முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இன்றைய நிலையில் இஸ்லாமிய இளைஞர்கள்..!!


அதிரை, டிசம்பர் 22: ஒரு மனிதன் இறந்தவுடன் அவனுடைய வாழ்கையும் முடிந்து விடுகிறது.அதன் பின் ஒன்றுமே இல்லை. அவன் இறந்த பின் மண்ணோடு மன்னாகிறான், என்று சொன்னால் அவன் வாழும் போதே என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்,பாவம்,புண்ணியம், என்று எதற்கும் பயப்பட தேவை இல்லை. ஆனால் மனிதன் இறந்த பின்னும் ஒரு வாழ்க்கை இருக்கிறது.அது முடிவற்றது.வாலிப வயதில் ஒரு மனிதனின் பங்கு,பெரும் சோதனைக்கு உரியது.இந்த வயதில் தான் ஒரு இளைஞனின் வாழ்க்கை திசை மாறுகிறது. அல்லது மாற்றப்படுகிறது. ஒரு இளைஞன் தன் வாலிப வயதில் எவ்வாறு சகமனிதர்களுடனும், தோழர்களுடனும், பழகுகிறானோ அவ்வாறு தான் அவனது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிவிடுகிறது. 

ஆடை இல்லா மனிதன் அறை மனிதன் என்பது பழமொழி. நல்ல நண்பர்களை தேடுவதை விட நீ நல்ல நண்பனாய் இரு, கட்டாயம் உனக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.., என்று ஓர் அறிஞர் சொன்னார். அனால் இன்றைய இளைஞர்கள் அப்படி இல்லை. இன்றைய இளைஞ்கர்கள் தன் நண்பர்களுடன் சேர்ந்து பெண்களை கிண்டல் செய்தும், சிகரெட் பிடித்து கொண்டும்,போதை தரும் பாக்குகளை உபயோகித்தும் வருகின்றனர். அதிலும் சில இளைஞர்கள் மட்டுமே தங்களை தவறான வழியில் செல்லாமலும், தவறான நண்பர்களுடன் சேராமலும், அவர்களே அவர்களை, பாதுகாத்து வருகின்றனர். 

இஸ்லாத்தின் நற்குணங்களான பொய், புறம்,நம்பிக்கை மோசடி, பெருமை, தீய எண்ணம், கோபம், மது, சூது, லஞ்சம், திருட்டு, போன்ற இன்னும் பலவற்றினை ஒரு முஸ்லிம் அறவே விட்டொழிக்க வேண்டும். அனால் இன்று எத்தனை பேர், எத்தனை இளைஞர்கள் விட்டொழிக்கிகிறார்கள்.? சற்று நடு நிலையோடு சிந்தித்து பாருங்கள்..! இன்றைய நிலையில் இஸ்லாமிய இளைஞர்கள் பத்து மாதம் கஷ்டப்பட்டு சுமந்து பெற்ற தாயை அடித்து, துன்புறுத்தியும், பாசமாக வளர்த்த தந்தையை வீட்டை விட்டே விரட்டிக்கொண்டும், தவறான நண்பர்களுடன் சேர்ந்து தெரு ஓரங்களில் சிகரெட், மது, போன்ற தவறான பழக்கங்களிலும் ஈடுபடுகிறார்கள். நமது தோல் வலிமையில் தான் நாம் சம்பாதிக்கின்றோம் என்று எண்ணிவிடக்கூடாது. தோல் மூலம் நாம் ஒன்றும் சாதித்து விட முடியாது. கை, கால்களை இறைவனே கொடுத்தான். 

இதனால் தான் அவனது ஆணைப்படி உழைக்கின்றோம். அனால் இந்த உழைப்பு ஒன்றும் தந்து விட முடியாது. தரக்கூடியவன் அல்லாஹ் தான். எனவே நாம் நன்மையின் வழியையே தேர்ந்தெடுக்க வேண்டும். அனால் இன்றைய நிலையில் எத்தனை பேர் இந்த நம்பிக்கையில் இருக்கின்றோம்?  "முத்துக்கு சொந்தக்காரர்களாய் சஹாபா பெருமக்கள்.! அனால் சிப்பியாய் இருக்கக்கூட தகுதியற்றவர்கள் நாம்.! பூக்கடை மலர்களாய் அவர்கள்.! சாக்கடை புழுக்களாய் நாம்".! ஏனிந்த முரண்பாடுகள்? எப்படி வந்தது.? இதை பற்றி நாம் சிந்தித்தோமா? இதைப்படித்து விட்டு ஒருகட்டூரையை படித்தோம் என்று எண்ணி கொண்டு தூங்கிவிடுவீர்களாயின், நெடுந்தூக்கம் தூங்கிய பின் இறைவன் எழுப்புவானே..! அப்பொழுது விழித்து இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டியது வரும். 

ஆகவே கேள்வி கணக்கு கேட்கும் நாளை மறுமையில் சுவனம் செல்வதற்கு,நாம் செய்த குற்றங்களுக்கு இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடுவோம்.. அன்புள்ள சகோதர, சகோதரிகளே.! நெடுந்தூக்கம் வரும் முன் நாம் அனைவரும் விழித்துக் கொள்வோம்..! இதோ உங்களுக்கு,குறிப்பாக என்னைப் போன்ற வாலிப வயது இளைஞர்களுக்கு 5 கேள்விகள்;- இந்த நிமிடம் உங்கள் மரணம் வந்தால் மறுமையில் உங்கள் நிலை என்ன? நீங்கள் மறுமைக்காக சேர்த்து வைத்தது தான் என்ன? நீங்கள் அடைந்த இந்த இஸ்லாத்தை உங்கள் வாழ்கையில் எத்தனை பேருக்கு எடுத்து சொன்னீர்கள்? உங்கள் வாழ்க்கை நபி (ஸல்) அவர்கள் சொன்னபடி அமைந்துள்ளதா? ஒரு நாளில் எத்தனை முறை மறுமைக்கு அஞ்சுகிறீர்கள்? இந்த 5 கேள்விகளுக்கும் நாம் சரியானவரா என்று சிந்தியுங்கள்..! இளைஞர்களே..! தடுமாறும் இந்த வாலிப வயதில் தடம் மாறாதீர்கள்.! 

நமது இணையதளத்திற்கு எழுதி அனுப்பிய கட்டுரை:

நன்றி: S.அப்துல் வஹாப் BBA., அதிரை.

மவுத்து அறிவிப்பு: KMS.சேக்ஜி என்கிற ஜோதிடர் சேக்தாவூது.


முத்துப்பேட்டை, டிசம்பர் 22: மர்ஹீம் மு.க.காதர்மைதீன் அவர்களுடைய மகனும், KM.ரஹ்மத் அலி, KM.தாஜ்தீன்(TJ), MMA .ஜலால், இவர்களுடைய சகோதரரும், அதிரை சாகுல் ஹமீது அவர்களுடைய மாமனாரும், L.ஜெயிலானிடைய தாய் மாமாவும், S.முகம்மது இதிரீஸ், S.முகம்மது இக்பால், இவர்களுடைய தகப்பனாருமாகிய "KMS.சேக்தாவூது" அவர்கள் காலை 6:30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள் . (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). 



அன்னாரின் ஜனாஸா நாளை காலை முகைதீன் பள்ளியிவாசால் மையவாடியில் நல்லடக்கம் 
செய்யப்படும் என அறிவிக்கிறார்கள். 

அறிவிப்பவர்: KM. ரஹ்மத் அலி சகோதரர்கள்.


MMA.ஐலால்.
Cell: 97 88 52 60 85 .

முத்துப்பேட்டையில் பராமரிப்பின்றி காணப்படும் பங்களாவாசல் பேரூந்து நிறுத்தம் !!

முத்துப்பேட்டை பஸ் நிறுத்தம் என்றாலே ,அது சட்டென்று நினைவுக்கு வருவது பங்களாவாசல் தான். ஏன் என்று சொன்னால் முத்துப்பேட்டையின் மைய பகுதியில் அமைந்துள்ளது இந்த 
பங்களா வாசல். 

முத்துப்பேட்டையிலிருந்துசெல்லும்பேரூந்துகள்   பட்டுக்கோட்டை ,செல்வதாக இருந்தாலும் சரி,அல்லது அதிராம்பட்டினம் ,மதுக்கூர் செல்வதாக இருந்தாலும் சரி இந்த பங்களா வாசல் பேரூந்து நிறுத்தத்தில் நின்று விட்டுதான் செல்ல வேண்டும் .

அதே போல் பட்டுக்கோட்டை ,அதிராம்பட்டினத்திளிளிருந்து வரும் பேரூந்துகள் நாகப்பட்டினம் செல்ல வேண்டுமானாலும் சரி ,திருத்துறைபூண்டி அல்லது வேதாரண்யம் செல்ல வேண்டுமானாலும் சரி பங்களா வாசல் பேரூந்து நிறுத்தம் வழியாக தான் செல்ல முடியும் . 

இது ஒரு புறம் இருந்தாலும் ,தங்களது வெளியூர் பயணத்தை மேற்கொள்ளும் மக்கள் குறிப்பாக பெண்கள், இந்த பங்களா வாசல் நிறுத்தத்திலிருந்து புறப்படுவதையே பெரும்பாலும்  விரும்புகின்றனர் .ஏன் என்று சொன்னால் எந்த வித தொந்தரவுகளும் ,கூட்ட நெரிசல்களும் இல்லாமல் அமைதியாக இருப்பதனாலும் ,குறிப்பாக பெண்கள் நின்று செல்வதற்கு பாதுகாப்பாக இருப்பதினாலும் இந்த இடத்தை தேர்வு செய்கின்றனர் .

கடந்த திமுக ஆட்சியில் 12 லட்ச மதிப்பீட்டில்பேரூந்து நிறுத்தம்  கட்டப்பட்டு,அதை  பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர் .இந்நிலையில் இந்த பேரூந்து நிறுத்தமானது, தகுந்த பராமரிப்பின்றி இருப்பதால் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது .

மேலும் தெருவில் நடமாடும் விலங்குகள் அசுத்தம் செய்வதால் ,மிகவும் அருவருப்பாக சுத்தமின்றி காட்சியளிக்கிறது .இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் இந்த இடத்தில் நிற்பதை தவிர்த்து வருகின்றனர் .

இதனால் கொளுத்தும் வெயில் காலங்களிலும்  அல்லது கடும் மழை காலங்களிலும் பேரூந்து நிறுத்தத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் .

எனவே தகுந்த பராமரிப்பின்றி சிதிலமடைந்து அசுத்தமாக காட்சியளிக்கும் பங்களா வாசல் பேரூந்து நிறுத்தத்தை உடனடியாக மறு சீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று அந்த வார்டு உறுப்பினரும் திமுக பிரதிநிதியுமான ஜனாப் . ஆட்டோ ஜபருல்லாஹ் அவர்களையும் ,பேரூராட்சி தலைவரும் அதிமுக பிரதிநிதியுமான  திரு .கோ .அருணாச்சலம் அவர்களையும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் அன்போடு கேட்டு கொள்கிறது .

குறிப்பு :இந்த பிரச்சினையை  தமுமுக ,மமக ,TNTJ ,SDPI ,PFI ,முஸ்லீம் லீக் ,INTJ உள்ளிட்ட சமுதாய அமைப்புகள் கையில் எடுத்தால் உடனடியாக தீர்வு காணலாம் என்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் கோருகிறது .

ஆட்டோ ஜபருல்லா -9750223019    (வார்டு உறுப்பினர் )
கோ .அருணாச்சலம் -9842160292   (பேரூராட்சி தலைவர் )

தொகுப்பு :ஜே :ஷேக் பரீத் 




முத்துப்பேட்டையில் வெளுத்து வாங்கிய கனமழை -குளிரை ஏற்படுத்தும் குளுகுளு காட்சிகள் !!

முத்துப்பேட்டை டிச-18
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று பகுதி கிராமங்களில் நேற்று காலை 10-மணிமுதல் இரவு வரை தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்ந்துக்கொண்டே இருந்தது. இதனால் முத்துப்பேட்டையில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகஅளவில் காணாமல் வெறிச்சோடி இருந்தது. அதுபோல் எப்பொழுதும் மக்கள் கூட்டம் அதிகஅளவில் காணப்படும் குமரன்பஜார், நியூபஜார், திருத்துறைப்பூண்டி சாலை மற்றும் ஆசாத்நகர் போன்ற பகுதிகள் மக்கள் நடமாற்றம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மாணவ மாணவிகள் மழையில் நனைந்தவாறு சென்றனர்.


பாகிஸ்தானில் மனிதமிருகங்கள் நடத்திய கோர தாக்குதல் -முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் கடும் கண்டனம் !!

பெஷாவர்,

தலீபான் தீவிரவாதிகள், பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று கொடூர மான மிருகவெறி தாக்குதலை நடத்தி, அப்பாவி குழந்தைகளை கொன்று குவித்தது, உலகையே உலுக்கி உள்ளது.

இதுபற்றிய தகவல்கள் ரத்தத்தை உறைய வைப்பதாக அமைந்துள்ளன.

தற்கொலைப்படை தீவிரவாதிகள்

பெஷாவர் நகரில், வார்சாக் ரோட்டில் ராணுவ பப்ளிக் பள்ளிக்கூடம் உள்ளது. அதன் அருகில் ஒரு மயானமும் உள்ளது. அந்த மயானத்தின் வழியாக, ராணுவ சீருடை அணிந்த, அரபி மொழி பேசிய 6 தற்கொலைப்படை தீவிரவாதிகள், ராணுவ பள்ளிக்கூடத்திற்குள் புகுந்தனர். உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10.30 மணிக்கு புகுந்த அவர்கள், மறுநிமிடமே இலக்கின்றி, ஈவிரக்கமின்றி அப்பாவி மாணவ, மாணவிகள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்கள்.

ஒவ்வொரு வகுப்புக்கும் அவர்கள் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். தொடர் துப்பாக்கிச்சூடு காரணமாக அந்த பகுதியே அதிர்ந்தது. எங்கும் குண்டு வெடிப்பும், மரண ஓலமும், கூச்சலும் கேட்டது.

தேர்வு எழுதிய மாணவர்கள்

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நேரத்தில், பள்ளிக்கூடத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்தனர். பள்ளிக் கூடத்தில் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன.

தீவிரவாதிகள்தான் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதை உணர்ந்த ஆசிரியர்கள் உஷார் ஆனார்கள். மாணவர்களை, தேர்வு எழுதுவதை நிறுத்தி விட்டு, வகுப்பறையில் தரையில் படுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர். பல மாணவர்கள் பள்ளிக்கூடத்தின் பின்புற வாயில் வழியாக வெளியேறினார்கள்.

134 பேர் கொன்று குவிப்பு

தீவிரவாதிகள் தாக்குதல் குறித்த தகவல் அறிந்ததும் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்து சென்று சம்பவ பகுதியை சுற்றி வளைத்து, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருப்பினும், இந்த கொடூர தாக்குதல்களில் 84 குழந்தைகள் உள்பட 104 பேர் கொன்று குவிக்கப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறின. ஆனால் 134 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசு வானொலி அறிவித்தது. இவர்களில் 132 பேர் குழந்தைகள், ஒருவர் ஆசிரியை, மற்றொருவர் பள்ளிக்கூட காவலாளி. குழந்தைகளைப் பறிகொடுத்தோரின் கதறல், கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக அமைந்தது.

பலி உயரும்?

245 பேர் படுகாயம் அடைந்து, மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆனாலும், பலரது நிலைமை கவலைக்கிடம் அளிப்பதாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் நிலவுகிறது.

6 தீவிரவாதிகளும் பலி

தாக்குதல் தொடுத்த தீவிரவாதிகளில் ஒருவர், உடலில் கட்டி வந்த குண்டுகளை வெடிக்கச்செய்து உடல் சிதறி உயிரிழந்தார்.

மற்ற 5 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரை ஆனார்கள். இதையடுத்து தாக்குதல் முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளையும் சேர்த்து மொத்த பலி எண்ணிக்கை 140 ஆகும்.

ஜனாதிபதி, பிரதமர் கண்டனம்

உலக நாடுகளில், சமீப காலத்தில் நடந்த தாக்குதல்களில் அதிபயங்கரமான தாக்குதல் இதுதான் என்றும், குழந்தைகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மிக கொடூரமான தாக்குதல் இதுதான் என்றும் கருதப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசேன் கடும் கண்டனம் தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கண்டனம் தெரிவித்ததுடன், நிலைமையை நேரில் ஆராய்வதற்காக பெஷாவர் விரைந்தார். இதே போன்று ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப்பும் அங்கு விரைந்தார். எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கானும் கடும் கண்டனம் தெரிவித்தார்.

தலீபான்கள் பொறுப்பேற்பு

இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தலீபான்கள் உடனடியாக பொறுப்பேற்றனர்.

இதுபற்றி அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தற்கொலைப்படையினர் 6 பேர் இந்த தாக்குதல்களை நடத்தினர். வடக்கு வாஜிரிஸ்தானில் போராளிகளுக்கு எதிராக ராணுவம் எடுக்கிற நடவடிக்கைக்கு பழிக்கு பழிவாங்கத்தான் (ராணுவ பள்ளிக்கூடத்தை குறி வைத்து) இந்த தாக்குதல்கள். எங்கள் வலியை, வேதனையை அவர்கள் உணர வேண்டும் என்று விரும்புகிறோம்” என கூறினார்.

நேரில் பார்த்தவர்கள் பேட்டி

பள்ளிக்கூடத்தின் அருகில் வசிக்கும் ஷாகுப்தா என்ற மாணவி, “பள்ளிக்கூடத்தில் 2 குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டன. முதல் குண்டுவெடிப்பை விட இரண்டாவது குண்டு வெடிப்பு சத்தம் பலமாக இருந்தது” என்று கூறினார். சுஜா என்ற மாணவர், “நாங்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோதுதான் துப்பாக்கியால் சரமாரியாக சுடுகிற சத்தம் கேட்டது. உடனே ஆசிரியர் எங்களை தேர்வு எழுதுவதை விட்டு விட்டு தரையில் படுத்துக்கொள்ளுமாறு கூறினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அப்படி தரையில் படுத்திருந்தோம். பின்னர் ராணுவ அதிகாரி வந்து கூறிய பின்னர்தான் எழுந்து வெளியேறினோம்” என்றார்.

மற்றொரு மாணவர், தீவிரவாதிகள் அதிநவீன துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டதாக கூறினார். இன்னொரு மாணவர், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் நீளமான தாடி வைத்திருந்தனர், சல்வார் கமீஸ் அணிந்திருந்தனர் என கூறினார்.

மனித கேடயங்கள்

முதலில், ராணுவத்தின் தாக்குதல்களை தடுக்கும் நோக்கத்தில் மாணவர்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து, மனித கேடயங்களாக பயன்படுத்தினர்.

சம்பவத்தின்போது பள்ளிக்கூடத்தின் பின்புற வாயில் வழியாக தப்பிய மாணவர்களில் ஒருவர் டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, “முதலில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் ஒரு ராணுவ அதிகாரி எங்களை பின்புற வாயில் வழியாக வெளியேறும்படி கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் வெளியேறி விட்டோம்” என்று கூறினார்.

3 நாள் துக்கம்

தீவிரவாதிகள் தாக்குதல்களில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 3 நாள் தேசிய துக்கத்தை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்தார். பெஷாவரில் நிருபர்களிடம் பேசிய அவர், “இந்த நாட்டில் தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கும் வரையில், தீவிரவாதத்துக்கு எதி

ரான போர் ஓயாது. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என கூறினார்.

இந்த தாக்குதல்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் மற்றும் உலகத் தலைவர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

பழிக்கு பழி

பாகிஸ்தானில் பெஷாவரையொட்டியுள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி, தலீபான், அல்கொய்தா தீவிரவாதிகளின் சொர்க்க புரியாக திகழ்கிறது. இங்குள்ள தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்காவும், பாகிஸ்தானும் கூட்டாக ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களும், பாகிஸ்தானின் போர் விமானங்களும் கடந்த 6 மாதங்களாக நடத்தி வருகிற வான்தாக்குதல்களில் தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு பழிக்கு பழிவாங்கும் விதத்தில்தான் தலீபான் தீவிரவாதிகள் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூட தாக்குதல்களை நடத்தி, உலகையே நடுங்க வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



பொதக்குடியில் மாநாடாக மாறிய மனிதநேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம் !!!

திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 14.12.2014 அன்று அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.1000க்கு மேற்பட்டோர் பங்கேற்று இப்பொதுக்கூட்டத்தில் மமக சட்டமன்ற குழு தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் MLA,மமக பொது செயலாலர் தமிமுன் அன்சாரி,மாநில செயற்குழு உறுப்பினர் Dr.சர்வத்கான் உள்ளிட்டோர் உரையாற்றினார்.

இதில் மமக மாநில அமைப்பு செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா,பொதக்குடி தாஜுதீன்,நாச்சிகுளம் தாஜுதீன்,தஞ்சை கலந்தர்,மமக மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான்,மமக மாவட்ட செயலாளர் சீனி.ஜெகபர் சாதிக்,மமக மாநில செயற்குழு உறுப்பினர் குத்துபுதீன்,மமக பொருளாளர் ஹக்,பொதக்குடி கிளை தலைவர் சாகுல் ஹமீது,முன்னால் மாவட்ட தலைவர் பொதக்குடி நூர்தீன்,அத்திகடை யாக்கத் அலி,மன்னை கமால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


முன்னதாக அன்று மாலை 5 மணிக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் உடன் மமக பொது செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் கூத்தாநல்லூர், அத்திகடை, தண்ணீர்குனம், பூதமங்கலம் ஆகிய ஊர்களில் மமக கொடி ஏற்றும் நிகழ்ச்சி எழுச்சியுடன் நடைபெற்றது.
அன்று மதியம் மலேசிய மண்டல துணை தலைவர் பொதக்குடி தாஜுதீன் அவர்களின் இல்ல திறப்பு விழாவில் மமக சட்டமன்ற குழு தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் MLA,மமக பொது செயலாலர் தமிமுன் அன்சாரி,மமக மாநில அமைப்பு செயலாளர் மெளலா நாசர்,மமக மாநில அமைப்பு செயலாளர் மதுரை மைதீன் உலவி,தமுமுக மாநில செயலாளர் பேரா.ஹாஜா கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



ஜே :ஷேக் பரீத் 

2016 தமிழக சட்டமன்ற தேர்தலும், முஸ்லிம் அமைப்புகளின் நிலமைகளும் ஓர் பார்வை...!!!


தமிழகம், டிசம்பர் 16: தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகள் 20க்கு மேற்பட்டவைகள் உள்ளன. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதலாவதாக தோன்றியது பின்னர் தேசிய லீக், தமுமுக, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ, இப்படி என பல அமைப்புகள் உருவாயின. இத்தனை அமைப்புகளும்  செயல்பாடுகளில் மட்டும் தான் மாறியிருக்கின்றனர். சமுதாய பணிகளில் அவரவர் தங்களால் ஆன பணிகளை தொடர்ந்து சமுதாயத்திற்கு ஆற்றி வருகின்றனர். சமுதாய பிரச்சனைகளில் ஒன்றிணைந்து தங்களின் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

பொதுவாக தேர்தல் நேரங்களில் சமுதாய அமைப்புகள் திமுக அதிமுக என இரு அணிகளிலும் கலந்து கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருவது வழக்கம் . கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அணியை பெரும்பாலான முஸ்லிம் அமைப்புகள் ஆதரித்தனர். இருப்பினும் தேர்தல் முடிவுகள் இவர்களுக்கு ஏமாற்றம் தந்தது.

2016 ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் வெற்றி பெறவும் அதற்கான வியூகங்கல் அமைக்கும் முறையை தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் துவங்கியுள்ளன. இந்த நிலையில் முஸ்லிம் சமுதாய அமைப்புகள் எத்தகைய நிலையை மேற்கொள்ள போகிறார்கள் என்பது எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனித நேய மக்கள் கட்சி எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளின் நிலை என்ன என்பது ஒரு கேள்விக்குறி ஒன்றிணைந்து ஒரு அணியை  தேர்ந்தெடுத்து கூட்டணி அமைத்து போட்டியிடப் போகிறார்களா? அல்லது தேர்தல் நேரத்தில் உருவாகும் அணிகளில் பிரிந்து கூட்டணி அமைக்க போகிறார்களா? என்பது பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. சமுதாய மக்களின் எதிர்பார்ப்பு அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து குறிப்பிட்ட தொகுதிகளை பெற்று தொகுதிகளை பங்கீட்டு கொண்டு போட்டியிட்டால் நலமுடையது என கருதுகிறோம்.இப்போதே முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளை கணக்கெடுத்து நமக்குள் ஒன்றிணைந்து கருத்துக்களை பரிமாறி ஓரணியாக உருவானால் நமக்கான பிரதிநித்துவத்தை அதிகம் பெற வாய்ப்பாக அமையும்.

தேர்தலில் போட்டியிடாத அமைப்பான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏனைய முஸ்லிம் அமைப்புகள் போட்டியிடும் தொகுதிகளில் இவர்களுக்கு தங்களின் முழு ஆதரவை வழங்க முன்வர வேண்டும் என்பது என்னைப்போன்ற பல இளைஞர்களின் அவாவாக உள்ளது.

அமைதிப்பூங்காவான தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று எல்லோரும் கூறிவருகின்றனர். மதக்கலவரங்களை தூண்டிவிடுவோரும் அத்தகைய கருத்துக்களை கூரிவருன்றனர். சகோதரத்துவத்தையும் சமாதானத்தையும் அரவணைப்பையும் விரும்புகிற முஸ்லிம் சமுதாயம் தேர்தல் காலத்திலாவது ஒன்றிணைந்து நமக்கான பிரதிநித்துவத்தையும் நமக்கான உரிமைகளையும் பெற ஒன்றாய் களம் காண்போம் உயர்ந்து பணிகளை தொடர்ந்து ஆற்றுவோம்.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முஹம்மது இல்யாஸ். 
MBA, MA. (Journalism & Mass Communication)
Full Rights Received.. 

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் பணிகளை விரிவு படுத்தவும் தொழில் நுட்ப சாதனங்கள் வாங்கிடவும் உதவிடுவீர் !!!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் வெற்றி கரமாக மூன்றாம் ஆண்டில்  அடியெடுத்து வைக்கிறது. அல்லாஹு அக்பர் !! அல்லாஹு அக்பர் !! அல்லாஹு அக்பர் !!!

இந்த மாபெரும் வெற்றிக்கு பின்னணியில் வாசகராகிய உங்களின் ஒத்துழைப்பும் மிக முக்கியமானது  என்பதையும் இங்கே நாங்கள் சுட்டிக்காட்ட கடமை பட்டுள்ளோம். குறிப்பாக கடல் கடந்து வாழும் நம் சகோதரர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் நமக்கு இன்னும் உத்வேகத்தையும், புத்துணர்வையும் ஊட்டுகிறது. நமது இணையதளத்திற்கு துபாய், சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, குவைத், கத்தார், இலங்கை, போன்ற நாடுகளிலும் லண்டன், அமெரிக்கா, கனடா, பேங்காக், போன்ற நாடுகளில் வசிக்கும் நம் சகோதரர்கள் மிகுந்த ஆதரவை அளித்து வருகின்றனர். 

யாருக்கும் வளைந்து கொடுக்காத தனம், சார்பற்ற போக்கு, உள்ளதை உள்ளபடியே சொல்லும் போக்கு, மதவாத பாஜக, ஆர் எஸ் எஸ் போன்ற பயங்கராவாத இயக்கங்களை தோலுரிக்கும் துணிவு, இஸ்லாத்திற்கு எதிராய் செயல் படுகின்ற  துரோகிகளை வெட்ட வெளிச்சமாக்கும் போர்குணம், இவை அனைத்தும் நம் இணையதளத்தின் தனித்தன்மையாகும். அது மட்டுமல்ல முத்துபேட்டையில் அன்றாடம் நடக்கும் பொது நிகழ்வுகள்,மரண அறிவிப்புகள், திருமண செய்திகள், மருத்துவ செய்திகள், சமூக அரசியல் தலைவர்களுடன் நேர்காணல் போன்ற பல்வேறு நிகழ்சிகளும் அடங்கும். 

இப்போது நம் எக்ஸ்பிரஸ் இணையதள பணிகளை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக நாம் கூடுதலாக செய்தியாளர்களை நியமிக்க உள்ளோம் என்பதனையும் இந்த நேரத்தில் தெரிவிக்க கடமை பட்டுள்ளோம்.

நாம் இது வரை எழுத்து வடிவிலேயே செய்திகளை தந்து கொண்டிருக்கிறோம் .இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் வீடியோ வடிவிலும் நாம் செய்திகளை தர திட்டமிட்டுள்ளோம் என்பதனை இந்த தருணத்திலே மிகவும் அக மகிழ்வோடு கூறிக்கொள்ள ஆசை படுகிறோம் . இதற்காக நம் இணையதள பணிகள்  முழுவீச்சில் தொய்வின்றி நடக்க வீடியோ கேமரா, டிஜிட்டல் கேமரா, மடிக்கணினி போன்ற பல்வேறு மின்னணு சாதனங்கள் தேவை படுகிறது என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.
 
அன்புடன் : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்:
 தொடர்புக்கு: முஹம்மது இல்யாஸ்.                                = + 0091 - 98426 81426

தொடர்புக்கு : ஷேக் பரீத்                                                          = + 0091 - 7200 11 6852

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)