முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் சிறை செல்லும் போராட்டம் -தீவிரமடைகிறது போராட்ட பணிகள் !!!

முஸ்லிம் சமுதாயப் பெருமக்களே அஸ்ஸலாமு அலைக்கும்.
எதிர்வரும்  ஜனவரி 28ல் (செவ்வாய்) இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுகூடி உரிமை முழக்க ஆர்ப்பாட்டத்துடன் சிறை செல்லும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போராட்டக்களத்தில் பங்கேற்பவராக  நீங்களும் இருக்க வேண்டும் என்று உங்களை அழைக்கிறோம்.

அன்புள்ள சகோதர
 சகோதரிகளே உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். அவ்வாறு அழைக்கப்பட்ட போராட்டங்களில் பங்கேற்றும் இருக்கிறீர்கள். அதுபோன்ற  போராட்டமாக ஜனவரி 28 போராட்டத்தை எண்ணிவிடவேண்டாம்.

தலைவர்களுக்குப் புகழ் சேர்ப்பதற்கோ,அரசியல்வாதிகளிடம் உங்களைக் காட்டி தலைவர்கள் ஆதாயம் அடைவதற்கோ, கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பதற்கோ, தலைவர்களின் தர்ம தரிசனத்திற்காகவோ உங்களை அழைக்கவில்லை.
இது முழுக்க முழுக்க உங்களுக்காகவும் உங்களின் நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவும், நீங்கள் படும் அவஸ்தைகளை உங்கள் வழித் தோன்றல்கள் பெறக்கூடாது என்பதற்காகவும், நடத்தப்படும் உங்களுக்கான போராட்டம்.
நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என்று ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்களித்தார். அவர் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவதாக அளித்த வாக்குறுதியை ஜெயட்லிதா அவர்கள் இன்னும் நிறைவேற்றவில்லை.
அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மாநில அரசை வலியுறுத்தியும்,
முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்போம் என்று காங்கிரஸ் கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் நாடெங்கும் பயணம் செய்து முஸ்லிம்களின் அவல நிலையை ஆதாரங்களுடன் கண்டறிந்து முஸ்லிம்களுக்கு பத்து விழுக்காடு தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
காங்கிரஸ் அளித்த வாக்குறுதியையும் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை செயல்படுத்தும் வகையில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 10 சதவிகித ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தியும்,
தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, கோவை மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் தமிழக முஸ்லிம்கள் இலட்சக்கணக்கில் திரளும்  சிறை செல்லும் போராட்டம்(இன்ஷா அல்லாஹ்)
இந்த நாட்டின் அடக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் உங்கள் கண்ணெதிரில் உயரத்துக்குச் சென்று கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரிகிறது. எல்லாச் சமுதாய மக்களும் உயர்கல்வி கற்று பதவிகளையும் நல்ல ஊதியத்துடன்  வேலை வாய்ப்பையும் பெற்றுள்ளதையும், மற்றவர்களுக்குச் சமமாக அரசியல் அதிகாரத்தை பெற்றுள்ளதையும் நீங்கள் பார்க்கிறீர்கள்.
ஆனால் உங்களின் நிலை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
முஸ்லிம்களின் தியாகத்தில் இந்திய விடுதலை
இந்திய நாட்டை உருவாக்கியதிலும், அதை வளப்படுத்தியதிலும், வெள்ளையனிடமிருந்து நாட்டை மீட்பதிலும் மற்ற அனைத்து சமுதாயங்களைவிட நாம் அதிக உழைப்பு செய்துள்ளோம்.
வெள்ளையனை எதிர்ப்பதற்காக அவனது மொழியைப் படிக்கக்கூடாது என்றோம்.
படிப்பைப் பாதியில் நிறுத்தினோம்.
வெள்ளையனுடைய அரசாங்கத்தில் வேலை பார்க்கக்கூடாது என்று முடிவு எடுத்து அனைத்து வேலைகளையும் உதறித் தள்ளினோம்.
வழிபாட்டுத் தலங்களை கடவுள் வழிபாட்டுக்கு மட்டும் மற்ற சமுதாய மக்கள் பயன்படுத்தி வந்தபோது, வெள்ளையனை எதிர்த்து கிளர்ச்சி செய்யும் பிரச்சார மேடையாகப் பள்ளிவாசல்களை நாம் பயன் படுத்தினோம்.
வெள்ளையன் கொடுத்த இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மற்ற சமுதாய மக்கள் முன்னேறியபோது அதையும் பயன்படுத்த மறுத்தோம்.
உடலாலும், பொருளாலும், உயிராலும் தியாகம் செய்வதில் மட்டும் அனைவரையும் நாம் மிஞ்சினோம்.
இன்றைய முஸ்லிம்களின் அவல நிலை
நாட்டின் விடுதலைக்காக கல்வியையும் வேலை வாய்ப்புகளையும் தியாகம் செய்த நம்மைத் தவிர மற்ற அனைவரும் நம்மை எல்லா வகையிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பல மடங்கு மேலே சென்றுவிட்டார்களே, அதுபற்றிச் சிந்தித்தீர்களா?
கூலித் தொழிலாளியாகவோ
இறைச்சிக் கடைக்காரராகவோ
நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ
கொல்லுப்பட்டரையில் கடின வேலை செய்பவராகவோ
தோல் பதனிடும் தொழிலாளியாகவோ
பெட்டிக்கடை நடத்துபவராகவோ
குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவராகவோ இருப்பவர்கள் நம் சமுதாயத்தில் மட்டும் மிக அதிகமாக இருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?
சொந்த நாட்டில் தகுந்த கல்வியும், தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு நாம் மட்டும் வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல்படுவது ஏன்?
ஒட்டகம் மேய்த்தல்
சாலை போடுதல்
கழிவுகளைச் சுத்தம் செய்தல்
உயிரைப் பணயம் வைத்து உயரமான கட்டடங்களில் கூலித் தொழில் செய்தல்
தனியாருக்குக் கார் ஓட்டுதல்
வீடுகளைச் சுத்தம் செய்தல்
சமையல் வேலை செய்தல்
இப்படி அற்பமான ஊதியத்தில் வேலை பார்த்து நீங்கள் மட்டும் ஏன் அவல நிலையில் இருக்க வேண்டும்?
மற்றவர்கள் எல்லாம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருக்க, நீங்கள் மட்டும் தொலைபேசி மூலம் குடும்பம் நடத்துவது ஏன்?
இதை மாற்றியமைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா இல்லையா?
சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா
ஆகியோரின் அறிக்கைகள் கூறுவதென்ன?
88 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் 11 லட்சம் இருக்கவேண்டிய முஸ்லிம்கள் 35 ஆயிரம் பேர் மட்டும்தான் உள்ளனர் என்று முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டியின் அறிக்கை கூறுகிறதே? இந்த நிலை இனியும் தொடரலாமா?
பாதுகாப்பு தொடர்பான பணிகளில் முஸ்லிம்கள் மூன்று சதவிகிதம்தான் உள்ளனர் என்றும் தலித் மக்களின் நிலையைவிட மோசமாக முஸ்லிம்களின் நிலைமை இருக்கிறது என்றும் சச்சார் அறிக்கை கூறுகிறதே? அதை மாற்றியமைக்க வேண்டாமா?
முஸ்லிம்களின் கல்வி, அரசியல், பொருளதார நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கையில் கூறப்பட்ட அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் உங்களைக் கவலையில் ஆழ்த்தவில்லையா?
முஸ்லிம்களின் அவலநிலைபற்றி நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குறிப்பிடும்போது…
முஸ்லிம்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படித்தவர்கள் 65.31 சதவிகிதம் என்கிறார்.  அதாவது ஒவ்வொரு நூறு முஸ்லிம்களில் 35 பேர் ஒன்றாம் வகுப்பு கூடப் படிக்கவில்லை.
ஐந்தாம் வகுப்புக்கு மேல் எட்டாம் வகுப்புவரை படித்தவர்கள் 15.14 சதவிகிதம் என அந்த அறிக்கை கூறுகிறது.  அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 85 பேர் எட்டாம் வகுப்புவரை படிக்கவில்லை.
எட்டாம் வகுப்புக்கு மேல் 10 ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 10.96 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் 11பேர்தான் பத்தாம் வகுப்பு படித்தவர்கள்.
பத்தாம் வகுப்புக்கு மேல் பன்னிரெண்டுவரை படித்தவர்கள் 4.53 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் 5 பேர்கள்தான் 12ஆம் வகுப்புவரை படித்துள்ளனர்.
பட்டப்படிப்பு படித்தவர்கள் 3.6 என்கிறது அந்த அறிக்கை. அதாவது 100 முஸ்லிம்களில் 3 பேர்தான் பட்டப்படிப்பு படித்துள்ளனர்.
இவ்வளவு மோசமான நிலையில் இந்தியாவில் எந்தச் சமுதாயமும் இல்லை. நமக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இந்த அவலநிலை என்றால் பொருளாதர நிலையிலாவது நமது நிலை உயர்ந்திருக்கிறதா? அல்லது மற்ற சமுதாயங்களைத் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறதா?
பொருளாதாரத்தில் கடைசிநிலையில் இருக்கும் தலித் மக்களுடன் போட்டி போடும் அளவுக்குத்தான் நமது நிலை உள்ளது.
முஸ்லிம் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 1832 ரூபாயும் 20 காசுகளும்தான் என்கிறது அந்த அறிக்கை.
அது மட்டுமன்றி ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 31 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர் எனவும் நீதிபதி மிஸ்ரா கமிஷன் கூறுகிறது.
மற்ற சமுதாய மக்களில் 100க்கு 20 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ், இருக்கும்போது, நமது சமுதாயத்தில் 100க்கு 31பேர் வறுமையில் உள்ளனர் என்றால் இந்த நிலையை உயர்த்திட நாம் பாடுபட வேண்டாமா?
வறுமைக்கோடு என்பதன் அர்த்தம் தெரிந்தால் இட ஒதுக்கீட்டை நம்மால் அலட்சியப்படுத்தவே முடியாது. கீழ்க்காணும் தகுதியில் இருப்பவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் என்று நிர்ணயித்துள்ளனர்.
சொந்தமாக இடம் இல்லாதவர்கள்
இரண்டு ஆடைகளுக்குக் குறைவாக வைத்துள்ளவர்கள்
ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்பவர்கள்
வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள்
வீட்டு உபகரணங்கள்(டீவி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள்
படிப்பறிவு இல்லாதவர்கள்
கூலி வேலை செய்பவர்கள்
பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப இயலாதவர்கள்
நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள்
இத்தகைய நிலையில் நம் சமுதாயம் மட்டும் அதிக எண்ணிக்கையில் இருப்பது உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தவில்லையா? பிச்சைக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துக்கு ஒப்பான வாழ்க்கை வாழும் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கண்டிப்பாக உழைக்கும் கடமை நமக்கு உள்ளதா இல்லையா?
100 முஸ்லிம்களில் 35 பேர் குடி தண்ணீர் கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வசிக்கின்றனர் என்றும்
100 முஸ்லிம்களில் 41  பேர் அடிப்படை கட்டமைப்பு வசதி  இல்லாத வீடுகளிலும்
100க்கு 23 முஸ்லிம்கள்தான் வசிக்கத் தகுந்த வீடுகளில் வசிக்கின்றனர் என்றும் ரங்கநாத் மிஸ்ரா கூறுகிறார்.
நமக்குத் தாராளமான உரிமை கிடைத்துள்ளது என்றால், வகுப்புக் கலவரங்களில் கொல்லப்படுவதில் கிடைத்துள்ளது.
குஜராத் கலவரத்துக்கு முன்வரை நடந்த மொத்த கலவரங்கள் 3949. இதில் 2289 பேர் கொல்லப்பட்டதில் இந்துக்கள் 530 பேரும் முஸ்லிம்கள் 1598 பேரும் ஆவர். அதாவது 65 சதவிகிதம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில்தான் நமது சதவிகிதத்தைவிட நான்கு மடங்கு இடம் கிடைத்துள்ளது.
நாட்டில் உள்ள சிறைச் சாலைகளிலும் நமக்கு தாரளமான இடம் கிடைத்துள்ளது. மொத்த கைதிகளில் முஸ்லிம்கள் 25 சதவிகிதம் உள்ளனர்.
நமது பேரன் பேத்திகளுக்கு இதைத்தான் நாம் பரிசாக விட்டுச் செல்ல வேண்டுமா?
நம்முடைய சமுதாயமும் கலெக்டர்களாக
உயர் அதிகாரிகளாக
டாக்டர்களாக, எஞ்சினியர்களாக
தொழில் நுட்ப வல்லுனர்களாக
வெளிநாடு சென்றாலும் மனைவி மக்களுடன் சென்று அதிக ஊதியத்துடன் பணி புரிபவராக
பெரிய தொழில் அதிபர்களாக ஆக வேண்டாமா?
இதுபற்றி சிந்திக்கும் கடமை நமக்கு இருக்கிறது.
நீதிபதி மிஸ்ரா அவர்கள் நமது அவல நிலையை மட்டும் எடுத்துக் காட்டவில்லை. அரசாங்கம் என்ன செய்தால் இந்த அவல நிலை மாறும் என்பதற்கான பரிந்துரைகளையும் செய்திருக்கிறார்.
ரெங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரை
எல்லா நிலையிலும் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு  தனியாக இட ஒதுக்கீடு அளிப்பதற்கு அரசியல் சாசனம் 16(4) விதி அனுமதிக்கிறது.
எனவே நாடு முழுவதும் கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் 100க்கு 10 என்ற கணக்கில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
வேலை வாய்ப்புகளில் மட்டுமின்றி சுய தொழில் தொடங்கக் கடன் வழங்குதல் போன்ற அனைத்து சமூக நலத்திட்டங்களிலும் பயன் பெறுவோரில் 100க்கு 10 பேர் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது போல், முஸ்லிம்களுக்கும் மதிப்பெண்களைத் தளர்த்த வேண்டும்.
உத்திரப் பிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் இருப்பதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் முஸ்லிம் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும்.
தரமான கல்வியை இலவசமாக வழங்கும் மத்திய அரசின் நவோதயா போன்ற கல்விக்கூடங்களை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தோறும் நிறுவ வேண்டும்.
கல்வியில் பின் தங்கியுள்ள முஸ்லிம் மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்காக வட்டியில்லா கடன் கொடுக்க வேண்டும்.
சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லிம்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முஸ்லிம்களுக்கு சமையல் கேஸ் இணைப்பு மிகக் குறைந்த விலையில் வழங்க வேண்டும்.
மேற்கண்டவை முக்கிய பரிந்துரைகளாகும்.
நமது அவல நிலையை படம் பிடித்துக் காட்டியதுடன் மத்திய அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் எனவும் மிஸ்ரா வழிகாட்டியுள்ளார்.
உரிமையை வென்றெடுக்க
சரித்திரம் காணாத அளவுக்கு ஆள்வோரின் செவிட்டுக் காதுகளுக்கு எட்டும் வகையில் நாம் பொங்கி எழுந்தால் மட்டுமே மிஸ்ரா அறிக்கைக்கு உயிர் கொடுக்கப்படும். மத்தியில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம் கிடைக்கும்.
ஜெயல்லைதா அவர்கள் அளித்த வாக்குறுதிப்படி 3.5 சதவிகிதம் உயர்த்தி தரப்படும்.
நாடு முழுவதும் பத்து சதவிகிதம் தனி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் எனபதை மத்திய அரசுக்கு உணர்த்தவும்,
மாநிலத்தில் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க மாநில அரசுக்கு உணர்த்தவும்மே இந்தப் போராட்டம்.
தலைவர்களின் துதிபாட, அரசியல் கட்சிகளுக்கு பலம் சேர்க்க, உங்களைக் காட்டி விலை பேசுவோருக்கு, உங்களை அறியாமல் உதவ பல களங்களை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள்.
இப்போது உங்களுக்காக, நீங்கள் மானத்தோடும், மரியாதையோடும் வாழ்வதற்காக, உங்களுக்கு ஏற்பட்ட நிலை உங்கள் சந்ததிகளுக்கு ஏற்படாமல் தடுத்து நிறுத்திட…
நாங்கள் பட்ட துன்பங்களை எங்கள் சந்ததிகளுக்கும் விட்டுச் செல்லமாட்டோம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய..
இத்தனை ஆண்டுகள் ஏமார்ந்தது போதும், இனியும் ஏமாற மாட்டோம்  என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்திட ..
இடஒதுக்கீட்டை அடைய எந்த்த் தியாகத்தையும் செய்யத் தயங்க மாட்டோம் என்பதை உலகுக்கு உணர்த்திட..
குடும்பத்துடன் புறப்பட்டு வாருங்கள்
அலை அலையாய் திரண்டு வாருங்கள்
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடக்கவிருக்கும் போரட்டக்களங்களை நோக்கி புயலென புறப்படத் தயாராகுங்கள் …
இறையருளால் வென்று காட்டுவோம்.
அணி திரள அழைக்கிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்
30, அரண்மனைக்காரன் தெரு,
சென்னை – 600001  போன் – 044 2521 5226

திருமணச் செய்தி: "M.ஷபீர் அலி"








முத்துப்பேட்டை, டிசம்பர் 26:  ஹிஜ்ரி 1435 ஷபர்  18, 21.12.2013 காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை கிட்டங்கித் தெரு ஜனாப். முஹம்மது ஃபாரூக் அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் M.ஷபீர் அலி. மதுக்கூர் ஜனாப். முஹம்மது ஃபாரூக்  அவர்களின் புதல்வி  தீங்குலச்செல்வி மணாளிக்கும் இரு வீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 3 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து மதுக்கூர் பள்ளி இமாம் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.)
source from: www.muthupettaiexpress.com 



நமது நிருபர்: 

AKLT. அப்துல் ரஹ்மான்.BBA. 

வாழ்த்துக்கள் தெரிவிக்க:

M. ஷபீர் அலி.

தொலைபேசி எண்: 0091 9750 308597... 

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ரத்ததான முகாம் -நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு !!!






























தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 2 நடத்திய மாபெரும் இரத்த தான 

முகாம் ,மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் இன்று 22.12.2013 நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிளைத்தலைவர் சகோ அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார்கள் . 

துணைத்தலைவர் நிஜாம் அலி அவர்கள் வரவேற்புரை வழங்க, மாவட்ட துணை 
\
கண்காணிப்பாளர் ( டி.எஸ். பி) ஆர். கணபதி அவர்கள் முகாமைதுவங்கி வைத்தார்கள். இதில் 37 சகோதரர்கள் இரத்தத்தை கொடையாக கொடுத்தனர். ஹாஜ அலாவுதீன் மாவட்ட மாணவரணி பேச்சாளர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார் , 

மருத்துவர் இளங்கோ MBBS அவர்கள் இரத்ததானம் செய்வதினால் ஏப்படும் 

நனமைகளை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள்.
முன்னாள் மாவட்ட தலைவர் A.அன்சாரி மற்றும் முன்னாள் இந்நாள நிர்வாகிகள் 

முன்னிலை வகித்தனர் . இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சி மன்ற தலைவர் கோ . 

அருணாச்சலம் , மாவட்ட தி மு க துணை செயலாளர் M.S கார்த்திக் , ரோட்டரி மண்டல 

பொறுப்பாளர் G. கிருஷ்ணமூர்த்தி, மனித உரிமை கண்காணிப்பகத்தின் மாநில தலைவர் 

G.பஷீர் அஹமது மற்றும் பலர் கலந்து கொண்டனர் . இறுதியாக சேதி தொடர்பாளர் தமீம் அன்சாரி அவர்களின் நன்றிஉரையோடு நிகச்சி 

இனிதே நிறை வேறியது ...

தகவல் : முத்துப்பேட்டை செய்யது இப்ராஹிம்

மௌத்து அறிவிப்பு "ஆமினா அம்மாள் "

முத்துப்பேட்டை, டிசம்பர் 25: முத்துப்பேட்டை ஓடக்கரை தெரு, மர்ஹும் M.A.ஷாகுல் ஹமீது மரைக்காயர் அவர்களின் மகளும், S.ஷேய்க் அலாவுதீன், S.நெய்னா முஹம்மது ஆகியோர்களின் சகோதரியும், பசூல் ஹக் (பத்திரிகை) அவர்களின் கொளுந்தியாளும், சல்மான் அவர்களின் மாமியும், சாலிஹ், அலிஃப் ஆகியோர்களின் சிறிய தாயருமாகிய "ஆமீனா அம்மாள்"அவர்கள் இன்று (25.12.2013 புதன் கிழமை) மதியம் 2.30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்........

அன்னாரின் ஜனாஸா நாளை 26.12.2013 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கொத்பா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.


அன்னார் அவர்களின் மறைவால் துயரத்திலிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் சபூரையும்,சகிப்புத்தன்மையையும் தந்தருள்வானாக

அறிவிப்பவர்.
S.ஷேய்க் அலாவுதீன்
+91 967 771 39 79

யார் திருநங்கைகள் ?திருநங்கைகளின் அறிகுறிகள் என்ன ?இது பற்றிய ஓர் சிறப்பு பார்வை !!!

திரு நங்கைகள் என்பவர்கள் யார் ?
யார் திரு நங்கைகள்? அறிகுறிகள் என்ன? (ட்ரான்ஸ்கேந்தெரெட்) – ஒரு பார்வை!



சமூகத்தில் 9, அலி, அரவாணி என பல பெயர்களால் அழைக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் இவர்களை ஆணா, பெண்ணா என்று வகைக்குறிப்பது கடினம் அல்லது முடியாது. அவர்களின் சமூக நடத்தைகளை விடுத்து ஆரம்பத்தில் விஞ்ஞான மருத்துவ ரீதியில் ஆராய்வோம்.
23 ஜோடி குறோமோசோம்களில் ( தாயிடம் இருந்து 23 தந்தையிடம் இருந்து 23) இருந்து உருவாகும் ஒரு குழைந்தையின் உடலில் பல்வேறு ஹோர்மோன்கள் தொழிற்படுகின்றன.
அவற்றில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் என்பவை ஆண் பெண் தன்மையைத் தீர்மானிக்கும் ஹோர்மோன்களாக இருக்கின்றன.
ஒரு ஆணிற்கு டெஸ்டோஸ்டிரோன் ஹோர்மோன் அதிக அளவில் சுரக்கும் அதேவேளை சிறிய அளவில் ஈஸ்ட்ரோஜனும் இருக்கும்.
பெண்ணாக இருப்பின் ஈஸ்ட்ரோஜன் ஹோர்மோன் அதிகமாகவும் குறைந்த அளவில் டெஸ்டோஸ்டிரோனும் இருக்கும்.
( சிசு உருவாகி 6-7 வாரங்களின் பின்னரே ஆண் பெண் ஹோர்மோன்கள் உற்பத்தியாகின்றன, எனவே ஆணிற்கு பெண்ணின் அடையால உறுப்புக்களும் பெண்ணிற்கு ஆணின் அடையால உறுப்புக்களும் வளர்ச்சியடையாத நிலையில் அமைந்திருக்கும். )
குழந்தை பிறந்ததும் பிறப்புறுப்புக்களைக் கொண்டு ஆண்,பெண் என தீர்மானித்து விடுகிறார்கள். எனினும் 4-5 வயதிலேயே அந்த குழந்தை எந்த வகுப்பை சார்ந்தது என்பதை தீர்மானிக்க முடியும்.
உடல் ரீதியாக ஆணாக இருக்கும் ஒரு குழந்தை மனரீதியாகவும் நடத்தையிலும் பெண்ணாக நடக்கும் பட்சத்திலும் அதற்கு அறிவு எட்டி தான் ஆண் அல்ல பெண் தான் என்பதை உணரும் பட்சத்திலும் அந்த பிள்ளை பெண்ணாகவே கருதப்பட வேண்டும் என சமீபத்திய மருத்துவசட்டங்கள் கூறுகின்றன. ( ஆணாக உணரும் பெண் பிள்ளை; ஆணாக கருதப்படவேண்டும் என்பதும் உள்ளடங்குகிறது. )
ஒரு குழந்தை “அரவாணி/ திரு நங்கை”யாக வளர்கிறதா என்பதை ஆரம்பத்திலேயே அறிந்து அந்த குறையைப் போக்ககூடிய சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.
*ஆண் பிள்ளையொன்று எந்நேரமும் பெண்பிள்ளைகள் விளையாடும் பொம்மைகளுடன் (பார்பி உள்ளடங்களான பொம்மைகள்.) விளையாடுமாயின் சற்று கவணமாக இருக்கவேண்டும். அந்த பிள்ளைக்கு அதே வயது ஆண் பிள்ளைகள் விளையாடும் மொம்மைகளை ( உதாரணமாக, ஸ்பைடர்மான் (அக்ஷன் பொம்மைகள்) கொடுத்துப் பழக்கவேண்டும்.
அதுக்கு அக்குழந்தை பழகமறுக்கும் பட்சத்தில் (6 மாதங்களுக்கு மேலும்) உடனடியாக மருத்துவரிடம் அழைத்துசென்று ஹோர்மோன் டெஸ்ட் செய்யவேண்டும். பிறகு மருத்துவர் குறையிருப்பின் ஹொர்மோன் சிகிச்சையளிப்பார்.
( இந்த நடத்தை விதி, பெண் குழைந்தைகளுக்கும் பொருந்தும்.)
* பெண்பிள்ளையொன்று எந்நேரமும் ஆண் பிள்ளைகளுடன் மட்டும் விளையாடிக் கொண்டு தன் வயது பெண் பிள்ளைகளுடன் சேராமல் இருந்தால் அதுவும் கவணத்திற்குரியது, பிற்காலத்தில் திரு நங்கையாக அல்லது லேஸ்பியனாக வாய்ப்புண்டு. ( இத்தகவல் இன்னமும் விஞ்ஞான ரீதியில் உறிதியானதல்ல, கருத்துக்கணிப்பு ரீதியில் மாத்திரமே உறுதியாகியது.)
( இவ் நடத்தை விதி, ஆண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.)
—-
நம்ப கடினமானதாக இருப்பினும் இன்னொரு உண்மை, உலகில் உள்ள சில ஆண்களுக்கு க்ஷ்க்ஷ் குறோமோசோம்களும், சில பெண்களுக்கு க்ஷி குறோமோசோம்களும் மாறுதலாக இருக்கும். உலகின் 4% ஆனவர்கள் இப்படியுள்ளார்கள்.
( சாதாரணமாக ஆண்களுக்கு க்ஷி உம் பெண்களுக்கு க்ஷ்க்ஷ் என்றும் குறோமோசோம் அமைந்திருக்கும்.)

மௌத் அறிவிப்பு "குட்டியார் பள்ளி இமாம்" ஹாபீஸ் இமாம் மௌலவி சாகுல் ஹமீது "

டிசம்பர் 24: முத்துப்பேட்டை குட்டியார் பள்ளியில் முன்னால் இமாமாக பணி புரிந்து வந்த மேலப்பாளையம், 81 தெற்கு தைக்கால் தெரு வினைச்சேர்ந்த இமாம் மவுலவி, ஹாபிஸ், “K.M ஷாகுல் ஹமீது” நூரிய்யி அவர்கள் இன்று 24.12.13 மேலப்பாளையத்தில் மௌத்தாகி விட்டார்கள்.
 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்….
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில்,நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னார் அவர்களின் மறைவால் துயரத்திலிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ்சபூரையும், சகிப்புத்தன்மையையும் தந்தருள்வானாக….
இதர தகவல் பெற….
81 தெற்கு தைக்கால் தெரு,
மேலப்பாளையம்.
+91 9894 609 490
+ 91 7708 181 306

மௌத்து அறிவிப்பு :"ஜெய்னம்புகனி "

டிசம்பர் 22: முத்துப்பேட்டை பக்கிர்வாடி தெரு,  (S. பசீர் அஹமது வீடு) மர்ஹூம் கொடுவா M.M. முகம்மது பாவா அவர்களின் மகளும் மர்ஹூம் S. காசிம் பக்கிர் அவர்களின் மருமகளும் மர்ஹூம் S.K. சேக் அலாவுதீன் அவர்களின் மனைவியும் முகைதீன் அடுமை, சாகுல் ஹமீது, அஹமது ராவுத்தர் அவர்களின் சகோதரியும் S. தாவுது கனி, S. பசீர் அஹமது, மர்ஹூம் S. யாக்கத் அலி, மர்ஹூம் S. முகம்மது அலியார், S. தப்ரூக் அலி, S. மைநூர்தீன், S. ராஜ் முஹம்மது, S. அயூப்கான், S. காதர் பாட்சா அவர்களின் தாயாரும் மர்ஹூம் நெருப்பு பாருக், மர்ஹூம் அமானுல்லா, P. முகம்மது அலி அவர்களின் மாமியாருமாகிய “ஜெய்னம்பு கனி” அவர்கள் இன்று (22-12-2013) மாலை 4.30 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள். இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி,  ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின்  கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னார் அவர்களின் மறைவால் துயரத்திலிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள்,மற்றும்  நண்பர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் சபூரையும், சகிப்புத்தன்மையையும்  தந்தருள்வானாக ஆமீன்.
அறிவிப்பவர்
S. தாவுது கனி & சகோதரர்கள்

ஆபத்தான சூழ்நிலையில் நிதி உதவியின்றி தவிக்கும் முத்துப்பேட்டை இளைஞர் -நிதி உதவி செய்திட எக்ஸ்பிரஸ் வேண்டுகோள் :

இந்தப் பதிவை அதிகமாகப் பகிருங்கள்! நீங்கள் பகிர்வதன் மூலம் எங்கோ ஒரு இடத்தில் பிறருக்கு உதவக் காத்திருக்கும் மனிநேயமுள்ளவர்களுக்கு சென்றடைய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது!! தயவு செய்து பகிருங்கள் பரப்புங்கள்!!

அவர்களுக்கு ஆதரவுக்கு ஆட்கள் இன்றி மருத்துவ மனையில் கிடக்கிறார் உணர்வின்றி கடந்த 20 நாட்களுக்கு முன் முத்துப்பேட்டை பைபாஸ் சாலையில் ஆட்டோ ஒட்டி கொண்டு போகும் போது ஆட்டோ நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்து விட்டார் .

முத்துப்பேட்டையை சார்ந்த நபீல் அஹமது என்பவர் கடந்த 20 தினங்களாக யாதொரு சிகிச்சையும் அளிக்காமல் தஞ்சை மருத்துவமனையில் இடுப்புக்கு கீழ் செயல் இழந்த நிலையில் பார்பதற்கு ஆட்கள் இல்லாத வகையில் அவதியுறம் செய்தி கேட்டு இன்று நேரில் சென்று பார்த்து மருத்துவர்களை அணுகி எனது நண்பர் முன்னாள் டீன் டாக்டர் குணசேகரன் மற்றும் டக்டர் கணேசன் ஆகியவர்களிடம் விபரம் சொல்லி மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

ஆனாலும் கையில் காசு இல்லாமல் மிகவும் சிரமாமான நிலையில் இருப்பதை அறிந்து நண்பர்கள் வட்டாரத்தில் செல் மூலம் தொடர்பு கொண்டு 20000 ஆயரம் நிதி திரட்ட பட்டுள்ளது உதவிக்கு ஆட்கள் இன்றி தவித்துடும் இந்த 25 வயது வாலிபனை காப்பாற்ற துவா செய்வதுடன் முடிந்தால் உதவி செயலாம்( என்னால் முடிந்த அதிக பச்ச உதவினை செய்து இருக்கிறேன்) அல்லது இதனை சேர் செய்யலாம்

விபரங்களுக்கு செயலார் ஆட்டோ ஸ்டான்ட் முத்து பேட்டை 04369 262789 உணர்வுகள் இல்லா நிலையில் பரிதாபத்திற்குரிய வகையில் டிரைவர் நபீல்


முத்துப்பேட்டையில் அல் மஹா வணிக வளாகம் திறப்பு விழா அழைப்பு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகர்யில் அல் மஹா வணிக வளாகம் திறப்பு விழா இன்ஷா அல்லாஹ் 01.01.2014 புதன்க்கிழமை அன்று சரியாக காலை 9 மணியளவில் அல் மஹா நிறுவனர் ஹைதர் அலி அவர்களின் தாயாரின் கைகளால் திறக்கப்பட உள்ளது.

அதை போல அன்று மாலை 4 மணியளவில் உங்களுடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு கோவை அனாடமிக் தெரபி ஹீலர்.பாஸ்கர் அவர்கள் உரையாற்ற உள்ளார்

இடம்: சிதம்பர ராமஜெயம் மஹால் , முத்துப்பேட்டை

தங்கள் உடல் நலம் பேணிகாக்க அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அன்புடன் அழைப்பது

S.M.ஹைதர் அலி
அல் மஹா நிறுவனர்
முத்துப்பேட்டை

முத்துப்பேட்டையில் பிரச்சினைக்குரிய இடத்தில் TNTJ மீண்டும் மார்கஸ் கட்ட அரசு அனுமதி..



முத்துப்பேட்டை, டிசம்பர் 21: தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளையின் மர்கஷ் கட்டிட வேலைகள் அல்லாஹ்வின் உதவியால் இன்று மீண்டும் ஆரம்பமாகியது. கூடியவிரைவில் முழுமைபெற அல்லாஹ்விடம் துவா செய்யவும்.

இப்படிக்கு 

தவ்ஹித்ஜமாத் நிர்வாகம் 


திருப்திகரமான செக்ஸ் ஆண்களின் ஆயுளை அதிகரிக்கும் ஆராய்ச்சியில் தகவல்

வாஷிங்டன், டிசம்பர் 18: அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வீட்டில் காணப்படும் ஈக்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். விஞ்ஞானிகள் பெண் ஈக்களின் ஹார்மோன்களை செயற்கையாக தூண்டி அதனை ஆண் ஈக்கள் மத்தியில் உலவச்செய்தனர். அந்த ஹார்மோன்கள் தூண்டப்பட்ட ஆண் ஈக்கள் செக்ஸ் உறவுக்காக முயன்றபோது அவற்றின் அருகே பெண் ஈக்கள் இல்லாததால் அவற்றால் உறவில் ஈடுபட முடியவில்லை. இதனால் அந்த ஆண் ஈக்களிடம் மன அழுத்தம் (ஸ்ட்ரெஸ்) அதிகரித்து இதை விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டறிந்தனர். 

இவ்வாறு மன அழுத்தம் அதிகரித்த ஆண் ஈக்கள், செக்ஸ் உறவில் ஈடுபட அனுமதிக்கப்பட்ட மற்ற ஆண் ஈக்களைவிட விரைவாக இறந்து விட்டன. என்பதையும் கண்டறிந்தனர். மன அழுத்தம் அதிகரித்த ஈக்களின் ஆயுட்காலம் 40 சதவீதம் குறைந்து இருந்தது. இதனைக் கொண்டு ஈக்களின் திருப்திகரமான செக்ஸ் உறவிற்கும் அதன் ஆயுளுக்கும் தொடர்பு இருப்பதாக கண்டறிந்தனர். இந்த ஆய்வு முடிவுகள் மனிதர்களுக்கும் பொருந்தும்.

ஈக்கள் மட்டுமல்ல, புழுக்கள் மத்தியில் செய்யப்பட வேறொரு ஆய்விலும் அவற்றின் ஆயுள்காலத்திற்கும் அவற்றின் திருப்திகரமான செக்ஸ் உறவிற்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்து உறுதி செய்து உள்ளனர். 


குஜராத் கலவரத்தின்போது வாஜ்பாய்-மோடி இடையே நடந்த கடித போக்குவரத்தை வெளியிட முடியாது: பிரதமர் அலுவலகம் கைவிரிப்பு



குஜராத், டிசம்பர் 18: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அப்போது பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய்க்கும் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடிக்கும் நடைபெற்ற கடித போக்குவரத்தின் நகல்களை தனக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக மனு செய்திருந்தார்.


குறிப்பாக, கலவரம் உச்சகட்டத்தில் இருந்த 27-2-2002 முதல் 30-4-2002 வரை நடைபெற்ற கடித பரிமாற்றத்தின்போது, அந்த கலவரத்தின் பின்னணியில் இருந்த சக்திகள் தொடர்பாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கும் குஜராத் முதல் மந்திரி மோடிக்கும் இடையில் இடம்பெற்ற தகவல் பரிமாற்றம் என்ன? என்று அந்த சமூக ஆர்வலர் பிரதமர் அலுவலகத்திடம் விளக்கம் கேட்டிருந்தார்.



ஒரு விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது அரசு சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வரும்போது, அவ்விவகாரம் தொடர்பான முக்கிய குறிப்புகளை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வழங்க வேண்டும் என அரசை யாரும் நிர்பந்தப்படுத்த முடியாது என்ற விதிவிலக்கை காரணம் காட்டி, “விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களை வழங்க முடியாது” என பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது.

முஸ்லிம்​ லீக் பெயரைக் களங்கப்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை: எச்சரிக்கை!

சென்னை, டிசம்பர் 15: பாரதீய ஜனதா கட்சியை முஸ்லிம் சமூகத்தில் எவரும் ஆதரிப்பார்கள் என்பது பகல் கனவே என குறிப்பிட்டுள்ள முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை இது போன்ற விஷமத்தனமான செயல்களுக்கு பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இருந்து ஒரு நபர் பிரிந்து சென்று புதிய கட்சியை தொடங் கியுள்ளதாகவும், அது நாடாளு மன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணியை ஆதரிக்க போவதாகவும் சில நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
அச்செய்திகளில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலிருந்து எவரும் பிரிந்து செல்லவும் இல்லை-சதக்கத்துல்லா என்ற நபர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை சார்ந்தவரும் அல்ல. இந்த தகவல் அவரை பா.ஜ.க அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ள காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அவர்களிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலை மையகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சதாம் என்.கே.எம்.சதக் கத்துல்லா, நிறுவனத் தலைவர், அகில இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், 66 மரைக்காயர் லெப்பை தெரு, மண்ணடி சென்னை -1 என முகவரியிட்டு 9677843231 என தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு லெட்டர் பேட் தயாரித்து பா.ஜ.க.,வுக்கு ஆதரவுக் கடிதம் அளிக்கப் பட்டிருப்பதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்த வரை மாநில மாவட்ட நிர்வாகிகளில் என்.கே. எம்.சதக்கத்துல்லா என்ற பெயரில் ஒருவரும் இல்லை. எங்களின் துணை அமைப்புகளான முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திர தொழிலாளர் யூனியன் போன்றவற்றிலும் இந்த பெயரில் எந்த நிர்வாகியும் இல்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை பயன்படுத்தியது உண்மையாக இருக்குமே யானால் அது பாரதீய ஜனதா கட்சி தலைமையை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட திட்ட மிட்ட மோசடி செயலேயாகும்.
மதசார்பற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் ஜனநாய சக்திகளே நாட்டை ஆளும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை ஒருங்கி ணைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம் சமுதாயமும் இத்தேர்தலில் ஒருமுக முடிவெடுக்க வலியுறுத்தும் வகையில் எதிர் வரும் 28 - ம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாட்டையும், இளம்பிறை எழுச்சி பேரணியையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்துகிறது. அதில் பள்ளிவாசலை மையமாகக் கொண்ட 12 ஆயிரம் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள் பல்லாயிரக் கணக்கில் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க.,விற்கு முஸ்லிம் சமுதாயம் ஆதரவளிக்கும் என்று வெளிவரும் செய்தி பகல் கனவேயாகும்.
இதுபோன்ற காரியங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை மோசடியாக பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் படும்."
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.​

பெண்களே.!!! இந்த நிலைக்கு ஆளாகி விடாதீர்கள்....!!


உலகம், டிசம்பர் 15: இந்த புகைப்படத்தில் காணப்படும் சுஷ்மிதா என்ற பெண் தன்னுடைய முகநூலில் தம்முடைய போட்டோவை பதிவேற்றம் செய்திருந்தார். 

காமத்தின் சகதியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கயவர்கள் சுஷ்மிதாவின் போட்டோவை வைத்து பல்வேறு போலி முகநூல் கணக்கு திறந்து... இவர் விலை மாது என்று விளம்பரம் செய்து சமுதாயத்தில் இழிவை ஏற்படுத்தியிருந்தார்கள்.

தான் இழிவுப்படுத்தப்பட்டதை அறிந்த பெண் தற்கொலையை தேர்வு செய்து... இந்த மாபாதக முடிவுக்கு வந்து விட்டாள். 

கண்ணியமாக வாழ்ந்து வரும் சமுதாய கண்மணிகளே... !

எத்தனையோ முறை சொல்லிவிட்டோம் உங்களுடைய புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்யாதீர்கள் என்று... 

வாழும் உலகில் இந்த பெண்ணை போன்று நீங்களும் உங்களது வாழ்வை தொலைக்க வேண்டுமா ? 
என்பதை நீங்களே சிந்தனை செய்து கொள்ளுங்கள்..!

சொல்ல வேண்டியது நமது கடமை..!

இல்லை பட்டு தான் நான் திருந்துவேன் .. என்று நீங்கள்... அடம்பிடித்தால்... அப்புறம் உன் தலையெழுத்து.

நன்றி:

உம்மு ஷாமீஹா 

மாமா மணியன் செய்த மாமா வேலை தான் இந்த BJP உடன் சேருந்த முஸ்லிம் கட்சி நாடகம்.



சென்னை, டிசம்பர் 14: ஆள் கிடைக்கமால் அனாதை ஒருவனை பிடித்து மாமா மணியன் செய்த மாமா வேலை தான் இந்த பிஜே பி உடன் சேருந்த முஸ்லிம் கட்சி நாடகம் இந்திய தவ்ஹித் ஜமாத் பொது செயலாளர் இக்பால் சத்தியம் தொலைக்காட்சியில் பரபரப்பு பேச்சு 

சத்தியம் டிவி : இப்படி முஸ்லிம் கட்சி பிஜேபி க்கு ஆதரவை கொடுத்ததை நீங்கள் எப்படி பார்க்கிரிர்கள் ஆனால் உங்கள் முஸ்லிம் அமைப்புகளின் வெப் சைட்டுகள் எல்லாம் தேடி விட்டோம் இப்படி ஒரு இயக்க பெயரை இல்லையே !!!



சையது இக்பால் அவர்கள் : நான் நீண்ட அரசியல் வரலாற்றை நான் படித்தவன் .பயணித்தவன் என்ற முறையில் தமிழ் நாட்டில் இதுவரை இப்படி ஒரு முஸ்லிம் அமைப்பு பெயரைவோ? இப்படி அயோக்கிய நபரையோ ?பார்த்தது இல்லை .மாறாக கந்தியாவதி போல் தன்னை காட்டி கொண்டு பிஜேபிக்கு ஆள் பிடிக்கும் புரோக்கராக மாறியுள்ள மணியன்! தமிழ் நாடு முழுவதும் சுற்றி பார்த்தார் யாருமே பிஜேபிக்கு ஆதரவு அளிப்பது போல் இல்லை .அதனால் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி வேண்டும் என்று அநாதை ஒருவரை பிடித்து வந்து முஸ்லிம் இயக்கம் ஆதரவு என்று இப்படி ஈன வேலையே பார்த்து உள்ளார். 

அவரால் இல்லை நர பலி மோடியால் அல்லாஹ்வை உண்மையாக வணங்க கூடிய உண்மையான முஸ்லிம்களை ஆதரவு என்ற வலையில் வீழ்த்த முடியாதுஅப்படி ஒரு முஸ்லிமும் ஆதரவு தர மாட்டான் உதாரணதுக்கு ததஜ என்ற அமைப்பில் உள்ள ஒரு நிருவாகி 10 % இட ஒதிக்கீடு அளித்தால் பிஜேபிக்கு ஆதரவு அளிப்போம் என்று அறிவிப்பு செய்தற்கு முஸ்லிம் சமுதயாத்தில் இருந்து பெரிய கண்டனங்கள் எழுந்தன அதனால் . நாங்கள் பாராளமன்றத்தில் இன்ஷா அல்லாஹ் யாரை அமரவைப்பது என்பதை விட யாரை அமர விடகூடாது என்ற விசயத்தில் தெளிவாக இருக்கிறோம் . முஸ்லிம் லீக் தலைவர் எங்கள் அமைப்புக்க களங்கம் விளைவித்து விட்டதாக அந்த அயோக்கியன் சதக்கத்துல்லாவை சொல்லி உள்ளார் நாங்கள் சொல்லுகிறோம் அவன் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் களங்க படுத்தும் வேலையே மணியன் செய்ய தொடங்கி உள்ளார் அதுவும் இல்லாமல் ,இந்த நாடகம் எப்படி மோடி குல்லாவும் புர்க்காவும் விலைக்கு வாங்கி கூட்டத்தை கூட்டி முஸ்லிம்கள் ஆதரவு நாடகத்தை நடத்தினாரோ அதன் தொடர்ச்சி இது அந்த அயோக்கியனை ஒரு போதும் பிரதமராக முஸ்லிம்கள் வர விட மாட்டோம் 

மௌத்து அறிவிப்பு. "முஹம்மது தாஹா"


முத்துப்பேட்டை தெற்கு தெரு மர்ஹும் முஹம்மது தம்பி அவர்களின் மகனும்,
நிஜாமுதீன்,அமீர்கான் ஆகியோர்களின் தகப்பனாரும், M.K.S.நாகூர் பிச்சை சகோதரர்களின் மச்சானும், மர்ஹும் முஹைதீன் காதர் சேக்காதி, மர்ஹும் ஜைனுல் ஆப்தீன் ஆகியோர்களின் சகோதரருமாகிய (குட்டியார் பள்ளி அருகில் வடை சுட்டு வியாபாரம் செய்து வந்த) "முஹம்மது தாஹா" அவர்கள் நேற்றிரவு ( 13/12/13 வெள்ளிக் கிழமை) இரவு 10 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்)

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ், அரபு சாஹிபு பள்ளி மைய வாடியில் இன்று மாலை 4 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

மேலும் தொடர்புக்கு:

M.K.S.நாகூர் பிச்சை 

9976 28 42 16.

நமது நிருபர்:

K.M. காதர் கனி (பாடகர்)


முத்துப்பேட்டை பலத்த காற்றால் இருளில் மூழ்கியது. அதிகாரிகள் விரைந்து வந்து நடவடிக்கை.


முத்துப்பேட்டை, டிசம்பர் 14: முத்துப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான காற்றுடன் மழை பெய்து வருகிறது. பெறும் பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க போகவில்லை. இந்த நிலையில் நேற்ற முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்ததால் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன மரங்களும் சாய்ந்தன. இதனால் முத்துப்பேட்டை நகரம் மற்றும் சுற்றுப்புர சிராமங்கள் இருளில் மூழ்கியது. இதனால் பொது மக்கள் மத்தியில் அதிர்ப்தி ஏற்பட்டது. 

தகவல் அறிந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மாவட்ட வருவாய் ஆய்வாளர் மணிமாறன், கோட்டாச்சியர் சுப்பு, வட்டாச்சியர் ராஜகோபால், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் சிங்காரவேலு, கிருஷ்ணகுமார், ராஜாராஜசோழன் மற்றும் மின்சார வாரிய உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கைகள் மற்றும் சீரமைப்பு பணிகளை உத்தரவிட்டார்கள். பின்னர் பேட்டை கிராமத்தில் விடிய விடிய அதிகாரிகள் நின்று நேற்று அதிகாலை வரை நின்று பணிகளை மேற்கொண்டனர்.

முத்துப்பேட்டை பேருராட்சியின் நிர்வாக சீர்கெட்டை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.




முத்துப்பேட்டை, டிசம்பர் 14: முத்துப்பேட்டை சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி சார்பில் பேட்டை சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியும் ஆகிவிட்டது. இதை சரி செய்யாத பேருராட்சியை சரிசெய்ய வலியுறுத்தியும், தெருக்களில் தினம் குப்பைகள் அகற்றுவது கிடையாது. இதனால் சுகாதார கேடாகி கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகின்றன. இதனால் டெங்கு, மலேரியா, போன்ற வைரஸ் நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் தினம் சுத்தம் செய்து குப்பைகளை அப்புறப்படுத்தாத பேருராட்சியின் நிர்வாக சீர்கெட்டை கண்டித்தும், மின்சார வாரியம் ஆசாத் நகர் மீன் மார்க்கெட் அருகில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் தொடும் தூரத்தில் உள்ளதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அதை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும், முத்துப்பேட்டையில் இருக்கும் டாக்டர்கள் இரவு நேரங்களில் அவசரத்திற்கு மருத்துவம் பார்ப்பது கிடையாது. 

நோயாளிகள் அபாய கட்டத்திற்கு போகும் நிலை ஏற்படுகிறது அதனால் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தியும் மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை பேருராட்சி அலுவலகம் முன்பு நடைப்பெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் நெய்னா முகம்மது தலைமை வகித்தார். பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் A. அபுபக்கர் சித்திக் அவர்கள் கண்டன உரையாற்றினார். இதில் பலரும் பேசினார்கள். நகர துணைத் தலைவர் அசரப் அலி, துணைச் செயலாளர் ஜெகபர் அலி, நிர்வாகிகள் எர்சாத், மண்சூர்அலி, சதாம், மைதீன் உட்பட சுமார் 200ம் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். நகர செயலாளர் தீன் முகம்மது நன்றி கூறினார்.

கூத்தாநல்லூரும் -தம்ரூட்டும் !!ஓர் ருசிகர பார்வை !!!

கூத்தாநல்லூர் வந்து செல்பவர்கள் பைகளில் அவசியம் தம்ரூட் இருக்குமாம்.!!

கூத்தாநல்லூர், டிசம்பர் 13: தனக்கென தனிப் பாரம்பரியம் கொண்ட ஊர் கூத்தாநல்லூர். நகரம் என்று அழைக்கப்பட்டாலும் சற்றே பெரிய கிராமமாகக் காட்சியளிக்கும் கூத்தாநல்லூர் ஒருவித்தியாசமான ஊரும்கூட. சுற்றுவட்டாரக்காரர்களால் ‘குட்டி வளைகுடா’ என்றுஆழைக்கப்படும் கூத்தாநல்லூரின் பெரும்பாலான ஆண்கள் வளைகுடா நாடுகளில்இருக்கிறார்கள்.
தம்முடைய வாழ்நாளின் பெரும்பாலான நாட்களை வளைகுடா நாடுகளிலேயே கழித்துவிடுவதாலோ என்னவோ அந்நாடுகளின் கலாச்சாரம் கூத்தாநல்லூர்க்காரர்களின் ஒவ்வொரு விஷயத்திலும்ஏதேனும் ஒரு வகையில் பிரதிபலிக்கிறது. கூத்தாநல்லூருக்குச் செல்பவர்களுக்கு மூன்று அனுபவங்கள் முக்கியமானவை.
நீண்ட வீதிகளின் இருமருங்கிலும் மாளிகைகளாய்க் காட்சியளிக்கும்வீடுகள்; மையத்தில் பிரியாணியைக் குவித்து சுற்றிலும் நால்வர் அமர்ந்து சாப்பிடும்நல்விருந்து, ஒருபோதும் திகட்டாத வீட்டுப் பணியாரம் – தம்ரூட்.
கூத்தாநல்லூரில் அந்தக் காலத்திருந்தே வீட்டுப் பணியாரம் மிகவும்பிரசித்திபெற்ற ஒரு பலகாரம். பெயரில் என்னவோ பணியாரம் என்றிருந்தாலும் நாம்வழக்கமாகக் குறிப்பிடும் பணியார வகையைச் சேர்ந்தது அல்ல இது; விசேஷமானது.பண்டிகை நாட்கள், பிறந்த நாள், நிச்சயதார்த்தம், திருமணம், மணமக்கள் அழைப்பு,வெளிநாட்டுக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி… இப்படி விசேஷமான தருணங்களில் மட்டுமேவீட்டுப் பணியாரம் செய்வார்கள். கூத்தாநல்லூர்க்காரர்கள் யாரேனும் திருமணஅழைப்பின்போது அழைப்பிதழுடன் வீட்டுப் பணியாரமும் வைத்து உங்களைஅழைத்தால் அவர் உங்களை மிக முக்கியமானவராகக் கருதுகிறார் என்று பொருள்.அதாவது வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பதுபோல் இது ஒருவகை கௌரவம்!
ரவை, முட்டை, பால்திரட்டு, ஜீனி, நெய், முந்திரி சேர்த்துச் செய்யப்படும்இந்த வீட்டுப் பணியாரம் எல்லோருக்கும் கைகூடாது. அதனாலேயே, அந்தக் காலத்தில்வீட்டுப் பணியார ஆத்தாக்கள் நிறைய பேர் இப்பகுதியில் இருந்தார்கள்.
யாருக்குத்தேவையோ அவர்களுடைய வீட்டுக்கே வந்து இவர்கள் வீட்டுப் பணியாரம் செய்து தருவார்கள். விசேஷ நாட்களில் இவர்களுக்கு ஏகக் கிராக்கியாக இருக்கும்.
ஆனால்,கூத்தாநல்லூரிலேயே இப்போது வீட்டுப் பணியாரம் என்ற பெயரையும் அதன்கதையையும் அடுத்து வரும் தலைமுறைக்குத் தெரியாமல் போகும்படி செய்துவிட்டார்ஒருவர். அவர்… எம்.ஐ. முஹம்மது தமீம்!
அவர் தொடங்கிய ‘மௌலானா பேக்கரி’யில் வீட்டுப் பணியாரம் தம்ரூட்டாகப்புதிய அவதாரமெடுத்த இந்த 19 ஆண்டுகளில் வீட்டுப் பணியார ஆத்தாக்கள் காணாமலேபோய்விட்டார்கள். மேலே சாக்லேட் நிறத்திலும் உள்ளே மஞ்சள் நிறத்திலும் கேக்போல இருக்கும் தம்ரூட் திகட்டாத ஒரு பலகாரம்.
நினைத்து நினைத்துச் சாப்பிட அழைக்கும் தம்ரூட்டின் கவர்ச்சிக்குக் காரணம் அதன் சுவை மட்டுமல்ல; அதில் எப்போதும் உறை கொண்டிருக்கும் உருகும் நெய்யின் மணமும்கூட. இந்த மணம்கூத்தாநல்லூர்க்காரர்களை மட்டும் கட்டிப்போடவில்லை. கூத்தாநல்லூர் செல்லும்எவரையும் கட்டிப்போட்டுவிடுகிறது.
‘மௌலானா பேக்கரி’ உரிமையாளர் தமீம் சொன்னார்: “மொஹல் உணவுவகையைச் சேர்ந்த வீட்டுப் பணியாரம், இந்த மக்களின் கொண்டாட்டங்களிலிருந்துபிரித்துப் பார்க்க முடியாத ஒன்று. நாங்கள் இந்தக் கடையைத் தொடங்கியதும்வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றியபோது வீட்டுப் பணியாரமேமுதலில் ஞாபகத்துக்கு வந்தது. அதுவரை வீடுகளில் மட்டுமே செய்யப்பட்டுவந்தவீட்டுப் பணியாரத்தைக் கடையில் செய்து விற்கத் தொடங்கினோம். அதன் ருசியைக்கூட்டியதுடன் சீக்கிரம் கெட்டுப்போகாதவாறும் தயாரித்தோம். இப்போது வளைகுடாநாடுகள் வரை எங்கள் கடை தம்ரூட் பிரபலம்” என்றார் தமீம்.
இவர்கள் கடையில் குறிப்பிட வேண்டிய இன்னொரு ஐட்டம் பால் மணம் மாறாதஅமுல் ரஸ்க். தமிழக பேக்கரிகளில் இவர்களுக்கென்று ஒரு முக்கிய இடத்தை இந்தரஸ்க் பெற்றுத் தந்திருக்கிறது. “இந்த இடத்தைவிடவும் தம்ரூட் பெற்றுத்தரும் இடம்இன்னும் பெரிதாக இருக்கும்” என்று சிரிக்கிறார் தமீம்.
கூத்தாநல்லூர் வந்து செல்பவர்கள் பைகளில் அவசியம் தம்ரூட் இருக்குமாம். ஊர் திரும்பியதும் நம் பையைத் திறந்து பார்த்தோம். நெய் வாசம் மட்டும்இருந்தது!

முகநூல் வதந்திக்கு குணங்குடி அனிபா மறுப்பு

சமுதாய மக்களுக்கு குணங்குடி அனிபாவின் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)





பழனி பாபா அவர்களின் மறைவைத் தொடர்ந்து நான் ஜிகாத் கமிட்டி தலைவராகவும், சகோ. தடா ஜே. அப்துல் ரஹீம் பொதுச் செயலாளராகவும் இணைந்து சில மாதங்கள் சமூகப் பணி செய்தோம். அதன்பிறகு பிரதான வழக்கில் நானும் சகோதரரும் பல வருடங்கள் சிறையில் இருந்தோம். அந்த வழக்கில் விடுதலையான பிறகு என்னுடைய பணி தமுமுக மூலம் தொடர்கின்றது. இந்த நிலையில், பொது நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்கின்ற பொழுது இந்திய தேசிய லீக் சார்பாக சகோ. ஜே. அப்துல் ரஹீம் அவர்களும் கலந்துகொள்கின்றார்கள்.

அப்படி கலந்துகொள்ளும் போது சகோதரர் அப்துல் ரஹீம் அவர்கள் பலமுறை "தேசிய லீக்கின் தலைவர் பதவியை காலியாக வைத்துள்ளோம்; அந்தப் பொறுப்பை நீங்கள் ஏற்று இணைந்து செயல்படுவோம்'' என்று அழைப்பார். அப்படி அழைக்கின்ற பொழுது, "நான் இனிமேல் எந்த இயக்கங்களிலும் சேரமாட்டேன், உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும் வரை தமுமுக மூலமாக என் சமூகப்பணி தொடரும்'' என்று ஒவ்வொரு முறையும் நான் அவருக்கு பதில் சொல்வேன்.

அந்த அடிப்படையில் கடந்த 10.12.2013 அன்று, வழக்கறிஞர் புகழேந்தி அவர்கள் நடத்திய நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டேன், அப்துல் ரஹீமும் கலந்துகொண்டார்கள். அப்போதும் என்னை அழைத்தார்கள். நானும் வழக்கமான எனது பதிலை சொல்லிவிட்டேன்.

இதுதான் உண்மை. இனிவரும் காலங்களில் தமுமுகவைத் தவிர எந்த ஒரு இயக்கங்களிலும் சேர்ந்து சமூகப்பணி செய்வதற்குண்டான எண்ணம் இல்லை என்பதை சமுதாய மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்,

(குணங்குடி ஆர்.எம்.அனிபா)

முத்துப்பேட்டையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் தவறி விழுந்து பலி.

முத்துப்பேட்டை டிச.13
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் நேற்று காலை முதல் இரவு வரை இலேசான காற்றுடன் மழை பெய்து வந்தது. இந்த பகுதியைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிகக் செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மேகமூட்டம் சாதாரணமாக காணப்பட்டதால் முத்துப்பேட்டை தெற்குத்தெரு கோரையாற்று கரையிலிருந்து படகு மூலம் மீன் பிடிக்க அதே பகுதியைச் சேர்ந்த கமால் முகைதீன், பரிதுஉஸ்மான், அப்துல் சலாம், தாவூது இப்ராஹிம், தாவூது, தருஸ் மரைக்காயர், ராஜ்முகம்மது ஆகிய 7 மீனவர்கள் தனிப் படகு மூலம் கடலுக்கு நேற்றுக் காலை 8-மணிக்கு மீன் பிடிக்கச் சென்றனர். சுமார் மதியம் 12 மணியளவில் கடலுக்கு அருகில் கழிமுனை லகூன் அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது ராஜ்முகம்மது(57) அப்பொழுது வீசிய காற்று மற்றும் குளிர் காரணமாக நடுக்கம் ஏற்பட்டு படகில் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் ராஜ்முகம்மது உடலை கூடச்சென்ற 6 மீனவர்களும் முத்துப்பேட்டை தெற்கத்தெரு கோரையாற்று கரைக்கு படகு மூலம் கொண்டு வந்து சேர்த்தனர். பலியான ராஜமுகம்மதுக்கு மனைவி மற்றும் நிஷா தமீம் அன்சாரி ஆகிய குழந்தைகள் உள்ளன. 


இதுகுறித்து முத்துப்பேட்டை போலிசார் மற்றும் கடலோர காவல்படை போலிசார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து அப்பகுதி மீனவர் சங்க தலைவர் முகம்மது இஸ்மாயில் கூறுகையில் காற்று மழையின் காரணமாக மீன் பிடிக்க யாரும் செல்லவில்லை. இந்த நிலையில் இன்று காலை(நேற்று) இவர்கள் 7 பேரும் மீன் பிடிக்கச் செல்லும்பொழுது மீனவர் ராஜ்முகம்மது பலியானானர். மிகவும் ஏழை மீனவ குடும்பத்தைச் சேர்ந்த அவரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிவாரணம் வழங்கி உதவி செய்ய வேண்டும் என்றார்.




தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)