முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

திருச்சி ஏர்போர்ட்டில் தலை விரித்தாடும் லஞ்ச ஊழல்.


திருச்சி, மே 27 : இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைவது போல் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது லஞ்சமும் இந்தியர்களின் ரத்தமும்! நியாயமான அரசாங்க சேவைகளைப் பெறுவதற்குக் கூட இன்று லஞ்சம் கொடுக்காமல் எதையும் நாம் சாதித்துவிட முடியாது என்ற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுக்கப்பட்டது எவ்வளவு லஞ்சம் என்ற வகையில்தான் நாம் அடுத்தவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது. படங்களில் ஊழல் செய்பவனை கதாநாயகன் தண்டிக்கும்போது முதல் ஆளாக கைதட்டும் நாம்தான், நமக்கும் லஞ்சம் வாங்கும் சந்தர்பம் வரும்போது கை தட்ட நீட்டிய கையை உள்ளே இழுப்பதில்லை என்பதே உண்மை!

லஞ்சம் வாங்கி வாழ்பவனே பிழைக்கத் தெரிந்தவன் என்ற இந்திய மனப்பான்மைக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே மாறிக்கொண்டு இருக்கிறோம்! என் வேலை எனக்கு சீக்கிரம் முடிய வேண்டும்! அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எவ்வளவு லஞ்சம் வேண்டுமானாலும் கொடுப்பேன் என்றுதான் ஒவ்வொருவரும் இந்திய நேர்மையில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவிக் கொண்டிருக்கிறோம்! என்றாவது ஒட்டுமொத்தமாக தலையில் விழும்போது காப்பாற்ற யாருமே இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம்! சரி.. இந்த கதையெல்லாம் வேணாம் தலைப்புக்கு வாங்கன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான்... சமீபத்தில் சிங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்தேன், என்னைப்போல தென் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் திருச்சி விமான நிலையம்தான் முதல் தேர்வு!

அவ்வாறே நானும் திருச்சிக்கு சென்றேன். விமான நிலையம் புது கட்டிடத்துக்கு மாறி வெகு நாட்கள் ஆகிவிட்டது, ஆனால் அங்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மன அழுக்கு மட்டும் இன்னும் அப்படியே உள்ளது. விமானத்தை விட்டு இறங்கி குடிநுழைவுச் சோதனைக்கு சென்றதில் இருந்தே நமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கிறது. அவைகளை மொத்தமாகச் சொல்லாமல் ஒவ்வொரு சம்பவமாகத் தொகுத்துச் சொல்கிறேன், நீளம் கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனாலும் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டிய சூழ்நிலைதான் இப்போது அங்கே நிலவுகிறது! ஏற்கனவே ஒருமுறை ABT ட்ராவல்ஸின் அராஜகம்! என்ற பதிவிற்கு கிடைத்த உங்கள் ஆதரவின் உந்துதலால் இதையும் எழுதுகிறேன். தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ இனி அங்கு செல்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவாது இருக்கட்டும்!


சம்பவம் ஒன்று.
விமானத்தை விட்டு இறங்கி ஒரு பேருந்தில் கொண்டு போய் குடிநுழைவு வாசலில் ( Immigration Check point ) இறக்கிவிட்டனர். என்னதான் அடிக்கடி வந்துபோனாலும் விமானத்தில் ஏறியதுமுதல் சொந்த பந்தங்களை காணும் ஆவல்தான் வீடு போய் அவர்களை பார்க்கும்வரை இருக்கும்! ஒவ்வொருவருமே அந்த ஆசைகளை சுமந்துதான் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். ஒரு விமானம் முழுவதும் வந்த பயணிகளுக்கு மூன்றே மூன்று அதிகாரிகள்தான்! அதுகூட மிட்நைட் என்பதால் அதிகாரிகள் குறைவு என்று எடுத்துக்கொள்ளலாம்! ஆனால் அதன்பிறகு நடந்ததுதான் கொடுமை!

நாங்கள் வரிசையில் நிற்கும்போதே ஒருவர் உள்ளே இருந்து வந்து ஒரு பெயரை சொல்லி அழைத்துக்கொண்டே வந்தார், உடனே அவர் பெயர் சொல்லி அழைத்த நபர் தன் மனைவியோடு வரிசையின் கடைசியில் இருந்து வந்து எந்தவித கூச்சமும் இல்லாமல் வாயெல்லாம் பல்லாக வரிசையில் நிற்பவர்களை கடந்து அந்த ஊழியரை பின்தொடந்து சென்றார்! அதிகாரிகளும் அவர்களுக்கு முதலில் செக் செய்து அனுப்புகின்றனர்! அந்த ஒருவர் மட்டும் அல்ல அதன் பிறகும் இதேபோல இன்னும் இரண்டுபேரை அந்த ஊழியர் அழைத்துக்கொண்டு சென்றார்! எந்த நாட்டு இன்டர் நேசனல் ஏர்போர்ட்டிலும் காணக்கிடைக்காத காட்சி அது! அருகில் நின்று கொண்டிருந்தவர் சொன்னார், அவர்கள் அந்த விமான நிலையத்தில் வேலை பார்க்கும் ஏதாவது ஒரு அதிகாரிக்கு உறவாக இருக்கும் என்று! அப்படியே உறவு இல்லையென்றாலும் இதேபோல் செல்ல வாய்ப்புள்ளது என்று அவர் சொன்னதுதான் அதிர்ச்சியின் உச்சம்!

அதாவது, நம்மை வரவேற்க வந்தவர்கள் இதற்கென சிலரை பிடித்து தள்ளுவதை தள்ளி நாம் பெயரை அவர்களிடம் கொடுத்துவிட்டால் போதும், அவர்களும் கடமை தவறாமல் நம்மை வரிசையில் நிற்கவிடாமல் உறவு என்று சொல்லி அழைத்துவிடுவார்கள்! இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டும், சிங்கபூர் நான் பிழைக்க வந்த நாடுதான், ஆனால் நிரந்தரவாசியாக இருந்தால்கூட போதும் எந்த நாட்டிற்கு போனாலும் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் குடிநுழைவுக்கு எந்த வரிசையிலும் நிற்க வேண்டாம், எனது இந்தியன் பாஸ்போர்ட்டை வைத்து ஆட்டோ ஸ்கேனிங்கில் வந்து விடலாம். ஆனால் சொந்த நாட்டில் சொந்த நாட்டு பாஸ்போர்ட்டை வைத்துகொண்டு இந்த அவலங்களை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது!

சம்பவம் இரண்டு.

ஒருவழியாக இமிக்ரேசன் முடிந்து வந்தால் அடுத்து லக்கேஜ் கலெக்சன். இந்த முறை எனக்கு ஒரே ஒரு செக் இன் லக்கேஜ் மட்டுமே, இங்கு ஐ.டி. ஷோவில் வாங்கிய ஒரு LED T.V . இங்கு அதை செக் இன் செய்து கன்வேயரில் அனுப்புவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஏனென்றால், இதுபோல எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஐட்டங்களுக்கு தனி கன்வேயர்! ஆனால் திருச்சி கன்வேயர் பற்றி சொல்லவே வேணாம், புது விமான நிலையத்தில் இப்படி ஒரு டிசைனிங்?! அந்த கன்வேயரில் வரும் உங்கள் லக்கேஜ் சேதப்படாமல் வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்! சரி.. அதைப்பற்றி தனியாகவே எழுதலாம் அவ்வளவு இருக்கு! பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த காரணங்களால் டிவி போன்ற ஹேண்டில் கேர் ஐட்டங்களை கன்வேயரில் அனுப்பாமல் தனியாக சைடில் உள்ள வாசல் வழியாக எடுத்து வைப்பார்கள், எனது டிவி யையும் எடுத்து வைப்பார்கள் என்று காத்துகொன்டிருந்தேன், ஆனால் எடுத்துவைத்தபாட்டைக் காணும்! ஆனால் மற்றவர்கள் ஒவ்வொருவராக எடுத்துகொண்டு சென்றார்கள். சரி.. அருகில் சென்று கேட்கலாம் என்று அங்கு சென்றேன், நான் போனதுமே அங்கு உள்ள ஒரு ஊழியர் வந்து " உங்களது என்ன பொருள் சார்?" என்றார், நானும் டிவி என்று மாடலையும் சொன்னேன், கேட்டுக்கொண்டு வேகமாக உள்ளே சென்றார், நானும் பரவாயில்லை நல்ல சர்வீஸ் என்று நினைத்தேன்! ஆனால் கொஞ்ச நேரத்திலே என் நினைப்பில் அவர் மண் அள்ளிப்போட்டார்! வேகமாக வெளியில் வந்து " இருக்கு சார், கொஞ்சம் கவனிங்க எடுத்துட்டு வர்றேன்" என்றார்!

எனக்கு முதலில் புரியவில்லை, பின்னர்தான் கவனித்தேன் அருகில் இருப்பவர்கள் நூறு ரூபாயை அவர் கைகளில் திணித்துவிட்டு தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டனர்! நான் அவரிடம் கேட்டேன் " ஏன் சார்..பணம் கொடுக்கலைனா நம்ம திங்க்ஸ எடுக்க முடியாதா? எடுத்து வைக்கிறதுதானே அவங்க வேலை? என்றேன், அவரும் " சார்.. நாம சண்டை போடலாம்.. முதலில் நமக்கு நேரம் இல்லை. இரண்டாவது உங்க டிவி 40,000 ரூபாய்னு வைங்க, இந்த நூறு ரூபாய்க்கு பார்த்தா, உள்ளேயே வச்சு சம்திங் டேமேஜ் பண்ணிட்டு கன்வேயர்ல டேமேஜ் ஆயிருச்சுன்னு சொல்வாங்க" என்றார்! அதிர்சியுடனே அந்த நாய்களுக்கு எலும்புத்துண்டை வீசிவிட்டு டிவியை எடுத்துகொண்டு வந்தேன்! இதையும் மீறி நகரும்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த கான்ஸ்டபிள் " தம்பி.. கொடுக்கவேண்டியதை கொடுத்திட்டிங்களா? என்றார்! இத்தனையும் கன்வேயர் ரூமுக்குள் இருந்த ஒரு கஸ்டம் ஆபிசர் நன்றாக கண்காணித்துக் கொண்டிருந்தார்! யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று! கூட்டுக்கொள்ளை!

சம்பவம் மூன்று.

டிவியை எடுத்துகொண்டு அடுத்து சுங்கச் சோதனை! கண்டிப்பாக டிவி போன்ற சாதனங்களுக்கு சுங்கவரி ( TAX ) உண்டு என்று தெரியும். ஏற்கனவே ஒருமுறை கட்டி இருப்பதால் அதற்கு தயாராகவே வந்தேன். தனியாக இதற்கென இரண்டு அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் சென்று எனது டிவி மாடல் மற்றும் விலைகளை சரி பார்த்து 3750 ரூபாய் கட்ட சொன்னார்கள்! எனக்கும் சந்தோசமே, ஏனென்றால் இதற்குப் பில் கொடுத்துவிடுவார்கள்! ஒரு பைசா கூட அந்த அதிகாரிகள் எடுக்க முடியாது! சரி என்று கட்டப் போகும்போது அதில் இருந்த ஒரு அதிகாரி எனக்கு பின்னால் வந்து மெதுவாக " தம்பி, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, அந்தப்பக்கம் சைட்ல சோபால உட்காந்திருக்கதுதான் எங்க சீனியர் ஆபிசர்! அவர் இப்ப போயிருவார், அவர் போனதும் 2000 மட்டும் கொடுத்திட்டு உங்க டிவிய எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருங்க" என்றார்!

மேலும் " நேரம் காலம் தெரியாம இங்க வந்து உக்காந்துகிட்டு எங்க பொழப்புல மண்ண போடறான்" என்று அந்த சீனியர் ஆபிசரையும் திட்டிக்கொண்டே சென்றார்! இந்தியன் படத்துல நிழல்கள் ரவிய கமல் கொல்லப்போகும் போது அவருக்கே லஞ்சம் கொடுக்கிறேன்னு நிழல்கள் ரவி சொல்லும்போது கமல் ஆயாசமா கன்னத்துல கைய வச்சிக்கிட்டு சொல்லுவாரே " உன்னை கொல்றதுல தப்பே இல்லடான்னு" அதுதாங்க அப்ப மனசுல வந்துச்சு! சரி நீ ஆணியே புடுங்க வேண்டாம்னு முழு தொகையும் கட்டிட்டு டிவியை எடுத்துக்கிட்டு வெளில வந்துட்டேன்!

சம்பவம் நான்கு.

எல்லாத் தொல்லைகளும் முடிந்து அப்பாடான்னு வெளில வந்து லக்கேஜ் எல்லாவற்றையும் காரில் ஏற்றிவிட்டு திரும்பினா, நான் கொண்டுவந்த ட்ராலிய வாங்குறதுக்காக ஒரு ஊழியர் தயாராக நின்றார்! பரவாயில்ல... இந்த சர்விசாவது நல்லா இருக்கு என்று நினைப்பதற்குள் அதற்கும் ஒரு சம்மட்டி அடி! ட்ராலியை எடுத்துகொண்டு தலைய சொரிந்தார் அந்த ஊழியர், " என்னப்பா என்ன வேணும்?" என்றேன், "பார்த்து கவனிங்க சார், ட்ராலிய தள்ளிட்டு உள்ள போகணும்" என்றார்! நானும் விடாமல் " போங்க.. அதுக்குதானே உங்களுக்கு சம்பளம் கொடுத்து வச்சிருக்காங்க?" என்றேன்,

" என்ன சார் நீங்க? ஒவ்வொருத்த ரெண்டு வெள்ளி, பத்து வெள்ளின்னு கொடுத்துட்டுப் போறாங்க, இதுக்குப் போய் கணக்கு பார்க்குறீங்க?" என்றார் சாதரணமாக! எனக்கு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவரிடம் சொன்னேன் " அண்ணே. இன்னும் சிங்கபூர்ல தினக்கூலிக்கு வர்ற நம்ம ஆளுங்களுக்கு ஒரு நாள் சம்பளமே 18 வெள்ளிதான்! இங்க ட்ராலி தள்ளியே அவ்வளவு சம்பாதிக்க முடியும்னா எனக்கும் ஒரு வேலை இங்க வாங்கித் தாங்க, நானும் வந்து ட்ராலி தள்ளுகிறேன்" என்றேன்! அந்த முனகியபடியே திரும்பிச் சென்றார்! கண்டிப்பாக கெட்ட வார்த்தையில் திட்டியபடியே சென்றிருப்பார்!

சம்பவம் ஐந்து.

எல்லாவற்றையும் கடந்து வீட்டுக்குச் செல்லும் ஆர்வத்தோடு விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தால், கொஞ்ச தூரத்தில் போலிஸ் செக் போஸ்ட்! அதை தொடும் முன்னரே ஒரு போலிஸ் வந்து நிறுத்தச் சொல்லி கை காட்டினார், நிறுத்தியவுடன் டிரைவர் சீட் பக்கம் குனிந்தார் அவர், என்னவோ என்று கண்ணாடியை இறக்கினால் குப்பென்று அடித்தது சரக்கு வாடை! டிரைவர் சீட்டில் இருந்த என் மாமாவிடம் " என்ன புதுசா? கவனிச்சிகிட்டு போய்க்கிட்டே இருங்க, ஐயா உள்ளதான் இருக்காரு" என்றார்!

உடனே என் மாமாவும் ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டவும் " ஓக்கே ரைட்..போய்க்கிட்டே இருங்க" என்று கை காட்டி அனுப்பி வைத்தார்! நான் கொஞ்சம் எட்டிப்பார்த்தேன், அவர் சொன்ன ஐயா, நன்றாக தூங்கியபடி டியூட்டி பார்த்துக் கொண்டிருந்தார்! மாமாவிடம் கேட்டேன் " நாம பணம் கொடுக்கலைனா என்ன பண்ணுவாங்க?" என்று, "என்ன பண்ணுவாங்க? சந்தேகமா இருக்கு செக் பண்ணனும்னு லேட் பண்ணுவாங்க, இன்னும் கொஞ்சம் மோசமான ஆளுங்களா இருந்தா, கஞ்சா பாக்கெட்ட அவங்களே போட்டு நம்ம கார்ல இருந்துதான் எடுத்ததா வழக்கு போடுவாங்க" என்றார்! அரசாங்க அதிகாரிகளைப் பற்றிய மக்களின் இந்தப் பயம்தான் அவர்களை மேலும் லஞ்சமயமாக வாழவைத்து கொண்டிருக்கிறது!

சம்பவம் ஆறு.

விடுமுறையை சந்தோசமாக கழித்துவிட்டு திரும்ப சிங்கை வர அதே திருச்சி விமான நிலையம்! சரி.. எந்தப் பிரச்னையும் இருக்காது, ஏனென்றால் என்னிடம் செக் இன் லக்கேஜ் இல்லை! ஒரு ஹேன்ட் லக்கேஜ் மற்றும் லேப் டாப் மட்டுமே என்று நினைத்துதான் வந்தேன். ஆனால் அப்போதும் லஞ்சம் தன் கோரப் பற்களை காட்டியபடி என்னை வரவேற்றது! இந்தமுறையும் இமிக்ரேசனில் நீண்ட வரிசை! இன்னும் கொடுமை என்னவென்றால், மூன்று விமானங்கள் குறைந்த நேர இடைவெளியில் கிளம்பும், மூன்று விமான பயணிகளையும் கையாள அதே மூன்று அதிகாரிகள் மட்டுமே! நான் சிங்கைக்கு வரும் பயண நேரத்தைவிட விமான நிலையத்தில் செலவழிக்கும் நேரம் அதிகம்! ஒருவழியாக இமிக்ரேசன் முடிந்து உள்ளே போகும் முன் ஒரு கஸ்டம் ஆபிசரும் அவருக்கு துணையாக ஒரு போலிசும் இருந்து பாஸ்போர்ட்டை செக் செய்து அனுப்புவார்கள்.

என் பாஸ்போர்ட்டை வாங்கி புரட்டிப் பார்த்த அந்த போலிஸ் " என்ன தம்பி.அடிக்கடி வந்து போவீங்க போல? உங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டியதே இல்லை, கவனிச்சிக்கிட்டு போய்கிட்டே இருங்க" என்றார்! அந்த நேரம் பார்த்து டைகர் ஏர்வேசின் செக்கிங் எஜன்ட் வர, நான் நழுவி எஸ்கலேட்டரில் ஏற ஆரம்பித்தேன், அவரும் விட வில்லை என் பின்னாடியே வந்துவிட்டார்! " தம்பி..கவனிச்சிட்டு போங்க" என்று! திரும்பவும் மேலே ஒரு பெண் என் போர்டிங் பாஸை செக் செய்து ஓக்கே சொல்லவும் உடனே உள்ளே போய் விட்டேன்! உள்ளே போய் எல்லா ஃபார்மாலிடீஸ் முடிந்தபின் திரும்பிப் பார்த்தேன், அப்பவும் அவர் இடுப்பில் கை வைத்து என்னை முறைத்தபடியே நின்றார்! என்னைப்போல அடிக்கடி வந்து செல்பவர்களையே இவர்கள் இந்தப் பாடு படுத்தினால், அதிகம் படிக்காமல் முதல் முறை வெளிநாடு செல்பவர்களை இவர்கள் என்ன பாடு படுத்துவார்கள்? பணம் கொடுத்தால்தான் பயணமே சாத்தியம் என்று சொன்னாலும் சொல்வார்கள்! இவர்களுக்கு ஏன் இந்தப் பிழைப்பு? இந்த நீண்ட கட்டுரையை படித்து முடிக்கும் உங்களுக்கே இவ்வளவு ஆயாசமாக இருக்கும்போது, இதை ஒவ்வொரு பயணத்திலும் அனுபவிக்கும் பயணிகளின் நிலையை நினைத்துப்பாருங்கள்! பல வெளிநாட்டினர் வந்துபோகும் இது போன்ற இடங்களில் நம் மானத்தை நேரடியாக விமானத்தில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர் இந்த ஊழல் அதிகாரிகள்! இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் லஞ்சத்தை தவிர்த்து வாழவே முடியாத சூழ்நிலையில் கொண்டுவந்து தள்ளிவிட்டது இந்த அதிகார வர்க்கம்! லஞ்சம் என்றால் என்னவென்றே தெரியக்கூடாத குழந்தைகளை லஞ்சம் கொடுத்துதான் பள்ளியில் சேர்க்கிறோம்! லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தவறு என்று போதிக்க வேண்டிய ஆசிரியரே லஞ்சம் கொடுத்துதான் அந்த வேலைக்கு வருகிறார்! லஞ்சம் வாங்குவதை கண்காணித்து கண்டிக்க வேண்டிய காவல்துறை லஞ்சத்தில் திளைத்து கொண்டிருக்கிறது! சட்டங்களை கடுமையாக்க வேண்டிய மந்திரிகள் லஞ்சத்தை கமிஷன் என்று பெயர் மாற்றி வைத்து வாங்குகின்றனர்! ஆக மொத்தம் இந்தியாவிற்கு தேசிய வியாதி என்று ஒன்றை தேர்வு செய்தால் அதற்கு சரியான தேர்வு இந்த லஞ்சம்!
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

சேக் முஹைதீன்

மனையியல் பாடத்தில் மாநில அளவில் 2 வது இடம் பிடித்த முஸ்லிம் மாணவி.

காயல்பட்டினம், மே 22 : நடந்து முடிந்த +2 தேர்வில் மனையியல் பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ள மாணவி எஃப்.செய்யித் அலீ ஃபாத்திமா அவர்கள் தெரிவித்ததாவது. மாநிலத்தில் இரண்டாமிடம் என்ற இந்த சாதனை எனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்துள்ளது... இதற்காக முதலில் என்னைப் படைத்து பராமரிக்கும் இறைவனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
தொகுப்பு
AKL .அப்துல் ரஹ்மான்.

+2 தேர்வு முடிவுகள் முதல் 3 இடத்தை பிடித்த நாமக்கல் மாவட்ட மாணவ, மாணவிகள்


சென்னை, மே 22 : +2 தேர்வின் முடிவுகள்: தமிழகத்தில் +2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2 ந்தேதி தொடங்கி 25 ந்தாம் தேதிவரை நடைபெற்றது. இதில் 3 .38, லட்சம் மாணவிகளும் தேர்வு எழுதினர். +2 தெருவுக்கான முடிவுகள் இன்று காலை 11 மணி அளவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மேலும் இதில் மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்களில் 6 ,55 ,594 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 2518 மாணவர்கள் 200 / 200 மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் முதல் 3 இடங்களை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். முதல் இடத்தை சுஷ்மிதா (1189) மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை கார்த்திகா, அசோக்குமார், மற்றும் மணிகண்டன் ஆகிய மூவரும் (1188) மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மூன்றாவது இடத்தை மகேஸ்வரி, பிரபா சங்கரி என்று இரண்டு மாணவிகளும் (1187) மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மவுத்து அறிவிப்பு: "ரபி அஹமது"

முத்துப்பேட்டை, மே 21 : முத்துப்பேட்டை S.P.K.M.தோட்டவிளாகம் M.M.தாவூது (சென்னை)அவர்களின் மகனாரும், H.M.அன்வர் பாட்சா,H.M.ஹாஜா முஹைதீன், H.M.பஷீர் அஹமது(பிரிலியண்ட் ஸ்கூல்),H.M.சாதிக் அலி, H.M.ஜாகிர் ஹுசைன் இவர்களின் மருமகனும், A.P.N.முஹம்மது இலியாஸ் அவர்களின்மச்சானும், D.ஹலில் ரஹ்மான், D.அப்துல் சுக்கூர் இவர்களின் சகோதருமாகிய, D.ரபீ அஹமது அவர்கள் நேற்று (20.05.2012)அன்று காலை 11.00 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள் இன்னா லில்லாஹிவஇன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா இன்று (21.05.2012) காலை9.00 மணியளவில் முஹைதீன் பள்ளி மையவாடியில்நல்லடக்கம் செய்யப்பட்டது. அறிவிப்பவர்M.M.தாவூது (சென்னை)நமது நிருபர்KM . காதர் கனி (பாடகர்)

பெண்களின் மானத்தை விலை பேசும் Camera & face book தற்காப்பு.!



உலகம், மே 21 : நீங்கள் நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் (அல்-குர்ஆன் 5:02) இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் எம்மை தினம் தினம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் அதேவேளை மறுபுறம் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியும் வருகிறது. எதை எந்த நோக்கதிற்காக பயன்படுத்தினால் மனிதகுலத்திற்கு நன்மை கிட்டுமோ அதை அப்படி பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்றைய உலகின் யதார்த்தம் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது.


தன் சக மனிதனுக்கு கேடுவிளைப்பதையே தனது தினசரி தொழிலாக நினைத்து செயல்பட தொடங்கி விட்டான் மனிதன். பணத்திற்காக எதையும் செய்ய துணிந்து விட்டான். அந்த வகையில் பெரும்பான்மை மக்களால் கவனிக்கபடாத உடை கழட்டும் ஒரு வக்கிர சைக்கோ கூட்டத்தை தோலுரிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

கையடக்க கமராக்கள், மொபைல் வீடியோ கமராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய கமராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

இதை எத்தனை பேர் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி! மொபைல் கமராக்கள், கையடக்க வீடியோ கமராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அதை தடுக்கும்- தவிர்க்கும் வழிமுறையையும் இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.
பொது இடங்களில் கமராக்கள்:
பொது இடங்களில் – குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்கட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாசாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். கமராவுடன் உள்ள தொலைபேசிகளை கையில் வைத்துக் கொண்டு பொது இடங்களில் நடமாடும் பெண்களை அவர்கள் அறியாவண்ணம் சமயம் பார்த்து ஆபாசமாகப் படம் பிடிக்கும் ஈன மனம் படைத்தோர் இன்றிய உலகில் நம்மத்தியில் பெரும் அளவில் பெரு கிவிட்டனர்.
கல்லூரி விடுதிகளில்:

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில் – மற்றும் மலசல கூடங்கள், குளியலறைகளில் கமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அண்மையில் இந்தியாவில் ஒரு கல்லூரி விடுதியிலிருந்து 09 கமராக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Face Book & Photoshop: Face Book- TWITTER- ORKUT போன்ற தளங்களில் பல பெண்கள் தங்கள் புகைப்படத்தை UPLOADசெய்து இருகிறார்கள். சில மோசடிக்காரர்கள் அதை தேடி டவுன்லோட் செய்து கொண்டு PHOTOSHOP SOFTWARE துணைகொண்டு அந்த பெண்களின் முகங்களை நிர்வாண போட்டோவோடு இணைத்து, அதை இன்டர்நெட்டில் விற்று பணம் சம்பாதிக்கின்றனர்.

மேலும் பாடசாலை மாணவிகளின் போட்டோக்களை பாடசாலைகளில் வெளிவரும் வருடாந்த இதழ், மற்றும் ஏனைய வெளியீடுகளில் தனியாகவும் குழுவாகவும் உள்ள போட்டோக்களை வெளியிடுகின்றனர். அந்தக் குழு போட்டோவில் உள்ள பெண் பிள்ளைகளின் முகங்களை வெட்டியெடுத்து வேறு ஒரு ஆடவனுடன் அல்லது நிர்வாண போட்டோவுடன் இணைத்து வலையமைப்புக்களிலும் பேஸ் புக்கிலும் பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளை பேணிப் பாதுகாப்பதில் முழு மூச்சுடன் பாடுபட்டு வருகின்ற அதேவேளை, அல்லாஹ்வையும் றசூலையும் ஈமான் கொண்ட எந்தவொரு பெற்றோரும் இதனை அனுசரிக்கவுமாட்டார்கள். இருந்த போதிலும் பாடசாலைகளில் இவ்வாறு புகைப்படம் வெளியிட்டு மாணவிகளின் எதிர்காலத்திற்கு பங்கம் விளைவிக்கும் இவ்விடயத்தை தடை செய்வதில் உரியவர்கள் சிந்தித்து செயற்படுவதுடன் பெற்றோர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

நம்மையறியாமலேயே நம்மை போட்டோ, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாசாரம் தற்போது மிக சாதாரணமாக எமது நாட்டிலும் பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க பெண்களை குறி வைத்தே நடந்து வருகிறது. அப்பாவியான பல பெண்கள் இதற்கு பலியாகி வருகிறார்கள்.

பொது மலசல கூடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள்:

பொது மலசல கூடங்களுக்கு செல்வோர், பொது குளியலறைகளை பயன்படுத்துதோர் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லொட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், மலசல கூடம், குளியலறைகளிலும் கமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா? என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் கமராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம். ஆகவே கவனம் தேவை.

நெடுந்தூர பயணம் செய்யும் போது பெரும்பாலான மக்கள் பஸ் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வாறு பஸ் பயணம் செய்யும் போது அந்த பஸ்கள் வெளி ஊர்களிலுள்ள உணவகங்களில் நிறுத்தப்படுகின்றன. அப்படி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் அத்தகைய உணவங்களில் உள்ள மலசல கூடங்களைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

அப்படிப்பட்ட உணவகங்களில் உள்ள சில மலசல கூடங்களில் வீடியோ கமராக்களை மறைத்து வைத்து விடுகின்றனர். அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் கமராக்கள் மூலமாக அவர்களை ஆபாசமாகப் படம் பிடித்து அதனை உடனே குறுந்தகடுக்கு மாற்றி விற்று விடுகின்றனர். மேலும் இவற்றை சீடியாக மாற்றுவதோடு நின்று விடாமல் அதை இணையம் வரை கொண்டு சென்றும் பணம் சம்பாதிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, ஹோட்டலில் திருமணம் செய்து கொள்பவர்கள் அங்கே தங்கி விட்டும் வருகின்றனர். இவர்களை குறி வைத்தும் ஹோட்டல் அறைகளில் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஹோட்டலில் தங்கும்போது அது நல்ல நம்பகமான தங்கும் விடுதியா என்று முடிந்தவரை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்தக் கொடுஞ்செயலை எதிர்த்து நாம் போராடுகிறோமோ இல்லையோ குறைந்தபட்சம் நாமோ நமது குடும்பத்துப் பெண்களோ இது போல பொது இடங்களில் உள்ள மலசல கூடங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து விடலாம் அல்லவா?.

மருத்துவமனைகளிலும் கவனம் தேவை!

மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தங்களால் முடியுமான வரை பெண் வைத்தியர்களை நாடுவது சிறந்ததாகும். அல்லது தக்க துணையுடன் செல்ல வேண்டும். மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும் ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக விலக்கும் போதும் கவனமாக இருங்கள். கமராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் பரிசோதனைக்காக என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். சில மருத்துவர்கள் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து- வீடியோவாகவும் புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தும் வருகின்றனர். ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது சிறந்ததாகும்
.
புடவைக் கடைகளில் TRAIL ROOM கேமரா!

நாம் துணிக் கடைகளுக்கு செல்வது இயல்பானது. அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக் கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கமராக்கள் தங்களை கண்காணிக்கப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா? துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கமராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். கமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

TRAIL ROOM CAMERAக்களை கண்டறியும் முறை:

TRAIL ROOM CAMERAல் இருந்து கொண்டு செல்போன் மூலமாக யாருகாகவாவது call செய்து பார்க்க வேண்டும். உங்கள் அழைப்பு- நீங்கள் அழைத்தவரை சென்றடைந்தால் அந்த அறையில் ரகசிய கமராக்கள் இல்லை. ஒருவேளை உங்கள் அழைப்பு நீங்கள் திரும்ப திரும்ப அழைத்தும் call செல்லவில்லை என்றால் அங்கு ரகசிய கமரா இருப்பது உறுதி என்று பொறியியலாளர்கள் கூறுகிறார்கள்.

TRAIL ROOM; கண்ணாடி

இவைகளைகப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை. இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும். இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றித்தான் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம். ஆகவே இவைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

உங்கள் விரல் நுனியை கொண்டு கண்ணாடியை தொடும்போது சிறு இடைவெளி தெரிந்தால் அது சாதாரண கண்ணாடி, இடைவேளை இல்லாமல் தெரிந்தால் அது உங்களை வேவுபார்க்கும் கண்ணாடி என்று அறிந்து கொள்ளலாம்.

ஹிஜாப் அணியும் பெண்களுக்கு பாதுகாப்பு!

இஸ்லாம் காட்டித்தந்த ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்கள் இந்த பிரச்சினையில் இருந்து இயல்பாகவே பாதுகாக்கபடுவார்கள்- இன்ஷா அல்லாஹ். இருப்பினும் இவை பற்றிய விழிப்புணர்வு முழுமையாக தேவை. ஏனெனில் ஹோட்டல், தங்கும் விடுதியில் இருக்கும் தூங்கும் அறை, கழிவறை போன்ற இடங்களில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் நாம் சந்தேகபட முடியாது, எல்லா இடங்களையும் இது நம்பகமானது என்று நம்பவும் முடியாது. ஆதலால் முடிந்தவரை நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய இறுதி ஹஜ்ஜின் போது; தனது நன்நெறித் தோழர்களுக்கு ஆற்றிய உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்த நாளும் எப்படி புனிதமானதோ, அவ்வாறே ஒரு முஸ்லிமின் உயிரும் உடமையும் மானமும் மரியாதையும் புனிதமானவை என்றார்கள். (புகாரி 67)

ஆகையினால் நவீன தொழில் நுட்பத்தின் பாரதூரமான விளைவுகளில் இருந்து நம்மையும் பாதுகாத்து மற்றோரையும் பாதுகாப்பதற்கு விழிப்புடன் செயற்படுவோம்.
நன்றி - எஸ்.ஐ. அஸ்மீர் ஷர்க்கி)

மவுத்து அறிவிப்பு: "K.S அஹமது நாச்சியார்"

முத்துப்பேட்டை, மே 19 : புதுத்தெரு மர்ஹும் L.முகமது அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹும் K.S ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும், K.S.H சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா), K.S.H செய்து கனி (ஹாஜி), மர்ஹும் K.S.H நூருல் அமீன் ஆகியோரின் தாயருமாகிய ஹாஜிமா K.S அஹமது நாச்சியார் அவர்கள் நேற்று இரவு 7 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இல்லைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் குத்பா பள்ளி கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்
K.S.H சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)

நமது நிருபர்
கம். காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டை:ரேசன் கடையில் எடைகுரையை கண்டித்து பொது மக்கள் முற்றுகை.!!



முத்துப்பேட்டை, மே 19 : முத்துப்பேட்டை ஆசாத் நகரில் ஒரு ரேசன் கடை உள்ளது. சுமார் 1000 குடும்ப அட்டையை உள்ளடக்கிய இந்த ரேசன் கடையில் தினமும் கடை திறந்த பிறகு மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும். இப்படிப் பட்ட சூழ்நிலையில் ரேசன் பொருட்களான மண்ணெண்ணெய், அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களின் எடை குறைவாக உள்ளது என்று ரேசன் கடை ஊழியரிடம் தகராறு செய்து வருவதாகவும், இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு புகர் தெரிவித்தும் எந்த ஓர் நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை. இப்படி அடிக்கடி எடைக்குறைவால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் மத்தியில் இவர்களுக்கு ஓர் பாடத்தை கற்பிக்கவேண்டும் என்று கூறி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பொருட்கள் வாங்க மக்களின் கூட்டம் அலைமோதியது. அப்ப்போது ஆசாத் நகரை சேர்ந்த ஹக்கீம், ஆப்தீன், மதினா, ரம்ஜான் பீவி போன்ற வர்கள் வாங்கிய அரிசியில் 3 கிலோ எடை குறைவாக இருந்ததாகவும் மேலும் சீனியில் அரைகிலோ குறைவாகவும் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து பொது மக்கள் ரேசன் கடை நடத்துனரை தாசில்தாரிடம் புகார் முறையிட்டதாக தெரிகிறது. மேலும் இது அப்படித்தான் இருக்கும் என்று திமிரு வார்த்தையில் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் ரேசன் கடை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மீனவ சங்க தலைவர் மீரா முஹைதீன், வர்த்தக கழக நிர்வாகி அடிமை முஹைதீன் ஆகியோரின் தலைமையில் ரேசன் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முத்துப்பேட்டையில் பரபரப்பும் பதட்டமும் நிலவியது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
யூசுப் அலி (ஆலிம்), AKL . அப்துல் ரஹ்மான்,

முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் இன்னும் மோசமாகத்தான் உள்ளது SDPI சித்திக் பேட்டி.




முத்துபேட்டை, மே 19 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்த SDPI -யின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். அபூபக்கர் சித்திக் அவர்கள் பேட்டி பின்வருமாறு. முத்துப்பேட்டையில் கடந்த சில மாதங்களாக குடி தண்ணீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது என்றும், இந்த நிலையை பல முறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு எடுத்து சொல்லியும் இவற்றை அலட்சியப் படுத்தி வருகிறது பேரூராட்சி நிர்வாகம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த நிலை மீண்டும் நீடித்தால் தமிழகத்தில் பரவி வரும் டிங்கு காய்ச்சல் நமது முத்துப்பேட்டை நகரங்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். எனவே மக்களின் உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்ந்து பேரூராட்சி நிர்வாகம் உடனே அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலைக்கு எந்த ஒரு தீர்வு எடுக்கா விட்டால் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை பேரூராட்சி அலுவலகம் முன்பு நடத்தவும் தயங்க மாட்டோம் என்றும் மேலும் அவர் தெரிவித்தார். மேலும் முத்துப்பேட்டை நகரங்களில் மிகவும் பற்றாக்குறையாக செயல் பட்டு வரும் இன்டேன் கேஸ் நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விரைவில் நடத்த உள்ளதாகவும் அவர் இதன் மூலம் தெரிவித்தார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் அஹ்மத் கான், அபு மர்வா.

முத்துப்பேட்டையில் 108 ஆம்புலன்ஸை மற்ற எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் முற்றுகை.!





முத்துப்பேட்டை, மே 17 : முத்துப்பேட்டை யில் கடந்த சில ஆங்குளாக 108 ஆம்புலன்ஸ் இயங்கி வந்தது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி ஏற்பட்டு வரும் விபத்துகளை சரிசெய்யப்பட்டு வந்தன. இது இப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் இந்த 108 ஆம்புலன்ஸை ஏனோ காரணத்தால் திருவாரூருக்கு எடுத்து சென்றனர். இதனால் வெறுப்படைந்த பொது மக்கள் அதிகாரிகளிடம் புகர் கொடுத்தனர். மேலும் போராட்டங்களையும் அறிவித்தனர். பின்னர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட பொது மக்கள் 108 ஆம்புலன்ஸ் எப்சி வேலைக்காக சென்று உள்ளதாகவும், பணிமுடித்த வுடன் வந்து விடும் என்றும் அவர்கள் கூறி உள்ளார்கள். முத்துப்பேட்டை ஆப்லன்சை ரத்து செய்ய இருப்பதாக தகவல் அறிந்த பொது மக்கள் மற்றும் பொது நல அமைப்புகள் ஆகியோர் விரைந்து வந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். அதில் வர்த்தக கழக கவுரவ தலைவர் இரா.திருஞானம், தர்ஹா. பேரவை மாநில தலைவர் S.S. பாக்கர் அலி சாஹிப், நுகர்வோர் அமைப்பு நிர்வாகி சுல்தான் இபுராஹீம், தமிழ் நாடு இளைஞர் பேரவை மாநில தலைவர் சதீஸ் குமார், பேரூராட்சி கவுல்சிலர் பாவா பகுருதீன், ஜபருல்லா கான், மெட்ரோ மாலிக், அமைப்புகள் மற்றும் பொது மக்கள் 108 ஆம்புலன்ஸை முற்றுகை இட்டு சாவியை பிடுங்கி மறைத்து கீழே உட்கார்ந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருவாரூர் மாவட்ட 108 நிர்வாகி பிரசாத் போராட்ட காரரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இறுதியில் முத்துப்பேட்டையில் இது தொடர்ந்து நடைபெறும் என்று உறுதி யளித்ததின் பேரில் போராட்டத்தை வாபெஸ் பெற்றனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

AKL .அப்துல் ரஹ்மான், யூசுப் அலி (ஆலிம்)

முத்துப்பேட்டை கடற்கரைப் பகுதியில் மருமநபரின் போட் கரை ஒதிங்கியதால் பெரும் பரபரப்பு..


முத்துப்பேட்டை, மே 16: முத்துப்பேட்டையில் உள்ள லகூன் என்ற இடத்தில் நேற்று அடையாளம் தெரியாத மர்ம படகு ஒன்று திடீர் என்று கரை ஒதுங்கியது. இவற்றை கண்ட மீன்பிடி தொழிலாளர்கள் பார்த்து இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார் விரைந்து வந்து அவற்றை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

கோவிலூர் ராமச்சந்திரன்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் நடத்தும் 4 ஆம் ஆண்டு திருகுர்ஆன் மனனப் போட்டி.


முத்துப்பேட்டை, மே 14 : அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி செயலாற்றி வரும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் (Reg : 32 / 2009) நான்காம் ஆண்டு திருகுர்ஆன் மனனப் போட்டி இன்ஷா அல்லாஹ் மே மாதம் 29.05.2012 செவ்வாய்கிழமை, முத்துப்பேட்டை கொய்யா திருமண மஹாலில் நடைபெற உள்ளது. அதுசமயம் வெளியூரில் இருந்து மார்க்க அறிஞர்களும் மற்றும் ஆலிமாக்களும் பெண்களுக்கான சிறப்பு செற்பொழிவுகள் நிகழ்த்திட உள்ளனர், இஸ்லாமிய சமுதாயத்தினர் அனைவரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இதில் நமது ஊர்வாசிகள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்துதருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இது போன்ற நற்காரியங்களுக்கு தங்களுடைய பொருளாதாரத்தை தாரளமாக கொடுத்துதவி, பயன் அடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திரு குர்ஆன் மனனப்போட்டி தொடர்புக்கு: M.R.S.அஹமது ராவுத்தர் (050 - 5794302) R.ஷேக் அப்துல்லா (050 - 3793596 ) A.S.N.S.அப்துல் பாரி (055 - 9336118), S.ஜஹபர் உசேன் (050 - 4614636).M.A.K.ஹிதாயத்துல்லாஹ் (050 - 2146676)
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

அபு மர்வா

அமெரிக்க முஸ்லிம் பெண்மணி வென்றெடுத்த வெகுமதி!


அமெரிக்கா, மே 14 : இதுதான் இந்தப் பேறு பெற்ற பெண்மணியின் பெயர். அண்மையில் அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி நகரை வியப்பில் ஆழ்த்திய முஸ்லிம் பெண் சூசன் பஷீர், இவருக்கு என்ன நிகழ்ந்தது? இஸ்லாத்தைத் தழுவும் அமெரிக்கப் பெண்மணிகள் அனைவருக்கும் நிகழ்ந்துவரும் சோதனைகள்தாம் இவருக்கும் நிகழ்ந்தன. ‘The Kansas City Star’ என்ற பத்திரிக்கை தரும் தகவல்களின்படி, இப்பெண் கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான AT&T யில் முக்கியப் பொறுப்பில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தார்.

2005 ஆம் ஆண்டில் இவர் இஸ்லாத்தைத் தழுவியபோது, வடக்குக் கான்சாஸ் சிட்டியில் வசித்துவந்தார். அப்போது முதல் தொடங்கியதுதான், இவருக்கு எதிரான religious discrimination என்னும் மதப் பாகுபாட்டுத் தொல்லைகள்! இருப்பினும் என்ன? ஈமானின் உறுதியால் எதிர்நீச்சல் போட்டுவந்தார் சூசன்.

உடலை முழுவதுமாக மறைத்து, தலைச்சீலை (headscarf) அணிந்துதான் அலுவலகத்திற்கு வந்து தனது பணியை முறையாகச் செய்துவந்தார். இவருக்கு எதிரான தொல்லைகள், இவர் இஸ்லாத்தைத் தழுவச் சில மாதங்கள் முன்பிருந்தே தொடங்கிவிட்டனவாம். அதற்கு முன், இவருடைய சிறப்பான சேவைகளுக்காக AT&T நிறுவனம் இவருக்குப் பல பாராட்டுச் சான்றுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளதாக அறிகின்றோம்.

ஆனால், எப்பொழுது இவர் முஸ்லிமாக மாறி, ‘ஹிஜாப்’ அணிந்து வேலைக்குச் செல்லத் தொடங்கினாரோ, அன்று முதல் இவருடன் பணியாற்றியவர்கள் இவரைப் பார்த்துக் கேலியும் கிண்டலும் செய்யத் தொடங்கினராம். கண் சாடையால் ‘that thing on her head’ என்று கூறிச் சிரித்து மகிழ்ந்தனராம்.

“என்னைச் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது! அதிர்ச்சியுற்றேன்! இதற்கு முன் நான் எப்படியெல்லாம் உடலின் பெரும் பகுதிகள் தெரிய உடை அணிந்து வந்தபோதெல்லாம் இது போன்ற கிண்டல்கள் இல்லை! கண் சிமிட்டல்கள் இல்லை! குத்தலான பேச்சுகள் இல்லை! யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை, என் உடையைப் பார்த்து! இப்போது இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் முழு உடலையும் மறைத்து உடையணிந்தபோது.....?” என்று வியக்கிறார்; வேதனைப் படுகிறார்.

சகோதரி சூசனின் அலுவலக மேஜை மீது, தலையை மறைத்த தோற்றத்தில் கன்னி மேரியின் படமும், அதனுடன் பைபிளின் வசனம் ஒன்றும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது! அந்த வசனத்தையும் தோற்றத்தையும் பார்க்கும்போதெல்லாம், சூசனுடன் பணியாற்றும் பெண்களும் ஆண்களும் கேட்கும் கேள்வி, அவரை வேதனைப் பட வைக்கிறது! “ஏண்டி! நீ தீவிரவாதியா? இந்தக் கட்டடத்தை வெடி வைத்துத் தகர்க்கப் போகிறாயா? Towel-headed Terrorist!” திட்டித் தீர்த்தார்கள்.

மார்ச் 2008 வரை பொறுத்துப் பார்த்தார் சகோதரி சூசன். அதன் பின்னர், Equal Employment Opportunity Commission என்ற சட்டப் பாதுகாப்புத் துறையிடம் தன் முறையீட்டை வைத்தார். அந்தத் துறையும் தனது புலனாய்வைத் தொடங்கிற்று. இதன் பிறகே, எதிரி ஏவுகணைத் தாக்குதல்கள் கடுமையாயின! இதையொட்டி நிகழ்ந்ததுதான் climax எனும் உச்ச கட்டச் சோதனை! அதுவே சூசனை வன்மையாக இயக்கிற்று!

சூசனின் மேலதிகாரி ஒரு நாள் அவரருகில் வந்து நின்று, ஆத்திரத்துடன் அவருடைய ஹிஜாபைப் பிடித்திழுத்தார்! அவ்வளவுதான்! பெண் சிங்கம் கர்ஜிக்கத் தொடங்கிற்று! AT&T நிறுவனத்தை எதிர்த்துக் குரலெழுப்பினார் சகோதரி சூசன் பஷீர்!

“இந்த மேலதிகாரியைப் பணி நீக்கம் செய்யவேண்டும். அல்லது என்னை இந்த அலுவலகத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றவேண்டும்.” நியாயமான கோரிக்கை. இவற்றுள் ஒன்றும் நிகழவில்லை. ஆண்டுச் சம்பளம் 70,000 டாலர் கிடைத்துவந்த தனது பணியைத் தொடர மனமின்றி, ஒன்பது மாதங்கள் வீட்டில் இருந்துவிட்டார் சூசன். அதன் பின் ஒரு நாள் அலுவலகம் வந்தவருக்கு, தன்னையே பணி நீக்கம் செய்த எழுத்தாணை ஆயத்தமாக இருந்தது!

அடுத்து சூசன் செய்தது, நீதிமன்ற முறையீடு! இதைச் செய்துவிட்டு, அமெரிக்காவின் கடைக்கோடிக்குப் போய், ‘ஆன்கரேஜ்’ என்ற ஊரில் ஒரு சிறு பணியில் அமர்ந்து, தனது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

“என்னைப் பணி நீக்கம் செய்ததுகொண்டு, தான் விரும்பிப் பணி செய்துவந்த ஊழியர் ஒருத்தியை இழந்துவிட்டது, AT&T நிறுவனம். நான் எனது வேலையை விட விரும்பவில்லை. ஏனெனில், அவ்வளவுக்கு என் பணியை ஆர்வத்துடன் செய்துவந்தேன். எனக்கே ஓர் ஆத்ம திருப்தி, நான் எனது நாட்டு முன்னேற்றத்தில் என் பங்களிப்பை முறையாகச் செய்கிறேன் என்று. இப்போது அந்த மோசமான நிர்வாகத்தின்கீழ் வேலை செய்யவில்லை என்பதுகொண்டு, நான் மகிழ்கின்றேன்.

ஆனால், எனது நாட்டின் பொருளாதாரச் செலவினங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், எனது வாழ்க்கையை எத்துணைப் போராட்டத்துடன் மேற்கொள்ளவேண்டியுள்ளது என்று நினைக்கும்போது, என் இதயம் கணக்கிறது.” வேதனைப்படுகிறார் சகோதரி சூசன் பஷீர்.

வெந்த புண்ணில் வேல் பாய்வது போன்று, அவருடைய இல்லற வாழ்விலும் விரிசல் கண்டுள்ளது! ஆம், கணவர் பஷீரிடமிருந்து விவாக ரத்துக் கோரி இப்போது விண்ணப்பமும் செய்துள்ளார் சூசன்!

வந்தது ‘ஜாக்சன் கவுன்டி’ நீதித் துறையின் சட்டத் தீர்ப்பு! AT&T நிறுவனம் சகோதரி சூசனுக்கு ஐந்து மில்லியன் டாலர் இழப்புத் தொகை கொடுக்கவேண்டும்! அது மட்டுமன்று. சூசன் இழந்த வேலைக்குப் பகரமாக அந்த நிறுவனம் 1,20,000 டாலர் சூசனுக்குக் கொடுக்க வேண்டும்; இது தவிர, வழக்கறிஞருக்குக் கொடுக்கவேண்டிய தொகை பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும்! AT&T இத்தீர்ப்பை எதிர்த்து மறு முறையீடு செய்யும் என்று அறிவித்துள்ளது. அது தோல்வியடைந்து, இறுதி வெற்றி இஸ்லாத்திற்கே என்று ஆக, நாமனைவரும் வல்ல இறைவன் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோமாக!
source from: muthuppettaiexpress.blogspot.com
நமது நிருபர்

அதிரை அஹ்மத்

திருமணச்செய்தி: "S. அப்துல் மாலிக்.MA , J. நபீலா"






முத்துப்பேட்டை, மே 13 : ஹிஜ்ரி 1433 ஜமாத்துல் ஆஃபிர் பிறை 20, 13.05.2012 காலை 11.00 மணியளவில் முத்துப்பேட்டை மரைகாயர் தெரு ஜனாப் S.S. செய்யது முஹம்மது அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் S.முஹம்மது மாலிக்.MA. மணாளருக்கும், முத்துப்பேட்டை ஜனாப்.S. ஜாகிர் உசேன் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி J. நபீலா மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 2 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து முத்துப்பேட்டை குட்டியார் சும்மாஹ் பள்ளிவாசல் பேஸ் இமாம். முஹைதீன் சாஹிப் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர். இந்த திருமணத்திற்கு சிறப்பு விருந்தினராக MP.அப்துல் ரஹ்மான், TMMK மாநில தலைவர் MLA ஜனாப். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் MLA. அஸ்லம் பாஷா அவர்கள், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் மாப்பிளைக்கு வாழ்த்து தெரிவிக்க தொலைபேசி எண்: 90806 66733
source from: www.mttexpress.com
தொகுப்பு

AKL.அப்துல் ரஹ்மான்.

முத்துப்பேட்டையில் வீடு எரிந்ததில் 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்...



முத்துப்பேட்டை, மே 10 : முத்துப்பேட்டை அடுத்து கோவிலாந்து தோப்பில் வீரையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓர் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்றத்தில் துப்புரவு தொழிலாளி. இவரின் மகன் மாரியப்பன் வயது ௨௯ இவரின் தாயார் பொட்டியம்மா இவரும் ஓர் துப்புரவு தொழிலாளி. மாரியப்பன் என்பவர் வெளிஊறு சென்று 15 நாள் கழித்து விட்டு நேற்று வீடு திரும்பி உள்ளார். அப்போது அவருக்கு சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது ஆனால் அடுப்புகள் எரியவில்லை இதனால் அவர் வெளியில் வந்து உட்காரிந்திருந்தார். அப்போது திடீரென்று வீட்டுக்கு பின் பக்கத்தில் தீப்பற்றி எரிந்தது. அப்போது தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அந்த இடத்திற்கு செல்ல வலி இல்லாததால் வீடு முழுவதும் எரிந்து சாம்பலாயின. இதில் பீரோல், படிப்பு சான்றிதல், கட்டில் மேலும் அவரின் இரு சக்கர வாகன மான T.V.S பைக் ஆகியவை எரிந்து நாசமாயின இதன் மதிப்பு சுமார் 1 லட்சம் ஆகும் என்று தெருகிறது. இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் யூசுப் அலி, பத்ரு ஜமான் ஆலிம்

உலகில் முதலாவதாக தண்ணீர்க்கடியில் பள்ளிவாசல்


சவூதி, மே 08 : வரலாற்றில் முதன்முறையாக உலகில் முதலாவது நீருக்கடியில் பள்ளிவாசல் சவூதிஅரேபியாவின் தனியார் சுழியோடிகள் குழுவொன்றினால் அமைக்கப்பட்டுள்ளது. முதலாவது நிரூக்கடியில் பள்ளிவாசல் அமைக்கப்பட்டு முடிந்ததுடன், அதில் தாம் தொழுகையை நிறைவேற்றியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜோர்தான் எல்லைப்பகுதிக்கு அண்மையாக தபூக் நகரின் வடமேற்கு கடற்பரப்பில் இப்பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.மணல் நிரப்பப்பட்ட பெரிய பிளாஸ்திக் குழாய்கள் பயன்படுத்தப்பட்டு சுழியோடிகளால் இவ் அடையாளப் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளதாக அரேபிய நாளிதழ் ஒன்று தெரிவிக்கின்றது.

நீருக்கடியில் பள்ளிவாசலின் நிர்மாணப் பணியின் போது, இறுதிப் பகுதிகளை இணைக்கும் போது நண்பகல் தொழுகைக்கான நேரம் வந்ததாகவும்,பின்னர் வரலாற்றில் முதலாவது நீருக்கடியில் பள்ளிவாசலில் தாம் கூட்டாக நண்பகல் தொழுகையை நிறைவேற்றியதாகவும் சுழியோடியான ஹம்தான்பின் ஸாலித் மசூதி தெரிவித்தார்.
source from: www.mttexpress.com, www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்) AKLT .அப்துல் ரஹ்மான்

பயனற்ற கல்வியை நிறுத்துவோம்!


சென்னை மே 07 : சமீபத்திய நடைபெற்ற ஒரு நிகழ்வு, 70 வயதான பெரியவர் ஒருவர்சென்னைக் கூடுவாஞ்சேரி மெயின் ரோடில் உள்ள காட்டுச் செடிகள் ஓரத்தில் அவருடைய மகன்களால் காரில் கொண்டு வரப்பட்டு அனாதையாக தள்ளப்பட்டார். ஒட்டிய வயிறும்,மெலிந்த தேகமும் கொண்ட அவரைக்கண்ட அந்த வழியாகச் சென்ற இரக்கக் குணம் கொண்ட சிலர் தின்பதற்காக தின்பண்டங்களை அவர் அருகில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

அதனைக்கூட அவர் எடுக்கக்கூடிய திராணியில்லை. அதனை தெருநாய்கள் சாப்பிட்டன.., அந்த பரிதாப நிலையினைப் பார்த்த சிலர் அருகில் இருந்த காவல் துறையினரை அணுகியும் அவர்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லை.... ஆகவே மாவட்டக் கலெக்டருக்கு செல்ஃபோனில் தகவல் சென்றது...., அவர் தாசில்தாரை அனுப்பி மருத்துவ மனையில் சேர்த்தார்.... ஆனால் அந்த முதியவர் எவ்வளவோ அதிகாரிகள் கேட்டுக் கொண்டும் அவரை அனாதையாக விட்டுச் சென்ற மகன்கள் பெயர்களைச் சொல்லத் தயாராகவில்லை.......

தான் துன்பப்பட்டாலும் தன்னை நடுத் தெருவில் அனாதையாக விட்ட பிள்ளைகளைக் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை என்று அறியும் போது அவரது பிள்ளைப்பாசத்தின் அழுத்தம் நமக்கு தெரிகிறதல்லவா?அறிவு வளர்ச்சியின் உச்சக்கட்டம் என்று கருதப்படும் இக்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் அன்றாடம் அதிகரித்து வருவதை நாம் கண்டுவருகிறோம்.

என்ன காரணம்?
சிந்திக்கின்ற எவரும் தெளிவாக பதில் கூறமுடியும்.. அறிவு முறைப்படி புகட்டப் படுவதில்லை என்று!
அதிகரித்துவரும் முதியோர் இல்லங்கள் மட்டுமல்ல, கள்ளக்காதல் கொலை கொள்ளை, மோசடி, விபச்சாரம், பாலியல் பலாத்காரங்கள், இலஞ்சம், ஊழல், அடக்குமுறைகள், கட்டப்பஞ்சாயத்து, வன்முறைகள் எனஅனைத்து கொடுமைகளும் அதிகரித்து வருவது நமது கல்வி முறைகள் மாற்றி அமைக்கப் படவேண்டியதன் அவசியத்தையே உணர்த்துகின்றன.

கல்வியின் நோக்கம் ?
குழந்தைகளுக்குக் கல்வியைக் கற்பிப்பதன் தலையாய நோக்கம் மனிதனை சீர்படுத்தி அவனை பண்புள்ளவனாக ஆக்கவேண்டும் என்பதாக இருக்கவேண்டும். மாறாக உணவை சம்பாதிப்பதற்கான வழிகளைத் தேடுவது இரண்டாவது இடத்தில்தான் இருக்க வேண்டும். உண்மையில் அதற்குக் கல்வி கற்பதன் அவசியமும் இல்லை. காரணம் மனிதனை விட அறிவு குறைந்த விலங்கினங்களும் பறவைகளும் மீன்களும் எல்லாம் தங்களின் உணவை எளிதாகவே அடைவதைப் பார்க்கிறோம்.

மனிதன் தன் பகுத்தறிவை முறைப்படி பயன்படுத்தவும் அதைக்கொண்டு இவ்வுலகை ஆராயவும் அதன் விளைவாக இவ்வுலக வளங்களை மனிதகுலத்துக்கு பயன்படும் வண்ணம் ஆக்கபூர்வமான செயல்களுக்கு தூண்டுகோலாக பாடத் திட்டங்கள் அமைய வேண்டும். அத்துடன் படைத்த இறைவனைப் பற்றியும் இந்தத் தற்காலிக உலகில் மனித வாழ்வின் நோக்கம் பற்றியும் அறிவூட்டும் கட்டாயப் பாடங்கள் மனிதனின் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் வண்ணம் போதிக்கப் படவேண்டும். அப்போதுதான் மனிதன் தன் செயல்களுக்கு இறைவனிடம் விசாரணை உண்டு என்பதையும் மரணத்திற்குப் பிறகு தனக்கு சொர்க்கம் அல்லது நரகம் உண்டு என்பதையும் அறிந்து பொறுப்புணர்வோடு வாழ்வான். அதேவேளையில் நீதிபோதனைகள் என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை போதித்தால் குழந்தைகளிடம் கடவுள் நம்பிக்கை வளராது. நாத்திகமும் போலி பக்தியும்தான் வளரும். நன்னடத்தை வளராது, சுயநலம்தான் வளரும், நாட்டில் பாவங்கள் மலியும்!

நன்மை- தீமை அறிதல்

உண்மையான இறையச்சத்தைப் வளர்ப்பதற்கு அடுத்தபடியாக குழந்தைகளுக்கு போதிக்கப் படவேண்டியது நன்மை எது தீமை எது என்பது பற்றிய கல்வியாகும்.. அதாவது இறைவனின் பார்வையில் எது பாவம் எது புண்ணியம் என்பதை அறிந்தால்தான் மனிதனால் இறைவனின் ஏவல் விலக்கல்களை அறிந்து கொண்டு செயல்படமுடியும். இப்படிப்பட்ட நீதிபோதனைகளை கட்டாயப் பாடமாக்கி அத்துடன் மற்ற பாடங்களை போதிக்கும்போதுதான் மனிதன் தான் பெற்ற கல்வியை ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துவான். இல்லையேல் அது அழிவுக்குத்தான் பயன்படும். அதைத்தான் இன்று வல்லரசுநாடுகளின் செயல்பாட்டில் காண்கிறோம். அவை இன்று அணுஆயுத தளவாடங்களைக் காட்டி உலகநாடுகளின் வளங்களைக் கொள்ளையடித்து வருவதும் உலகில் பயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்தி மனித உயிர்களை மிக மலிவாகக் கருதி மாய்த்து வருவதும் தீய கல்வியின் பயன்பாடுகளே!

பொறுப்புணர்வை வளர்!

குழந்தைகள் தங்கள் வாழ்வின் மிகமுக்கியமான பகுதியை பள்ளிக்கூடங்களில்தான் கழிக்கின்றன. பள்ளிப் பருவம் முடிந்து வெளியேறும்போது வாழ்வின் அனைத்து சவால்களையும் துணிச்சலோடு சந்திக்கக்கூடிய மனோபக்குவத்தையும் மனோதைரியத்தையும் அவர்கள் பெறவேண்டும். அதற்கும் அடிப்படை இறையச்சம்தான். இறையச்சம் மனிதனுக்குள் வந்துவிட்டால் அவனுக்கு வேறு எந்த அச்சமும் வருவதில்லை என்பதே உண்மை!

தங்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் ஒரு மாணவனுக்கு தன் வாழ்வாதாரங்களை தேடும் திறமை மட்டும் இருந்தால் போதாது. அவன் தன் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் ஆற்றவேண்டிய கடமைகள் குறித்தும் சமூகத்தை பாதிக்கக் தீமைகள் குறித்தும் அறிவும் விழிப்புணர்வும் அவனுக்கு மிகமிக அவசியம். மேலும் அரசாங்க அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றியும் அறிவும் தேவை அப்போதுதான் சமூகத்தில் நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுக்கும் பொறுப்புணர்வுள்ள குடிமக்கள் உருவாகுவார்கள்.

பயனற்றவை தவிர்!

இப்படிப்பட்ட சீர்திருத்தப் பாடங்களுக்கு எங்கே நேரம்? என்ற கேள்வி எழலாம். ஆனால் ஆக்கபூர்வமான பயனுள்ள கல்வி வேண்டுமானால் இதற்கு முக்கியத்துவம் கொடுத்தேயாக வேண்டும். மேலும் குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் எந்த வகையிலும் பயனளிக்காத பல பாடங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய தருணம் இது. சரித்திரம் என்ற பெயரிலும் இலக்கியம் அல்லது கவிதை என்ற பெயரிலும் அந்தக் காலத்து அரசர்களின் புகழ்பாடியும் இந்தக்காலத்து மந்திரிகளின் புகழ்பாடியும் மாணவர்களை மூளைச்சலவை செய்யும் முயற்சியை அரசியல்வாதிகள் கைவிட வேண்டும். தேவையற்ற சரித்திரங்களையும் இலக்கியங்களையும் கவிதைகளையும் போதிப்பதர்க்கும் பறைசாற்றுவதர்க்கும் தொலைக்காட்சிகளும் பொதுமேடைகளும் அதற்கென தவம் கிடக்கும் ரசிகர் கூட்டங்களும் பள்ளிக்கு வெளியே காத்திருக்கின்றன. தயவுசெய்து இனிவரும் இளைய தலைமுறையினரை விட்டுவிடுங்கள். அவர்களுக்கு இனி அதற்கு நேரமில்லை!

ஆண் – பெண் வேறுபாடு

ஒரு ஆரோக்கியமான சமூகம் அமையவேண்டுமானால் அதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவரவர் உடல் இயற்கைக்கும் சக்திக்கும் ஏற்றவாறு கடமைகளும் உரிமைகளும் வேறு வேறு என்பதை நாம் இனியாவது உணர்ந்து திருந்த வேண்டும். இறைவன் எவற்றை ஆண்களுக்கு கடமையாக்கி இருக்கிறானோ அதற்கேற்ற படிப்பை ஆண்களுக்கும் எவற்றை பெண்களுக்குக் கடமையாக்கி இருக்கிறானோ அதற்கேற்ற படிப்பை பெண்களுக்கும் புகட்ட வேண்டும். இன்று பள்ளிகளில் நாம் கண்டுவரும் அவலங்கள் – அதாவது கர்ப்பிணிக் குழந்தைகளும் கள்ளக்காதல்களும் கொலைக் கலாசாரமும் - ஒழிய வேண்டுமானால் இனிமேலாவது இறைவன் நமக்கு விதித்த வரம்புகளை மீறக்கூடாது. பத்து வயதுக்கு மேறப்பட்ட ஆண்களும் பெண்களும் தனித்தனி பள்ளிகளில்தான் பயிற்றுவிக்கப் படவேண்டும். சிரமங்கள் பல இருந்தாலும் இதை மேற்கொண்டால் சமூகமும் நாடும் சமூகச் சீர்கேடுகளில் இருந்தும் இன்னபிற நாசங்களிலிருந்தும் இறைவனின் தண்டனைகளில் இருந்தும் காப்பாற்றப் படும்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

தமிசுதீன் (நாகைப்பட்டினம்)

முஸ்லிம் வாக்கு வங்கியை ஒழிக்கவேண்டும்! – தொகாடியா மீண்டும் கொக்கரிப்பு!


காஸர்கோடு,மே 07 : இந்தியாவில் முஸ்லிம் வாக்குவங்கியை ஒழித்து ஹிந்து வாக்கு வங்கிகளை உருவாக்கவேண்டும் என்று ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான விசுவஹிந்து பரிஷத்தின் சர்வதேச பொதுச்செயலாளரான பிரவீன் தொகாடியா மிரட்டல் விடுத்துள்ளார். ஹிந்து பாதுகாப்பு சமிதியின் ஏற்பாட்டில் கேரள மாநிலம் காஸர்கோட்டில் நடந்த ஹிந்து சக்தி சங்கமம் நிகழ்ச்சியை துவக்கி வைத்து தொகாடியா உரை நிகழ்த்தினார். தொகாடியா தனது உரையில் கூறியது: ‘ஹிந்துக்கள் உள்ளிட்டோர் அளிக்கும் வரிப்பணத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு சலுகைகளை அரசு வழங்குகிறது. முஸ்லிம் வாக்கு வங்கிக்காக அரசியல் தலைவர்கள் அவர்கள் முன்னர் மண்டியிடுகின்றனர். ஹிந்துக்களை இகழும் வகையில் முஸ்லிம்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்குவதால் முஸ்லிம் வாக்குவங்கியை ஒழித்துக்கட்ட வேண்டும்.

கேரளத்தில் ஜிஹாத் நெட்வர்க் உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஜிஹாதிற்கு பதிலடி கொடுக்கவேண்டும்.

உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் அகிலேஷ் யாதவ், முஸ்லிம் மாணவிகளுக்கு மட்டும் 30 ஆயிரம் ரூபாய் அளிக்கிறார். ஹிந்துக்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே சொந்த நாட்டில் அனுபவிக்கும் பாரபட்சத்தை எதிர்கொள்ளமுடியும்.’ இவ்வாறு தொகாடியா கூறினார்.

அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த கலவரத்திற்கு தூபம் போட்டது தொகாடியாவின் வெறிப்பேச்சு என்று கூறப்படுகிறது. ஹிந்து பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை உமிழ்ந்துவரும் தொகாடியா போன்றவர்களுக்கு தொடர்ந்து பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுவதன் மூலம் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்ற சகோதரிக்கு 50 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு.!!!


உலகம்,மே 06: இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டதன் பேரில் பாரபட்சமாக நடத்தப்பட்ட அமெரிக்க முஸ்லிம் பெண்மணிக்கு 50 லட்சம் டாலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்ஸாஸைச் சார்ந்த சூஸன் பஷீர் என்ற 42 வயது பெண்மணி தான் வேலைப்பார்த்த நிறுவனத்தின் மேலதிகாரிகள் தன்னிடம் பாரபட்சமாக நடந்துகொண்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவராக இருந்த சூஸன் பின்னர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். இதனை விரும்பாத சூஸன் வேலைப்பார்த்த நிறுவனத்தின் மேலதிகாரிகள் அவரிடம் பாரபட்சமாக நடந்துகொண்டனர். ஹிஜாப் அணிவதற்கும், மஸ்ஜிதுக்கு தொழுகைக்காக செல்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவரது பெயருடன் தீவிரவாதி என சேர்த்து அழைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சூஸன் நீதிமன்றத்தை அணுகினார். டெலி கம்யூனிகேசன் துறையில் பிரபல நிறுவனமான ஏ.டி அண்ட் டி நிறுவனத்தின் மீதுதான் சூஸன் வழக்கை தொடர்ந்தார். இவ்வழக்கில் நீதிமன்றம் சூஸனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இழப்பீடாக 50 லட்சம் டாலரை வழங்க உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடுச் செய்வோம் என்று நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில் பழிவாங்கும் நடவடிக்கையாக நிறுவனத்தில் வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக சூஸன் கூறிய குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

முத்துப்பேட்டையில் கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாணவர்களுக்கான கருத்தரங்கம்.






முத்துப்பேட்டை, மே 05 : கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய நவீன உலகில் மாணவர்களின் கடமைகளும், எதிர் கொள்ள வேண்டிய சவால்களும் என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக N.உமர் பாரூக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் A. தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு CFI -யின் தமிழ் மாநில தலைவர். வழக்கறிஞர் Z .முஹம்மது தம்பி அவர்கள் நவீன உலகில் மாணவர்களின் கடமைகள் மற்றும் தேசிய நலனில் மாணவர்கள் ஆற்ற வேண்டிய பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து PFI திருச்சி மாவட்ட தலைவர் A.அமீர் பாஷா அவர்கள் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.பின்னர் வழக்கறிஞர் முஹம்மது பைசல் சட்ட கல்வியின் முக்கியத் துவத்தை பற்றி சிறப்பாக உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் செல்வரத்தினம் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சி யின் இறுதியாக J.அப்துல் ரசாக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் சுமார் 100 மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்)

உலக பத்திரிகை சுதந்திரம் ஓர் பார்வை..!!!


ஊடகம், மே 05 : ஊடக சுதந்திரம் என்பது ஊடகங்களுக்கான மிரட்டலும், தணிக்கைகளும் இல்லாமல், உண்மையான தகவல்களை வெளியிடுவதற்கான சுதந்திரமாகும். இன்றைய நிலையில் உலகின் பலபாகங்களில் உண்மையான ஊடக சுதந்திரங்கள் வெவ்வேறு பாத்திரங்களை படைத்துவருகின்றன. மேற்கத்திய நாடுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த ஊடக சுதந்திரம் கட்டுப்பாடுகளற்ற நிலையில் காணப்படுகின்றன, சீனா, ஈரான், வடகொரியா, கியூபா, கிழக்காசியாவிலுள்ள சில நாடுகளில் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்களை அந்த நாடுகளின் அரசுகளின் கையாடல்களுடன் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் ஓரளவுக்கு சுதந்திரமாக செயற்படும் தன்மையும் காணப்படுகிறது. உண்மையில் மனித உரிமைகள் பற்றிய சர்வதேச சாசனத்தினது பிரகடனத்தின் 19வது பிரிவு இவ்வாறு கூறுகின்றது. 'சுதந்திர கருத்தினைக் கொண்டிருப்பதற்கும், வெளியிடுவதற்கும், எல்லோருக்கும் உரிமை உண்டு. பிறரின் தடையின்றி தான் ஒரு கருத்தினைக் கொண்டிருப்பதற்கும், தேசங்களின் எல்லைகளைப் பொருட்படுத்தாது எவ்வகையான ஊடகங்களின் மூலமும் தகவல்களைப் பெறுவதற்கும் வழங்குவதற்கும் உரிமையும் இதில் உள்ளடங்குகிறது' என்று அவ்வாசகம் கூறுகிறது.

என்னதான் நவீன ஊடகங்கள் வந்தாலும் ஊடகக்துறையிலேயே முதலிடத்தை வகிப்பது பத்திரிகைத்துறையாகும். அக்காலத்தில் மன்னரிடமிருந்து செய்திகளை நாட்டு மக்களுக்கு அறிவிக்கவும், போர்பிரகடனம் செய்யவும், செய்திகளை பரப்பவும் வேண்டி பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டு வந்தன. தீமூட்டுதல், புகைவைத்தல், புறாவை தூது அனுப்புதல், குதிரைவீரன், சப்தமிடல் போன்ற பல்வேறு வடிவங்களின் இறுதியாக பின்நாளில் சீனர்களின் காகிதக் கண்டுபிடிப்புக்குப்பிறகு புத்துயிர் பெற்று, அச்சு ஊடகத்தில் பத்திரிகைத்துறையானது வரலாறு படைத்தது. அன்று இலங்கையில் அறிஞர் சித்திலெவ்பையின் 'முஸ்லீம் நேசன்' எனும் பத்திரிகை எழுச்சிபெற்று விளங்கியது. கடந்த காலங்களில் கொழும்பில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பத்திரிகைத்துறையானது இன்று நாட்டின் மூலை முடுக்கொல்லாம் செய்திப்பத்திரிகைகள் நாட்டு நடப்புக்களையும், மக்களின் பல்வேறு விசயங்களையும் அன்றாட செய்திகளாக வழங்கிவருகின்ற அளவுக்கு மக்களின் மத்தியில் பத்திரிகைத்துறை தனிமுத்திரை பதித்தே வருகின்றது.

வாசிப்பின்மீதான பற்றினை பற்றிக் கொள்வதவற்கும், மொழிரீதியான மேம்பாட்டை வளர்த்துக் கொள்ளவும் பத்திரிகை சிறந்த ஊடகமாக தொழிற்படுகிறது. ஆதலால்தான் மொழியானது ஒருசாதனமாகும் என்பர். அதனை வளப்படுத்தவும், அறிஞர்கள் மட்டுமன்றி, எவரும் தமது எண்ணக்கருவை வெளியிடவும், எழுத்தாக்கம் செய்து மற்றவர்கள் படித்தறிவதற்கும் பத்திரிகை மிகவும் அவசியமானதாக காணப்படுகிறது. என்னதான் பல்வேறு நவீன தொழிற்நுட்ப அறிவு வந்திட்டபோதிலும் பத்திரிகைத் துறை சோர்வடைந்து போகாது தலைநிமிர்ந்தே வலம்வந்து கொண்டிருக்கிற நிலையில் உலக மக்கள் பத்திரிகையின் உயரபிமானத்தை நினைவுபடுத்தும் வகையில் உலகின் பல அமைப்புக்களுக்கும், விசயங்களுக்கும் சர்வதேச தினங்கள் அமைந்துள்ளதுபோல் தகவல்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் பத்திரிகைகளுக்கும் அதன் சுதந்திரமான தன்மைகள் பாதுகாக்கப்படல் வேண்டும் என்கிற நோக்கில் அமைந்ததுதான் இந்த உலக பத்திரிகைச் சுதந்திர தினமாகும்.

இன்று மனிதவாழ்வில் இரண்டறக்கலந்துவிட்ட பத்திரிகைகள் உண்ணுகின்ற உணவைப் போன்று மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது அதிகாலை மலர்ந்துவிட்டால் இணையத்தில் தேடுகிறோம் பத்திரிகையை. இணையம் இல்லாதவர்கள் தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றில் செய்தித் தலைப்புக்களையாவது அலுவலகம் செல்வதற்கு முன்னர் பார்த்து விட்டு செல்வதில் மிகவும் ஆர்வமாய் இருக்கின்றனர். இதற்குக் காரணம் நாட்டினதும், உலகினதும் நடப்புக்களை அறிந்து கொள்வதற்கேயாகும். அதுமட்டுமன்றி உலகின் ஒவ்வொரு காட்சிகளை புதிய புதிய விசயங்களுக்கு, நிகழ்வுகளும், மாற்றங்களும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இதனை சுடச்சுட அறிவதில் அதிக ஆர்வம் கொள்கின்ற ஒருநிலைமைக்கு இன்றைய மக்கள் சிந்தனை அறிவியியல் ரீதியிலமைந்த போக்குக்கு உட்பட்டுள்ளமையினாலாகும்.

பொதுவாக பத்திரிகையின் பிரதான தொழிற்பாடாக பல்வேறு கோணங்களில் இருந்து செய்திகளை ஒன்றுதிரட்டி தன்னுடைய வாசகர்களின் உள்ளத்தைக் கொள்ளையிட முனைகின்றன. பள்ளி செல்லும் மாணவர்கள் தொடக்கம் வயதுமுதிர்ந்த கிழடுகள் வரைக்கும் பத்திரிகையை வாசித்து மகிழ்வர். தினசரி, வாராந்தம், மாதாந்தம், காலாண்டு எனப்பல பிரிவுகளாக பத்திரிகைகள் வெளியாகின்றன. அந்தவகையில் தேசிய பத்திரிகைகளாக அமைந்த, நாளாந்த பத்திரிகைகளுக்குத்தான் மக்களின் ஏகோபித்த ஆதரவு அதிகம் கிடைக்கின்ற ஒரு நிலை காணப்படுகிறது. தினசரி நடப்புக்கள் பற்றிய விடயங்களும், அன்றாடம் நடைபெறும் உலக நிகழ்வுகளையும் படம்பிடித்துக் காட்டிம் தினசரிகள் முன்னிலை பெறுகின்றன. இருப்பினும் பொதுவாக வாசிப்பவர்களின் ஆவலைத் தூண்டும் வகையில் செய்திகளை வெளியிடுவதில் பத்திரிகைகள் மிகவும் அவதானமாக செயற்படுகின்றன. அப்போதுதான் உரிய பத்திரிகையின் மீதான கண்னோட்டத்தில் மக்களும் ஆர்வமாக இருப்பர்.

எமது நாட்டைப்பொறுத்தளவில் ஒருகாலத்தில் யுத்த செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கி வந்த பத்திரிகைகள் இன்று சினிமா, விளையாட்டு, பிரதேசவாரியான அபிவிருத்திச் செய்திகளையும். அரசியல் அலசல்களையும், சுகாதார மற்றும் உடல், உளநல விஞ்ஞான, ஆய்வியல், கல்விப்பகுதி போன்ற இன்னோரன்ன கட்டுரைகளையும் தாங்கிவருகின்ற நிலையில் பத்திரிகைகள் காணப்படுகின்றன. பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாப்படும் என்று வாய்கிழிய பேசுகின்ற சிலரது பார்வையில் சில பத்திரிகைகளை மக்கள் கண்டுகொள்ளாததும் கவலைக்குரிய விடயமாகும். நடுநிலைமை வகிக்காது பக்கச்சார்பான பத்திரிகைகள் பலவும் நாட்டுக்குள் உலாவருகிறது. இதனையும் கவனித்து உண்மையான பக்கசார்பற்ற பத்திரிகைளை இனங்காண்பதும் ஒருவகையில் சிறந்தவாசிப்புக்கு தீணியாக அமைகின்றமை நோக்கத்தக்கதாகும்.

எனவேதான் மக்களின் குழப்பத்திற்கு வழிவகுக்கக்கூடிய செய்திகளையும், ஆதாரமற்ற செய்திகளையும், நம்பத்தகுந்த செய்திகளையும் பிரசுரிப்பதனால் மக்களின் மீதான நம்பிக்கை குறைவடைந்து செல்கின்ற பத்திரிகைகளும் எம்மத்தியில் இருந்த இடம் தெரியாது போன சரித்திரமும் நமக்குத் தெரியாததா என்ன? அதேNவைள சில பத்திரிகைகள் உரிய பிரதேசத்தின் செய்திகளை பிரசுரித்து மக்களின் மனங்களில் விரைவில் இடம் பிடிப்பதற்காகவேண்டி பிரதேசத்து முக்கிய புள்ளிகளின் வயிற்றில் புளிக்கரைக்கும் விடயங்களை போட்டு வாங்கிக் கட்டிய சம்பவங்களும் உண்டு. அவ்வாறான பத்திரிகைகள் தம்முடைய சிலநோக்கங்களை அடைந்து கொள்வதற்காக வேண்டிய வெளியிடப்படுகின்றன. எழுதும் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக இல்லாதது பொல்லாதது என எல்லாவற்றையும் அலசுவதும், அதனை பிரசுரிப்பதும் ஆபத்தான விளைவுகளையே தரும். அதேவேளை நாட்டினதும், மக்களினதும் நலன்கருதி செய்திகளை அறியச்செய்வதில் பத்திரிகைகளுக்குள்ள தார்மீகப் பொறுப்புக்களையும் அறிந்து பிரச்சினைகளை உண்டுபண்ணாதவகையில் பிரசுரிப்பதும் அவசியமாகும்.

மறுபக்கம் பார்ப்போமானால் உலகில் உண்மைத்தன்மை மிக்கதான செய்திகளை பிரசுரிக்கின்றபோது செய்தியாளர்களும், பத்திரிகைகளும் பாதிக்கப்படுவதையும் பார்க்கிறோம். உலகில் கடந்த பல வருடங்களில் ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளளனர். கடந்த 2004ஆம் மட்டும் 129பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அண்மையில்கூட பல பத்திரிகையாளர்கள் இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டு வருகின்ற சம்பவங்களும் அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில், உண்மையை எழுதுவதற்கு தயங்குகின்றனர். அவர்கள் எழுதியவை, கூறியவை தொடர்பாக ஒருவர் விருப்பம் இல்லாமலிருந்தமையாகும். ஒருவர், ஆராயக்கூடாததை ஆராய்ந்தமையினாலாகும், ஒருவர் ஊடகவியலாளர்களை விரும்பாமையினாலாகும். தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்த காரணத்தினாலாகும். எனவே இந்த பத்திரிகைத்துறையானது மிகவும் ஆபத்தானது என்பது ஒருபுறம் இருப்பினும், ஒருவருக்காக வேண்டி சமுதாயம் பாதிக்கின்ற விடயங்களுக்கு முன்னுரிமைவழங்கி செய்திகள் பிரசுரமாகின்றபோது பிரச்சினைகளும், அடிதடிகளும், உயிராபத்துக்களும், நடைபெறுகின்ற நிலைமைகளை இல்லாதொழிப்பதும், பத்திரிகைச்சுதந்திரத்தை காப்பாற்றுவதற்காக வேண்டியே, அன்று உலகப் பத்திரிகை தொடர்பான பிரகடனம் வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தநாளை உலக பத்திரிகைகள் அமைப்பு உலகளாவிய ரீதியில் கொண்டாடி வருகின்றன. உண்மையில் பத்திரிகைகள் சுதந்திரமான செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி செய்திகளை வெளியிடுகின்ற போதுதான் அவற்றை மக்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கை வீணாகபோகாதவாறு பத்திரிகைதுறை சார்ந்தோருக்கு உயர்விருதுகள் வழங்கப்படுகின்றன. சமூகத்தின் நண்மை கருதி பிரசுரிக்கப்படுகின்ற செய்திகள் மக்கள் சக்தியாக போற்றப்படும். போர்வீரனின் வாளைவிட எழுத்தாளனின் பேணாமுனை வலிமையானது என்பர். சர்வதேச ரீதியிலும் எழுத்தாளர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு அவர்களுக்கான கருத்தாடல்கள், நம்பிக்கைகள் ஊட்டப்பட்டு வருவதுடன், ஊடகத்தின் மூலமாக சமாதனம், பிரஜைகளின் ஊடகவழிமுறைகள், ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்புச் செயன்முறைகள் போன்ற சர்வதேச பட்டறைகள் வழங்கப்பட்டு, சரியான நேரத்தில் சரியான விபரங்களை சரியாக தொகுத்து வழங்குகின்ற ஊடகவியலாளராக அமைகின்றபோது அது தீர்க்கமான சகவாழ்வுக்கு உந்து சக்தியாக அமையும். அவ்வாறான உண்மைகளை எழுதுகின்றபோது சில சில அரசியல்வாதிகள் தங்களை இழிவுபடுத்திவிட்டது என்கிற காரணத்தை மையப்படுத்தி நீதிமன்றம் செல்கின்ற போக்குகளும் காணப்படுகின்றது. விடயத்தைச் சுட்டிக்காட்டுகின்றபோது அதற்குரிய பரிகாரத்தை செய்கின்ற ஒரு நிலை அரசாளும் அரசிடமும், அதிகார வர்க்கத்திடமும் காணப்படுமானால் நீதிகளும், சமசர்மபோக்கும், மக்களுக்காக சேவை செய்கின்ற தார்;ப்பரியமும் உண்மைத்தன்மையான நிருவாகக் கட்டமைப்புக்;களும் மேலோங்கிக் காணப்படும்.

அந்த வகையில் யுனெஸ்கோவின் அண்மைக்கால பிரகடனங்களுள் மிகவும் குறிப்பிடத்தான விடயமாக கருதப்படுகிற ஒருவிடயமாக ஊடகங்களின் பன்மைத் தன்மையும், சுதந்திரமும்(வின்ட் ஹொக், நமீபியா – 1991) சகிப்புத்தன்மை (பரீஸ் - 1995) முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. அதாவது இந்தப்பிரகடனமானது 'ஒருநாட்டில் சிறந்த ஜனநாயகத்தை பராமரிக்கவும், பொருளாதார அபிவிருத்தியின் மேம்பாட்டுக்கு உதவுவனவாகவும், சுதந்திரமானதும், பல்லினத்தன்மைவாய்ந்த பத்திரிகைத்துறையை உருவாக்கவும், அதை படிப்பதற்காக வெளியிடுவதனையும் வலியுறுத்தியே' இவை முன்மொழியப்பட்டுள்ளன. அதனை கட்டிக்காத்து வருடாந்தம் சிறந்த பத்திரிகைகளுக்கு 'புரடைடநசஅழ ஊயழெ' பெயரில் உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான பரிசுகள் வழங்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாக்கப்படவும். சுதந்திரமான எண்ணக்கருக்களை வெளியிடவும் உரிமையுள்ளது. இதனால் பத்திரிகைகளுக்கும், அதன் செய்தியாளர்களுக்கும் ஏற்படுகின்ற தாக்கங்களை இத்தினத்தில் நினைவுகூறல் அவசியமானது என்பதை யுனெஸ்கோ அமைப்பு சில விடயங்களை முன்னிறுத்தியுள்ளது. அதாவது இன்றைய நாளில் பத்திரிகைச்சுதந்திரத்திரம் பாதுகாக்கப்படும் நோக்கில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை உட்சாகப்படுத்தி, ஆக்கபூர்வமான முறையில் விருத்தி செய்தல், உலக ரீதியாக பத்திரிகை சுதந்திரனது நிலையை மதிப்பிடவும், பத்திரிகை சுதந்திரம் மீதான நடவடிக்கைகளுக்கு மதிப்பளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தல், பொதுமக்களுக்கு இவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பத்திரிகை மீதான பத்திரிகைசுதந்திரம் பற்றி பத்திரிகையாளர்களிடையே விவாதங்களை மேற்கொள்ளல், பத்திரிகையாளர்கள் தம்முடைய தொழிலின் நிமித்தம் கடமையின் போது காணாமல் போனவர்களினது பெயரில் நினைவுபடுத்துவதும், பத்திரிகை சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றபோது எற்படுகின்ற பத்திரிகைகளுக்கு எதிராக ஏற்படுகின்ற அடக்குமுறைகளுக்கு எதிராக குரல்கொடுப்பது போன்ற விடயங்களில் முன்னுரிமை வழங்கியே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

அதேவேளை இலங்கைப் பத்திரிகை புகார்கள் ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொழில் ஒழுக்கக்கோவையில் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பார்க்கிறபோது ஒவ்வொரு ஊடகவியலாளரும் தொழிலின் கௌரவத்தைப் பேணும் வகையில் நடந்துகொள்வதுடன், நாட்டினதும், பொதுமக்களினதும் நலன்கருதி சனநாயகம் மற்றும் அடிப்படை மனித உரிமைகளைப்பாதுகாத்தல் அத்துடன் குற்றச் செயல், ஊழல், சீர்கெட்ட பரிபாலனம் அல்லது பாரிய தவறொன்றினைக் கண்டு பிடித்தல் அல்லது அம்பலமாக்குதல் விடயங்களில் மிகக் கவனமாக செயற்பட்டு தமது சமூகப் பொறுப்புடன் செயலாற்றுதல் அவசியமாகும் என்பதை வலியுறுத்தியுள்ளன.

இதன்படி பார்க்கின்றபோது இன்று நமது நாட்டுப்பத்திரிகைகளில்கூட நமது நாட்டில் நடைபெறும் அன்றாட அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, மதவிவகார, சட்டம் போன்ற பல்துறை சார்ந்த விடயங்களை நேரிடையாக எழுதுவற்கு துணிவின்றிக் ஊடகவியலாளர்கள் காணப்படுகின்றனர். மறைமுகமாக வேறுபெயர்களில் எழுதுகின்ற நிலை காணப்படுகிறது. உண்மையான எழுத்துச் சுதந்திரத்தை சரியான முறையில் அமுல்படுத்துவதில் அரசு காட்டும் அக்கரையின்மையே துணிவின்றி காணப்படுவதற்கான காரணமாக அமைந்துள்ளதாக நோக்கப்படுகின்றது. முழுமையாக அரசுக்கு சார்பாக எழுதுகின்ற ஒருநிலைப்பாடு காணப்படுவதன் காரணமாக செய்திகளில் அல்லது அந்தப் பத்திரிகைகளைப் பார்ப்பதற்குக்கூட மக்கள் வெறுப்புற்ற நிலையும் காணப்படுகிறது. இது உண்மையான பத்திரிகை சுதந்திரமாகக் கொள்ள முடியுமா என்ன? மக்களுக்கு ஊடகங்கள் தொடர்பான உரிமைகளும், பொறுப்புக்களும் உள்ளன என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. உண்மையிலேயே ஊடக சுதந்திரம் என்பது பிரஜைகளின் உரிமையேயொழிய ஊடக நிறுவனங்களின் உரிமையல்ல. ஊடகவியலாளர்களும், நிறுவனங்களும் இந்தமக்கள் சார்பாக இவ்வுரிமையை நிறைவேற்றுவதற்கு தங்களை அர்ப்பணித்துள்ளனர். இதனை தெரிந்து கொள்ள முடியாத நமது மக்களை சில படப்பிடிப்பாளர்கள் அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாகி எழுதவும் தெரியாது, ஊடகம் என்றால் என்னவென்றும் புரியாத சிலர் அடையாள அட்டைகளுடன் பத்திரிகைக்காரர்கள் என்று போலித்தனம் செய்து மக்கள் மத்தியில் உலாவருகின்றனர். இவர்கள் உண்மையான ஊடகவியலாளர்கள்தானா? என்பதை சமூகம் இனங்கண்டுகொள்ள வேண்டும்.

உண்மையான சமூக சிந்தனையுள்ள, சமூகத்தின் உண்மைத்தன்மைகளை வெளிக்கொணரவைக்கின்ற ஊடகவியலாளர்கள் இருக்க ஒருசில படங்களை மாத்திரம் பிடித்துக் கொண்டு நாங்களும் ஊடகவியலாளர்கள்தான் என்கிற மமதையில் கிராமப்புறங்களில் சிலர் ஊடறுக்கின்றனர். இவர்களைப் போல அன்று ரிச்சட் டி சொய்சா, ரோகன குமார, ரமேஷ் குமார், பாலநடராஜா, நிமலாராஜன், லசந்த விக்கிரதுங்க, ஆரியரத்ன தொம்பகாவத்தை இன்னும் பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும், படுகொலையும் செய்யப்பட்டனர். இவர்கள் செய்தது சமூகத்தில் காணப்படுகின்ற அக்கிரமங்கள், ஆட்சியதிகாரங்களின் வீரோதத்தன்மைகளை, குழிபறிப்புக்கள் போன்றவைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததுதான் இவர்கள் செய்த குற்றங்களாகும். இன்று இதனைத் தவிடுபொடியாக்குகின்ற நிலமையிலிருந்து விடுபட்டு உண்மைத்தன்மையான விடயங்களை வெளிக்கொணர்வதற்கு பத்திரிகையாளன் காரியமாற்ற வேண்டும். இன்று பட்டிதொட்டியெல்லாம் பத்திரிகையாளர் மாநாடுகள் நடாத்தப்படுகின்றன. அந்தளவுக்கு பத்திரிகைகள் சமூகத்தின் காலக்கண்ணாடியாக மாறியுள்ளது. தங்களது கருத்துக்களை வெளியிடுகின்ற சுதந்திரம் ஒருபக்கமிருக்க சிலர் தங்களை அடையாளப்படுத்துவதற்காக பத்திரிகையாளர் மாநாடுகள் என்கிற பேரில் ஒருசில பத்திரிகையாளர்களை அழைத்து நடாத்துவது கேலிக்கூத்துக் ஒப்பான விடயமாகவே பார்க்கப்படுகிறது. இது தவிர்க்கப்பட்டு உண்மையான, சமூகத்திற்கு உதவிடும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு விடயத்திற்கு பத்திரிகைகள் உதவிடுகின்ற அதேவேளை பத்திரிகையாளர்களின் எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்படாது பாதுகாக்கப்படுகின்ற மேம்பட்ட சமூகத்தைக் கட்டியெழுப்புகின்ற ஊடகமாக தொழிற்படுவதற்கும் இன்றைய நாளை நினைவுகூறல் வேண்டும்.

எனவே, பத்திரிகைகள் உண்மைத்தன்மை, பக்கச்சார்பற்ற தன்மை, சமூகத்திற்கு தீங்குவிளைவிக்காதவாறு செய்திகளை வெளியிடுவதில் மிகவும் அவதானமாக செயற்படுதல் வேண்டும். சமூதாயத்தை தீய வழியில் செல்லுகின்றவாறு செய்திகளை வெளியிட்டு குழப்பங்களுக்கு தூபமிடக்கூடியவாறு பத்திரிகைகள் நடவாது பார்த்துக்கொள்ள வேண்டிய பாரியபொறுப்பும் உண்டு. இந்த நிலைகைள் இருபக்கமும் சாதக பாதக நிலையில் நின்று சிந்திக்;கின்ற நிலை தோற்றம் பெறல்வேண்டும். செய்திகளின் அடிப்படையில் அரசியல் வாதிகளாலும், அவர்களது அடியாட்களாலும் ஏற்படுத்தப்படுகின்றன பத்திரிகைச்சுதந்திர மீறல்கள் ஒழிக்கப்பட்டு சிறந்த தொடர்பூடகத்தன்மை அச்சூடகங்களுக்கு கௌரவத்;தன்மை வழங்கவும் வேண்டியே உலக பத்திரிகை சுதந்தி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதனை முன்னின்று செயற்படுத்த இன்றைய நாளை நினைவுறுவோம்.

எஸ். எல். மன்சூர் (B.Ed)

முஸ்லிம்கள் வபாத்தாவதற்க்கு கவலை வெளியிட்ட ஒசாமா பின்லேடன்..


வாஷிங்டன், மே, 04 : அமெரிக்கப் படைகளால் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு ஓராண்டுகள் நிறைவடையும் நிலையில், ஒசாமா அரேபிய மொழியில் கைப்பட எழுதிய கடிதங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அல் கய்தா அமைப்பு ராணுவத்தை குறி வைத்து செய்யும் தாக்குதலில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவது மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும், தாக்குதல் நடத்தும் போது முஸ்லிம்கள் சாகாமல் இருக்கும் வகையில் திட்டமிட வேண்டும் என்றும், அல்கய்தா அமைப்பினருக்கு ஒசாமா கடிதம் எழுதியுள்ளார்.

நன்றி - தினமணி

அமெரிக்காவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், அலறும் பிற நாடுகளும்..


அமெரிக்கா, மே 04 : முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரச்சாரம் தீவிரமாக நடக்கும் வேளையிலும் கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் முஸ்லிம் மக்கள்தொகை மிகவும் அதிகரித்துள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

2000-ஆம் ஆண்டில் 10 லட்சமாக இருந்த முஸ்லிம் மக்கள் தொகை 2010-ஆம் ஆண்டில் 26 லட்சமாக அதிகரித்துள்ளது.இத்தகவலை Association of Statisticians of American Religious Bodies (ASARB) உறுப்பினர் டெய்ல் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவர்கள் தற்பொழுது அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால், 26 மாநிலங்களில் மர்மோன் என்ற மத நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 45 சதவீதம் அதிகரித்துள்ள இம்மதத்தினர் 61 லட்சம் பேர் அமெரிக்காவில் உள்ளனர். அதேவேளையில் எந்த மதத்தையும் சாராதவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

அமெரிக்காவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகம் பேர் இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளில் இவர்களில் 5 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 5.89 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாழுகின்றனர். கிறிஸ்தவ கத்தோலிக்க பாதிரியார்களின் பாலியல் சேட்டைகள் வெளியானதைத் தொடர்ந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் 10 லட்சம் பேர் உள்ளனர். ராக்கி மவுண்டன் மாநிலத்தில் இவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்

முத்துப்பேட்டையில் ரோட்டில் அனாதையாக இருந்த குழந்தையை மீட்டு போலீசிடம் ஒப்படைப்பு..



முத்துப்பேட்டை,மே 04 : முத்துப்பேட்டையில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக அழுந்து கொண்டு இருந்தது. அதனைக்கண்ட ஒரு சிலர் குழந்தையிடம் விசாரித்ததில் தந்து பெயர் மோகன வள்ளி என்றும், என்னை பெற்றோர்கள் விட்டு விட்டு பேருந்தில் சென்றதாகவும் அப்போது அது கூறியது. இதனைக் கண்ட பொது மக்கள் கூட்டமாக கூடியது. பிறகு அங்குள்ள சில பொது மக்கள் அருகில் உள்ள முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் குழந்தையை ஒப்படைத்தனர். அப்போது குழந்தையிடம் போலீசார் விசாரித்தபோது தனது தந்தையின் தொலைபேசி நம்பரை கொடுத்துள்ளது. இதனை பெற்ற போலீசார் செல் நம்பருக்கு தொடர்பு கொண்டு பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு வரவலைத்தனர். பின்னர் விசாரித்த பொது பெண்ணின் பெயர் மோகன வள்ளி, வயது ௫, தந்தை பெயர் செந்தில் விஜயபாலன், அம்மா ரதி, திருப்பூர் பாரதி நகரில் வசித்து வருவதாகவும், தெரிய வந்துள்ளது. மேலும் முத்துப்பேட்டை அருகில் உள்ள விளாத்து வெளி கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேசத்திற்காக வருகை தந்துள்ளதாகவும், முத்துப்பேட்டையில் உள்ள ஒரு லாஜில் தங்கி உள்ளதாவும், வேலை விசயமாக நானும் எனது தாயார் லோகேஷ் நாயகியும் பேருந்து ஈறி ஊருக்கு சென்றோம் இதனை பார்த்த மோகன வள்ளி பின்னாலை வந்திருப்பதாக தெரிகிறது. சில நிமிடத்திலேயே தந்தையை காணாமல் தவித்ததும் தெரிகிறது. பின்னர் முத்துப்பேட்டை போலீசார் நீண்ட விசாரணைக்கு பிறகு தந்தை செந்தில் விஜய பாலன், பாட்டி லோக நாயகி வசம் குழந்தையை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, யூசுப் அலி (ஆலிம்)

காங்கிரஸ் பெண் எம்.பியை சித்திரவதைச் செய்த மோடி போலீஸ்!


டெல்லி,மே 03 :குஜராத் மாநிலத்தை ஆளும் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியின் போலீஸ் காங்கிரஸ் பெண் எம்.பியை சித்திரவதைச் செய்துள்ளது. இதுத்தொடர்பான புகாரை மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி பிரபாபென் டேவியாட் கண்ணீர் விட்டு அழுது கூறினார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு இந்திய வரலாற்றிலேயே மிகவும் கோரமான முஸ்லிம் இனப்படுகொலைகள் நிகழ்ந்தன.மோடியின் தலைமையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட கோரத்தாண்டவத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்திற்கு பிறகு மோடி தனது இமேஜை மேம்படுத்துவதற்காக பல்வேறு நாடகங்களை ஆடி வருகிறார். ஆனாலும், அவ்வப்போது அவரது உண்மை முகம் வெட்ட வெளிச்சமாகி வருகிறது.குஜராத் மாநிலம் உருவான 52-வது நாள் நேற்று பழங்குடிகள் அதிகம் வசிக்கும் டகோட் மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நரேந்திர மோடி தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து காங்கிரஸ் எம்.பி பிரபாபென் டேவியாட், 4 எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். ஆனால் இதைத் தடுத்த போலீசார் பிரபாபென், 4 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.இன்று இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எம்.பி. பிரபாபென் எழுப்பினார். அப்போது தம்மை போலீசார் தான் உள்பட கைது செய்யப்பட்ட அனைவரையும் துன்புறுத்தியதாகவும் தமது இரண்டு கைகளில் இருக்கும் காயத்தையும் கண்ணீரோடு அவர் கூறினார். அவருக்கு ஆதரவாக காங்கிரசின் கிரிஜா வியாஸ் எழுந்து குரல் கொடுத்தார்.
இதையடுத்து எழுந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் மாநில அரசுடன் பேசுவதாக உறுதியளித்தார். அதேசமயம், இந்த விவகாரத்தை நாடாளுமன்ற உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.

முத்துப்பேட்டையில் நடைபெற்ற SDPI -யின் நகர கூட்டம்.




முத்துப்பேட்டை,மே 02 : முத்துப்பேட்டை யில் நேற்று SDPI யின் நகர கூட்டம் கட்சியின் மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முத்துப்பேட்டை நகரங்களில் சிலிண்டர் சரியாக விநியோகம் சரிவர செய்ய வில்லை என்றும், மேலும் உரியவரிடம் சிலிண்டர் விநியோகம் செய்யாமல் இருப்பதாலும் கேஸ் விநியோகம் இவற்றை நல்ல நடைமுறைக்கு கொண்டு வரும் விதமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு கட்சியின் தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன், நகர செயலாளர் மைதீன் , நகர தலைவர் ரஹ்மத்துல்லாஹ், நிசார் மற்றும் ஷேக் மைதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நமது நிருபர்

O.M. சுபைத் கான்

சவூதி, தமாமில் உதயமான முத்துப்பேட்டை இஸ்லாமிய சமூக சேவை நல இயக்கம்.MISWA.


சவூதி அரேபியா, மே 02 : முத்துப்பேட்டை இஸ்லாமிய சமூக நல இயக்கம் (MISWA) வின் 2012 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு தமாம் க்ளோப் கேம்ப்பில் ஜனாப். M.முஹம்மது முஹைதீன் அவர்களின் தலைமையில், நடைபெற்றது. மேலும் இதற்க்கு ஜனாப். D.ஜைனுல் ஆப்தீன் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த கூட்டம் ஜனாப். N. ஹசன் குத்தூஸ் அவர்களின் கிராத்துடன் துவங்கியது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களின் விபரம் பின் வருமாறு:
கெளரவ தலைவர், ஜனாப். M.முஹம்மது முஹைதீன், தலைவர். HMA .மன்சூர், துணைத் தலைவர்.ஜனாப்.SA.ஷாகுல் ஹமீது, பொது செயலாளர். ஜனாப்.SA.ஜாகிர் ஹுசைன், செயலாளர்களான,ஜனாப்.M.அஹமது தம்பி, ஜனாப்.H.செக்கரியா, பொருளாளர் ஜனாப். SA.அப்துல் ரஹ்மான்,
ஆலோசனைக்குழு:
ஜனாப்.D .ஜைனுல் ஆப்தீன்
ஜனாப்.M . நைனா முஹம்மது
ஜனாப்.P . ஹாஜா மைதீன்
ஜனாப்.SA . தாவுத் கான்.
மற்றும் முத்துப்பேட்டை மிஸ்வா பிரதிநிதிகலாவன, ஜனாப்.NSH . ஜாகிர் உசேன் சூப்பர் டிராவல்ஸ், ஜனாப்.SA.சாதிக் பாட்சா, பாட்சா டைல்ஸ். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு கடிதம் வந்துள்ளது. இதில் முத்துப்பேட்டை வாழ் தமாம் அனைத்து சகோதரர்களின் ஏக மனதாக நிர்வாகிகள் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள்வர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜனாப். K.ராஜா முஹம்மது அவர்களின் நன்றி உரையுடன் இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

முத்துப்பேட்டை தெற்குத்தெரு இளைஞர்கள் நடத்தும் மாணவர்களுக்கான பயிற்சி முகாம்




முத்துப்பேட்டை,மே 01 : முத்துப்பேட்டை தெற்குத் தெரு இளைஞர்கள் மற்றும் முத்துப்பேட்டை வெளிநாட்டுவாழ் நண்பர்கள் இணைந்து நடத்தி வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நமது அரபு சாகிப் பள்ளிவாசலில் இன்று 01.05.2012 முதல் துவங்கி அடுத்த மாதம் 01.06.2012 வரை நடைபெறும். இதில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு நல்ல முறையான பயிற்சிகளை பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி முகாம் முடிவில் 30 நாள் நடைபெற்ற பாடத்தை குறித்து தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வில் வெற்றி பெரும் முதல் 3 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.மேலும் இதில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். இதன் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். M. தப்ரே ஆலம் பாதுஷா தெற்குத் தெரு அவர்கள்.
source from: www.mttexpress.com,www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்), O.M.சுபைத் கான்

திருக்குர்ஆனை எரித்து மகிழ்ந்தான் கிறிஸ்த்தவ பாதிரி - அமெரிக்காவில் அசிங்கம்.


அமெரிக்க, மே 01 : ஈரான் சிறையில் அடைக்கப்பட்டு மரணத்தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கும் கிறிஸ்தவ பாதிரியாரை விடுதலைச் செய்யாவிட்டால் திருக்குர்ஆன் பிரதியை எரித்து, இறைத்தூதரின் படத்தை வரைவேன் என்று மிரட்டல் விடுத்த அமெரிக்காவைச் சார்ந்த கிறிஸ்தவ பாதிரி டெர்ரி ஜோன்ஸ் புனித திருக்குர்ஆனின் பிரதியை எரித்துள்ளான். ஃப்ளோரிடாவைச் சார்ந்த பாதிரியான டெர்ரிஜோன்ஸ் இந்த ஈனத்தனமான செயலலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் 271 டாலர் மட்டும் அபராதம் விதித்துள்ளது. மேலும் அங்கு வந்த தீயணைப்பு படையினர் ஜோன்ஸிற்கு அடிகொடுத்து கவனித்தனர். ஆனால், உலக முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்திய ஜோன்ஸ் கைது செய்யப்படவில்லை. சில தினங்களுக்கு முன்பு ஜோன்ஸ், புனித திருக்குர்ஆனின் பிரதியை எரிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தான். இதற்கு முன்பும் இதேபோன்றதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளான் ஜோன்ஸ். ஆனால், அமெரிக்க அரசு ஜோன்ஸ் மீது உரிய நடவடிக்கையை இதுவரை எடுக்கவில்லை.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்,

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)