் (ரலி) (D) எதுவும் தெரியாது.

விடை:(B) உமர் (ரலி)
4) மறுமை நாளில் அல்லாஹ் மூன்று நபருடன் பேசவே மாட்டன், அந்த மூவரில் ஒருவரின் செயலைக் குறிப்பிடுக?
(A) பெருமையடிக்கும் ஏழை (B) பெருமையடிக்கும் பணக்காரன் (C) எதுவும் தெரியாது.

விடை:(A) பெருமையடிக்கும் ஏழை
5) அல்லாஹ் எந்த நபியின் தியாகத்தை நினைவு கூர்வதற்காக ஹஜ்ஜை கடமையாக்கினான்?
(A) முஹம்மது நபி (ஸல்) (B) ஆதம் (அலை) (C) சுலைமான் (அலை) (D) இபுராஹீம் (அலை)

விடை: (D) இபுராஹீம் (அலை)
6) இந்த முஸ்லிம் சமுதாயத்தின் நம்மிக்கையார் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யாரை குறிப்பிட்டார்கள்?
(A) பிலால் ரலி, (B) அபு உபைதா ரலி, (C) அபூபக்கர் சித்திக் ரலி, (D) அன்னை ஆயிஷா ரலி

விடை:(B) அபு உபைதா ரலி
7) தனது 17 வயதிலேயே இந்திய நாட்டிற்காக தன் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்று போர்க்களம் புறப்பட்ட தியாகி யார்?
(A) கஜினி முஹம்மது (B) திப்பு சுல்தான் (C) அவரங் சிப் (D) ஹைதர் அலி

விடை:(B) திப்பு சுல்தான்
8) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இபாதத்தின் சிறப்பைவிட........................சிறப்புதான் சிறந்தது என்று எதனைக் குறிப்பிட்டார்கள்?
(A) கல்வி (B) பொருளாதாரம் (C) பொதுலம் (D) வெற்றி

விடை:(A) கல்வி
9) அல்லாஹ் மூன்று நபர்களுக்கு சொர்கத்தை ஹராமாக்கி விட்டான், அதில் ஏதேனும் ஒரு நபரைப் பற்றி குறிப்பிடுக?
(A) ஏழைக்கு உதவி புரியாதவன் (B) பெற்றோருக்கு நோவினை செய்பவன் (C) எனக்கு தெரியாது.

விடை:(B) பெற்றோருக்கு நோவினை செய்பவன்
10) முதன் முதலில் இஸ்லாத்திற்காக தன் உயிரையே தியாகம் செய்த பெண் சகாபி யார்?
(A) சுமையா ரலி, (B) ஆய்ஷா ரலி, (C) பாத்திமா ரலி, (D) கதிஜா ரலி

விடை:(A) சுமையா ரலி
11) இந்தியாவில் இஸ்லாமியர்கள் எத்துனை ஆண்டு காலம் ஆட்சி செய்தனர்.?
(A) 600 (B) 1100 (C) 900 (D) 1111

விடை: 1100
12) நபி (ஸல்) அவர்கள் இவர் அல்லாஹ்வின் வாள் (சைபுல்லாஹ்) என்று யாரை குறிப்பிட்டார்கள்?
(A) அலி ரலி (B) உமர் ரலி (C) காலித் பின் வாலித் ரலி (D) ஹம்சா ரலி

விடை: காலித் பின் வாலித் ரலி
13) எந்த கலிபாவால் பைத்துல் முக்கத்தஸ் (முதல் கிப்லாவை) யூதர்களிடம் இருந்து முதன் முதலில் மீட்டெடுத்த அந்த சகாபியின் பெயர் என்ன?
(A) அபூபக்கர் சித்திக் (B) உமர் ரலி (C) உஸ்மான் ரலி (D) அலி ரலி

விடை: உமர் ரலி
14) ஒரு நபித்தோழர் இறந்ததற்கு அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கியது, அந்த சஹாபியின் பெயர் என்ன?
(A) பிலால் ரலி (B) உஸ்மான் ரலி (C) அனஸ் பின் நள்ர் ரலி (D) ஸஆது பின் முஆத் ரலி

விடை: ஸஆது பின் முஆத் ரலி
15) நபி (ஸல்) அவர்கள் தமது விண்ணுலகப் பயணத்தின் போது சொர்கத்தில் ஒரு நபித்தோழரின் காலடி ஓசையை கேட்டார்கள் அந்த சஹாபியின் பெயர் என்ன?
(A) பிலால் ரலி (B) அலி ரலி (C) அபூபக்கர் சித்திக் (D) உமர் ரலி

விடை: பிலால் ரலி
16) அபூபக்கர் சித்திக் ரலி மற்றும் உமர் ரலி போன்ற மூத்த சகாபிகளுக்கு தலைமையேற்று படை நடத்திய சிறிய வயது நபித் தோழர் யார்?
(A) உஸ்மான் ரலி (B) உஸாமா பின் ஜைத் ரலி (B) அலி ரலி (D) ஏதும் தெரியாது

விடை: உஸாமா பின் ஜைத் ரலி
17) கி.பி.1857 ல் நடத்திய சிப்பாய்களின் எழுச்சியின் போது முஸ்லிம் மக்கள் எத்துனை பேர் சகீதானார்கள் (கொல்லாப்பட்டனர்)?
(A) 20,000 பகதுர்ஷாவின் மகன் உள்பட (B) 27,500 பகதுர்ஷாவின் மகன் உள்பட (C) 27,000பகதுர்ஷாவின் மகன் உள்பட

விடை: 27,000பகதுர்ஷாவின் மகன் உள்பட
18) இங்கிலாந்து நாட்டில் வெள்ளையர் ஆட்சி நிலை நாட்ட வேண்டும் என்றால் குர்ஆனை கிழித்தெறிய வேண்டும் என்று சொன்னவன் யார்?
(A) பிரான்ஸ் மன்னன் கி.பி. 1888 (B) ஜோசெஹ்ப் இந்தி (C) அனீஸ் தாஸ் கி.பி. 1889 (D) பிரிட்டீஸ் மன்னர் கிலார்டு. கி.பி. 1885

விடை: பிரிட்டீஸ் மன்னர் கிலார்டு. கி.பி. 1885
19) இந்திய போராளி திப்புசுல்தான் அவர்கள் எந்த மொழியில் குர்ஆனை மொழி பெயர்த்தார்?
(A) ஹிந்தி (B) ஃபிரன்ஜூ (C) உர்து (D) ஆங்கிலம்

விடை: ஃபிரன்ஜூ
20) துருக்கியில் இஸ்லாமிய ஆட்சியை (கிலாஃபத்தை) யூதர்கள் எந்த ஆண்டு முழுமையாக ஆட்சியை கலைத்தனர்?
(A) 1924 பிப் 22 (B) 1928 மார்ச் (C) 1930 மே 30 (D) 1950 ஆகஸ்ட் 15

விடை: 1924 பிப் 22
21) எந்த நபியை அல்லாஹ் தாயும், தந்தையும் இல்லாமல் தன வடிவத்திலேயே படைத்தான், அந்த நபியின் பெயர் என்ன?
(A)நபி ஈசா அலை, (B) நபி இப்ராஹீம் அலை, (C) நபி ஆதம் அலை, (D) முஹம்மது நபி (ஸல்).

விடை: ஆதம் அலை.
22) எந்த நபியை அல்லாஹ் இவ்வுலகில் கடுமையான நோயைக் கொண்டு சோதித்தான்?
(A) நபி ஈசா அலை (B) நபி மூஸா அலை (C) நபி யூனிஸ் அலை (D) நபி ஐய்யூப் அலை

விடை: நபி ஐய்யூப் அலை
23) மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த சஹாபாக்களை (சஹாபிகளை) அரபியில் வரலாறு எவ்வாறு குறிப்பிடுகிறது?
(A) அன்சாரிகள் (B) முஹாஜிர்கள் (C) முஜாகிதீன்கள் (D) எதுவும் தெரியாது.

விடை: முஹாஜிர்கள்
24) உலக மக்களால் பாலைவனச் சிங்கம் எனப் போற்றப்பட்டவர் யார்?
(A) திப்பு சுல்தான் (B) மறுத்த நாயகம் யூசுப் கான் (C) உமர் முக்தார் (D) ஹைதர் அலி

விடை: உமர் முக்தார்
25) நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தின் போது நான்காவது வானத்தில் எந்த நபியை சந்தித்தார்கள், அந்த நபியின் பெயர் என்ன?
(A) நபி இத்ரீஸ் அலை (B) நபி மூசா அலை (C) நபி எஹ்யா அலை (D) நபி இல்யாஸ் அலை

விடை: நபி இத்ரீஸ் அலை
26) எந்த நபி இவ்வுலகில் ஆயிரம் வருடம் தூதுச் செய்தியை மக்களிடம் எடுத்துச் சொன்னார்கள், அந்த நபியின் பெயர் என்ன?
(A) நபி மூசா அலை (B) நபி நூஹு அலை (C) நபி சுலைமான் அலை (D) நபி ஆதம் அலை

விடை:நபி நூஹு அலை
27) திருமறைக் குர்ஆன் முழுமையாக (இவ்வுலகிற்கு) இறக்கி அருளப்பட்ட ஆண்டு?
(A) 21 ஆண்டு (B) 22 ஆண்டு (C) 23 ஆண்டு (D) 28 ஆண்டு

விடை: 23 ஆண்டு
28) ஐவேலை தொழுகையில் மொத்தம் எத்துனை ரக்ஆத்துகள் உள்ளன?
(A) 17 ரக்ஆத்துகள் (B) 15 ரக்ஆத்துகள் (C) 16 ரக்ஆத்துகள் (C) 18 ரக்ஆத்துகள்

விடை: 17
29) வட்டி வாங்கி வந்தவர்களை நபி (ஸல்) அவர்களுக்கு மிஹ்ராஜ் சென்ற போது காட்டப்பட்டது, அவர்களின் நிலை எவ்வாறு இருந்தது?
(A) உடல் முழுவதும் இல்லை (B) வயறு ஊதிப் போய் இருந்தது (C) கால் இரண்டும் இல்லை (D) எனக்கு தெரியாது

விடை: வயறு ஊதிப் போய் இருந்தது
30) நாய் மற்றும் உருவப்படம் உள்ள வீட்டிற்குள் யார் நுழைய மாட்டார்கள்?
(A) மலக்குகள் (B) பணம் செல்வம் (C) செய்தாங்கள் (D) எனக்கு தெரியாது
விடை: மலக்குகள்

source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கமும், நடந்து முடிந்த 4 ஆம் ஆண்டு நிகழ்சிகளும்..







முத்துப்பேட்டை,மே 30 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் துபாய் கமிட்டியின் 4 ஆம் ஆண்டு திருக்குர்ஆன் மற்றும் பேச்சுப் போட்டி நேற்று காலை 9 மணியிலிருந்து ஜனாப். அல்ஹாஜி. கா.மு.நெய்னார் முஹம்மது அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் இந்நிகழ்ச்சி துவக்கமாக புதுப்பள்ளி இமாம் கிராத் ஓதி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிக்கு ஜனாப் ஹாஜி.P .சின்ன மரைக்காயர் அவர்கள் தலைமை வகித்தார். இதனைத்தொடர்ந்து ஜனாப். M.H. சேக் தாவூது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன் பின்பு மெளலவி ஹாஃபீல் P .அஹமது ஜலாலுத்தின் ரஷாதி குத்பா பள்ளி இமாம் அவர்கள் பெண்களின் ஒழுக்கமும் சமுதாயத்தின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் ஹாஜி.L .கமால் பாட்சா சேர்மேன் நேசனல்ஃபார்மா மருத்துவமனை மற்றும் ஆராயிச்சி மையம் தஞ்சாவூர். மேலும் , இச்சங்கத்தின் முத்துப்பேட்டை பிரதிநிதிகளும், சங்கத்தின் முன்னாள் பொறுப்பாளர்களும் மற்றும் அனைத்து முஹல்லாஹ் பள்ளி நிர்வாகிகள்,இமாம் பெருமக்கள் ஊர் மக்கள் மற்றும் அனைத்து இயக்க பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் அனைத்து முஹல்லாஹ் பள்ளி மணாவ, மாணவிகளும் மற்றும் பெண்கள் மதரசா மாணவிகளும் போட்டியில் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளியிட்டு பரிசுகளை தட்டிச் சென்றனர்.

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் விபரம்:

திருக்குர்ஆன் ஓதும் போட்டி ஆண் பிள்ளைகள் பரிசு பெற்ற விபரங்கள்:

1 வது பரிசு புதுப் பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் முஹம்மது தாமர் தகப்பனார் பெயர் துறை என்கிற M.பசுல் ரஹ்மான் அவர்களின் மகன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு 2500 ரூபாய் மத்திப்புள்ள தங்க காசு மற்றும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

2 வது பரிசு புதுப்பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் முஹம்மது ரசீத் கான் தகப்பனார் பெயர் பகுருதீன் அவர்களின் மகன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

3 வது பரிசு தர்ஹா பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் ஜாபார் அஸ்பாக் தகப்பனார் பெயர் மன்சூர் அலி அவர்களின் மகன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

4 வது பரிசு புதுப்பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் அப்துல் பாசித் தகப்பனார் பெயர் அப்துல் அஜீஸ் அவர்களின் மகன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

5 வது பரிசு புதுப்பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் முஹம்மது ஆசீக் தகப்பனார் பெயர் நூர் முஹம்மது அவர்களின் மகன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

6 வது பரிசு புதுப்பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் பாரீஸ் அஹமது தகப்பனார் பெயர் M.சம்சுதீன் அவர்களின் மகன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

*************************************************************************************

திருக்குர்ஆன் ஓதும் போட்டி பெண் பிள்ளைகள் பரிசு பெற்ற விபரங்கள்:

1 வது பரிசு தர்பியத்துள் பனாத் பெண்கள் மதரசாவை சேர்ந்த மாணவி அஹமது ஆசியா தகப்பனார் பெயர் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகள் முதலாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

2 வது பரிசு முஹைதீன் பள்ளி பெண்கள் மதரசாவை சேர்ந்த மாணவி ஃபஹீமா பேகம் தகப்பனார் பெயர் முஹம்மது முஹைதீன் அவர்களின் மகள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

3 வது பரிசு தர்பியத்துள் பனாத் பெண்கள் மதரசாவை சேர்ந்த மாணவி கதிஜத்துள் குப்ரா தகப்பனார் பெயர் முஹம்மது இக்பால் அவர்களின் மகள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

4 வது பரிசு செக்கடித் தெரு பெண்கள் மதரசாவை சேர்ந்த மாணவி நூருல் ஆய்ஷா தகப்பனார் பெயர் ரம்ஜான் அலி அவர்களின் மகள் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

5 வது பரிசு முஹைதீன் பள்ளி பெண்கள் மதரசாவை சேர்ந்த மாணவி ஆஃப்ரீன் பானு தகப்பனார் பெயர் சாகுல் ஹமீது அவர்களின் மகள் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

6 வது பரிசு தர்ஹா பள்ளி பெண்கள் மதரசாவை சேர்ந்த மாணவி சுமையா தகப்பனார் பெயர் கபீர் அஹமது அவர்களின் மகள் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

*************************************************************************************

பேச்சுப் போட்டி ஆண் பிள்ளைகள் பரிசு பெற்ற விபரங்கள்:

1 வது பரிசு அரபு சாஹிப் பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் முஜாஹீத் தகப்பனார் பெயர் அஹமது அலி அவர்களின் மகன் முதலாவது இடத்தை பிடித்துள்ளார்.இவருக்கு 2500 ரூபாய் மத்திப்புள்ள தங்க காசு மற்றும் முத்துப்பேட்டை இஸ்லாமுய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

2 வது பரிசு அரபு சாஹிப் பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் நபீல் அஹமது தகப்பனார் பெயர் ஷாஜஹான் அவர்களின் மகன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

3 வது பரிசு அரபு சாஹிப் பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் சாசிதீன் தகப்பனார் பெயர் பாவா அவர்களின் மகன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

4 வது பரிசு அரபு சாஹிப் பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் தானிப் முஹம்மது தகப்பனார் பெயர் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

5 வது பரிசு முஹைதீன் பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் முஹம்மது அசருதீன் தகப்பனார் பெயர் முஸ்தபா அவர்களின் மகன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

6 வது பரிசு ஆசாத் நகர் பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் முஸ்தாக் ஆப்ரீன் தகப்பனார் பெயர் நிஜாமுதீன் அவர்களின் மகன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

*************************************************************************************

பேச்சுப் போட்டி பெண் பிள்ளைகள் பரிசு பெற்ற விபரங்கள்:

1 வது பரிசு அரபு சாஹிப் பள்ளி பெண்கள் மதரசாவை சேர்ந்த மாணவி சுமையா தகப்பனார் பெயர் முஹம்மது இபுறாஹீம் அவர்களின் மகள் முதலாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

2 வது பரிசு தர்பியத்துள் பனாத் பெண்கள் மதரசாவை சேர்ந்த மாணவி அஹமது ஆசியா தகப்பனார் பெயர் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

3 வது பரிசு குத்பா பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவி சுமையா தகப்பனார் பெயர் அஹமது மன்சூர் அவர்களின் மகள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

4 வது பரிசு குத்பா பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவி முஹ்பிதா சஹானா தகப்பனார் முஹம்மது ரபீக் அவர்களின் மகள் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

5 வது பரிசு குத்பா பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவி பரக்கத் நிஷா தகப்பனார் பெயர் ஜாகிர் உசேன் அவர்களின் மகள் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

6 வது பரிசு தர்பியத்துள் பனாத் பெண்கள் மதரசாவை சேர்ந்த மாணவி ருக்கையா தகப்பனார் பெயர் நெய்னார் முஹம்மது அவர்களின் மகள் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

மேலும் இதில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஆiறுதல் பரிசுகளும் முத்துப்பேட்டைஇஸ்லாமிய நல சங்கத்தின் சான்றிதல் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

U .பத்ரு ஜமான் (அரூசி)யூசுப் அலி (ஆலிம்)

முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் 12 பேரில் ஒருவருக்கு புற்று நோய்.!



முத்துப்பேட்டை,மே 29 : முத்துப்பேட்டையில் ஒன்றிய இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, தரம் உயர்த்த வேண்டும்,உயிர் காக்கும் மருந்துகளை போதுமான அளவிற்கு இருத்தல் வேண்டும். 24 மணிநேரமும் மருத்துவர்கள் பணியில் இருத்தல் வேண்டும். புதிய மருத்துவமனை கட்டிடத்தை உடனே திறக்க வேண்டும். குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவரை உடனே நியமிக்க வேண்டும், பிரேத பரிசோதனை செய்யும் வசதியை மீண்டும் உடனே செயல்படுத்த வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றகோரி முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.ஒன்றிய செயலாளர் பி.மீனம்மாள்தலைமை வகித்தார். இந்த ஆர்பாட்டத்தின் கோரிக்கையை விளக்கி அகில இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில குழு உறுப்பினர் ஆர்.தமிழ் செல்வி ராஜா பேசியதாவது, இன்று நடைபெற்ற இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும் இந்த பகுதிக்கு முக்கியமானதாகும் என்றும், தமிழகத்தில் உள்ள சுகாதாரங்களில் உள்ள அவலங்கள் உயிர் காக்கும் மருந்துகள் எந்த நேரமும் இருப்பு வைத்திருக்க மாட்டார்கள் என்றும் இதனால் தமிழக மக்கள் அதிகம் நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்கள் என்றும் ஆப்போது அவர் தெரிவித்தார். இதால் அனைத்து மக்களையும் பாண்டிசேரி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள் அதில் சிகிச்சை பெரும் தமிழக மக்கள் 12 பேரில் ஒருவருக்கு புற்று நோய் இருப்பது தெரியவந்தது என்றும் அவர் தெரிவித்தார்.சில நாட்களுக்கு முன்பு எதார்த்தமாக திருத்துறைப்பூண்டி உள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வை மேற்கொண்டோம். அங்கு நிறைமாத கர்பிணிப் பெண் சிறுநீர் கழிக்க முடியாத அளவிற்கு வளாகத்தில் உள்ள சுகாதார நிலயம் அவல நிலையில் உள்ளதை கண்டு நாங்கள் மன வேதனை அடைந்தோம் என்றும், இந்த அவல நிலையை தடுக்கத்தான் ஒவ்வொரு கிராமங்களிலும் கிராம சுகாதார நிலையத்தை அமைத்துள்ளது. இவற்றை முறையாக அரசு கடைபிடிக்க வேண்டும் என்று வலியுருத்தி நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்று மேலும் அவர் தெரிவித்தார். இதில் ஒன்றிய பொருளாளர் பரமேஷ் வரி, ஒன்றிய துணைச் செயலாளர் வி.நிர்மலா, ஒன்றிய துணைத்தலைவர் ராணி, இ.கம் ஒன்றிய தலைவர் முருகையன் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

AKLT.அப்துல் ரஹ்மான், யூசுப் அலி (ஆலிம்)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)