

முத்துப்பேட்டை,மே 04 : முத்துப்பேட்டையில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக அழுந்து கொண்டு இருந்தது. அதனைக்கண்ட ஒரு சிலர் குழந்தையிடம் விசாரித்ததில் தந்து பெயர் மோகன வள்ளி என்றும், என்னை பெற்றோர்கள் விட்டு விட்டு பேருந்தில் சென்றதாகவும் அப்போது அது கூறியது. இதனைக் கண்ட பொது மக்கள் கூட்டமாக கூடியது. பிறகு அங்குள்ள சில பொது மக்கள் அருகில் உள்ள முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் குழந்தையை ஒப்படைத்தனர். அப்போது குழந்தையிடம் போலீசார் விசாரித்தபோது தனது தந்தையின் தொலைபேசி நம்பரை கொடுத்துள்ளது. இதனை பெற்ற போலீசார் செல் நம்பருக்கு தொடர்பு கொண்டு பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு வரவலைத்தனர். பின்னர் விசாரித்த பொது பெண்ணின் பெயர் மோகன வள்ளி, வயது ௫, தந்தை பெயர் செந்தில் விஜயபாலன், அம்மா ரதி, திருப்பூர் பாரதி நகரில் வசித்து வருவதாகவும், தெரிய வந்துள்ளது. மேலும் முத்துப்பேட்டை அருகில் உள்ள விளாத்து வெளி கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேசத்திற்காக வருகை தந்துள்ளதாகவும், முத்துப்பேட்டையில் உள்ள ஒரு லாஜில் தங்கி உள்ளதாவும், வேலை விசயமாக நானும் எனது தாயார் லோகேஷ் நாயகியும் பேருந்து ஈறி ஊருக்கு சென்றோம் இதனை பார்த்த மோகன வள்ளி பின்னாலை வந்திருப்பதாக தெரிகிறது. சில நிமிடத்திலேயே தந்தையை காணாமல் தவித்ததும் தெரிகிறது. பின்னர் முத்துப்பேட்டை போலீசார் நீண்ட விசாரணைக்கு பிறகு தந்தை செந்தில் விஜய பாலன், பாட்டி லோக நாயகி வசம் குழந்தையை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, யூசுப் அலி (ஆலிம்)

டெல்லி,மே 03 :குஜராத் மாநிலத்தை ஆளும் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியின் போலீஸ் காங்கிரஸ் பெண் எம்.பியை சித்திரவதைச் செய்துள்ளது. இதுத்தொடர்பான புகாரை மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி பிரபாபென் டேவியாட் கண்ணீர் விட்டு அழுது கூறினார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு இந்திய வரலாற்றிலேயே மிகவும் கோரமான முஸ்லிம் இனப்படுகொலைகள் நிகழ்ந்தன.மோடியின் தலைமையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட கோரத்தாண்டவத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்திற்கு பிறகு மோடி தனது இமேஜை மேம்படுத்துவதற்காக பல்வேறு நாடகங்களை ஆடி வருகிறார். ஆனாலும், அவ்வப்போது அவரது உண்மை முகம் வெட்ட வெளிச்சமாகி வருகிறது.குஜராத் மாநிலம் உருவான 52-வது நாள் நேற்று பழங்குடிகள் அதிகம் வசிக்கும் டகோட் மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நரேந்திர மோடி தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து காங்கிரஸ் எம்.பி பிரபாபென் டேவியாட், 4 எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். ஆனால் இதைத் தடுத்த போலீசார் பிரபாபென், 4 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.இன்று இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எம்.பி. பிரபாபென் எழுப்பினார். அப்போது தம்மை போலீசார் தான் உள்பட கைது செய்யப்பட்ட அனைவரையும் துன்புறுத்தியதாகவும் தமது இரண்டு கைகளில் இருக்கும் காயத்தையும் கண்ணீரோடு அவர் கூறினார். அவருக்கு ஆதரவாக காங்கிரசின் கிரிஜா வியாஸ் எழுந்து குரல் கொடுத்தார்.
இதையடுத்து எழுந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் மாநில அரசுடன் பேசுவதாக உறுதியளித்தார். அதேசமயம், இந்த விவகாரத்தை நாடாளுமன்ற உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.



முத்துப்பேட்டை,மே 02 : முத்துப்பேட்டை யில் நேற்று SDPI யின் நகர கூட்டம் கட்சியின் மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முத்துப்பேட்டை நகரங்களில் சிலிண்டர் சரியாக விநியோகம் சரிவர செய்ய வில்லை என்றும், மேலும் உரியவரிடம் சிலிண்டர் விநியோகம் செய்யாமல் இருப்பதாலும் கேஸ் விநியோகம் இவற்றை நல்ல நடைமுறைக்கு கொண்டு வரும் விதமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு கட்சியின் தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன், நகர செயலாளர் மைதீன் , நகர தலைவர் ரஹ்மத்துல்லாஹ், நிசார் மற்றும் ஷேக் மைதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நமது நிருபர்
O.M. சுபைத் கான்

சவூதி அரேபியா, மே 02 : முத்துப்பேட்டை இஸ்லாமிய சமூக நல இயக்கம் (MISWA) வின் 2012 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு தமாம் க்ளோப் கேம்ப்பில் ஜனாப். M.முஹம்மது முஹைதீன் அவர்களின் தலைமையில், நடைபெற்றது. மேலும் இதற்க்கு ஜனாப். D.ஜைனுல் ஆப்தீன் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த கூட்டம் ஜனாப். N. ஹசன் குத்தூஸ் அவர்களின் கிராத்துடன் துவங்கியது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களின் விபரம் பின் வருமாறு:
கெளரவ தலைவர், ஜனாப். M.முஹம்மது முஹைதீன், தலைவர். HMA .மன்சூர், துணைத் தலைவர்.ஜனாப்.SA.ஷாகுல் ஹமீது, பொது செயலாளர். ஜனாப்.SA.ஜாகிர் ஹுசைன், செயலாளர்களான,ஜனாப்.M.அஹமது தம்பி, ஜனாப்.H.செக்கரியா, பொருளாளர் ஜனாப். SA.அப்துல் ரஹ்மான்,
ஆலோசனைக்குழு:
ஜனாப்.D .ஜைனுல் ஆப்தீன்
ஜனாப்.M . நைனா முஹம்மது
ஜனாப்.P . ஹாஜா மைதீன்
ஜனாப்.SA . தாவுத் கான்.
மற்றும் முத்துப்பேட்டை மிஸ்வா பிரதிநிதிகலாவன, ஜனாப்.NSH . ஜாகிர் உசேன் சூப்பர் டிராவல்ஸ், ஜனாப்.SA.சாதிக் பாட்சா, பாட்சா டைல்ஸ். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு கடிதம் வந்துள்ளது. இதில் முத்துப்பேட்டை வாழ் தமாம் அனைத்து சகோதரர்களின் ஏக மனதாக நிர்வாகிகள் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள்வர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜனாப். K.ராஜா முஹம்மது அவர்களின் நன்றி உரையுடன் இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
தொகுப்பு
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்



முத்துப்பேட்டை,மே 01 : முத்துப்பேட்டை தெற்குத் தெரு இளைஞர்கள் மற்றும் முத்துப்பேட்டை வெளிநாட்டுவாழ் நண்பர்கள் இணைந்து நடத்தி வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நமது அரபு சாகிப் பள்ளிவாசலில் இன்று 01.05.2012 முதல் துவங்கி அடுத்த மாதம் 01.06.2012 வரை நடைபெறும். இதில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு நல்ல முறையான பயிற்சிகளை பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி முகாம் முடிவில் 30 நாள் நடைபெற்ற பாடத்தை குறித்து தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வில் வெற்றி பெரும் முதல் 3 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.மேலும் இதில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். இதன் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். M. தப்ரே ஆலம் பாதுஷா தெற்குத் தெரு அவர்கள்.
source from: www.mttexpress.com,www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்
ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்), O.M.சுபைத் கான்

அமெரிக்க, மே 01 : ஈரான் சிறையில் அடைக்கப்பட்டு மரணத்தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கும் கிறிஸ்தவ பாதிரியாரை விடுதலைச் செய்யாவிட்டால் திருக்குர்ஆன் பிரதியை எரித்து, இறைத்தூதரின் படத்தை வரைவேன் என்று மிரட்டல் விடுத்த அமெரிக்காவைச் சார்ந்த கிறிஸ்தவ பாதிரி டெர்ரி ஜோன்ஸ் புனித திருக்குர்ஆனின் பிரதியை எரித்துள்ளான். ஃப்ளோரிடாவைச் சார்ந்த பாதிரியான டெர்ரிஜோன்ஸ் இந்த ஈனத்தனமான செயலலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் 271 டாலர் மட்டும் அபராதம் விதித்துள்ளது. மேலும் அங்கு வந்த தீயணைப்பு படையினர் ஜோன்ஸிற்கு அடிகொடுத்து கவனித்தனர். ஆனால், உலக முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்திய ஜோன்ஸ் கைது செய்யப்படவில்லை. சில தினங்களுக்கு முன்பு ஜோன்ஸ், புனித திருக்குர்ஆனின் பிரதியை எரிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தான். இதற்கு முன்பும் இதேபோன்றதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளான் ஜோன்ஸ். ஆனால், அமெரிக்க அரசு ஜோன்ஸ் மீது உரிய நடவடிக்கையை இதுவரை எடுக்கவில்லை.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்,


முத்துப்பேட்டை, மே 01 : முத்துப்பேட்டை அடுத்து சித்தமல்லி கடை தெருவில் ஒரு அரசு டாஸ்மாக் இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையால் குடிமகன்களின் தொந்தரவு அதிகரித்து வருவதால், இதனால் அங்கு தேவையற்ற பிரச்சனைகள் அடிக்கடி நிகழ்த்து வருவதாகவும், இந்த பகுதியில் முழுக்க முழுக்க பெண்கள் அதிக அளவில் நடமாடும் பகுதியாக இருப்பதால் இந்த டாஸ்மாக்கை மாற்ற வேண்டும் என்று பல முறை மனுவாகவும், போராட்ட மூலமும் பொது மக்கள் தெரிவித்து வந்த நிலையில் நேற்று திடீர் என்று ஒன்றிய குழு உறுப்பினர் பார்வதி அண்ணாத்துறை தலைமையில் கடைத்தெருவில் திடீர் என்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலைமறியலில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டதால் சித்த மல்லி கடைத்தெருவில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டன. இதனால் மன்னார்குடி முத்துப்பேட்டை போக்குவரத்து சுமார் மூன்று மணிநேரம் தடைப்பட்டது. தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கோபி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் தேவதாஸ், தி.மு.க.ஒன்றிய பிரதிநிதி பாலஞான வேல், போராட்ட குழுவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவள்ளி இளங்கோ, சத்தியப்பிரிய கலாவதி, மற்றும் ரேவதி, ராஜேஸ்வரி, ஜோதி,பெரியநாயகி, மணிமேகலை ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதை ஒருவார காலத்திற்குள் சமந்தப்பட்ட தாஸ்மாக் கடை மாற்றப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள், வருவாய்த்துறையினர் உறுதி அளித்ததின் அடிப்படையில் பெண்கள் சாலைமரியலை விளக்கிக் கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெருக வாழ்ந்தான் இன்ஸ்பெக்டர் குணசீலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை



முத்துப்பேட்டை, ஏப்ரல் 30 : ஹிஜ்ரி 1433 ஜமாத்துல் ஆஃபிர் பிறை 7, 29.04.2012 மதியம் 11.30 மணியளவில் முத்துப்பேட்டை ஜனாப் S.M.S. குலாம் ரசூல் அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் G. ராசிக் பரீது மணாளருக்கும், நாகப்பட்டினம் ஜனாப்.M.Y. முஹம்மது மர்சூக் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி M. ரிசிய்யா சுல்தானா மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 2 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து முத்துப்பேட்டை குட்டியார் சும்மாஹ் பள்ளிவாசல் பேஸ் இமாம். முஹைதீன் சாஹிப் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்)
source from: www.mttexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், EKA .முனவ்வர் கான், ASNS .அப்துல் பாரி, U .பத்ரு ஜமான். பேட்டை இமாம்.

திருவனந்தபுரம்,ஏப்ரல் 30 :பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கர்நாடகா மாநிலம் பரப்பனா அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி தனது கண்களின் பார்வை சக்தியை இழந்துள்ளார். வலதுகண்ணில் முற்றிலும் பார்வை பறிபோய் உள்ளது. இடது கண் பாதி அளவில் பார்க்கும் சக்தியை இழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு அவசரமாக தொடர்ந்து 3 அறுவை சிகிட்சைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை 3-வது அறுவை சிகிட்சை நடத்தப்பட்டுள்ளது.
பெங்களூர் ராஜாஜி நகர் கண் மருத்துவமனையின் டாக்டர்களான கெ.பூஜங் ஷெட்டி, நரேஷ்குமார் யாதவ் ஆகியோர் தலைமையில் லேஸர் அறுவை சிகிட்சை நடத்தப்பட்டது. அறுவை சிகிட்சையின் பலனை அறிய காத்திருக்கவேண்டும். சர்க்கரை நோய் முற்றிப்போய் கண்ணை பாதிக்கும் டயபடிக் ரெட்டினோபதி மூலம் கண்களில் இரத்தம் கட்டிப்போய் மஃதனிக்கு பார்க்கும் சக்தி இழக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிட்சைக்கு முன்பு மஃதனியை சிறையில் சந்தித்த அவரது உடன் பிறந்தவர்களான முஹம்மது தாஹா, மலீஹா பீவி ஆகியோரை மஃதனியால் அடையாளம் காண முடியவில்லை. அவரது உடல்நிலை மோசமான பிறகும் கர்நாடாகா பாசிச பா.ஜ.க அரசும், சிறை அதிகாரிகளும் சிகிட்சை அளிப்பதில் அலட்சியமாக இருந்ததால் அவருக்கு பார்வை சக்தி இழக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சர்க்கரை நோய் படிப்படியாக அதிகரித்து கண்ணின் பார்வையை பாதிக்க துவங்கிய பொழுது மஃதனிக்கு உரிய சிகிட்சை அளிக்காததால் முற்றிய பிறகு அதிகாரிகள் கவனித்ததாக மஃதனியின் வழக்கறிஞர் சிராஜ் கூறுகிறார்.
ஜனவரி 13-ஆம் தேதி அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்ய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் கர்நாடகா அரசு, அப்துல் நாஸர் மஃதனிக்கு எந்த நோய்க்கும், சிகிட்சைகள் அனைத்தும் உரிய நேரத்தில் தேவைக்கு ஏற்ப அளிக்கப்படும் என உறுதி அளித்திருந்தது. உடல் நிலை சீர்கெட்ட அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் மனுவை நிராகரிக்க இந்த பிரமாணப்பத்திரம் காரணமானது.
தொடர்ந்து கேரள முதல்வர், எதிர்கட்சி தலைவர், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மஃதனிக்கு சிகிட்சையை உறுதிச் செய்யக்கோரி கர்நாடகா முதல்வருக்கு கடிதம் எழுதினர். இதனைத் தொடர்ந்து அவர் பதில் கடிதத்தில் சிகிட்சை அளிப்பதாக உறுதி அளித்தார். ஆனால், உடல் ஆரோக்கியம் சீர்கெட்ட மஃதனிக்கு கண் பார்வை பறிபோனதை தொடர்ந்து சிறைவாழ்க்கை மிகவும் துயரமாக மாறியுள்ளது. வாசிப்பு, எழுத்து என சிறையில் தனது வாழ்க்கையை கழித்து வந்த அப்துல் நாஸர் மஃதனி பேசும் சக்தியையும் இழந்து வருகிறார். 2008 ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அநீதமாக கர்நாடகா மாநில பாசிச பா.ஜ.க அரசு கேரள கம்யூனிச அரசின் துணையுடன் 2010 ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி அப்துல் நாஸர் மஃதனியை கைது செய்து கர்நாடகா சிறையில் அடைத்தது.
source from: www.mttexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EAK .முனவ்வர் கான்,

சவூதிஅரேபியா, ஏப்ரல் 30 : உலகின் முதலவாது ரோபோ இயந்திரம் முஸ்லிம்களால் கண்பிடிக்கப்பட்டது என உம் அல்குரா பல்கலைக்கழகத்தின் தலைவர் பக்ரி அஸாஸால் தெரிவித்துள்ளார். புனித மக்கா நகரின் உம் அல்குரா பல்கலைக்கழகத்தில் புத்துருவாக்க மற்றும்விஞ்ஞான மன்றம், பல்கலைக்கழகத் தலைவர் பக்ரி அஸாஸால் புதன்கிழமையன்று திறந்துவைக்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள புத்துருவாக்க மற்றும் விஞ்ஞான மன்ற நிகழ்வுகளில் சவூதிஅரேபியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள், ஆய்வாளர்கள் மற்றும் புத்தருவாக்க சிறப்புத்தேர்ச்சியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஆரம்ப வைபவத்தில் உரையாற்றிய உம் அல்குரா பல்கலைக்கழகத்தின் தலைவர், விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றி உரை நிகழ்த்தினார்.
"ஹிஜ்ரி 6ஆம் நூற்றாண்டில் வாழந்த அபுல்இஸ் பின் இஸ்மாயில் பின் அல்ராஸ்அல்ஜஸாரி எனப்படும் முஸ்லிம் விஞ்ஞானியால் முதலாவது நடமாடும்ரோபோ கண்பிடிக்கப்பட்டதுடன் வீட்டு வேலைகள் செய்வதற்காக இது பயன்படுத்தப்பட்டது.
துருக்கியின் நாஸிர் அல்தீன் மஹ்மூத் எனும் கலீபாவின் வேண்டுகோளுக்கு இணங்க 'நடைமுறை இயந்திரக்கலை கோட்பாட்டுச் சுருக்கம்' என்ற புத்தகத்தை அல்ஜஸாரி எழுதினார். மத்தியகாலத்தின் சிறந்தவிஞ்ஞானியாகவும் தலைசிறந்த இயந்திரப்பொறியிலாளராகவும் அல்ஜஸாரி விளங்கினார்.
அல்ஜஸாரியால் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது ரோபோ இயந்திரமானது கி.பி.1174இல் பாவனைக்கு கொண்டுவரப்பட்டது.
தொழுகை நேரம் வரும்போது ரோபோ இயந்திரத்தின் தலைப்பகுதியில் உள்ள குருவி கீச்சிடும். பின்னர் ரோபோ இயந்திரம் கலீபாவை நோக்கி வருவதுடன் கலீபாவுக் வுழூ செய்வதற்குத் போதுமான நீரைவழங்கும். கலீபா வுழூ செய்துமுடிந்ததுடன்,ரோபோ இயந்திரத்தில் உள்ள குருவி மீண்டும் கீச்சிடும் பின்னர் ரோபோ இயந்திரம் முன்னர் இருந்த இடத்திற்கு செல்லும்.
அல்ஜஸாரியால் கண்டுபிடிக்கப்பட்ட ரோபோ இயந்திரத்தின் செயற்பாடு இவ்வாறாக காணப்பட்டது." மேலும் முஸ்லிம்களால் விஞ்ஞானத்துக்கு செய்யப்பட்ட பல்வேறு பங்களிப்புக்கள் பற்றி உம் அல்குரா பல்கலைக்கழகத்தின் தலைவர் தமது உரையின் போது தெரிவித்தார்.
source from: www.mttexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், யூசுப் அலி (ஆலிம்)

குஜராத்,ஏப்ரல் 29 : குஜராத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு கடலில் மீன் பிடித்த போது, விலை உயர்ந்த மீன்கள் சிக்கியதால், கோடீஸ்வரராகியுள்ளார். குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த மீனவர் ஹசன் வாகர். மத்திய தரமான மீன் பிடி படகு ஒன்றை வைத்து மீன் பிடித்து வந்த இவரின் வாழ்க்கை என்னவோ போராட்டமாகவே இருந்தது. அதனால், இவரின் குடும்பம் வறுமையில் வாடியது. ஆனால், இப்போது அதிர்ஷ்டப் பார்வைக்கு ஆளாகியுள்ளார். சமீபத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இவருக்கு மிக உயரிய விலை கொண்ட 380 கோல் ரக மீன்கள் சிக்கின. மீன்களிலேயே மிக உயரிய ரகமாக, இந்த மீன்கள்தான் கருதப்படுகின்றன. மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இந்த வகை மீன்களுக்கு நல்ல கிராக்கியுண்டு. இந்த கோல் மீனின், இதயப் பகுதி, "கடல் தங்கம்' என, அழைக்கப்படுகிறது. அதில், ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. பல வகையான மருந்துக்கள் தயாரிக்க இது பயன்படும் என்று கூறப்படுகிறது.
இந்த மீனின் துடுப்புபோன்ற பகுதியை, மருந்து தயாரிப்பு கம்பெனிகள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனவாம். ஒயினை சுத்தப்படுத்தவும் இது பயன்படுமாம். இந்த வகை மீன்கள் சந்தையில், கிலோ ஒன்றுக்கு 450 முதல் 600 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. ஒரு கோல் மீன் 15 முதல் 20 கிலோ எடை இருக்கும். ஹசன் வாகருக்கு 380 மீன்கள் சிக்கியதால், அதை தனது படகில் மட்டும் வைத்து கொண்டு வர முடியாது என்பதால், உறவினர்கள் இருவரின் படகுகளையும் வரவழைத்து கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
இந்த மீன்களை விற்றதில், அவருக்கு ரூபாய் 80 லட்சத்திற்கு மேல் கிடைத்துள்ளது. ஏழையாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர், கோடீஸ்வரராக கரை திரும்பியுள்ளார் என, ஹசன் வாகரை அனைவரும் பாராட்டுகின்றனர்.
source from: www.mttexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்)

சென்னை,ஏப்ரல் 27 : கீழ்ப்பாக்கத்தில் பழமை வாய்ந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இதன் கீழ் பகுதியில் 10 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. முதல் மாடியில் தங்கும் அறைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. முதல் மாடியிலுள ஒரு அறையில் தூத்துக்குடியை சேர்ந்த சத்யா, சுகந்தன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு அவர்கள் தங்கியிருந்த அறையில் நாட்டு வெடிகுண்டு திடீரென்று வெடித்துள்ளது. பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய வெடி குண்டால் சத்யா, சுகந்தன் ஆகியோரின் கைகள், விரல்கள் துண்டிக்கப்பட்டது. இந்த சத்தத்தை கேட்ட அருகிலிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த சத்யாவை சென்னை அரசு பொது மருத்துவமனையிலும், சுகந்தனை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கவலைக்கிடமான நிலையில் இருக்கும் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டுவெடிப்பு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சத்யா, சுகந்தன் இருவரும் தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடிகள் என்றும், பல்வேறு கொலை வழக்குகளில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இவர்கள் எதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தார்கள் என்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்.ANSN .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்,அபு மர்வா

முத்துப்பேட்டை,ஏப்ரல் 27 : முத்துப்பேட்டை வர்த்தகக் கழகத்தின் நிர்வாகிகளின் தேர்தல் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பரபரப்புடன் நடப்பது வழக்கம். இதன் அடிப்படையில் இந்த வருட தேர்தலுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலுக்கு அதிகாரியாக ஜனாப்.எம்.முஹம்மது அலியார் அவர்களை நியமனம் செய்தனர். அதன் அடிப்படையில் நேற்று காலை 10 மணி முதல் பகல் ஒரு மணிவரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் இரா. இராஜாராமன், எம்.எஸ்.ராமலிங்கம், எஸ்.நெய்னா முஹம்மது, மு.முஹைதீன் பிச்சை, கெஜ்.எம்.ஹாஜா, கே.வி. கண்ணன், கே.மாரிமுத்து ஆகியோர் ஆணையரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பகல் 2 மணி அளவில் தேர்தல் ஆணையர் தலைமையில் முக்கிய நிர்வாகி முன்னணியில் மனுக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்று ஆணையர் முஹம்மது அலி தெரிவித்தார். இதில் தலைவராக இரா.இராஜாராம், துணைத் தலைவராக முஹைதீன் பிச்சை, கெச்.எம்.ஹாஜா, பொதுச் செயலாளராக எம்.எஸ். ராமலிங்கம், துணைச் செயலாளராக கே.வி.கண்ணன், கே.மாரிமுத்து, பொருளாளராக எஸ். நெய்னா முஹம்மது ஆகியோர் தேர்வு செய்ப்பட்டனர். பின்னர் தேர்தல் ஆணையர் ஜனாப். முஹம்மது அலி சங்க ஆலோசகர்கள் இரா. திருஞானம், மெட்ரோ மாலிக் முன்னிலையில் சான்றிதழ் வழங்கினார். இந்த வர்த்தக கழகத் தேர்தல் முத்துபேட்டை நகர வியாபாரிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தெகுப்பு
ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்), AKL . அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டை,ஏப்ரல் 27 : P.K.T. ரோடு மர்ஹும் A.S.N. நெய்னா பிள்ளை மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் A.S.N. நவாப் சேக் முஹம்மது மரைக்காயர், A.S.N. முஹம்மது இபுராஹீம் ஆகியோரின் சகோதரரும், கொய்யா S.M.K.N. அப்துல் ரஜாக், S.M.K.N. முஹம்மது தாவூது ஆகியோரின் மருமகனும், K.M.S. காதர் பாட்சா, A.S.N.M. பசீர் அஹமது, ஏலங்குடி A. அப்துல் ரஜாக், ஆகியோரின் மச்சானும், N.R. புர்கானுதீன் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி.A.S.N.S. ரபி அஹமது கான் அவர்கள் இன்று காலை 5.15 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
source from: www.muthupettaiexpress.com
அறிவிப்பவர்
A.S.N. ஹஜ் முஹம்மது இபுராஹீம்.
நமது நிருபர்
KM.காதர் கனி (பாடகர்)

இலங்கை,ஏப்ரல் 26 : இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் சுஜுது செய்த தம்புள்ள பள்ளிவாசலுக்கு ஈடாக எமக்கு தங்கத்தினால் பள்ளிவாசல் நிர்மாணித்து தந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பள்ளிவாசல் எமக்கு புனிதஸ்தலம். அதை பெறுமதிகாளால் ஈடுசெய்ய முடியாதென முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும், எம்.பி.யுமான ஹசன் அலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் ஹசன் அலி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தம்புள்ளiயிலுள்ள பள்ளிவாசல் முஸ்லிம்களுக்கும் புனிதஸ்தலமே. பெரும்பான்மையினரால் பள்ளிவாசலை சிதைக்க முடியாது. மேலும் முஸ்லிம்களின் உணர்வுகளை அழிக்க முடியாது. பள்ளிவாசலை தங்கத்தினாலோ பொண் பொருட்களினாலோ செய்ய முடியாது. சமப்படுத்தவும் முடியாது. பெரும்பான்மையினருடன் சண்டையிட எங்களால் முடியாது. நாங்கள் பலவீனமானவர்கள். ஆனால் எமது உணர்வுகளை அவர்கள் மதிக்கவேண்டும். 60 வருட வரலாற்று கொண்ட தம்புள்ள பள்ளியில் பல இலட்சம் பேர் சுஜுத்து செய்துள்ளனர். அவர்களின் பிரார்த்தனைகள் நிச்சயம் அங்கீகரிக்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்) பேட்டை இமாம் பத்ரு ஜமான் (அரூசி)

முத்துப்பேட்டை, ஏப்ரல் 26 : தர்ஹா மர்ஹும் கட்ட லெப்பை என்கின்ற M .S .செய்து முஹம்மது லெப்பை அவர்களின் மகனும், மர்ஹும் S.S .சிந்தா லெப்பை அவர்களின் மருமகனும், மர்ஹும் M .S .சாகுல் ஹமீது லெப்பை, M .S .ஹாஜா சரிப், M .S .அப்துல் வஹாப், M .S .T .முஹம்மது அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் Y .P . நெய்னா முஹம்மது லெப்பை, மர்ஹும் Y .P .முஹம்மது யாகூப் லெப்பை, மர்ஹும் SS .முஹம்மது பாரூக் லெப்பை, SS .தாவூது ஆகியோரின் மச்சானும், Y .P .S. அஹமது முஹைதீன், Y .P .S. முஹம்மது இபுராஹீம் ஆகியோரின் மாமனாரும், M .S. ஹபீப் ரஹ்மான், M .S. ரஷீத் அலி, ஆகியோரின் தகப்பனருமாகிய " M .S. முஹம்மது யூசுப் லெப்பை அவர்கள் இன்று காலை 9 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் தர்ஹா கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்
Y .P. லெப்பை தம்பி
நமது நிருபர்
KM.காதர் கனி (பாடகர்)

ஈரான், ஏப்ரல் 26 : ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிருஸ்தவ பாதிரியார் யூசுப் நதகானியை ஈரான் விடுதலை செய்யாவிட்டால் திருக்குரான் பிரதியை எரித்தும், உய்ரினும் மேலான நமது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உருவப்படத்தை வரையப்போவதாகவும் வெறிப்பிடித்த அமெரிக்க கிருஸ்தவ பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் கூறியுள்ளான். கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஃப்லோரிட்டாவில் திருக்குர்ஆன் பிரதியை எரிக்கப்போவதாக அறிவித்து சர்ச்சையில் சிக்கிய டெர்ரி ஜோன்ஸ் வருகிற 28 ஆம் தேதி 5 மணிக்கு முன்பு யூசுப் நகராணியை விடுதலை செய்யவேண்டும் என்றும் கெடு விதித்துள்ளான். ஸ்டான் அப் அமெரிக்கா நவ் என்ற டெர்ரி ஜோன்ஸின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கிருத்தவ மதத்திற்கு மாறியதைத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டு நதகாணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாதாகாணியை கொலைச் செய்யவோ அல்லது விடுதலைச் செய்யாமல் இருந்தாலோ உலகில் அனைவரும் திருக்குர்ஆன் பிரதியை எரிக்க வேண்டும் என்று ஜோன்ஸ் அழைப்பு விடுத்துள்ளான்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EAK .முனவ்வர் கான்

சென்னை, ஏப்ரல் 25 : தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் சாதிவாரி கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டும். முஸ்லிம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கினி லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே, முஸ்லிம்கள் அனைவரும் `இஸ்லாம்’ என்ற மதத்தை மட்டும் குறிப்பிட வேண்டும் என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் அறிவுறுத்தியுள்ளது. இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஒய்.ஜவஹர் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் சாதிவாரியாக கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இதில், முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டும். வெளிநாடுகளில் வேலை செய்கின்ற தங்கள் உறவினர் பெயர்களையும் தெரிவிக்க வேண்டும்.இதற்காக, அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் நிர்வாகிகள், உதவியாக இருக்க வேண்டும்.மேலும், முஸ்லிம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கினி லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே, முஸ்லிம்கள் அனைவரும் `இஸ்லாம்’ என்ற மதத்தை மட்டும் குறிப்பிடவும். கணக்கெடுப்பில் நம் பெயர்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான், நம் உரிமைகளைப் பெற முடியும் என்று கூறியுள்ளார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்)


முத்துப்பேட்டை, ஏப்ரல் 24: முத்துப்பேட்டை அடுத்து மருதங்கா வெளி ரயில் நிலையம் அருகில் திரு. ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். மகன் மாரிமுத்து வீடும் அருகில் உள்ளது. இவரது உறவினர் வீர செல்வா வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். இவரது மகன் பாலசிவா வயது 2 , அங்கு தூங்கினான். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வீடு பூந்து அந்த சிறுவனின் காலில் உள்ள தங்க கொலுசு மற்றும் கழுத்தில் உள்ள சங்கிலியை பறித்து சென்று விட்டான். அதன் பின்பு அதே பகுதியை சேர்ந்த டைலர் கண்ணன் மகள் தேவியுடைய தாலி செய்னை பறிக்க முயற்சித்தான் அப்போது கூச்சலிட்டதால் பயந்து அவன் ஓடி விட்டான். பின்பு அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் சிகிரெட் பத்தவைக்கும் போது அவனை அடையாளம் கண்ட பொது மக்கள் துரத்தினர். அனால் இதிலும் அவன் தப்பித்து சென்று விட்டான். எங்கு தேடியும் அவன் கிடைக்க வில்லை. அதே நிலையில் அடித்த சில மணி நேரத்தில் அந்த மரும நபர் ஆலங்காடு அண்ணா சிலை அருகில் ஒரு தோப்பு வெளியை தாண்டி குதிக்கும் போது அங்குள்ள வீட்டு நபர் கூச்சலிட்டார். அப்போது அந்த பகுதியில் எதிர் பாராமல் வந்த முத்துப்பேட்டை ஆசாத் நகர் TNTJ கிளை நிர்வாகிகள் பைசல், பசூல் ரஹ்மான், யாசர் அரபாத் ஆகிய மூவரும் அந்த மரும நபரை துரத்தி பிடிக்க முயன்றனர். அப்போது அவன் ஒரு பேருந்தில் ஏறி தப்பிக்க முயற்சித்தான் அப்போது இரு சக்கர வாகன மூலம் அவனை துரத்தி வளைத்து பிடித்தனர். அப்போது அவனை பிடித்து தர்ம அடிகொடுத்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது தகவலை விசாரித்த போலீசார் அந்த மர்ம நபர் புதுகோட்டை மாவட்டம் ஜெகத பட்டினத்தை சேர்ந்த சேகர் என்பவரது மகன் தில்லை ராஜன் வயது 23 என்பது தெரிய வந்தது. முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மன்னார்குடி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இந்த திருடனை பிடித்த மூவரையும் போலீசார் வாழ்த்தி வரவேற்றனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, ரிப்போர்ட்டர் இல்யாஸ், யூசுப் அலி (ஆலிம்)