7:56 PM
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு கருப்பு கொடி காட்டுவோம் :.இஸ்லாமியர்கள் வசிக்கும் வீதிக்குள் வர தடை விதிப்போம் :மக்களை திரட்டுவோம் கொந்தளிப்போம் என்ற தலைப்பில் கடந்த வாரம் நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிரிந்தோம் .
இதன் விளைவாக தமிழகத்தில் சேலம் ,கோயமுத்தூர் போன்ற பகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் மற்றும் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு இஸ்லாமிய பெருமக்கள் கருப்புக்கொடி காட்டி விரட்டி அடித்தனர் .டும. அதன் தொடர்ச்சியாக தென்காசியில் மதிமுக சார்பில் போட்டியி சதன் திருமலை குமார் கடையநல்லூர் பகுதியல் பிரச்சாரம் செய்வதற்காக வந்தார் .அவரை கண்டதும் சுமார் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் வேட்பாளருக்கு எதிராக கண்டன கோஷமிட்டு கருப்பு கொடி காட்டினார்கள் .இதனால் விரக்தியடைந்த அந்த வேட்பாளர் தனது பிரசாரத்தை பாதியிலேயே முடித்து கொண்டு திரும்பினார் .
மானமுள்ள இஸ்லாமிய சொந்தங்களே !! இதேபோல் உங்களது ஊரிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தயங்காதீர்கள் .இன்றே தயாராகுங்கள் !!!
மோடிக்கு ஒட்டு கேட்டு வருவதால் முஸ்லிம்கள் பகுதிகளில் விஜயகாந்த் கட்சியினர் தொடர்ந்து விரட்டிஅடிக்கபடுவதை காணும் பொழுது சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுகின்றதோ என்றுதான் என்ன தோன்றுகிறது
2002 ம் ஆண்டு 3000 முஸ்லிம்களை கொன்று , அதற்க்கு ஒரு மன்னிப்பு கூட
கேட்காமல் , முஸ்லிம்களை பார்த்து நாய் என்று கூறிய மோடிக்கு ஆதரவாக
விஜயகாந்த் ஒட்டு கேட்டு வருவதால்- பல முஸ்லிம் வாழும் பகுதிகளில் கருப்பு
கொடிகளும் , மேலும் தேமுக திகாவினரை விரட்டி வருவதால் - மிக பெரும்
பரபரப்பு நிலவுகிறது
7:27 PM
நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கே வந்து விட்டதைப் போலவே தொலைக் காட்சிகளும் பத்திரிகைகளும் கருத்துகளைப் பரப்புகின்றன. ‘தேசத் தந்தை’யாகவே மோடி, மக்கள் மீது திணிக்கப்படுகிறார்.
முகமூடி தரித்துவரும் ‘இந்த கதாநாயகன்’ எப்படி நடிக்க வேண்டும்? எதைப் பேச
வேண்டும்? உடை எப்படி அணிய வேண்டும்? மக்களை எப்படி ஏமாற்ற வேண்டும்?
இதற்காகவே ஒரு சர்வதேச நிறுவனத்தை (Apco Worldwide) மாதம் ரூ.25,000
அமெரிக்க டாலர் செலுத்தி, வாடகைக்கு எடுத்துள்ளார் மோடி. இதில் இடம்
பெற்றுள்ள வெளி நாட்டு நிபுணர்கள் தான் ‘தேச பக்த’ மோடிக்கு மக்களை
ஏமாற்றும் தந்திர நடவடிக்கைகளை உருவாக்கித் தருகிறார்கள்.
மோடியின் முகமூடியை அகற்றிப் பார்த்தால் உண்மை முகம் அம்பலமாகிவிடும்.
• இந்தியாவை இந்துக்களின் நாடாக்கும் கொள்கைக்காக செயல்பட்டுவரும்
ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்று அரசியலுக்கு வந்தவர் மோடி. ‘இந்தியாவை
இராணுவ மயமாக்கு; இராணுவத்தை இந்து மயமாக்கு’ என்பதே ஆர்.எஸ்.எஸ். அதன்
துணை அமைப்புகளின் முழக்கம். இப்போது முன்னாள் இராணுவ தளபதிகள் அதற்காகவே
பா.ஜ.க.வில் இணைந்து வருகிறார்கள்.
• நினைவிருக்கிறதா? அயோத்தியில்
பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் அதற்காக அத்வானி நாடு முழுதும் ரத யாத்திரை
நடத்தியதும் நினைவிருக்கிறதா? அந்த யாத்திரைக்காக திட்டங்களை வகுத்து
செயல்பட்டவர்தான் மோடி!
• 2002 ஆம் ஆண்டில் இரண்டாயிரத்துக்கும்
மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொடூரமாக மோடி ஆட்சியில் இனப் படுகொலைக்கு
உள்ளானர்களே, மறக்க முடியுமா? இந்தப் படுகொலைகளை தடுக்க வேண்டாம் என்று
காவல்துறைக்கு உத்தரவிட்டவர் இந்த மோடிதான். அப்போது மோடிக்கு ஆதரவாக
செயல்பட்ட அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஹரேன்பாடியா எனும்
அமைச்சர் விசாரணைக் குழுவின் முன் இந்த உண்மையைப் போட்டு உடைத்தார்.
இதன் காரணமாக அடுத்த சில மாதங்களிலேயே அவர் மர்ம நபர்களால் படுகொலை
செய்யப்பட்டார். கொலையுண்ட ஹரேன்பாடியாவின் தந்தை, இந்தக் கொலைக்குக்
காரணம் மோடிதான் என்று குற்றம் சாட்டினார்., மோடியோ, பாகிஸ்தான்
தீவிரவாதிகள் சதி என்று கதை கட்டி 17 அப்பாவி முஸ்லிம்களை கைது செய்தார்.
பொய் வழக்கு என்று கூறிய நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது.
• கலவரத்தின்போது பிணையில் வெளிவர முடியாத ஆள்தூக்கி சட்டங்களின் கீழ் மோடி கைது செய்த - அனைவருமே இஸ்லாமியர்கள்தான்.
• மூன்று முறை முதல்வராக இருந்த மோடி, எந்த ஒரு தேர்தலிலும் ஒரு வேட்
பாளராகக்கூட முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்களை நிறுத்தியதில்லை. அவர் தான்
இப்போது முஸ்லிம்களின் வாக்குக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.
•
குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை, தனது காரில் ஒரு நாய்
குட்டி சிக்கியதைப்போல் உணர்ந்தேன் - என்று கூறியவர் தான் மோடி.
•
இந்தியாவின் முதல் நிலையில் இருக்கக்கூடிய 100 முதலாளிகளில் 74 பேர் அடுத்த
பிரதமராக மோடியே வரவேண்டும் என்று கருத்து கூறியுள்ளனர். மக்களைச் சுரண்டி
கொள்ளையடிக்கும் மோடி பெருமுதலாளிகளின் வேட்பாளர்.
• ‘குஜராத்தில்
கலவரம் நடந்தது உண்மைதான். ஆனால் மோடி மீது நீதிமன்றம் குற்றம்சாட்டவில்லை’
என்று பேசித் திரிகிறார்கள், மோடியின் பிரச்சாரப் புலிகள். இது முழு
உண்மையல்ல. மோடிக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்வதற்கு போதுமான அளவில்
சாட்சிகள் கிடைக்கவில்லை என்றுதான் நீதிமன்றம் கூறியிருக்கிறது. அவர்களிடம்
மற்றொரு கேள்வி! மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் மாயா கோத்னானி;
அவர் 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏன்?
நரோ பாட்டியா என்ற இடத்தில் 69 இஸ்லாமியர்கள். (பெண்கள், குழந்தைகள்
உட்பட) வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அப்போது பா.ஜ.க. சட்டமன்ற
உறுப்பினராக இருந்த இந்தப் பெண், இந்தக் கொலைக்கு உத்தரவிட்டார் என்பது
குற்றச்சாட்டு. இந்தப் படுகொலைகளை நடத்தியதற்காக 2007இல் பெண்கள்,
குழந்தைகள் நலத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தவர்தான் ‘தேசபக்தர்’ மோடி!
• குஜராத் படுகொலைகள் உலகத்தையே அதிரச் செய்தன. மனித உரிமை அமைப்புகள்
கண்டித்தன; இனி எந்த முகத்தோடு வெளிநாடுகளுக்குப் போவேன் என்று பிரதமராக
இருந்த இவர்கள் கட்சியைச் சார்ந்த வாஜ்பாயே கூறினார். அது மட்டுமல்ல,
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல அய்ரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டுக்குள்
நுழையவே மோடிக்கு அனுமதி மறுத்தன. அந்தத் தடை இப்போதும் நீடிக்கிறது. இந்த
மனிதர்தான் பிரதமராகி, இந்தியாவின் கவுரவத்தை உலகத்தில் உயர்த்திப்
பிடிக்கப் போகிறாராம். இதை மக்கள் நம்ப வேண்டுமாம்!
• குஜராத்
காவல்துறை மோடியைக் காப்பாற்றுவதாகக் கூறி ஒரு ‘போலி என்கவுண்டர்’
நடத்தியது. கல்லூரி மாணவி உள்ளிட்ட பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள்
தன்னை கொலை செய்ய திட்டமிட்டதாக மோடி கூறினார். நீதிமன்றம் இது பொய்யாக
நடத்தப்பட்ட ‘என்கவுண்டர்’ என்று கூறியது. அதற்காக 32 காவல்துறை அதிகாரிகள்
இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல்துறை தலைமை அதிகாரி வன்சரா
என்பவரும் ஒருவர். அவர் சிறையிலிருந்து மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
“அரசாங்கம் கூறியதற்காகவே நாங்கள் கொலை செய்தோம்; தண்டனை எங்களுக்கு
மட்டும்தானா! அரசாங்கத்துக்கு இல்லையா?” என்று கடிதத்தில் கேட்டுள்ளார்.
ஊர் ஊராகப் போய் ‘சவால்’ விடும் மோடி, வாயை மூடிக் கொண்டிருக்கிறார்.
• “குஜராத்தைப் பாருங்கள்... அடேங்கப்பா... என்ன வளர்ச்சி?” என்று
ஆர்ப்பரிக்கிறார்கள், மோடியின் சீடர்கள். அவை எல்லாம் கட்டுக்கதை என்று
புள்ளி விவரங்கள் கூறுகின்றன. குஜராத்தில் பெரும் தொழிலதிபர்கள்தான்
கொழுக்கிறார்கள். ஆனால் மக்கள்...?
வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும்
மக்களில் குஜராத் இந்தியாவில் 9ஆவது இடத்தில் இருக்கிறது. கல்வி கற்றவர்கள்
எண்ணிக்கையில் தமிழ்நாட்டுக்குக் கீழே 5 ஆவது மாநிலம். குழந்தைகள் மரண
வீதத்தில் இந்தியாவிலேயே முதலிடம் குஜராத்துக்குத்தான். பெண் குழந்தைகளை
வெறுப்பதிலும், பெண் குழந்தைக் கொலைகளும் குஜராத்தில் அதிகம்.
ஆண்களுக்கு
இணையாக பெண்கள் மிகக் குறைவாக இருப்பதில் இந்தியாவிலேயே 11 ஆவது இடத்தில்
நிற்கிறது குஜராத். இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள்
இந்தியாவிலேயே அதிகம் உள்ள மாநிலம் குஜராத். இன்னும் ஏராளமாகப் பட்டியலிட
முடியும்.
• குஜராத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் 641 பேர்.
இவர்கள் விபத்தில் பலியானவர்கள் என்று காவல்துறை பொய்யாக வழக்குப் பதிவு
செய்ய மோடி ஆட்சி கட்டாயப்படுத்துகிறது.
• மனித மலத்தை மனிதன்
எடுப்பது புனிதமான தொண்டு என்று மோடி கூறினார். அது நூலாகவும் வெளிவந்து
பிறகு திரும்பப் பெறப்பட்டது. மனித மலத்தை மனிதர்கள் எடுப்பது அங்கே
பெருமளவில் நடைமுறையில் உள்ளது. பாதாள சாக்கடையில் இறங்கி, மூச்சுத் திணறி
இறந்து போன துப்புறவுத் தொழிலாளர் எண்ணிக்கை 641 பேர்.
•
குஜராத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமான கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள்
தொடருகின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் இது.
தேனீர்க் கடைகளில் தலித் மக்களுக்கு தனிக் குவளை. அதற்குப் பெயர் ‘இராம
பாத்திரம்’. உயர்சாதியினர் கடைகளில் பொருள் வாங்க அவர்கள் நடத்தும்
பேருந்துகளில் பயணிக்க, மதிய உணவுத் திட்டத்தில் பிற ஜாதிக் குழந்தைகளுடன்
இணைந்து உணவருந்த.... என்று, தடைகள் நீடிக்கின்றன.
ஆமதாபாத் போன்ற
நகரங்களிலேயே ‘தலித்’ பிரிவினருக்கு ‘வீட்டுக்குடியிருப்புகள்’ தனியாகவே
அமைக்கப்பட்டுள்ளன. அய்.ஏ.எஸ். போன்ற உயர் அதிகாரிகள்கூட இந்தக்
குடியிருப்புகளில்தான் வாழ வேண்டும். ‘ஆமதாபாத்’ தொழில் நகரத்தில் மட்டும்
இதேபோல் 300 குடியிருப்பு காலனிகள் உள்ளன.
மூன்று முறை முதல்வராக இருந்த
மோடி ‘தேனீர்க்கடை’யில் வேலை செய்து உயர்ந்தவன் என்று கூறிக் கொள்ளும்
மோடியின் கண்களுக்கு இந்த அவலங்கள் தெரியவில்லையா?
• குஜராத்தில்
பெரும் தொழிலதிபர்கள் வளருகிறார்கள் என்பதுதான் உண்மை. டாட்டா, அதானி,
சத்ரலா, லார்சன் அண்ட் டூட்ரோ போன்ற பெரும் தொழில் நிறுவனங்களுக்கு
அடிமாட்டு விலைக்கு நிலங்களை ‘தாரை’ வார்த்துள்ளார் மோடி!
2011-2012ஆம்
நிதி ஆண்டில் பெரும் ‘பகாசுர’ தொழில் நிறுவனங்களுக்கு சந்தேகப்படும்
வகையில் நியாயமில்லாமல் ரூ.1275 கோடியை மோடி, வாரி இறைத்ததை மத்திய தணிக்கை
அதிகாரியின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ரூ.160 கோடியை அரசுக்கு
செலுத்தாமல் ஏமாற்றிய அதானி நிறுவனத்துக்கு மோடி ஆட்சி ரூ. 240 மட்டும்
அபராதம் விதித்து பிரச்சினையை முடித்துக் கொண்டது.
ஏராளமாகப் பட்டியலிட
முடியும்.
• எரிவாயுக்கு ஒரு யூனிட் விலையை மத்திய காங்கிரஸ் கட்சி 4
டாலரிலிருந்து 8 டாலராக உயர்த்தியது. மோடியின் குஜராத் ஆட்சி 16 டாலராக
உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது, ஏன்? சூரிய மின்சக்தியை எல்லா
மாநிலங்களிலும் ஒரு யூனிட் ரூ.8க்கு வாங்கப்படும்போது குஜராத்தில் மட்டும்
ரூ.15க்கு வாங்குவது ஏன்? சுரங்க ஊழலில் சிக்கி 3 ஆண்டு தண்டனை பெற்று
பிணையில் வெளி வந்துள்ள பாபு பொக்கிரியா, மோடி அமைச்சரவையில்
அமைச்சராக்கப்பட்டுள்ளார். ரூ.450 கோடி மீன் வள ஊழலில் சிக்கிய புருசோத்தம்
சோலங்கி ‘கேபினட்’ அமைச்சர், அம்பானி குடும்பத்தின் மருமகன் சவுராவ்
பட்டேல், குஜராத்தில் எரிவாயு, பெட்ரோலிய எரிசக்தித் துறை அமைச்சர், ஏன்?
கெஜ்ரிவால் எழுப்பியுள்ள இந்த குற்றச்சாட்டுகளுக்கு மோடியிடமிருந்து பதில்
இல்லை.
• இந்திய மருத்துவக் கவுன்சில்தலைவராக இருந்த கேதன் தேசாய்
என்ற பார்ப்பனர், மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க 2 கோடி லஞ்சம்
வாங்கும்போது பிடிபட்டவர். 2010 ஏப்ரலில் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார். வீட்டில் சோதனையில் சுமார் 1500 கோடி ரூபாய் நோட்டுகளும்
250 கிலோ தங்கமும் பிடிபட்டன. நாட்டையே அதிர்ச்சியடையச் செய்த இந்த
பார்ப்பனர் ஊழலால் இந்திய மருத்துவ கவுன்சிலே கலைக்கப்பட்டது.
பிணையில்
வெளி வந்துள்ள தேசாய் மீது வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மோடி ஆட்சி
குஜராத் பல்கலை வழியாக இவரை (மீண்டும் மருத்துவக் கவுன்சிலுக்கு
உயிரூட்டப்பட்டு), அதன் கவுன்சில் உறுப்பினராக்கியுள்ளது. இதற்கு மத்திய
அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும் உடந்தை. இதற்கு எழுத்து மூலம் எதிர்ப்பு
தெரிவித்த சுகாதாரத் துறை செயலாளர் கேசவ் தேசிகராஜ் - வேறு துறைக்கு தூக்கி
அடிக்கப்பட்டுள்ளார். இதுதான் மோடியின் ஊழல் ஒழிப்பு லட்சணமா? இந்த
பார்ப்பன பாசிச சக்திகளிடம் தமிழர்களே, ஏமாறாதீர்!
4:00 PM
தஞ்சாவூர்: தஞ்சை நாடாளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் மீது கொலை வழக்குகள் உடபட 20 வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
வேட்புமனு தாக்கலின்போது அவர் உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான சனிக்கிழமை அவர் உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்தார்.அதில், இவர் மீது திருத்துறைப்பூண்டி நடுவர் நீதிமன்றத்தில் கொலை முயற்சி பிரிவு 6 வழக்குகள், கொலை மிரட்டல் பிரிவில் 7 வழக்குகள், சொத்து சேதப்படுத்துதல் பிரிவில் 6 வழக்குகள் உடபட 20 வழக்குகள் விசாரணையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுநலனில் அக்கறை உள்ளவர்களாகவும் ,சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராகவும் ,இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவராகவும் ,தேசிய ஒருமைப்பாடு ,சமூக நல்லிணக்கம் ,ஆகியவற்றில் உறுதியானவராகவும் ,இருக்க வேண்டும் என்று அரசியல் சாசன சட்டமும் தேர்தல் விதிமுறைகளும் கூறுகின்றன .
ஆனால் தஞ்சையில் பாஜக வின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள இந்த வேட்பாளருக்கோ ஏகப்பட்ட கிரிமினல் வழக்குகள் .அதுவும் ஒஎரு சமுதாயத்திற்கு எதிரான முஸ்லீம் சமுதாயத்திற்கு எதிரான கலவர வழக்குகள் .
இவரின் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டுள்ள தேர்தல் அதிகாரி மீது வழக்கு போட யாரேனும் சமூக ஆர்வலர்கள் முன் வரும் பட்சத்தில் அவருக்கு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் துணை நிற்கும் .
3:28 PM
இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்… அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் 1) மயிலாடுதுறை 2) கும்பகோணம், 3) பாபநாசம், 4) திருவிடைமருதூர், 5)பூம்புகார் மற்றும் 6) சீர்காழி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.
இவற்றில் கடந்த தேர்தலில் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருக்கின்றது. மற்ற நான்கு தொகுதிகளில் இரண்டில் காங்கிரஸ் கட்சியும் ஒன்றில் பாமகவும் மற்றொன்றில் விசிகவும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருக்கின்றன.
** இந்த ஆறு சட்டமன்ற தேர்தல்களிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை
= 946777 (சராசரியாக 82 சதவிகிதத்திற்கும் கூடுதலாக)
** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 414722 (43.80%)
** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 472832 ( 49.94%)
** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 9495 (1.00%)
இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.
முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்….
இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்
1) பாமக (4% அதாவது 37,871 வாக்குகள்)
2) காங்கிரஸ் (2% அதாவது 18935 வாக்குகள்)
இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (414722) இருந்து கழித்தால் கிடைப்பது = 357916 வாக்குகள்.
இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்….
1) மனிதநேய மக்கள் கட்சி (2.48% அதாவது 19814 வாக்குகள். இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் அக் கட்சி தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம்)
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்…. என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 28403 வாக்குகள்)
இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (357916 + 19814 +28403) = 406133 வாக்குகள்.
இது தான் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்….
அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்……
இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்…
1) தேமுதிக (5.6% அதாவது 53019 வாக்குகள். இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம்)
2) கம்யூனிஸ்ட்டுகள் (1.5% அதாவது 14201 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2.48 % அதாவது 19814 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் (6% அதாவது 56807 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் இன்னொரு 3% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊட்கங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)
இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (472832) இருந்து கழித்தால்….
(472832) – (53019 +14201 + 19814 + 56807) = 328991 வாக்குகள்.
ஆக திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 406133 (42.90%)
அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 328991 (34.75%)
வாக்கு வித்தியாசம் = 77142 வாக்குகள்.
இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (77.5%)
வரும் தேர்தலில் 88 சதவிகித வாக்குப் பதிவு இருக்கும் என்று எடுத்துக்கொண்டால்… மொத்த வாக்குகளான (இந்த முறை) 13 லட்சம் வாக்குகளில் பத்து சதவிகிதம் அதாவது 130000 (ஒரு லட்சத்தி முப்பதாயிரம்) வாக்குகளை பாஜக கூட்டணியும் காங்கிரஸும் பிரித்துக்கொள்ளும் (காங்கிரஸ் சார்பாக மணிசங்கர் ஐயர் நிற்பதால் பாஜக கூட்டணி வாக்குகளில் கணிசமான சேதாரம் இருக்கும்.
ஆக திமுக கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சி மிகத்தெளிவான வெற்றியை மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும்.
அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.
பின் குறிப்பு: திமுக – அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
10:51 AM
புதுடெல்லி: முஸ்லிம்கள் காங்கிரஸ்
கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சயீது
அஹமது புகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில்
காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அவர்கள் ஆட்சிக்கு
வந்தால் எங்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்று
நம்புகிறோம். என்றார்.
மேலும் அவர் கூறுகையில், 60க்கும்
மேற்பட்டவர்கள் உயிரிழக்க காரணமான முசாபர் நகர் தாக்குதலில் முஸ்லிம்களை
காப்பாற்ற சமாஜ்வாதி அரசு முயலவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
அதே போல
தேர்தலுக்கு பின் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தரமாட்டோம் என மாயாவதி உறுதியளிக்க
தவறிவிட்டதாகவும் இமாம் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாடு பெரும் ஆபத்தை எதிர்
நோக்கியுள்ளதாகவும், இதற்காகவே மதவாத சக்திகளின் கையில் நாடு சென்றுவிடாமல்
நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை
இமாம் சந்தித்து முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றும் பொய்
வழக்குகளில் சிக்கியுள்ள முஸ்லிம்கள் குறித்தும் பேசியமை
குறிப்பிடத்தக்கது.
4:28 PM
தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் பாஜக வின் சார்பில் முத்துப்பேட்டையை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் . தஞ்சை தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இவர் முத்துப்பேட்டையில் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வரும் இஸ்லாமியர்களையும் இந்துக்களையும் பிரித்து அதன் மூலம் உயர் சாதி பார்ப்பன கும்பல்களுக்கு பல்லக்கு தூக்கி வருவதாலும் ,இந்து ஒற்றுமை என்று கூறி இந்துக்களையே மிரட்டி அடிமைபடுத்த நினைபதாலும் இந்த வேட்பாளருக்கு இந்துக்கள் மத்தியில் கடும் கோபமும் கடும் அதிருப்திகளும் உள்ளன .
இந்நிலையில் தஞ்சை தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இவர் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் வெற்றிபெற்றுவிடலாம் என்று பகல் கனவு கண்டு வருகிறார் .இவருக்கு முத்துப்பேட்டையில் உள்ள இந்துக்களே பண உதவி செய்ய முன் வராத நிலையில் பிரபல இஸ்லாமிய தொழிலதிபர் ஒருவர் தாராளமாக நிதி உதவிகளை வழங்கி வருவதாக திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன .
அதுமட்டுமில்லாமல் இந்த இஸ்லாமிய தொழிலதிபர் பாஜகவின் தேசிய செயலாளர் இல கணேசனை வெளிநாட்டிற்கு அழைத்து அவருக்கு வீர வாள் வழங்கி கௌரவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது .இவரது சொத்துக்களை பாதுகாத்து கொள்வதற்காகத்தான் பாஜக வுடன் கைகோர்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
இது போன்ற மன்னிக்க முடியாத செயல்களில் ஈடுபடவேண்டாம் என முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் அவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கின்றது .
இவரின் இந்த சமுதாய துரோக போக்கு தொடருமேயானால் இவரின் அத்துனை வண்டவாளங்களையும் துணிவோடு தோலுரிக்கும் இன்ஷா அல்லாஹ் >>>>>
1:12 PM
முஹைதீன் பள்ளி தெரு மர்ஹூம் சு. மு. முகைதீன் பக்கீர் அவர்களின் மகளும், மர்ஹூம் மீ. மு. பாவா முகைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சு.மு. கணக்கப்பிள்ளை என்கிற செய்யது ஹமீது அவர்களின் சகோதரியும், மௌலானா என்கிற செ. முஹமது அலி சகோதரர்களின் மாமியும், எம்.அன்சாரி அவர்களின் மாமியாருமான ராபியதுல் பஜரியா அவர்கள் இன்று பகல் (01.04.2014) 12 மணிக்கு மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 7 மணிக்கு முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
11:38 AM
பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆதரவு கட்சிகள் மசூதிகளில் ஓட்டு கேட்பதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் இந்திய முஸ்லிம் லீக் கட்சி புகார் கொடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய முஸ்லிம் லீக் கட்சி மாநில தலைவர் தடா ரகீம், தமிழக
தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரை இன்று சந்தித்து மனு கொடுத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:–
தேர்தல் பிரசாரத்தின் போது மசூதிகள்,
கிறிஸ்தவ ஆலயங்களில் சென்று ஓட்டு கேட்பது வழக்கம். அந்த வகையில் கடந்த
வெள்ளிக்கிழமை அன்று சேலத்தில் தே.மு.தி.க.வினர் பள்ளி வாசலில் ஓட்டு கேட்ட
போது மோதல் ஏற்பட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தொடரக்கூடாது
என்பதற்காக தேர்தல் ஆணையத்திடம் மோடி ஆதரவு கட்சிகள் மசூதிகள்,
பள்ளிவாசலில் ஓட்டு கேட்பதை தவிர்க்க உத்தரவிட வேண்டும் என்று
வலியுறுத்துகிறோம்.
இந்து–முஸ்லிம் மோதல் ஏற்படுவதை தடுக்க
வேண்டும், கூட்டணி கட்சிகளிலும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்கள்
மசூதிக்கு வேட்பாளரை அழைத்து செல்லும் போது மசூதியில் உள்ள சில முஸ்லிம்கள்
இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் பிரச்சினை ஏற்படுகிறது.
இத்தகைய
மோதல் போக்கை தடுக்க மசூதிகளில் வாக்கு சேகரிக்க செல்வதை ஒட்டுமொத்தமாக
தடுக்க வேண்டும். அல்லது பா.ஜனதா ஆதரவு கட்சிகள் செல்வதை மட்டுமாவது
தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
12:21 PM
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகரில் மளிகை கடை வைத்து
இருப்பவர் அப்துல் வகாப். இவரது மகன் முகம்மது சபியுல்லாவுக்கும,;
புதுக்கோட்டை மாவட்டம் பி.ஆர்.பட்டிணம் அபுல்பரக்கத் மகள் சபினா
பேகத்திற்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
திருமணத்தை
முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் முறைபடி
திருமணமும், அதே பள்ளிவாசலில் சாப்பாடு நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டு
திருமண பத்திரிக்கையில் அடிக்கப்பட்டன. அதனால் திருமணத்திற்கான ஏற்பாடுகளை
பள்ளிவாசலில் இரண்டு நாட்களாக செய்யப்பட்டன.
இந்த நிலையில் மணமகன் மற்றும்
பெண் வீட்டார் திடீர் என்று தவ்ஹீத் கொள்கை படி திருமணத்தை நடத்த
திட்டமிட்டு கருமாரியம்மன் கோவில் அருகே உள்ள மணமகனின் உறவினர் வீட்டில்
வைத்து நேற்று காலை 11.30 மணியளவில் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள்
முன்னிலையில் திருமணத்தை நடத்தினர்.
பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் முறைபடி
திருமணம் நடத்த தயாராக எதிர்பார்த்து காத்து இருந்த ஜமாத் நிர்வாகிகள்,
ஊர்காரர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள், திருமணத்தை
ஜமாத்துக்கு மாறாக தவ்ஹித் கொள்கைப்படி நடத்தியதால் பள்ளிவாசலில் சாப்பிட
அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தனர்.
இதனால் பெரும் பதற்றமானது. உடன்
மனமகன் வீட்டாரும், தவ்ஹித் ஜமாத் பிரமுகர்களும் முத்துப்பேட்டை
போலீசாருக்கு தகவல் தொவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில்
போலீசார் ஆசாத்நகர் பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் நிர்வாகிகளிடம் பேச்சு
வார்த்தை நடத்தினர்.
இதனால் பிரச்சனை பெரிதாகி ஆத்திரம் அடைந்து சுன்னத்
ஜமாத் நிர்வாகிகள் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்ட மதரஸாவை பூட்டுப்போட்டு
பூட்டினார்கள். இதனால் மணமகன் உறவினர்கள் தவ்ஹித் ஜமாத் முன்னால் மாவட்ட
தலைவர் அன்சாரி தலைமையில் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.
இதனால்
திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் சிறிது நேரம் போக்கு வரத்து தடைப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி தலைமையில்
போலீசார் வந்து சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களை அப்புறப்படுத்தினர்.
அதன்பிறகு மாப்பிள்ளை தந்தை அப்துல் வகாப் மற்றும் இவரின் தந்தை பக்கிர்
ராவுத்தர் ஆகியோர் பள்ளிவாசல் சென்று சுன்னத் ஜமாத் நிர்வாகிகளிடம் நான்
செய்தது தவறு மன்னித்து கொள்ளுங்கள்.
ஜமாத் என்னா முடிவு எடுத்தாலும்
கட்டுப்படுகிறேன், வந்தவர்களுக்கு சாப்பாடு வழங்க அனுமதி தாருங்கள் என்று
கண்ணீர் விட்டு கேட்டனர். அதனால் சமாதனம் அடைந்த பள்ளிவாசல் சுன்னத் ஜமாத்
நிர்வாகிகள், ஜமாத் கூட்டத்தை கூட்டினார்கள். இதில் நூற்றுக்கணக்கான
இளைஞர்களும் கலந்துக் கொணடனர்.
அப்பொழுது பள்ளிவாசலில் நடந்த கூட்டத்தில்
போலீசார்கள் மணிகண்டன், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் தனது செல் போனில் படம்
எடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் போலீசாரிடம் கடும் வாக்கு
வாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் இளைஞர்களுக்கும், போலீசுக்கும்
தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பிறகு சமாதானம் செய்யப்பட்டன. அப்பொழுது நடந்த
கூட்டத்தில் மாப்பிளை தந்தை பள்ளிவாசலுக்கு, செய்த தவறுக்காக ஒரு லட்சம்
அபராதம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டன. இதற்கு மாப்பிள்ளை தந்தை
அப்துல் வகாப் சம்மதம் தெரிவித்து கையெழுத்து போட்டார்.
அதன் பிறகு
திருமணத்துக்கு சாப்பிட வந்த ஆண்கள் மற்றும் பெண்களை சாப்பிடும் மதரஸாவின்
பூட்டை திறந்து அனுமதித்தனர். இது குறித்து திருத்துறைப்பூண்டி தாசில்தார்
ராஜகோபால், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள் விசாரனை
நடத்தினார்கள்.
மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பள்ளிவாசல் அருகே
துப்பாக்கி ஏந்திய போலீசார் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுப்படுத்தப்பட்டனர். இச்சம்பவத்தால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(62). முதியவரான இவர் சங்கேந்தி கடைத்தெருவில் பேன்ஸி ஸ்டோர் வைத்துள்ளார். ஆனால் கடையில் இருப்பதில்லை.
தனது மைத்துனர் தேவராஜை கடையில் வைத்துவிட்டு தனது பைக்கில் மினி பல்பொருள் அங்காடி போல் அமைத்துக் கொண்டு தினமும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று அலைந்து பொருட்களை விற்பனை செய்து வரும் இவரிடம் கிடைக்காத பொருட்களே இல்லை.
குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை வைத்துள்ளார். வேறு ஏதும் மக்களுக்கு தேவைப்பட்டால் போனில் தொடர்புக் கொள்வார். அல்லது இன்று சொன்னால் நாளை நேரடியாக கொடுத்து விடுகிறார்.
வயது 62-ஐ கடந்தாலும் இன்னும் வாலிப பையன் போல் வலம் வரும் பாண்டியனை முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கடைத்தெருவில் மடக்கி விசாரித்ததில் அவர் கூறுகையில் நான் 25 வருடங்களுக்கு மேலாக இந்த தொழில் செய்து வருகிறேன்.
முதலில் சைக்கிளில் சென்று வந்தேன். அதன் பிறகு டிவிஎஸ் 50-ல் அப்புறம் ஸ்கூட்டரில் வந்தேன். இப்பொழுது டிவிஎஸ் விக்டர் வைத்துள்ளேன். தினமும் 200 முதல் 500 வரை எல்லா செலவும் போக கிடைக்கிறது. கடையில் நாள் முழுவதும் உட்கார்ந்தால் கூட இந்த வருமானம் கிடைக்காது.
அதனால் இப்படி கிளம்பி விடுவேன். இது எனது உடல் ஆரேக்கியத்துக்கும் நல்லதாக உள்ளது. என்னிடம் சமையலுக்குத் தேவையான பருப்பு முதல் காலில் அணியும் செருப்புவரை வைத்துள்ளேன். கடையில் விற்காத பொருட்களை கூட இப்படி கொண்டுவந்து விற்று காசு பார்த்துவிடுவேன் என்ற அவர் தற்பொழுது தேர்தல் சுறுசுறுப்பு இல்லை.
எனக்கும் தேர்தல் ஆர்வம் கிடையாது என்றார். நடமாடும் இந்த மினி பல்பொருள் அங்காடியை கொண்டுவரும் பாண்டியனை மக்கள் வேடிக்கையுடன் பார்த்து வருகிறார்கள்.
9:31 PM
முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை
தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற
ஹிஜ்ரி 1435 ரபிவுல் ஆஹிர் பிறை 05, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 06-04-2014 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே எனது உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும்
திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக
இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
புதுத்தெரு மர்ஹும் N. முகம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் M.A ஜக்கரியா, மர்ஹும் M.A சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரரும், G. ரோஷன்தீன் அவர்களின் தகப்பனாருமாகிய“அல்ஹாஜ் M.A குலாம் ரசூல்” அவர்கள் நேற்று (28.03.2014) இரவு 11.30 மணியளவில் சிங்கப்பூரில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா இன்று (29.03.2014) காலை 11.30 மணியளவில் சிங்கப்பூரில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்
G. ரோஷன்தீன்
11:30 AM
மயிலாடுதுறையில் வேட்பாளராக கலத்தில் உள்ள ம.ம.க. தலைவர் ஹைதர் அலி அவர்களை ஆதரித்தும் !
2)தேனி வேட்பாளர் ஜெ.எம்.ஆரூன் (காங்கிரஸ்) அவர்களை ஆதரித்தும் .
3)வேலூர் வேட்பாளர் அப்துர் ரஹ்மான் (இ.யூ.மு.லீக்) அவர்களை ஆதரித்தும் ..
4)ராம்நாடு , நெல்லை , வட சென்னை ஆகிய தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ.கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் !
முஸ்லீம் வேட்பாளர்கள் நிற்காத இடங்களில் சுமார் 6 தொகுதிகளில் இந்திய தேசிய லீக் கட்சி
1) மத்திய சென்னை – ஜான் பாஷா பி.ஏ.
2) திண்டுகல் தொகுதி ---- வழக்கறிஞர் ஜமால்
3) மதுரை - முஹமது அலி (எ) மதுரை அலி
4) திருவேட்பாளர் கள் போட்டி இடுகின்றனர்
வண்ணாமலை --- ரசூல் மைதீன்
5) திருச்சி - அன்வர் பாஷா
6) கள்ளகுருச்சி -------- ஏ.ஷாஜஹான்