முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இஸ்லாத்தை ஏற்ற ராஜ வேணி!


சென்னை, ஆகஸ்ட் 15: சென்னையின் குடிசைப் பகுதி ஒன்றைச் சேர்ந்த இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் தனது சகோதரிக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி அவரின் தங்கை ராஜவேணி இன்று இஸ்லாத்தை ஏற்று ரபியா பானு ஆனார்! அவருக்கு இன்று ஜுமு ஆவில் எனது மனைவி திருக்கலிமாவை சொல்லி கொடுத்தார்!
மேலும் தங்களது அந்த குடிசைப் பகுதியில் மற்ற மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்ல அழைத்து இருக்கிறார்! அல்லாஹ் அவர் மூலம் அந்த குடும்பத்துக்கும் அப்பகுதி மக்களுக்கும் நேரவழி காட்ட பிரார்த்திப்போம்.

கலைஞர் ஆட்சியில் படி என்றார்கள்.. அம்மா ஆட்சியில் குடி என்கிறார்கள்.. இன்றைக்கு மாணவர்கள் படிக்கவா? குடிக்கவா? என்று கேட்கும் கேவலமான ஆட்சிதான் நடந்து கொண்டு இருக்கிறது.


முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 15: முத்துப்பேட்டை பேரூர் தி.மு.க சார்பில் கலைஞரின் பூரண மதுவிலக்கு அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் நீதி கேட்கும் பேரணி விளக்க பொதுக் கூட்டம் மாவட்ட செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் தலைமையில் நடைப்பெற்றது. முத்துப்பேட்டையில் தி.மு.க பொதுக்கூட்டத்தில் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன்பிரசன்னா பேச்சு.. இதில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ந.உ.சிவசாமி, ஒன்றிய செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட துணைச்செயலாளரும், நகர செயலாளருமான எம்.எஸ்.கார்த்திக் வரவேற்று பேசினார். இதில் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன்பிரசன்னா பேசினார் அப்பொழுது அவர் பேசுகையில்: 

தி.மு.க ஆட்சியில் தமிழக முழுவதும் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டது, பெரிய முதலிட்டார்கள் கொண்டு வரப்பட்டது, அதேபோல் தளபதி தமிழகத்தில் 80ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு வந்து சேர்ப்பேன் என்றார். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டில் 62 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு சேர்த்தார். இன்றைக்கு இப்பகுதி ஏழை விவசாயி பெண் கூட சென்னையில் 1.75 லட்சம் சம்பளம் வாங்கிறது என்றால் அது தி.மு.க ஆட்சியால் மட்டும் தான் முடியும். கலைஞர் ஆட்சியில் தெருவுக்கு தெரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. ஆனால் அம்மா ஆட்சில தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடை திறந்து இருக்கிறார். அதுமட்டுமல்ல தமிழக முழுவதும் 7312 டாஸ்மாக் பாரையும் திறந்து இருக்கிறார், கலைஞர் ஆட்சியில் படி என்றார்கள் அம்மா ஆட்சியில் குடி என்கிறார்கள், இன்றைக்கு மாணவர்கள் பெற்றோரை பார்த்து படிக்கவா? குடிக்கவா? என்று கேட்கும் கேவலமான ஆட்சிதான் நடந்து கொண்டு இருக்கிறது. அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த மட்டும் போக முடியல ஆனால் மோடியை வரவேற்க ஏர்ப்போர்டில் கால் கடுக்க நிற்கிறார். 

இன்று தமிழகத்தில் அண்ணா திமுக ஆட்சி நடைபெறவில்லை அடிமை திமுக ஆட்சிதான் நடைபெறுகிறது, 127 நாட்களாக சட்டமன்றம் பூட்டி கிடக்கிறது கேவலமாக உள்ளது என்று இவ்வாறு பேசினார். 


கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தஞ்சை.வே.மன்னர்மன்னன், மாவட்ட துணைச்செயலாளர் கலைவாணிமோகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட மாணவர் அணி நிர்வாகி ஜாம்பை.ராமஜெயம், முன்னால் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றிய அவைத்தலைவர் முத்துராமலிங்கம்.

 முன்னால் அவைத்தலைவர்கள் சேக்தாவூது, வீரையன், மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், கோவிந்தராஜன், அகமது இபுராஹிம், மகாராஜா தமீம், ஒன்றி பொருளாளர் கோவிலூர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணைச்செயலாளர்கள் ராஜேந்திரன், முத்து லட்சுமிசிவா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, ஜாம்பைகல்யாணம், சித்தமல்லி அண்ணாத்துரை, பேரூராட்சி கவுன்சிலர்கள் சிவஅய்யப்பன், ஜகபருல்லா, ஜெய்புநிஷா பகுருதீன், ரெத்தினகுமார், கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆடலரசன், ரவிக்குமார், நகர பொருளாளர் பாலசுப்பிரமணியன், வார்டு செயலாளர்கள் செல்வம், அன்பன் மற்றும் பெருகவாழ்ந்தான் இளங்கோவன் உப்பட்ட பலரும் கலந்துக்கொண்டனர். முடிவில் நகர துணைச்செயலாளர் சியா நவாஸ்கான் நன்றி கூறினார்.

Reported By 

ரிப்போர்ட்டர் முஹைதீன் 

தன்னுடைய ஈமானை இழக்காத ஆடு மேய்த்த சூடானி....அவருக்கு சவுதி அரசு 40,000,00 ரியால் லட்சம் வெகுமதி...





சவுதி அரேபியா, ஆகஸ்ட் 15: ஒரு  நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களிடமும் தூய்மையான இறையச்சமும் மறுமை பயமும் எப்போதுமே மனதில் இருந்தால்... அந்நாட்டில், காவல் துறைக்கோ  நீதித்துறைக்கோ சிறைக்கோ தூக்கு மேடைக்கோ எவ்வித வேலையோ அதற்கான அவசியமோ அறவே தேவையே இல்லாமல் போய்விடும்..! இதுதான் நிதர்சனம்..! இதுவே இஸ்லாமிய வாழ்வியல் நெறியில் இறுதியான உறுதியான குறிக்கோள்..! இப்படியான ஒரு நாட்டில், புறத்தில் இருந்து எதிரிகளின் எவ்வித படையெடுப்பும் இல்லாத பட்சத்தில் சாந்தியும் சமாதானமும் போரற்ற சூழலும் என்றென்றும் குடிகொண்டு இருக்கும்.

இறையச்சத்துக்கான முதன்மை பரிசு மறுவுலக சுவனப்பரிசுதான். மற்றபடி இவ்வுலக பரிசு 40 லட்சம் ரூபாய் என்பதெல்லாம் அதுவும் ஒரு சோதனையே என்று கூறிக்கொண்டு... பதிவுக்கு செல்வோம் சகோஸ்.


சவூதி அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த சூடான் நாட்டு ஏழையிடம், அவரின் நேர்மையை சோதிக்கும் வண்ணம், காரில் பிரயாணித்து வந்த சவூதிகள் சிலர் அவர் வைத்திருந்த ஆட்டு மந்தையில் ஒன்றை தமக்கு தரச்சொல்லி கேட்க...

ஆடு மேய்ப்பவரோ, 'இது தனது ஆடில்லை, இன்னொருவரின் ஆட்டு மந்தை, நான் எப்படி இதை உங்களுக்கு தரும் அதிகாரம் பெற முடியும்?' என்று கூறி ஆட்டை தரமறுக்க...

அவரிடம் 'ஆடு தொலைந்து விட்டது' என்று உரிமையாளரிடம் பொய் கூறி விட்டு, தன்னிடம் 200 ரியாலுக்கு விற்றுவிட பணத்தாசை காட்டி வந்தவர்கள் கேட்க... 

அவரோ... இருநூறல்ல... இருநூறாயிரம் ரியால் தந்தாலும் அடுத்தவரின் ஆட்டை நான் உங்களுக்கு விற்க மாட்டேன்' என்று உறுதியாக கூற... 

அந்த சவூதி சோதனையாளர்கள் அவரிடம் 'இங்கு தான் உரிமையாளரோ வேறு யாருமோ உன்னை பார்க்கவில்லையே, பிறகு ஏன் ஆட்டை நல்ல விலைக்கு விற்க பயம் கொள்கிறீர்?' என்று மீண்டும் பணத்தாசை காட்டி வற்புறுத்த, 

அதற்கு அந்த சூடானிய முஸ்லிம் சகோதரன் அல் தய்யிப் யூஸூஃப் கூறியவார்த்தை... மாஷாஅல்லாஹ்... வரலாற்று புகழ்பெற்று விட்டது.

'அல்லாஹ் எங்கு சென்றான்.. அல்லாஹ் என்னை பார்க்கவில்லையா... அவன் உங்களையும் கண்காணிக்கிறானே... " 

...என்று எதிர்கேள்வி கேட்டு ஆட்டை தரவோ விற்கவோ மிகத்திடமாக மறுத்துவிடுகிறார். 

இது பற்றிய சோதனையாளர்களின் காணொளி யூ ட்யூபில் ஏற்றப்பட்டு வெளி வந்தவுடன்... அந்த சூடானிய ஆடு மேய்க்கும் சகோதரருக்கு பரிசுத்தொகை எக்கச்சக்கமாக நாலா புறத்தில் உள்ள நல்லவர்கள் வழியாக அல்லாஹ்வின் அருட்பார்வையில் குவிந்த வண்ணம் உள்ளது. 

அல்ஹம்துலில்லாஹ்.

ஆம்..! அந்த சூடான் சகோதரனுக்கு சவூதியில் உள்ள சூடானிய தூதரகம் தமது இருப்பிடத்துக்கு அழைத்து உபசரித்து... பாராட்டி, 200,000 சவூதி ரியால் பணத்தை  பரிசாக கொடுத்துள்ளது. தூதரக அதிகாரிகளுடன் சகோ. யூசூப் உள்ள புகைப்படங்களை அடுத்து காணுங்கள்.

மாஷா அல்லாஹ். 
இதற்கு முன்னரே... அல் ஹுசைனி பவுண்டேஷன் என்ற நிறுவனம், 20,000 சவூதி ரியால் வெகுமதியை அந்த சகோதரருக்கு வழங்கியுள்ளது. 

மேலும்,  20,000 சவூதி ரியால் பரிசுப்பணமும் வேறோரு இடத்தில் இருந்து அதாவது சில தன்னார்வ தொண்டர்கள் மற்றும் சில கொடையாளிகள் குழு மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.

மாஷாஅல்லாஹ், மப்ரூக்.

ஆக மொத்தம்...
தூய்மையான இறையச்சத்துக்கு சுமார் நாற்பது லட்சம் ரூபாய் சன்மானத்தை அல்லாஹ் இவ்வுலகிலேயே சகோ. யூசுஃபுக்கு வழங்கி, தனது திருமறையில் கூறியதை நிறைவேற்றியுள்ளான். இன்னும் பரிசுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

"அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்". (அல்குர்ஆன் 65: 2-3).


Reported By

அப்துல் ரஹ்மான். 


சவுதி அரேபியாவிற்கு உடனடி ஆட்கள் தேவை IT Software Engineer...


சவுதி அரேபியா, ஆகஸ்ட் 14: சவுதி அரேபியாவில் உள்ள மிக பெரிய நிறுவனத்திற்கு IT SOFTWARE ENGINEER படித்த நபருக்கு 1. CNC Machine Operater, Interior Designer ஆகிய பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவைப்படுகிறது. விருப்பம் உள்ள நபர்கள் உடனே தொடர்பு கொள்ளவும், இதனுடைய நேர்முகத்தேர்வு வருகிற திங்கள் கிழமை 17.08.2015 அன்று நடைபெறும் என்று இவற்றை ஏற்பாடு செய்பவரான அஸ்ரப் அலி கூறினார். இந்த வேலைக்கு முஸ்லிம்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்புக்கு: Mr. Asraf Ali : +91 9600 72 8855 

முத்துப்பேட்டை போலீசை கத்தியால் குத்திய வாலிபரை 3 தினங்கள் ஆகியும் நீதிமன்றத்தில் ஒப்படைக்காத காவல் துறை.





முத்துப்பேட்டை ஆகஸ்ட் 13: இறந்துவிட்டதாக செய்தி பரவியதால் பெரும் பரபரப்பு.. 
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லியின் முயற்சியால்பின்னர் மாலை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. முத்துப்பேட்டையில் கடந்த 10-ம் தேதி பேட்டை பகுதியைச் சேர்ந்த அப்துல் முத்தலிபு மகன் வாசிம்கான்(20) என்ற வாலிபருக்கும் தெற்கு தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது(25) என்ற வாலிபருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்பொழுது தகவல் அறிந்து அப்பகுதிக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் ராமானுஜம், போலீசார் அரவிந்த், சுரேஷ் ஆகியோர் சென்றனர். அப்பொழுது அரவிந்த் என்ற போலீஸ் வாசிம்கானை பிடிக்க முயன்றார். அப்பொழுது வாசிம்கானுக்கு அரவிந்துக்கும் தகராறு ஏற்பட்டது. 

போலீஸ் அரவிந்த் போலீஸ் உடை அணியாமல் இருந்துள்ளார். அதற்கு வாசிம்கான் என்னை பிடிக்க நீ யாரு?.. போலீஸ் உடையும் அணியவில்லை.. நீ உயிருக்கு போராடிய ஆட்டு குட்டியை திண்டவன் தானே? என்று பேசினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. அப்பொழுது ஆத்திரம் அடைந்த வாசிம்கான் போலீஸ் அரவிந்தை கத்தியால் குத்தினார். அதனையடுத்து மற்ற போலீசார் வாசிம்கானை மடக்கி பிடித்து கை கால்களை கட்டி காவல் நிலையத்துக்கு கொண்டு சேர்த்தனர். காயம் அடைந்த போலீஸ் அரவிந்த் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். வாலிபர் வாசிம்கான் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டது. 

ஆனால் நீதி மன்றத்தில் ஒப்படைக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்துக்குள் கைதியை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் வாசிம்கானை அன்று இரவு முழுவதும் விசாரணை என்ற பெயரில் பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்திலும், பிறகு 11-ம் தேதி காலை விசாரணை என்ற பெயரில் எடையூர் காவல் நிலையத்திலும், நேற்று 12-ம் தேதி காலை முத்துப்பேட்டை காவல் நிலையத்திலும் வைத்து வாலிபர் வாசிம்கானை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கை, கால் கட்டப்பட்டிருந்த வாலிபர் வாசிம்கான் உடல் நிலை சோர்வாக காணப்பட்டு மிகமும் மோசமான நிலையில் இருந்துள்ளார். 

இதனைக்கண்ட காவலர் ஒரு ஒருவர் வாசிம்கான் மீது பரிதாபப்பட்டு முக்கிய பிரமுகர் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வாசிம்கானின் நண்பர்கள் உறவினர்கள் நேற்று வாசிம்கானைப் பார்க்க முத்துப்பேட்டை காவல் நிலையம் சென்றுள்ளனர். அதற்கு போலீசார் அனுமதிக்காமல் மறுத்து திருப்பி அனுப்பினர். அதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் பல மணி நேரம் காவல் நிலையம் வெளியில் காத்திருந்தனர். அப்பொழுது போலீசார் பரப்புடன் காணப்பட்டதால் வாசிம்கான் இறந்துவிட்டதாக முத்துப்பேட்டை முழுவதும் தகவல் பரவியது. இதனையடுத்து இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் முகம்மது ஷிப்லி துரிதமாக மாவட்ட எஸ்.பி. மற்றும் உயர் போலீஸ் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். 

மேலும் அவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் நீதிமன்ற விதிமுறையை மீறி வாசிம்கானை நீமன்றத்தில் ஒப்படைக்காமல் வைத்து துன்புறுத்தி வருகிறார்கள். வாலிபரின் உடல்நிலை மோசமாக உள்ளது. உடன் நீதிமன்றத்தில் அந்த வாலிபரை ஆஜர்ப்படுத்தாவிட்டால் சென்னையில் டி.ஜி.பி.ஐயை சந்திப்பேன். தமிழக முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்றார். அதனையடுத்து மாவட்ட எஸ்.பி. ஜெயசந்திரன் உத்தரவுப்படி முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருண் மேற்பார்வையில் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் அதிரடியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்ட வாலிபர் வாசிம்கானை காவல் நிலையம் எதிர்புறம் உள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளித்துவிட்டு நேற்று மாலை திருத்துறைப்பூண்டி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதனால் வாலிபர் வாசிம்கான் இறந்துவிட்டதாக வெளியான செய்திக்கும் முத்துப்பேட்டையில் ஏற்பட்ட பரபரப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
 

இந்த சம்பவம் குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி கூறுகையில்: காவலர் ஒருவரை தாக்கிய புகாரில் வசீம்கான் என்ற இளைஞரை முத்துப்பேட்டை காவல்துறை கைது செய்து ரிமாண்ட் செய்யாமல் இரண்டு நாட்களாக சட்ட விரோத காவலில் வைத்து அடித்து, துன்புறுத்தி வருவதாக இன்று(நேற்று) காலை அவரது உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தனர். உடனடியாக நான் முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருணை தொலைபேசி மூலம் பல முறை தொடர்பு கொண்டேன். அவர் எடுக்கவில்லை. அவரிடம் கூறும் படி அவரின் உதவியாளரிடம் தெரிவித்தும் அலட்சியப்படுத்திவிட்டார். 

அதனால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட உளவுத்துறை அதிகாரிகளிடம் முத்துப்பேட்டை காவல்துறையின் சட்ட விரோத நடவடிக்கைகள் தவறானது என தெரிவித்தேன். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு வசீம்கான் என்ற இளைஞர் இன்று(நேற்று) மாலை ரிமாண்ட் செய்யப்பட்டார். எஸ்.பி.பட்டிணம், ஆம்பூர், சேலம் போன்ற இடங்களில் சமீபத்தில் நடத்த காவல்நிலைய சாவுகளின் வடுவே இன்னும் ஆறாத நிலையில் இது போன்ற காவல்நிலைய துன்புறுத்தல்கள் நடைபெறுவது வருத்தத்திற்குரியது. ஒரு சில காவல்துறையினர் செய்கின்ற சட்ட விரோத நடவடிக்கைகளால் மொத்த காவல்துறையும் கெட்ட பெயரை சுமக்க வேண்டியுள்ளது. வசீம்கானை ரிமாண்ட் செய்யாமல் இரண்டு நாட்கள் சட்ட விரோத காவலில் வைத்து துன்புறுத்திய முத்துப்பேட்டை காவல்துறையினர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Rported By 

முஹம்மது இல்யாஸ். MBA, MA. JMC 

யூத விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார்...


அமெரிக்கா, ஆகஸ்ட் 14: கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம். "மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.
மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்.
‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.

ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்-கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு (Finger Printing) ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே, டி.என்.ஏ. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும். ‘ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும்” என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு. அதையே குர்ஆனின் இவ்வசனம் கூறுகிறது என்பதைக் கண்ட யூத விஞ்ஞானி ஆடிப்போனார்; குர்ஆனை ஏற்றார்.

இது தொடர்பாக, எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்:
அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில் இணைந்துள்ளார். தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச்செல்கிறான்.

அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார் அவர் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.
ராபர்ட் கில்ஹாம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன்களில் ஒருவன் மட்டுமே தமக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.

இதிலிருந்து, மூன்று மாத ‘இத்தா’ ஏன் கடமையாக்கப்பட்டது என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு. குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்.

Reported By

மௌலவி அ.முஹம்மது கான் பாகவி அவர்கள்.

துபாயில் உள்ள DEWA அரசு நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது.


துபாய், ஆகஸ்ட் 13: துபாய் நாட்டில் உள்ள DUBAI ELECTRICITY & WATER AUTHORITY (DEWA) என்ற அரசு நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு சென்னையில் வருகிற செப்டம்பர் மாதம் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. எனவே அணைத்து சகோதரர்களும் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனுடைய தேதி, இடம் மற்றும் நேரம் தங்களுடைய ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். முந்துபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

DEPARTMENT:
ELECTRICAL TRANSMISSION
MAINTENANCE UPTO 400KV


Positions Required :

1. Specialis ts - Crisis Management
2. Specialists - Trans Switchgear
3. Specialists - Material Management
4. Specialists - Maintenance Planning
5. Specialists - Trans. Cable
6. Specialist - Protection (Design &
Engineering)
7. Specialist - Trans. Protection Testing &
Commissioning
8. Sr. Manager/Manager (400KV Network)
9. Sr. Manager (Tender)
10. Manager - Trans. Civil Maintenance
11. Manager - RTU Maintenance
Commissioning
12. Manager - Transmission Control
Centre
13. Manager - Transmission Prot. Design &
Engineering
14. Deputy Manager - Transmission Line
Asset Management Cable
15. Deputy Manager - TAM (OHL)
16. Deputy Manager - Trans. Protection
Settings
17. Deputy Manager - Scheduling &
Resources Planning
18. Project Manager
19. Assistant Manager - Network Security
& User Support
20. Assistant Manager Electro Mechanical
Asset management
21. Asst. Manager-Trans. Prot. Inspections
Quality
22. Sr. Engineer Datacenter
23. Sr. Engineer Cable
24. Sr. Engineer Structural
25. Sr. Engineer-Transmission Asset
Management Cable
26. Sr. Engineer - Trans OHL Maintenance
27. Sr. Supervisor - Trans OHL
Maintenance
28. Sr. Lineman/Asst. Lineman
29. Sr. Engineer - Trans Line Patrol
30. Sr. Engineer - SCADA Network
31. Sr. Engineer - Asset Management
32. Sr. Engineer Planning
33. Sr Engineer-Quality & Tech
Development
34. Sr. Engineer. Permits
35. Sr. Engineer-Technical Interfaces
36. Sr. Engineer-Transformer
37. Sr. Engineer-Switchgear
38. Sr. Engineer-TCAM Electromechanical
39. Sr. Analyst
40. Engineer. Technical Development
41. Engineer - RTU Commissioning
42. Engineer-Trans Line NOC
43. Engineer /Asst. Engineer- Transmission
Equipment Maintenance
44. Engineer - RTU Maintenance
45. Engineer - Asset Mgmt
46. Engineer Project Support
47. Engineer. Site Inspection
48. Engineer - GIS Data Quality
(Electricity).
49. Engineer - Technical Architect
50. Engineer Network
51. Engineer Security
52. Engineer - SCADA System
53. Engineer/ Sr. Engineer Project
54. Engineer - Technical Support &
Coordination
55. Engineer - TAM Transformer
56. Engineer TAM OHL
57. Planning/Cost Engineer
58. Engineer RTO
59. Engineer - Reporting & Analysis
60. Engineer (Site) (132KV Network)
61. Engineer - System Studies
62. Engineer - Operation Planning
63. Engineer DTS
64. Engineer - Trans Protection Setting
65. Engineer.- Technical & Strategy
66. Asst. Engineer - SCMS Maintenance
67. Asst. Engineer - Asset Mgmt.
68. Asst. Engineer - Trans Protection
Maint.
69. Software Developer
70. Database Analyst
71. Supervisor - Civil
72. Sr. Technician Wireless
73. Sr. Technician Services Support
74. Technicians
75. Electricians
Exp Criteria :
For Sr Managers / Specialist: 15 Yrs and
above
For Managers : 12 Yrs 14 Yrs
For Sr Engineer: 8 Yrs 11 Yrs
For Engineer : 5 Yrs -7 Yrs
For Asst Engineer: 3 Yrs 5 Yrs

PLEASE SEND YOUR UPDATED RESUME
FOR CLIENT SHORTLISTING
NOTE: KINDLY MENTION ON TOP OF
YOUR RESUME FOR WHICH POSITION
YOU APPLYING FOR IS MUST.
Conticon.chennai@gmail.com

Desired Candidate Profile
B.Tech/B.E., Diploma
CONTINENTAL CONTRACTORS
CHENNAI
conticon.chennai@gmail.com

Reported By 

AKL.அப்துல் ரஹ்மான் 

பெங்களூரில் உள்ள IBM என்ற பிகப்பெரிய நிறுவனத்திற்கு BE படித்த 75 பேர் தேவைப்படுகிறது.


பெங்களூர், ஆகஸ்ட் 13: பெங்களூரில் உள்ள பிரபலமான சாப்ட்வேர் நிறுவனமான IBM என்ற நிறுவனத்திற்கு உடனடியாக BE படித்த சுமார் 75 பேர் தேவைப்படிகிறது. இதில் முன் அனுபவம் உள்ளவர், அனுபவம் இல்லாதவர் இருவரும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இதில் மாத சம்பளம் சுமார் 35,000, முதல் 45,000 வரை வழங்கப்படும். இது இரண்டு வருடம் அக்ரிமெண்ட் போடப்படும், மேலும் தங்களுடைய திறமையை கண்டறிந்து சம்பள உயர்வு, வெளிநாட்டு பயணம் ஆகியவை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தங்களுடைய BIO DATA வை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
Lokeshs2@in.ibm.com

Reported By


முஹம்மது இல்யாஸ். MBA . MA.JMC,

காரைக்காலில் முஸ்லிம் பெண்ணை போல் பர்தா அணிந்து 6 பவுன் திருட்டு இந்து பெண் கோமதி கைது




காரைக்கால், ஆகஸ்ட் 12: காவல்துறைக்கு பாராட்டுக்கள்.. அரசு பொது மருத்துவமனையில் 66 வயது மூதாட்டியிடம்மர்மமான முறையில் 6 பவுன் நகையை திருடி சென்ற புர்கா அணிந்த பெண்ணை காரைக்கால் காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நகர ஆய்வாளர் பாலச்சந்திரன் அவர்கள் தலைமையில் S.I. மோகன், S.I. இராமசாமி, மற்றும் காவலர்கள் சிவானந்தம், முருகானந்தம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து துரித நடவடிக்கையின் பேரில் TR. பட்டினத்தைச் சேர்ந்த போலியாக பர்தா அணிந்த கோமதி  மாரியம்மன் கோவில் தெரு என்பவரை புலன் வைத்து கைது செய்து 6 பவுன் தங்க நகையை மீட்டனர்.கோமதியை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். உண்மை குற்றவாளியை ஒரே நாளில் கைது செய்த காவல்துறைக்கு காரைக்கால் போராளிகள் குழு சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.


Reporter By 

முஹம்மது இல்யாஸ். MBA . MA, JMC 

இந்து முன்னணி தீவிரவாதிகளால் முஸ்லிம் சகோதரர் வெட்டப்பட்டார். வேலூரில் பரபரப்பு:


வேலூர், ஆகஸ்ட் 12: இந்து முன்னணி தீவிரவாதிகளால் வேலூரில் தொடர்ந்து பதற்றம்...144 தடை சட்டம் அமலில் வேலூரில் இந்து முன்னணியை சார்ந்த பயங்கரவாதிகளால் செய்யது என்ற சகோதரர் கொடூரமாக வெட்டப்பட்டுள்ளார்..
இரண்டு மாதங்களுக்கு முன்பு முஸ்லிம் பெண்களை ஈவ்டீஸிங் செய்த இந்து முன்னணியினரை சகோதரர் செய்யது போலீஸில் பிடித்து கொடுத்த காரணத்துக்காக முன் விரோத காரணாமாக அவரை இன்று வெட்டியுள்ளார்கள் தற்ப்போது சகோதரர் செய்யது வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சீரியஸாக உள்ளார்..
தகவல்: இஸ்லாமியர்களின் ஊடகத்துறை.

இவர்களைத் தெரிகிறதா ?


இந்தியா, ஆகஸ்ட் 12: இந்துத்துவ பாசிசத்தின் இரு வேறு முகங்கள்!  இந்திய அளவில் புகழ் பெற்ற புகைப்படத்துக்கு சொந்தக் காரர்கள்! முதலாவது குஜராத் கலவரத்தின் போது பஜ்ரங் தள் இயக்கத்தின் தொண்டனாக கலவரத்தில் ஈடுபடும் அசோக் மோச்சி தற்போது அதிலிருந்து விலகி திருந்தியவராக! இரண்டாவது குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குத்புதீன் அன்சாரி உயிருக்கு மன்றாடும் இவரின் புகைப்படம் உலகப் பிரசித்தம்!இருவரும் தற்போது ஒருவருக்கொருவர் மலர் கொடுப்பவர்களாக பாசிசம் பிரித்ததை மார்க்சிசம் சேர்த்துள்ளது ஒரே மேடையில்! இதுதான் இந்திய மக்களின் எதார்த்த நிலை இந்த மண்ணில் பாசிசத்திற்கு இனி வேலை இல்லை!

Reporter By 

செங்கிஸ்கான்.

தமிழகத்தை யாராலும் காப்பாற் இயலாது, இது ஒரு உண்மை ஸ்டேட்டஸ்..



தஞ்சை, ஆகஸ்ட் 12: அதிர்ச்சி அடையாமல் படிக்கவும் இது ஒரு உண்மை ஸ்டேட்டஸ்...
மீத்தேன் என்னும் எமன்
இன்று காலை தஞ்சையில்
காவேரி பாசன
பகுதிகளை பாலைவனமாய் மாற்ற
கூடிய மீத்தேன்
எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை
மூத்த பொறியாளர் சங்கம் நடத்திய
கருத்தரங்கத்திற்கு செல்லும்
வாய்ப்பு கிட்டியது..ஏற்க
னவே இது பற்றி அறிந்திருந்தாலும்
மேலும் அது பற்றிய விளக்கங்கள்
தெளிவாய் அறிய
வேண்டி கலந்துகொண்டேன்.
ஒரு வரியில் சொல்ல கூடிய தகவல்
அல்ல இது...அனைவரையும்
அதாவது ஒட்டுமொத்த
தமிழகத்தையும் அழிக்க கூடிய
கொடிய அரக்கன்
இது எனபது அறிந்து பெரும்
அதிர்ச்சியே ஏற்பட்டது.
அனைத்து நட்புகளுக்கும் நான்
வைக்கும்
வேண்டுகோள் ....பொறுமையாய்
படித்து அறிந்து இதை முடிந்த
அளவுக்கு பகிருங்கள் என்பதே.
முற்றிலும் பாலைவனமாய்
மாறப்போகும் தமிழகத்தின்
நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டம்
என்றும்
அதோடு சேர்ந்து பாதிக்கபடப்போகு
ம் மாவட்டங்கள்
திருவாரூர் ,நாகை மாவட்டம் ஆகிய
இரண்டும் தான் என்பதே நான்
இது வரை அறிந்த
விபரம்...உண்மை அதுவல்ல
என்பதை பல தகவல்களோடும் ,
நடந்த உண்மைகளோடும்
ஒப்பிட்டு இன்று நடந்த
கருத்தரங்கில் பொறியாளர்கள்
கூறியது மனதை பதைபதைக்க
வைத்தது.
சில நாட்கள் முன் புதிதாய்
வெளிவந்த
கத்தி படத்தை ஒரு நண்பர்
குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும்
வாய்ப்பு கிட்டியது..அப்படத்தில்
ஒரு இடத்தில கதாநாயகன்
தஞ்சை மாவட்டத்தில்
ஆழ்துளை கிணறு மூலம் மீத்தேன்
எடுக்க போகிறார்கள்
என்று கூறியதும் நண்பரின்
மனைவி என்னிடம் கேட்ட
கேள்வி மீத்தேன் எடுப்பது என்றால்
என்ன , எங்கே என்ற விபரம்
தான்.சற்றே அதிர்ச்சியோடு அவரை நோக்கி விபரம்
கூறினேன்..அதிர்ச்சிக்கு காரணம்
எங்கே மீத்தேன் எடுக்க
போகிறார்களோ அதற்கு வெகு அருகில்
அவர் பிறந்த மண் ...மீத்தேன் எடுக்க
போகும் விபரம்
இங்கு இருப்போற்க்கே சரிவர
தெரியாத
ஒரு செய்தி என்பதே உண்மை..இதே கருத்தை இன்றைய
கருத்தரங்கிலும் பகிர்ந்தனர்.
இன்னும் அதிக அளவில்
இது மக்களை அடைய
வேண்டும்...எதிர்ப்பு வலுக்க
வேண்டும் என்றும் தெரிவித்தனர்..
எங்கேயோ போடப்போகும்
ஆழ்துளை கிணறுதானே நமக்கு என்ன
வந்தது என்று எண்ண வேண்டாம்
தோழமைகளே..
1.நிலத்தடியில் சுமார் 6000
அடி ஆழத்தில்
நிலக்கரியோடு இருக்கும்
மீத்தேனை எடுக்க
நிலக்கரி இருக்கும் மட்டம்
வரை நிலக்கரிப் படிவத்தில்
இருக்கும் நீரை இறைக்கவேண்டும்.
2.கடும் உப்பும், பிற மாசுகளும்
நிறைந்த இந்த நீர், நிலத்தில் வாழும்
தாவர உயிரியல் மற்றும்
நுண்ணுயிர்களைக் கொல்லும்
ஆற்றல் வாய்ந்தது.
3.அதோடு நிலம் சுடுகாடாய்
மாறும்.
4.கடல் நீர் உள் நுழையும்.
5.நிலம் சுமார் 20
அடிகளுக்கு உள்வாங்கும்.
6.கட்டிடங்கள், பாலங்கள்,
ஆற்றுக்கரைகள் , கோயில்கள்
சிதையும்.நிலநடுக்கங்கள்
ஏற்படும் .
7.குடிநீர் , பாசன நீர் தரும்
நிலத்தடி நீர்பிடிப்புகள் வற்றிப்
போகும்.
8.மீதம் இருக்கின்ற நீர்நிலைகளிலும்
ஆழ்துளை குழாய் இட
பயன்படுத்திய ரசாயனங்கள்,
மீத்தேன் ஆகியவை கலக்கும்.
இச்செயல் முறை மண்ணையும்,
நீரையும் நஞ்சாக்கி நிரந்தரமாக
நாசம் செய்யும்.
ஒப்பந்தம் போட்டிருக்கும்
ஜி.இ.இ.சி கம்பெனிக்கு கொடுக்கபோகும்
இடம் 691 சதுர
கிலோமீட்டர் .ஆனால்
பாதிப்பு ஏற்படபோகும்
மூன்று மாவட்டங்களின்
பரப்பளவு 8270 சதுரகிலோமீட்டர்
அதாவது 21 லட்சம் ஏக்கர்
நிலங்களை நாசம் செய்யும்.
மொத்த ஆழ்துளை கிணறுகளின்
எண்ணிக்கை 2000.
அடுத்த கட்டமாய் பாதிக்கபோகும்
மாவட்டங்கள் புதுக்கோட்டை,
திருச்சி மற்றும் கடலூரும் தான்.
இதனால் காற்றும் மாசுபட
போவதால் அது ஒட்டுமொத்த
தமிழகத்தையும் பாதிக்கபோகும்
கொடிய அரக்கன் என்பதே நிதர்சனம்.
ஒட்டுமொத்தமாக
இப்பகுதி பாலைவனமாய் மாற
போவதால் 50 லட்சம் மக்களின்
வாழ்க்கை கேள்விக்குறியாய்
நிற்கிறது..சென்ற
அரசு ஒப்பந்தத்தில்
கையெழுத்து இட்டு தற்போது ஆங்காங்கே நடைபெறும்
போராட்டம் காரணமாய் இந்த
அரசு தற்காலிகமாய்
நிறுத்தி வைத்துள்ளது.இந்த
ஒப்பந்தம் மட்டும் மீண்டும்
தொடர்ந்தால் ...............
தமிழகத்தை யாராலும் காப்பாற்
இயலாது. .அதற்கு முன் மக்கள்
விழித்தெழ வேண்டியது மிக
அவசியம் மற்றும் அவசரமும் கூட.

R.SARAVANAN.MA.BL.MPHIL.MBA.MLM.
ADVOCATE.HIGH COURT.
CHENNAI.
PLEASE SHARE IT.
THANK YOU.
SAVE TAMILNADU.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)