முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

அரசு வேலைவாய்பு! - இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி?


சென்னை, பிப்ரவரி 12 : தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.

இதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இணையதள முகவரி : www.tnvelaivaaippu.gov.in

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு : TJD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர்

ஆன்லைனில் பதிவு செய்யும் முறை :

1. ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?

இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.

2. கூடுதல் பதிவு செய்வது எப்படி ?

ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.

3. ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா ?

ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.

4. விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா ? என்பதை எப்படி அறிவது ?

தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும் (password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்

5. ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா ?

ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்

6. ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை (priority certificate) பதிய இயலுமா ?

முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.

7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார் ?

இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.

8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை ?

நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.

நமது நிருபர்

சேக்கனா M.நிஜாம்.

சட்டசபையில் ஆபாச படம் பார்த்த பாரதீய ஜனதா கட்சியின் 3 அமைச்சர்கள் வெளி ஏற்றம்.





ஆந்திரா, பிப்ரவரி 09: பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான கர்நாடகாவில், நேற்று மதியம் மாநில சட்ட சபையில் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அந்த மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் சவதி சட்டசபை விவாதத்தை கவனிக்காமல் தான் வைத்திருந்த மொபைல்போனில் ஆபாச படத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தார் என்பது கர்நாடக மக்கள் தலைகுனிய வேண்டிய வெட்கக்கேடான விசயமாகும். அது மட்டுமல்லாமல் அவர் அருகில் அமர்திருந்த பெண்கள் நலத்துறை அமைச்சர் சி.சி. பாட்டிலும் அவர் கூட சேர்ந்து கொண்டு அவற்றை பார்த்தது இதைவிட ஒரு வெட்க கேடான விஷயம் இல்லை என்றே சொல்லலாம். மக்களைப் பற்றிய சிந்தனை இல்லாதவர்களை, ஒழுக்ககேடானவர்களை, சட்ட மன்றத்திற்கு அனுப்பினால் இப்படித்தான் நடக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும். இந்த மிருகங்களின் செயல்களை கண்டிக்காமல், தண்டிக்காமல் தொடர்ந்து சட்டமன்றத்தில் அனுமதித்தால் சட்டசபைலேயே "காபரே நடனம்" கூட கூசாமல் பார்க்கும் துணிச்சல் இவர்களுக்கு வந்துவிடும். இவர்களையெல்லாம் சட்ட சபையிலிருந்து மட்டுமல்ல அரசியலை விட்டே மக்கள் தூக்கி எரிய வேண்டும். ஏனெனில் இவர்கள் சமூகத்தின் விசப்பாபுகள்
source from: www.mttexpress.com,
தொகுப்பு

ரிப்போர்ட்டே இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டையில் மூத்த குடிமக்கள் நடத்தும் இருதய பரிசோதனை மருத்துவ முகாம்..



முத்துப்பேட்டை, பிப்ரவரி 09 : முத்துப்பேட்டை மூத்த குடிமக்கள் பேரவை சார்பில் சிறப்பு இருதய பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று இப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். நியூ மெடிக்கல் S .சகாப்தீன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், முத்துப்பேட்டை மூத்த குடிமக்கள் பேரவை மூலம் ஊருக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செய்ய உள்ளதாகவும், அதில் முதல் காரியமான முத்துப்பேட்டையில் பழைய துறைமுகம் இருந்த அதே இடத்தில் மீண்டும் கொண்டு வர இருக்கிறோம் என்றும், முத்துப்பேட்டையில் அகல ரயில் பாதையாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள போகிறோம் என்றும், மேலும் மூத்த குடிமக்களுக்கு அரசுகள் மூலம் கிடைக்கக்கூடிய பல்வேறு நல திட்டங்களை இதன் மூலம் பெற்று தர பாடுபடுவோம் என்றும், அவர் தெரிவித்தார். இந்த செயல் திட்டத்திற்கு இளைஞர்கள் நல் ஆதரவு தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். முத்துப்பேட்டை மூத்த குடிமக்கள் பேரவை, முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம் மற்றும் கோவை KG . மருத்துவமனை இணைந்து இருதய பரிசோதனை மருத்துவமுகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதில் எக்கோ ஸ்கேன் (ECHO SCAN),E .C.G . இரத்த சர்க்கரை பரிசோதனை, உணவியல் ஆலோசனை மற்றும் இருதய மருத்துவர் ஆலோசனை உட்பட அனைத்தும் வெறும் 500௦௦ ரூபாயில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடம்: சிதம்பர மஹால் பேங்க் தெரு முத்துப்பேட்டை, நாள்: 11 .02 .2012 சனிக்கிழமை, காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது. எனவே அனைத்து மக்களும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முத்துப்பேட்டை மூத்த குடிமக்கள் பேரவையின் பொறுப்பாளர்கள்:
நியூ மெடிக்கல் S .சகாப்தீன், S .பன்னீர் செல்வம் ரோட்டரி கிளப், M.முஹம்மது முஹைதீன் Ex .கவுன்சிலர், கோ. அருணாச்சலம், MA .இபுனு ஹமீது, MKN . முஹம்மது முஹைதீன்,வெங்கட் ராஜ், KM . தலைர் ஹனிபா. இளைஞர்கள் உறுதுணையாளர்கள்: அமீருதீன் நியூ மெடிக்கல், S .சேக் அப்துல்லாஹ் கேம்ப் ஆஸ்திறேலியா.
source from www.mttexpress.com
நமது நிருபர்

J . ஷேக் அப்துல் காதர்

முத்துப்பேட்டை: அறிவியல் தேர்வுக்கு ரூபாய் நோட்டில் பிட் அடித்த மாணவர்..!!!



முத்துப்பேட்டை, பிப்ரவரி 08 : ருபாய் நோட்டு என்பது நமது நாட்டின் சொத்தாகும், அப்பணத்தை சேதமாக்குவதும், அவமதிப்பதும் சட்ட பூர்வமான குற்றங்களில் ஒன்றாகும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.ஆனால் அதற்க்கு மாறாக பணத்தில் பெயர் எழுதுவது, முகவரி எழுதுவது, செல் நம்பர் எழுதுவது, கவிதை எழுதுவது, கையொப்பம் போடுவது என சில குசும்பு வேலைகளை நீண்ட காலமாக சில சமூக விசமிகள் செய்து வருகிறார்கள். அவற்றை நாமும் கண்டிருப்போம். இதனை பார்த்த நல்லவர்கள் கூட வழிதவறி நடக்க விசமிகள் செய்து வருகிறார்கள். ஆனால் இதை தடுக்க அரசு எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மேலும் இப்படி ரூபாய் நோட்டுகளை வைத்து தவறுக்கு மேல் தவறு செய்து வரும் சமூகவிரோத நபர்கள் தாம் படிக்கும் பள்ளி தேர்வுக்கு ரூபாய் நோட்டை பயன்படுத்துகிறார்கள் என்று கேட்கும் போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதுக்கு உதாரணம் இந்த பத்து ரூபாய் நோட்டு. முத்துப்பேட்டையில் உள்ள சேகர் என்பவரது கடைக்கு வந்த இந்த ரூபாய் நோட்டுதான். இந்த ரூபாயில் எழுத்தப்பட்டிருந்தது அறிவியல் படத்திற்கான பிட் ஆகும்.இதில் ஓர் பென்சிலால் மிக தெளிவாக எழுதப்பட்டிருந்தது. படித்து நல்ல பனி யில் சேர்ந்து இந்த நாட்டிற்காவது நமது மகன் ஏதாவது செய்வான் என்று தந்தைகள் நினைப்பார்கள். ஆனால் சிறிய தொகை கொண்ட இந்த ரூபாயை கூட மதிக்கத்தெரியாத இந்த விரோதிகள் எப்படி நாட்டை பாதுகாப்பார்கள்.? இதனைத் தடுக்க இந்திய அரசு திறந்தரமான தீர்வை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நற்குணம் உள்ள மாணவர்கள்.
source from: mttexpress.com, www.muthupettaixpress.com, www.muthupettaiepxress.com,
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

முத்துப்பேட்டை பேரூராட்சியில் நினைத்தால் மட்டும் ஊதும் சங்கு, ஓர் பார்வை...



முத்துப்பேட்டை, பிப்ரவரி 08 : முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 35 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இஸ்லாமியர்கள் பெரும் அளவில் வசிக்கும் இப்பகுதியில் இருக்கும் பேரூராட்சிக்கு நல்ல வருமானமும் ஈட்டு வருகிறது. இதனால் முத்துப்பேட்டை பேரூராட்சியை, நகராட்சியாக மாற்றும் திட்டமும் தமிழக அரசுக்கு உள்ளது. தனி தாலுக்காவாக அறிவிக்கப்பட்டும் அது தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இப்படி தனி பெருமைப் பெற்ற பேரூராட்சி வளாகத்தில் 1989 ஆம் ஆண்டு பல லட்சம் செலவில் தனி கோபுரமாக அமைக்கப்பட்ட சங்கு பயன்பாட்டில் உள்ளது. அந்த சங்கு காலை 5 , 9 மணிக்கும் மதியம் 1 மணிக்கும் இரவு 9 மணிக்கும் ஊதப்பட்டு நடைமுறையில் இருந்தது. இஸ்லாமியர்களின் நோன்பு கால கட்டத்தில் அதிகாலை 4 .30 மணிக்கும் மாலை 6 .30 மணி்கும் சங்கு ஒழித்து வந்தன. ஆனால் தற்போது இந்த சங்கு நினைத்தால் ஊதுவதும், நினைக்காவிட்டால் ஊதாமல் இருப்பதும் நடைமுறையாகிவிட்டது.தினமும் சங்கை ஏன் பயன்படுத்துவது இல்லை.இப்படி நல்ல முறையில் இயங்கும் சங்கை பயன்படுத்த ஏன் பேரூராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது என்று பொது மக்கள் மத்தியில் கேள்வி எழும்பி உள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர்கள், இந்த வேலை எங்களுக்கு உரியது அல்ல என்றும், இதற்காக ஓர் தனி நபரை பனியில் அமர்த்திதான் அவற்றை இயக்க வேண்டும் என்றும் அப்போது அவர்கள் தெரிவித்தனர். சங்கு போடுவதற்கு ஒரு மணிநேரம் கூட ஆகாது அதற்க்கு ஏன் தனி நபர் என்றும், அவருக்கு தனி சம்பளம் அரசு பணத்தை ஏன் வீணடிக்கும் செயல் என்றும் மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து பேரூராட்சி கவுன்சிலர் ஜனாப். ஜபருல்லாஹ் கூறுகையில், சங்கு பயன்படுத்துவது ஓர் சாதாரண விஷயம் என்றும், இது குறித்து பேரூராட்சி மன்றத்தில் பல முறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி மன்றம் தொடர்ந்து அலட்சியப்போக்கில் இருந்து வருகிறது என்றும், அவர் தெரிவித்தார். மேலும் பேட்டை பூங்கா பாதுகாப்புக்கு அருளப்பன் என்கிற நபர் அரசு பணியாளராக உள்ளார் என்றும் ஆனால் பேட்டையில் பூங்காவே இல்லை ஆனால் அவர் தற்போது பேரூராட்சியில் எடுபிடியாகத்தான் இருந்து வருகிறார் என்றும், இவரையே இந்த சங்கு வேலைக்கு சேர்த்து பணியில் அமர்த்தினால் மிக நன்றாக இருக்கும் என்றும் நிர்வாகத்திடம் கூறியதும் மேலும் மேலும் அலட்சியப்போக்கையே காட்டுகிறது என்றார். மக்களுக்கு சேவை செய்யவே உள்ள நிர்வாகம் மக்களுக்கு பயன்படக்கூடிய சங்கை இயக்க தயங்குவது ஏன்? அதிகாரிகளின் அலட்சியமா? அல்லது பொறுப்பற்று போன வேலையா? என்று மக்களுக்கு விடைகான முடியாத கேள்வியாக உள்ளது. பொறுத்திருந்து பாப்போம் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று....
source from: mttexpress.com, www.muthupettaixpress.com, www.muthupettaiepxress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

முத்துப்பேட்டை SDPI - யின் வளர்ச்சிநிதி வசூல் இயக்கம் பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை


முத்துப்பேட்டை, பிப்ரவரி 07 : சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா SDPI ஆல விருச்சமாய் வேரூன்றிட நிதி தாரீர் என்று வளர்ச்சி நிதி வசூல் இயக்கம் என்று பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை ஒரு மாதம் நடைபெற உள்ளது எனவே இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு திருவாரூர் மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், SDPI கட்சி ஆல விருச்சமாய் வேரூன்றிட அதிகமான நிதிகள் தேவைப்படுகிறது என்றும் எனவே இதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதில் தேச நலன், சமுதாய முன்னேற்றம், நமது சந்ததிகளின் எதிர்காலம், அநீதிக் கெதிரான போராட்டங்கள், உரிமைக்குரல், மக்கள் சேவைப்பணிகள், தேர்தல் கலங்கள் ஆகிய அனைத்தும் கொண்டு ஓர் களமாக விளங்கிட உதவிட வாரீர் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தொடர்புக்கு: 98654 27777 , SDPI மாவட்ட பொருளாளர். நெய்னா முஹம்மது: 96583 37915 , SDPI மாவட்ட செயலாளர். அப்துல் அஜீஸ்: 99427 05536

நமது நிருபர்

K .எர்சாத் அஹமது, TR . அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டையில் நடைபெற்ற வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்...


முத்துப்பேட்டை, பிப்ரவரி 07 : முத்துப்பேட்டையில் நேற்று அனைத்து கட்சி சார்பில் வீரவணக்கநாள் என்ற மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தினார்கள். இந்த பொது கூட்டத்தில் ஏராளமான பேச்சாளர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு இக்கூட்டத்தை சிறப்பித்தனர். மேலும் DMK மாவட்ட துணைச் செயலாளர் MS . கார்த்திக், தலைமை பேச்சாளர் பெர்ணார்ட், கரூர் சேகர், தஞ்சை மன்னர்மன்னன் ஒன்றிய செயலாளர் சிவ சாமி ஆகியோர் கலந்து கொண்டு அவரவர் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from: www.muthupettaiepxress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

முத்துப்பேட்டையில் குடி போதையால் நாயை கட்டிபிடித்து தூங்கிய இளைஞர்...



முத்துப்பேட்டை, பிப்ரவரி 07: முத்துப்பேட்டையில் உள்ள மிகவும் பிரபலமான காளியம்மன் கோயில் வாசலில் இன்று மதியம் கடுமையான குடிபோதையில் ஒரு இளைஞர் பல மணிநேரம் ஒரு நாயுடன் தூங்கினார். இதனை கோயிலுக்கு வந்த பக்கதர்கள் மற்றும் பொது மக்கள் வேடிக்கையுடன் அந்த விசித்திர காட்சியை கூட்டம் கூட்டமாக பார்த்து சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் அந்த நாயும், இளைஞரும் எழுந்து போகாததால் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பும் அதிகமான கூட்டம் கூடின. பின்பு அங்கு வந்த சில இளைஞர்கள் குச்சியை வைத்து இவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்களா அல்லது செத்து விட்டார்களா என்று குத்தி பார்த்தனர். அப்போது நாய் எழுந்து ஓடியது. அதன் பின்பு அந்த இளைஞன் போதையில் அந்த நாயை தேடிய காட்சி மக்கள் மத்தியில் பெரும் காமடியை ஏற்படுத்தியது. பின்பு இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் அந்த வாலிபரை விசாரித்ததில் அந்த நபருக்கு வாய்பேச முடியாது என்றும், அவருக்கு வயது 30 ஐ தாண்டி விட்டதாகவும் அப்போது தெரியவந்தது.மேலும் இவர் பழைய பேருந்து நிலைய வட்டாரத்தில் லோடு ரிக்க்ஷா ஒட்டி வந்தவர் என்றும், அப்போது அப்பகுதி மக்களிடம் எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்றும் அதற்கான தொகையை தான் தருவதாகவும் அசைவுகளால் கூறிவந்துள்ளார். இந்த மன உளைச்சளின் காரணத்தால் தான் இவர் எந்நேரமும் போதையில் இருந்து வருகிறார் என்று பொது மக்கள் தெரிவித்தனர்.
source from; www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

முத்துப்பேட்டை தர்ஹாவில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்ட மீலாது நபி விழா..




முத்துப்பேட்டை, பிப்ரவரி 07 : முத்துப்பேட்டை அடுத்த ஜம்போனோடையில் உள்ள தர்ஹாவில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர். இந்த விழா தர்ஹா தலைமை நிர்வாகி ஜனாப். S .S . பாக்கர் அலி சாஹிப் தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
source from www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை,ரிப்போர்ட்டர் இல்யாஸ்

முத்துப்பேட்டையில் சிலிண்டர் வாங்க வந்த பொது மக்கள் தத்தளிப்பு.!!!









முத்துப்பேட்டை , பிப்ரவரி 04: முத்துப்பேட்டையில் கடந்த ஒரு மாதமாக சிலிண்டர் விநியோகம் இல்லாமல் பொது மக்கள் மிகவும் சிரமத்தில் இருந்து வந்தனர். அதன் அடிப்படையில் இன்று "HP GAS " நிறுவனத்தினர் மரைக்காயர் தெருவில் உள்ள குத்பா பள்ளி வாசல் திடலில் வந்து, முன் பதிவு செய்த கூப்பனுக்கு இன்று விநியோகம் செய்தனர். இதனால் பொது மக்கள் கூட்டம் அலைமோதியதால் பொலிசாரின் மேற்பார்வையில் விநியோகம் செய்யப்பட்டன.இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர், அனால் HP GAS நிறுவனத்தினர் வெறும் 280 சிலிண்டர் மட்டும் எடுத்து வந்தனர். இதனால் அதிக நேரம் வரிசையில் காத்து கிடந்த பொது மக்கள் வெறும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் HP GAS நிறுவனத்தினரிடம் கேட்டதற்கு இன்னும் 2 நாட்களுக்குள் மீண்டும் சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என்றும், அப்போது அவர் தெரிவித்தார். பொதுமக்கள் சிலிண்டரை பெறுவதற்கு தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யும் முறைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

நமது நிருபர்

TR .அப்துல் ரஹ்மான்,

மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி என்ன?


பிப்ரவரி 03 : உங்கள் நண்பரோ அல்லது உறவினருடனோ போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு வந்தால். அப்போது நீங்கள் என்ன முதலுதவி செய்ய வேண்டும்?
1.நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்.
2.ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்
3.நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும்.
4.நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்
5.இந்த சிகிச்சையுடன் சிறந்த மருத்துவரின் சிகிச்சைக்கு நோயாளியை உட்படுத்தல் வேண்டும்

மாரடைப்பிற்கு உரிய முறையில் சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தவிர்கலாம்.
என்னென்ன சிகிச்சைகள் கொடுக்கப்பட வேண்டும்?

1.மாரடைப்பு ஏற்பட்டால் உடனடி மருத்துவ கவனிப்பும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் அவசியம்.
2.மாரடைப்பு ஏற்படும் ஆரம்பகால நிமிடங்களும்,நேரங்களும் இக்கட்டானவை. முதலில் கரோனரி தமனி எனப்படும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள கட்டியைக் கரைக்கும் மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.
3.இதயத்துடிப்புகள் கண்காணிக்கப்பட்டு இயல்புக்கு மாறான துடிப்புகளுக்குரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. வலி நீக்கும் மருந்துகளை நோயளிக்குக் கொடுத்து ஓய்வெடுக்க செய்ய வேண்டும்.
4.இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்பட்சத்தில்,அதனைக்குறைக்கத் தகுந்த மருந்துகள் அளிக்கப்படுதல் வேண்டும்.
5.நோயாளியின் வயது,மாரடைப்பின் தாக்கம்,இதயம் பாதிக்கப்பட்டுள்ள அளவு மற்றும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மாறுபடும்.
பல நேரங்களில் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பினை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாஸ்டி, பலூன்களைக்கொண்டு இரத்தக்குழாய்களை விரிவடையச்செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகளாக இருக்கலாம்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

அப்துல் ஹமீது (துபாய்)

மவுத்து அறிவிப்பு " சே.கு.மு.அப்துல் ரஜாக் "


முத்துப்பேட்டை, பிப்ரவரி 03: SPKM தோட்ட வளாகம் மர்ஹும் சே.கு.மு.முஹம்மது ஸாலிஹ் அவர்களின் மகனும்,சே.கு.மு.சா.அப்துல் வஹாப் அவர்களின் சகோதரரும், A .ஜெகபர் அலி, A .தாஜுதீன், A .சகாப்தீன் ஆகோயோரின் தகப்பனாரும், MH . நெய்னா முஹம்மது, PKP . காதர் உசேன், க.வ.சே.நே.அப்துல் சமது ஆகியோரின் மாமனாரும், மர்ஹும் முஹைதீன் ஷேக் அலி, மர்ஹும் அஹமது ஜலாலுதீன்,KM.ஜலாலுதீன், KM.ஷேக் தாவூது, KM.தாஜுதீன், மர்ஹும் KM.அப்துல் லத்தீப் ஆகியோரின் மச்சானுமாகிய " சே.கு.மு.அப்துல் ரஜாக் " அவர்கள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று காலை 11.30 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
source from. www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்
சே.கு.மு.சா.அப்துல் வஹாப்

நமது நிருபர்
K.M. காதர் கனி (பாடகர்)

ஈரானில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேற்றம்


டெஹ்ரான்,பிப்ரவரி 03 : ஈரான் நாட்டில் மருத்துவக்கல்வி பயின்று வரும் நான்கு இந்திய மாணவர்களை அந்நாட்டு அரசு வெளியேற்றியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் 4 முதல் 10 ஆண்டு காலமாக மருத்துவம் மற்றும் பல்வேறு மேற்படிப்புகளை ஈரான் அரசு வழங்கும் உதவி மூலம் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தேதிகளுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த ரஷீன் என்ற மாணவர் ஒருவர் கடந்தாண்டு ஜூலை மாதம் 21ம் தேதி தன்னுடைய மாநிலத்திற்கு திரும்‌பி வந்துள்ளார். அதே போல கான்பூர், ஜம்முகாஷ்மீர் மாநிலம் உட்பட பல்வேறு மாநிலத்தை சேர்‌ந்த மாணவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியாவிலிருந்து சென்று மாணவர்கள் அதிகம் படிக்கும் நாடுகளின் வரிசையி்ல் ஈரான் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதற்கு முன்பு ஈரான் மாணவர்கள், இந்தியாவில் உள்ள உள்ளூர் அமைப்புகளின் தூண்டுதல் காரணமாக வெளிநாட்டு கொள்கைகளை எதிர்‌த்து போராடுவதாக உளவுத்துறை தகவல் அளித்ததன் அடிப்படையில் 2009ம் ஆண்டில் 32 மாணவர்களை இந்தியா வெளியேற்றியது. இதற்கு இந்திய தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று ஈரான் தரப்பில் கூறப்பட்டது. மேலும், ஈரான் மற்றும் இந்தியா இடையே மாணவர்களை வெளி‌‌யேற்றும் போராட்டத்திற்கும் மற்ற அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்‌கும் சம்பந்தமில்லை என்று இரு தரப்பு அரசு தெரிவித்துள்ளது.

முத்துப்பேட்டை அடுத்து உதய மாத்தாண்டபுரத்தின் பறவைகள் சரணாலயம்.







முத்துப்பேட்டை, ஜனவரி 31: முத்துப்பேட்டை அடுத்து உதயமார்த்தாண்டபுரம் (நாட்சிகுலத்தில்)பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. டிசம்பர் 1998 - ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சரனாலயம் பல்வகை நீர்வகை இடம் பெயரும் நீர்பரவைகலான நாமக்கோழி, சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை, வக்கா, பெரிய வெள்ளை கொக்கு போன்ற வைகளின் இருப்பிடமாக விளங்குகிறது. இச்சரனாலயத்தின் மொத்த பரப்பளவு 46 ஹெக்டேர் ஆகும். இச்சரனாலயம் இயற்கையிலேயே நீர்பாசனத்திர்க்காக பயன்படுத்தப்படும் ஏரியாகும். இப்பகுதிக்கு தன்னேரானது மேட்டூர் நீர் தேக்கத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் முதலும், வடகிழக்கு பருவகாற்றின் மூலம் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் முடியவும் வந்தடைகிறது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் முடிய இப்பகுதி வறண்ட நிலையில் காணப்படுகிறது. அருகிலுள்ள பெரூரான முத்துப்பேட்டை இச்சரனாலயத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. இச்சரனாலயத்திற்கு திருவாரூரிலிருந்து 65 கி.மீ மற்றும் தஞ்சாவூரிலிருந்து 68 கி.மீ. தூரத்தில் சாலை வழியாக வந்தடையலாம். அருகிலுள்ள முத்துப்பேட்டை ரயில் நிலையம் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. இச்சரனாலயத்திற்கு பறவைகள் செப்டம்பர் முதல் வரத் தொடங்குகின்றன. பறைவைகளின் எண்ணிக்கை அதிக பட்சமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுமார் 10,000 க்கு மேல் காணப்படுகிறது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நத்தை கொத்தி நாரை இனங்கள் அதிகமாக காணப்படுவதே குறிப்பிடத்தக்க அம்சமாகும். இச்சரணாலயத்தில் அல்லிவகை, பெரம்புவகை நீரித்தாவரங்கள் போன்ற பல்வேறு வகையான தாவர வகைகள் உள்ளன. இச்சரணாலயத்தில் உள்ள மிதக்கும் நீர்த்தவரங்களின் மீது வால் அள்ளிக் குருவி போன்ற பறவை இனங்கள் இனப்பெருக்கம் செய்து வருகின்றன. இவற்றை எல்லாம் பார்வை இட பார்வையாளர்களுக்கு இங்கு இரண்டு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், TR .அப்துல் ரஹ்மான்

தனியார் மையமாகும் தமிழக அரசு பேருந்துகள்...!!!


சென்னை,ஜனவரி 30 : தமிழகம் முழுவதும் பேருந்து போக்கு வரத்து இந்திய சுதந்திரம் அடைந்த பிறகும் தனியார் வசமே இருந்தது. தி.மு.க. ஆட்சி காலத்தில் பேருந்து போக்கு வரத்து அரசுடைமையாக்கப்பட்டு தனியார் முதலாளிகளை ஓயா வைத்தது.ஆனால், போக்குவரத்தின் அத்தியாவாசியப் பொருட்களின் விலையேற்றத்தாலும், உலக சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்புக் குரைவாலும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை சில்லரைக்கசுகள் அளவிலேயே பேருந்து பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. ஆனால், போக்குவரத்துக் கழகம் நிறைந்த லாபம் ஈட்டும் துறையாக மாறியதும் அரசியல் அங்கே சதிராட்டம் போட, அதிகாரிகளும் கை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டதோடு கூட்டுக்கொல்லைகலையும் நிகழ்த்தினர்.எல்லாம் போக தற்போது முதல்வராக பதவி ஏற்ற ஜெயலலிதா மக்கள் எப்படியிருந்தாலும் பயனித்துதானே ஆகா வேண்டும் என்ற அசைக்க முடியாத எண்ணத்தில் பேருந்து பயணக்கட்டணத்தை எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்த்தினார், காரணம் அரசுக்கு நட்டமாம். இதையெல்லாம் விட தொடர்ந்து அரசுக்கு நட்டம் ஏற்படுவதால், அரசுப் பேருந்து வழித்தடங்களில் 45 சதவிகிதத்தை தனியாரிடம் கொடுக்கலாமா என்று தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்த ரகசிய ஆலோசனை விவரத்தை தி.மு.க.வின் தொழிற்சங்கமான 'தொழிலாளர் முன்னேற்றக் கழகப் பேரவை' தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளின் தகவல் பலகைகளில் எழுதி வெளி உலகிற்கு சொல்லியது. சென்னை போக்குவரத்து கழகத்தில் 3 ,140 பேருந்துகள், மாவட்டங்களில் உள்ள நகரப் பேருந்துகள் 6 ,595 பேருந்துகள், மாவட்டப் பேருந்துகள் 8 ,007 , விரைவுபேருந்து மாநிலத்திற்குள் 545, மாநிலத்திற்கு வெளியே 359 , மலை சர்விஸ் 521 ஆகா மொத்தம் 19 ,167 அரசுப் பேருந்து வழித்தடங்கள் உள்ளன. இதில் 45 சதவீதம் அரசு பேருந்து வழித்தடங்களை, அதாவது ௯,௫௦௦ அரசுப் பேருந்து வழித்தடங்களை தனியார் வசம் கொடுக்கப்படும். இதில் 6 ,000 வழித்தடங்கள் அரசுக்கு லாபம் தரும் வழித்தடங்களும் அடங்கும். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் செயலாளர் நடராசன் உண்மைதான் 45 சதவீத அரசுப் பேருந்து வழித்தடங்களை தனியாரிடம் கொடுக்க முடிவு செய்துள்ளது என்றார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் அறிய போக்குவரத்துத்துறை செயலர் பிரபாகரன்ராவ் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டதற்கு தலைவர் மீட்டிங்கில் இருக்கிறார், தலைவர் செயலரை பார்க்கபோயிருக்கிறார், என்று அவருடைய உதவியாளர் பதிலுரைத்தனர். ஆனால் அவர் அலுவலகத்தில் தான் இருந்தார், கடைசிவரை செயலருடன் பேச இணைப்புக் கொடுக்க வில்லை. ஆகா, அரசுப் பேருந்து தனியார் வசம் என்னும் விவகாரம் ஆலோசனை அளவிலேயே தற்போது இருக்கிறது என்பது உறுதியாகிறது. இந்த ஆலோசனையே முடிவாக உறுதியாகுமானால் தமிழக மக்கள் போக்குவரத்துச் சங்க தொழிலார்கள் தொடர்ந்து போராட்டத்தில் இறங்குவது தவிர்க்க முடியாததாகி விடும்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்.

ஈரான் அணுசக்தி நிலையங்களை அழிக்க அமெரிக்காவிற்கு சக்தி இல்லை...


வாஷிங்டன்,ஜனவரி 29: பூமிக்கு அடியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குவதற்கான மிக சக்தி வாய்ந்த வெடிக்குண்டை தயாரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.தற்போது அமெரிக்கா ராணுவத்தின் கைவசமிருக்கும் பங்கர் பஸ்டர் வெடிக்குண்டால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிக்க முடியாது. இதனை புரிந்துக்கொண்ட அமெரிக்கா புதிய வெடிக்குண்டை தயாரிக்க திட்டம் வகுத்துள்ளது. இதனை குறிப்பிட்டு பெண்டகன் அமெரிக்க காங்கிரஸிற்கு ரகசிய அறிக்கையை இம்மாதம் அளித்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத பாதுகாப்பு துறை அதிகாரியை மேற்கோள்காட்டி வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் கூறுகிறது.பூமிக்கு அடியில் உள்ள பாறைகள் மற்றும் காங்க்ரீட் சுவர்கள் ஆகியவற்றை துளைத்து உள்ளே செல்லும் சக்திமிகுந்த 20 வெடிக்குண்டுகளை தயாரிக்க பெண்டகன் இதுவரை 33 கோடி டாலர் தொகையை செலவிட்டுள்ளதாக பத்திரிகை கூறுகிறது. போயிங் நிறுவனம்தான் இக்குண்டுகளை தயாரித்து வருகிறது.பெரும் பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிக்க பங்கர் பஸ்டர் குண்டுகளுக்கு வலு இல்லை என்பதை கடந்த வியாழக்கிழமை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா ஒப்புக்கொண்டார்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EKA .முனவ்வர் கான், அபு மர்வா, ASNS .அப்துல் பாரி

அபுதாபியில் வேலைவாய்ப்பு விழா: வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு...


அபுதாபி,ஜனவரி 29 : தனியார் துறையில் கூடுதல் உள்நாட்டினரை ஈர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அபுதாபியில் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு விழா 3 நாட்கள் நடைபெற இருக்கிறது.ஜனவரி 31, பிப்ரவரி 1, 2 தேதிகளில் அபுதாபி நேசனல் எக்ஸிபிஷன் சென்டரில் ‘தவ்தீஃப்’ என்ற பெயரில் இவ்விழா நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நிதி மற்றும் வங்கியல் துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் இவ்விழாவில் பல்வேறு வேலைவாய்ப்புக்கான நபர்களை தேர்வுச் செய்கின்றன.உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்பை நோக்கமாக கொண்டு இவ்வேலை வாய்ப்பு விழா நடத்தப்பட்டாலும் மூன்றாவது நாள்(பிப்ரவரி-2) அனைத்து வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு விழாவில் பங்கேற்கும் வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் வேலைத் தேடுவோர் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். ஜனவரி 31-ஆம் தேதி காலை 11 முதல் மாலை 7 மணி வரை உள்நாட்டினருக்கு(யு.ஏ.இ) மட்டுமே அனுமதி.பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 முதல் மதியம் 2 மணி வரை உள்நாட்டு(யு.ஏ.இ) பெண்களுக்கு மட்டும்.மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரை உள்நாட்டு(யு.ஏ.இ) ஆண்களுக்கு மட்டும்.பிப்ரவரி 2-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.இந்த வேலை வாய்ப்பு விழாவில் பங்கேற்க விரும்புவர்கள் www.tawdheef.ae என்ற இணையதளத்திற்கு சென்று முன்னரே பதிவுச் செய்துக்கொள்ளவும்.இந்த வேலைவாய்ப்பு விழாவில் பங்கேற்கும் முக்கிய நிறுவனங்கள்: அபுதாபி ஏர்போர்ட்ஸ் கம்பெனி, அபுதாபி கமர்ஸியல் வங்கி, அபுதாபி நேசனல் இன்சூரன்ஸ் கம்பெனி, அபுதாபி நேசனல் ஹோட்டல்ஸ், அபுதாபி போலீஸ், அபுதாபி இன்வெஸ்ட்மெண்ட் அதாரிட்டி, அபுதாபி இஸ்லாமிக் வங்கி, அபுதாபி டூரிஸம் அதாரிட்டி, கமர்ஸியல் பேங்க் ஆஃப் இண்டர்நேசனல், டால்பின் எனர்ஜி, எமிரேட்ஸ் நியூக்ளியர் எனர்ஜி கார்ப்பரேசன், எமிரேட்ஸ் அலுமினியம், எமிரேட்ஸ் ட்ரைவிங் கம்பெனி, இத்திஹாத்(Ethihad), எடிசலாத்(Etisalat),ஃபர்ஸ்ட் கல்ஃப் வங்கி(Firstgulf bank), ஜெனரல் ஹோல்டிங் கார்ப்பரேசன், HSBC வங்கி, முபாதலா, நேசனல் பேங்க் ஆஃப் அபுதாபி, பெட்ரோஃபாக் எமிரேட்ஸ், பிரசிடன்ஸியல் கார்ட், யு.ஏ.இ எக்ஸ்சேஞ்ச், யாஸ் மரினா சர்க்யூட் ஆகியன இவ் வேலைவாய்ப்பு விழாவில் கலந்துக் கொள்வதாக இதுவரை அறிவித்துள்ளன. மேலும் கூடுதல் நிறுவனங்கள் இவ்விழாவில் பங்கேற்கும்.நிறுவனங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து வேலை தொடர்பாக விசாரிக்கலாம். பயோடேட்டா தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படும். வேலைவாய்ப்பு விழாவையொட்டி பல்வேறு நிறுவனங்களின் மனித வளத்துறைகள் நடத்தும் செமினார்களில் இலவசமாக கலந்துக் கொள்ளலாம்.உள்நாட்டினருக்கு(யு.ஏ.இ) மட்டும் தனியாக இண்டர்வியூ அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகமான உள்நாட்டினருக்கு வேலை வழங்குவோம் என பிரபல வங்கிகள் அறிவித்துள்ளன. எமிரேட்ஸ் என்.பி.டி(ENBD) இவ்வாண்டு குறைந்தது 250 உள்நாட்டினரை பணியில் அமர்த்தும். கடந்த ஆண்டு 462 பேரை நியமித்தது.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

அபு மர்வா, J .ஷேக் பரீத் (துபாய்),

முத்துப்பேட்டை பேரூராட்சியின் அதிரடியான இறுதி முடிவுகள்,செயல் அலுவலர் தகவல்.


முத்துப்பேட்டை, ஜனவரி 28 : முத்துப்பேட்டை பேரூராட்சியின் அதிரடியான சில இறுதி முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. அவை பின் வருமாறு.
(1) முத்துப்பேட்டை பேரூராட்சி 1 முதல் 18 வார்டுகளில் உள்ள வீட்டு குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதை தவிர்க்கவும், தவறும் பட்சத்தில் காவல்துறை அலுவலர்கள் முன்னிலையில் வீடுகளில் மின் மோட்டாரை பறிமுதல் செய்வதுடன் அதற்கான செலவு தொகைகள் அனைத்தும் அந்தந்த வீட்டு உரிமையாளரிடம் வசூலிக்காப்படும். மேலும் கோர்ட் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
(2) சாலைகளில் திரியும் ஆடு, மாடுகளை அந்தந்த உரிமையாளர்கள் தங்களது வீடுகளில் கட்டிவைத்துக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் ஆடு, மாடுகளை காவல்துறை உதவியுடன் பிடித்து அடுத்த ஊர்களில் கொண்டு போய் விடப்படும்.
(3) பன்றியை வைத்துக்கொள்பவர் பன்றியினை அந்தந்த உரிமையாளர்கள் அதற்கான பாதுகாப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது முத்துப்பேட்டையில் இல்லாமல் வேறு பகுதிகளில் கொண்டு போய்விட வேண்டும். தவறும் பட்சத்தில் பன்றிகளை பிடித்து பேரூராட்சி மூலம் அப்புறப்படுத்தப்படும்.
(4) முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஆக்ரமனங்கள் அனைத்தும் எடுத்துவிட வேண்டும். தவறும் பட்சத்தில் ஆக்ரமனங்கள் எடுத்து அதற்க்கான செலவுத்தொகையையும், தங்களிடம் வசூலிக்கப்படும். (குடிநீர் மின்மோட்டார்கள் எடுப்பது தவிர மற்றவர்களுக்கு கால அவகாசம் இல்லை) என்பதை இதன் மூலம் இறுதியாக தெரிவிக்கப்படுகிறது.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EKA .முனவ்வர் கான், அபு மர்வா, TR .அப்துல் ரஹ்மான்,

முத்துப்பேட்டை TNTJ (ஆசாத் நகர் கிளை) சார்பில் மாபெரும் இரத்ததான முகாம்...







முத்துப்பேட்டை, ஜனவரி 26 : 63 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் காளி இரத்த வங்கி இணைத்து மாபெரும் இரத்த தான முகாமை பழைய வின்னர்ஸ் ஸ்கூல் கட்டிடத்தில் இன்று காலை நடத்தினார்கள்.இதற்க்கு TNTJ திருவாரூர் மாவட்ட செயலாளர் ஜனாப். M .I . இஸ்மத் பாட்சா அவர்கள் தலைமை வகித்தார். பின்பு Dr. சண்முக சுந்தரம் (காளி இரத்த வங்கி தஞ்சாவூர்), Dr . இளங்கோ MBBS .,MRSH ., (Lion) FCP , Dr . முருகேசன் MS . FAC ., Dr . மீரா உசேன் MD ., Dr .கணேஷ். MBBS ., Dr . அபுதாஹிர்.MBBS ., வழக்கறிஞர் G .உமர் கத்தாப்.MA .BL. ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.இந்த இரத்த தான முகாமில் சுமார் 40 பேர் கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை கொடுத்தனர். இந்த இரத்ததானம் முகாம் முத்துப்பேட்டை II (ஆசாத் நகர் கிளை) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

TR .அப்துல் ரஹ்மான், K .எர்சாத் அஹமது,

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கத்தின் சேவைகளும் மக்களின் வரவேற்ப்பும்..


முத்துப்பேட்டை, ஜனவரி 26 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டி மற்றும் முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமிர்ற்கு முத்துப்பேட்டை மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பு வந்துள்ளது.நடந்து முடிந்த இலவச மருத்துவ முகாமின் சோதிக்கப்பட்ட மருத்துவத்தின் ரிசல்ட்டை இன்று வெளியிடப்பட்டது. அதில் சுமார் 250 நபர்களுக்கு தங்களுடைய பெயர் மற்றும் வீட்டு முகவரி மற்றும் இரத்த குறியிடு ஆகியவைகளை அடையாள அட்டை வடிவில் வடிவமைக்கப்பட்டு அவற்றை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அதில் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் A .ஹாஜ நஜுபுதீன், சோழநாடு க.மு. நெய்னார் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இது போன்ற நல்ல சேவைகளை செய்து வரும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டி மென் மேலும் வளர இறைவனை துவா செய்கிறோம் என்று முத்துப்பேட்டை மக்கள் கூறினார்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

TR .அப்துல் ரஹ்மான், K .எர்சாத் அஹமது

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)