முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ஓர் நற்செய்தி!! : அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்


சென்னை, டிசம்பர் 25 : இன்றைய அரசியலில் முஸ்லிம் சமுதாயத்திற்கென்று தலைமை இல்லை, விழிப்புணர்வில்லை, எந்த அரசியல் கட்சிகளும் சமுதாயத்தை மதிப்பதில்லை, சமுதாய தலைவர்களுக்கு சமுதாயத்தை பற்றிய அக்கறை இல்லை.
இதனால் தான் நமது சமுதாயம் கல்வி மற்றும் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் பின் தங்கி கீழ்மட்டத்தில் உள்ளது என்றெல்லாம் புலம்பியே காலத்தை கழித்துக்கொண்டிருக்கும் நாம், முஸ்லிம் சமுதாயம் மேம்படவும், இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து அனைத்து துறைகளையும் இயக்கும் உயர் பதவியை சென்றடைய ஓர் அரிய, எளிய மாற்று வழி இருப்பதை நாம் ஏன் மறந்து விட்டோம்?இதனை பற்றி விவரமாக அறிந்து கொள்ள இந்த லிங்க் ஐ பார்க்கவும்
Link à ஆளும் சக்தியா? அதிகார சக்தியா?
இதற்காக உருவாக்கப்பட்டது தான்
Al-Idara I.A.S guidance center
அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்
இதன் நோக்கம்
நமது சமுதாய இளைஞர்கள் I.A.S படிப்பு என்றாலே "எட்டா கனியாக" நினைத்து மனதளவில் அச்ச உணர்வுக்கு ஆளாகின்றனர். ஆனால் அரசியல் வாதிகளாலும், ஆட்சியாளர்களாலும், MLA, MP, அமைச்சர், பிரதம அமைச்சர் போன்றோர்களாலும் சாதிக்க முடியாததெல்லாம் I.A.S அதிகாரிகளால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதையும். மேற்கண்ட பெரிய பதவிகளில் இருப்பவர்களை எல்லாம் இயக்குபவர்கள் I.A.S அதிகாரிகள் தான் என்பதையும், அந்த அதிகார மையத்தை கை பற்றுவது இயலாத காரியம் இல்லை என்பதையும் உணர மறுக்கின்றனர்.
இதை பற்றி முழுமையான முறையில் விழிப்புணர்வூட்டி I.A.S-க்கு தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலவசமாக செய்து, சென்னை, மற்றும் டெல்லியில் உள்ள சிறந்த I.A.S பயிற்சி அகாடமிகளுடன் இனைந்து செயலாற்றவும், அதன் மூலம் நமது இளைஞர்களை இறை அச்சம் மற்றும் தக்வாவுடன் சமுதாய உணர்வுகளை ஊட்டி பக்குவபடுத்தி இஸ்லாத்திற்கும், இந்தியாவிற்கும் விசுவாசமான IAS அதிகாரிகளாக உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
ஆலோசனை குழு
இதற்கான ஆலோசனை குழுவில் (ADVISORY BOARD) தற்போது பணியில் உள்ள மற்றும் ஒய்வு பெற்ற I.A.S அதிகாரிகளை இணைத்து அவர்களது மேலான ஆலோசனைகளுடன் இயங்க உள்ளது.

ஆர்வமுள்ள முஸ்லிம் இளைஞர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
அடிப்படை தகுதிகள்
ஏதேனும் ஒரு UG டிகிரி முடித்து இருக்க வேண்டும்
21 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்

தொடர்புக்கு
அழகிய கடன் அறக்கட்டளை.
822, மக்காஹ் மஸ்ஜித் வளாகம்,
அண்ணா சாலை, சென்னை .
Ph. 98408 99012, 98847 06795
ஈமெயில் : admin@makkamasjid.com

முத்துப்பேட்டையில் TNTJ சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்










முத்துப்பேட்டை, டிசம்பர் 19 : முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை 7 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் திடலில் TNTJ வின் மாவட்ட செயாளர் ஜனாப். AM . புஹாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முஸ்லிம்களின் ஒற்றுமை என்ற தலைப்பில் பேசிய மாவட்ட பேச்சாளர் ஜனாப். அல்தாப் ஹுசைன் அவர்கள், நமது சமுதாயத்தில் உள்ள இயக்கங்கள் அனைத்தும் பல்வேறு முறையில் பிரிந்து கிடக்கிறது என்றும், அல்லாஹ் கூறிய ஒற்றுமை என்ற கையிற்றை பற்றிபிடித்தோமானால் அதிகமான நன்மைகள் நம்மை வந்து சேரும் என்றும், அவர் தெரிவித்தார். ஆனால் ஒற்றுமையாக இருந்த சமுதாயத்தை பிரித்தது TNTJ தான் என்று அவதூறாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்றும், ஆனால் எல்லோரும் சேர்ந்து மது அருந்துவது, வட்டி வாங்குவது, போன்ற தவறான செயல்களை செய்பவர்களை கண்டிக்காமல் நாங்கள் ஒற்றுமையை பேணி வருகிறோம் என்ற பல அமைப்பினர் மற்றும் இயக்கத்தினர் தன்னை மார்தட்டிக் கொள்கிறார்கள் என்றும், ஆனால் TNTJ --வை பொறுத்தவரையில் இஸ்லாம் கூறியதை மட்டும் தான் பின்பற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வரதச்சனை ஒழிப்பு என்ற தலைப்பில் பேசிய TNTJ வின் மாநில செயலாளர் ஜனாப். அச்ரப்தீன் பிர்தவுஸ் அவர்கள் நமது சமுதாயத்தில் வரதச்சனை என்ற ஓர் செயலால் இஸ்லாமிய பெண்கள் 30 வது வரை திருமணம் ஆகாமல் இருந்து வருகிறார்கள் என்றும் எனவே இந்த கொடிய நோயை நம் இளைய சமுதாய இளைஞ்சர்கள் கையிலெடுத்து அவற்றிருக்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இஸ்லாத்தில் அதிகமான பெண்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து வருகிறார்கள் என்றும் அவற்றை செய்வதற்கு இஸ்லாம் தடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டு அவற்றை திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப். அப்துல் ரஹ்மான் அவர்கள் வாசித்தது பின்வருமாறு:
TNTJ பொதுக்கூட்டத்தின் மூலம் போடப்பட்ட தீர்மானங்கள்:
1 ) முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து குளங்களையும் உடனே தூர்வாரி பொது மக்களின் பயன்பாட்டிற்கு விடவேண்டும்.
2) நூற் பள்ளி வாசல் இருக்கும் இடத்தில் உள்ள சாலைகளுக்கு உடனே சிமென்ட் சாலை அமைக்க வேண்டும்.
3 ) ஆசாத் நகர் புதிய பேருந்து நிலையத்தை சுத்தம் செய்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்றும், மேலும் ஆசாத் நகர் பகுதியில் உள்ள கழிவு நீர் வடிக்கால் கலை உடனே தூர் வாரி சுத்தம் செய்ய வேண்டும்.
4 ) முத்துப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணிதம் பாடப்பிரிவிற்கு முறையான ஆசிரியர்களை உடனே பணியமற்ற வேண்டும்.
www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,EK . முனவ்வர் கான்,ASNS .அப்துல் பாரி, M .சுபைத் கான், EK . மர்சூக் அஹமது,

திருமணச்செய்தி: "T . யஹ்யா, N .ஷிஃபா"


முத்துப்பேட்டை,டிசம்பர் 18 : அல்லாஹ்வின் திருப்பெயரால். நிகழும் ஹிஜ்ரி 1433 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் பிறை 21 ., 17 .12 .2011 சனிக்கிழமை மாலை முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை சாலையை சேர்ந்த ஜனாப். MA . தமீம் அவர்களின் புதல்வர் தீங்குலச்செல்வன் T .யஹ்யா மணாளருக்கும், ஜனாப். AS .நாசிர் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி ஷிஃபா மணாளிக்கும் இருவீட்டார் அனுமதியோடு நேற்று தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. ("பாரக்கல்லாஹு லக்க, வ பாரக்க அலைக்க வ ஜமஅ பைனக்குமா ஃபீஹைர்")

source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான். அபு மர்வா

மேலும் மாப்பிள்ளைக்கு வாழ்த்து தெரிவிக்க தொலைபேசி எண்: 96001 25000

திருமணச்செய்தி: "A .அப்துல் சமது, M .நிலோபர் நிஷா"






முத்துப்பேட்டை, டிசம்பர் 17 : அல்லாஹ்வின் திருப்பெயரால். நிகழும் ஹிஜ்ரி 1433 - ம் ஆண்டு முஹர்ரம் மாதம் பிறை 20, 16 .12 .2011 வெள்ளிக்கிழமை மதியம் 1 .30 மணியளவில் முத்துப்பேட்டை செக்கடி தெருவை சேர்ந்த மர்ஹும் PS . அன்வர் பாட்சா அவர்களின் புதல்வர் தீங்குலச்செல்வன் A .அப்துல் சமது மணாளருக்கும், உடையநாடு, களனிவாசல் ஊரை சேர்ந்த M .மாருதீன் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி M .நிலோபர் நிஷா மணாளிக்கும் இரு வீட்டார் அனுபதி பெற்று மாப்பிளையுடைய அரைபவுன் மகருக்கு வக்கீலாக இருந்து ஒடைய நாடு ஜும்மா பள்ளி வாசல் இமாம் திருமணத்தை நடத்தி வைத்தார். ("பாரக்கல்லாஹு லக்க, வ பாரக்க அலைக்க வ ஜமஅ பைனக்குமா ஃபீஹைர்")
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான். அபு மர்வா

மேலும் மாப்பிள்ளைக்கு வாழ்த்து தெரிவிக்க தொலைபேசி எண்: 99657 77838

முத்துப்பேட்டை ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


முத்துப்பேட்டை, டிசம்பர் 17 : முத்துப்பேட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 11 ஆம் வகுப்பை சேர்ந்த இருதரப்பு மாணவர்களுக்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தினர் பிரச்சனை குறித்து தீவிர விசாரணையில் மேற்கொண்டனர். அப்போது இரு தரப்பினரும் எந்த ஒரு பதிலும் அளிக்காமல் இருந்தனர். இதனால் பள்ளி நிர்வாகம் இரு தரப்பினர்களுக்கு மத்தியில் தல 10 பேரை தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த இரு தரப்பு மாணவர்களும் நேற்று காலை சுமார் 10 மணியளவில் ஒன்று திரண்டு பள்ளிக்கூட உல்வளாகத்திலே உள்ளிருப்பு போராட்டத்தில் இடுபட்டனர். இதனைக்கண்ட பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் சுமார் 2 மணிநேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்ததால் அனைத்து மாணவர்களும் அப்போராட்டத்தை கலைத்துவிட்டு வழக்கம்போல வகுப்பறைக்கு சென்றார்கள்.
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

ரிப்போர்ட்டர் பாலா (ஆலங்காடு), ரிப்போர்ட்டர் யூசுப் அலி.

சிறுபான்மையர்களின் தினம் கொண்டாட அனைத்து ஜமாத்தார்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அழைப்பு...


திருவாரூர், டிசம்பர் 17: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திரு ச. முனியநாதன் அவர்கள் சிறுபான்மையோர் தினம் 18 .12 .2011 ஆம் தேதி அன்று கொண்டாடும் விதமாக அனைத்து மதத்தவருக்கும் நேற்று கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். அக்கடிதம் பின்வருமாறு: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மதவழி சிறுபான்மை யினர்களான இஸ்லாமியர், கிருத்தவர், புத்தமதத்தினர், பாரசீகர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகியோர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் சிறுபான்மையினருக்காண மத்திய / மாநில அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா திருவாரூர் வர்த்தக சங்க கட்டிடத்தில் 18 .12 .2011 அன்று மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் பிரநிதிநிகளுடன் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படியும், தங்களின் ஆலோசனைகளை தெரிவித்திடவும் கேட்டுக்கொள்கிறேன் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றவரை தடுத்து நிறுத்திய போலீசார்


முத்துப்பேட்டை, டிசம்பர் 16 : முத்துப்பேட்டையை அடுத்து செங்காங்காடு என்ற கிராமத்தில் முருகானந்தம் வயது 32 என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் தில்லைவிலாகத்தை சேர்ந்த முன்னாள் பிரசிடென்ட் லோகநாதன் என்பவர் தில்லைவிலாகத்திர்க்குட்பட்ட ஓர் பள்ளிகூடத்தை கட்டுவதற்கு முருகானத்தத்திர்ற்கு சொந்தமான இடத்தில் பள்ளிக்கூடம் கட்ட அனுமதி கேட்டுள்ளார். இதற்க்கு சம்மதம் தெரிவித்து அந்த இடத்திற்குரிய பத்திரத்தை லோகநாதனிடம் கொடுத்துள்ளார். ஆனால் முருகானந்தம் கொடுத்த இடத்தில் பள்ளிக்கூடத்தை கட்டாமல் வேறு இடத்தில் கட்டியுள்ளார் லோகநாதன். இதனை கேள்விப்பட்ட முருகானந்தம் நான் கொடுத்த பத்திர இடத்தில் பள்ளிகூடத்தை கட்டவில்லை எனவே என்னுடைய பத்திரத்தை திரும்ப தருமாறு பணித்துள்ளார். இதனால் அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இவற்றில் மனம் உடைந்து போன முருகானந்தம் 10 தூக்க மாத்திரையை சாப்பிட்டு விட்டு முத்துப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் லோகநாதன் மீது புகார் அளித்துள்ளார். இப்பூகாரை கொடுத்துவிட்டு வெளியில் வந்த முருகானந்தம் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்னையை தன் மீது ஊற்றி கொளுத்த முயர்த்சித்துள்ளார். இதனை பார்த்த போலீசார் முருகேசன் அவர்கள் விரைந்து வந்து முருகானந்த்தத்தை தடுத்துநிருத்தினார். அவர் சாப்பிட்ட தூக்க மாத்திரை காரணத்தால் காவல் நிலையம் முன்பு மயக்கம் அடித்து கீழே விழுந்துள்ளார். உடனே போலீசார் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமத்தித்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முத்துப்பேட்டை சரக DSP கோபி அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS.அப்துல் பாரி, EK . முனவ்வர் கான். அவு மர்வா.

மவுத்து அறிவிப்பு: "நாசர்தீன்"


முத்துப்பேட்டை, டிசம்பர் 15 : ஆசாத் நகர் மர்ஹும் அப்துல் சமது அவர்களின் மகனும்,அலி அக்கபர், அப்துல் லத்திப், ரப்பானி, அவர்களின் சகோதரருமாகிய "நாசர்தீன்" அவர்கள் இன்று அதிகல்லை 3 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அறிவிப்பவர்
ரப்பானி ஆசாத்நகர்

நமது நிருபர்

KM . கார்கணி

மவுத்து அறிவிப்பு: "ஜொஹரா பீவி"


முத்துப்பேட்டை, டிசம்பர் 15 : பேட்டை ரோடு நடுத்தெரு அலியார் சந்து மர்ஹும் சின்ன ராவுத்தர் அவர்களின் மருமகளும், மர்ஹும் ந.நே. நெய்னா முஹம்மது ராவுத்தர் அவர்களின் மகளும், மர்ஹும் காதர் நெய்னா மலை அவர்களின் மனைவியும், அதிராம்பட்டினம் மர்ஹும் ஷாகுல் ஹமீது, மதுக்கூர் அப்துல் ரசாக் ஆகியோரின் மாமியாரும், SM . நாகூர் பிச்சை அவர்களின் சிறிய தாயாரும், சுல்தான் ஆரிப், ஷேக் முஹைதீன், ரியாளுட்டின் இவர்களின் பாட்டியாருமாகிய "ஜொஹரா பீவி" அவர்கள் நேற்று இரவு 7 :30 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசால் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்

கருத்தப்பா SM . நாகூர் பிச்சை

நமது நிருபர்

KM . கார்கணி

குத்பா பள்ளிவாசல் திறப்பு விழா குறித்து அனைத்து முஹல்லாவின் ஆலோசனைக் கூட்டம்.






முத்துப்பேட்டை, டிசம்பர் 15 : முத்துப்பேட்டையில் உள்ள குத்பா பள்ளி வாசல் திறப்பு விழா குறித்து அனைத்து முஹல்லாவை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து ஜனாப் .MKN .முஹம்மது முஹைதீன் அவர்கள் தலைமையில் நேற்று மாலை 4 :30 மணியளவில் குத்பா பள்ளிவாசலில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து முஹல்லாவை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள். மேலும் இந்த கூட்டத்தின் போது அனைத்து முஹல்லாவினரும் தலா 10 ,000 ஆயிரம் தருவதாக வாக்குருதியளித்துல்லார்கள். இதனைத்தொடர்ந்து இந்த கூட்டத்தில் பல்வேறு விதமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன அவை பின்வருமாறு:
1 ) பள்ளி வாசல் திறப்பு விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு இஷாவிற்கு பிறகு பெண்களுக்கான சிறப்பு பயான் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
2 ) குத்பா பள்ளிவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு கனரக வாகனங்களை ECR ரோட்டில் திருப்பி விட வேண்டும் என்று முத்துப்பேட்டை காவல் நிலையத்தில்
கோரிக்கை மனு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
3 ) அவசர கால உதவிக்கு வேண்டி 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகளை பெற இத்துறையை சார்ந்தவர்களுக்கு அழைப்பு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
4 ) திருவாரூர் மாவட்டம் மற்றும் பழைய தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து முஹல்லா வாசிகளுக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
5 ) இதில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், கோட்டைப்பட்டினம், அம்மா பட்டினம், செம்பைப்பட்டினம், செந்தலைப்பட்டினம், சேதுபாவா சத்திரம்,கட்டுமாவாடி, பட்டுக்கோட்டை, மதுக்கூர், கூத்தாநல்லூர், திட்டச்சேரி, மற்றும் அனைத்து ஊர் முஹல்லா வாசிகளுக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
குறிப்பு: அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே இந்த பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு தங்களால் இயன்ற உதவியை வாரி வழங்க வேண்டுமாய் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். மேலும் தங்களின் தொடர்புக்கு:

MKN. MOHAMED MOHAIDEEN,
A/C,NO: 3456,IOB BANK,
MUTHUPETTAI BRANCH,
MOBILE NUMBER: +0091 - 94871 03980.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ASNA.அப்துல் பாரி,EK .முனவ்வர் கான், அபு மர்வா, K.ஷாகுல் ஹமீது,

ஈராக்கில் அண்டை நாடுகள் தலையிடக்கூடாது: ஒபாமா கூறுகிறார்


வாஷிங்டன்,டிசம்பர் 14 : பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்துகொண்டு ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் உள்விவகாரங்களில் முற்றிலும் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நாடு அமெரிக்கா. இந்நிலையில் அமெரிக்காவின் அதிபர் பாரக் ஒபாமா, சாத்தான் ஓதும் வேதம்போல ஈராக்கின் வளர்ச்சியில் அண்டை நாடுகள் தலையிடக்கூடாது என உபதேசம் செய்துள்ளார்.ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகியுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்கள் சந்தித்த ஒபாமா, ஈராக்கில் இருந்து அமெரிக்கா இம்மாதம் முற்றிலும் வாபஸ் பெறும் என்றும், இது வரலாற்று நிமிடமாகும் என அவர் தெரிவித்தார்.அதேசமயம், ஈரானை மறைமுகமாக சுட்டிக்காட்டித்தான் ஒபாமா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என ஊடகங்கள் கூறுகின்றன.ஈரான் பிரதிநிதிகளும், ஈராக் அதிகாரிகளும் நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தையும், 1980-ஆம் ஆண்டு போரில் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்களை இருநாடுகளும் பரிமாறிக்கொள்ள தீர்மானித்ததும் அமெரிக்காவை கவலை அடைய செய்துள்ளது.எதிர்காலத்திலும் ஈராக்கிற்கு உதவி வழங்கப்படும் என்ற ஒபாமாவின் அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்த மாலிகி, சிரியா விவகாரத்தில் ஒபாமாவின் கருத்திற்கு மாறுபட்டார்.சிரியாவின் விவகாரத்தை சமாதானமாக பரிசீலிக்க வேண்டும். பிரிவினை மோதல் ஈராக்கில் படர்ந்துவிடுமோ என அஞ்சுவதாக மாலிகி தெரிவித்தார். அரசியல், வர்த்தகம், கல்வி, இயற்கை வளங்களை தோண்டுதல் ஆகிய தேவைகளுக்கு வெளிநாட்டு வல்லுநர்களின் உதவி ஈராக்கிற்கு தேவை என மாலிகி தெரிவித்தார்.ஈராக்கில் கொல்லப்பட்ட 4500 அமெரிக்க ராணுவத்தினரை அடக்கம் செய்துள்ள ஆர்லிங்டன் நேசனல் கல்லறையில் ஒபாமாவும், மாலிகியும் பூங்கொத்து வைத்தனர்.அமெரிக்காவின் ஒன்பது வருட ஈராக் ஆக்கிரமிப்பில் 115000 ஈராக் மக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS.அப்துல் பாரி , EK .முனவ்வர் கான்,அபு மர்வா

முத்துப்பேட்டை: கட்டிட இடிபாட்டில் இறந்தவரின் மணைவி நிதி கேட்டு முதல்வருக்கு கடிதம்



முத்துப்பேட்டை, டிசம்பர் 13 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 28 .10 .2011 அன்று பெய்த கடுமையான மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெறிதளவு பாதிக்கப்பட்டன. அந்த நேரத்தில் புயல் எச்சரிக்கை, வெள்ள அபாயமும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டன. அன்றைய தினம் முத்துப்பேட்டை பேட்டை ரோட்டில் உள்ள ஹாஜா மைதீன் என்பவர் வீட்டில் பேட்டையை சேர்ந்த கட்டிட தொழிலாளி நாடிமுத்து வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த வீட்டு சுவர் மழைநீரை உள்வாங்கியதால் அந்த சுவர் எதிர்பாராமல் இடிந்து விழுந்ததில் இதில் நாடிமுத்து பரிதாபமாக இறந்தார்.இது குறித்து வருவாய் மற்றும் காவல்துறை விசாரணையில் நாடிமுத்து மழைக்கு பலியானார் என்று அறிக்கை அளித்தனர். அப்போது மழைக்கு பலியானவர்களுக்கு நிவாரண நிதி கொடுப்பதற்கு தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். அந்த நிவாரண நிதி அவரது குடும்பத்திற்கு கிடைக்கவில்லை, அதனால் அவருடைய மணைவி புவனேஸ்வரி தமிழக முதல்வருக்கு இந்த நிவாரண நிதி கிடைப்பதற்கு உருக்கமான கடித்தத்தை எழுதி உள்ளார். இக்கடிதத்தில் கூறி இருப்பதாவது : எனக்கு 4 வயதில் ஓர் ஆண் குழந்தையும், 6 மாதத்தில் ஓர் பெண் குழந்தையோடும் மிகவும் கஷ்டத்தில் இருந்து வருகிறேன். என் கணவனின் வருமானத்தில் தான் என் குடும்பத்தை நடத்தி வந்தேன். அவர் இறந்ததில் நானும் எனது பிள்ளைகளும் எந்த வருமானமும் இன்றி வாழ்ந்து வருகிறோம். இவ்வாறு இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
source from. www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை,ASNS.அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், U . பத்ரு ஜமான் ஆலிம்,

மவுத்து அறிவிப்பு: " ஹைருநிஷா"


முத்துப்பேட்டை, டிசம்பர் 12 : பக்கீர் வாடித்தெரு அல்லாபிச்சை அவர்களின் மகளும், அறந்தாங்கி முஹம்மது ஹனீபா அவர்களின் மனைவியும், பக்கீர் வாடித் தெரு மர்ஹும் மஸ்தான் அவர்களின் சகோதரியும், ஜெகபர் அலி, அய்யுப்கான், தாஜுதீன், நசீர் அலி, சாதிக் பாட்சா ஆகியோரின் தாயாரும், ஆசாத் நகர் முஹைதீன் பாட்சா, முஹம்மது முஹைதீன் இவர்களின் மாமியாருமாகிய "ஹைருநிஷா" அவர்கள் இன்று காலை 11 .30 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று இரவு 8 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
source from www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்

ஆசாத் நகர் முஹைதீன் பாட்சா, முஹம்மது முஹைதீன்

நமது நிருபர்

KM. கார்கணி.

முத்துப்பேட்டை SDPI கொள்கை விளக்க பொது கூட்டமும், தமிழ் மாநில தலைவர் வருகையும்...









முத்துப்பேட்டை, டிசம்பர் 12 : முத்துப்பேட்டையில் சோஷியல் டெமாக்ரடிக் கட்சி (SDPI) சார்பில் கொள்கை விளக்க மற்றும் நன்றி அறிவிப்பு பொது கூட்டமும் நேற்று மாலை 7 மணியளவில் முஹைதீன் பள்ளிவாசல் திடலில் இக்கட்சியின் மாவட்ட தலைவர் ஜனாப். M . தப்ரே ஆலம் பாதுஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய SDPI - யின் மாநில செயலாளர் ஜனாப். A .அபூபக்கர் சித்திக் அவர்கள், முத்துப்பேட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முஸ்லிம் மாணவர்கள் பள்ளிக்கு புறக்கநிக்கப்படுகிரார்கள் என்றும், ஏனெனில் மாணவர்களுக்காக உள்ள ஆசிரியர் கழகத்தில் RSS , ஃபாசிஸ்டுகளின் கூடாரமாக இருந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் முஸ்லிம் மாணவர்களை பள்ளிக்கு அனுமதி மறுத்தால் கதவுகள் உடைக்கப்படும் என்றும் மேலும் அவர் தெரிவித்தார். இஸ்லாமியர்களிடம் அரசியல் அதிகாரம் இல்லாததன் காரணத்தால் எல்லா துறைகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும், இன்ஷா அல்லாஹ் SDPI ஆட்சிக்கு வந்தால்தான் இஸ்லாமியர்கலுக்கு நீதி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு எந்த ஓர் அரசியல் கட்சியும் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டுத்தொடரில் குரால் கொடுக்காமல் மவுனமாக இருந்தது மிகவும் வேதனைப்பட வேண்டிய விசயமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய SDPI - யின் மாநில செயற்குழு உறுப்பினர். J . ஜாகிர் ஹுசைன் அவர்கள், இந்திய நாட்டை கொள்ளை காரவர்களிடமிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்தை நாம் நடத்த வேண்டும் என்றும், மேலும் இந்தியாவில் 40 கோடிக்கு மேலான மக்கள் தினமும் வெறும் 20 ரூபாய் தான் சம்பாதிக்கிறார்கள் என்றும், அவர் தெரிவித்தார். ராஜேந்திர சச்சார் கமிட்டி முஸ்லிம்களின் நிலையை எடுத்துக்கூரியதை புறக்கணித்த காங்கிரஸ் அரசாங்கம் நாடகமாடி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அரசியலை நமதாக்குவோம், தேசத்தை பொதுவாக்குவோம் என்றும் அவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய SDPI - யின் தமிழ் மாநில தலைவர். KKSM . தெஹ்லான் பாக்கவி அவர்கள், சில சமுதாய மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கவும் மற்றும் அவர்களை இவைகளிலிருந்து மீட்டெடுக்கவும் தான் இந்த SDPI கட்சி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்திய நாட்டு அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்க SDPI கட்சியால் மட்டும்தான் இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.பரமக்குடியில் தலித் மக்கள் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள் என்றும், ஆனால் இவற்றை தடுக்காமல் மன்மோகன்சிங் அரசானது மக்கள் விரோத அரசை நடத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். SDPI கட்சி ஆரம்பித்து இரண்டு வருடங்களில் 2 தேர்தல்களை சந்தித்துள்ளது என்றும், அவற்றில் 300 இடத்தில் போட்டியிட்டு 60 இடங்களை கைப்பற்றி உள்ளோம் என்றும் இந்த வெற்றியானது காசு கொடுத்துபெற வில்லை என்றும், நாங்கள் கொள்ளையடிக்கும் கூட்டம் இல்லை என்று மக்கள் விளங்கியதன் காரணத்தால் தான் இந்த நிலையை நாகல் அடைந்தோம் என்றும் அவர் தெரிவித்தார். இதில் மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன், நகர செயலாளர் முஹம்மது முஹைதீன், நகர தலைவர் ரஹ்மத்துல்ல ஆகியோர் கலந்து கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com,
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், M . சுபைத் கான், மர்சூக் அஹமது, K . ஷாகுல் ஹமீது.

மவுத்து அறிவிப்பு: "SLM . முஹம்மது சேக்கா மரைக்காயர்"


முத்துப்பேட்டை, டிசம்பர் 12 : பட்டுக்கோட்டை ரோடு மர்ஹும் SLM . சாஹிப் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் துவான் முஹம்மது முஹைதீன் அவர்களின் மூத்த மருமகனும், மர்ஹும் SLM . லெப்பைத் தம்பி மரைக்காயர் அவர்களின் சகோதரரும், மர்ஹும் ஹாலிது மரைக்காயர் அவர்களின் மைத்துனரும், SLM . கமால் பாட்சா, SLM . சாஹிப் மரைக்காயர் அவர்களின் சிரிய தகப்பனாரும், ஹாஜி செய்து ஹமீது அவர்களின் சமந்தியும், SH .அப்துல் ஜப்பார், KM .காதர் சுல்தான், MA . லியாக்கத்தலி MS . அமானுல்லா ஆகியோரின் மாமனாருமாகிய, SLMS . சாஹிப் மரைக்காயர் இவர்களின் தகப்பனாருமாகிய "SLM . முஹம்மது சேக்கா மரைக்காயர்" அவர்கள் இன்று அதிகாலை 1 . 03 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அடக்க நேரம் பின்னர் அறிவிக்காபடும்.
source from www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்

SH .அப்துல் ஜப்பார், SLM . கமால் பாட்சா,

SLMS . சாஹிப் மரைக்காயர் :
தொலைபேசி எண் : 95781 68847


நமது நிருபர்

KM. கார்கணி.

முத்துப்பேட்டையில் கொட்டும் மழை பாராமல் கொடி ஏற்றிய SDPI - கட்சியினர்








முத்துப்பேட்டை, டிசம்பர் 11 : சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பாக தமிழக தலைவர் KKSM . தெஹ்லான் பாக்கவி அவர்கள் இன்று முத்துப்பேட்டையில் உள்ள 5 இடங்களில் SDPI யின் கொடியை ஏற்றி வைத்து திரளாக கூடி இருந்த SDPI செயல் வீரர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் ஆங்காங்கே சிறிய அலவில் சிறப்புரையாற்றினார்கள். கொட்டும் மழை பாராமல் SDPI கட்சியின் செயல் வீரர்கள் எழிச்சி யோடு கொடி ஏற்று நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் மாநில செயலாளர் A .அபூபக்கர் சித்திக், மாநில செயற்குழு உறுப்பினர் J . ஜாகிர் உசேன், திருவாரூர் மாவட்டம் தலைவர் M . தப்ரே ஆலம் பாதுஷா, மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன், மாவட்ட பொருளாளர் நெய்னா முஹம்மது, நகர் தலைவர் ரஹ்மத்துல்லா, நகர செயலாளர் முஹமது மைதீன், நகர செயற்குழு உறுப்பினர் முஹம்மது நிசார், நகர துணைத்தலைவர் முஹம்மது பாசித், அதிராம்பட்டினம் நகர துணைத்தலைவர் ஹாஜா நஜுபுதீன் மற்றும் செயல் வீரர்கள் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து கொள்கை விளக்கம் மற்றும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் இன்று மாலை 7 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் திடலில் நடைபெற உள்ளது.
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா.

மக்கா மஸ்ஜித்: முன்மாதிரியான ஆந்திர மாநில அரசு


ஆந்திரா, டிசம்பர் 09 : மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நிரபராதிகள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்க ஆந்திர மாநில அரசு முடிவுச்செய்துள்ளது.சட்டப்பேரவையில் மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்த மறு தினமே 70 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்குவதற்கு விடுவிக்க ஆந்திர அரசு உத்தரவிட்டது.இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு பயங்கரவாத வழக்கில் அநீதமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைகளையும், சிறைவாசத்தையும் அனுபவித்த நிரபராதிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.2007-ஆம் ஆண்டு மே மாதம் 15- ஆம் தேதி ஹைதராபாத்தில் பிரபலமான மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடித்ததில் ஒன்பது பேர் பலியானார்கள். அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கில் 80 முஸ்லிம் இளைஞர்கள் ஹுஜி, லஷ்கர், சிமி இயக்க உறுப்பினர்கள் என குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.சிறையில் இந்த இளைஞர்கள் அநியாயமான குற்றச்சாட்டுகளின் பெயரால் சிறையில் கொடுமைகளை சந்தித்த வேளையில், அவர்களது குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்தனர். அநீதமாக கைது செய்யப்பட்ட இளைஞர்களை பின்னர் நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்து ஒரு வருடம் நிறைவடைகிறது. இக்காலக்கட்டத்தில் தீவிரவாதி என்ற அபாண்டமான பழியை சுமக்கவேண்டிய துரதிர்ஷ்டவசமான சூழலுக்கு அவ்விளைஞர்கள் தள்ளப்பட்டனர். உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தாம் மக்கா மஸ்ஜிதில் குண்டுவைத்தார்கள் என்ற உண்மை அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மூலமாக தீவிரவாத பழிச் சொல்லிலிருந்து விடுதலை கிடைத்தது. ஆனால், அவர்கள் அனுபவித்த துயரத்திற்கும், சிறையில் கழித்த நாட்களுக்கும் யாரால் ஈடு செய்யமுடியும்? இந்நிலையில் தேசிய சிறுபான்மை கமிஷன் ஆந்திர மாநில அரசுக்கு அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்கவும், அத்தொகையை இக்குற்றத்தை புரிந்த போலீஸ் அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து ஈடு செய்யவும் பரிந்துரை செய்தது.இவ்வழக்கில் 80 பேர் கைது செய்யப்பட்ட போதிலும் 70 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஒரு வருடம் தாமதம் ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்கும் ஆந்திர மாநில அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது ஆகும். முஸ்லிம் இளைஞர்களை குற்றமற்றவர்கள் என கூறி நீதிமன்றம் விடுதலை செய்த வேளையில் அன்று ஆந்திர மாநில முதல்வர் மன்னிப்புக் கோரியிருந்தார். தற்பொழுது பாதிக்கப்பட்ட இளைஞர்களின் மறுவாழ்விற்காக இழப்பீட்டையும் வழங்கி ஆந்திர மாநில அரசு இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக மாறியுள்ளது.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகள் மற்றும் தீவிரவாத தாக்குதல்களின் பெயரால் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த உண்மை தெள்ளத் தெளிவாக புரிந்த பிறகும் நிரபராதிகளை விடுதலைச் செய்யவோ அவர்களுக்கு இழப்பீடு வழங்கவோ எந்த மாநில அரசும் முன்வரவில்லை. இச்சூழலில் ஆந்திர மாநில அரசின் நடவடிக்கை பாராட்டிற்குரியது மட்டுமல்ல துணிச்சலானதுமாகும்.2006 செப்டம்பர் எட்டாம் தேதி 37 பேர் உயிரிழக்க காரணமான மலேகான் குண்டுவெடிப்பின் பெயரால் அநீதமாக கைது செய்யப்பட்ட9 முஸ்லிம் இளைஞர்களில் 7 பேர் 5 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் அப்துல் நாஸர் மஃதனி ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என விடுதலைச் செய்யப்பட்டார். ஆனால் இவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுகள் தயாரில்லை. அதேவேளையில் அப்துல் நாஸர் மஃதனி மீண்டும் ஒரு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவ்வேளையில், நிரபராதிகளுக்கு சில லட்சங்களை இழப்பீடாக வழங்குவதன் மூலமாக அவர்கள் இழந்தை திருப்பி கொடுக்க இயலாது என்றாலும் ஆந்திர மாநில அரசின் முடிவு அநியாயமாக கைது செய்யப்படும் அப்பாவிகளுக்கு நீதி வழங்குவதற்கான புதிய சட்டத்திருத்தத்திற்கு வழிகோலும் என எதிர்பார்ப்போம்!

நமது நிருபர்

அ.செய்யது அலீ.

மவுத்து அறிவிப்பு: "செய்னம்பு கன்னி அம்மாள்"


முத்துப்பேட்டை, டிசம்பர் 09 : ஆசாத் நகர் கருப்பட்டியப்பா மர்ஹும் நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும், மர்ஹும் உதுமாங்கனியார், மர்ஹும் ஹாஜி.கிதிருமுகைதீன், ஹாஜி வருசை இபுராஹீம் ஆகியோரின் தம்பி மனைவியும், மர்ஹும் ஜலீல், ஹாஜா கமால் இவர்களின் தாயாரும்,மஹம்மது ஜலீல், முகைதீன் அடுமை இவர்களின் சிறிய தாயாரும், துளசியாப்பட்டினம் SK. முஹம்மது ஹனிபா அவர்களின் சகோதரியும், மர்ஹும் ஷாகுல் ஹமீது, மர்ஹும் குஞ்சப்ப முஹம்மது அலி, பொட்டியப்பா கமால் முஹைதீன் ஆகியோரின் மாமியாவும், பொட்டியப்பா முஹம்மது கனி அவர்களின் சமபந்திமாகிய "செய்னம்பு கன்னி அம்மாள்" அவர்கள் இன்று காலை 7 .30 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைகி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4.30 மணியளவில் ஆசாத்நகர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.
www.muthupettaiexpress.blogspot.com,
அறிவிப்பவர்

SK. முஹம்மது ஹனிபா

நமது நிருபர்

கார்கணி. காதர் முஹைதீன்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் 2012 ஆம் ஆண்டிர்காண புதிய நிர்வாகிகள் தேர்வு!


துபாய் , டிசம்பர் 08: முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் (MIWA) (REG No.32/2009) புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுப்பு கூட்டம் 21.10.2011 சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் துபாய் அல் - இத்திஹாத் பார்க்கில் (DNATA -அருகில்) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு S. ஜஹபர் உசேன் அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து தலைமை தாங்கிய தலைவர் H.ஷேக் தாவூது அவர்கள் நடப்பு ஆண்டு செயல்பாட்டின் ஆண்டறிக்கையை வாசித்து அளித்தார்கள், மேலும் இச்சங்க சேவைக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டதுடன் நிர்வாக குழுவை கலைப்பதாக கூறி புதிய நிர்வாக குழுவை தேர்ந்தெடுக்க வேண்டுகோள்விடப்பட்டதை தொடர்ந்து H.ஷேக் தாவூது அவர்களை தேர்தல் கண்காணிப்பாளராக இருந்து புதிய நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. இச்சங்க உறுப்பினர்கள் மற்றும் நமது ஊர்வாசிகள் அனைவரின் ஒருமித்த கருத்தோடு இந்த சங்கத்திற்கு புதிய நிர்வாக குழுவிற்கு கீழ்க்கண்ட நபர்கள் நிர்வாக பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை இதன் மூலம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். பொறுப்பாளர்களின் விபரம் போடோவிள் பார்க்கவும்.

நன்றி - http://www.miwauae.blogspot.com

மவுத்து அறிவிப்பு: "தையல்கார முஹமது நெய்னா அம்மாள்"


முத்துப்பேட்டை, டிசம்பர் 08 : முஹைதீன் பள்ளி தெரு மர்ஹூம். முஹம்மத் சுல்தான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் KS . சாகுல் ஹமீது அவர்களின் சம்பந்தியும், M . ஜமால் முஹமது அவர்களின் தாயாரும், ஆனா. ரூனா. அப்துல் ரஹ்மான் அவர்களின் மாமியாரும், முஹம்மது இபுராஹீம், முஹம்மது சேக் தாவூத், தமீம் அன்சாரி தமுமுக சம்சுதீன் ஆகியோரின் மாமியும், ஜெய்னுல் ஆப்தீன் முஹம்மது யாசிர் ஆகியோரின் பாட்டயுமாகிய "தையல்கார முஹமது நெய்னா அம்மாள்" அவர்கள் நேற்று இரவு 7 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று காலை 10 :30 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்

M . ஜமால் முஹம்மது

நமது நிருபர்

கார்கணி. காதர் முஹைதீன்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)