முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

2016 தமிழக சட்டமன்ற தேர்தலும், முஸ்லிம் அமைப்புகளின் நிலமைகளும் ஓர் பார்வை...!!!


தமிழகம், டிசம்பர் 16: தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகள் 20க்கு மேற்பட்டவைகள் உள்ளன. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதலாவதாக தோன்றியது பின்னர் தேசிய லீக், தமுமுக, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ, இப்படி என பல அமைப்புகள் உருவாயின. இத்தனை அமைப்புகளும்  செயல்பாடுகளில் மட்டும் தான் மாறியிருக்கின்றனர். சமுதாய பணிகளில் அவரவர் தங்களால் ஆன பணிகளை தொடர்ந்து சமுதாயத்திற்கு ஆற்றி வருகின்றனர். சமுதாய பிரச்சனைகளில் ஒன்றிணைந்து தங்களின் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

பொதுவாக தேர்தல் நேரங்களில் சமுதாய அமைப்புகள் திமுக அதிமுக என இரு அணிகளிலும் கலந்து கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருவது வழக்கம் . கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அணியை பெரும்பாலான முஸ்லிம் அமைப்புகள் ஆதரித்தனர். இருப்பினும் தேர்தல் முடிவுகள் இவர்களுக்கு ஏமாற்றம் தந்தது.

2016 ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் வெற்றி பெறவும் அதற்கான வியூகங்கல் அமைக்கும் முறையை தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் துவங்கியுள்ளன. இந்த நிலையில் முஸ்லிம் சமுதாய அமைப்புகள் எத்தகைய நிலையை மேற்கொள்ள போகிறார்கள் என்பது எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனித நேய மக்கள் கட்சி எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளின் நிலை என்ன என்பது ஒரு கேள்விக்குறி ஒன்றிணைந்து ஒரு அணியை  தேர்ந்தெடுத்து கூட்டணி அமைத்து போட்டியிடப் போகிறார்களா? அல்லது தேர்தல் நேரத்தில் உருவாகும் அணிகளில் பிரிந்து கூட்டணி அமைக்க போகிறார்களா? என்பது பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. சமுதாய மக்களின் எதிர்பார்ப்பு அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து குறிப்பிட்ட தொகுதிகளை பெற்று தொகுதிகளை பங்கீட்டு கொண்டு போட்டியிட்டால் நலமுடையது என கருதுகிறோம்.இப்போதே முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளை கணக்கெடுத்து நமக்குள் ஒன்றிணைந்து கருத்துக்களை பரிமாறி ஓரணியாக உருவானால் நமக்கான பிரதிநித்துவத்தை அதிகம் பெற வாய்ப்பாக அமையும்.

தேர்தலில் போட்டியிடாத அமைப்பான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏனைய முஸ்லிம் அமைப்புகள் போட்டியிடும் தொகுதிகளில் இவர்களுக்கு தங்களின் முழு ஆதரவை வழங்க முன்வர வேண்டும் என்பது என்னைப்போன்ற பல இளைஞர்களின் அவாவாக உள்ளது.

அமைதிப்பூங்காவான தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று எல்லோரும் கூறிவருகின்றனர். மதக்கலவரங்களை தூண்டிவிடுவோரும் அத்தகைய கருத்துக்களை கூரிவருன்றனர். சகோதரத்துவத்தையும் சமாதானத்தையும் அரவணைப்பையும் விரும்புகிற முஸ்லிம் சமுதாயம் தேர்தல் காலத்திலாவது ஒன்றிணைந்து நமக்கான பிரதிநித்துவத்தையும் நமக்கான உரிமைகளையும் பெற ஒன்றாய் களம் காண்போம் உயர்ந்து பணிகளை தொடர்ந்து ஆற்றுவோம்.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முஹம்மது இல்யாஸ். 
MBA, MA. (Journalism & Mass Communication)
Full Rights Received.. 

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் பணிகளை விரிவு படுத்தவும் தொழில் நுட்ப சாதனங்கள் வாங்கிடவும் உதவிடுவீர் !!!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் வெற்றி கரமாக மூன்றாம் ஆண்டில்  அடியெடுத்து வைக்கிறது. அல்லாஹு அக்பர் !! அல்லாஹு அக்பர் !! அல்லாஹு அக்பர் !!!

இந்த மாபெரும் வெற்றிக்கு பின்னணியில் வாசகராகிய உங்களின் ஒத்துழைப்பும் மிக முக்கியமானது  என்பதையும் இங்கே நாங்கள் சுட்டிக்காட்ட கடமை பட்டுள்ளோம். குறிப்பாக கடல் கடந்து வாழும் நம் சகோதரர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் நமக்கு இன்னும் உத்வேகத்தையும், புத்துணர்வையும் ஊட்டுகிறது. நமது இணையதளத்திற்கு துபாய், சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, குவைத், கத்தார், இலங்கை, போன்ற நாடுகளிலும் லண்டன், அமெரிக்கா, கனடா, பேங்காக், போன்ற நாடுகளில் வசிக்கும் நம் சகோதரர்கள் மிகுந்த ஆதரவை அளித்து வருகின்றனர். 

யாருக்கும் வளைந்து கொடுக்காத தனம், சார்பற்ற போக்கு, உள்ளதை உள்ளபடியே சொல்லும் போக்கு, மதவாத பாஜக, ஆர் எஸ் எஸ் போன்ற பயங்கராவாத இயக்கங்களை தோலுரிக்கும் துணிவு, இஸ்லாத்திற்கு எதிராய் செயல் படுகின்ற  துரோகிகளை வெட்ட வெளிச்சமாக்கும் போர்குணம், இவை அனைத்தும் நம் இணையதளத்தின் தனித்தன்மையாகும். அது மட்டுமல்ல முத்துபேட்டையில் அன்றாடம் நடக்கும் பொது நிகழ்வுகள்,மரண அறிவிப்புகள், திருமண செய்திகள், மருத்துவ செய்திகள், சமூக அரசியல் தலைவர்களுடன் நேர்காணல் போன்ற பல்வேறு நிகழ்சிகளும் அடங்கும். 

இப்போது நம் எக்ஸ்பிரஸ் இணையதள பணிகளை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக நாம் கூடுதலாக செய்தியாளர்களை நியமிக்க உள்ளோம் என்பதனையும் இந்த நேரத்தில் தெரிவிக்க கடமை பட்டுள்ளோம்.

நாம் இது வரை எழுத்து வடிவிலேயே செய்திகளை தந்து கொண்டிருக்கிறோம் .இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் வீடியோ வடிவிலும் நாம் செய்திகளை தர திட்டமிட்டுள்ளோம் என்பதனை இந்த தருணத்திலே மிகவும் அக மகிழ்வோடு கூறிக்கொள்ள ஆசை படுகிறோம் . இதற்காக நம் இணையதள பணிகள்  முழுவீச்சில் தொய்வின்றி நடக்க வீடியோ கேமரா, டிஜிட்டல் கேமரா, மடிக்கணினி போன்ற பல்வேறு மின்னணு சாதனங்கள் தேவை படுகிறது என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.
 
அன்புடன் : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்:
 தொடர்புக்கு: முஹம்மது இல்யாஸ்.                                = + 0091 - 98426 81426

தொடர்புக்கு : ஷேக் பரீத்                                                          = + 0091 - 7200 11 6852

மீண்டும் ஆஸ்கார் விருது பட்டியலில் ஏ.ஆர் .ரஹ்மான் !!



சென்னை: ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரும் இடம்பெற்றுள்ளன.
87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சஸ்லில் நடக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் ஜனவரி 15ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதில் சிறந்த இசை அமைப்பிற்காக 114 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் ‘கோச்சடையான்’ படத்திற்காக இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் பெயரும் பட்டியலில் இணைந்துள்ளது. ‘கோச்சடையான்’ தவிர்த்து ’தி 100 ஃபூட் ஜார்னி’, மற்றும் ’மில்லியன் டாலர் ஆர்ம்’ உள்ளிட்ட படங்களும் சிறந்த இசையமைப்புக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

திருவாரூர்-காரைக்குடி வரையிலான அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்..





முத்துபேட்டை, டிசம்பர் 12: திருவாரூர்-காரைக்குடி வரையிலான அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதனை வலியுறித்தி அமைச்சர்களை நேரில் சந்திக்க உள்ளதாக சமூகநல சங்கத்தின் தலைவர் அஹ்மத் அலி ஜாபர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில் "திருவாரூர்-காரைக்குடி ரயில்வே வழி தடம் மிகவும் பழமையானது இந்த தடத்திலிருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் மீட்டர்கேஜ் ரயில் பாதைகளை அகலரயில் பாதைகளாக மாற்றுவதற்காக கடந்த ஆண்டுகளில் இந்த தடத்தில் இயக்கப்பட்டுவந்த ரயில்கள் தற்பொழுது மாற்றுபாதையில் இயக்கப்பட்டுவருகின்றன. மேலும் மீட்டர்கேஜ் ரயில் பாதையான இந்த வழி தடத்தை அகலப்பாதையாக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டு தற்பொழுது ரயில்வே டிராக்குகள் பிரிக்கும் பணி மிகவும் ஆமைவேகத்தில் நடைபெற்றுவருகின்றன. எனவே இந்த பணிகளை விரைந்துமுடிக்க வேண்டும் என்பதனை வலியுறித்தி அமைச்சர்களை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளோம் . 

மேலும் சந்திப்பிற்கான தேதியினை பின்னர் அறிவிக்கின்றோம் அப்பொழுது சென்னையில் உள்ள பேராவூரணி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மற்றும் அதிரைவாசிகள் கண்டிப்பாக அவர்களது வாகனத்தில் வந்து கலந்துக்கொள்ள வேண்டும் என்றார்.

அஹ்மத் அலி ஜாபர் ஏற்கனவே இந்த ரயில்வே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...

ரிப்போர்ட்டர் இல்யாஸ் 

கலைஞருக்கு பகவத் கீதை கொடுத்த ராமகோபாலன் -கீதையின் மறுபக்கத்தைதிருப்பி கொடுத்த கலைஞர் !!!

ஒரு முறை இந்து முன்னணியின் தலைவர் இராம.கோபாலன், முதலமைச்சர் கலைஞரைச் சந்திக்கச் சென்றபோது, பகவத் கீதை நூலினை அவருக்குப் பரிசாக அளித்தார். புன்னகையுடன் அதைப் பெற்றுக் கொண்ட கலைஞர், சந்திப்பு முடிந்து இராம.கோபாலன் விடை பெற்றபோது, தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதியுள்ள ‘கீதையின் மறுபக்கம்’ நூலை அவருக்குத் தன் பரிசாக அளித்தார். கோபாலபுரம் இல்லத்திற்குள் கீதையோடு சென்ற இராம.கோபாலன், கீதையின் மறுபக்கத்தோடு வீடு திரும்பினார்.
இது வெறும் ஒரு நிகழ்ச்சியன்று. ஏடறிந்த தமிழின வரலாற்றின் எல்லாப் பக்கங்களிலும் எழுதப்பட்டுள்ள வருண முரண்பாடே இது! காலகாலமாய் நடைபெற்று வரும் சித்தாந்த வேறுபாடுகளுக்கிடையிலான மெளன யுத்தம்!
ஏசு பிறப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இப்போர், இன்று வரை வெவ்வேறு வடிவங்களில் நடந்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தின் பண்டைய மதங்களை, வேதங்களை ஏற்றுக்கொண்ட வைதீக மதங்கள் என்றும், வேதங்களை மறுத்த அவைதீக மதங்கள் என்றும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இரண்டிற்குமிடையே நடந்த இணக்கமற்ற போர், இந்திய வரலாறாய் இன்று விரிந்துள்ளது.
இந்து மதத் தத்துவ நூல்கள் அனைத்தும் ஆறு தரிசனங்கள் குறித்துப் பேசும். பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம், சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம் ஆகிய அந்த ஆறு தரிசனங்களும், வேதங்களையும், வேத மரபுகளையும் ஏற்ற பழைய வைதீக மதங்கள் ஆகும். லோகாயுதம், ஆசிவகம், பெளத்தம், சமணம் ஆகிய நான்கு மதங்களும், வேதங்களை மறுத்த அவைதீக மதங்கள் என அழைக்கப்பட்டன. பெளத்த மதம், ஆத்மா என்ற கோட்பாட்டையும் மறுத்து, ‘ அனாத்மம் ’ என்னும் கொள்கையை வெளிப்படுத்தியது.
பிரம்மமும், ஆன்மாவும்தான் எல்லாம் என்று பேசின உபநிடதங்கள். அவை இரண்டு மட்டுமே நிலையானவை என்றன. உலகில் நிலையானது என்று எதுவுமே இல்லை என்று ‘ அநித்தியவாத’த்தை முன் வைத்தது பெளத்தம். “ஓடும் ஆற்றில், இந்தக் கணம் நாம் பார்க்கும் எந்த ஒரு நீர்த்துளியும், அதற்கு முந்திய கணத்தில் நாம் பார்த்தது இல்லை. அவ்வாறே, எரியும் நெருப்பில், ஒவ்வொரு கணமும் புதிய புதிய பொறிகளே வந்து கொண்டிருக்கின்றன. தோற்றத்தில் ஒன்று போலத் தெரிகிறதே அல்லாமல், எல்லாம் வேறு, வேறு. அனைத்தும் மாறிக் கொண்டும், கழிந்து கொண்டும் இருக்கின்றன. நிலையானது எதுவுமில்லை” என்றார் புத்தர். இந்த அநித்தியவாதம், ஆன்மவாதத்திற்கு நேர் எதிரானதாக அமைந்தது.
பார்ப்பனீயத்திற்கும், பெளத்தத்திற்குமான போர் தொடங்கிற்று. பார்ப்பனீயம் முன்வைத்த வேதங்களோ கடவுளர் பலரை முன்வைத்தது. இந்திரன், சோமன், அக்னி, வாயு என்று பல கடவுள்களை அங்கு பார்க்க முடியும். இந்தக் ‘கடவுள் பன்மை’, அனைவரையும் ஒரு குடையின் கீழ்த் திரட்டுவதற்கு இடையூறாக இருந்தது. பல தெய்வ வழிபாட்டிலிருந்து, பெருந்தெய்வ வழிபாட்டிற்கு வைதீக மதம் நகர்ந்தது.
சிவன், திருமால் என இரு பெருந் தெய்வங்கள் தோன்றினர். எனினும், ஒரு மதமென்றால், ஒரு கடவுள், ஒரு புனித நூல், ஒரு வாழ்க்கை முறை என்று எல்லாம் ‘ஒருமையில்’ இருப்பது, வலிமை சேர்க்கும் என்ற எண்ணம் வந்தபோதுதான், ‘பகவத் கீதை’ உருவாக்கப்பட்டது.
புதிதாக ஒரு தத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்வது கடினம். எனவே, காலகாலமாக மக்களிடையே பேசப்பட்டுவரும் ‘மகாபாரத’க் கதையின் ஊடே, இடைச் செருகலாகக் கி.பி.6ஆம் நூற்றாண்டில், பகவத் கீதை சேர்க்கப்பட்டது. பாலாதித்ய குப்த அரசன் காலத்தில், இது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பகவத் கீதையில், மேலே நாம் குறித்துள்ள, ஆறு தரிசனங்கள் குறித்த விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அவைதீகக் கோட்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. நான்கு வருணங்களையும், தாமே படைத்ததாகக் கிருஷ்ணர் கூறுகின்றார். எனவே அந்தந்த வருணங்களுக்கு உரிய கடமைகளை அவரவர் செய்ய வேண்டும் என்றும், அதற்கான பலனை எதிர்பார்க்கக் கூடாது என்றும் கீதை வலியுறுத்துகின்றது.
அதனால்தான், பல்லவர் காலம் தொடங்கி, அதனை ஒரு சட்ட நூல் போலவே பாவித்துள்ளனர். சத்தியப் பிரமாண நூல்களாக, மனுநீதியும், பகவத் கீதையும் பயன்படுத்தப்பட்டுள்ள செய்தியை, ‘பல்லவர் செப்பேடுகள் முப்பது’ மற்றும் ‘பாண்டியர் செப்பேடுகள் பத்து’ ஆகியன நமக்குத் தெரிவிக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே, அண்மைக் காலம் வரை, நீதிமன்றங்களில், பகவத் கீதை நூலின் மீது சத்தியம் வாங்கும் பழக்கம் இருந்தது.
சட்டநூல் என்பதையும் தாண்டி, ‘இந்துக்களின் புனிதநூல்’ என்னும் நிலைக்குக் கீதை உயர்த்தப்பட்டது. திருமாலை மறுத்துச் சிவனை வழிபடும் சைவர்களுக்கும் சேர்த்தே கீதை புனித் நூலானது. இந்து மத ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதற்காகச் சைவர்கள் பலரும் கூட இக்கோட்பாட்டைக் காலப்போக்கில் ஏற்கத் தொடங்கினர்.
பகவத் கீதையில், உலக நடப்புகள் அனைத்திற்கும் காரணமானவராகக் கிருஷ்ணர் காட்டப்படுகிறார். உபநிடதங்கள் ‘பிரம்மம்’ என ஒரு முழுமையை (absolute) ஏற்படுத்திக் காட்ட முயன்றன. ஏறத்தாழ அந்நிலைக்குக் கிருஷ்ணன் கீதையில் கொண்டுவரப்படுகின்றார். ‘ஆக்குபவன் நானே, ஆக்கப்படுபவன் நானே, கொல்பவன் நானே, கொல்லப்படுபவனும் நானே’ என்பது போன்றதோர் ‘ஒருமை வாதம்’ (ஏகம்) அங்கு நிலைநிறுத்தப்படுகிறது. இந்துக் கடவுள் தத்துவம் அனேகத்திலிருந்து ஏகத்தை நோக்கி நகர்கிறது.
இது எவ்வளவு செயற்கையானது என்பதை, மகாபாரதம் படித்தவர்கள் அறிவார்கள். பாரதம் நெடுக இடம் பெற்றுள்ள கண்ணன் பாத்திரத்திற்கும், பகவத் கீதை காட்டும் கண்ணன் பாத்திரத்திற்கும் தொடர்பே இல்லை.
மகாபாரதக் கண்ணன், ஒரு சாதாரணப் பாத்திரம். அக்காப்பியத்தில் இடம்பெறும் சிசுபாலன் போன்ற சிறு பாத்திரங்கள் கூடக் கண்ணனைக் கேலி பேசுவதை நாம் பார்க்க முடியும்.
சபா பருவத்தில், தருமன் நடத்தும் ஒரு யாகத்தின் போது, கண்ணனுக்கு முதல் மரியாதை வழங்கப்படுவதைக் கண்டு சிசுபாலன் கனன்று எழுகின்றான். கண்ணனுக்கு என்ன தகுதி உள்ளது என்று கேட்கிறான். பிறகு அந்த இடத்தைவிட்டே வெளிநடப்புச் செய்கிறான்.
சிசுபாலன் கோபத்திற்கு ஒரு நியாயமான காரணம் உண்டு. சேதி நாட்டில் நடைபெற இருந்த திருமண நிகழ்வை அவன் அங்கு பேசுகின்றான். சிசுபாலனுக்கும், ருக்மணிக்கும்தான் திருமணம் உறுதி செய்யப்பட்டிருந்தது. திருமண மேடையில் அமர்ந்திருந்த ருக்மணியைக் கண்ணனும், அவன் சகோதரனும் கடத்திக் கொண்டு போய் விட்டனர். பிறகுதான் கண்ணனுக்கும், ருக்மணிக்கும் திருமணம் நடைபெற்றது. தனக்கு உறுதி செய்யப்பட்ட பெண்ணைக் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்ட கண்ணனுக்கு முதல் மரியாதை பெறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்பதுதான் சிசுபாலனின் கேள்வி.
கண்ணனுக்கும், ருக்மணிக்கும் பத்துப் பிள்ளைகள் பிறந்தனர். அதன்பின் கண்ணன் ஏழு அரசிகளை மணந்து கொண்டான். அந்த ஏழு பேருமே, ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் என்பது வேறு செய்தி. இவர்களை எல்லாம் தாண்டி, பதினாயிரம் கோபியர்களோடு கொஞ்சிக் குலாவுதல், கண்ணனுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. இத்தனைக்கும் மேலே, கண்ணனின் காதலி யாரென்றால், அது ராதை மட்டும்தான். அதனால்தான் ‘ராதாகிருஷ்ணன்’ என்று ஊருக்கு ஊர் நாம் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறோம். கட்டிய மனைவியின் பெயரைச் சேர்த்து, ருக்மணிகிருஷ்ணன் என்று பெயர் வைத்துக் கொள்கின்றனரா என்று தெரியவில்லை.
கண்ணன் பற்றிய இந்தச் செய்திகளை, அய்யா
பெரியாரோ, அண்ணல் அம்பேத்கரோ எழுதவில்லை. அனைத்தும், மகாபாரதத்திலும், கண்ணன் பற்றிய புராண நூல்களிலும் உள்ளன.
எனவே இப்படிச் சாதாரணமான ஒரு பாத்திரத்தை, சர்வ வல்லமை கொண்ட கடவுள் பாத்திரமாகச் செய்து முடித்ததன் நோக்கம், ஒன்றே ஒன்றுதான். கடவுளின் மூலமாகவே வருணாசிரம தர்மத்தை இங்கு நிறுவுதல்தான் நோக்கம். அதற்காகவே, கீதை புனித நூலாக ஆக்கப்படுகின்றது.
அந்தப் ‘புனித நூலை’த்தான் இராம.கோபாலன் கலைஞருக்குப் பரிசளிக்கின்றார். புனிதங்களையும், நிலையானது என்னும் கோட்பாடுகளையும் மறுத்த அவைதீகப் போக்குகளின் தொடர்ச்சிதான், தமிழ்நாட்டில் தோன்றிய திராவிட இயக்கம். அதனால்தான், திராவிட இயக்கத்தைச் சேர்ந்த கலைஞர், கீதையின் மறுபக்கத்தைத் தன் பரிசாக அளித்தார்.
இப்போது தெளிவாகி விட்டதல்லவா! அன்று நடந்தது வெறும் நிகழ்ச்சியன்று. அது ஏடறிந்த தமிழின வரலாற்றின் எல்லாப் பக்கங்களிலும் பதிவாகிக் கிடக்கின்ற வருண வேறுபாடு!
எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்

பாஜக வுடன் தமிழக கட்சிகள் கூட்டணி வைக்க கூடாது -முத்துப்பேட்டையில் சீமான் பரபரப்பு பேச்சு .

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்று விழா தெற்கு மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார்.


 இதில் சீமான் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தார். பின்னர் தொண்டர்களுடன் கொள்கை உறுதிமொழி ஏற்றார். இதனை தொடர்ந்து அவர் பேசும்போது ,தமிழர் விரோத பாஜக வை ஒட்டுமொத்த தமிழக மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று கூறினார் .

மேலும் மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்களை நாகரீகமற்ற முறையில் பேசிய அக்கட்சியை சேர்ந்த ஹெச் .ராஜாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார் .தமிழக  அரசியல் கட்சிகள் எந்த காரணம் கொண்டும் பாஜக வோடு கைகோர்க்க கூடாது  தெரிவித்தார் .
 நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது, மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவணம் கார்த்திக், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வேதாபாலா, மண்டல செயலாளர் தென்றல் சந்திர சேகர், வடக்கு மாவட்ட செயலாளர் கந்தன,; மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் வடுவூர் முருசேகன், மாவட்ட துணைச் செயலாளர் சரவணன், மாணவர் பாசறை செயலாளர் வீரசேகரன், ஒன்றிய துணை செயலாளர் கரையங்காடு சரவனன், நகர செயலாளர் செந்தில், ஒன்றிய இணைச் செயலாளர் ராஜேஷ், நகர இளைஞர் அணி செயலாளர் பிரகாஷ், நகர நிர்வாகிகள் ஜெக்கரியா, சீனிவாசன், ஹஜ்முகம்மது ஒன்றிய நிர்வாகிகள் ஜாம்மை சேகர், செல்லப்பா, தீபன், உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். இதே போல் இடும்பாவணம் கடைவீதியில் அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் சீமான் கொடி ஏற்றி வைத்தார்.

இடும்பாவனம் கிராமங்களில் முத்துப்பேட்டை தமுமுகவினர் நிவாரணம்








முத்துப்பேட்டை, நவம்பர் 29: முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் கிராமத்தில் கடும் மழையால் குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அறிந்த முத்துப்பேட்டை தமுமுகவினர் நகர தலைவர் அண்ணன் சம்சுதீன் தலைமையில் சென்று நேரில் பார்வையிட்டனர். அதன் பின் முத்துப்பேட்டை திரும்பிய தமுமுகவினர் அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் (ப்ரெட்,பிஸ்கெட்,பால் பவுடர்) மற்றும் பணம் ஆகியவைகளை திரட்டிக்கொண்டு மீண்டும் இரவு நேரம் என்று பாராமல் நகர தலைவர் அண்ணன் M.சம்சுதீன் (முன்னாள் மாவட்ட செயலாளர்) தலைமையில் இடும்பாவனம் சென்ற தமுமுகவினர் அங்குள்ள மக்களுக்கு நிவாரணம் மற்றும் சிறய அளவில் பணமும் 50 வீடுகளுக்கு வழங்கினர்.
இதில் நகர செயலாளர் M.M.சீமான், நகர பொருளாளர் A.தாவுதுஷா, மாவட்ட துணை தலைவர் A.அப்துல் அலீம், மா.மாணவரணி செயலாளர் பைசல், மருத்துவ அணி செயாலளர் நபீல் மற்றும் தமுமுக நகர தொண்டரணியினர் உடன் இருந்தனர்.
எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தும் முத்துப்பேட்டையிலிருந்து முஸ்லிம்கள் (தமுமுகவினர்) வந்து உதவுவது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்று அம்மக்கள் கூறியபோது தமுமுகவினர் மக்கள் சேவையின் நலனை உணர்ந்தனர்.

ரிப்போர்ட்டர் இல்யாஸ்  

முத்துப்பேட்டையில் TNTJ நடத்திய பிரம்மாண்ட மனித சங்கிலி -பொதுமக்கள் வியப்பு !!

தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்ட முஸ்லிம்கள்!!
தீவிரவாத மதமாக சித்தரிக்கப்பட்ட இஸ்லாம்!!
இதனால் முஸ்லிம்கள் அனுபவித்த இன்னல்கள் இடைஞ்சல்கள் கணக்கில் அடங்காது!!
பொய்யய்யே திரும்ப திரும்ப சொன்னால் அதை உண்மையாக்கி விடலாம் என்ற கோயபல்ஸ் தத்துவத்தை பின்பற்றி
முஸ்லிம்கள் மீது அவிழ்த்து விடப்பட்ட பொய்கள் ஏராளம்!!
இது அனைத்தயும் உடைத்து எறிந்து பொய்யை அம்பலப்படுத்தி
உண்மையை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்ட தவ்ஹித்ஜமாத் எடுத்த திட்டம்தான்
""தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்""
இது எதிர்பார்த்தைவிட அதிகமாக பிறமத சகோதரர்களிடம் போய் சேர்ந்து இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்



முத்துப்பேட்டையில் பைத்துல்மால் நடத்திய ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா -மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது கொய்யா மஹால் !!

முத்துப்பேட்டை பைத்துல்மால் சார்பில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மிக அற்புதமாக நடைபெற்றது .சரியாக மாலை 6:30 மணிக்கு புதுப்பள்ளி இமாமின்  கிராஅத் துடன் நிகழ்ச்சி தொடங்கியது .

அதனை தொடர்ந்து பைத்துல் மால் நிர்வாகி சலீம் பைத்துல் மாலின் அவசியம் குறித்து விளக்கி பேசினார் .பின்னர் முத்துப்பேட்டை அனைத்து பள்ளிவாசல்களின் ஜமாஅத் நிர்வாகிகள் ,மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்தி பேசினர் .








இதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் லியாகத் அலி அவர்கள்  முத்துப்பேட்டை பைத்துல்மால் வழங்கிய ஆம்புலன்சை பொது மக்கள் பயன்பாட்டிற்காக அர்பணிப்பு செய்தார் .
ஆம்புலன்சின் சாவியை முத்துப்பேட்டை பைத்துல்மாலின் தலைவர் இலுமுல்லா சனுபர் பெற்றுகொண்டார் . முத்துப்பேட்டை பைத்துல்மாலின் பொருளாளர் மீரா உசேன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் . மாலிக் ரஹ்மான் நன்றியுரையாற்றினார் .

ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சியை காண முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் திரளாக குழுமி இருந்தனர் .இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற கொய்யா மஹால் மக்கள் வெள்ளத்தால் மூழ்கி பெரும் விழாக்கோலம் போல் காட்சியளித்தது .

இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு சாப்பாடு பரிமாறப்பட்டது .

கொய்யா மஹாலின் வெளிப்புறத்தில் முத்துப்பேட்டை பைத்துல்மால்  வழங்கிய ஆம்புலன்ஸ் வாகனம் சுழல் விளக்கு எரியவிடப்பட்ட நிலையில் மக்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன .இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்ததுடன் புகைப்படங்களும் எடுத்து கொண்டனர் .

 முத்துப்பேட்டையில் பைத்துல்மால்  விருப்பு வெறுப்பற்ற ஒரு வலுவான மக்கள் இயக்கமாக உருவெடுக்க வேண்டுமென்று முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றது .

தொகுப்பு :ஜே :ஷேக்பரீத்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)