முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மெளவத் அறிவிப்பு: "A. அப்துல் ஜப்பார்"


முத்துப்பேட்டை, நவம்பர் 09: முத்துப்பேட்டை கல்கேனித்தெரு மர்ஹும் M.முகமது ஹசனாலை அவர்களின் மகனும், மர்ஹும் M. மௌலா அபூபக்கர், மர்ஹும் M. நைனா முகமது, M.அப்துல் கரீம் ஆகியோரின் சகோதரரும், J. அஸ்கர் அலி, முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச்சங்கத்தின் துணைத் தலைவர் MRS. அஹமது ராவுத்தர், ஜனாப் சேக் தாவுத் (மதுக்கூர்) இவர்களின் மாமனாரும் A. முகமது ஹசன் அவர்களின் தகப்பனாருமாகிய “A. அப்துல் ஜப்பார்” அவர்கள் நேற்று காலை 8 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) 

அன்னாரின் ஜனாசா நேற்று மாலை 4.30 மணியளவில் குத்பா பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


அறிவிப்பவர்:

A. முகமது ஹசன் +971 55 88 44 392

மேலும் தொடர்புக்கு:

MRS.அஹமது ராவுத்தர். +971 55 22 37 541
MRS. சேக்காதி.                    +971 50 45 08 132

நமது நிருபர்:

KM காதர் கனி (பாடகர்)


எனது திருமணத்திற்கு அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள்: "தவ்சிஃப் அஹமது" அழைப்பு:



முத்துப்பேட்டை,நவம்பர் 09 : முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 முஹர்ரம் பிறை 27,  அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 01-12-2013 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால்  நிச்சயித்த வண்ணம் திருத்துறைப்பூண்டி விஜிலா திருமண மஹாலில்  எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன். 

இப்படிக்கு: 

மேலும் தொடர்புக்கு:

பவுசுல் ரஹ்மான்: 
கிட்டங்கித் தெரு: 
தொலைபேசி எண்: 0091 7845 412 661

நமது நிருபர் 

AKLT. அப்துல் ரஹ்மான்.

கொத்பா பள்ளிவாசல் அருகே மலை போல் குவியும் குப்பைகள் -பேரூராட்சியின் மெத்தனப்போக்கை கண்டித்து டிராக்டரை முற்றுகையிட்ட 8-வது வார்டு மக்கள் :

முத்துப்பேட்டை நவ – 06
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு காய்ச்சலால் பலரும் பாதிக்கபட்டுள்ளனர் . இந்த நிலையில் நகர் முழுவதும் குப்பைகள் பேரூராட்சி அப்புறப்படுத்தாததால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி அதன் மூலம் டெங்கு கொசுகள் உற்பத்தி ஆவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியில் பல நாட்களாக குப்பைகள் அல்லபடாததை கண்டித்தும், கொத்துபாபள்ளி வாசல் எதிர்புறம் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டுவதை கண்டித்தும் நேற்று கொத்துபாபள்ளி வாசல் எதிர்புறம் குப்பை சேகரிக்க வந்த பேரூராட்சி டிராக்டரை அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ அயுப்கான், ஹமீது கட்டி , சஃபான் மற்றும் பொதுமக்கள் வழிமறைத்து முற்றுகையிட்டு சிறைபிடித்தனர் . இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு பொதுமக்கள் கூடினார்கள் . சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை போலீசார் மற்றும் பேரூராட்சி சுகாதார அலுவலர் வீரமணி ஆகியோர் சிறை பிடித்த மக்களிடம் இனிமேல் பள்ளிவாசல் முன்பு குப்பைகள் கொட்டமாட்டோம் . வார்டு பகுதியில் நாளை முதல் உடனக்குடன் குப்பைகள் அகற்றப்படும் என்று உறுதி அளித்ததால் சிறைபிடித்த டிராக்கடரை பொதுமக்கள் விடுவித்தனர் .





காந்தியை ஏன் கொலை செய்யக் கூடாது? இந்த தேசத்தைக் கெடுத்ததே அவர்தானே.. -இந்துத்துவப் பெண்ணின் திமிர் பேச்சு!

சென்னை, நவம்பர் 04: சன் டிவி வளாகத்தில் பேராசியர் மார்க்ஸ் அவர்களுக்கும் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கும் மத்தியில் நடந்த உரையாடலின் சுருக்கும்:

முஸ்லிம்கள் மீது நடைபெற்ற வன்முறை ஒன்று குறித்து விவாதிக்க 'சன் டிவி' வீரபாண்டியன் கூப்பிட்டிருந்தார்.

முன்னதாக கான்டீனில் அமர்ந்து நானும் அவரும் தேநீர் குடித்துக் கொண்டிருந்தோம், சற்று நேரத்தில் என்னுடன் விவாதிக்க இருந்த இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த ஒரு பெண்மணி அங்கு வந்தார்.

வந்தவுடன் எங்கள் இருவரிடமும் ஆளுக்கு ஒரு 'டி.வி.டி'யைத் தந்தார். படு பந்தாவாகப் பேசிக் கொண்டிருந்தார்.

தான், ஒரு முறை காரில் திருச்சி சென்றபோது உளுந்தூர்பேட்டை அருகில் காரில் ஏதோ ரிப்பேர் ஏற்பட்டு, இரண்டு மணி நேரம் அங்கு நிற்க நேரிட்டதாம்.

அதற்குள் ஏகப்பட்ட லாரிகளில் மாடுகள் கேரளாவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்து மனம் நொந்தாராம்.

அது தொடர்பாக எடுக்கப்பட்ட ஆவணப் படம் இது, என்றார்.

அப்படியா, வீட்டிற்குப் போய் பார்க்கிறேன் என்றேன்.

cow slaughter தொடர்பான அந்தப் படம் எடுக்கும்போது பல மாநிலங்களிலும் தகவல் திரட்டுவதில் ஏற்பட்ட கஷ்டத்தை விளக்கிய அவர், குஜராத் மாநில நிர்வாகத்தை வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார்.

குஜராத் மாநில 'அனிமல் ஹஸ்பன்டரி' இயக்குனரிடம், அங்குள்ள நிலை குறித்து கேட்ட மாத்திரத்தில் விவரங்களை அடுத்த கணமே அவர் கூறி விட்டாராம்.

அந்த அம்மையாரின் அலட்டல்களால் சற்றே எரிச்சலுற்றிருந்த நான், இந்த இடத்தில் வாய்விட்டுச் சிரித்தேன்.

"why, why, why are you laughing?" என்றார்.

"ஒண்னும் இல்ல. அவர் என்ன பதில் சொல்லியிருப்பார்னு நினைச்சுப் பார்த்தேன், சிரிப்பு வந்துவிட்டது" என்றேன்.

"what, what, what do you mean?" என்றார்.

"we don't slaughter cows. we slaughter only Muslims"

அப்படீன்னு அவர் சொன்னாரா? என்றேன்

கொதித்துப் போனார் அவர். சட்டென்று நாற்காலியிருந்து எழுந்தார். "இப்பிடியெல்லாம் பேசக் கூடாது. இங்கே எவ்வளவு வன்முறைகள் நடந்திருக்கு? எவ்வளவு இந்துக்கள் கொல்லப்பட்டிருக்காங்க, அதை எல்லாம் பேசுவீங்களா?' எனச் சீறினார்.

விவாதம் முற்றியது...

காந்தி கொலை பற்றிப் பேச்சு வந்தது. "காந்தியையே கொல்லவில்லையா நீங்கள்?" என்றேன்.

"Yes, Gandhi was killed. Why not one kill him.. இந்தை தேசத்தைக் கெடுத்ததே அவர்தானே.."என்றார்.

வீரபாண்டியனுக்குத் தர்மசங்கடமாகி விட்டது. என்ன இருந்தாலும் அவர் host அல்லவா. ஒரு மாதிரியாகச் சமாதானப்படுத்தி ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார்.

அன்று நிகழ்ச்சி விவாதமும் படு காரசாரமாக இருந்தது.

நிகழ்ச்சி முடிந்து கீழே செல்ல லிஃப்டை நோக்கிச் சென்றோம். ஊழியர் ஒருவர் எங்களை அழைத்துச் சென்றார்.

லிஃப்ட் அருகில் வந்ததும் அவர், "நான் இந்த ஆளோட போக மாட்டேன்.." எனச் சத்தமாகச் சொல்லிவிட்டு எதிரே இருந்த லிஃப்டை நோக்கி தட தடவென ஓடினார்...

அழைத்து வந்த ஊழியர் ஒரு கணம் திகைத்துப் பின் புன்னகைத்தார்.

இஸ்லாமிய பெண்களை காதலித்து விபசாரத்தில் ஈடுபடுத்தவேண்டும் -இலங்கை பொதுபல சேனா அமைப்பு திட்டம் !!!

உலகம், நவம்பர் 04: முஸ்லிம் பெண்மணிகளையும் காதலித்தல் விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய மூன்று விடயங்களுக்காக இலங்கையின் தீவிரவாத பெளத்த இயக்கமான போதுபல சேனை என்ற இயக்கம் வாலிப உறுப்பினர்களை ஊக்குவித்து அன்பளிப்புகளும் வழங்கி வருகின்றமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு பொருட்கள் விற்பனை செய்ய அல்லது அறிமுகம் செய்ய வரும் விற்பனைப்பிரதிநிதிகள் ஆக இவர்கள் வீடுகளுக்கு வந்து கதவைத்தட்டுவார்.முஸ்லிம் பிரதேசங்களிலே இவர்களின் நடாட்டம் அதிகம்.வோசிங்க்பவுடர், கேக் பவுடர், சவர்காரம் உடுதுணிகள் என பெருட்களை வீடு வீடாக வந்து பொருட்களை அறிமுகம் செய்யும் நபர்கள் குறித்து பொதுமக்கள் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆண்கள் அதிகம் இல்லாத மதிய நேரங்களிலேயே இவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான நடை உடை பாவனையுடன் வீடுகளுக்குள் நுழைகின்றனர். தம் பொருட்களை விற்பனை செய்வது இவர்களின் நோக்கமல்ல என்பதை நாம் புரிந்தது கொள்ள வேண்டும், வீட்டில் ஆண்கள் இல்லாத சந்த்தற்பங்களில் அறிமுகம் இல்லாத யார் வந்தாலும் கதவை திறக்காமல் இருப்பதே நல்லது. முக்கியமாக வெள்ளிக்கிழமை ஜுமாஹ் தினங்களில் வீட்டில் ஆண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இது இவர்களுக்கு மிகவும் வசதியாகி விடும்.

இவ்விசயத்தை ( இந்திய சகோதரர்களும் ) நம் சமூகத்திற்கு எத்தி வையுங்கள். அதிகம் செயார் பண்ணுங்கள்.
STL

ஆரம்பம் திரைப்படமும் – அதிரவைத்த சில உண்மைகளும் !



சென்னை, நவம்பர் 04: “இந்தப் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே … யாரையும் குறிப்பிடுபவை அல்ல”
என்ற எச்சரிக்கையோடு தொடங்கும் படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில், யாரையோ குறிப்பிட்டபடியே வெளிவருகின்றன. நடிகர் அஜித் குமார் நடித்து, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் “ஆரம்பம்” அப்படியொரு படம்தான்.
தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னமே வெளியாகிவிட்டதால் நிச்சயம் ரூ.100 கோடி வசூலைத் தாண்டிவிடும் என ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கிறார்கள். இந்தப் படத்தின் திரை மொழி, இசை, காட்சிகள் என நுணுக்கமான ஆய்வுகளை பல விமர்சகர்களும் செய்யக் கூடும். அவற்றையெல்லாம் காத்திருந்து பார்ப்போம். இப்போது, கதையில் நகலெடுக்கப்பட்டுள்ள உண்மைகளைப் பேசுவோம்.
மர்மான முறையில் மரணித்த காவல் அதிகாரி:
கதை: “காவல்துறை அதிகாரி அசோக் (அஜித்) தனது நண்பருடன் ஒரு தீவிரவாதத் தாக்குதலை எதிர்த்து களமிறங்குகின்றனர். அந்த தாக்குதலில் அசோக்கின் உயிர் நண்பர் மரணமடைய – அதற்கு காரணம் என்ன என்ற ஆய்வைத் தொடங்குகிறார் அசோக்”
Hemant_Karkareஉண்மை: நேர்மையான காவல்துறை அதிகாரி ‘ஹேமந்த் கார்கரே’ – பயங்கரவாத குண்டுவெடிப்புகள் நடக்கும்போது, உரிய விசாரணையைச் செய்யாமல் தவறான நபர்களை  காவல்துறை பலமுறை கைது செய்திருக்கிறது. அதுவும் அரசியல்வாதிகள் கொடுக்கும் அழுத்தம் தாளாமல், யாரோ ஒரு முஸ்லிமைக் கைது செய்துவிடுவதும், அப்பாவிகள் நீதிமன்றக் காவலில் அவதிப்பட, உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தெரியாமல் போய்விடுவதும் உண்டு. (பார்க்க)  அப்படி ஒரு வழக்காக முடிந்திருக்க வேண்டிய ‘மாலேவ்கான் குண்டுவெடிப்பு‘ வழக்கை, காவல்துறை அதிகாரி ஹேமந்த் கார்கரே விசாரித்தார். குண்டுவெடிப்புக்கு பின்னால் இருந்த ‘இந்து’ மத அடிப்படை தீவிரவாதிகளின் சதியை அவர் வெளிக் கொண்டுவந்தார்.
எந்த மத அடிப்படைவாதமாக இருந்தாலும் அது அப்பாவிகளின் கொலையிலேயே முடியும். இதனை தனது விசாரணையின் மூலம் நிரூபித்த ஹேமந்த் கார்கரே – மும்பையில் நடந்த ’26/11′ பயங்கரவாத தாக்குதலில் நேரடியாக களத்தில் உயிர்களைக் காப்பாற்றினார். பாதுகாப்பற்ற கவசம் வழங்கப்பட்டதாலேயே மரணம் நடந்ததா? என்று சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில், இதுகுறித்த விசாரணை நடத்த முடியாத வகையில் ஆவணங்கள் தொலைந்தும் போயின.
கதை: “மர்ம மரணம் அடைந்த காவல்துறை அதிகாரியின் நண்பரை தேச துரோகியாக சித்தரிக்கிறது அரசு. அத்தோடு அவரின் மனைவிக்கு ரூ.2 கோடி கொடுப்பதாக பேரம் நடக்கிறது. ‘நான் பேரம் பேசினால் எதுவும் படியாம போகாது என்பது உங்களுக்கே தெரியும். ஆனா என்னாலயே முடியல’ என்றபடி தரகர் ரம்யா வெளியேறுகிறார்”
உண்மை: ஹேமந்த் கர்கரே மலேகாவ்ன் வெடிகுண்டு தாக்குதலை விசாரித்து சாத்வி பிரஞ்யா, ராணுவ லெப்டினன்ட் கர்னல், சில சுவாமிகள் கைது செய்யப்பட்டதும். பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் அவரை தேச துரோகியாக சித்தரித்தன.
ஆனால், தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டுக்கு அவர் பலியானதும் மும்பைக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் தாக்குதலில் பலியான மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார். ஆனால், நாட்டுக்காக கடமை செய்து தவறு செய்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த தனது கணவரை வில்லனாக சித்தரித்த இவர்களிடமிருந்து எந்த நிதியுதவியையும் பெற மாட்டேன் என ஹேமந்த் கர்கரேவின் மனைவி திட்டவட்டமாக அறிவித்தார்.
கதை: “ரம்யா – அரசியல்வாதிகளோடும், தொலைக்காட்சி நிறுவனங்களோடும் இணைந்து செயல்படுகிறார். பலவிதமான தரகு வேலைகளில் களத்தில் நிற்கிறார்”
உண்மை: காங்கிரஸ் ஆட்சியில் வெளிவந்த, வரலாறு காணாத – 2 ஜி முறைகேடு வழக்கில், டாட்டா Nira-Radia-CBI-Raid-e-khabarமற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் இணைப்பு பாலமாக செயல்பட்டவர்  நீரா ராடியா. வைஷ்ணவி கம்யூனிகேசன்ஸ் என்ற நிற்வனத்தை வைத்துக் கொண்டு அவர் நடத்திய உரையாடல்கள் வெளிவந்தன. (முழு உரைகளும்) இதுபோன்ற தரகர்கள், நமது நாட்டுக்கு அமைச்சராக யார் வரவேண்டும் என்பதை முடிவு செய்யும் லாபியிலும் ஈடுபடுகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. இதற்கு ஆதாரமாக, அவர்களின் தொலைபேசி உரையாடல்களும் வெளியாகின.
Barkha_Dutt_World_Economic_Forum_Nov_2010இந்த உரையாடல்களின் மூலம் புகழ்பெற்ற NDTV செய்தி சேனலின் செய்தியாளர் பர்கா தத், அதிகார பேரங்களில் நேரடியாக தொடர்பு கொண்டிருந்ததும் செய்தியானது. பெரும் நிறுவனங்களின் கோடிக்கணக்கான லாபங்களுக்காக அவர்கள் அரசின் சொத்துக்களை தரகு பேசுகின்றனர். இதே நீராராடியாதான் டாடா நிறுவனத்துக்கு அடிமாட்டு விலையில் குஜராத் அரசின் நிலத்தையும், நிதி உதவியையும் பெற்றுக் கொடுத்தார் என்பதும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. (http://deshgujarat.com/2010/11/25/was-gujarati-bahu-niira-radia-a-nano-link-between-modi-and-tata/)
கதை: “பிணையில் உள்ள தீவிரவாதியை விடுவித்துக் கொடுக்க ஒரு மாநிலத்தின் உள்துறை அமைச்சரே பேரம் பேசுகிறார். அதற்கான தொகை துபயில் கை மாறுகிறது”
உண்மை: இன்று நடக்கின்ற தீவிரவாத தாக்குதல்களுக்கெல்லாம் உளவுத்துறை சரியில்லை, எங்கள் ஆட்சியில் அப்படியில்லை என்று சொல்லும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில், கந்தகார் விமானக் கடத்தல் நடந்தது. (நாடாளுமன்ற வளாகத்திலேயே துப்பாக்கிச் சூடும் நடந்தது மற்றொரு அவமானகரமான நிகழ்வு)
இதுபோன்ற தாக்குதல்களை உளவுபார்த்து கண்டுபிடிப்பதை விட – இப்படியொரு சம்பவத்தை வைத்து இந்திய முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்துவது அரசியலுக்கு பலன் கொடுக்கும் என நினைத்தார்களோ என்னமோ? அவர்களின் உளவுத்துறை வேலை செய்யவில்லை. இறுதியில் இந்தியாவின் பிணையில் இருந்த தீவிரவாதியை விடுவித்தனர்.
கதை: “ஆயுதம், பீரங்கி தொடங்கி சவப்பெட்டி வரையிலும் ஊழல்”
bangarulaxman_stingop
இந்தப்படம் கிரியேட்டிவ் காமன் உரிமம் பெற்றதல்ல – நன்றி: ராய்டர்ஸ்)
உண்மை: “ஆயுதம், பீரங்கி தொடங்கி சவப்பெட்டி வரையிலும் காங்கிரசும் பாஜகவும் மாற்றி மாற்றி  ஊழல்”
கதை: “ஊழல்வாதியையும், ஊழல்வாதிகளுக்கு துணையாக இருந்தவர்களையும். அவர்களோடு கூட்டு சேர்ந்த தீவிரவாதிகளையும். அசோக் உள்ளிட்ட ‘நல்ல’ கதாப்பாத்திரங்கள் அழிக்கிறார்கள்’.
உண்மை: உண்மையில், நமது நாட்டிற்கு விடப்பட்டிருக்கும் சவாலான ஊழலையும், அப்பாவி மக்கள் கொலைகளின் மூலம் தனது அரசியல் வெற்றியை சாதிக்க கணக்குப் போடும் சக்திகளிடமிருந்தும் இந்தியாவை விடுவிப்பது நமது கைகளில்தான் உள்ளது. சரியான மாற்று எது என்பதை அறிந்து, அதன் வழியே இந்தியாவை திருப்புவது இளைஞர்களாகிய நமது கடமை.
ஆம். இது ‘ஆரம்பம்’ மட்டுமே …

கத்தி குத்தில் மதுக்கூர் வாலிபர் பரிதாப பலி




மதுக்கூர், நவம்பர் 04: மதுக்கூரை சேர்ந்த வாலிபர் முஹம்மது தாரிக் [ வயது 24 ] நேற்று மாலை அதே ஊரைச் சேர்ந்த மதுக்கூர் மைதீன் மற்றும் நியாஸ் ஆகியரோடு ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்டார். உடலில் 3 இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்ட இவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இதையடுத்து இறந்த உடல் பிரத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. பிரத பரிசோதனை முடிந்ததை அடுத்து இன்று மதியம் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டு மதுக்கூர் பெரிய பள்ளியில் மதியம் 2 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


முத்துப்பேட்டை பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்: INTJ கடும் கண்டனம்!!!



சென்னை, நவம்பர் 04: இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலசெயலாளர் அபூபைசல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை கண்டிக்கும் முகமாக இன்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்திற்கு 1 வது வார்டு கவுன்சிலர் கொசு வலை போர்த்தி வந்ததை படமெடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்களுடன் பேரூராட்சி மன்ற தலைவர் கோ.அருணாச்சலம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு,பின்னர் பத்திரிக்கையாளர்களை தாக்கியும் உள்ளார்.தாக்கப்பட்டவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வருகின்றனர்.

பத்திரிக்கையாளர்கள் மீது நடத்திய தாக்குதலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.தாக்குதல் நடத்திய பேரூராட்சி மன்ற தலைவரை கடுமையான சட்ட   பிரிவுகளின் கீழ் கைது செய்யவும் காவல்துறையை கேட்டுக்கொள்கிறது.அதேசமயம் பத்திரிக்கையாளர்கள் அனுமதியின்றி உள்ளே வந்தார் என்று கூறும் நிர்வாகம்,காவல்துறையின் துணையுடன் அவர்களை வெளியேற்றி இருக்க வேண்டுமே தவிர,நேரடி தாக்குதலில் ஈடுபட்டதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

முத்துப்பேட்டை பேருராட்சி கூட்டத்தில் கொசுவலையுடன் வந்த கவுன்சிலரை படம் எடுத்த பத்திரிகையாயளர்களை கொலை வெறியுடன் அடித்து உதைத்த பேருராட்சி தலைவர் அருணாச்சலம்












முத்துப்பேட்டை. நவ.1
முத்துப்பேட்டை பேரூராட்சி கூட்டம் தலைவர் அருணாச்சலம் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதிகாரிகள். மற்றும் பேருராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டம் தொடங்கும் போது 1வது வார்டு பாஜக கவுன்சிலர் மாரிமுத்து என்பவர் கொசுவலை ஒன்றை அணிந்து கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி வீதி வீதியாக வந்து கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தார். அதனை பத்திரிகையாளர்கள் படம் எடுத்தனர். இதனை கவனித்த பேரூராட்சி தலைவர் அருணாச்சலம் படம் எடுத்துக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களை சரமாரியாகத் தாக்கினார். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி பத்திரிக்கையாளர் அனைவரையும் சங்கை அருத்துவிடுவதாக பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தார் இதனால் கூட்டத்தில் கலந்துகொண்ட மற்ற பேரூராட்சி கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த தாக்குதலில் பத்திரிகையாளர்களின் கேமராக்கள் உடைந்தன. இதனிடையே மற்ற கவுன்சிலர்கள் பேரூராட்சிதலைவர் அருணாச்சலத்தை சமாதானப்படுத்தி அழைத்து இழுத்து சென்றனர்.

இச்சமபவத்தை கண்டித்து பத்திரிகையாளர்கள் பேரூராட்சி எதிரே உள்ள சாலையில் படுத்து சிறிது நேரம் சாலை மறியிலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வாளர் சண்முகவேல் மறியலில் ஈடுபட்ட பத்திரிக்கையாளரிடம் பேச்சுவார்தை நடத்தி அருணாச்சலத்தை கைது செய்வதாக உறுதியளித்தார் உடன் பத்திரிக்கையாளர்கள் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் பேரூராட்சி தலைவர் அருணாச்சலத்தின் மீது புகார் கொடுத்தனர். ஆதன் அடிப்படையில பேரூராட்சி தலைவர் அருணாச்சலம் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகிறார்கள் பேரூராட்சி தலைவர் அருணாச்சலம் தரப்பிலும் இன்னிலையில அத்துமீறி செய்தி சேகரித்ததாக 3 பத்திரிகையாளர்கள் மீது புகார் கொடுக்கபட்டுள்ளதாக தெரிகிறது. காயம் அடைந்த பத்திரிக்கையாளர்கள் 3 பேர் திருத்துரைப்புண்டி அரசு மருத்துவமனையில் அணுமதிக்கபட்டுள்ளனர்; பத்திரிக்கையாளர் மீது தாக்கதல் சம்பவத்தால் முத்துப்பேட்டை மக்கள் அனைத்து கட்சியினர் சமுக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் , இந்நிலையில் அருணாச்சலத்தை கைது செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர் இதனை தமிழ்நாடு பத்திரிக்கையாளா சங்கம் மற்றும் மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது மேலும் இதனை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டுசெல்ல பத்திரிக்கையாளர் சங்கம் முடிவு செய்துள்ளது

இதுபற்றி கொசுவலை அணிந்து வந்த கவுன்சிலர் மாரிமுத்து கூறுகையில், முத்துப்பேட்டையில் 25க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பரிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு மர்ம காய்ச்சல் உள்ளது. கொசு ஓழிப்பை தீவிரப்படுத்தாமல் பேரு£ட்சி நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்
காட்ட நூதனமான முறையில் கொசுவலை அணிந்து வந்ததை படம் பிடித்ததற்காகவே பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

முத்துப்பேட்டையில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மன்னார்குடி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் மன்னார்குடி பெரியார் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துகட்சியினர், பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.



மெளவத் அறிவிப்பு: "S. கமால் முஹம்மது"


முத்துப்பேட்டை,  அக்டோபர் 30: முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு மர்ஹும் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் முஹம்மது அபூபக்கர் அவர்களின் மருமகனும், ஒரத்தநாடு S. அப்துல் கரீம், PSM அஹமது இபுராஹிம், ஆகியோரின் மாமனாரும், அப்துல் நவாஸ், சுல்தான் அப்துல் காதர், முஹம்மது முஹைதீன், ஆகியோரின் தகப்பனாருமாகிய "S. கமால் முஹம்மது அவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று மாலை 6.30 மணியளவில் முஹைதீன் பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள். 
source from: muthupettaiexpress.com, 
அறிவிப்பவர்: 

PSM முஹம்மது முஹைதீன்.

மேலும் தொடர்புக்கு:

சுல்தான் அப்துல் காதர்: 0091 9500 67 80 17

முஹம்மது முஹைதீன்: 00966 5965 44152 

நமது நிருபர்:

K.M. காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டை அருகே கடத்தபப்ட்ட 7.6 கிலோ தங்கம் பறிமுதல். 3 பேர் கைது.







முத்துப்பேட்டை, அக்டோபர் 30 : முத்துப்பேட்டை சுங்க இலாகா அலுவலகம் ஆசாத் நகர் பகுதியில் உள்ளது. இந்த கட்டிடத்தில் முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை மல்லிப்பட்டிணம் திருத்துறைப்பூண்டி பகுதி அலுவலகமும் இயங்கி வருகிறது. சமீபத்தில் வேதாரண்யம் பகுதியில் 2 மர்ம படகும் கடலூர் பகுதியில் 1 படகும் முத்துப்பேட்டை பகுதியில் 1 படகும் ஒதுங்கியது. அதனால் சுங்க இலகா அதிகாரிகளுடன் மத்திய கடத்தல் பரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியதில் ஏற்கனவே 55 கிலோவுக்கு மேல் தங்கம் கடத்தல் காரரிடமிருந்து பறிமுதல் செய்தனர். 

இந்த நிலையில தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணம் கடற்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியது. அதனால் கோவையில் இயங்கும் மத்திய வருவாய் புலணாய்வு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தவகல்; கிடைத்து அதிகரிகள் முத்துப்பேட்டை அதிராம்பட்டிணம் பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் பகுதியில் சுங்க இலகா அதிகாரகளுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு நுண்ணறிவு துறை அதிகாரிகள் ஒரு டீம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகத்திற்கிடமாக அப்பகுதியில் சென்ற 2 டூவீலர்களை மடக்கி பிடித்தனர். அதில் 3 பேர் சிக்கினர். அவர்களிடமிருந்து 7.6 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கபட்பது. அதன் மதிப்பு 2.34 கோடியாகும். மேலும் பிடிபட்டவர்கள் 1.தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பனையூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன(23) 2. புதுக்கோட்டை மாவட்டம், மும்பாளைபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த காதர் முகைதீன்(55) 3.அதே ஊரைச் சேர்ந்த இப்ராகிம்(50) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு துறை நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்து முத்துப்பேட்டை சுங்க இலகா அலுவலம் கொண்டு வந்தனர். சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

 பின்னர் மேலும் விசாரணைக்காக முத்துப்பேட்டை சுங்க அலுவலகத்தில் 3 பேரையும் வைக்கப்பட்டனர். கடத்தப்பட்ட தங்கம் எங்கிருந்து வந்தது? இலங்கையிலிருந்து கடத்தப்பட்டதா மேலும் கடலோர மாவட்டத்தில் சமீபத்தில் 5 படகுகள் கரை ஒதுங்கிய நிலையில் அந்த நாட்களில் அடுத்தடுத்து தங்கம் கடத்தப்படுவது பறிமுதல் செய்யப்படுவதால் இலங்கையிலிருந்து கடல் வழியாக கடத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நேற்று இரவு 3 பேரிடமும் முழு விசாரணை முடித்துதிருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 

நமது நிருபர்: முஹைதீன் பிச்சை 

பாட்னா’ குண்டும் & அரசியல் ஆதாயங்களும்- MMK கட்சி பொதுச்செயலாளர் கருத்து :

சென்னை,அக்டோபர் 29: பீஹார் தலைநகர் பாட்னாவில் நேற்யை தினம் நடந்த குண்டுவெடிப்புகளில் 6 பேர் கொல்லப்பட்டு, எண்ணற்றோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது கோழைத்தனமான செயல். வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மதிப்புமிக்க உயிர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டை பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் வழங்கியதோடு, இதுகுறித்த முழு விசாரணையை தேசியப் புலனாய்வுக் குழுவிடம் (NIA) ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.


இக்குண்டுவெடிப்பின் பின்னணி நடுநிலையோடும், மிகுந்த நுட்பத்தோடும் ஆராயப்பட வேண்டும்.

விசாரணைக்கு முன்பே ‘வழக்கம் போல’ பழி சிறுபான்மை சமூகத்தின் மீது போடப்பட்டு, மோடிக்கு அனுதாப அலையை உருவாக்கும் ‘திருப்பணிகள்’ நடக்கிறது. இதுபோன்ற நேரங்களில் வன்முறை சக்திகளிடமிருந்து மக்கள் கவனமாக தள்ளி நிற்க வேண்டும்.

இதில் ‘அபினவ் பாரத்’ போன்ற அமைப்புகளின் பங்கு என்ன என்ற கோணத்தில் யாருமே சிந்திப்பதில்லை.

மோடிக்கும் & நிதிஷ்குமாருக்கும் கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மோதல் நடப்பது அனைவருக்கும் தெரியும். இருவருமே வளர்ச்சியை முன்னிறுத்தி தங்களை பிரதம வேட்பாளராக முன்னிறுத்தும் போக்கு கொண்டவர்கள்.

பாஜகவுக்கும், நிதிஷ்குமாருக்கும் கூட்டணி முறிவு பற்றி ஏற்பட்ட பிறகுதான் பீஹாரின் புத்தகயாவில் குண்டுவெடித்தது. இக்குண்டு ‘Made in Gujarat’ என ஐக்கிய ஜனதாதளம் கூறிய கருத்து பாஜகவை கோபப்படுத்தியது.

இப்போது ‘சக்தி குறைந்த’ குண்டு வெடித்ததாக வெளியிடப்படும் செய்திகள் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

‘நான் கொல்லப்படலாம்’ என்று ராகுல் காந்தி கூறிய கருத்து தேசமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, மோடியின் விளம்பர யுக்திகளை தவிடுபொடியாக்கிய தருணத்தில் இக்குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதை கவனிக்க வேண்டும்.

‘2014 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி...’ காவி பயங்கரவாதிகளால் திட்டமிடப்படும் பல்வேறு சதிகளில் இதுவும் ஒன்றா? என்ற கேள்வியைப் புறக்கணித்துவிட முடியாது.

எது எப்படியாயினும் அப்பாவி மக்களை பயங்கரவாதத்தின் மூலம் அரசியல் ஆதாயங்களுக்காக கொல்வதை, அச்சுறுத்துவதை ஜனநாயக சக்திகள் திரண்டு எழுந்து தடுக்க வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு சாதி, மதம், மொழி, இனம் இல்லை. ஆனால் இப்போது ‘அரசியல் & அதிகாரம்’ என்ற ஆசை வந்திருப்பது நாட்டுக்கு நல்லதல்ல.

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் ஆக்கிரமிப்பு குறித்து நடந்த சமாதான பேச்சு வார்த்தையில் தகராறு,





முத்துப்பேட்டை, அக்டோபர் 29: முத்துப்பேட்டை நகரில் பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களை பெரும்பாலான தனியார்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்திடம் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி புகார் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் முத்துப்பேட்டை நெய்யக்காரத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான். இவர் அதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகியாக உள்ளார். இவரது மகன் அயூப்கான். இவர் அதிமுக வார்டு நிர்வாகியாக உள்ளார். அயூப்கான் பேரூராட்சி அலுவலகத்தில் சென்ற வாரம் அதே பகுதியைச் சேர்ந்த சேக்கமரைக்காயர் மகன் சாகிப் மரைக்காயர் பேரூராட்சிக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து வைத்திருப்பதாக பேரூராட்சி செயல் அலவலார் சித்தி விநாயகமூர்த்தியிடம் புகார் கொடுத்திருந்தார்.

 உடன் செயல் அலுவலர் சம்மந்தப்பட்ட சாகிப் மரைக்காயருக்கு விளக்கம் கேட்டு பேரூராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டன. இந்த நிலையில் விடுப்பில் சென்றிருந்த செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி நேற்று அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்பொழுது ஆக்கிரமிப்பு குறித்து விளக்கம் அளிப்பதற்காக சாகிப் மரைக்காயரும் அவரது நண்பர் நவாஸ்கானும் சென்று செயல் அலுவலரிடம் விபரங்களை கூறினர். அதில் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்ததாக தெரிகிறது. இதனை அறிந்த செயல் அலவலர் புகார் கொடுத்த அயூப்கானுக்கு தகவல் கொடுத்து வரவழைத்து செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சாகிப் மரைக்காயருக்கும் அதிமுக நிர்வாகி அயூப்கானுக்கும் தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். 

பின்னர் அலுவலம் வாசலில் நின்று சத்தம் போட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பேரூராட்சி வளாகம் பெரும் பரபரப்பானது. தீபாவளி நேரம் என்பதால் மக்கள் கூட்டம் பேரூராட்சி அலுவலகம் எதிரே நின்று வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலிசார் பேரூராட்சி அலுவலம் வந்து தகராறில் ஈடுபட்டவர்களை கலைத்துவிட்டார். இந்த நிலையில் சாகிப் மரைக்காயர் அதிமுக நிர்வாகி அயூப்கான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சண்முகவேல் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.


முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவகத்தில் ஆக்கிரமிப்பு குறித்து சமாதான பேச்சு வார்த்தையில் தகராறு ஏற்பட்டதால் அலுவலகம் வாசலில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்ட காட்சி.

நமது நிருபர்: மு.முகைதீன் பிச்சை

சென்னை மண்ணடியில் கலவரத்தை உண்டாக்க காவி கூட்டம் திட்டம் INTJ சகோதர்கள் காயம்.



சென்னை, அக்டோபர் 28: சென்னை பாரிமுனையில் பெரிய களவரமே நடந்து விட்டது. பீகாரில் குண்டு வெடித்த உடன் பாரிமுனையில் இருக்கும் ரேவ் (சேரி) காரங்க இந்துத்துவாவாதிங்க கூட சேர்ந்துக்கிட்டு பாரிமுனை பகுதியில் போவோர் வருவோரிடம் ‘பாரத் மாதாகி ஜே’ன்னு சொல்லு இல்ல அடிப்பேன்னு அனைவரையும் வற்புறுத்தியிருக்காங்க. ஐஎன்டிஜே வட சென்னை கிளை சகோதரர்கள் அந்தப் பகுதியில் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களிடம் வந்த இந்துத்துவாவாதிகள் நீங்களும் பாரத் மாதாகி ஜேன்னு சொல்லுங்கன்னு வற்புறுத்திஉள்ளார்கள் இந்திய தவ்ஹித் ஜமாத்சகோதரர்கள் நாங்க சொல்ல மாட்டோம்னு சொன்னதும் அவர்களைப் போட்டு அடித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பிரச்சினை வெடித்துள்ளது. 

இந்த சம்பவம் கேள்விப்பட்டதும் அந்தப் பகுதி காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அடித்தவர்களை நாங்கள் நாளை காலை 11 மணிக்குள் பிடித்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதற்குள் இந்த சம்பவம் காட்டுத்தீ போல பரவியதும் எஸ்.டி.பி.ஐ., தமுமுக, இந்திய தவ்ஹித் ஜமாத் உட்பட முக்கிய நிர்வாகிகள் ஸ்பாட்டிற்கு வந்து காவல்துறையினரிடம் தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தியிருக்காங்க. இரவு 11 மணிவரை பாரிமுனை பகுதியில் 1000க்கும் மேற்பட்டோர் குவிந்து விட்டனர். 500க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டதாக செய்தி. சம்பவ இடத்திற்கு விரைந்த இந்திய தவ்ஹித் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர் கேட்டுக் கொண்டதற்கிணங்க முஸ்லிம் சகோதரர்கள் கலைந்து சென்றுள்ளனர். இன்று அவர்களை கைது செய்யா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்க பட்டுள்ளது

கருணாநிதி பற்றி அவதூறு கார்டூன்: முத்துப்பேட்டையில் தி.மு.க. வினர் தினமலர் எரிப்பு!

முத்துப்பேட்டை, அக்டோபர் 28: முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் நேற்று தினமலர் நாலாம் பக்கத்தில் கருணாநிதியின் தவரான கார்டுன் வெளியிட்டதை கண்டித்து தி.மு.க.வினர் நூறு பேர் மாவட்ட துணைச் செயலாளர் எம்.எஸ்.கார்த்திக் தலைமையில் தினமலர் நாளிதழை தீயிட்டு கொழுத்தினார்கள்.









மேலும் தின மலரை கண்டித்தும் சம்மந்தபட்டவர்களை கைது செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் அவ்வழியாக சென்ற பேருந்துகளை மறைத்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதில் நகர அவைத்தலைவர் ராமஜெயம், நகர துணைச் செயலாளர் நவாஸ்கான், பொருளாளர் பாலு, மாவட்ட பிரதிநிதிகள் தமீம், இபுராஹீம் மாவட்;ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய இளைஞர் அணி ஜாம்பை கல்யாணம், பேருராட்சி சவுன்சிலர்கள் ஐய்யப்பன், கிருஷ்ணன், ஜெகபருல்லா, ரெத்தினகுமார், நகர நிர்வாகிகள் செல்வம் அமனுல்லா, பியூட்டி நவாஸ், ஆறுமுகம், ரபிஅகம்மது, சிவ சுப்பிரமணியன், அன்பன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் பிரபாகர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதனால் அரை மணிநேரம் போக்கு வரத்து தடைப்பட்டது இந்த நிலையில் சுமார் 2 மணி நேரம் கழித்து எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில் போலீஸார் கடைத் தெருவில் ஒரு கடையில் அமர்ந்து இருந்த மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக்கை சுற்றி வழைத்து கைது செய்து ஜீப்பில் ஏற்றினார். 


அவருடன் நகர நிர்வாகி செல்வமும் கைது செய்யப்பட்டனர். இச்செய்தியை கேள்விப்பட்ட தி.மு.க.வினர் பலரும் முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எடையூரில் 20 தி.மு.க.வினர் கைது.


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூரில் முத்துப்பேட்டை ஒன்றிய தி.மு.க செயலாளர் ந.உ.சிவசாமி தலைமையில் தினமலர் நாழிதழ் தீயிட்டு எரிக்கபட்டன. ந.உ.சிவசாமி உட்பட 20 தி.மு.க.வினரை எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் கைது செய்தார்.

Source from: www.muthupettaiexpress.com

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)