முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை TNTJ சார்பில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்...








முத்துப்பேட்டை, ஜனவரி 25 : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) & திருவாரூர் வண்டாம்பானை லயன்ஸ் கண் மருத்துவமனை மற்றும் திருவாரூர் மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் IOL (லென்ஸ்) பொருத்தும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம், இன்று காலை நமது மஸ்ஜித் நூற் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை TNTJ வின் நகர தலைவர் ஜனாப். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தலைமை ஏற்றார். பின்னர் இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஜனாப். புஹாரி, நகர பொருளாளர் ஜனாப். ஜாகிர் உசேன், துணைத்தலைவர் ஜனாப். அப்துல் வக்கீல், துணைசெயலாளர் ஜனாப். முஹம்மது லுக்மான் ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

K . எர்சாத் அஹமது, TR .அப்துல் ரஹ்மான்

22 ஆம் ஆண்டு முத்துப்பேட்டை புகாரி சரீப் மஜ்லீஸ் இன்று முதல் துவக்கம்...



முத்துப்பேட்டை, ஜனவரி 25 : முத்துப்பேட்டையில் கடந்த 21 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது நமதூர் புகாரி சரீப் மஜ்லீஸ்.அதன் அடிப்படையில் இந்த வருடம் 22 ஆம் ஆண்டு 25 .01 .2012 இன்று முதல் மிக சிறப்பாக துவக்கப்பட்டது. இதில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அரபி மூலம் படித்து அவற்றை தமிழில் பொழிபெயர்ப்பு செய்யப்படும். அதன் அடிப்படையில் ஜனாப். அப்துல் லதீப் ஆலீம் அவர்கள் ஈமானின் முக்கியத்தை பற்றி சிறப்பாக உரை நிகழ்த்தினார். அதில் இபுறாஹீம் (அலை), முஹம்மது நபி (ஸல்), அன்னை ஆய்ஷா மரியம் ஆகியோரின் ஈமான் எவ்வாறு இருந்தது என்றெல்லாம் நமக்கு நினைவு படுத்தினார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து தினமும் காலை ஃபஜர் தொழுகை முடிந்தது முதல் காலை 8 .45 மணிவரையிலும் தொடர்ந்து ஒருமாத காலாம் வரை பல்வேறு தலைப்புகளில் சிறப்பு பயான் நடைபெறும்.எனவே அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

U .பத்ரு ஜமான் (அரூஷி)

சவூதியில் உள்ள SMEH என்ற பிரபல நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை...


சவுதிஅரேபியா, ஜனவரி 24 : சவுதியில் உள்ள பிரபல நிறுவனமான "SMEH " என்ற நிறுவனத்திற்கு மருத்துவமனை பராமரிப்பு வேளைக்கு கீழ்க்கண்ட படிப்புடையவர்கள் உடனடியாக ஆட்கள் தேவை.
1 ) Electrical Engineer (BE) 5 years Experiences Salary 2800 - 3000
2 ) Mechanical Engineer (BE) 5 years Experiences Salary 2800 - ௩௦௦௦
3 ) Electrical Technician (BE) Salary 1300
4 ) Auto Electrician Salary 1200
5 ) Electrician Technician Salary 1200
6 ) A/C Technician Salary 1200. Mechanical Technician Salary 1200 . Dip/ITI for 3 years Exp.
இந்த நிறுவனத்தில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் சென்னையில் நேர்முறை தேர்வுகள் நடைபெறும்.
இது குறித்து தாங்கள் மேலும் தெரிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: யாசர் சென்னை 72005 00225

முத்துப்பேட்டையில் வருகிற 25 ஆம் தேதி புகாரி சரீப் துவக்கம்...


முத்துப்பேட்டை, ஜனவரி 20 ௦: கடந்த 21 ஆண்டுகளாக நமதூரில் சிறப்புடன் நடைபெற்று வரும் புகாரி ஷரீபு மஜ்லீஸின் 22 ம் ஆண்டு நிகழ்வு இன்ஷா அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1433 ரபியுல் அவ்வல் பிறை 1 (25 .01 .2012 ) புதன் கிழமை தொடங்கி பிறை 30 (23 .02 .2012) வியாழக்கிழமை நிறைவு பெறவிருக்கிறது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வும், வாக்கும் அடங்கிய ஹதீஸ் தொகுப்புகளின் விளக்கம் கேட்டுப் பயன் பெற வருகை தந்து கண்ணியத்துடன் மஜ்லிஸை சிறப்பித்து ஒத்துழைக்க வேணுமாய் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நேரம் காலை 7 .45 வரை ஹதீஸ் ஓதி 8 .30 மணி வரை அதன் விளக்கம் கூறப்பட்டு துஆவிற்குப் பிறகு நாற்சா வழங்குவதுடன் நிறைவு பெரும்.
source from www.muthupettaiexpress.blogspot.com
இப்படிக்கு
புகாரி ஷரீபு மஜ்லிஸ்

நமது நிருபர்

K .எர்சாத் அஹமது, TR . அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டையில் (TNTJ) நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்...


முத்துப்பேட்டை, ஜனவரி 20 : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) & திருவாரூர் வண்டாம்பானை லயன்ஸ் கண் மருத்துவமனை மற்றும் திருவாரூர் மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் IOL (லென்ஸ்) பொருத்தும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம், வருகிற 25 .01 .2012 அன்று காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை முத்துப்பேட்டை மஸ்ஜிதுந் நூர் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும், மேலும் இந்த முகாமில் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு பெற்றவர்கள் இலவசமாக திருவாரூர் வண்டாம்பாளை லயன்ஸ் கண் மருத்துவமனை அழைத்து செல்லப்படுவார்கள். இதில் உணவு தங்குமிடம் மருந்து மற்றும் IOL விழி லென்ஸ், போக்குவரத்து ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் தொடர்புக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 96982 56747 , 99942 03523
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

K .எர்சாத் அஹமது, TR .அப்துல் ரஹ்மான்

அதிரையில் தீ விபத்து : மீட்பு பணியில் பாப்புலர் ப்ரண்ட்.







அதிரை, ஜனவரி 18 : அதிராம்பட்டினம் CMP லைன் VKM ஸ்டோர் அருகே உள்ள ஓர் வீட்டு மாடியில் உள்ள கூரை திடீரென தீப்பிடித்து முழுவதும் பரவியது. இது பற்றி தகவலரிந்த பொது மக்களும் அதிரை நகர பாப்புலர் பிரன்ட் செயல் வீரர்களும் விரைந்து சென்று ஒரு மணி நேரத்திற்குமேல் போராடி தீயை அனைத்து, மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். பாப்புலர் பிரன்ட் செயல் வீரர்களின் பணியினை கண்ட அதிரை காவல் ஆய்வாளர் திரு. செங்கமலக்கண்ணன் அவர்கள் பாராட்டினார்கள். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவ்வூர் பொது மக்கள் அதிரையில் தீவிபத்து தொடர்வதும் நாங்கள் தீயை அணைத்த பிறகுதான் தீயணைப்பு துறையினர் வருகை தருகிறார்கள் என்றும், அதிக மக்கள் தொகை கொண்ட எங்க ஊருக்கு உடனடியாக "தீயணைப்பு நிலையம்" அமைக்க வேண்டும் என்றும் அப்போது அவர்கள் தெரிவித்தார்கள்.

நமது நிருபர்

ரிப்போர்ட்டர் K . எர்சாத் அஹமது

SDPI சார்பில் திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டம்










திருவாரூர், ஜனவரி 18 : SDPI கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திருவாரூர் ஹோட்டல் ராயல் பார்க்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்ட மாநில செயலாளர் ஜனாப். அப்துல் சத்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜனாப். A . அபூபக்கர் சித்திக் ஆகிய இருவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த சிகழ்ச்சியில் முல்லை பெரியார் பிரச்சனை சம்மந்தமாக மத்திய அரசு, தமிழக உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும், உச்ச நீதி மன்ற ஆணையை கேரளா அரசு பின்பற்ற வேண்டும் என்றும்,விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் திருவாரூர் மாவட்ட கமிட்டியிடம் தங்களால் இயன்ற உதவியை மாநில தலைமையிடம் செளுத்துப்படி மாநில செயலாளர் ஜனாப். அப்துல் சத்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜனாப். A . அபூபக்கர் சித்திக் ஆகியோர் கேட்டுக்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு SDPI திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுசா அவர்கள் தலைமை ஏற்றார். கட்சியின் பொது செயலாளர் ஜனாப். அப்துல் அஜீஸ் அவர்கள் வரவேற்ப்புரை ஏற்றார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் நகர நிர்காகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள், உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற SDPI கட்சியின் வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

K . எர்சாத் அஹமது, MJ .சாதிக்

மவுத்து அறிவிப்பு: " நெய்னா மூசா"


முத்துப்பேட்டை, ஜனவரி 18 : தெற்குத்தெரு மர்ஹும். ஹமீது அவர்களின் மகனும், மர்ஹும் முஹம்மது அலியார் அவர்களின் மருமகனும், முஹைதீன் பக்கீர் அவர்களின் மச்சானும், முஹம்மது காசிம், அப்துல் மஜீத் இவர்களின் சகலையும்,மர்ஹும் காதர்சா,சேக் முஜுபூர் ரஹ்மான் ஆகோயோரின் மாமனாரும், சர்புதீன், காதர் முஹைதீன் இவர்களின் பெரிய மாமனாரும், சம்சுதீன் தாஜ்மஹால் அலி அக்பர் ஆகியோரின் பெரிய தகப்பனாரும் அப்துல் லத்திபீப்,ஹபீபுல்லா, கமால் பாட்சா ஆகியோரின் தகப்பனாருமாகிய " நெய்னா மூசா" அவர்கள் இன்று காலை 7 மணியளவில் மவுத்தாஹிவிட்டார்கள்.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரி ஜனாஸா இன்று மாலை 4 .30 மணியளவில் அரபு சாகிப் பள்ளி கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்.
H . முஹம்மது காசிம்

நமது நிருபர்
K .M . காதர் கனி (பாடகர்)

கோவிலூரில் கன்னி பொங்கல் விழா ஊராட்சி மன்ற தலைவர் ரவி துவக்கி வைத்தார்




முத்துப்பேட்டை, ஜனவரி 17 : முத்துப்பேட்டை அடுத்த கோவிலூரில் இளைஞர் பெருமன்றம் சார்பில் கன்னி பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு. ரவி தலைமை வகித்தார். இளைஞர் பெருமன்ற தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் பால தண்டாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிர்வாகிகள் வீரமணி, செயலர் ரசூன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கான சமையல் போட்டி, மற்றும் கலைபோட்டிகள், சிறுவர்களுக்கான கபடி போட்டி, மற்றும் ஓட்ட பந்தய போட்டிகள், இளைஞர்களுக்கான வாலிபால், கிரிக்கெட் மற்றும் பலவிதமான போட்டிகள் நடைபெற்றன. இவற்றை ஊராட்சி மன்ற தலைவர் ரவி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள், மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, எடையூர் பாலா,

இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இனி கட்டுரைகள் எழுதமாட்டேன் - சுவாமி...


டெல்லி, ஜனவரி 16 : பத்திரிகை ஒன்றில், இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை எழுதியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு இந்த மாதம் 30-ம் தேதி வரை, டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான சுவாமியின் கட்டுரை, மத துவேஷத்தை தூண்டும் வகையில் இருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் டெல்லி போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். அதுதொடர்பாக தான் கைது செய்யப்படலாம் என்று கருதி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார் சுவாமி.எதிர்காலத்தில் இதுபோன்ற கட்டுரைகளை எழுத மாட்டேன் என சுப்ரமணியன் சுவாமி அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், அவருக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி மேதா உத்தரவிட்டார்.முன்ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு டெல்லி காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சுவாமியின் மனு மீதான விசாரணை நடந்தபோது, மதச்சார்பற்ற இந்த நாட்டில் பின்பற்றப்படும் நடைமுறைகளை மதிக்க வேண்டும் என்று நீதிபதி கருத்து வெளியிட்டார்.பிரிட்டனைப் போல, இந்தியா ஐரோப்பிய நாடு அல்ல. இங்கு பல்வேறு வகையான கலாசாரங்கள் இருக்கின்றன. அதற்காகப் பெருமைப்பட வேண்டும் என்றார் நீதிபதி.நீங்கள் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் மேலும் கட்டுரைகள் எழுத மாட்டேன் என்று நீங்கள் உத்தரவாதம் அளித்தால், உங்களுக்கு நிவாரணம் அளிக்கப்படும் என்றார் நீதிபதி.முன்னதாக, சுவாமியின் வழக்கறிஞர் கே.டி.எஸ். துளசி வாதிடும்போது, இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை முறைகேட்டை சுவாமி அம்பலப்படுத்தியதால்தான், அவரைத் துன்புறுத்தும் வகையில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில்தான் சுவாமி கட்டுரை எழுதினார். அதன்பிறகு எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால் அலைக்கற்றை ஒதுக்கீட்டை அம்பலப்படுத்தியபிறகு திடீரென சுவாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றும் வழக்கறிஞர் துளசி குறிப்பிட்டார்.
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

எடையூர் பாலா

திருமணச்செய்தி: " A . மன்சூர் அஹமது, M . லத்திபா"






முத்துப்பேட்டை, ஜனவரி 16 : ஹிஜ்ரி 1433 ஸஃபர் பிறை 20 , 15 .01 .2012 ஞாயிற்றுக்கிழமை மதியம் 11 .30 மணியளவில் முத்துப்பேட்டை ஜனாப் U .அப்துல் சலாம் அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் A .மன்சூர் அஹமது மணாளருக்கும், சென்னை ஆடிட்டர் மர்ஹும் ஹாஜி அவர்களின் பேத்தியும், ஜனாப் A .முஹம்மது மீரான் அவர்களின் புதல்வி தீன்குலச்செல்வி M .லத்திஃபா மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 5 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து முத்துப்பேட்டை அரபு சாஹிப் பள்ளிவாசல் இமாம். சேக் மீரான் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். ("பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்")
மேலும் மாப்பிளைக்கு வாழ்த்து தெரிவிக்க தொலைபேசி எண்: 95668 21026
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EKA .முனவ்வர் கான், ASNS .அப்துல் பாரி, அபு மர்வா, U .பத்ரு ஜமான். பேட்டை இமாம்.

முத்துப்பேட்டையில் மாணவர்களுக்காக நடைபெற்ற ஒரு நாள் இஸ்திமா...


முத்துப்பேட்டை, ஜனவரி 16 : முத்துப்பேட்டை புதுப் பள்ளிவாசலில் சுன்னத்துல் வல் ஜாமாத் சார்பில் நேற்று கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான ஒழுக்க பயிற்சி நடைபெற்றது.இதில் ஜமால் முஹம்மது கல்லூரி (திருச்சி), புதுக் கல்லூரி (சென்னை), காதர் முஹைதீன் கல்லூரி (அதிரை), தானிஸ் அஹமது கல்லூரி (சென்னை), கிரசன்ட் கல்லூரி (வண்டலூர்) ஆகிய கல்லூரிகலிளிருது உள்ள மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சுமார் 250 ௦ - க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இதில் மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டு அவரவர்களின் அறிவுரிகளை வெளிபடுத்தினார்கள். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அடிராம்பட்டினத்தை சேர்ந்த மவுலான செக்கரியா அவர்கள், மாணவர்களாகிய நீங்கள் ஒழுக்கத்தை பேணவேண்டும் என்றும் ஒழுக்காம்தான் மாணவர்களுக்கு முக்கிய ஆய்தம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் தங்களுடைய தாய், தந்தையர்களுக்கு நல்ல முறையில் பணிவிடை செய்யவேண்டும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். மேலும் இதில் கலந்து கொண்ட மாணவர்களிடம் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த மாணவர்கள் இது போன்ற நிகழ்சிகளை ஒவ்வொரு ஊர்களிலும் நடத்த வேண்டும் என்றும் இதன் மூலம் மாணவர்களாகிய நாங்கள் நல்லொழுக்கத்தை கற்றுக்கொள்வதற்கு இது போன்ற நிகழ்சிகள் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்றும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
நமது நிருபர்

TR .அப்துல் ரஹ்மான், S .அப்துல் ரஹ்மான்.

மவுத்து அறிவிப்பு: "PM .ஹனிபா லெப்பை"


முத்துப்பேட்டை, ஜனவரி 16 : தர்ஹா மர்ஹும் குலாம் லெப்பை அவர்களின் மகனும், ஷாகுல் ஹமீது அவர்களின் தகப்பனாரும், தெற்குத் தெரு SA .அபூபக்கர் அவர்களின் மச்சானும்,மர்ஹும் ஷேக் அபூபக்கர், மர்ஹும் மண்ணை K .பாக்கர் அவர்களின் சகலையும், முத்துப்பேட்டை பாரி மளிகை முஹம்மது தாகிர் அவர்களின் மாமாவும், அதிரை பசீர் அவர்களின் பாட்டனாருமாகிய, தர்ஹா "PM .ஹனிபா லெப்பை" அவர்கள் இன்று 12 மணியளவில் முத்துப்பேட்டை தெற்குத்தெரு அவர்களின் இல்லத்தில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்). ஜனாஸா அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்.

SA . அபூபக்கர்

நமது நிருபர்

KM . கார்கனி

சவூதியில் உள்ள JAL INTERNATIONAL என்ற நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை..


சென்னை,ஜனவரி 14 : சவுதி அரேபியாவில் உள்ள பிரபல JAL international நிறுவனத்திற்கு உடனடியாக கீழ்க்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. எனவே விருப்பம் உள்ளவர்கள் வருகிற 21 .01 .2012 மற்றும் 22.01 .2012 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள TAJ club House - ல் நேரடி தேர்வு நடைபெற உள்ளது. எனவே விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
1.Design Engineer.
2) Testing and Commissioning Engineer. (Transformer, Relays etc...)
3) Planning Engineer and Schedule Engineer.
4) Project Coordinator.
5) Safety Officer / Engineer.

மேலும் தொடர்புக்கு
jamal_deen@ymail.கம

நமது நிருபர்

கலீல் அஹமது பாக்கவி

அறியாத சில விசயங்களை அறிந்து கொள்வோம் வாங்க...


உலகம், ஜனவரி 12 : இடிதாங்கி எவ்விதத்தில் வேலை செய்கிறது? ஆகாயத்தில் உள்ள மேகங்களின் அடிப்பரப்பில் நேர்மின் (+) தோன்றுவதாக உதாரணத்துக்கு வைத்துக் கொள்வோம். அப்போது தரையில் எதர்மின் (-) தோன்றும். இந்த மின்னானது கூர்மையாக உள்ள பகுதிகளில் திரண்டு நிற்கும் தன்மையுடையது. கூர்மையான பகுதிகளில் காற்று துகள்கள் படும்போது அவற்றிலிருக்கிற மின்கள் கூர் முனை விளைவு என்ற முறையில் அடித்து செல்லப்பட்டு விடும். இதனால் தரையிலுள்ள் மின்னின் வீ¡¢யம் குறைந்து விடும். அப்படி மேலே போகிற மின், மேகத்திலுள்ள நேர்மின்னின் வீ¡¢யத்தையும் குறைத்துவிடும். இதனால் தான் இடிதாங்கிகளின் மேல்முனைகள் கூர்மையாக அமைக்கப்படுகின்றன. அதையும் மீறிய அளவில் மின்கள் தோன்றி இடி விழுகிற நிலை ஏற்பட்டால், இடியிலுள்ள மின்சாரம் சுலபமாகக் கடந்து செல்லக் கூடிய உலோகப் பொருள்களைத் தேடிப்பிடித்து இறங்கும். அதற்காக இடிதாங்கியில் ஒரு செப்புக் கம்பியை இணைத்துத் தரையில் புதைத்து விட்டால் இடி மின்சாரம் கட்டடத்துக்கு வெளிப்புறமாக உள்ள அந்தக் கம்பியின் வழியாகப் பாய்ந்து தரையிலிறங்கிவிடும். கட்டடத்துக்குச் சேதம் ஏற்படாது.

source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

J .ஷேக் பரீத்(துபாய்)

மவுத்து அறிவிப்பு: "அஹமது அம்மாள்"


முத்துப்பேட்டை,ஜனவரி 12 : தெற்குத் தெரு மர்ஹும் நெய்னார் முஹம்மது அவர்களின் மனைவியும், நாட்டாமை உதுமான் அலியார் அவர்களின் மகளும், மர்ஹும் முஹம்மது அலியார், முஹம்மது யூசுப், மவுலா அபூபக்கர் ஆகியோரின் அண்ணன் மனைவியும், முஹம்மது சரீப், தாதா பிச்சை ஆகியோரின் சகோதரியும், ஜெய்னுல் ஆப்தின், தஸ்தகீர், ஆரிப், பகுருதீன் ஆகியோரின் மாமியாருமாகிய "அஹம்மது அம்மாள்" அவர்கள் இரவு 1 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணியளவில் ஆசாத் நகர் கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்

K .தஸ்தகீர், ஜெய்னுல் ஆப்தீன்.

நமது நிருபர்

KM .கார்கனி

பசுபதி பாண்டியன் படுகொலையும், தென் மாவட்டங்களில் பதட்டமும்.


திண்டுக்கல், ஜனவரி 11 : தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சி.பசுபதி பாண்டியன்(50), திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கடந்த 7 ஆண்டுகளாக திண்டுக்கல் புறநகர்ப் பகுதியான நந்தவனப்பட்டி இ.பி. காலனியில் வசித்து வந்தார் பசுபதி பாண்டியன். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் முன்புறம் அமர்ந்திருந்த இவரை அடையாளம் தெரியாத கும்பல் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் பசுபதிபாண்டியன். இவர் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் தலைவராக இருந்து வந்தார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த வெங்கடேஷ் பண்ணையார் கோஷ்டிக்கும் இடையே நீண்ட நாள்களாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் அவ்வப்போது மோதல் ஏற்படுவதும், ஒரு கோஷ்டியைச் சேர்ந்தவரை மற்றொரு கோஷ்டியினர் வெட்டிக் கொலை செய்வதும் தொடர்கதையாக இருந்து வந்தது. பின்னர், வெங்கடேஷ் பண்ணையார் போலீஸாரால் சுடப்பட்டு இறந்தார். எனினும், அவரது தம்பி சுபாஷ் பண்ணையாருக்கும், பசுபதி பாண்டியனுக்கும் விரோதம் தொடர்ந்து இருந்து வந்தது.
இந்நிலையில் பசுபதிபாண்டியனும், அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியனும் கடந்த 2006-ம் ஆண்டு தூத்துக்குடிப் பகுதியில் ஒரு பாலத்தின் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது, பசுபதி பாண்டியனின் எதிரிகள் வீசிய வெடிகுண்டால் பலத்த காயமடைந்த ஜெசிந்தா பாண்டியன் இறந்தார். பசுபதி பாண்டியன் உயிர் தப்பினார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளராக இருந்தார் பசுபதிபாண்டியன். பின்னர் அக்கட்சியை விட்டு பேராசிரியர் தீரன் வெளியேறி தமிழ் பா.ம.க.வை தொடங்கியபோது அக்கட்சியின் பொதுச்செயலராக
இருந்தார் பசுபதிபாண்டியன். அதன் பின் கடந்த 2005-ல் பா.ம.க.வில் இருந்து விலகிய முருகவேல் ராஜனுடன் சேர்ந்து, ‘தமிழர் அரசு’ என்ற தனிக் கட்சியை தொடங்கினார். அக்கட்சிக்கு பசுபதிபாண்டியன் தலைவராக இருந்து வந்தார்.
எனினும் அக்கட்சி தீவிரமாகச் செயல்படவில்லை.
இந்நிலையில், கடந்த 2011-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டார் பசுபதிபாண்டியன். அந்த தேர்தலில் குறைவான வாக்குகளே பெற்ற அவர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டது. சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பரமக்குடியில் பஸ் மீது கல் வீசப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில இடங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நமது நிருபர்
ரிப்போர்ட்டர் உமர் முக்தார்

லவ் ஜிஹாத்தும்: அவதூறு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட ஷாஹின்ஷாவும்...


கேரளா, ஜனவரி 09 : சத்தியம் ஒரு நாள் வெளிவந்துதான் தீரும். இனி இவ்வாறான அனுபம் யாருக்கும் வரக்கூடாது’ -லவ் ஜிஹாத் என்ற ஊடகங்களின் அவதூறு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட ஷாஹின்ஷாவின் வார்த்தைகள்தாம் இவை.

லவ் ஜிஹாத் என்ற வார்த்தை பிரயோகத்தின் பிரச்சாரத்தின் பின்னணியில் தீவிர ஹிந்துத்துவா அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் இணையதளம் "ஹிந்து ஜாக்ருதி டாட் காம்" செயல்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு கேரளா போலீசார்
கண்டுபிடித்தனர். இச்செய்தி வெளியானதை தொடர்ந்து வெளிநாட்டில் பணியாற்றிவரும் ஷாஹின்ஷா தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“பத்தணம்திட்டாவில் ப்ரக்கானம் செண்ட் ஜாண்ஸ் கல்லூரியில் நான் எம்.பி.ஏ படித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் பயிலும் இதர சமூகங்களை சார்ந்த மாணவிகளை திருமணம் புரிந்ததால் என்னையும், எனது நண்பர் சிராஜுத்தீன் என்பவரையும் குற்றவாளிகளாக சித்தரித்தனர். 2009 ஆகஸ்ட் மாதம் இச்சம்பவம் நடந்தது.

தொடர்ந்து நடந்த லவ் ஜிஹாத் என்ற வார்த்தை பிரயோகமும், பொய் பிரச்சாரங்களும் எங்கள் இருவரையும் தளரச் செய்தது. நீதிமன்ற தலையீட்டினால் இப்பிரச்சனை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து நான் வெளிநாட்டில் வேலை தேடி வந்தேன். இச்சம்பவத்தின் துவக்கத்தின் போதே நான் எல்லா உண்மைகளையும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தேன். அன்று அனைத்து ஊடகங்களும் அவற்றையெல்லாம் வளைத்து திரித்து செய்தி வெளியிட்டன. உண்மை தெளிவான பிறகும் அவற்றை குறித்து விவாதிக்க ஊடகங்கள் தயாராகவில்லை என்பதுதான் கவலையான விஷயமாகும்.

மனோராமா, கேரள கவ்முதி, ஜன்ம பூமி ஆகிய பத்திரிகைகளும், இந்தியா விஷன், கைரளி ஆகிய தொலைக்காட்சி சேனல்களும் எங்களை மோசமாக சித்தரித்தன. எல்லா இடங்களிலும் இரண்டு பெண்கள் என்ற குற்றச்சாட்டே எழுந்தது. ஆனால் இந்தியா விஷன் அதனை நான்கு பெண்கள் என செய்தி வெளியிட்டது. அத்துடன் நான் எம்.பி.ஏ பயின்ற ப்ரக்கானம் செண்ட் ஜாண்ஸ் கல்லூரி நிர்வாகம் என் மீதான வைராக்கியத்தை இச்சம்பவம் மூலம் பழிவாங்க தீர்மானித்தனர்.

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான உரிமைகளை கோரி நடந்த போராட்டத்திற்கு நான் தலைமை தாங்கியிருந்தேன். கல்லூரி மீது தவறு இருப்பதாக உயர்நீதிமன்றமும், பல்கலைக்கழகமும் கண்டுபிடித்தன. கல்லூரியின் மோசடிகளை வெளியே கொண்டுவந்ததற்காக கல்லூரி நிர்வாகம் என்னை பழிவாங்க லவ் ஜிஹாதை ஆயுதமாக்கியது. லவ் ஜிஹாத் குறித்து புலனாய்வு செய்த போலீஸ் அதிகாரியான திருவனந்தபுரம் கன்டோன்மண்ட் துணை கமிஷனர் கோபகுமார் எனது வீட்டிற்கு வந்து என்னை தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்த்துவிடுவேன் என மிரட்டினார். ஆனால் இவர் என்னை ஒரு முறை கூட விசாரிக்கவில்லை. நான் கூறாத காரியங்களை எல்லாம் இவர் தனது கேஸ் டயரியில் எழுதினார். இதற்கு எதிராக புகார் அளித்தபோதிலும் முந்தைய இடதுசாரி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நானும், எனது குடும்பத்தினரும் பல இழப்புகளை சந்திக்க நேர்ந்தது. எனது படிப்பு முடங்கியது. எனது நண்பர் சிராஜுத்தீனுக்கு கேரள போக்குவரத்துக் கழகத்தில் வேலை பறிபோனது. இவ்வழக்கை தொடர்ந்து மனம் உடைந்த அவரது தந்தை இறந்துபோனார். பல தினங்களை நீதிமன்றங்களில் செலவழித்தோம்.

“நீங்கள் தீவிரவாதிகள் என்பதால்தானே தாடி வளர்த்துள்ளீர்கள்” என பல வழக்கறிஞர்களும் எங்களிடம் கேள்வி எழுப்பினர்.

ஒரு சமூகத்தை அவமதிப்பதற்காக என்னைப் போன்ற ஒரு சாதாரண நபரை பலிகடாவாக மாற்றினார்கள் என்பது இப்பொழுது நிரூபணமாகியுள்ளது. இனியாவது பொது சமூகமும், ஊடகங்களும் இத்தகைய பிரச்சாரங்களில் உண்மையை அடையாளம் காண முயலவேண்டும். இவாறு ஷாகின்ஷா கூறினார்

முத்துப்பேட்டை அடுத்த கரையங்காடு பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கிய விருது.


முத்துப்பேட்டை, ஜனவரி 09: முத்துப்பேட்டையை அடுத்து விளாங்காடு ஊராட்சியை சேர்ந்த கரையங்காடு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளிக்கு திருவாரூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்துள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திரு. முநியனாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறந்த பள்ளிக்கான விருதை விளாங்காடு ஊராட்சி மன்ற தலைவரும்,பள்ளியின் கல்விக் குழு தலைவருமான கு.ஜெயராமன், பள்ளியின் தலைமையாசிரியர் சோ.பழனி ஆகியோரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வைத்தியநாதன், உதவி தொடக்க கல்வி அலுவலர் இன்பவேணி, கல்விக்குழு உறுப்பினர் சிவசங்கரன், பள்ளி ஆசிரியர் அறிஒழி, ஆசிரியர் கலாலெட்சுமி, மற்றும் மாவட்ட வருவாய் துறை அலுவலர், கல்வி அலுவலர்கள் கல்விக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா, J .ஷேக் பரீத்

முத்துப்பேட்டையில் விரைவில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்


முத்துப்பேட்டை,ஜனவரி 09 : தமிழக முதலமைச்சர் அவர்களின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஆலங்காடு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திரு. ஆர்.கே.பி.நடராஜன் அவர்கள் பசுமை வீட்டிற்கான பூமிபூஜை பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் S .சிவக்குமார். வட்டார வளர்ச்சி அலுவலர், (கி.ஊ) ஆலங்காடு ஒன்றியக்குழு உறுப்பினர் டி.ஜெகன், M A .ஊராட்சி தலைவர் குணசேகரன்,மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய பொறியாளர், உதவி பொறியாளர், ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்,அபு மர்வா

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் (MIWA) சார்பில் இலவச மருத்துவ முகாம்...







முத்துப்பேட்டை, ஜனவரி 08 : இன்று 08.01.2012 காலை 7.30 ௦மணி முதல் மாலை 3 மணிவரை 25 ஆண்டு வெள்ளி விழா கண்டு பொன்விழாவை காண போகும் 29 ஆம் வருட முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் Reg: No.32/2009 மற்றும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முன்னணி இணையதளமான முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் இலவச மருத்துவ முகாம் முஹைதீன் பள்ளிவாசல் மதரஸாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை தலைமை பிரதிநிதி ஜனாப்.க.மு.. நெயினார் முஹம்மது அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் 250 க்கும் மேற்பட்ட பெரியோர்களும், தாய்மார்களும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். இந்த மருத்துவ முகாமில் கீழ்கண்ட பரிசோதனைகள் நடைபெற்றது.
1) சர்க்கரை நோய் (Sugar) கண்டறிதல்.
2 ) இரத்த அழுத்தம் (Preasure )கண்டறிதல்.
3 ) இரத்த வகை (Blood Group )கண்டறிதல்.
4 ) கொழுப்பு (Coloushtral)கண்டறிதல்.
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் மற்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய இந்த நிகழ்சியில் கலந்து கொண்ட அனைத்து மக்களும் இது போன்ற நல்ல காரியங்களை தொடர்ந்து தொய்வின்றி செயலாற்ற இறைவனிடம் துவா செய்வதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தார்கள்.
மேற்கொண்ட பரிசோதனைகளை நாச்சிக்குளம் SAR . இரத்தப் பரிசோதனை ஆய்வக குழுவினரால் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்த முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பொறுப்பாளர்கள்:
P .M . ஜாகிர் உசேன், M . ஷாகுல் ஹமீது, ANA . ஹாஜா நஜுபுதீன். மற்றும் முத்துப்பேட்டை பிரதிநிதிகள்

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA . முனவ்வர் கான், அபு மர்வா

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)