முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

பெங்களூருவில் கொடூரம்: வெளி நாட்டு முஸ்லிம் மாணவியை நிர்வாணமாக்கி தாக்குதல்!




பெங்களூரு, பிப்ரவரி 04/2016: தான்சானியா நாட்டைச் சேர்ந்த மாணவியை நிர்வாணமாக்கி பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 31-ம் தேதி இரவு, சாலையில் நடந்து சென்ற சபானா தாஜ் என்ற பெண் மீது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய அந்த காரை ஓட்டி வந்த நபர், சூடான் நாட்டை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்ற மாணவர் என தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், இஸ்மாயிலை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தான்சானியாவைச் சேர்ந்த இளநிலை வர்த்தக மேலாண்மை (பி.பி.எம்.) படித்து வரும் மாணவி உட்பட சிலர், விபத்து ஏற்பட்ட இடம் வழியாக காரில் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஒரு கும்பல், காரை மடக்கி அவர்களை தாக்கியுள்ளது. இதில், காரில் இருந்த மாணவி ஒருவரை தவிர மற்றவர்கள் தப்பி ஓடி இருக்கின்றனர்.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், மாணவியை கடுமையாக தாக்கியதோடு, நிர்வாணமாக்கி போலீசார் முன்னிலையிலேயே ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது. அப்போது, கிழிந்த ஆடையுடன் தன் மானத்தை காப்பாறிக்கொள்ள அந்த மாணவி, அந்த வழியாக வந்த ஒரு பேருந்தில் ஏற முயன்றுள்ளார். அப்போது, அவரைத் துரத்தி சென்ற அந்த கும்பல், அவரை கீழே இழுத்துப் போட்டு உதைத்துள்ளது.


அதேநேரத்தில், விபத்து ஏற்படுத்திய காரையும், தான்சானியா மாணவியின் காரையும் அந்த கும்பல் தீ வைத்துள்ளது. விபத்து ஏற்படுத்திய நபருக்கும், அந்த மாணவிக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாணவி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



இது குறித்து பெங்களூரு காவல்துறை ஆணையர் மெகாரிக் கூறும்போது, ''மாணவியிடம் இருந்து புகார் பெறப்பட்டு உள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளோம். விரைவில் அவர்களை கைது செய்துவிடுவோம். இது போன்ற தாக்குதல்களை அனுமதிக்கவே முடியாது" என்றார்.



இதனிடையே, தான்சானியா அரசு இந்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் பயிலும் தான்சானிய மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் அந்நாடு வலியுறுத்தியுள்ளது.



இந்நிலையில், மாணவி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தச் சம்பவம் மிகவும் வெட்ககேடானது. இதற்காக மிகவும் வேதனைப்படுகிறேன். கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தாரமையாவைத் தொடர்பு கொண்டு, தான்சானிய மாணவியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளேன்" என்று கூறி உள்ளார்.

'ஆதார் அட்டை' இருந்தால் 3 நாளில் பாஸ்போர்ட் பெறலாம்!


சென்னை, பிப்ரவரி 04/2016: பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் ஆதார் அட்டை சமர்ப்பித்தால் 3  நாட்களில் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ள முடியும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்,

" சாதாரண முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது, காவல்துறை  அறிக்கை பெற்று, பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்குக்  கட்டணம் 1,500 ரூபாய் தான். இந்த நடைமுறையை வெளியுறவு துறை அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது.

இனிமேல் சாதாரண முறையில் 1,500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் போது  'ஆதார்' அட்டை, 'பான்கார்டு' எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சுய ஒப்புதல் அளிக்கும் இணைப்பு - 1 படிவம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பம் வழங்கினால், காவல்துறை அறிக்கை பெறாமலே  பாஸ்போர்ட் வழங்கப்படும். இதன்பின், காவல்துறை அறிக்கை பெறப்படும்.

தற்போது பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க புதிய முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும்  'தக்கல்' முறையும் அமலில் உள்ளது.அதற்குக்  கட்டணம் 3,500 ரூபாய் ஆகும்.

ஆவணங்கள் சரிபார்ப்பு பணிக்கு, விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் ஆஜராக, 'ஆன்லைனில்' தேதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே பெற வேண்டும். திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரையிலான 5  நாட்களில்  வசதிப்பட்ட நேரத்தில் நேரில் ஆஜராவதை ஆன்லைனில் உறுதி செய்யலாம். ஒரு முறை உறுதி செய்த தேதியை மறுமுறை மாற்றிக் கொள்ளவும் முடியும்.

காவல்துறையின் அறிக்கை பெற விண்ணப்பதாரரின் விவரங்கள் மொபைல் போன் மூலம் அனுப்பும் முறை தமிழகத்தில் விரைவில் அமலுக்கு வர உள்ளது. போலீசாரின் மொபைல் போனுக்கு, விண்ணப்பதாரரின் விவரங்கள் அனுப்பப்பட்டு  சரிபார்ப்பு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட  21 நாட்களுக்கு முன் மொபைல் போன் மூலம் அறிக்கையை பெற முடியும். 

பாஸ்போர்ட் உதவிமையங்கள், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படுகின்றன.இதற்கு சேவை கட்டணம் 100 ரூபாய்.

மழை வெள்ளத்தில் பாஸ்போர்ட் சேதமடைந்தோருக்கு, கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட் வழங்கும் வசதி, வரும் 7ம் தேதி  வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பாஸ்போர்ட் தொடர்பான விசாரணைகள் மற்றும் ஆவணங்களை பெற, பாஸ்போர்ட் அலுவலகங்களில், சமூக தணிக்கை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. ஹஜ் பயணத்துக்கு பாஸ்போர்ட் கோருபவர்கள் வரும்  8 ம் தேதி வரை விண்ணப்பம் அளிக்கலாம்" என்று கூறினார்.  

நீண்டநாள் சிறைவாசிகளை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: எஸ்.எம்.பாக்கர் வலியுறுத்தல் ..


நாகூர், பிப்ரவரி 03/2016: நாகை மாவட்டம் நாகூரில் (INTJ) இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நீண்டநாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி பொது கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் சிறப்புரையாற்ற வருகை தந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் நாகூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நாங்கள் மூன்று முறை சந்தித்தபோதும் நீண்டநாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இருக்கிறோம். நாங்கள்  கோரிக்கைகளில் வக்பு நிலம் மட்டும் 1200 கோடி ரூபாய்க்கு மீட்கப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் நமக்கு தெரிவித்தார்கள். அதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மற்ற கோரிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

அதிலும் சிறைவாசிகள் விசயத்தில் காலதாமதம் செய்யாமல் அரசு கருணை அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார்;நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கொரடா சாதிக் மற்றும் தமிம் அன்சாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறையின் செயலை மிக வண்மையாக கண்டிக்கிறேன். தொடர்ந்து மாவட்ட காவல்துறைக்கு தவறான தகவலை அளிக்கும் உளவுதுறை அதிகாரிகள் கார்த்திகேயன், விஸ்வா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என வலியுறுத்தினார்.

இப்பேட்டியின் போது மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி,நாகை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே.நிஜாமுதீன், நாகை மாவட்ட தலைவர் கப்பப்பா, மாவட்ட நிர்வாகிகள் ஜலால்,நாஜிம்,ஆசிக் மற்றும் நாகூர் நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நன்றி 

யாசர் அரபாத் 

மசூதி செல்கிறார் ஒபாமா: அதிபரான பின் இதுவே முதன்முறை...


அமெரிக்க, பிப்ரவரி 03/2016: அமெரிக்க அதிபரான பின்னர் முதன் முறையாக முஸ்லிம் வழிபாட்டுத்தளமான மசூதிக்கு செல்கிறார் ஒபாமா. அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அமெரிக்க முஸ்லிம்கள் தாங்கள் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்து வருவதாக கூறும் வேளையில் ஒபாமாவின் இந்த மசூதி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பால்டிமோர் இஸ்லாமிக் சொசைட்டிக்கு சென்றுவிட்டு அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்கும் அவர் செல்கிறார். கடந்த வாரம் இஸ்ரேல் துணைத் தூதரகத்தில் ஒபாமா உரையாற்றினார். இஸ்ரேல் துணைத் தூதரகத்தில் பேசிய அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஒபாமா தனதாக்கிக் கொண்டார்.

தற்போது அவரது மசூதி பயணம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வட்டாரம் கூறும்போது, "அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிராக சகிப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், அரசியல் களத்தில் முஸ்லிம்கள் எதிர்ப்பார்க்கும் மாற்றத்தை நோக்கிச் செல்கிறார் ஒபாமா" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இஸ்லாமிய தொடர்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ரஹிம் ஹூப்பர் கூறும்போது, "அதிபர் ஒபாமாவின் இத்தகைய நடவடிக்கைகள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்" என்றார்.

முத்துப்பேட்டையில் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஓட்டலை காலி செய்யக் கோரிஜமாத் பிரமுகர்கள் ஓட்டலுக்குள் உள்ளிருப்பு போராட்டம்...



முத்துப்பேட்டை, பிப்ரவரி 03/2016: முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே புதுப்பள்ளி வாசல் ஒன்று உள்ளது. இதன் அருகே இந்த பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 27 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த திரியெம் அஜீஸ் என்பவர் திரியெம் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வந்தார். இந்த நிலையில் 15 வருடங்களுக்கு முன்பு தனது ஓட்டலை திரியெம் அஜீஸ் அவரின் உறவினரான பாக்கம் கோட்டூரைச் சேர்ந்த ஹாஜா மைதீன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு ஹாஜா மைதீன் நடத்தி வந்தார். இந்த நிலையில் புதுப்பள்ளி வாசல் நிர்வாகம் ஓட்டல் இருக்கும் இடம் மற்றும் அதன் அருகில் உள்ள காலி இடத்தில் பெண்கள் மதரசா கட்ட முடிவு செய்தனர். அதன்படி ஓட்டல் உரிமையாளர் ஹாஜா மைதீனிடம் தனது ஓட்டலை காலி செய்யும் படி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பள்ளிவாசல் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். 

அதற்கு ஓட்டல் உரிமையாளர் 3 மாதம் கால அவகாசம் கேட்டதால் கொடுக்கப்பட்டது. அதனால் சென்ற 31-ம் தேதி ஓட்டலை காலி செய்து கொள்வதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிலையில் ஹாஜா மைதீன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓட்டலை காலி செய்ய மறுத்து வக்கீல் நோட்டீஸ் ஒன்றை பள்ளி வாசல் நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளார். இதனால் பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் மத்தியில் அதிர்ப்தி ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 31-ம் தேதி ஓட்டலை காலி செய்யாமல் நேற்றும் ஹாஜா மைதீன் வழக்கம் போல் வியாபாரத்தை தொடர்ந்தார். 

இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் அவர்களுக்கு ஆதரவாக த.மு.மு.க நகரத் தலைவர் சம்சுதீன், மனித நேய மக்கள் கட்சி ஒன்றிய தலைவர் நெய்னா முகம்மது, எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், தி.மு.க மாவட்ட பிரதிநிதி இபுராஹிம், வார்டு செயலாளர் பியூட்டி நவாஸ்கான், ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சர்ச்சைக்குரிய அந்த ஓட்டலுக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

மேலும் உடனடியாக ஓட்டலை காலி செய்யவிட்டால் நாங்களே பிரித்து அகற்றுவோம் என்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கூச்சலிட்டனர். இதனால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடமும் ஓட்டல் உரிமையாளர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் ஓட்டல் உரிமையாளர் ஹாஜா மைதீன் ஓட்டலை உடனடியாக காலி செய்வதாக உறுதி அளித்தார். அதன் பிறகே போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் ஓட்டலிலிருந்து வெளியேறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து குட்டிச்சுவராக ஆக்கிய பெருமை அ.தி.மு.க அரசை சாரும் என்பது பழ.கருப்பைய்யா மூலம் நிருபணமாகிவிட்டது. முத்துப்பேட்டை தி.மு.க கூட்டத்தில் மனுஷ்யபுத்திரன் பேச்சு.



முத்துப்பேட்டை, பிப்ரவரி 03/2016: முத்துப்பேட்டையில் நகர தி.மு.க சார்பில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசின் அவலங்களை விளக்கிய பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு புதிய பேருந்து நிலையம் அருகில் முன்னால் பேரூராட்சி துணைத் தலைவர் ஹனிபா நினைவரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் ந.உ.சிவசாமி தலைமை வகித்தார். முன்னதாக மாவட்ட துணைச் செயலாளரும் நகர செயலாளருமான எம்.எஸ்.கார்த்திக் வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கவிஞர் மனுஷ்யபுத்தரன் கலந்துக் கொண்டு பேசுகையில்: தற்பொழுது நடக்கின்ற ஆட்சி ஊழல் நிறைந்த, மோசமான.. அவலமான ஆட்சி என்பது மக்கள் அனைவரும் உணர்ந்துவிட்டனர். 

மேலும் அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பைய்யா மூலம் தற்பொழுது நடப்பது கமிஷன் ஆட்சி என்பதும் மக்களின் வாழ்வாதரத்தை கெடுத்து குட்டிச்சுவராக ஆக்கிய ஒரு ஆட்சி என்பதும் நிருபணமாகிவிட்டது. திட்டங்கள் என்ற பெயரில் தற்பொழுது விளம்பர வெறிதான் நடந்து வருகிறது. ஆட்சி மீது ஊடகங்கள் குறைகளை சுற்றிக்காட்டி எழுதினால் அதற்கு விளக்கம் அளிக்காமல் அவர்கள் மீது அவதூறு வழக்கு போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தமிழகத்தில் விவசாயிகளுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. முதலாளிக்களுக்குதான் இந்த அரசு சலுகைகளை காட்டி வருகிறது. தமிழகத்தில் எந்தந்த துறை அமைச்சர் என்று யாருக்கும் தெரியாது. ஓட்டு கேட்க மட்டும் முகத்தை காட்டுபவர்தான் ஜெயலிலதா, மக்களுக்கு பாதிப்பு என்றால் ஒழிந்து விடுவார். அதே நேரத்தில் மக்களை பார்த்து கண் கலங்கும் கலைஞர் தலைவரா? மக்களை பார்க்க நினைக்காமல் இருக்கும் ஜெயலலிதா தலைவரா? மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.
 
கூட்டத்;தில் தலைமை கழக பேச்சாளர் தஞ்சை வே.மன்னர் மன்னன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட ஆதி திராவிட நல வாரிய செயலாளர் பிரபாகரன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் தேவதாஸ், முன்னால் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றிய அவைத் தலைவர் முத்துராமலிங்கம், நகர அவைத் தலைவர் ராமஜெயம், மாவட்ட பிரதிநிகள் அன்பழகன், தமீம், இபுராஹிம், கண்ணன், கோவிந்தராஜன்;, ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர பொருளாளர் பாலசுப்பிரமணியன், நகர நிர்வாகிகள் செல்வம், ராஜாராம், ரபிஅகமது, அன்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, ஜாம்பை கல்யாணம், பேரூராட்சி கவுன்சிலர்கள் சிவ.அய்யப்பன், ஜெகபருல்லா, ரெத்தினகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள்; ஆடரலசன், ரவிகுமார் மற்றும் பலரும் கலந்துக் கொண்டனர்.


இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டின் மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.








துபாய், பிப்ரவரி 03/2016: இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டி சார்பாக தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் செயல்வீரர்கள் ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் துபை தேராவில் உள்ள மலபார் ரெஸ்டாரண்டில் இனிதே நடைபெற்றது.
இக்கூட்டத்தை இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டின் துபை மண்டல தலைவர் யூசுஃப் தலைமையேற்று துவங்கி வைத்தார். இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டின் பொது செயளாலர் பத்ரு ஜமான் அவர்கள் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டியின் தமிழ் மாநில தலைவர் திருச்சி முபாரக் மற்றும் தமிழ் மாநில துணை தலைவர் பிரேம் நஸீர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
 இதனையடுத்து தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை நடத்த இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் கோட்டைக்கள் ஹுசைன் அவர்கள் தேர்தல் அதிகாரியாக வருகை புரிந்திருந்தார். அழகிய முறையில் கட்சியின் கட்டுப்பாட்டுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவில் கீழ்கண்ட நிர்வாக குழு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்தியல் கல்ச்சுரல் சொசைட்டி தஞ்சாவூர் மாவட்ட நிர்வாக குழு விபரம்.

தலைவர் – முகமது ரஹீஸ்  ( மதுக்கூர் )
துனை தலைவர் – செய்யாத்  (ஆதிரம்பட்டினம்)
பொதுச்செயலாளர்  அஸ்கர் அலி
செயலாளர்கள் – ஜாகிர் ( மதுக்கூர் )
செயலாளர்கள் - நூருல் ஹசன் (ஆதிரம்பட்டினம்)

 இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டி த திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு விபரம்.

 தலைவர் – இத்ரீஸ் (முத்துப்பேட்டை)
துனை தலைவர் – ஷைக் தாவூத்  ( முத்துப்பேட்டை)
 பொதுச்செயலாளர் – முஹிதீன்  ( பூத மங்களம்)
செயலாளர்கள் – யூசுப்  ( அத்திக்கடை )
செயலாளர்கள் - பரக்கத் அலி ( முத்துப்பேட்டை)

 இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டி திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு விபரம்.
 கட்சியின் செயல்திட்டம் மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து தமிழ் மாநில தலைவர் திருச்சி முபாரக் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து கேள்வி பதில் மற்றும் சமகால அரசியல் சூழ்நிலைகளை பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.
இறுதியாக ஜனாஃப் இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டின் துபை மண்டல செயளாலர் அஷதுல் ஹக் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியை இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டின் துபை மண்டல செயளாலர் முகமது ரஹீஸ் அவர்கள் நெறிப்படுத்தி அழகுற தொகுத்து வழங்கினார்.

 இதில் செய்ல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

நன்றி:

ரெங்கிஷ் கான் 

முத்துப்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் அதிகாரி தகவல்


முத்துப்பேட்டை, செப்டம்பர் 09: முத்துப்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்ய இருப்பதாக திருத்துறைப்பூண்டி உதவி செயற்பொறியாளர் அழகேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறுகையில்: திருத்துறைப்பூண்டி உபகோட்டம் முத்துப்பேட்டை 33 ஃ 11 கே.வி. துணை மின்நிலையத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வரும் 10.09.2015 வியாழன் கிழமை (நாளை) நடைப்பெற உள்ளது அது சமயம் முத்துப்பேட்டை நகர் பகுதி, ஜாம்புவானோடை, கோவிலூர், கீழநம்மங்குறிச்சி, உப்பூர், ஆலங்காடு, செம்படவன்காடு, தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் காலை 9-மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் தடைப்படும் என்று இவ்வாறு தனது செய்தி குறிப்பில் அழகேசன் தெரிவித்து உள்ளார்.

Reported By 

முஹமது இலியாஸ்.

ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் !









சென்னை, ஆகஸ்ட் 09: செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் வாடும் முஸ்லீம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளையும் கருணை அடிப்படையில் பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய தமிழக அரசை வலியுறுத்தி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று 05.09.15 சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானப் பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர்.

முத்துப்பேட்டை பேட்டை இமாம் பத்ரு ஜமான் அவர்களின் மகன் பல்கலைகழக அளவில் முதல் இடம் பிடித்து சாதனை !










அதிரை, ஆகஸ்ட் 28: அதிரையை சேர்ந்தவர் பத்ரூஜமான் இவர் தற்போது முத்துப்பேட்டையில் பேட்டை பள்ளி வாசலில் இமாமாக இருந்து வருகிறார். இவரது மகன் முஹம்மது ஹுசைனுதீன். சென்ற 2013 - 15 ஆம் கல்வியாண்டில் நமதூர் காதிர் முகைதீன் கல்லூரியில் வேதியியல் பாடப் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வந்தார். தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகம் சார்பில் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் முஹம்மது ஹுசைனுதீன் பல்கலைகழக அளவில் முதல் இடம் படித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். நமது கல்லூரிக்கும் - பிறந்த ஊருக்கும் பெருமை தேடித்தந்த மாணவனை கல்லூரி நிர்வாகம், கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக பணியாளர்கள், சக மாணவர்கள் - பெற்றோர் - உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த மாணவன், கல்லூரியில் படிக்கும் காலத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும், பாராட்டுதலையும் தொடர்ச்சியாக பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஐந்துஅம்ச கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம்...






தஞ்சை, ஆகஸ்ட் 24: தஞ்சை மாவட்டம் இராஜகிரியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஐந்துஅம்ச கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் மாவட்டத்தலைவர் குடந்தை ஜாபர் தலைமையில். நடைபெற்றது.மாநிலச்செயலாளர் ரஸ்தாசெல்வம் மாவட்டபொருளாளர் ஹனாஇஸ்மாயில் மாவட்டசெயலாளர்முகம்மதுநபில் மா.தகவல் தொடர்பாள் ஹாஜாமைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்கமாக மாநிலப்பேச்சாளர் ஒளிமுகம்மது பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற தலைப்பிலும் மாநிலசெயலாளர் நா.கோவில் ஜாஃபர் வஃக்பு சொத்துக்களை மீட்போம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
மாநிலச்செயலாளர் அப்துல்காதர்மன்ப ஈ அப்பாவிசிறைவாசிகளின் விடுதலை என்ற தலைப்பிலும் மாநிலதுணைத் தலைவர் முகம்மதுமுனீர் முஸ்லிம்களுக்குதனி இட ஒதுக்கீட்டின் அவசியம் என்ற தலைப்பிலும் மாநிலத் தலைவர் S.M. பாக்கர் ஊடகங்களின்சதிவலைகள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். முடிவாக ஜாவித்முகம்மது நன்றியுரை கூறினார்
கூட்டம் ஆரம்பம் முதல் மழை தொடர்ந்து பெய்துகொண்டு இருந்தபோதும் ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் திரண்டு வருகை தந்துஇருந்த்து குறிப்பிடத்தகுந்த்து.
அன்று காலை இந்தியதவ்ஹீத்ஜமாஅத் சார்பில் நடைபெற இருந்த மைதீன் மருத்துவமனை மீண்டும் செயல்பட வலியுறுத்தி கண்டண ஆர்ப்பாட்டம் இறுதிநேரத்தில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் நீதிமன்ற உத்தரவுடன் மீண்டும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது்
கூட்டத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீது தாக்குதல் நடைபெற இருந்த சம்பவத்திற்கு கடும்கண்டணம் தீர்மானமாக நிறைவேற்றியதுடன் அவருக்கு தமிழகரசு உரியபாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது்

Reported By 

SMB  

முத்துப்பேட்டையை சேர்ந்த புதிய இளம்வயது மருத்துவர் சதாம் ஹுசைன்





முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 24: முத்துப்பேட்டையில் நேற்று பங்களாவாசல் அருகில் புதிய மருத்துவமனை ஒன்றை துவக்கியுள்ளார்கள். தன் கடின உழைப்பால் மிக நல்ல முறையில் படித்து அரசு மருத்துவ கல்லூரியில் பட்டம் வாங்கி அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மருத்துவராக தந்தையின் கனவை நனவாக்கியுள்ளார் மருத்துவர் க.சதாம் ஹுசைன். முத்துப்பேட்டை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தந்தையின் கனவை நனவாக்க தந்தையின் முன்னிலையிலும், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையிலும் மருத்துவமனையை துவக்கியுள்ளார். இவரின் இந்த முயற்சி வெற்றி பெறவும் இவர்மூலம் ஏழை எளிய மக்கள் பயனடையவும் வல்ல அல்லாஹ் உதவிசெய்வானாக...

BSNL நிறுவனத்தின் நிலைகளாவன:




சென்னை, ஆகஸ்ட் 20: பி.எஸ்.என்.எல் ஒரு 100 % அரசு நிறுவனம். கொள்கை அளவு முடிவுகளை பி.எஸ்.என்.எல் ஐ சார்ந்த எந்த ஒரு உயர் அதிகாரிகளும் எடுக்க முடியாதபடி கைகள் கட்டப்பட்டிருப்பதை தயவு செய்து அறிக.
பின் முடிவுகளை எடுப்பவர்கள் யார்??? 
1) பி.எஸ்.என்.எல் ஐ சாராத DOT ஐ சார்ந்த வாடகைக்கு இருக்கும் ITS முதலாளிகள் மட்டுமே.. முடிவெடுக்கிறார்கள்… [நமது சொந்த வீட்டில் யாரோ மூன்றாம் மனிதர் வாடைக்கு இருப்பதை போல].
2) 2008-2012 காலகட்டத்தில் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் பி.எஸ்.என்.எல் இன் விரிவாக்கத்திற்கு முடிவு செய்த டென்டரை…சில அல்ப காரணங்களுக்காகவும்  அரசியல் பழிவாங்கல் செயலாகவும் பின் அமைச்சராக வந்த ராசா தடை செய்தது  பி.எஸ்.என்.எல் க்கு போடப்பட்ட முதல் முட்டுக்கட்டை.
3) பி.எஸ்.என்.எல் மற்ற எந்த தனியார் கம்பெனிகள் போல் ஆயுட்கால வேலிடிட்டி [TRAI சட்டதிட்டதிற்கு புறம்ப்பாக] தருவதில்லை. நீங்கள் உபயோகிக்கவில்லை என்றால் 180 நாட்களுக்குள் எண்கள் கணக்கிலிருந்து நீக்கப்பட்டுவிடும். ஆகையால் தான் பி.எஸ்.என்.எல் ன் மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை மற்ற தனியார் நிறுவனங்களை போல் விண்னை தொடுவதில்லை. 
4) வாடிக்கையாளர்களுக்கு சாதகமான திட்டங்களை அதிகாரிகள் வரையறுதாலும், மேல்மட்ட அளவில் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்று முடிவை எடுக்கும் DOT ஐ எந்த பத்திரிக்கையோ..ஊடகமோ கண்டுகொள்வதில்லை.
5) பி.எஸ்.என்.எல் ன் ஊழியர்களின் எண்ணிக்கையும் சராசரி ஊழியர்களின் வயதும் பி.எஸ்.என்.எல் தற்போது சந்திக்கும் மிகப்பெரிய சவால். இதற்கு அரசோ…நிறுவனத்தின் மேல்மட்ட அதிகாரிகளோ எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
6) தற்போதைய அரசு.. பி.எஸ்.என்.எல் ன் துறைகளை பிரித்து தனியார் மயமாக்குவதிற்கு மிகவும் முனைப்பக உள்ளது.
பி.எஸ்.என்.எல் தனியார் ஒருவரின் சொத்து அல்ல… லாப வருமானமும் நஷ்டமும்.. மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று…பி.எஸ்.என்.எல் ன் லாபம்… அதன் ஊழியர்களுக்கு அல்ல… அரசிற்கே [DIVIDENT TO PRESIDENT OF INDIA] கொடுக்கப்படுகிறது..
சட்டியில் இருந்தால் தானே… அகப்பையில் வரும்…..!
ஒட்டப்பந்தயத்தில் ஓடும் ஒருவனின் முதுகில் 100 கிலோ ஏற்றி வைத்து ஓட சொன்னால் அவனால் ஓடி ஜெயிக்க முடியுமா…?????
1GB ரூபாய் 89 க்கு கொடுத்த ஏர்டெல் இன்றைய விலை ரூ 256. தனியார் நிறுவனங்களின் அனைத்து திட்டங்களும் இனிப்பு தடவிய கசப்பு தான். 

கீழ்க்கண்ட இந்திய அரசு நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவைபடுகிறது.


இந்தியா, ஆகஸ்ட் 19: கீழ்க்கண்ட அரசு நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவைபடுகிறது. எனவே முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் வாசகர்கள் உடனே இந்த பதிவை கண்டு தங்களுடைய பதிவை பதியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

நிறுவனம்: Controller General of Patents Designs & Trademarks (CGPDTM)
காலியிடங்கள்: 459
பணிகள்: Examiner of Patent & Design
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.08.2015
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://goo.gl/tO3NGF

நிறுவனம்: Tamil Nadu Public Service Commission (TNPSC)
காலியிடங்கள்: 89
பணிகள்: Maternal and Child Health Officer - 89
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2015
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://goo.gl/TPVXIt

நிறுவனம்: Neyveli Lignite Corporation (NLC)
காலியிடங்கள்: 56
பணிகள்: Manager, Hindi translator, etc.,
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.08.2015
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://goo.gl/IpyszT
நிறுவனம்: Department of Atomic Energy, General Services Organisation, Kalpakkam
காலியிடங்கள்: 05
பணிகள்: Scientific Officer, Scientific Assistant, Pharmacist, Technician
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.08.2015
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://www.igcar.ernet.in/recruitment/Advt2_GSO2015.pdf

நிறுவனம்: Staff Selection Commission (SSC), Chennai
காலியிடங்கள்: 7
பணிகள்: Technical Superintendent (Processing), Technical Superintendent (Weaving), Textile Designer, Technical Assistant(Wildlife preservation),
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.08.2015
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://www.sscsr.gov.in/SSC-SR-ADVT-NO-2OF2015.pdf

நிறுவனம்: National Mineral Development Corporation (NMDC)
காலியிடங்கள்: 13
பணிகள்: Jr. Assistant – 1, Micellaneous Attendant (trainee) - 12
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.08.2015
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: https://www.nmdc.co.in/…/Care…/PWD%20032015%20for%20web1.pdf

நிறுவனம்: Aiports Authority of India
காலியிடங்கள்: 52
பணிகள்: Junior Assistant (Fire Services)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.08.2015
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://www.aai.aero/employment_ne…/Fire_Recruitment_2015.pdf
நிறுவனம்: Cabinet Secretariat, Government of India
காலியிடங்கள்: 20
பணிகள்: Interpreter
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.08.2015
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://www.davp.nic.in/WriteReadDa…/…/eng_58101_15_1516b.pdf

Reported By

அப்துல் ரஹ்மான். 

INTJ தஞ்சையில் நடத்த இருக்கும் மாபெரும் 5 அம்ச கோரிக்கை விளக்க போத்துக்கூட்டம்...


தஞ்சாவூர், ஆகஸ்ட் 19: தஞ்சையில் மாபெரும் 5 அம்ச கோரிக்கை விளக்க போத்துக்கூட்டத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடத்த உள்ளது. இதில் 5 அம்ச கோரிக்கைகளான: 1) தனி இடஒத்துக்கீடு, 2) வக்பு நிலா மீட்பு, 3) ஷரீயத் நீதி மன்றங்களுக்கு சட்ட அதிகாரம், 4) சிறைவாசிகளின் விடுதலை, 5) பூரண மது விளக்கு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலிருத்து நடைபெற உள்ளது.  இடம்: ஜமாலியா தெரு ராஜகிரி, நேரம்: மாலை 6 மணிக்கு. 

Reported By 

SMB 

பிறை விசயத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த ஐஎன்டிஜே ஹிலால் கமிட்டி முயற்சி...!!!


சென்னை, ஆகஸ்ட் 19: பிறையை கண்ணால் பார்த்து அமல் செய்வதே நபிவழியாகும்.பிறை விசயத்தில் தற்பொழுது நிகழும் சிறு குழப்பத்தை சரி செய்யும் பொருட்டு ஐஎன்டிஜே ஹிலால் கமிட்டி  "பிறை ஓர் ஆய்வு"என்ற தலைப்பில் மார்க்க மற்றும் விஞ்ஞான அடிப்படையில் டிவிடி தயார் செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
நேற்று(17.08.15)ஐஎன்டிஜேவின் மாநில நிர்வாகிகள் மற்றும் ஹிலால் கமிட்டியை சேர்ந்த பிர்தவுஸ்,முகம்மது முகைதீன்,முகம்மது ஷிப்லி ஆகியோர் அரசு தலைமை காஜி மற்றும் ஜமாத்துல் உலமா சபையை சேர்ந்த தர்வேஷ் ரசாதி ஆகியோரை சந்தித்து,பிறை ஓர் ஆய்வு டிவிடியை வழங்கினர்.
ஐஎன்டிஜே ஹிலால் கமிட்டி பிறை விசயத்தில் கருத்தொற்றுமை ஏற்படுத்த, தொடர்ந்து பல்வேறு அமைப்பு பிரதிநிதிகளை சந்திக்க உள்ளனர்.

Reported By 

SMB 

துபாயில், 330 பேர் இஸ்லாத்தை ஏற்றனர், துபாய் இஸ்லாமிய விவகாரத்துறை வெளியிடு...


துபாய், ஆகஸ்ட் 19: இஸ்லாமிய விவகாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது. இஸ்லாமிய விவகாரத்துறை சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக முஹம்மது பின் ராசீத் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பில் பல் சமய உரையாடல் கருத்தரங்கம் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் பலர் பங்கேற்றனர். இஸ்லாம் குறித்த தகவல்களை தெரிந்து கொண்டதுடன் அவர்கள் தங்களுக்கு இஸ்லாம் குறித்து ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்த்துக்கொண்டனர். மேலும் இதில் துபாயில் 330 ரமலான் மாதத்தில் இஸ்லாத்தை ஏற்றனர். இவர்களில் 92 பேர் ஆண்கள், 238 பேர் பெண்கள் ஆவார்கள். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Reported By 

முஹம்மது இல்யாஸ்.

முத்துப்பேட்டை நகரம் முழுவதும் காங்கிரஸ் கொடி ஏற்ற கூட்டத்தில் முடிவு.



முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 18: முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் கூட்டம் தலைவர் ஜெகபர் அலி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் நாச்சிக்குளம் தாஹிர் முன்னிலை வகித்தார். முன்னதாக நகர செயலாளர் எஸ்.எம்.டி.நாசர் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முத்துப்பேட்டை நகரம் முழுவதும் புதியதாக கொடி மரம் அமைத்து கொடி ஏற்றப்படும். மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன், கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அவரின் சிறப்பான பணிக்கு இந்த கூட்டம், பாராட்டை தெரிவிக்கிறது. உட்பட முக்கிய தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகர துணைத் தலைவர்கள் வேல் துரை, குலாம்ரசூல், குமார் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவானந்த சாமி மற்றும் நிஜாம் மைதீன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.

எதிரியையும் மன்னித்து வாழவைத்து அழகு பாருக்கும் மார்க்கம் உலகிலே இஸ்லாம் ஒன்றுதான்.









துபாய், ஆகஸ்ட் 18: குஜராத்தில் ஆயிரக்கணக்கில் இஸ்லாமியர்களை கொன்று குவித்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.அவர்களின் சொத்துக்களை சூரையாடியதர்க்கு காரணமாக இருந்தவர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சொந்த மாநிலத்தில் (குஜராத்) இன்றுவரை அகதிகளாகவே வாழ்கின்ற சூழல்.. இத்தனைக்கும் மத்தியில் அமெரிக்காவே பலமுறை விசா கொடுக்க மறுத்த ஒரு மாபெரும் குற்றவாளி. இருந்தாலும் நாட்டின் பிரதமர் இந்த மோடி இஸ்லாமியர்களுக்கு செய்த அத்தனை துரோகங்களும் அறிந்து இருந்தும் தன் நாட்டுக்கு விருந்தாளியாக வந்தார் என்பாதால் அவரை (விருந்தாளியை) கண்ணியப்படுத்துகிரார்கள் இஸ்லாமியர்கள் என்றால், இதுதான் இஸ்லாம் கற்று கொடுக்கும் அழகிய மாண்பு.




அது மட்டும் அல்ல இந்த நாட்டில் எங்க மதத்தவருக்கு கோவில் கட்டி தாருங்கள் என்று கேட்டதற்கு அதையும் நாங்கள் கட்டி தருகிறோம் என்று கூறினார்களே இதுவா தீவிரவாதி மதம் பிற மதங்களை திட்டி மத்திக்க தெரியாதவன் உண்மையான முஸ்லிம் அல்ல அவ்வாறு எங்களது முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் எங்களுக்கு கற்று தரவில்லை, இதன் மூலமாவது இஸ்லாமியர்களை அளிக்க முயலும் என்னத்தை நிறுத்துக்கொள்வது நல்லது. இல்லை எனில் அல்லாஹ் உங்களை அழித்துவிடுவான் அதற்க்கு நேரும் காலம் தேவையில்லை .



Reported By 



முஹம்மது இல்யாஸ். MBA, MA. Journalism & Mass Communication 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)