முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

திருமணச் செய்தி : " ராஜா (எ) A. முகம்மது யூசுப்தீன்,K. முஹ்ஸினா ஆஃப்ரீன்"




முத்துப்பேட்டை, செப்டம்பர் 03 : ஹிஜ்ரி 1433 ஷவ்வால் பிறை 14 , 02.09.2012 காலை 11 மணியளவில் முத்துப்பேட்டை O.P.M தெரு ஜனாப். அஹமது ஜலாலுதீன் அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் ராஜா (எ) A. முகம்மது யூசுப்தீன் முத்துப்பேட்டை குண்டாங்குளத்தெரு A. காதர் உசேன் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி K. முஹ்ஸினா ஆஃப்ரீன் மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 7 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து முத்துப்பேட்டை புதுப்பள்ளி இமாம், அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.)
source from: www.muthupettaiexpress.com
நமது நிருபர்

M.கபீர்

துபாயில் இந்த வருடம் மட்டும் சுமார் 1500 பேர் இஸ்லாத்தை ஏற்றனர்..


துபாய், செப்டம்பர் 02 : ஐக்கிய அரபு அமீரகத்தின் மாநிலமான துபாயில் இவ்வாண்டு மட்டும் 1500 க்கும் மேற்பட்ட நபர்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். இத்தகவலை தார் அல் பிர் செய்தி தொடர்பாளர் ராஷித் அல் ஜுபைபி தெரிவித்துள்ளார்.

கடந்த ரமலான் மாதத்தில் மட்டும் 300க்கும் அதிகமான மாற்று மதத்தினர் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக மனமுவந்து ஏற்றுக் கொண்டுள்ளனர் என் ஜுபைபி தெரிவிக்கிறார்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் இதில் அடங்குவர். இஸ்லாத்தின் மகத்துவத்தைபுரிந்துகொண்டு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.

தார் அல் பிர் மையத்திற்கு வருகை தருவோரிடம் இஸ்லாத்தைக் குறித்தும், இறுதித் தூதரைக் குறித்தும் அவர்களின் உள்ளங்களில் எழும் சந்தேகங்களுக்கு உரிய முறையில் பதில் அளிக்கப்பட்டு விளக்கமளிக்கப்படுகின்றன. திருக்குர்ஆனின் மொழிப்பெயர்ப்புகள், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைக் குறித்த பல்வேறு மொழிகளிலான நூற்களும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

துபாயிலிருந்து முத்துப்பேட்டை J. ஷேக் பாரித்


முத்துப்பேட்டையில் TNTJ நடத்திய இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக் கூட்டம்...











முத்துப்பேட்டை, செப்டம்பர் 02 : முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை 6 மணியளவில் துவங்கி இரவு 10 மணிவரை நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு TNTJ கிளை செயலாளர் ஜனாப். A.M. புஹாரி அவர்கள் தலைமை வகித்தார்.

அர்ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா, ரஹ்மத் நகர். சகோதரி. ஜெசீரா. ஆலிமா அவர்கள் தீமைகளை தடுப்பதில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இதற்க்கு பின்னர் TNTJ மாவட்ட பேச்சாளர் ஜனாப். M. அல்தாப் ஹுசைன் அவர்கள் ரமளானில் பெற்ற படிப்பினை என்ன? என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

மேலும் இதில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட TNTJ மாநில பொதுக் செயலாளர் ஜனாப். கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தின் பெயரில் ஏன் இத்தனை பிரிவுகள்?... என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சி முடிவின் போது TNTJ முத்துப்பேட்டை கிளை - 2 செயலர் ஜனாப். P. அப்துல் அஜீஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த கூட்டத்தில் சில தீர்மானகள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள் பின் வருமாறு:

இஸ்லாத்தில் இல்லாத தர்ஹா வழிபாடு, முரீது போன்ற இணைவைப்பு காரியங்கள் மற்றும் வரதட்சணை,மது போன்ற தீமையான காரியங்களிலிருந்து விலக முஸ்லிம்களுக்கு வழிகாட்டு மாறு இஸ்லாத்தின் அடிப்பையிலான குர்ஆன், ஹதீஸ் மேற்கோள் கட்டி முத்துப்பேட்டை உள்ள அனைத்து பள்ளி வாசல் நிர்வாகிகளுக்கும், மார்க்க அறிஞசர்களுக்கும், கடிதம் மூலம் நினைவு படுத்தும் பொது அதை கண்டு கொள்ளாமல் இருப்பதும், அந்த கடிதத்தை கிழித்து வீசுவதும் அறிவுடைமைதானா? என சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து இனிமேலாவது அல்லாஹ்விற்கு பயந்து செயல்படுமாறு இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முத்துப்பேட்டை அரசினர் ஆண்கள் உயர்நிலை பள்ளிகூடத்தின் நிர்வாகத்திற்கு மாணவர்களும், பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து ஒழுக்கம் மற்றும் கண்ணியத்திற்கு முஸ்லிம், மாணவர்கள் முன்மாத்ரியாக திகழவேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முத்துபெப்ட்டை அரசினர் ஆண்கள் உயர்நிலை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக பூரிதி செய்து ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை வலப்படுத்துமாறு கல்வி அதிகாரியை இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

புதிய பேருந்து நிலையத்தை சிமென்ட் ரோடு போட்டு செம்மை படுத்தி, போதுக்கூட்டத்திடலாக செயல்படுத்துவதை மாற்றி அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையம் உள்ளே வந்து செல்ல ஆவன செய்யுமாறு இந்த பொது கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மூன்று கிலோமீட்டர் வரை நடந்து செல்கின்றனர். இவர்கள் சிரமப்படாமல் இருக்க ஆசாத் நகர் பகுதியிலிருந்தே மீனவர்கள் ஏரி செல்ல வசதியாக உடனே சவுக்கனி ஆற்றை ஆழப்படுத்தி தருமாறு இந்த பொது கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

நம் ஊரின் நீர் நிலைகளான குளங்களை குப்பை மேடாகவும் சாக்கடையாகவும் மாறிவருவதை தடுத்து அதை பழையபடி நீர்பிடிப்பு குலங்களாக மாற்றும் படி இந்த பொது கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

பாவச் செயல்களை செய்பவர்களுக்கும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் ஒரே தண்டனைத் தான் என்பதை சனிக்கிழமை வரம்பு மீறிய கூட்டத்தை பற்றி அல்லாஹ் சொல்லவதன் மூலம் அறிய முடிகிறது. தீமையை தடுப்பதில் உறுதியாக இல்லாவிட்டால் நாமும் பாவியாகிவிடுவோம் என இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஏ கிரேடு வரி செலுத்தியும் சி கிறேடைவிட மோசமாக குப்பை சாக்கடையால் நாரிப்போயக்கிடக்கும் தெருக்களை உடனடியாக சுத்தம் செய்து நோய்வராமல் பாதுகாக்குமாறு இந்த பொது கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். என்று இவாறு தீர்மானகள் நிறைவேற்றப்பட்டன.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

கொரடாசேரியில் SDPI கட்சி கொடியை உடைத்த சமூக விரோதியை கண்டித்து ஆர்பாட்டம்.







கொரடாசேரி,செப்டம்பர் 01 : திருவாரூர் மாவட்டம் கொரடாசேரியில் கடந்த மாதம் SDPI கட்சி சார்பில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி SDPI கட்சியில் இணைந்தனர். அங்கு கிளை துவங்கப்பட்டு கொடியும் ஏற்றப்பட்டது. இக்கொடியை கடந்த நோன்பு பெருநாள் அன்று சில சமூக விரோதிகள் இக்கொடி கம்பத்தை உடைத்துள்ளனர். இந்த செயலை கண்டித்து இன்று கோரடசெரி யில் SDPI கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. மேலும் இதற்க்கு திருவாரூர் மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுசா அவர்கள் தலைமை வகித்தார். இதற்க்கு கண்டன உரை தஞ்சை மாவட்ட பொது செயலாளர் முஹம்மது ஃபாரூக் அவர்கள். கண்டன கோசம் எழுப்பியவர் நெய்னா முஹம்மது. இத கண்ட ஆர்பாட்டத்தில் ஏராளமான பொது மக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from: www.muthuppettaiexpress.blogspot.com
நமது நிருபர்

M.கபீர்

முத்துப்பேட்டையில் குடிநீர் தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் பொது மக்கள் ஓர் பார்வை...!!!



முத்துப்பேட்டை,செப்டம்பர் 01 : முத்துப்பேட்டையில் கடந்த 10 நாட்களாக குடி தண்ணீர் அதிகமாக தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. கடந்த நோன்பு நாட்களில் குடிதண்ணீர் சாக்கடை நீர் கலந்து வந்ததால் பொது மக்கள் அனைவரும் அதிர்ச்சி குள்ளானார்கள். மேலும் இதனைத்தொடர்ந்து சில நாட்களாக வீட்டுக்கு குழாய் மூலம் வரும் குடிதண்ணீரையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனினினும் வேறு ஊர்களிலிருந்து முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் குடிதண்ணீரை லாரி மூலம் பொது மக்களுக்கு விநியோகம் செய்தனர். இந்த தண்ணீர் விநியோகத்தின் போது முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் முறையாக விநியோகம் செய்ய வில்லை என்று பொது மக்கள் ஆத்திரத்துடன் அங்கும் இங்குமாக தண்ணீரை பெற அலைந்து திருந்து போராடி கொண்டிருக்கிறார்கள். மேலும் வீடுகளுக்கு குழாய் மூலம் வரும் குடிதண்ணீரை சுத்தம் செய்து எப்போது பயன் பாட்டிற்கு விடப்போகிறார்கள் என்று பொது மக்களின் கேள்விக் குறியாகவே உள்ளது. மேலும் முத்துப்பேட்டை நகருக்கு எப்போது முழுமையாக குடிதண்ணீர் கிடைக்கும் என்று ஏக்கத்துடுன் எதிர்பாத்துக்கொண்டிருக்கும் பொது மக்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

AKL. அப்துல் ரஹ்மான்

திருமணச் செய்தி: "S.ஹபீப்கான்,ஆய்ஷா பர்வீன்"








முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 31 : ஹிஜ்ரி 1433 ஷவ்வால் பிறை 11 , 30.08.2012 மாலை 4 மணியளவில் முத்துப்பேட்டை தெற்குத்தெரு ஜனாப் மர்ஹும் சர்புதீன் அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் S.ஹபீப்கான் மணாளருக்கும், முத்துப்பேட்டை ஜனாப்.இக்பால் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி ஆய்ஷா பர்வீன் மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 1 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து முத்துப்பேட்டை பேட்டை பள்ளி இமாம். U. பத்ரு ஜமான், அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.) இந்த திருமணத்திற்கு சிறப்பு விருந்தினராக SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A. அபூபக்கர் சித்திக், திருவாரூர் மாவட்ட தலைவர். தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

M.கபீர்

முத்துப்பேட்டை 13 வது வார்டு SDPI யின் புதிய கிளை சார்பாக கொடி ஏற்றப்பட்டது.











முத்துப்பேட்டை,ஆகஸ்ட் 30: முத்துப்பேட்டை புதிய கிளை SDPI கட்சியின் சார்பில் நேற்று கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A.அபூபக்கர் சித்திக் அவர்கள் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் M.தப்ரே ஆலம் பாதுஷா அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட பொருளாளர் நெய்னா முஹம்மது, மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கிளை பொருப்புத் தலைவர் தேனா,சீனா.ஜெஹபர் அலி 13 வது வார்டில் நடக்கக்கூடிய பிரச்சனைக் குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A.அபூபக்கர் சித்திக் அவர்களிடம் மனு ஒன்றை கொடுத்தார். இதில் நகரத் தலைவர். நிசார் அஹமது மற்றும் 50 க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

M.கபீர்

மவுத்து அறிவிப்பு: " அஹமது ஜலாலுதீன்"


முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 29 : குண்டாங் குலத்தெரு PSK காலனி மர்ஹும் நெய்னா முஹம்மது அவர்களின் மகனும், ஜா(என்கிற)செக்கரியா அவர்களின் சகோதரரும், PKT மஜ்பா வாட்சி கம்பேனி முஹம்மது ரபீக், முஹம்மது ரியாஸ், அப்துல் சலாம் ஆகியோரின் தகப்பனாரும், குரைசி அவர்களின் சிறிய தகப்பனாரும், அப்துல் ஜப்பார் அவர்களின் மச்சானும், பெட்டிக்கடை முஹம்மது தாவூது, முஹம்மது இலியாஸ், ஆகியோரின் மாமனாரும், PSK அப்துல் காதர் அவர்களின் சகலையுமாகிய "அஹமது ஜலாலுதீன்" அவர்கள் இன்று காலை 7 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹீ ராஜிவூன்). அனாரின் ஜனாசா இன்று மாலை 7 மணியளவில் குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்

ஜா (என்கிற)செக்கரியா

நமது நிருபர்

K.M. காதர் கனி (பாடகர்)

செவ்வாய் கிரகத்தில் மனித குரல் கேட்கிறதாம்..!



உலகம், ஆகஸ்ட் 29 : செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் ஒலிப்பதிவில், மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாசா விஞ்ஞானிகள், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, கியூரியாசிட்டி விண்கலம் அங்கு தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தை துளையிட்டும், படம் பிடித்தும் ஆய்வறிக்கையை அனுப்பி வருகிறது. இந்நிலையில் கியூரியாசிட்டி விண்கலம் கடந்த வாரம் பதிவு செய்து அனுப்பிய ஒலிப்பதிவை, விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது, அதில் மனிதர்களின் குரலை ஒத்த பல்வேறு சப்தங்கள் பதிவாகியிருப்பதை கண்டறிந்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளதால், அங்கு மனிதர்கள் வசிப்பது உறுதியாகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நாசா விஞ்ஞானிகளால் அனுப்பபட்ட கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாயில் மனிதர்கள் வாழுவதற்கு ஏற்ற சூழ்நிவை நிலவுகிறதா என்பதை ஆராய, கடந்த 6ம் தேதி அங்கு தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

ஒரு முஸ்லிம் தேசம் 2020 இல் வாழத் தகுதியற்றதாகிறது..!









பலஸ்தீனின், ஆகஸ்ட் 29 : பலஸ்தீனின்ச காசா பகுதி 2020 ஆம் ஆண்டாகும் போது வாழத் தகுதியற்ற பகுதியாக மாறும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு உடன் சுகாதாரம், நீர் விநியோகம், மின்சக்தி மற்றும் பாடசாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

“காசாவில் வசதிகள் உடன் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் 2020 ஆம் ஆண்டில் அங்கு வாழ முடியாத நிலை ஏற்படும். தற்போதே அங்கு வாழ்வது கடினமாக உள்ளது” என்று ஐ.நா.வுக்கான மனிதாபிமான இணைப்பாளர் மக்ஸ்வெல் கெய்லாட் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இது குறித்த ஐ.நா. அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

அப்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். காசாவின் தற்போதைய சனத்தொகை 1.6 மில்லியனாக உள்ளது. அது 2020 ஆம் ஆண்டாகும்போது 2.1 மில்லியனாக அதிகரிக்கும். இந்த சனத்தொகை அதிகரிப்பால் அங்கு ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 5,800 பேருக்கு மேல் வசிப்பார்கள் என ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும் காசாவின் நிர்வாகக் கட்டமைப்பு ஜனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப வளர்ச்சியடையவில்லை. குறிப்பாக மின் விநியோகம், நீர் விநியோகம், சுகாதாரம், நகர அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் வளர்ச்சியடையவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காசாவின் கால் பங்கு கழிவு நீரே, மீள் பயன்பாட்டுக்கு பெறப்படுகிறது. எஞ்சிய நீர் மத்திய தரைக் கடலுடன் கலக்கிறது. காசா கடற் பகுதியை இஸ்ரேல் முழுமையாக முடக்கியுள்ளதால் அங்கு எப்போதும் இல்லாத அளவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதோடு அதன் காரணமாக தொடர்ச்சியான மின் தடைக்கும் உள்ளாகி வருகிறது. அதேபோன்று காசாவில் வேலையில்லா தோர் எண்ணிக்கை 45 வீதமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த 8 ஆண்டுகளுக்குள் காசாவின் குடிநீர் தேவை 60 வீதமாக அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ள ஐ.நா. பிரதான நீர் ஆதாரங்களான நீர்த் தேக்கங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் அங்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். உடன் சரி செய்யப்படாவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2020 ஆம் ஆண்டாகும் போது காசா பகுதிக்கு மேலும் 440 க்கு மேற்பட்ட பாடசாலைகள், 800 மருத்துவமனை படுக்கைகள் மற்றும் மேலும் 1000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் முற்றுகை

கடந்த 2006 ஆம் ஆண்டு காசாவில் இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவர் போராளிகளால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கான விநியோகப்பாதைகளை இஸ்ரேல் முடக்க ஆரம்பித்தது. இவ்வாறு கைது செய்யப்பட்ட வீரரே கடந்த ஆண்டு ஒக்டோபரில் கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் 1,027 பலஸ்தீன கைதிகளுக்கு பதில் விடுவிக்கப்பட்டார்.

எனினும் 2007 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு ஆட்சிக்கு வந்ததும் இஸ்ரேல் அந்த பகுதிக்கான முழு விநியோகப் பாதைகளையும் முடக்கியது.

இதனால் குறுகிய கடற்கரை பகுதியான காசாவில் ஐ.நா. உதவி, வெளிநாட்டு நிதியுதவி மற்றும் சுரங்கப்பாதை ஊடாகவே அங்குள்ள வர்களுக்கு உணவு, கட்டுமானப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், கார்கள் என்பன எகிப்தினூடாக கிடைக்கப் பெறுகின்றன.

காசாவில் 80 வீதமானோர் உதவிகளிலேயே தங்கியிருப்பதால் அப்பகுதிக்கான சர்வதேச உதவிகளை அதிகரிக்குமாறு ஐ.நா.வுக்கான மனிதாபிமான இணைப்பாளர் கெய்லாட் கோரியுள்ளார். “அவர்கள் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளார்கள்.

அவர்களுக்கு அரசியல் மற்றும் சாதாரண விசயங்களிலும் எமது உதவி தேவைப்படுகிறது” என்றார். எனினும் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் போக்கு தொடர்ந்த வண்ணமே உள்ளது. காசாவில் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்வான ஹமாஸ் அமைப்பை மேற்கு நாடுகள் தீவிரவாத அமைப்பாகவே கருதுகிறது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நன்றி - அல் ஜஸீரா

முத்துப்பேட்டையில் கொடிய விசமுள்ள இரு பாம்புகள், பொதுமக்களே பிடித்தனர்..






முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 28 : முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் அதிகமான கருவை காடுகள் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் அதிகம் நடமாட அச்சம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியிலிருந்து ரோட்டுக்கு வந்த நல்ல பாம்பு மற்றும் காட்டு விரியன் பாம்பும் அங்குள்ள குடியிருப்புக்குள் நுழைய முயன்றது. அப்போது இவற்றை கண்ட அப்பகுதி பொது மக்கள் சாமாத்தியமாக அப்பாம்பை உயிருடன் பிடித்தனர். இதனை பார்க்க அனைத்து மக்களும் காட்டு பகுதிக்கே சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கருத்தப்பா கூறியதாவது. இந்த பகுதியில் அதிக கொடிய விசமுள்ள பாம்புகள் இருப்பதால் இவற்றை பொது மக்களுக்கு இடையூர் இல்லாமல் ஏற்படுத்தும் பொருட்டு இவற்றை உடனே வனத்துறையினர் பிடித்து உரிய இடத்தில் விடவேண்டும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
source from: www.muthupettaiexpress.com, www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)