முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டிய ஊடகத்துறை!!!

உலகம் ஆகஸ்ட் 20 : ஊடகம் (மீடியா) இன்று உலகை சுருக்கிகி உள்ளங்கையில் தந்து விட்டது. அதன் வளர்ச்சியும் பிரம்மாண்டமும் இன்று ஒவ்வொரு தனி மனிதன் மீதும் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு பிரம்மிக்கத் தக்க வளர்ச்சியும் வளமும் கொண்டதாய் திகழ்கின்றது. வெகு ஜன கருத்தை உருவாக்கவும் மக்கள் சமூகத்தின் ஆளுமையை வளர்பதிலும் கூட அது தன் ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது .ஆனால் இவ்வளவு ஆற்றல் மிகுந்த ஊடகம் (மீடியா) எவ்வாறு தவறாக பயன்படுத்தபடுகிறது. என்பதைப் பற்றி ஆராயும் முன்பு ஊடகம் (மீடியா) என்றல் என்ன? என்பதனைப்பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும்.
ஊடகம் (மீடியா) என்பதன் விளக்கம்:
ஊடகம் (மீடியா) என்றால் சென்றடையும் வழி என்பது பொருளாகும். அதாவது ஒரு தகவல் மற்றொருவருக்கு சேருவதற்கு பயன்படுத்துகின்ற சாதனங்களின் வழியாகத்தான் செய்திகள் பிறரிடம் சென்றடையும் அதனால்தான் ஊடுருவிச் செல்லக்கூடியவை என்ற அடிப்படையில் இது ஊடகம் எனபடுகிறது.
இந்த ஊடகம் ஒரு காலத்தில் தெருமுனைகளில் நடக்கும், தெருக்கூத்து நாடகம் ஆகியவைகளிலிருந்து தொடங்கி இன்று தினசரி, வார, மாத, இதழ்கள் தொலைக்காச்சி வானொலி, கணினி வலை என்று விரிந்து அபரிமிதமான தொழில் நுட்ப மாற்றங்களைப் பெற்று திகழ்கிறது.
ஊடகம் செய்து வருவது என்ன
இதன் மூலம் மக்களை உயர்த்தி விதவ வேண்டிய மீடியா இன்று அவர்களை அதல பாதாளத்தில் தள்ளிவிடுகின்ற காரியத்தை செய்து வருகின்றது. ஹிட்லாரின் அமைச்சர் கோயபல்ஸ் பாணியில் பொய் பிரசாரமும் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றிப்போடும் கலாச்சார சிரழிவுகலாயுமே வழங்கி இன்று மனிதனை மதிமயக்கும் போதை மருந்துகளாக மாற்றி வருகின்றன. அத்துடன் அந்த மீடியா அதிகமான இலாபம் சம்பாதிக்கும் தொழிலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இத்தகைய வேதனையான நிலையினால் மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. என்றாலும் கூட இன்று பெரும்பாலும் ஊடகம் (மீடியா) இஸ்லாத்திற்கு எதிரான பயங்கரமானதொரு கருத்துப் போரில் ஈடுபட்டிருப்பது முஸ்லிம் சமுதாயம் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தத்தை நமக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
முஸ்லிம்கள் எல்லாவற்றிலும் கீழ்நிலையில் இருப்பதை போன்றே ஊடகத்திலும் கீழ்நிலையில் இருப்பது யாவரும் அறிந்ததே அதற்கு காரணம் முஸ்லிம்களது கீழ்நிலைலான கல்வித்தரத்தின் எதிரொலியே.
இஸ்லாமிய சமுதாயத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய பத்திரிக்கையளர்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். இந்நிலை மாறவேண்டும்.குறைந்தது ஊருக்கு ஒருவராவது முஸ்லிம் பத்திரிக்கையாளர் இருக்கும் நிலையை இன்ஷா அல்லா நாம் உருவாக்க வேண்டும். இது ஒருபுறம் இருக்கட்டும். இன்று நம்மில் எத்தனை பேர் வாசகர் கடிதம் எழுதுகிறோம். நம் பங்களிப்பு அந்த அளவிலாவது இருக்க வேண்டாமா.?
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றி தவறான அவதூறான செய்திகள் பரப்பப்படும்போது ஆத்திரத்திற்கு ஆட்படாமல் அல்லாஹ்வின் கட்டளையான பொறுமையை மேற்கொண்டு மிக ஆழகான முறை யில் சர்ச்சைக்குரிய பிரச்சனையான ஜிஹாத், தீவிரவாதம், பார்த்த போன்ற வற்றில் இஸ்லாமியக் கண்ணோட்டம் குறித்து சம்மந்தப்பட்ட நாளிதழ், வார,மாத, இதழ் டிவி, இவர்களுக்கு அனுப்பிவைத்து தேளிவன முறையில் புரிய வைத்திட வேண்டும்.
ஒருவேளை வேன்றுமென்றே வன்மமான கலவர நிலையை உருவாக்கிட இதுபோல் வேலிடப்பட்டாலும் கூட ஆத்திரப்படாமல் பொறுமையை அணிகலனாகக் கொண்டு நமது சார்பிலேயே இஸ்லாத்தை எடுத்து விளக்கிடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இம் முயற்சி அவர்களது எண்ணத்தில் மண்ணைக் கவ்வச்செய்யும்.
இனியாவது முஸ்லிம் சமூகத்தை கல்வியில் உயர்த்தி அவர்களின் சிலரை ஊடகத்திற்கு வழங்குவதன் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு நாம் உதவிடுவோம். அதே வேலையில் நாமும் அவ்வப்போது தொடர்ந்து சர்ச்சைக் குரிய கருத்துகளுக்கு இஸ்லாமியத் தீர்வுதான் என்ன? என்ற வின எழுப்பி அதற்கான தீர்வுகளை ஊடகத்தின் வாயிலாக வேலிடச் செய்வதின் மூலம் ஊடகத்தையும் தூய்மை படுத்தி நமக்குச் சாதகமான சிந்தனைக்கு வழி வகுப்போம்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் அபு பைசல்

இஸ்லாமிய மதரசாக்கள், பாதை மாறிய பயணங்கள்!!!

இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் Aachi இல் கி.பி. 1857 வரை முஸ்லிம் சமுதாயக் கட்டமைப்பை வடிவமைக்கின்ற நிறுவனமாக மதரசாக்கள் திகழ்ந்தன. இறுதி இறை தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை இல் இறை இல்லமும் மதரசவும் ஒருங்கே அமையப் பெற்று முஸ்லிம்களின் ஈருலக வாழ்வியல் தொடர்பான அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டுதல் அங்கேதான் வழங்கப்பட்டன.

உலகம் அழிக்கப்படுகின்ற காலம் வரை வாழப் போகும் முஸ்லிம் சமுதாயம் கல்வியை எப்படி பெறவேண்டும் என்று முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்களோ, பின்னல் வந்த கலிப்பாக்கள் அந்தக் கல்வி வழிமுறை யை எப்பை உலகை வெள்ளக் கூடிய கல்வி முறையாக பட்டைத் தீட்டித் தந்தார்களோ அதே போன்று தான் இந்திய முஸ்லிம் சமூகம் கி.பி.1857 . வரை கல்வி பயன்று வந்தது.

1857 க்குப் பிறகு இந்தியாவில் ஏற்பட்ட ஆச்சி மாற்றம் தான் அத்துனையையும் அடியோடு மாற்றிப் போட்டது. அதில் முஸ்லிம்களின் மூல ஆதாரமான மதரசாக் கல்வி முறை சிக்கி சின்னாபின்னமாகிப் போனது.
ஆச்சி மாற்றத்திற்குப் பிறகு வெள்ளையர் ஆசியில் எவ்வித ஒருங்கிணைப்பும் உதவியும் இல்லாமல் நிர்பந்தமான சூழலில் தனி நபர்களால் உருவாக்கப்பட்ட தேவ்பந்த், அலிகர், நத்வ போன்ற புதிய மதரசாக்கள் ஒவ்வொன்றும் கருத்து மற்றும் பாடங்கள் ரீதியாக வேறுபட்ட வடிவமாக அமைந்திருந்தன. இதனால் இந்த நிருவனகளில் பயின்று வெளிவந்த பெரும்பான்மை மாணவர்களால் அன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் எந்த பிரச்சனைக்கும் வழிகாட்ட இயலாமல் போனது. கி.பி.1857 முதல் இந்தியா அடைந்த 1947 வரை உள்ள 90 ஆண்டுகள் தன இந்தியா முஸ்லிம் சமுதாயத்தின் வரலாற்றில் துன்பகள் நிறைந்த ஆண்டுகளாக பதிவு செய்யப் பட்டுள்ளன. தென்னிந்தியாவில் இதன் தாக்கம் அதிகம் இல்லை என்றாலும் கூட வடக்கே வாழ்ந்த முஸ்லிம்களின் துயரம் மிகுந்த மன வேதனைகளை தென்னக முஸ்லிம்களும் கொஞ்சம் உணரத்தான் செய்தார்கள். அந்த 90 ஆண்டு கால இந்தியா வரலாற்றை ஆழ்ந்து ஆய்வு செய்தால் மனிதனின் அடிப்படை உரிமையிலிருந்து கல்வி, கலாச்சாரம், சமூக, அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு என்று எல்லா வகைகளிலும் வஞ்சிக்கப் பட்ட மக்களாக முஸ்லிம்கள் மாற்றப்பட்டார்கள்.

தொடரும்...

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், ஷேக் அலாவுதீன், நூருல் அமீன்

இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுப்பேன் – தென் சூடான் ஜனாதிபதியின் மகன் பேட்டி

சூடான், ஆகஸ்ட் 19 : கடந்த ஜூலை 09ம் தேதி அன்று சூடானிலிருந்து பிரிந்து தனிநாடாக பிரகடனம் செய்யப்பட்ட தென் சூடானின் ஜனாதிபதி ஸல்வா கீரின் மகன்களுள் ஒருவர் கடந்த வெள்ளியன்று புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பெருந்திரளான மக்கள் ஜும்ஆவுக்காக குழுமியிருந்த தலைநகர் கார்ட்டூமின் பள்ளிவாயல் ஒன்றிலேயே இந்நிகழ்வு இடம்பெற்றதாக அந்நாட்டின் செய்திப் பத்திரிகையான அல் இன்திபாஹா செய்தி வெளியிட்டுள்ளது.“நான் சுவர்க்கத்தில் ஆசை வைக்கிறேன். அதனாலேயே புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். நான் மீண்டும் தென் சூடானுக்குச் சென்று அங்குள்ள மக்களை இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுப்பேன்” எனக் கூறினார் தென் சூடான் ஜனாதிபதியின் மகன் ஜோன் ஸல்வா.
புனித இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டதன் பின்னர் தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டுள்ள ஜோன் ஸல்வா, தனது தந்தையான ஸல்வா கீரையும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.
2011 ஜூவை 9ம் தேதி சூடானிலிருந்து பிரிந்த தென்சூடான் ஐ.நா.வினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 193ஆவது சுதந்திர நாடாக மாறியுள்ள அதேவேளை, ஆப்பிரிக்காவின் 54ஆவது நாடாகவும் மாறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனி, பிரான்சைத் தொடர்ந்து இத்தாலியும் தற்போது பர்தாவுக்குத் தடை!!!

ஆகஸ்ட்18: ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்சைத் தொடர்ந்து இத்தாலியும் தற்போது முஸ்லிம் பெண்கள் அணியக்கூடிய புர்காவைத் தடை செய்துள்ளது!
பெண்ணியவாதிகள் மத்தியில் இது வரவேற்கதக்க விஷயம் என்றாலும், இந்த விஷயத்தை, முஸ்லிம் மக்கள் மீது கலாசாரரீதியாகவும், மேற்கத்திய நாட்டு அரசுகள், கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறையின் ஒரு அங்கமாகவே பார்க்கவேண்டும்.
ஏற்கனவே டென்மார்க்கில் ஒரு பத்திரிகை முஸ்லிம்களின் போற்றுதலுக்குரிய முகமது நபி (ஸல்) அவர்களை கேலிச்சித்திரமா போட்டது. அதைதொடர்ந்து வளைகுடா நாடுகள் மொத்தமும், உலகத்துலேயே பாலுக்கு பேர்போன டென்மார்க்கிலிருந்து ஏற்றுமதியாகிற பொருட்கள தடை செய்ததன் மூலம் தங்கள் எதிர்ப்பை காட்டினர்.
இருந்தபோதும், மேற்கத்திய நாட்டு அரசாங்கங்கள், முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்தவில்லை.
இந்த இடத்தில் ஒருவிஷயத்தை சொல்லவிரும்புகிறேன். எனக்குதெரிந்த ஒரு டாக்டர், முப்பது வருடங்களுக்குமுன் அமெரிக்காவில் செட்டில் ஆனவர். அவர் ஒரு முஸ்லிம். அமெரிக்க குடிஉரிமை பெற்றவர். வருடம் ஒருமுறை இந்தியா வந்து செல்வார். இவ்வாறு அவர், ஒவ்வொரு முறையும் இந்தியாவிலிருந்து அமெரிக்கா திரும்பும்போதும், அமெரிக்க குடிஉரிமை அதிகாரிகளால் தேவையில்லாத கேள்விகள் கேட்கப்பட்டு, கிட்டத்தட்ட அவமான படுத்தபடுவாராம். எதிர்கேள்வி கேட்டால் தேவையில்லாத பிரச்சனை என்று அவர் அதை ஒவ்வொருமுறையும் சகித்துகொள்வாராம். அவரின் வீட்டு மற்றும் அலுவலக தொலைபேசிகள் ஒட்டு கேட்கபடுகிறதாம். அவரின் வங்கி கணக்கும் கண்காணிக்க படுதாம். இத்தனைக்கும் அவர், மதத்தின் மீது அவ்வளவு பற்றான நபரும் கூட கிடையாது. இவருக்கே இந்த நிலைஎன்றால், மதத்தின் மீது பற்றுள்ள அப்பாவி முஸ்லிம் மக்களின் கதி என்ன என்பதை யோசித்துபாருங்கள்.
எனவே இத்தடைக்கு எதிரா, முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து மதத்தவரும், மதமே இல்லைன்னு சொல்றவங்களும் குரல் கொடுக்கணும்! ஏனென்றால் இது ஒரு மதத்தை தழுவிய மக்களுக்கு எதிரான அடக்குமுறை. உலகில் அடக்குமுறை எந்தவடிவத்தில் இருந்தாலும் அதை எதிர்த்து குரல் எழுப்பபடவேண்டும்.
நமது நிருபர்

உமர் முக்தார்

பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்பதற்கான ஆதாரம்

ஆகஸ்ட்18: அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹ்...
பர்தாவைப் பற்றியும் அதன் அவசியம் மற்றும் அதன் அளவு பற்றியும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன.பெண்கள் அவர்களுடைய அழகை அந்நிய ஆண்களுக்கு மத்தியில் வெளிப்படுத்துவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.இந்நிலையில் முகத்தையும் முன்கைகளையும் மறைக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதில் உலமாக்களிடையே கருத்து வேறுபாடுள்ளது.

ஆனால் முகத்தையும் முன்கைகளையும் மறைக்கக்கூடாது என்று தமிழகத்தில் ஒரு கருத்து பரப்பப்பட்டு வருகின்றது. ஏனென்றால் இஸ்லாத்தில் இதற்கான ஆதாரமில்லை என்றும் இதன் மூலம் திருட்டு,விபச்சாரம்,நடிகைகள் தவறாக பயன்படுத்துதல்,தவறு செய்வதற்கு வாய்ப்பு தருகின்றது போன்ற கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.ஆனால் முகத்தையும் முன்கைகளையும் மறைக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் இருக்கின்றது.

அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா கூறுகின்றான்

நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்(33:53)

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக.அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன். மிக்க அன்புடையவன்.(33:59)

இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்.தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்…………….(வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்.(24:31)

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்.(33:33)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் கூறுகின்றார்கள்

இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!'' என்று இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஃஹாரி-1838

மேற்கண்ட ஹதீஸில் பெண்கள் முகத்திரையையும்கையுறைகளையும் பயன்படுத்தியுள்ளார்கள்.அதனாலேயே நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இஹ்ராமில் தடுத்துள்ளார்கள். ஆனால் இந்நேரங்களில் கூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மனைவியர்களும் மற்ற முஸ்லிமான பெண்களும் தங்களுடைய முகங்களை மறைத்துள்ளனர். அதற்கான ஆதாரம்

ஆயிஷா ரதியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள்.

நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுடன் இஹ்ராமில் இருந்தபோது,வாகனக்காரர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தனர்.அவர்கள் எங்களுக்கு நேராக வருகின்ற போது பெண்களில் ஒவ்வொருவரும் தம் முகமூடிகளைத் தலைகளிலிருந்து முகங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்வார்கள்.அவர்கள் எங்களை கடந்து சென்று விட்டால் முகங்களை திறந்துக் கொள்வோம்.- அபூ தாவூத்

இவ்விஷயத்தில் புரிந்துக்கொள்வதற்கு அதிகமான ஆதாரங்கள் உள்ளன.மேலும் இவ்விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எல்லா உலமாக்களும் குழப்பம் ஏற்படுமென்ற பயமிருக்கின்றபோது பெண் தனது முகத்தை மறைப்பது கட்டாயம் என்பதில் ஏகமனதாக முடிவெடுத்துள்ளனர்.சில நிர்பந்தமான நேரங்களில் முகத்தைத் திறந்து கொள்ளலாமென்ற விஷயத்திலும் ஒத்துப்போகின்றனர்.(உதாரணத்திற்காக சிகிச்சைக்காக மருத்துவரிடம் தனது முகத்தை திறந்துக் கொள்ளலாம்).

இந்தக் காலத்தில் குழப்பங்கள் அதிகமாக இருக்கின்றன.எங்கும் பரவலாக காணப்படுகின்றது.தீயவர்கள்தான் கடைவீதிகளிலும் மற்ற இடங்களிலும் திரிகின்றனர்.அழகை வெளிப்படுத்துவதில் முகமே முக்கிய பங்கு வகுக்கின்றது.


இந்த சூழ்நிலையில் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியில் செல்வதே சிறந்ததாகும்.

குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய ஊர்களில் திருமணமாகாத பெண்கள் இப்பொழுது முகத்தை முழுவதுமாக மறைத்துக்கொண்டே வெளியில் வருகின்றனர்.ஆனால் முகத்தை மூடக்கூடாது என்ற கருத்தின் மூலமாக முஸ்லிம் பெண்களின் கண்ணியம் சீர்குழைவதற்கான வாய்ப்புகள்இருக்கின்றன.ஆகையால் இதுபோன்ற விஷம கருத்துக்களுக்கு எதிராக நாம் நம்முடைய பெண்களை பாதுகாப்பது முக்கியமான கடமையாகும்.
இளம் பெண்கள் அந்நிய ஆண்களுக்கு மத்தியில் முகத்தை வெளியில் காட்டக்கூடாது என்பதற்கான ஆதாரம் கீழே உள்ள இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் (எந்த) சில சந்தர்பங்களில் இளம் பெண்கள் அந்நிய ஆண்களுக்கு மத்தியில் முகத்தை வெளிக்காட்டலாம் என்பதற்கான ஆதாரமும் கீழே உள்ள இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு:
ரிப்போட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)