முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை நகரில் காசுக்காக உலா வந்த யானை...



முத்துப்பேட்டை, ஜூலை 08: யானையின் பலம் யானைக்கே தெரியாதாம் ஆனால் யானையின் உருவத்தை கண்டு அஞ்சாதவர்கள் யாருமில்லை. எனினும் நமது அருகாமையில் உள்ள நாடான இலங்கையில்  யானைக்கு என தனியாக ஆசிரமம் வைத்து அவற்றை பாதுகாத்தும், கெளரவ படுத்தியும் வருகிறார்கள். 

நமது நாட்டில் மிருகவதை சட்டம் அமல் படுத்தப்பட்ட நிலையில் நமதூர் முத்துப்பேட்டையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக வந்த தனியாருக்கு சொந்தமான யானையை வைத்து முத்துப்பேட்டை நகரில் வியாபாரிகளிடமும், பொது மக்களிடம் காசுகளை பெற்றுக்கொண்டு தெருக்களில் உலா வந்தது. இப்படி காசுக்காக ஒரு உயிரினத்தை பிச்சை எடுக்க வைக்கும் யானை பாகன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வாளர்கள் கூறினார்கள்.

தொகுப்பு:

J. பரக்கத்து நிஷா 

முத்துப்பேட்டையில் இளம் பெண்ணை கிண்டல் செய்த 2 வாலிபர் கைது!


முத்துப்பேட்டை, ஜூலை 08: முத்துப்பேட்டை செம்படவான்காடு பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் மகள் பாகாம்பிரியாள் (20) இவர் தஞ்சாவூர் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் குளிப்பதற்காக அருகே உள்ள குளத்திற்கு சென்றபோது  6 இளைஞர்கள் பாகாம்பிரியாளை கிண்டல் செய்துள்ளனர்.

உடனே பாகாம்பிரியாள் இளைஞர்களை தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் பாகாம்பிரியாளை  தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பாகாம்பிரியாள் கொடுத்த புகர் அடிப்படையில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த மிச்வர்கான் (18), எர்சாத் அஹ்மத் (18)  இருவரையும் கைது செய்து மேலும் இதில் சம்பந்தப்பட்டுள்ள 4 இளைஞர்களையும் பொலிசார் தேடிவருகின்றனர். 

தொகுப்பு:

J. பரக்கத்து நிஷா 

விடுதலை சிறுத்தை பிரமுகருக்கு அரிவாள் வெட்டு!!! முத்துப்பேட்டையில் பரபரப்பு!!!





முத்துப்பேட்டை, ஜூலை 08: முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவான் ஓடையை சேர்ந்தவர் வெற்றி (35). இவர் திருவாரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளராக இருந்து வருகிறார். நேற்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் முத்துப்பேட்டைக்கு பொருட்கள் வாங்க வந்தார். பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிரே ஒரு கார் வந்தது. அந்த கார் திடீரென வெற்றி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். 


அந்த சமயத்தில் காரில் இருந்து இறங்கிய 7 பேர் கும்பல் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் வெற்றியை அரிவாளால் சரமாரி வெட்டியது. இதில் அவரது இடதுகை, கால் ஆகியவற்றில் பலத்த வெட்டு விழுந்தது. இது குறித்து முத்துப்பேட்டை போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. குற்ற வாளிகளை கைது செய்ய்க்ககோரி விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் 50 க்கும் மேற்பட்டோர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்கு  வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் முத்துப்பேட்டையில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.



த.மு.மு.க வை சீண்டிப்பார்த்த ஜெயலலிதா!!! தலைநகரம் திணறியது!!!






சென்னை, ஜூலை 07: இறைவனின் பெரும் கிருபையினால் மிக மோசமான அடக்கு முறைகளையும் தாண்டி, காவல்துறையின் அராஜகங்களையும் மீறி, தடையை உடைத்து பல்லாயிரக்கணக்கான தமுமுக வினர் சென்னை எக்மோரில் குழுமினர். 


சென்னை நகரில் வரும் வழியெல்லாம் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தபோதும் காவல்துறையின் கண்களின் மன்னை தூவி விட்டு அவர்கள் சம்பவ இடத்தை நோக்கி விரைந்தனர். பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் வந்திறங்கிய தமுமுகவினரை காவல் துறையினர் கைது செய்து மண்டபங்களுக்கு இழுத்து சென்றனர். 

இதையெல்லாம் மீறி காவல்துறையின் அராஜகங்களை கண்டித்து தமுமுகவினர் நகரின் பல இடங்களின் சாலை மறியல் செய்தனர். ஒரு வழியாக 3 மணிக்கெல்லாம் தக்பீர் முழக்கங்களோடு அதிரடிப்படை போல பாய்ந்து வந்த தமுமுகவினரை தடுக்க முடியாமல் காவல் துறை திணறியது. அடுத்த அரைமணி நேரத்துக்குள் கூட்டத்தின் எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியதும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினர். 

ஆண்களும் பெண்களும் காவல்துறையின் பேருந்துகளில் கைதாகி முழக்கங்களை எழுப்பிக் கொண்டே சென்றனர். காவல் துரையின் மண்டபங்கள் எல்லாம் நிரம்பி வழிந்ததும் இனி எங்களால் கைது செய்ய முடியாது என்று காவல்துறை கூறி விட்டது. உங்கள் மக்களை நீங்களே களைந்து செல்ல சொல்லுங்கள் என்று தலைவர்களிடம் கெஞ்சினர். கூட்டத்தினரோ 6 மணி வரை கலையாமல் அங்கேயே முழக்கமிட்டபடி நின்றனர். தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்ட காவல்துறையினர் தாங்களாகவே கலைந்த பின்னர் தான் மக்கள் கலைந்தனர் என்பது ஒரு புதிய சரித்திரம் ஆகும். 

"புயல் காற்றை தடுத்திட: விஞ்ஞானத்திற்கு வழியில்லை! 
தமுமுகவினரை அடக்கிட: தமிழ்நாட்டில் யாருமில்லை!
வாகனங்களை தடுத்து விட்டால்: வரும் வழி தெரியாதோ!
அடக்கு முறைகளை ஏவினால்: அதை தடுக்கும் முறை தெரியாதோ!

போன்ற முழக்கங்கள் உற்சாகத்தோடு முழங்கப்பட்டன. அப்போது காவல்துறையும், உளவுத்துறையும் தலைகவிழ்ந்து நின்றதை பத்திரிக்கையாளர்கள் மிகுந்த நகைப்போடு ரசித்தனர். 

ஜெயலலிதா நாடாளுமன்ற தேர்தலில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் தனக்கான தோல்வியை தேவை இல்லாமல் ஏற்படுத்திக் கொண்டார் என இப்பேரணியை பார்வையிட்ட மூத்த பத்திரிக்கையாளர் கூறினார்.

தேசிய நெடுஞ்சாலைகள் எங்கும் அனைத்து வாகனங்களையும் தடுத்த நிலையில், ரயிலில் வந்தவர்களையும் கைது செய்த நிலையில் 2000 பேருக்கு மேல உங்களை கூட விட மாட்டோம் என்று சவால் விட்ட சூழலில் தமுமுக வினர் தங்கள் போர் குணத்தின் மூலம் தங்கள் பலத்தை வெளிக்காட்டி உள்ளனர்.

உரிய நேரத்தில் இப்பேரணியை தடை செய்த தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து கலைஞர் வெளியிட்ட அறிக்கை பேரணிக்கு மற்றொரு விளம்பரத்தையும், பலத்தையும் பெற்றுக் கொடுத்தது. 

காட்சி ஊடகங்களான சன்டிவி, கலைஞர் டிவி, மக்கள் டிவி, புதிய தலைமுறை, தந்தி டிவி, பாலிமர் டிவி போன்றவை தடையை மீறி நடந்த பேரணியின் நீளத்தையும் அகலத்தையும் சிலிர்ப்புடன் காட்டி உற்சாகமான வர்ணனைகளை கொடுத்தது குறிப்பிட தக்கது. குறிப்பாக கேப்டன் டிவி ஒன்றரை மணி நேரம் நேரலையாக காட்டியது. 

இப்போது குளுகுளு கொடநாட்டில் கோடை வெயில் கொளுத்துவதாக தெரிகிறது.

யாரோடு மோத வேண்டும் என்ற விவரம் தெரியாமல் மோதியவர்கள் இப்போது தோல்வியை ஒப்புக் கொள்வார்களா?

நாங்கள் காற்றில் உதிரும் புளியம்பூக்கள் அல்ல... காண்டாமிருகத்தின் பிடரியை உலுக்கும் சிங்கக் குட்டிகள்! 

பகை எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் அதை பந்தாடிய பிறகுதான் எங்களுக்கு ஓய்வு என்பது தெரியாதா? இறைவன் பெரியவன்! அவனே அனைத்தையும் தீர்மானிப்பவன்!

மவுத்து அறிவிப்பு: "N.A.ஹாஜா நஜிபுதீன்"


முத்துப்பேட்டை, ஜூலை 06: முத்துப்பேட்டை, புதுத்தெரு P.K.T ரோடு,மர்ஹூம் N.அஹமது உசேன் அவர்களின் மகனும், மர்ஹூம் N.அஹமதுஜலாலுதீன், L.M.முஹம்மதுகாசிம் அவர்களுடைய மருமகனும் N.A.,ரபாயிதீன், N.A.ரஹ்மத்துல்லாஹ், N.A.லியாக்கத் அலி இவர்களுடைய சகோதரரும், J.M.முஹம்மது அலி, J.M.மஜ்ஹர் அலி இவர்களுடைய மச்சானும், களஞ்சியம் ஆட்டோ S.அப்துல் வாஹித் அவர்களுடைய மாமனாரும், H.பரக்கத்துல்லாஹ், H.ஜாகிர் உசேன் ஆகியோரின் தகப்பனாருமாகிய N.A.ஹாஜா நஜிபுதீன் அவர்கள் மவுத்தாகி விட்டார்கள். 

(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்றிரவு வெள்ளிக் கிழமை கொத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


அன்னாரின் உறவினரின் தொடர்புக்கு 
N.A.,ரபாயிதீன் : 00971 – 055 – 3876123
N.A.லியாக்கத் அலி : 00971 – 050 – 8166938
N.A.ரஹ்மத்துல்லாஹ் .... : 0091 95002 53513.
H.பரக்கத்துல்லாஹ் : 0091 – 9842248698
H.ஜாகிர் உசேன் : 0091 – 7200248845

தகவல்: 
ரஷித் அலி - முத்துப்பேட்டை 

4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி முத்துப்பேட்டையில் நடைபெற்ற SDPI ஆர்பாட்டம்




முத்துப்பேட்டை,ஜூலை 05: முத்துப்பேட்டையில் SDPI கட்சி சார்பில் நடைபெற்ற 4 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற S. நிசார் அஹ்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் சிறப்பு விருந்திராக இக்காட்சியின் மாநில பொது குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். அப்போது நடைபெற்ற ஆர்பாட்டத்தின் புகைப்பட காட்சிகள்..

நமது நிருபர்:

இபுராஹிம்...

தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினராக எம்.அப்துல் ரஹ்மான் MP தேர்வு அமீரக காயிதெமில்லத் பேரவை வாழ்த்து.



சென்னை,ஜூலை 02:  தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினராக எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தேர்வு  அமீரக காயிதெமில்லத் பேரவை வாழ்த்து. தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினராக காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்தற்கு அமீரக காயிதெமில்லத் பேரவை வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி,பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா,பொருளாளர் கீழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முஸ்லிம்களின் அன்றாட வாழ்வோடு இரண்டற கலந்திருக்கும் மஸ்ஜித்,மஹல்லா ஜமாஅத் இவைகளின் கண்ணியத்தை ஒற்றுமையோடு நிலை நிறுத்த அயராது பாடுபட்டு வரக்கூடிய பேரியக்கமான தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரதிநிதி வக்ப் நிர்வாகத்திற்கு தேர்வாகி இருப்பது ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹல்லா ஜமாத்துக்களில் ஏற்படும் பிரச்சினைகள்,நிர்வாகத் தேர்தல்களில் குளறுபடிகள், அதிகாரங்களை பயன்படுத்தி வக்ப் சொத்துக்களை தாரை வார்ப்பது போன்ற  நிலைகள் இனி நிகழாது என்கிற நம்பிக்கை சமுதாய மக்களுக்கு மிளிர்ந்திருப்பதை வரக்கூடிய தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

புதிதாக வக்ப் வரிய நிர்வாகத்தில் அடியெடுத்து வைத்துள்ள  நமது சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ்.எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்கள்  சமுதாயம் எதிர்பார்க்கும் பங்களிப்பை சிறப்பாக வழங்க நெஞ்சார வாழ்த்துகிறோம்.



முத்துப்பேட்டையில் 04.07.13 ஆம் தேதி அன்று SDPI சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.





முத்துப்பேட்டை, ஜூலை 02: முத்துப்பேட்டையில் SDPI கட்சி சார்பில் வருகிற 04.07.13 அன்று நான்கு  அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி S நிஷார் தலைமையில் நடைபெற உள்ளது, இதற்க்கு கண்டன உரை நிகழ்த்த இக்கட்சியின் தேசிய பொது குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். அதில் முத்துப்பேட்டையில் நிலவும் குடி தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வலியுறுத்தியும், முத்துப்பேட்டை பேரூராட்சி நிரந்தர செயல் அலுவலரை (E.O) பணியமர்த்த கோரியும், முத்துப்பேட்டை பகுதிகளில் குப்பைகளை அகற்றாமல் தொடரும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும், முத்துப்பேட்டை பகுதிகளில் சாக்கடை பகுதிகளை சுத்தம் செய்யாததை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலருக்கும், திருத்துறைப்பூண்டி வட்டாச்சியர் அலுவலருக்கும் கடிதங்களும் அனுப்பாட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

நமது நிருபர்
i
ஷேக், கபீர்  

சென்னையில் உள்ள ஓர் புதிய நிறுவனத்திற்கு CCTV கேமரா டெக்னிசியன் உடனடி தேவை...


சென்னை, ஜூலை 01: சென்னையில் உள்ள புதிய நிறுவனமான CCTV கேமரா மற்றும் தொழிலுக்கு பாதுகாப்பு அளிக்கும் செகியூரிட்டி ஆண்டி தெப்ட் போன்ற சாதனைகளில் பனியாற்ற உடனடி ஆட்கள் தேவை. இந்த பணிகளில் குறைந்தது ஒருவருடம் அனுபவம் தேவைப்படுகிறது. அவரவரின் பணியை  பார்த்து நல்ல முறையில் சம்பளம் வழங்கப்படும். மேலும் தொடர்புக்கு: நூருல் அமீன், 978 88 07 607

தொகுப்பு:

ஜே. ஷேக் பரீது 

துபாயில் உள்ள சில நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது


துபாய், ஜூலை 01: அன்பார்ந்த முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு துபாயில் உள்ள சில நிறுவனத்திற்கு கீழ் கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது. 

1) A LEADING HOTEL SUPPLIES,
    SALES EXECUTIVE IN (Hotel Supplies Field, Hospitality Supplies),
    3 Years Experience Must,
    Valid: U.A.E Driving license 
தொடர்புக்கு: ahmarzuk.deen@gmail.com 

2) IT Professional Required,
    With Experience in Networking & Hardware Troubleshooting,
    Need for Only Female,
தொடர்புக்கு: logistics@rastilari.com

3) ENERGY DRINK SALES, (in Abu Dhabi, And Dubai),
    Sales Man Cum Driver Required,
    Good English Communication Skills 
    Position Dubai,
தொடர்புக்கு: slsmndxb@gmail.com

4) SPARE PARTS COMPANY,
    Sales Executive Required,
    Age 25-35, Indian, Pakisthani, Nepalese, Computer Literate,
    Well Educated, Hard-Working,
    With Sharp intellect, Visa Provided,
    Excellent Package for the Right Candidate,
தொடர்புக்கு: alrabeh@eim.ae

5) Outdoor Sales Executive Required, 
     Young Professional, with 2 years UAE experience,
     Good Contacts with Consultants and Contractors,
     Trainee Package: 10,000,
தொடர்புக்கு: hr@bohec.com

6) Outdoor & Indoor Salesman Required urgently,
    for a Trading Company in Dubai, 
    Dealing in industrial tools, building materials tools,
    building materials & Welding Accessories, 
தொடர்புக்கு: hr@aljameatrading.com

7) Van Salesman required for a Trading Company in Dubai,
     Looking for Salesman 
     1 Nos in Alain 
     2 Nos in Dubai 
     Northern Emirates, with good experience in food and 
     Beverages preferably with a manual driving License.
தொடர்புக்கு: tradesalesman@gmail.com

8) Telemarketing Staff Female & Accounting Assistant (Male, can read Arabic),
    Required for an insurance broker based in Dubai,
    with excellent communication Skills, Organized & flexible,
    can start immediately.
தொடர்புக்கு: applicant@ugib.com

9) Administrative Assistant,
    with good Communication skills, excellent in PC,
    has a background working in a contracting company, & can work with 
    minimal supervision. 
தொடர்புக்கு: info@tornado-group.com

10) ERP SOFTWARE COMPANY, 
      Marketing & Sales executive required with experience for a Sharjah,
      Those who have 3 to 5 years experience in the same field & having 
      own car is an added advantage. 
தொடர்புக்கு: uaeerpsoftware@gmail.com

நன்றி 

மல்லிப்பட்டினம் ஷாகுல் ஹமீது (அஜ்மான்)


முத்துப்பேட்டை அரசு புதிய மருத்துவமனை திறப்பு விழாவும், தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் வருகையும்



முத்துப்பேட்டை ஜூலை 01: முத்துப்பேட்டையில் அரசு மேம்படுத்தப்பட்ட புதிய மருத்தவ மனை திறப்பு விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது . மாவட்ட வருவாய் அலுவலர் மணிமாறன் தலைமை வகித்தார் .மாவட்ட துணை இயக்குனர் பரனிதரன் வரவேற்று பேசினார். மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் தொகுப்புரை ஆற்றினார் . நிகழ்ச்சியில் புதிய மருத்துவ மனை கட்டிடத்தை தமிழக உணவுதுறை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்து பேசுகையில். இந்த மருத்துவமனை 62 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது.

இன்னும் 40 லட்சத்தில் கட்டிடங்கள் கட்டப்பட இருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் காப்பீடு திட்டத்தில் 12 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பயன் பெற்று இருக்கிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த மாவட்டத்தை போல் பயன் பெற்றதில்லை. நான் சிறு வயதாக இருந்த போது இந்த மருத்துவ மனைக்கு எனது தாயின் கையை பிடித்துக்கொண்டு வந்து வைத்தியம் செய்திருக்கிறேன்.
இப்போ நமது தாய் அதே மருத்துவமனையை எனது கையால் திறந்து வைக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதான் முதல்வரின் சாதாரண நபரை கூட முன்னுரிமை படுத்தும் பெருந்தன்மை என்றார்.
விழாவில் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் , ஒன்றிய குழு தலைவர் நடராஜன் , துணைத் தலைவர் தெட்சினா மூர்த்தி. பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் சண்முகம், மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலெட்சுமி  அம்பிகாபதி, மாவட்ட கவுன்சிலர் முருகையன், பேரூராட்சி துணை தலைவர் அப்துல் வகாப், ஒன்றிய கவுன்சிலர் ஜகன், நகர அவைத் தலைவர் கோவிந்தராஜ்,
வீட்டு வசதி வாரிய தலைவர் மைநூர்தீன் , துணை தலைவர் முத்து ராமலிங்கம் ,இயக்குனர்கள் குறிஞ்சி சங்கர், கரிகாலன்,முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அம்பிகாபதி ,மங்கள் கூட்டுறவு வங்கி தலைவர் அன்பழகன் துணை தலைவர் கோவி பிரபு , நில வள வங்கி துணை தலைவர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
படம் , செய்தி : முத்துப்பேட்டையில் புதிய மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்து மாணவர்களுக்கு தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் கண்ணாடி அணிவித்தார்.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை   .

எனது திருமணத்திற்கு அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள், ஈகல் ஷாகுல் அழைப்பு...


முத்துப்பேட்டை, ஜூன் 30: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர்களுக்கும் எனது முதற்க்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 4, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 12-08-2013 திங்கக் கிழமை காலை 11மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை அரபு சாகிப் பள்ளிவாசல் மதரஷாவில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன். 

இப்படிக்கு:

S.ஷாகுல் ஹமீது, என்கிற (ஈகல் சாகுல்) 
பாரிஸ் குரூப், துபாய் 
தொலைபேசி எண்: 050 160 85 59.

ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழாவும், நடந்து முடிந்த நிகழ்சிகளும் ஓர் பார்வை...














முத்துப்பேட்டை, ஜூன் 29: ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களின் விபரம்:

1) தலைமை. கே. என். சேக் நூர்தின்,

2) சிறப்பு சொற்பொழிவு: மெளலவி அல்ஹாஜ். எம்.எ. அப்துல் லதீப் அவர்கள்,

3)  மெளலவி. எ. முஹம்மது கான் பாக்கவி (மேலாளர் ரஹ்மத் பதிப்பகம்),

4) எம். அப்துல் நாசர், பேராசிரியர், உத்தம பாளையம் கருத்த ராவுத்தர் கல்லூரி,

சிறப்பு விருந்தினர்கள்:

1) அப்துல் லதிப் அல் முகந்தி (கத்தார் அரபி)

2) எஸ்.எம். ஹைதர் அலி. (அல்  மஹா அறக்கட்டளை நிறுவனர்),

3) அல்ஹாஜ். எம்.ஏ. முஸ்தபா, (ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனர்),

4) எம். அப்துல் ரஹ்மான், MA, MP, (வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்)

5) அல்ஹாஜ். க.மு. நெய்னார் முஹம்மது (சோழநாடு, துபாய் இஸ்லாமிய நல சங்கம் முத்துப்பேட்டை பிரதிநிதி.

6) நன்றியுரை எஸ்.எம். ஜெகபர் அலி,

மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்தவர்களும், பல்வேறு ஊர் மக்களும், முத்துப்பேட்டை அனைத்து முஹல்லாவை சார்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்.






துபாய், ஜூன் 29: முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் மாதாந்திர கூட்டம் ஹோர் அல் அன்ஸில் உள்ள முத்துப்பேட்டை நண்பர்கள் ரூமில் நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நேற்று நடந்து முடிந்த ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா மிகவும் சிறப்புடன் நடைபெற்றது என்றும் இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பாடுபட்ட அனைத்து உள்ளங்களையும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டி சார்பில் நினைவு கூறும் பொருட்டு தலைவர். ஜனாப். ஷேக் தாவூத் அவர்கள் உரை நிகழ்த்தினார். 

மேலும் இதனைத்தொடர்ந்து வரக்கூடிய நோன்பை முன்னிட்டு ஃபித்ரா வழங்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. இந்த பித்ரா நிதியை வசூல் செய்ய ஜனாப். S. ஜஹபர் உசேன், ஜனாப். A. அஹமது அன்சாரி ஆகிய இருவர் தலைமையில் இரு குழுவாக பிரித்து வசூல் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளார்கள். நிகழ்ச்சி முடிவின்போது சிறப்பு விருந்து உபசரிப்பும் நடைபெற்றது. 

தொகுப்பு:

A. முஹம்மது இல்யாஸ் 

பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்க்கு வாழ்த்து அனுப்பிய துபாய் வாசகர்.


முத்துபேட்டை, ஜூன் 29: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), எல்லா புகழும் அல்லா ஒருவன்கே புதிய ஜும்மாஹ் மஸ்ஜித் திறப்பு விழாவிற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்களை போன்ற வெளிநாட் வாழ் சகோதர்களுக்கு இது போன்ற நேரடி ஒலிபரப்பு ஊரில் இல்லாத குறை தெரியவில்லை.

Thank you so much for your telecast.

Best Regards.
Mohamed Iqbal



பள்ளிவாசல் திறப்பு விழா குறித்த முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்க்கு வாழ்த்து அனுப்பிய நாட்சிகுளம் வாசகர்.


நாச்சிகுளம், ஜூன் 28: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), எல்லா புகழும் அல்லா ஒருவன்கே புதிய ஜும்மாஹ் மஸ்ஜித் திறப்பு விழாவிற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்களை போன்ற வெளிநாட் வாழ் சகோதர்களுக்கு இது போன்ற நேரடி ஒலிபரப்பு ஊரில் இல்லாத குறை தெரியவில்லை.

இப்படிக்கு 

நாச்சிகுளம் புரோஸ் கான்

பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்க்கு வாழ்த்து அனுப்பிய லண்டன் வாசகர்கள்.




முத்துப்பேட்டை, ஜூன் 28: அல்லாஹ் இந்த பள்ளிவாசல் திறந்த பிறகு இந்த தெருவில் வசிக்க கூடிய மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் பள்ளியை கண்ணியப்படுத்தும் விதமாக 5 வேலை தொழுகையை பேணி கடைப்பிடித்து வருமாறும், அல்லாஹ்வின் அருள் நம் அனைவருக்கும் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

இப்படிக்கு 

லண்டனிலிருந்து:

1) G. ராசீக் பரீத் 
2) G. அப்துல் மாலிக்
3) A. அஹ்மத் மைதீன் என்கிர ராஜா (லண்டன்)
4) தம்பி மரைக்காயர் 
5) A. அப்துல் சுபகான் 
6) முனைவர் அஹ்மத் 
7) M. அஹமது இப்ராஹிம் 








பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்க்கு வாழ்த்து அனுப்பிய SDPI நண்பர்கள்.



முத்துப்பேட்டை, ஜூன் 28: அல்லாஹ் இந்த பள்ளிவாசல் திறந்த பிறகு இந்த தெருவில் வசிக்க கூடிய மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் பள்ளியை கண்ணியப்படுத்தும் விதமாக 5 வேலை தொழுகையை பேணி கடைப்பிடித்து வருமாறும், அல்லாஹ்வின் அருள் நம் அனைவருக்கும் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

இப்படிக்கு 

முத்துப்பேட்டை SDPI நண்பர்கள் (துபாய்)
மற்றும் முத்துப்பேட்டை அனைத்து முஹல்லா இளைஞர் அணி (துபாய்)


பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்க்கு வாழ்த்து அனுப்பிய துபாய் வாசகர்.


முத்துப்பேட்டை, ஜூன் 28: அல்லாஹ் இப்பள்ளி மூலம் மென்மேலும் நன்மக்களை உருவாக்கி நாம் அனைவரும் அல்லாஹ்வால் திருப்பதி அடைந்தவர்களாக நம்மை ஆக்கி மறுமையில் நாம் அனைவருக்கும் சொர்கத்தில் உயர்ந்த  இடத்தை தந்தருள்வானாக.

இப்படிக்கு 

M. சுதான் அப்துல் காதர் (துபாய்)

பள்ளிவாசல் திறப்பு விழா குறித்த முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்க்கு வாழ்த்து அனுப்பிய குவைத் வாசகர்கள்.




முத்துப்பேட்டை, ஜூன் 28: முத்துப்பேட்டையில் உள்ள ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா குறித்து நாங்கள் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் கண்டோம் மிகவும் சந்தோசம் அடைந்தோம். இது போன்ற பள்ளிகள் இல்லாத ஊர்களுக்கு பள்ளிவாசல் கட்ட வெளிநாட்டு வாழ் நண்பர்கள் ஒத்துழைப்பு தந்து உதவிகள் செய்ய முன்வர வேண்டும். இந்த பள்ளிவாசல் திறப்பு விழா மிகவும் சீரும், சிறப்புடனும் நடைபெற ஏக இறைவனான அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம். இந்த நிகழ்ச்சி வெற்றி அடைய வாழ்த்தும் அன்பு நெஞ்சகள்.

குவைத்திலிருந்து:

1) முஹம்மது ஜின்னா,
2) முஹம்மது ஷாபி,
3) முஹம்மது நசீர்,
4) முஹம்மது இஷாக்,
5) முஹம்மது ஹசன் (அதிரை)
6) முஹம்மது அஸ்ரப் (திருச்சி)
7) முஹம்மது ஹலீம் 

முத்துப்பேட்டையிலிருந்து:

1) முஹம்மது இசாக் மற்றும் குடும்பத்தினர் 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)