முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

திருமணச் செய்தி: முத்துப்பேட்டை கருப்பட்டி ஹாஜா இல்ல திருமண விழா அழைப்பிதல்...



முத்துப்பேட்டை, டிசம்பர் 10: இன்ஷா அல்லாஹ் வருகிற டிசம்பர் மாதம் 22.12.2013 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் திருச்சி, காஜாமலை நூர் மஹாலில் நிக்காஹ் நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து மறுநாள் 23.12.2013 மதியம் 1.00 மணியளவில் முத்துப்பேட்டை, ஆசாத் நகர் ஜும்மா பள்ளி மதரஸாவில் வலிமா விருந்து நடைபெறயிருப்பதால் எனது உற்றார், உறவினர்கள் மற்றும் அனைத்து நண்பர்களும் தவறாது கலந்து கொண்டு எங்களின் ஈருலக வாழ்கைக்கு துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்..

بارك الله لكم‏ وبارك عليكم وجمع بينكما في خير

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}

 என்றும் அன்புடன்..

-          K.A.N.ஹாஜா கமால் MBA
               ( கருப்பட்டி ஹாஜா )


நமது நிருபர்:

AKL அப்துல் ரஹ்மான்...

பாலியல் உணர்வை அடக்க என்ன செய்ய வேண்டும்-? மருத்துவர்கள் தரும் தகவல்கள் !!!

Emotional issues generally , for example, sexual passion , anger , fear , hatred, if such control , it is both physically and mentally and will effect many viparita . Similar sentiments have to convince or to discharge . If that approach does cantapatuttutal with friendship . But out better than cantapatuttutalai . It is a way out laughing .

உலகம்,டிசம்பர் 10: பொதுவாக உணர்வு பூர்வமான விஷயங்களை, உதாரணமாக பாலியல் உணர்வு, கோபம், பயம், வெறுப்பு போன்றவர்களை அடக்கினால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல விபரித விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். இதை போன்ற உணர்வுகளை சாந்தப்படுத்த வேண்டும் அல்லது வெளியேற்ற வேண்டும். சாந்தபடுத்துதல் என்றால் நட்போடு அணுகுதல் என்று அர்த்தம். ஆனால் சாந்தபடுத்துதலை விட வெளியேற்றுவதே நல்லது. இதில் ஒரு முறைதான் சிரித்து வெளியேற்றுதல் என்பது. 

பொதுவாக பாலியல் உணர்வுகளை சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாலே அது வேகமாக மேலே கிளம்பி, பிறகு மெல்ல சாந்தமாகி விடும். உதாரமான ஒரு சிறு வயது பையன் மிகவும் துடிப்பாக விளையாட்டுப் பொருட்களை போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறான் அல்லது கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டு இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவர்களை நீங்கள் மூர்க்கமாக அடக்க நினைத்தால் என்ன ஆகும்? அது மேலும் மேலும் கூடிக்கொண்டே தான் போகும் அல்லது அது அடங்கியது போல நடிக்கும். 

ஆனால் இப்படி விளையாடும் பொழுதும், பேசும்பொழுதும், அவனை சற்று வெறுமனே, எதுவும் கூறாமல் உற்றுப் பார்த்துக் கொண்டே இருங்கள். அவன் சற்று போக்கிரித்தனமாக விளையாடுவான். இல்லை மேலும் அசிங்கமாகப் பேசக்கூடும். அந்த எல்லையை அடைந்தவுடன் அவன் கீழே இறங்கித்தான் வரவேண்டும் இல்லையா? 

ஆகவே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாலுணர்வைக் கண்டிக்காமல், அடக்காமல் அதன் போக்கை மனக்கண்ணுள் சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருங்கள். இப்படித்தான் அதைச் சாந்தபடுத்த முடியும். இப்படிச் சாந்தபடுத்திய பாலுணர்வுச் சக்தி வேறு வகையில் மெல்ல மாறிவிடும் & விளையாட்டு, டி,வி. பார்த்தல் போன்றவைசகளில். 

அப்படியும் சாந்தபடுத்த முடியவில்லை என்றால் அதன் போக்கிலேயே நீங்களும் சென்று விடுங்கள்! சில காலம் சென்று அது தானே சாந்தநிலைக்கு வந்து விடும். தேவை உங்களுக்கு விழிப்புணர்வு தான். எதிலும் இயந்திரத்தனமாக செயல்படாதீர்கள். குற்ற உணர்வு தேவை இல்லாதது.  

மதுக்கூரில் தமுமுக வினர் சென்ற வாகனம் மீது இந்து முன்னணி தேச விரோத கும்பல் தாக்குதல் -தமுமுக தொண்டர்கள் கொந்தளிப்பு !!!






மதுக்கூர், டிசம்பர் 10: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்(TMMK) சார்பாக தொடர்ந்து 18 ஆண்டுகாலமாக பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 தேதி அன்று பல்வேறு போராட்டக்களங்களை அமைத்து ஜனநாயக வழியில் போராடி வருகின்றது.இந்த வருடம் மாநிலத்தின் பெரு நகரங்கள் சுமார் 50 இடங்களில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமுமுக மாநில தலைமை அறிவித்து இருந்தது.அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் (தெற்கு) சார்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள மதுக்கூர் நகர தமுமுக சார்பாக 5 வேன்களில் தஞ்சாவூர் நோக்கி சென்றனார்.(இதில் ஒரு வேனில் பெண்கள்).தமுமுகவின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றுகொண்டு இருந்தது.

மதுக்கூரிலிருந்து 3 கீ.மி தொலைவில் உள்ள புலவஞ்சி என்ற கிராமத்தில் இந்து முண்ணனி ஒன்றிய தலைவர் போஸ் என்பவன் எனது அடியாட்களுடன் சாலையின் நடுவே தனது வாகனத்தை குறுக்குநெடுக்காக நிறுத்திக்கொண்டு இந்த வழியாக டிசம்பர் 6 போராட்டத்துக்கு வாகனங்கள் செல்லக்கூடாது என கெக்கரித்து உள்ளான்.வாகன டிரைவர் சகோதரர் ரியாஸ் அகமது மட்டும் இறக்கி சென்று ஏன் ? ரோட்டை மறிக்கின்றீர்கள் நாங்கள் போராட்டத்து செல்லவேண்டும் என கூறியுள்ளார்.அதற்கு போஸ் இது என் ஊர்.எனது ரோடு யாரும் இந்த வழியாக செல்லக்கூடாது என மீண்டும் கூறியுள்ளான்.மதுக்கூர் காவல் நிலையத்துக்கு நிர்வாகிகள் தகவல் கொடுக்க எப்போதும் போல் தாமதமாக வந்த மதுக்கூர் காவல் துறை வழக்கம்போல் முஸ்லிம்களை நீங்கள் கலைந்து செல்லுங்கள் நாங்கள் பார்த்து கொள்கின்றோம் என கூற போராட்டத்திற்கு சென்ற முஸ்லிம்கள் எங்களை சம்மந்தமில்லாமல் வழிமறித்த போஸ் மற்றும் அவனது அடியாட்களை கைது செய்யவேண்டும் என கூற போஸை நோக்கி சென்ற மதுக்கூர் காவல்நிலைய ஆய்வாளர் அவர்களை பார்த்து போஸின்தம்பி வக்கீல் ராஜபிரபு என்பவன் நீ போயா என்னயா பண்ணுவே கேஸ்தானே போடுவே போட்டுக்கோ என கூறிக்கொண்டே அருகில் வீடு கட்டுவதற்காக அடுக்கிவைக்கப்பட்டிருந்த செங்கற்களை எடுத்து முஸ்லிம்கள் மீது வீசினார்கள்.இதில் முஸ்லிம்களின் வாகன வரிசையில் முதலில் நின்று கொண்டிருந்த வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்தது.அதுவரை பொறுமையின் புகழிடமாக இருந்த முஸ்லிம்கள் அவனே கைது செய்யவேண்டும் என கூறி புலவஞ்சி கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.புலவஞ்சி கிராமத்திலிருந்து சாலை மறியலை கலைத்துவிட்டுவிட்டு மதுக்கூர் வடக்கு பெரமையா கோவில் நான்கு சாலைகளில் முஸ்லிம்கள் அமர்ந்து போஸ் மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற முழக்கங்களுடன் சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து செய்துகொண்டிருந்தனர்.

மாவட்ட தமுமுக நிர்வாகிகளுக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டது. அதிராம்பட்டிணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி டிசம்பர் 6 போராட்டத்திற்கு சென்றவர்களுக்கு இந்த சம்பவங்கள் எடுத்துக்கூறப்பட்டது.உடனடியாக களத்தில் இறக்கிய அதிராம்பட்டிண தமுமுகவினர் பட்டுக்கோட்டை மணிக்கூண்டில் புலவஞ்சியில் முஸ்லிம்களின் வாகனம் தாக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல் செய்தனர்.இதனால் பட்டுக்கோட்டை நகரில் சுமார் 1/2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் மதுக்கூரில் தொடர்ந்து ஒரு மணிநேரம் நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.சாலை மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்கள் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் போரில் பெரமையா கோவிலிருந்து கலைந்து சென்று காவல்நிலையத்தில் திரண்டனர்.முஸ்லிம்கள் காவல்நிலையத்தில் திரண்ட சில நிமிடங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன் அவர்கள் மதுக்கூர் காவல்நிலையம் வந்தடைந்தார்.நடந்த விபரங்களை கேட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி செய்து காவல்நிலையத்தின் முன்பு திரண்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துங்கள் என முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக எஸ்பியிடம் பேச்சுவார்த்தை நடத்தியவர்களிடன் கூறினார்.அதன்படிஒரு சிலரை தவீர்த்து அனைவரும் கலைந்து சென்றனர்.முறைப்படி தமுமுக சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.தமுமுக வாகனங்களை தாக்கியவர்களில் 4 நபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்கள்.முக்கிய குற்றவாளிகள் இந்து முண்ணனி ஒன்றிய தலைவர் போஸ்,அவனது தம்பி வக்கீல் ராஜபிரபு ஆகியோர் மட்டும் தலைமறைவாக உள்ளனர்.

சங்பரிவார்களின் இந்த செயலை கண்டித்து தமுமுக மட்டுமில்லாது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா உட்பட அனைத்து இஸ்லாமிய அமைப்பினரும் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தை தொடர்ந்து தஞ்சாவூரில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தலைமையேற்று நடத்திய கோவை சுல்தான் மற்றும் மாவட்ட தலைவர் அப்துல் ஜப்பார்,மாவட்ட செயலாளர் அகமது ஹாஜா,மாவட்ட மமக செயலாளர்அகமது கபீர், மாவட்ட பொருளாளர் சேக் அலாவுதீன்,பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியாவின் மாவட்ட செயலாளர் ஹாஜி சேக்.மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் உட்பட பலரும் மதுக்கூரில் முகாமிட்டு இருந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து குற்றாவளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரினார்கள்

நன்றி:மதுக்கூர் தமுமுக

கட்டிமேடு அருகே அதிரை இளைஞர்கள் வந்த வாகனம் விபத்து !!

கட்டிமேடு, டிசம்பர் 10: அதிரை கடற்கரைத்தெருவைச் சேர்ந்த முஜீப் ரஹ்மான், இர்ஷாத். இருவரும் நேற்று இரு சக்கர வாகனத்தில் கட்டிமேட்டிலிருந்து ஊர் திரும்பும் வழியில் கட்டிமேடு பாலத்தை கடக்கும்போது விபத்துக்குள்ளானர்கள்.


இதில் பலத்த காயங்கள் ஏற்பட்ட இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதில் பலத்த காயங்கள் ஏற்பட்ட இருவரையும் மேற் சிகிச்சை அளிப்பதற்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலத்த காயமடைந்த முஜிபூர் ரஹ்மான் சுய நினைவு திரும்பாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த இடையூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் பரிபூரண நலம் பெற துவா செய்வோம்.

முத்துப்பேட்டைக்கு வருகை தந்த ஹைதர் அலி சாஹிப் -தமுமுக வினர் உற்சாக வரவேற்ப்பு !!!


முத்துப்பேட்டை, டிசம்பர் 08: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொது செயலாளரும் ,தமிழக முன்னாள் வக்பு வாரிய தலைவருமான சகோ S .ஹைதர் அலி அவர்கள் நேற்று முத்துபேட்டைக்கு வருகை தந்தார் .


அவருக்கு தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பளித்தனர் .டிசம்பர் 6 அன்று மதுக்கூரில் ஒரு சில தேச விரோத  ஆர் எஸ் எஸ்  பாஜக கும்பல்கள் தமுமுக வின் வாகனத்தின் மீது சராமரியாக கல்வீசி தாக்கியது . 

இதனை அறிந்த  ஹைதர் அலி சாஹிப்   அவர்கள் நாகையில் டிசம்பர் 6 கண்டன உரையாற்றிவிட்டு நேரடியாக மதுக்கூர் செல்ல திட்டமிட்டார் .இதனால் போகும் வழியில் திடீரென முத்துப்பேட்டைக்கு விஜயம் செய்தார் .

ஆசாத் நகர் புதிய பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு தமுமுக நகர அலுவலகத்திற்கு  வருகை தந்தார் .

பின்னர் அனைத்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய ஹைதர் அலி சாஹிப் அவர்கள், நாம் பிரதி பலனை எதிர் பாராமல் சமுதாய பணியாற்ற வேண்டும் என்றும், ஒற்றுமையோடு  செயலாற்ற வேண்டும் என்றும், கூறினார் .













அப்போது மமக முன்னாள் மாவட்ட செயலாளர் மாலிக் ,நகர மமக செயலாளர் தீன் முஹம்மது ,ஒன்றிய செயலாளர் நைனா முஹம்மது ,தமுமுக துணை தலைவர் முஹம்மது யாசீன் ,தமுமுக பொருளாளர் ஜெஹபர் சாதிக் ,பாக்கர் அலி ,மற்றும் நகர மாணவரணி தொண்டரணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர் .

செய்தி :வழக்கறிஞர் S .தீன் முஹம்மது 
                நகர செயலாளர் 
                 மனித நேய மக்கள் கட்சி 
                 முத்துபேட்டை நகரம் .   

டிசம்பர் 6, 1992: பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட தருணங்களில்... என் அனுபங்கள்! மனம் திறக்கிறார் மமக பொதுசெயலாளர் அன்சாரி !!!

டிசம்பர் 6 வருகிறது! 22 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அந்தக் கோரச் சம்பவங்கள் நினைவுகளை கண்ணீரோடு மீட்டுகின்றன.


நான் 1992ல் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் அயோத்தி விவகாரம் பரபரப்பான நிகழ்வாக இருந்தது.

பாபரி மஸ்ஜிதை உடைக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு சமுதாய மக்களிடம் இருந்தது.

டிசம்பர் 6 நெருங்க நெருங்க மதக்கலவர அபாயங்கள் அனைவரையும் அச்சமூட்டிக் கொண்டிருந்தது. 

செய்தித் தாள்களும், அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனும், வானொலியும்தான் அப்போது தகவல் தொடர்பு சாதனங்கள்.அனைவரின் கவனமும் வானொலி செய்திகளை கவனித்தபடியே இருந்தன எனலாம்.

அன்று 1992 டிசம்பர் 6! ஞாயிற்றுக்கிழமை. எனது வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்க்கிறேன். இந்திப்படம் ஒன்று காலையில் ஓடிக்கொண்டிருந்தது.தொலைகட்சியில் அப்போது நகரும் எழுத்துக்கள் (Flashnews) வழியாக அவசர செய்திகளைத் தெரிவிக்கும் வசதிகள் எல்லாம் இல்லை.

நான் எங்கள் ஊரில் (தோப்புத்துறை) உள்ள பெரிய பள்ளிவாசலுக்கு லுஹர் தொழுக சென்றேன். அப்போது தப்லீக் ஜமாஅத்தினர் அங்கே தொழுகைக்குப் பிறகு ‘பயான்’ செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் எந்த பரபரப்பும் இல்லை.

மதியத்திற்குப் பிறகு வானொலி செய்தியைக் கேட்டேன்.அப்போது “தாவாவுக்கு உட்பட்ட இடத்தில் இருந்த மசூதிக்கு சிறிய அளவில் கரசேவகர்கள் சேதத்தை ஏற்படுத்தினார்கள்” என்ற அளவில் மட்டுமே செய்தி ஒலிபரப்பப்பட்டது.

எனக்குப் பொறி தட்டியது.ஏதோ ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டது என்பதையும், அதை அரசு ஊடகங்கள் மறைக்கின்றன என்பதையும் புரிந்துகொண்டேன்.

உடனே இரவு 7.15 மணிக்கு என்னிடமிருந்த கையடக்க வானொலி மூலம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து ஒளிபரப்பாகும் ‘வெரிடாஸ்’ தமிழ் செய்தியைக் கேட்டேன். அங்குதான் ரபிபெர்னாட், ஜெகத்கஸ்பர் போன்றோர் முன்பு பணியாற்றினர்.

அதில் பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்ட செய்தியைக் கூறினார்கள் நாங்கள் பதட்டம்அடைந்தோம். அடுத்து இரவு 9.15க்கு லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் பி.பி.சி. தமிழ் செய்தியிலும் அதை உறுதிப்படுத்தினார்கள்.

எனக்கு கண்கள் கலங்கியது.ஏதாவது ஒருவகையில் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுமே என மனம் துடித்தது. உடனடியாக நண்பர்கள் சிலரை வரவழைத்து எங்கள் ஊர் பஜார் பகுதியில் (ஆறுமுகச்சந்தி) கூடுகிறோம். 

அப்போது பாபாவின் தலைமையில் ஜிஹாத் கமிட்டி எழுச்சியாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம்.நாங்கள் கூடுகிறோம் என தெரிந்ததும் சில நிமிடங்களில் காவல்துறையினர் வந்திறங்கி, அனைவரையும் கலைந்துபோக அறிவுறுத்தினர்.

நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டுமே எனக் கருதி, அருகில் உள்ள படேசாஹிப் தர்ஹாவுக்கு போனோம். அங்கு ஜமாஅத்தினர் ‘கேட்டை’ பூட்டி, பிரச்சனைகளை செய்யாதீர்கள் என அறிவுறுத்தி அனுப்பினர். அவ்வளவு பயம்!

எங்கும் பதட்டம் பரவியதால், அடுத்த நாள் கூடி ஆலோசிப்போம் என முடிவு செய்தோம். எல்லோரும் போன பிறகும், நாங்கள் 10, 15 பேர் வீட்டிற்குச் செல்லவில்லை. அப்போதெல்லாம் இரவு 10 மணி என்பதெல்லாம் ஊரடங்கும் நேரம்!

நாங்கள் கிணற்றடி அருகே உள்ள மரக்கடையில் இருக்கும் பெரும் பெரும் உருட்டுக் கட்டைகளை நகர்த்தி சாலைகளில் தடுப்பை ஏற்படுத்திவிட்டு கலைந்தோம்.

அடுத்த நாள், பேருந்து ஒன்றை உடைக்க வேண்டும் என கோபமான முடிவு எடுக்கப்பட்டது.இதற்கு ஆலோசனைப் பெறுவதற்காக, பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியப் பிரமுகராக இருந்த மாவன்னா மாரிமுத்து கவுண்டரைச் சென்று சந்தித்தோம்.

மழை தூறிக் கொண்டிருந்த பகல் பொழுதில், அவரது குரவப்புலம் வீட்டில் சந்தித்து பேசினோம்.பழனிபாபா அவர் வீட்டில் தங்கியிருக்கிறார். பாபாவின் மீது அவருக்குப் பிரியம் அதிகம்.

சரி, செய்யுங்கள். நானும் பாமகவினரை துணைக்கு அனுப்புகிறேன். ஆனால், வழக்குகளை எல்லாம் சந்திக்க வேண்டிவரும் என்று சொல்லி அனுப்பினார்! ஒருகட்டத்தில் பேருந்தை கொளுத்துவது என்றும் முடிவானது. 

அதற்குள் நாடெங்கிலும் கலவரச் செய்திகளும், முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெறுவதையும் அறிந்து, கலங்கினோம்.ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற இயக்கங்கள் தடை செய்யப்படுவதாகவும், அதற்கு சமன் செய்யும் வகையில் ஜமாஅத்தே இஸ்லாமியும், கேரளாவில் மதானியின் தலைமையில் செயல்பட்ட ஐ.எஸ்.எஸ்.சும் தடை என மத்திய அரசு அறிவித்தது.

பத்திரிக்கைகள் தங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கும் வகையில் கறுப்பு எழுத்துக்களில் செய்தியை வெளியிட்டன. தலைவர்கள் எல்லாம் கடும் கண்டனங்களை வெளியிட்டிருந்தார்கள்.

பதட்டத்தைத் தணிக்கும் வகையில் மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை செயல்பட்டது. வானொலியில் கமல்ஹாசன் பேசினார். “நான் இந்து என்பதற்காக முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்” என பேசினார்.

எங்களுக்கு மனம் ஆறவில்லை. அப்போது முஸ்லிம் லீக், ஜிஹாத் கமிட்டி ஆகிய இரண்டும் தான் பெரிய அமைப்புகள். ஆனால், தெளிவான வழிகாட்டல்கள் இல்லாததால் மக்களின் எதிர்ப்பை முறைப்படுத்த இயலவில்லை.

பேருந்தை உடைப்பது ஒன்றுதான் எதிர்ப்பை தெரிவிப்பதற்கான வழி என அனைவரின் மனமும் சொல்லியது. அன்று இரவு 12 மணி வரை ‘வாட்டர் டேங்க்’ பகுதியில் இருளில் 30க்கும் மேற்பட்டோர், இரவுப் பேருந்துகளை எதிர்பார்த்து பதுங்கியிருந்தோம்.ஆனால், பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது எங்களுக்கு தெரியாமலேயே போனது.

என்ன செய்வது என்று தெரியவில்லை. அருகில் நாகூரும், முத்துப்பேட்டையும் தான் பெரிய மஹல்லாக்கள்.கட்டிமேடு, துளசியாபட்டினம், திருப்பூண்டி, நாச்சிக்குளம் போன்றவை சிறிய மஹல்லாக்கள்.

முத்துப்பேட்டையில் ஷேக்காதி என்பவர் தலைமையில் ஜிஹாத் கமிட்டி வலுவாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. அவர்களிடம் ஆலோசனைக் கேட்க முத்துப்பேட்டைக்கு விரைந்தேன். அவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

பிறகு நாச்சிக்குளத்திற்குச் சென்று அங்குள்ள நண்பர்களுடன் ஆலோசனை நடந்தது. அங்கும் பேருந்தை உடைக்க வேண்டும் என்ற மனநிலைதான் எதிரொலித்தது!அங்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

தொடர்ந்து ஒருமாதம் பதற்றம் நீடித்தது.துக்ளக், ஜுனியர் விகடன், ஜுனியர் போஸ்ட், நக்கீரன், தராசு, இந்தியா டுடே போன்ற வார இதழ்கள் பரபரப்பாக விற்றுத் தீர்ந்தன.

நமக்கொரு வழிகாட்டல் இல்லையே... களத்தில் போராட இயக்கங்கள் இல்லையே... என கவலைகள் எழுந்தன. உருப்படியாகப் போராடவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் வழியில்லையே என்ற விரக்தியும் மேலோங்கியது.

இன்று அதை நினைத்துப் பார்ப்பதற்குக் காரணம், இன்று இந்தியாவுக்கே முன்மாதிரி இயக்கமாக செயல்படும் தமுமுக அன்று இருந்திருந்தால், வன்முறை இல்லாமல் எதிர்ப்புகள் ஜனநாயக வழியில் எப்படியெல்லாம் வழிகாட்டப்பட்டிருக்கும் என்பதற்காகத்தான்!இன்று பாபரி மஸ்ஜித் இருந்த உ.பி.யில் டிசம்பர் 6ல் போராட்டங்கள் இல்லை!

ஆம், ஜனநாயக இயக்கங்கள் வலுப்பெற்றால் தான் அரசியல் - சமூகப் பிரச்சனைகளுக்கு மக்களைத் திரட்டி தீர்வுகாண முடியும்! தமுமுக போன்ற இயக்கங்கள் இல்லாததால், முஸ்லிம்கள் 20-25 சதவீதத்திற்கு மேல் வாழும் உ.பி., பீஹார், மேற்கு வங்கம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் முஸ்லிம்களின் வாழ்வியலும், உரிமைப் போராட்டங்களும் வீழ்ச்சியடைந்து கிடப்பதை அறியும் போது மனம் உடைந்து போகிறது!

(நினைவுகள் சுழலும்...)

(காத்திருங்கள்... விரைவில் 1996 முதல் 1998 வரை நடைபெற்ற தடையை மீறிய டிசம்பர் 6 போர்க்கள அனுபவங்கள் பகிரப்படும்)

முத்துப்பேட்டையில் உதயமானது ஆண்களுக்கான குர்ஆன் மனனம் செய்யும் அல் மதரஸத்துல் இலாஹியா.




முத்துப்பேட்டை, டிசம்பர் 07:  (இன்ஷா அல்லாஹ்) அல்லாஹ் பொருந்தி கொள்வானாக ஆமீன்). முத்துப்பேட்டையில் உள்ள பங்களாவாசல் அருகில் ஆண்களுக்கான குர் ஆன் மனனம் செய்யும் (ஹிஃப்ழு மதரஸா) "அல் மதரஸத்துல் இலாஹியா" என்ற பெயரில் கடந்த 3மாதமாக நடைபெற்று வருகிறது.  முத்துப்பேட்டையில் ஆண்களுக்கான குர்ஆன் மனனம் செய்யும் (ஹிஃப்ழு மதரஸா)  இதுவே முதல் முறையாக துவங்கப் பட்டுள்ளது. இந்த மதரஸாவானது தாங்கள் கொடுக்கக்கூடிய சந்தா, மற்றும் ஹதியா மூலம் தான் மாணவர்கள் படிப்பிற்கும் உணவு, உடை, மற்றும் தங்கும் விடுதி உள்ளிட்ட  அனைத்தும் இலவசமாக இங்கு வழங்கப்படுகிறது.

இதில் சிறந்த ஆலிம்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாடங்கள் கர்பித்துக் கொடுக்கப்படுகிறது. இந்த பாடதிட்டம் 3 வருட காலங்களைக் கொண்டது. மேலும் இந்த மதரஸா பொதுமக்கள், ஜமாத்தார்கள் என அனைவரின் ஆதரவோடும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மதரசாவில் சேர்த்து இம்மையிலும், மறுமையிலும் பயனடையுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.  

இந்த மதரஸாவின் நிலைபாடுகள் குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் துபாயிலிருந்து தொலைபேசி மூலம் கேட்டகேள்விக்கு பதிலளித்த மதரஸாவின் நிர்வாக தலைவர்,ஃபிரோஸ்கான், முஸ்லிம் மாணவர்கள் குர்ஆனை முழுவதும் மனனம் செய்து அவர்களின் வாழ்வில் வெற்றி பெறவும், அவற்றை நடைமுறையில் செயல்படுத்தவும் தான் இந்த மதரஸா துவங்கப்பட்டது என்றும், இந்த மதரஸாவில் தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய மாணவர்களும் இதில் கலந்து கொண்டு பயனடையலாம் என்றும் அவர் தெரிவித்தார். எனவே நமதூரை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சகோதரர்கள் அனைவரும் மாத சாந்த, ஆண்டு சந்தா  வாகவோ, மற்றும் ஹதியாக்கலாகவோ இந்த மதரஸாவிற்கு தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.


மேலும் தொடர்புக்கு: 

அல் மதரஸத்துல் இலாஹியா 
  
33/17D, புது தெரு, பங்களா வாசல் அருகில்   

முத்துப்பேட்டை - 614 704, திருத்துறைப்பூண்டி  தாலுக்கா 

திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

தொலைபேசி எண்:  அலுவலகம்: +91 4369 - 348 057.

Email: ilaahiyampt@gmail.com.


நமது நிருபர்:

R.அப்துல் ரஹ்மான்






ஜெகன் மோகன் ரெட்டியுடன் இணையதள ஆசிரியர் சந்திப்பு !!




ஆந்திரா, டிசம்பர் 04:  ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனும், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி மு க தலைவர் கலைஞர் அவர்களையும்  சந்திப்பதற்காக சென்னை வந்தார்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள சகோதரர் இல்லத்தில் தங்கி இருந்த ஜெகன் மோகன் ரெட்டியை நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள ஆசிரியர்  சகோ ஜே .ஷேக்பரீத் நேரில் சந்தித்தார் .

பல்வேறு பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சுமார் 5 நிமிடங்கள் வரை பொறுமையாக நமது ஆசிரியரிடம் ஜெகன் மோகன் பேசினார். அப்போது பேசிய நமது ஆசிரியர், ஒரிங்கினைந்த ஆந்திராவை கட்டிக்காக்க நினைக்கும் நீங்கள் மதவாத சக்திகளான பாஜக வுடன் கைகோர்க்க கூடாது என்றும், தெலுங்கானா விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும் கூறினார். 

உங்களை  நரேந்திர மோடி சந்தித்ததாக அறிந்தோம் என்றும் மோடி நாட்டின் பயங்கரவாத முகம் என்றும் கூறினார். சிரித்துக்கொண்டே உங்கள் பெயர் என்ன என்று கேட்ட ஜெகன் ஷேக் என்று பதில் கூறியவுடன், தோளில் தட்டிகொடுத்த படி உங்கள் எண்ணம் நிறைவேறும் என்று கூறினார் .




செய்தி :கீழக்கரை :ஹசன் 

புதுக்கல்லூரி மாணவர் 

அதிகமானோர் WHATS APP ஐ விரும்புவது ஏன்?

whatsapp

உலகம், டிசம்பர் 04: இன்று ஏன் இளைஞர்கள் சமூக இணையதளங்களுக்கு பதிலாக  Whatsapp மற்றும் Wechat போன்ற வசதிகளை  விரும்புகிறார்கள்? அதற்க்கு சில காரணங்கள் உள்ளது.
ஏனெனில் யாறும் இதில் ஏமாற்ற முடியாது அதுமட்டும் அல்லாமல் இந்த ஆப்ஸ்கள் பாதுகாப்பனதாகவு ம் உள்ளது.
பேஸ்புக்கில் யார் வேண்டுமென்றாலும் பொய்யான ஒரு அக்கவுன்ட்டை உருவாக்கி அதன் மூலம் மற்றவர்களை ஏமாற்ற முடியும் ஆனால் Whatsapp மற்றும் Wechat ல் அவ்வாறு செய்ய இயலாது.
இளைஞர்கள் சமூக இணையதளங்களுக்கு பதிலாக Whatsapp மற்றும் Wechat பயன்படுத்துவதற் கான 5 காரணங்களைக் கூறுகிறார்கள் அது என்னவென்று பார்ப்போமா..!
1) இந்த Whatsapp மற்றும் Wechat-ஐ பயன்படுத்துவதற்கான முக்கிய காரணம் உண்மையான நண்பர்கள் அதில் இருப்பார்கள்.
பேஸ்புக்கில் 1000 நண்பர்கள் இருப்பார்கள் ஆனால் அனைவரிடமும் தொடர்புக்கொள்ள முடியாது ஆனால் Whatsapp மற்றும் Wechatல் அனைவரிடமும் தொடர்புக்கொள்ள முடியாது.குருப் என்கிற அந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி நமக்கு நெருக்கமான நண்பர்களை சேர்த்து எப்பொழுது வேண்டுமானலும் தொடர்புக்கொள்ளலாம்.
2) பொய்யான நண்பர்களிடம் இருந்து பாதுகாக்கிறது Whatsapp மற்றும் Wechat பயனாபாடுகள் ஒரு நம்பகத்தன்மையை அளிக்கிறது. இதில் பொய்யான நண்பர்கள் அமைய வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் அனைத்து நண்பர்களின் தொடர்பு எண்கள் நமது மொபைலில் இருப்பாதால் இது பாதுகாப்பானதாக உள்ளது.
3) Whatsapp மற்றும் Wechat பயனாபாடுகள் பேஸ்புக்கைக் காட்டிலும் மிக விரைவாக செயல்படுகின்றன. பேஸ்புக்கில் செய்தியை அனுப்பிய பிறகு அது நண்பர்களை சென்று அடைந்ததா இல்லையா என்பது நமக்கு தெரியாது.ஆனால் Whatsapp மற்றும் Wechatல் மிக விரைவாகசெய்திகள் பரிமாறிக்கொள்ளப் படுகிறது.
4) Whatsapp மற்றும் Wechat பயன்பாடுகள் பேஸ்புக்கைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பானது.பேஸ்புக்கில் நமது விஷயங்களை பகிரும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் நமது தகவல்களை தெரிந்து கொள்வார்கள் . Whatsapp மற்றும் Wechatல் ஏனெனில் இதில் யாரும் நமது தகவல்களை திருட முடியாது.
5)பேஸ்புக்கில் நமக்கு தெரியாமல் நமது பக்கத்தை யார் வேண்டுமானலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.Whatsapp மற்றும் Wechatல் அவ்வாறு செய்ய இயலாது ஏனெனில் அனைத்து செய்திகளும் தனிப்பட்ட செய்திகளாக நமது போனிலே இருப்பதால் யாரும் இதனைத் திருட முடியாது.

ரஜினி கமலுடன் நடித்த நடிகை -அனாதையாக ரோட்டில் -இழிவான பாதையால் இழிவு

சென்னை, டிசம்பர் 02: ரஜினி , கமலுடன் நடித்த நடிகை நாகூரில் நாதியற்று கிடந்த பரிதாபம் ... நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்பு மொய்க்கக் கிடந்த அவரை, யாரும் சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. 

அப்படியே ஆறுநாட்கள் அனாதையாகக் கிடந்தார் அந்த நடிகை. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்த அந்த நடிகை நிஷா என்கிற நூருன்னிசா. ‘இளமை இதோ இதோ’, ‘முயலுக்கு மூனுகால்,’ ‘மானாமதுரை மல்லி’, ‘எனக்காகக் காத்திரு’ போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்த நிஷாவின் பிறந்த ஊரே நாகூர்தான் என்பது இன்னொரு அதிர்ச்சிச் செய்தி. 


அவரது அப்பா, பெரியப்பா, அத்தை என ஓர் உறவினர் பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வருவது, அதைவிட அதிர்ச்சியான செய்தி. ஒரு முஸ்லிம் அமைப்பு மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நடைப்பிணமாக, ஒரு கட்டிலில் கிடந்த நடிகை நிஷாவை நாம் சந்தித்தோம். இளமைக் காலங்களில் நடித்த நிஷாவா இவர் என திகைக்கும் வண்ணம் காய்ந்த கருவாடாக கட்டிலில் கிடந்தார். நாம் குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து வருகிறோம் என்றதும் முகத்தில் மலர்ச்சியை வரவழைத்துக் கொண்ட அவர், ”சார்! சார்! என்னை போட்டோ எடுங்க சார்! என் நிலையைப் பற்றி பத்திரிகையில் எழுதி என்னைக் காப்பாற்றுங்க சார். 


நான் மறுபடியும் நடிக்கனும்!” என்று கதறினார். சினிமா ஸ்பாட் லைட்களின் ஒளிவெள்ளத்தில் குளித்த ஒருவர், இப்படி தன்னை ஒரு போட்டோ எடுக்கும்படி கெஞ்சியது நம்மை உறுத்தியது. நிஷாவிடம் பேசினோம். என்னதான் எலும்பும் தோலுமாக இருந்தாலும் அவரது பேச்சில் ஒரு நடிகைக்குரிய நளினம் குறையவில்லை. கூடவே குரலில் சோகத்தைக் கொட்டிக் குழைத்து நம்மிடம் பேசினார். ”எனக்குச் சொந்த ஊர் நாகூர்தான். அப்பா பேர் அப்துல் ஜப்பார். அவரது முதல் மனைவி பேபிக்குப் பிறந்த பெண்தான் நான். குழந்தையாக நான் இருந்த போது அப்பாகிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா என்னைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்திட்டாங்க. என்னை வளர்த்து, சினிமாவில் நடிக்க வச்சாங்க. 


பல படங்களில் ஹீரோயினா நடித்தேன். நடிகர் கமலோடு ‘டிக்…டிக்….டிக்’, ரஜினி சாரோட ‘ஸ்ரீராகவேந்திரர்’, பாலசந்தர் சாரோட ‘கல்யாண அகதிகள்’ இன்னும் விசு சார், சந்திரசேகர் சார் டைரக்ஷனில் கூட நடிச்சிருக்கேன்” என்றவர் தொடர்ந்தார். ”அம்மா இறந்த பிறகு அந்த துக்கத்தில் சரியாகச் சாப்பிடாமல் மெலிந்து விட்டேன். நடிக்கிறதையும் விட்டுட்டேன். பேங்கில் சேமிச்சு வைச்ச பணமெல்லாம் கரைஞ்சு போச்சி. எனக்கு சென்னையில் உறவுன்னு சொல்லிக்கொள்ள ஒருத்தரும் இல்லை. அனாதையாக இருந்த எனக்கு உதவி செய்யவும் ஆளில்லை. நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் ஒருமுறை உதவி கேட்டுப் போனேன். ‘உனக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கலேன்னா, டி.வி.யில் நடிக்க வேண்டியது தானே’ன்னு சொல்லி, என்னை வெறும் கையோட திருப்பியனுப்பிவிட்டார். நடிகர் சுமன், சந்திரசேகர், நடிகை ராதிகா எல்லோருமே என் மேல் ரொம்பப் பாசமா இருப்பாங்க. நான் இப்படி படுத்த படுக்கையாகக் கிடப்பது அவங்களுக்குத் தெரியுமோ என்னவோ!” என்றார் கண்ணீருடன்.



 ‘உங்கள் அப்பா மற்றும் உறவுகள் உங்களை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?’ என்று கேட்டோம். அதைக் கேட்டதும் சற்று கோபப்பட்ட நிஷா, ”நான் வசதியாக இருந்த காலத்தில் என்னிடம் நிறைய வாங்கிக்கொண்ட அவர்கள், இப்போது என்னைக் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். என் பெரியப்பா அப்துல் ஹமீதுவின் மகள் நிக்காவின்போது, தாலிக்கு நான் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தேன். அதை அவர்கள் மறந்து விட்டார்கள். சொந்த ஊரில்… பெற்ற தந்தையின் கண்முன்பே ரோட்டில் ஈ, எறும்பு மொய்க்க அனாதையாகக் கிடந்த நிலைமை என்னைத் தவிர, வேறு யாருக்கும் வராது’ என்றவர் குரல் உடைந்து போய் அழத் தொடங்கினார். அதன் பிறகு, ”சார் தப்பா நினைக்காதீங்க. கையில் சுத்தமாக காசே இல்லை.


 ஒரு முட்டை புரோட்டா சாப்பிடனும்போல ஆசையாக இருக்கு! ஒண்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்களேன், ப்ளீஸ்!” என்று கெஞ்சினார். நம்முடன் வந்திருந்த நண்பரொருவர் ஓடிச்சென்று அவர் கேட்டதை வாங்கிக் கொடுத்தார். நிஷா, சென்னை பல்லாவரத்தில் அவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருந்த மகியம்மா என்பவரிடம் அலிபாய், ரபீர் என்பவர்கள் மூலமாக நகை மற்றும் பணத்தைக் கொடுத்து வைத்திருப்பதாகவும், நகையன்றை அடகு வைத்து அந்தப் பணத்தில் வாடகைக் கார் பிடித்து அலிபாய் மூலம்தான் நாகூர் வந்து சேர்ந்ததாகவும் நிஷா நம்மிடம் விவரித்தார். 


தந்தை மற்றும் உறவினர்கள் ஏற்க மறுத்து விட்ட நிலையில், நாகூர் தர்கா அருகே அவர் அனாதையாக விடப்பட்டிருக்கிறார். நடிகை நிஷாவிடம் நாம் பேசிக் கொண்டிருந்தபோது, நர்ஸ் ஒருவர் விடுவிடென்று வந்து நம்மை, அப்பால் அழைத்துச் சென்றார். ”அந்தம்மாவுக்கு ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ்னு ரிசல்ட் வந்திருக்கு. அவங்களை தாம்பரத்திலுள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கான ஆஸ்பத்திரிக்கு அனுப்ப நீங்கள் ஏற்பாடு செய்யுங்களேன்!” என்றார் இரக்கக் குரலில். நடிகை நிஷா தன்னை எய்ட்ஸ் நோய் தாக்கியிருக்கிறது என்பது கூடத் தெரியாமல் இன்னும் இருக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்கியது. நாகூரில் வசிக்கும் நிஷாவின் தந்தை அப்துல் ஜப்பாரைச் சந்தித்தோம். ”நிஷா எனக்குப் பிறந்தவள்தான். 


அவளோட அம்மா பேபியை நான் லவ் பண்ணி திருமணம் செய்ததால், பெற்றோர் என்னை வீட்டை விட்டு விரட்டிட்டாங்க. அப்ப பிறந்தவதான் நிஷா. ‘கொஞ்ச நாள் பொறு’ன்னு நான் சொன்னதைக் கேட்காமல், குழந்தையைத் தூக்கிக்கிட்டு ராவோட ராவா பேபி சென்னைக்கு ஓடிப் போயிட்டா. அதன் பிறகு, பேபியைத் தேடியலைஞ்சு கோடம்பாக்கத்தில் கண்டுபிடித்தேன். எனக்குத் தெரியாமல் அடிக்கடி அவள் வீடு மாற ஆரம்பிச்சா. தான் ஜலீல்னு ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டதாகச் சொன்னாள். நிஷாவை என் கண்ணில் காட்டாமல் மறைச்சிட்டாள். பேபிக்கு பலபேரோட தவறான தொடர்பிருந்தது. நிஷாவை சினிமாவில் நடிக்க வைத்ததால் பணம் வர ஆரம்பித்தது. அதனால், ”உனக்கு ஊரில் பல பொம்பிளைகளோடு தொடர்பிருக்கு. இனிமே இங்கே வராதேன்னு என்னை விரட்டிட்டா” என்றார். ‘உங்களுக்கு எத்தனை மனைவிகள்?’ என்று ஜப்பாரிடம் கேட்டோம்.


 ”மனைவி என்றால் அது பேபி மட்டும்தான். ஆனால் நாலைந்து பெண்களோடு தொடர்பு உண்டு. எனக்கும் ஓர் இந்துப் பெண்னுக்கும் பிறந்த பையனை முஸ்லிமாக மாத்தி ஷாகுல் அமீதுன்னு பெயர் வைத்து வளர்க்கிறேன்” என்றார். மீண்டும் தொடர்ந்த அவர், ”பேபி இறந்தபோது எனக்கு தகவல் சொல்லவில்லை. என் அண்ணன் அங்கே போனபோது, ‘எனக்கு அப்பாவே வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்புறம் பெரியப்பா எதுக்கு?’ன்னு கேட்டு, நிஷா அவரை விரட்டியிருக்கா. இப்ப நோய் வந்து, சொந்தம் கொண்டாட வந்தா அவளை யார் ஏற்பார்கள்? நானே என் தங்கச்சி வீட்டில் ஓசிச் சாப்பாடு சாப்பிடறேன். இதில் அவளையும் வச்சி எப்படிக் காப்பாத்த முடியும்?” என்றார் அப்துல் ஜப்பார். நிஷாவின் பெரியப்பா அப்துல் ஹமீதைச் சந்தித்தோம். ”சென்னை சாந்தோமில் மலாக்கா சூப்பர் மார்க்கெட் வச்சிருக்கிற முகமது அலியும், ரபீக்கும் அவளை ஆண்டு அனுபவிச்சிட்டு, இப்போ அவங்க பாட்டுக்கு இங்கே விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாது’ என்றார் போட்டோவுக்கு மறுத்தபடி. நாகூர் ஜமாத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நிஜாமுதீனுடன் பேசினோம். ”ஒரு நடிகை எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணம் இந்த நிஷா. இப்போ வருத்தப்பட்டு எந்தப் புண்ணியமும் இல்லை” என்று முடித்துக்கொண்டார். அடுத்து நாகை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகியும், பொதுநல ஆர்வலருமான நாகூர் பாரி, ”நலிந்த கலைஞர்களுக்குக் கிடைக்கும் உதவி நிஷாவுக்குக் கிடைத்தால் நல்லது! திரையுலகைச் சேர்ந்தவர்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்” என்றார். 



‘சென்னை சாந்தோமில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் அலிபாய் என்கிற முகமது அலியை கடைசியாகத் தொடர்பு கொண்டு கேட்டோம். ”அந்தப் பொண்னும் அவங்க அம்மாவும் இங்கே அனாதைகளாக இருந்தபோது உதவினோம். நிஷாவின் அம்மா இறந்தபோது கூட உறவுக்காரங்க யாரும் வரவில்லை. இவர்களுக்கு உதவப்போய் இப்போது எங்களுக்குக் கெட்ட பெயர். உடல்நிலை சரியில்லாத நிஷா, அவரது நகை ஒன்றை அடகு வைத்தார். அந்தப் பணத்தில்தான் கார் ஒன்றை வைத்து அவரைக் கொண்டு போய் நாகூரில் விட்டுவரச் சொல்லி ஏற்பாடு செய்தோம்.நிஷாவை உறவினர்கள் ஏற்க மறுத்ததால், நாகூர் தர்காவில் தன்னை விடச்சொல்லி நிஷாவே சொன்னதால்தான் அங்கே விட்டு விட்டு வந்தோம். 





நிஷா பல்லாவரத்தில் அவரது எதிர் வீட்டில் குடியிருந்த மகியம்மாவிடம்தான் மீதி நகைகளைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்’ என்றவர், அதைத் தொடர்ந்து நாம் கேட்ட சில கேள்விகளால் கோபமடைந்து மிரட்டலுடன் போன் தொடர்பைத் துண்டித்துக்கொண்டார். அடுத்த சில மணி நேரத்தில் முகமது அலியின் செல்போன் மூலம் மகியம்மா என்பவர் நம்மிடம் பேசினார். ”என்னிடம் மொத்தம் மூனு பவுன் நகையைத்தான் நிஷா கொடுத்தார். அதற்கு பதினான்காயிரம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டேன். நகைக்கு அது சரியாப் போச்சு. நிஷா இருபத்து நான்கு புடைவை கொடுத்தார்.



 அதில் இருபது புடைவைகளை தலா நூறு ரூபாய்க்கு விற்று அவரிடம் காசு கொடுத்துவிட்டேன். மீதமிருப்பது நான்கு புடைவைகள்தான்” என்றார். ”முகமது அலிக்கும் நிஷாவுக்கும் நீண்டகாலமாகத் தொடர்புண்டு’ என்று அவர் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, அந்த செல்போனைப் பிடுங்கிய முகமது அலி, ”நிஷா இந்தப் பகுதிக்கு வந்த பிறகுதான் அவரை எனக்குத் தெரியும். அவரோடு எனக்கு முப்பது வருஷப் பழக்கம் என்பதெல்லாம் பொய்!” என்றார் கோபத்தோடு. கடைசியாகக் கிடைத்த தகவலின்படி அப்துல் ஜப்பாரின் மகன் ஷாகுல்அமீது, ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் நிஷாவை சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் அட்மிட் செய்ததாக நமக்குத் தெரிய வந்தது. நிஷா குறித்து ஃபிலிம்நியூஸ் ஆனந்தனிடம் பேசினோம். 


அவரது நிலை பற்றி மிகவும் வருத்தப்பட்ட அவர், ”அவ தைரியமான பொண்னு. ஒருமுறை இன்கம்டாக்ஸ் ஆபீஸர்னு சொல்லி போலி ரெய்டுக்கு வந்து பிளாக்மெயில் செய்ய முயன்ற ஒரு படத் தயாரிப்பாளரை, அவளே போலீஸ§க்கு போன் பண்ணிப் பிடித்துக்கொடுத்தாள். அப்படிப்பட்டவளுக்கா இப்படியரு நிலைமை?” என்றார் நிஜமான வருத்தத்தோடு. 



எக்ஸ்பிரஸ் கருத்து :பெண்கள் தங்கள் வாழ்வை எப்படி அமைத்து கொள்ளவேண்டும் என்பதற்கு பல அற்புதமான வழிகளை தந்துள்ளது இஸ்லாம்  .அதை விட்டு விட்டு  இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் இந்த நிலைமைதான் .



அந்நியன் -இந்தியன் பாணியில் 5 பேரை கொலை செய்த சாமியார் !!!

கண்ணன் அளித்துள்ள பகீர் வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:– 
ஸ்ரீரங்கம், டிசம்பர் 01: நான் ஸ்ரீரங்கம் பாரதி நகரில் வசித்து வருகிறேன். ஜோதிடம் பார்ப்பது, பரிகார பூஜைகள் செய்வது எனது தொழில். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வைர வியாபாரி செய்து வந்த திருவானைக்காவல் தங்கவேலு தனக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் மீண்டும் தொழில் லாபகரமாக நடக்க பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் கேட்டு என்னிடம் வந்தார்.

யமுனாவின் மீதான மோகத்தால் 5 பேரையும் கொன்றேன்: சாமியார் கண்ணன் வாக்குமூலம்
நான் தங்கவேலுவின் வீட்டிற்கு பரிகாரபூஜை செய்வதற்காக சென்றேன். அப்போதுதான் தங்க வேலுவின் மனைவி யமுனாவை முதன் முதலில் பார்த்தேன். பார்த்தது முதல் அவள் மீது எனக்கு ஆசை பிறந்தது. இதனால் அடிக்கடி பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என கூறி தங்கவேலு வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தேன். பின்னர் தங்கவேலு வீட்டில் இல்லாத போதும் அங்கு செல்வேன். சில நாட்களிலேயே யமுனாவை என் வலையில் வீழ்த்தினேன். அடிக்கடி நாங்கள் தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்தோம். இந்த விஷயம் தங்கவேலுவிற்கு தெரிந்து விட்டது. அவர் கடும் கோபத்தில் யமுனாவை திட்டினார். என்னை இனி வீட்டுக்கு வராதே என்று சொன்னார். இதனால் தங்கவேலுவை கொன்றால் தான் நிம்மதியாக இருக்க முடியும் என யமுனாவிடம் கூறினேன். 

யமுனாவும் அதற்கு சம்மதித்தாள். தங்கவேலுவை மது குடிக்க அழைத்து சென்றேன். அதிகமாக மது குடிக்க வைத்து பின் அவரின் தலையில் இரும்பு கம்பியால் அடித்தும் கழுத்தை அறுத்தும் கொன்றேன். உடலை சாக்கு மூட்டையில் கட்டி காட்டுப் பகுதியில் புதருக்குள் வீசினேன். இது 2006ம் ஆண்டு நடந்தது. 

செல்வக்குமாரும் சிறு வயது என்பதால் இது குறித்து அவர்களுக்கு புரியவில்லை. ‘அப்பா எங்கே’? என கேட்ட அவர்களிடம், வியாபார விஷயமாக வெளிநாடு சென்று விட்டார் என கூறி யமுனா சமாளித்தாள். இதை உறவினர்களிடமும் கூறி நம்பவைத்தாள். 

இந்நிலையில் திருச்சி கிராப்பட்டி, அன்பு நகரைச் சேர்ந்த துரைராஜ் என்பவரிடம் தங்கவேலு கடன் வாங்கி இருந்தார். தங்கவேலுவை நாங்கள் கொலை செய்துவிட்டதால் அவரை தேடி துரைராஜ் யமுனாவின் வீட்டிற்கு வந்தார். அப்போது தங்கவேலு வெளிநாட்டிற்கு சென்று விட்டதாக துரைராஜிடம் யமுனா கூறினார். இதனால் கணவர் இல்லமால் தனியாக யமுனா இருப்பதை தெரிந்து கொண்ட துரைராஜ் அடிக்கடி கடனை திருப்பி கேட்கும் சாக்கில் யமுனாவை பார்க்க வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

தங்கவேலுவை கொலை செய்தது போல் துரைராஜையும் கொலை செய்து விடுவது என யமுனாவும் நானும் தீர்மானித்தோம். கடந்த 2007–ம் ஆண்டு ஜனவரி 22–ந் தேதி துரைராஜை வீட்டிற்கு வரும்படி யமுனா போன் மூலம் அழைத்தாள். துரைராஜ் தனது காரில் யமுனா வீட்டிற்கு வந்தார். அவரையும் யமுனா வீட்டில் வைத்து இரும்பு கம்பியால் அடித்து கொன்றேன். உடன் வந்த கார்டிரைவர் சக்திவேலுவையும் வீட்டிற்குள் நைசாக அழைத்து கம்பியால் பின் தலையில் அடித்து கொலை செய்தேன். பின்னர் உடல்களை வையம்பட்டிக்கு காரில் கொண்டு சென்று காரில் வைத்தே எரித்தோம் இதற்கு சரவணனையும், முத்துக்காத்தானையும் கூட்டாக சேர்த்துக் கொண்டேன். 

துரைராஜ் கொலை குறித்து என்னிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் சமர்த்தியமாக பதில் கூறி தப்பித்தேன். இதன்பின் எந்த பிரச்சனையும் இல்லாமல் எங்கள் உறவு தொடர்ந்தது. நான் என்ன சொன்னாலும் கேட்கும் நிலைக்கு யமுனா வந்து விட்டாள். 

இந்த நிலையில் தான் சத்யாவும், செல்வக்குமாரும் பெரியவர்களாகி விட்டனர். எங்களது கள்ள தொடர்பு குறித்து புரிந்து கொண்ட செல்வக்குமார் யமுனாவிடம் சண்டை போட்டான். மேலும் யமுனாவிற்கு சொந்தமான நிலத்தை ஒருவரிடம் அடகு வைத்து லட்சக் கணக்கில் பணம் வாங்கி இருந்தோம். அந்த பணம் குறித்தும் செல்வக்குமார் கணக்கு கேட்க தொடங்கினான். இதனால் அவைையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இதற்கு யமுனாவையும் சம்மதிக்க வைத்தேன். 

கடந்த அக்டோபர் மாதம் ஒருநாள் காலையில் யமுனாவின் வீட்டிற்கு சென்றேன். சத்யா வேலைக்கு சென்று விட்டாள். செல்வக்குமார் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தான். யமுனாவும் அவளது தாய் சீதாலட்சுமியும் ஒரு அறையில் இருந்தார்கள். நானும் அவர்களுடன் காத்திருந்தேன். தூக்கம் கலைந்து எழுந்த செல்வக்குமார் பாத்ரூமுக்கு சென்றான். அப்போது பின்புறமாக சென்று அவன் தலையில் இரும்பு கம்பியால் ஓங்கி அடித்தேன். இதில் ரத்தம் சொட்ட சொட்ட அவன் கீழே விழுந்தான். கத்தியால் அவன் கழுத்தை அறுத்து கொன்றேன். 

செல்வக்குமாரை கொல்லும் வரை யமுனாவும் அவளது தாயும் அறைக்குள்ளேயே இருந்தனர். பின்னர் அவன் உடலை புலிவலம் காட்டு பகுதியில் வீசினேன். தம்பியை காணாத சத்யா அவன் எங்கே என்று கேட்டு யமுனாவிடம் தகராறு செய்ய ஆரம்பித்தாள். 

இந்த நிலையில் தான் கையில் யமுனாவின் பெயரை பச்சை குத்திய நிலையில் செல்வக்குமார் பிணமாக கிடந்த செய்தி பத்திரிக்கைகளில் வந்தது. இதை பார்த்த சத்யா நாங்கள் தான் அவனை கொலை செய்தோம் என்றும் போலீசிடம் இதை சொல்லப் போவதாகவும் யமுனாவிடம் கூறினாள். சத்யாவை உயிருடன் விட்டால் நாங்கள் மாட்டிக் கொள்வோம் என்பதால் அவளையும் கொலை செய்ய முடிவு செய்தோம். 

கடந்த 15–ந் தேதி அதிகாலையில் யமுனா வீட்டிற்கு சென்றேன். செல்வக்குமாரை கொன்றது போல் பாத்ரூம் அருகில் வைத்து சத்யாவை இரும்பு கம்பியால் அடித்தும் கத்தியால் கழுத்தை அறுத்தும் கொன்றேன். அவள் உடலையும் புலிவலத்தில் செல்வக்குமாரின் உடலை வீசிய இடத்தில் கொண்டு போட்டேன். இத்தனை கொலைகளையும் யமுனாவின் மீது நான் கொண்டிருந்த தீவிரமான மோகத்தால் தான் செய்ய நேர்ந்தது. 

சத்யா– செல்வக்குமார் கொலை குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்ததால் நானும், யமுனாவும் அவளின் தாய் சீதாலட்சுமியை கூட்டிக் கொண்டு ஆந்திராவிற்கு தப்பி சென்றோம். பின்னர் மீண்டும் திருச்சி வந்த போது யமுனாவையும் சீதாலட்சுமியையும் போலீசார் கைது செய்தனர். வேறு வழியில்லாமல் நானும் சரண் அடைந்து விட்டேன். 

இவ்வாறு கண்ணன் வாக்கு மூலத்தில் கூறி உள்ளான்.

தம்பிகோட்டையில் கேரளா முஸ்லிம்கள் மீது தாக்குதல் பதற்றம் -ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் சதியா ?


தம்பிக்கோட்டை, நவம்பர் 29: இன்று மாலை 6.30 மணியளவில், நாகூரிலிருந்து கேரளா பாலக்காட்டை சேர்ந்த செளக்கத் அலி என்பவர் டூரிஸ்ட் வேனில் தனது குடும்பத்தினருடன் ஏர்வாடியை நோக்கி ஈசிஆர் சாலையில் பயணமானார். இதில் பெண்கள், குழந்தைகள் என சுமார் 20 பேர் இருந்துள்ளனர்.

தம்பிக்கோட்டை சாலையோரக் கடையில் டீ குடிப்பதற்காக வேனை நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கே இரு சக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர்கொண்ட கும்பல் வேனின் மீது கற்களால் தாக்கியுள்ளனர். வேனில் இருந்தவர்களை தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திடீர் தாக்குதலில் வேனின் கண்ணாடி, கதவு உள்ளிட்டவை சேதமடைந்தன. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த வேன் டிரைவர் வேனை பதட்டத்துடன் அதிரைக்கு ஓட்டிவந்துள்ளார்.

இதனை அறிந்த அதிரை நகர எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் அதிரை இளைஞர்கள் திரண்டு வந்து சம்பவம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆறுதல் கூறினர்.

பாதிக்கப்பட்டோர் சார்பாக அதிரை காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.








தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)