முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மவுத் அறிவிப்பு:"ஹாஜா சர்புதின்"

முத்துப்பேட்டை அகஸ்ட் 08 : தெற்குத் தெரு பேட்டை ரோடு மர்ஹும் M.K. சுல்தான் முஹிதீன், மர்ஹும் M.K. காதர் முஹைதீன், மர்ஹும் M.K. ஷேக் நூர்தின் இவர்களின் தம்பி மகனும், மர்ஹும் M. காதர் உசேன் அவர்களின் தம்பியும், M.K.S பரக்கதலி அவர்களின் மைத்துனரும் M. முஹம்மத் சாதிக் ப்ரோதேர்ஸ் அவர்களின் மச்சானும், M.K. முஹம்மத் ராவுத்தர் அவர்களின் மகனுமஹிய செல்ல வாப்பா என்ற "ஹாஜா சர்புதின்" அவர்கள், நேற்று முத்தினம் இரவு 7 மணியளவில் அஜ்மான் துபாயில் மவுத்தாஹி விட்டார்கள், (இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹீ ராஜிவூன்)
அன்னாரின் ஜனாசா துபாயில் நல்லடக்கம் செய்யப்ப் படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்:

பாரி ஹாஜி M. முஹம்மத் ஷேக்.

உலகில் மிக பயங்கரமான "Autorun" வைரசை தடுக்கும் மிக இலகுவான முறை

ஆகஸ்ட் 07 : உலகில் மிக பிரசித்திபெற்ற வைரஸ்களில் ஒன்று Autorun.inf ஆகும். இவ்வகை வைரஸ்கள் மிகவும் பயங்கரமானதும் கணணி பாவணையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இப்போது பார்ப்போம் எப்படி Autorun வைரஸ் ஐ தடுப்பது என்று.

01. Run command ஐ (Ctrl + R) திறந்து gpedit.msc என டைப் செய்து ok பட்டனை அழுத்துங்கள்.

02. பின் ஒரு pop-up windows காட்சித்தரும் அதில் Administrative Templates கீழ் System என்பதை தெரிவு செய்யுங்கள்

03. அங்கு Turn Off Autoplay என்பதை டபல் கிலிக் (double click)செய்யுங்கள்.

04. பிறகு வரும் pop-up windows வில் Turnoff Autoplay என்பதற்கு கீழுள்ள Enabled என்பதையும் Turnoff Autoplay on இல் All drives தெரிவு செய்யுங்கள்.

05. இப்பொழுது நீங்கள் பென் ட்ரைவ்வை திறக்கும் வரை அது திறக்காது.

நன்றி-லங்காசிறி


கீழே கொடுத்திருக்கும் வார்த்தைகள் கணினியில் நாம் சில இடங்களில் உபயோகிக்கும் வார்த்தைகள் அதற்கான முழு விரிவாக்கமும் உள்ளது.

ADSL - Asymmetric Digital Subscriber Line
AGP - Accelerated Graphics Port
ALU - Arithmetic Logic Unit
AMD - Advanced Micro Devices
ASCII - American Standard Code for Information Interchange
ASIC - Application Specific Integrated Circuit
ASPI - Advanced SCSI Programming Interface
AT - Advanced Technology
ATX - Advanced Technology Extended
BIOS - Basic Input Output System
BNC - Barrel Nut Connector
CAS - Column Address Signal
CD - Compact Disk
CDR - Compact Disk Recorder
CDRW - Compact Disk Re-Writer
CD-ROM - Compact Disk - Read Only Memory
CFM - Cubic Feet per Minute
CMOS - Complementary Metal Oxide Semiconductor
CPU - Central Processing Unit
DDR - Double Data Rate
DDR-SDRAM - Double Data Rate - Synchronous Dynamic Random Access Memory
DIMM - Dual Inline Memory Module
DRAM - Dynamic Random Access Memory
DPI - Dots Per Inch
DVD - Digital Versatile Disc
DVD-RAM - Digital Versatile Disk - Random Access Memory
ECC - Error Correction Code
EDO - Extended Data Out
EEPROM - Electrically Erasable Programmable Read-Only Memory
EPROM - Erasable Programmable Read-Only Memory
FC-PGA - Flip Chip Pin Grid Array
FDC - Floppy Disk Controller
FDD - Floppy Disk Drive
FPS - Frame Per Second
FPU - Floating Point Unit
FSAA - Full Screen Anti-Aliasing
FSB - Front Side Bus
GB - Gigabytes
GBps - Gigabytes per second or Gigabits per second
GDI - Graphical Device Interface
GHz - GigaHertz
HDD - Hard Disk Drive
HSF - Heatsink-Fan
IC - Integrated Circuit
IDE - Integrated Drive Electronics
IRQ - Interrupt Request
LAN - Local Are Network
LCD - Liquid Crystal Display
LDT - Lightning Data Transport
LED - Light Emitting Diode
MAC - Media Access Control
MB - MotherBoard or Megabyte
MBps - Megabytes Per Second
Mbps - Megabits Per Second or Megabits Per Second
MHz - MegaHertz
MIPS - Million Instructions Per Second
MMX - Multi-Media Extensions
NAS - Network Attached Storage
NAT - Network Address Translation
NIC - Network Interface Card
OC - Overclock (Over Clock)
PC - Personal Computer
PCB - Printed Circuit Board
PCI - Peripheral Component Interconnect
PDA - Personal Digital Assistant
PCMCIA - Peripheral Component Microchannel Interconnect Architecture
PGA - Professional Graphics Array
PLD - Programmable Logic Device
PM - Private Message / Private Messaging
PnP - Plug 'n Play
POST - Power On Self Test
PPPoA - Point-to-Point Protocol over ATM
PPPoE - Point-to-Point Protocol over Ethernet
PQI - PQI Corporation
PSU - Power Supply Unit
RAID - Redundant Array of Inexpensive Disks
RAM - Random Access Memory
RAMDAC - Random Access Memory Digital Analog Convertor
RDRAM - Rambus Dynamic Random Access Memory
ROM - Read Only Memory
RPM - Revolutions Per Minute
SASID - Self-scanned Amorphous Silicon Integrated Display
SCA - SCSI Configured Automatically
SCSI - Small Computer System Interface
SDRAM - Synchronous Dynamic Random Access Memory
SECC - Single Edge Contact Connector
SODIMM - Small Outline Dual Inline Memory Module
SPARC - Scalable Processor ArChitecture
SOHO - Small Office Home Office
SRAM - Static Random Access Memory
SSE - Streaming SIMD Extensions
SVGA - Super Video Graphics Array
TB - Terabytes
TBps - Terabytes per second
TEC - Thermoelectric Cooler
UART - Universal Asynchronous Receiver/Transmitter
USB - Universal Serial Bus
UTP - Unshieled Twisted Pair
VCD - Video CD
VPN - Virtual Private Network
WAN - Wide Area Network
XGA - Extended Graphics Array
XMS - Extended Memory Specification

முத்துப்பேட்டை தர்ஹாவில் நடைபெற்ற மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர், எம், எல், ஏ. மற்றும் அணைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்பு.


முத்துப்பேட்டை ஆகஸ்ட் 07 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜமோநடை தர்ஹாவில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன் நிகழ்ச்சிக்கு தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ். எஸ். பாக்கர் சாஹிப் தலைமை வகித்தார். தர்கா டிரஸ்டி. எ.தமீம் அன்சாரி சாஹிப் வரவேற்று பேசினார். இன் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட ஆட்சியர், திரு. முனியநாதன்.IAS. அவர்கள் கலந்து கொண்டு மத நல்லிணக்கம் பற்றி பேசினார். இன் நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர். கே. உலகநாதன்,முத்துப்பேட்டை ஒன்றியப் பெருந்தலைவர். கல்யாண சுந்தர தேவர், ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எஸ். அருணாசலம், உள்பட பலரும் பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற து. தலைவர். கே,எம், ஹனிபா, பேரூராட்சி உறுப்பினர், மெட்ரோ மாலிக், IUML, நகர செயலாளர், ஜனாப். கோல்டன் தம்பி மறைகையர், மாநில மனித உரிமை, ஜனாப்.கவிஞர். G. பசிர் அஹ்மத், பேரூராட்சி மன்ற உறுப்பினர், ஜனாப். எம்.ஜபருல்லாஹ். சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர், ஜனாப். மு.முஹைதீன் பிச்சை. தமு மு க. மாவட்ட துணை செயலாளர். ஜனாப். எல்.தீன் முஹம்மது, ஜனாப்.SDPI, தப்ரே ஆலம், ஜனாப். ஜெ. மைநூர்தின், உள்பட அனைத்து மிரமுகர்களும் கலந்து கொண்டு தர்கா முதன்மை அறங்காவலர்,எஸ். எஸ். பாக்கர் சாஹிப், நோன்பு திறக்கும் துவா ஓதி, நோன்பை திறந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகிகள், இளைஞர்கள் செய்து இருந்தனர்.

தொகுப்பு
ரிப்போட்டர் இல்யாஸ், ASNS பாரி, முனவர் கான், முஹைதீன் பிச்சை.

துவரங்குறிச்சி அருகில் கார் விபத்து!



முத்துப்பேட்டை ஆகஸ்ட் 06 : நேற்று மதியம் சுமார் 4 :30 மணியளவில் பட்டுக் -கோட்டையிலிருந்துதுவரங்குரிசிக்கு ஒரு கார் மிக வேஹமாக வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர் பாராமல் அந்த கார் திடீர் என்று ஒரு ஆபத்தை சந்தித்தது. இதில் ஓட்டுனர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர், இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் இல்லை. இந்த விபத்து குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் என்ற இணையதள நிருபர் அங்கு சென்று அவ்வூர் மக்களிடம் விசாரித்ததில் அவ்வூர் மக்கள் கூறியதாவது. ஓட்டுனர் குடித்து விட்டு ஓட்டியதும், அதிவேக மகா ஓட்டியதும் தான் இந்த விபத்து நடந்தது என்றும், குருகே ஒரு மாடு வந்ததால் ஓட்டுனருக்கு சற்று தடுமாற்றம் ஏற்பட்டதால் அந்த விபத்து நடை பெற்றது என்றும் அப்போது தெருவித்தனர். மேலும் ஓட்டுனர் தற்போது பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறிப்பு:
முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டை வரை செல்லும் ரோடில் அதிகமான கால் நடைகள் அலைகின்றன. எனவே கால் நடைகளுக்கு உரியவர்கள் தங்களுடைய கால் நடைகலாவன (ஆடு, மாடு, நாய்) இது போன்ற விலங்கினை தங்களின் கட்டுப் பாட்டில் வைத்து கொண்டால் இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்கும்.மேலும் இது போன்ற சம்பவங்கள் இந்த பகுதி யில் நடப்பதுவாடிக்கை யாகத்தான் இருந்து வருகிறது . ஆகவே அனைத்து மக்களும் இதற்கு உதவி புரிய முன் வரலாமே.

தொகுப்பு;

ரிப்போட்டர் இல்யாஸ், முனவர் கான், ASNS பாரி.

சுய இன்பம் ஆண்மைக்கு ஆபத்து (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

காம உணர்வு மேலோங்கும் போது சுயமாக விந்தை வெளியேற்றுவது சுயஇன்பம் எனப்படுகிறது. பரவலாக இளைஞர்களிடம் இந்த வழக்கம்காணப்படுகிறது.சுய இன்பம் ஆண்மைக்கு ஆபத்து (வயது வந்தவர்களுக்கு மட்டும்)இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிரதமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.. இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்.(திருக்குர்ஆன் 23:5,6,7)ஆண்கள் தமது மனைவியர் மூலம் அல்லது அடிமைப் பெண்கள் மூலம்தவிர மற்ற வழிகளில் கற்பைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றும்,இவ்விரு வழிகளில் தவிர மற்ற வழிகளில் இச்சையைத் தீர்த்துக்கொள்வோர் பழிக்கப்பட்டவர்கள் என்றும் வரம்பு மீறியவர்கள் என்றும்இவ்வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன. இப்போது அடிமைப்பெண்கள் இல்லாததால் மனைவியர் மூலம் தவிர வேறு வழிகளில்இச்சையைத் தீர்த்துக் கொள்வது வரம்பு மீறிய குற்றம் என்பதில் எந்தச்சந்தேகமும் இல்லை.

விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று அஞ்சும் நிலை இப்போதுஏற்படுவது போலவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலும் இருந்தது.இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்று வழியையும் நமக்குச்சொல்லித் தந்துள்ளனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யார் தாம்பத்தியத்திற்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்;கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்புஹாரி 1905,

இப்படி சுய இன்பம் செய்த பின் ஒரு அழகான பெண்ணுடன்தனித்திருக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால் அப்போது கட்டுப்பாடாகஇருக்க சுய இன்பப்பழக்கம் நிச்சயம் உதவவே செய்யாது. நோன்புநோற்று நல்லொழுக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டால் அது நிச்சயம்விபச்சாரத்தில் இருந்து காப்பற்றும்.

இதையும் மீறி உடலில் ரொம்ப முறுக்கு ஏறி விட்டால் தூக்கத்தில்ஸ்கலிதமாவதன் மூலம் அதற்கு அல்லாஹ் இயற்கையாக வடிகாலைஅமைத்துள்ளான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது போன்ற செயலில் கடந்த காலத்தில் ஈடுபட்டவர்கள்அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக் கொள்ளவேண்டும்.

சுய இன்பம் பற்றி விஞ்ஞானம்...!

இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை பாதிக்கும் சில முறைகளை கூறினார்.

01.அழகான பெண்களின் மீது இச்சை கொண்டு விந்தை வீணாக்குவது (சுய இன்பம்)

02.உள்ளாடைகளை இறுக்கமாக அணிவது,

03எப்போதுமே குப்புறப்படுத்துக் கொள்வது,

04.மனதை பலவிதங்களிலும் அலைய விடுவது,

05.கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பது.

06.பெண்களை நிமிர்ந்து பார்க்கக்கூட வெட்கம் அல்லது அச்சம் கொள்வது.

07.செக்ஸ் புத்தகங்களையே படித்துக்கொண்டிருப்பது,

08.செக்ஸ் திரைப்படங்கள் பார்ப்பது,

09.சிறுநீர், மலம் ஆகியவற்றை எப்போதும் அடக்கும் பழக்கம்,

10.தனக்கு ஆண்மைக் குறைவோ என்று நினைத்து அதிகம் வருந்துவது போன்றவற்றால் உடலுறவு கொள்ள இயலாத நிலை ஏற்படும்.

”இன்னொரு விஷயம், ஆணோ, பெண்ணோ தங்கள் உடலைப் பிறந்த மேனிக்குத் திறந்து போட்டுக்கொண்டு தனியறையில் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் பழக்கம் அல்லது குளியலறையில் பிறந்த மேனியுடன் குளிப்பது ஆகியவை கூட உடல் இச்சைக் குறைவை ஏற்படுத்தி விடும்.“

சாதியை ஒழிக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு - அறிஞர் அண்ணா உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்-

இஸ்லாத்தைப் பற்றி அறிஞர் அண்ணா இவ்வாறு கூறுகிறார், இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், 'உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்' என்று எழுதியிருக்கிறார்.மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.

அரபு சாஹிப் பள்ளிவாசல் முஹல்லா:

முத்துப்பேட்டை அகஸ்ட் 04 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் முஸ்லிம்கள் அதிகமாகவே வசித்து வருகிறார்கள். விக்கிலீக்ஸ் என்றதொரு இணையத்தளம் தற்போது முத்துப்பேட்டை முஸ்லிம்களின் வளர்ச்சி குறித்து வெளி இட்ட தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2011 ல் மட்டும் இரண்டு மடங்கு மக்கள் தொகை வளர்ச்சி அடைத்துள்ளது என்று வெளியிட்டுள்ளது. மக்கள் தொகையில் மட்டும்தான் இந்த வளர்ச்சி என்று பார்த்தல் இல்லை குறிப்பாக கல்வி, தொழில், சமுதாய பனி, ஆகிய அணைத்து விதமான செயல்களிலும் பிற வூர்களை காட்டிலும் முத்துப்பேட்டை அதிக வளர்ச்சி கண்டு அதிக புகழுக்குரிய இடமாக மாறிவருவது மிகவும் வர வேற்கத் தக்கதே. குறிப்பாக,முத்துப்பேட்டை மாணவர்களின் கல்வி நிலை குறித்து ஆராய்ந்து அதனை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதத்தில் "முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்" என்ற இணையதளம் களமிறங்கியது. அதில் "அரபு சாஹிப் பள்ளிவாசல்"முஹல்லாவை இரண்டாவதாக தேர்வு செய்து மாணவ மாணவியரின் நிலை குறித்து அவ்வூர் மக்களிடம் கேட்டு அறிந்த செய்தியை உங்கள் முன் பார்வைக்கு கொண்டு வருகிறோம் இதோ.

அரபு சாஹிப் பள்ளிவாசல்:
மொத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 450 பேர் ஆகும்.
இதில் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்கும் மாணவ, மாணவியர் சுமார் 325 பேர் என்றும்,
கல்லூரிகளில் கல்வி கற்கும் ஆண்கள் மட்டும் சுமார் 100 பேர் என்றும், (2 டாக்டர், 1 வழக்கறிஞர்.) உட்பட
கல்லூரிகளில் கல்வி கற்கும் பெண்கள் மட்டும் சுமார் 25 பேர் என்றும் அத்தகவலின் மூலம் நமக்கு தெரிய வந்துள்ளது.
இன்ஷா அல்லாஹ் நாளை குட்டியர் ஜும்மா பள்ளிவாசல் முஹல்லா பற்றி வெளியிடப்படும்.

தொகுப்பு:
ரிப்போட்டர் இல்யாஸ் & உமர் முக்தர் & ASNS . அப்துல் பாரி

பேட்டை பள்ளிவாசல் முஹல்லா:


முத்துப்பேட்டைஆகஸ்ட் 02: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் முஸ்லிம்கள் அதிகமாகவே வசித்து வருகிறார்கள். விக்கிலீக்ஸ் என்றதொரு இணையத்தளம் தற்போது முத்துப்பேட்டை முஸ்லிம்களின் வளர்ச்சி குறித்து வெளி இட்ட தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2011 ல் மட்டும் இரண்டு மடங்கு மக்கள் தொகை வளர்ச்சி அடைத்துள்ளது என்று வெளியிட்டுள்ளது. மக்கள் தொகையில் மட்டும்தான் இந்த வளர்ச்சி என்று பார்த்தல் இல்லை குறிப்பாக கல்வி, தொழில், சமுதாய பனி, ஆகிய அணைத்து விதமான செயல்களிலும் பிற வூர்களை காட்டிலும் முத்துப்பேட்டை அதிக வளர்ச்சி கண்டு அதிக புகழுக்குரிய இடமாக மாறிவருவது மிகவும் வர வேற்கத் தக்கதே. குறிப்பாக,முத்துப்பேட்டை மாணவர்களின் கல்வி நிலை குறித்து ஆராய்ந்து அதனை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதத்தில் "முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்" என்ற இணையதளம் களமிறங்கியது. அதில் "பேட்டை பள்ளிவாசல்" முஹல்லாவை முதலில் தேர்வு செய்து மாணவ மாணவியரின் நிலை குறித்து அவ்வூர் மக்களிடம் கேட்டு அறிந்த செய்தியை உங்கள் முன் பார்வைக்கு கொண்டு வருகிறோம் இதோ.
பேட்டை பள்ளிவாசல்:
மொத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 100 பேர் ஆகும்.
இதில் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்கும் மாணவ, மாணவியர் சுமார் 70 பேர் என்றும்,
கல்லூரிகளில் கல்வி கற்கும் ஆண்கள் மட்டும் சுமார் 20 ௦ பேர் என்றும்,
கல்லூரிகளில் கல்வி கற்கும் பெண்கள் மட்டும் சுமார் 10 பேர் என்றும் அத்தகவலின் மூலம் நமக்கு தெரிய வந்துள்ளது.
இன்ஷா அல்லாஹ் நாளை அரபு சாஹிப் பள்ளிவாசல் முஹல்லா பற்றி வெளியிடப்படும்.

தொகுப்பு:
ரிப்போட்டர் இல்யாஸ் & உமர் முக்தர் & ASNS . அப்துல் பாரி

முத்துப்பேட்டை மாணவர்களின் எண்ணிக்கை தொகுப்பு...

முத்துப்பேட்டை ஆகஸ்ட் 01 : கல்வி மட்டுமே ஒரு மனிதனை முழுமைப் படுத்தக் கூடிய ஓர் ஆயுதமாகும். கல்வி கற்காத மனிதன் அரை மனிதன் என்று சமுதாயத்தில் தூற்றப்படுவான். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நமதூர்முத்துப்பேட்டையில் கல்வி கற்றோரை விரல் விட்டு எண்ணிவிடலாம், ஆனால் தற்போது அல்லஹ்வின் நாட்டத்தால் அந்நிலை மாறி கல்வி கற்றோர், கர்பிப்போர்களின் எண்ணிக்கை கணிசமாகவே உயர்ந்துள்ளது. பொதுவாகவே முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் கல்வி கற்காமலே வெளிநாட்டுக்கு சென்று சம்பதிபதிலேயே குறியாக இருந்தனர். ஆனால் தற்போது அந்நிலை மாறி வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் அளவிற்கு நமது சமுதாயம் முன்னேற்றம் அடைந்துள்ளது வரவேற்க்கத்தக்கதே.முத்துப்பேட்டையில் உள்ள பேட்டை பள்ளி, அரபு சாஹிப் பள்ளி, குட்டியர் பள்ளி, கொத்பா பள்ளி, ஜாமியா பள்ளி, முஹைதீன் பள்ளி, மதினா பள்ளி. புது பள்ளி, மக்கா பள்ளி, நூர் பள்ளி, ரஹ்மத் பள்ளி ,ஆசாத்நகர் பள்ளி, தர்ஹா பள்ளி, ஆகிய 13 பள்ளிவாசல் அனைத்து முஹல்லா வாரியாக படிப்பவர்களின் எண்ணிக்கை குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் ஆய்வில் இறங்கியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் (ஆண், பெண்) களின் எண்ணிக்கையின் தொகுப்பை தங்களுடைய பார்வைக்கு வெளியிடுகிறோம். இன்ஷா அல்லாஹ் இதனின் தொகுப்பு வருடம் வருடம் ஆய்வில் இறங்கி உங்களுடைய பார்வைக்கு கொண்டு வருவோம் என்பதையும் இதன் மூலம் தெய்ரிவித்துக் கொள்கிறோம்.

நமது நிருபர்

தொகுப்பு, ரிபோட்டர் இல்யாஸ் & ரிபோட்டர் உமர் முக்தார் &

ASNS.அப்துல் பாரி

மவுத் அறிவிப்பு: "உம்மா கன்னி அம்மாள்"

முத்துப்பேட்டை ஜூலை 29 : அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...மரைகாயர் தெரு மர்ஹும் ஹாஜி A.N.M. முஹம்மத் தம்பி மரைகாயர் அவர்களின் மகளும் மர்ஹும் A.N.A. நெய்னா மரைகாயர் அவர்களின் மனைவியும் S.K.M. முஹம்மத் தம்பி மரைகாயர் அவர்களின் மாமியாரும், A.N.A. அயுப்கான் அவர்களின் தாயாருமாகிய "உம்மா கன்னி அம்மாள்" இன்று பகல் 1 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9 :00௦௦pm மணியளவில் கொத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர்:
A.N.M. நெய்னா மரைக்காயர் & பிரதர்ஸ்
A.N.A. அயுப்கான்

மவுத் அறிவிப்பு: "முஹம்மத் ரபீக்"

முத்துப்பேட்டை ஜூலை 29 : அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...மவுத் அறிவிப்பு, OPM. தெரு கும்மி வீடு மர்ஹும் சு.மு. ஷேக் தாவூத் அவர்களின் பேரனும், மர்ஹும் S.M. தாவூத், ஹமீது அவர்களின் மகனும், ஆசாத் நகர் கா.சு. நெய்னா முஹம்மத் அவர்களின் மருமகனும் சென்னை A. ஜைனுல் ஆப்தின், இஸ்லாம்தீன், அவர்களின் மைத்துனரும், அகமது கபீர், ஷேக் தாவூத், அப்துல் சமது, அன்வர் பாட்சா, தமீம் அன்சாரி, அப்துல் ரஹ்மான், ஜாகிர் ஹுசைன், ஷாஜஹான், ஆகியோரின் சகோதரருமாகிய "முஹம்மத் ரபீக்" அவர்கள் இன்று அதி காலை 4 :30 மணி அளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லஹி வ இன்னா இலைகி ராஜிவூன்).
அன்னாரின் ஜனாசா இன்று (அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்) முஹிதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர் :
ச. ஹாஜா கமாலுதீன்.
சகோதரர்கள்

நமதூர் மக்களுக்கு பொது அறிவிப்பு...

உப்பூர் புதுரோடு T.T.P. மெயின் ரோட்டில் RS no: 1. புல எண்: 304/4 ஏ-1-ல் 1.23 .00 (2) புல எண்: 305 /1பி 0 .75.50 ,(3) புல எண்: 306 /6 எ 0 .76 .50 , (4) புல எண்: 304/4 எ 0 .04 .௦௦ (5) புல எண்: 306 /6 பி ௦.௦௨.௦௦ உள்ள தோட்டம் எனது தந்தையின் காலம் சென்ற A.V.M. சிக்கந்தர் வாங்கியதாகும். இந்த தோட்டத்தில் எனக்கு பாக விதம் இருக்கிறது. எனவே தாயார் திருமதி. S.பரீதா அம்மாள் அவர்கள் இந்த தோட்டத்தை சிலருக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாக தெரிகிறது. இது என்னை கட்டுபடுத்தாத - சட்டப்படி எண் அனுமதி இல்லாமல் விற்பனை செய்வது குற்றமாகும். மேற்படி சொத்து பற்றி வழக்கு தொடரப்பட்டுள்ளது. யாரும் இந்த சொத்தினை வாங்கிருந்தால் இதில் எனக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை இதன் மூலம் தெருவித்து கொள்கிறேன்.

இப்படிக்கு
எஸ். தாஜுதீன் S/o. A.V.M. சிக்கந்தர்,
முத்துப்பேட்டை.

முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் ஒரு பார்வை...

முத்துப்பேட்டை ஜூலை 26 : அலையாத்திக் காடுகளுக்குப் பேர் போன இடம்தான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை. இதற்கு மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், என்று எங்கு இருந்து சென்றாலும் கிட்டத்தட்ட ஒரே பயண நேரம்தான் முத்துப்பேட்டைக்கு. பஸ் நிலையத்திலிருந்து ஆட்டோவில் கொஞ்சம் தூரம் பயணமானாள் ஆறும் கடலும் சங்கமிக்கும் இடம்தான் 'லகூன்!'


சுற்றிலும் வேர்களைத் தண்ணீருக்கு மேல் வைத்து சுவாசிக்கும் அலையாத்தி மரங்கள் காடாகப் பறந்து விரிந்து நிற்க, அதிக ஆழமற்ற - கடலிலும் சேர்க்க முடியாத, ஆற்றிலும் சேர்க்க முடியாத - அந்த நீர்ப்பரப்பில் செல்லும் அனுபவம், அங்கு மட்டுமே கிடைக்கும் பரவசம்!
இந்த அலையாத்திக் காடுகளில் நரிகண்டல், கருங்கண்டல், நீர்முள்ளி, திப்பரத்தை, சுப்புன்னை, வென்கடல், தில்லை என நமக்கு அறிமுகமே இல்லாத மூலிகை மரங்களையும் பூநாரை, கூலக்கட, நீர்க் காகம், ஊசிவால் வாத்து என அழியும் தருவாயை எட்டிவிட்ட பறவைகளையும் தன்னுள் புதைத்து வைத்து உள்ளது இந்த கடல் புதையல்!
படகு சவாரி கிடைக்கிறது. ஆங்காங்கே குட்டிக் குட்டித் தீவுகள் போல காடுகள் இருக்கின்றன. சுற்றுலாப் பயணிகளுக்காகவே அவற்றில் குடிசைகள் அமைத்து இருக்கின்றனர்.காட்டுக்குள் நடந்து போக மரத்தில் பாலமும் அமைக்கப் பட்டுள்ளன. உயர் கோபுரங்களிலும் நின்று பார்க்கலாம். இதனை பார்க்க அலை மோதும் கூட்டம் அதில் வெளிநாட்டவர்களையும் அழைப்பதில் விட்டுவைக்கவி இல்லை அட்டகாசமான பயணத்திற்கு அலையாத்திக் காடுகள் கேரண்டிதான்!

தொகுப்பு: ரிப்போர்ட்டர் இல்யாஸ்

சுவாமி நித்தி படுக்கை அறை காட்சியை எடுத்தது ரஞ்சிதா தான்!

சென்னை ஜூலை 20: 2010 மார்ச் முதல் வாரத்தில் வெளியான சாமியார் நித்யானந்தா நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் பெரும் அதிர்வை உண்டாக்கின.
இதையடுத்து நித்யானந்தா தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே உள்ள நித்யானந்தா கடந்த 13.07.2011 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய சுவாமி நித்யானந்தா நக்கீரன் உள்ளிட்ட சில ஊடகங்கள் வழக்கறிஞர் ஸ்ரீதர் மூலம் பணம் கேட்டு மிரட்டியதாக பொய் குற்றச் சாட்டை கூறினார். இதையடுத்து, 'நக்கீரன் வெளியிட்டது உண்மையான வீடியோ காட்சிகள்தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்டப்பூர்வமாகவும் இதனை நிரூபிப்போம்.

வீடியோ காட்சிகள் போலியானவை என்று சொல்லும் சுவாமி நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் நீதிமான்கள், சட்ட வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தடயவியல் நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 100 பேர் முன்பாக இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்பதை நிரூபிக்கத் தயாரா என்று நக்கீரன் பகிரங்கமாக சவால் விடுகிறது.

இந்த சவாலை எதிர்கொண்டு, தங்களின் பரிசுத்தத் தன்மையை நிரூபிக்க நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் தயாரா?' என்று நக்கீரன் கூறியிருந்தது. இந்நிலையில் சென்னையில் 18.07.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த நித்யானந்தாவின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர், எனக்கும் நக்கீரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நித்யானந்தா தொடர்பான வழக்கை நான்தான் நக்கீரன் மீது தொடர்ந்தேன்.நான் எந்தக் கட்சியையும் சாராதவன்.

சுவாமி நித்யானந்தா எனக்கு வந்து ஒரு கிளைண்ட். நித்தியானந்தாவுக்கு யாரோ தவறான ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். தேவையில்லாமல் அவர் நக்கீரன் மற்றும் சில ஊடங்களை மட்டும் குற்றம் சாட்டியிருக்கிறார். அன்றைக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்து ஊடங்களும் நித்யானந்தா பற்றிய செய்திகளை வெளியிட்டது. யாரும் நித்யானந்தாவை மிரட்டவில்லை.

இந்த சிடி விஷயம் பற்றி தெரிந்தது 5 பேர்தான். நித்யானந்தா, ரஞ்சிதா, லெனின் தர்மானந்தா, ஆர்த்திராவ். நித்யானந்தா என்னிடம் சொல்லும் போது, சிடி உண்மையானது என்றார். அப்போது அட்வைஸ் பண்ணினோம். உண்மையான சிடியாக இருந்தால் தாமதப்படுத்த வேண்டாம். கன்சல்டிங் பாட்னர் என்று சொல்லிவிட்டு கேஸில் இருந்து தப்பிக்க பாருங்க. அதைவிட்டுட்டு ரொம்ப டீப்பா போனீங்கன்னா டிரபுள் வரும். அதற்கேற்ற மாதிரி அவர் ஒத்துக்கிட்டார்.

இதையடுத்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் சிடியில் இருந்தது நான்தான் என்று ஒப்புக்கொண்டார். அப்போது யோக நிலையில் இருந்ததாக கூறியிருந்தார். அதைப்போல ரஞ்சிதாவும், ஆமாம் நான் சாமிக்கு சேவை செய்வேன் என்று பேட்டி கொடுத்தார். தற்போது சிடி பொய் என்று கூறுகின்றனர். இது வழக்கை திசை திருப்பும் செயல். அந்த சிடியை பார்த்தால் நித்யானந்தா எழுந்து கையை நீட்டி அங்கபாரு என்று சொல்லும்போது, ரஞ்சிதா அதுவெல்லாம் ஒன்றும் இல்லைபடு என்று சொல்லுகிற மாதிரி இருக்கும்.

அதை உன்னிப்பா கவனித்தால் தெரியும். கண்டிப்பா ரஞ்சிதா படுக்கை அறை காட்சியை, போக்கஸ் லைட் நடுவில் எடுத்திருக்காங்க அப்படியின்னா வேர்க்க விறுவிறுத்துதான் எடுத்திருப்பாங்க. அப்போது நான் வழக்கறிஞராக சொல்லிவிட்டேன். ரஞ்சிதாதான் எடுத்திருக்காங்க. ரஞ்சிதாவிடம் சரண் அடைவதுதான் பெஸ்ட். ரஞ்சிதாவுக்கு பணத்தை செட்டில் செய்து நித்யானந்தா அந்த அட்வைஸை மட்டும் கரெக்டா செய்துவிட்டார் என்று கூறினார்.

இஸ்லாம் ஒரு அறிவுச் சுடர்

பாரத் நாட்டின் ஆன்மிகச் செல்வம் இஸ்லாம். இம்மார்க்கத்தில் இருந்து இரண்டு விதத்தில் லாபம் அடைந்திருக்கிறது. இறைவன் ஒருவனே, இறைவன் ஒன்றுதான் என்பதைப் பற்றி எள்ளளவும் குழப்பமின்றி உறுதியாக ஊர்ஜிதப்படுத்தியது இஸ்லாம் நமக்குச் செய்த முதல் பனி. மக்களிடயே சகோதர சமத்துவத்தை வாழ்கையில் நடத்திக் காட்டியது இரண்டாவது பணி. இவ்விரண்டையும் மகத்தானவியகக் கருதுகிறேன்.
இஸ்லாம் உச்ச ஸ்தானத்தில் இருக்கும்போது அது ஏனைய மதங்களிடத்தில் சகிப்புத்தன்மை காட்டமல் இருந்ததில்லை. தவிரவும், அது முழு உலகத்தின் நன்மதிப்பையும் பெட்டரு, சிறந்து விளங்கிற்று, மேல்நாடுகள் அந்தகாரத்தில் ஆழ்த்திருந்த சமயத்தில் கீழ்நாட்டில் மிகவும் ஒளிமிக்க விண்மீனொன்று உதயமாகி, உலகத்துக்கு அறிவுசுடரையும் ஆற்றலையும் அளித்துள்ளது.
இஸ்லாத்தின் ஈடில்லாப் பெருமைக்குக் காரணம் வாலாயுதம் அல்ல. கஷ்டமிக்க தியாகங்களும், அதன் ஆரம்பகால கலிபாக்களின் கண்ணியமுமே காரணம்.
என் இந்து சகோதரர்கள் பரிசுத்த உள்ளத்துடன் குரானைப் படிக்கப் புகுந்தால் இஸ்லாமியத் தத்துவத்தின் இணையட்ட்ற தன்மையும், உண்மை உபதேசமும் வெளியாவதை உணர்வார்கள்.

எங்களைப்பற்றி


முத்துப்பேட்டை, ஜூலை 07: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளமானது தங்களுடைய அனைத்து விதமானக கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்காகவும் மேலும் சமூகம், சமுதாயம் இவற்றின் நன்மையான கருத்துக்களை வெளி கொண்டு வருவதற்காகத்தான் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் எவ்வகையான இலாப நோக்கிலோ, அல்லது புகழுக்காகவோ இயக்கப்பட வில்லை என்றும் குறிப்பாக இந்த இணைத்தளம் சமுதாய வளர்ச்சிக்குத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
தங்களின் கருத்துக்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் அவற்றை நாங்கள் உலகத்திற்கு பகிர்ந்து கொடுக்கிறோம் இன்ஷா அல்லாஹ்...
மேலும் தொடர்புக்கு: public.mttexpress@gmail.com 

இப்படிக்கு:
அ. முஹம்மது இல்யாஸ். MBA. MA. (Journalism & Mass Communication)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)