எக்ஸ்பிரஸ் கருத்து கணிப்பில் இன்றைய நிலவரம்:முன்னிலையில் SDPI :இரண்டாம் நிலையில் பாஜக

முத்துப்பேட்டை, ஜனவரி 10: முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு பொருத்தமானவர்கள் யார் என்ற தலைப்பில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இயனயத்தளம் கருத்து கணிப்பை நடத்தி வருகிறது. கடந்த 08-01-2014 அன்று துவங்கப்பட்ட கருத்து கணிப்பு வரும் 30-01-2014 அன்று முடிவடைகிறது. முத்துப்பேட்டையை சேர்ந்த சகோதரர்கள் அனைவரும் இந்த கருத்து கணிப்பில் தவறாமல் பங்கேற்று பிடித்தமானவர்களுக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எக்ஸ்பிரஸ் நடத்தி வரும் கருத்து கணிப்பில் (11-01-2014) இன்றைய நிலவரப்படி மாலை 4:30 மணி வரை SDPI கட்சியின் அபூபக்கர் சித்திக் 54% சதவிகிதம் பெற்று 88 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பா.ஜ.க. வின் பேட்டை சிவா 35% சசதவிகிதம் பெற்று 57 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எக்ஸ்பிரஸ் கருத்து கணிப்பில் இன்றைய நிலவரம் :முன்னிலையில் SDPI :இரண்டாம் நிலையில் பாஜக
முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும், பேரூராட்சிக்கு தமுமுக கோரிக்கை.

முத்துப்பேட்டை, ஜனவரி 10: மன்னார்குடி போன்ற முத்துப்பேட்டையிலும் ஆகிரமப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்ப பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமுமுக கோரிக்கை விடுத்துள்ளது. முத்துப்பேட்டை தமுமுக நகரத்தலைவர் நெய்னா முஹம்மது முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது.
சென்ற சில தினங்களுக்கு முன்பு முத்துப்பேட்டை பேரூராட்சி கூட்டத்தில் 9 வது வார்டு கவுன்சிலர் பேட்டை சாலையில் 5 வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் 13 வது வார்டு கவுன்சிலர் அந்த பேட்டை சாலை குண்டும் குழியுமாக ஆகி சேதமாகி உள்ளது. சீர் செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் பேசியுள்ளார். இது வரவேற்கத்தக்கது பேட்டை சாலை தற்பொழுது உள்ள நிலையை பார்க்கும் பொழுது அந்த சாலை தேவை இல்லை என்று தான் தோன்றுகிறது. காரணம் மக்களும், வாகனங்களும் செல்ல முடியாமல் படு மோசமாக உள்ளது. அதனை பேரூராட்சி நிர்வாகம் கவனத்திற்கு எடுத்து சீர் செய்யவேண்டும். சமீபத்தில் மன்னார்குடி நகராட்சி வறண்டு போன குளத்தை ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்கால் மூலம் தண்ணீர் கொண்டு வந்து குளத்தை நிரப்பிய செய்தியை நாம் தெரிந்தோம். நகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை மிகவும் வரவேற்க்கத்தக்கது.
அது போல முத்துப்பேட்டையிலும் பெரும்பாலான குளங்கள் ஆக்கிரமிப்பு களால் தூர்ந்தும் பல குளங்கள் தண்ணீர் வரமுயாத நிலையிலும் உள்ளது. உடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி நகரில் உள்ள குளங்களில் தண்ணீர் நிரப்ப பேரூராட்சி கடமை உணர்வுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டறை குளத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு பயன் அளிக்காத வகையில் பல லட்சம் மன்றத் தலைவரால் செலவு செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு தேவையற்ற செயலாகும். இதற்க்கு செலவிடப்படும் பணத்தை தூர்ந்துள்ள வாய்க்கால்களை தூர்வாரி நிலத்தடி நீரை சேமித்து முத்துப்பேட்டை நகரத்தில் நீர் ஆதாரம் கிடைக்க பேரூராட்சி முன்வர வேண்டும் இவ்வாறு கோரிக்கை மனுவில் நெய்னா முஹம்மது கூறியுள்ளார்.
இப்படிக்கு: நகரத் தலைவர் நெய்னா முஹம்மது.
நமது நிருபர்: AKL அப்துல் ரஹ்மான்.
அதிரையில் வாகனம் மின்கம்பத்தில் மோதி நொறுங்கியது...
அதிராம்பட்டினம், ஜனவரி 07: அதிரையில் இன்று ஏற்பட்ட விபத்தில் வாகனம் மின்கம்பத்தில் மோதி நொறுங்கியது. அதிரை கடற்கரைதெருவை சேர்ந்தவர் அஷ்ரப். இவர் இன்று மதியம் 4 மணியளவில் பட்டுக்கோட்டையிலிருந்து அதிரையை நோக்கி தனது இன்னோவா காரை ஓட்டி வந்துள்ளார். வாகனம் கூட்டுறவு வங்கி அருகே கடந்து செல்லும்போது எதிரே வரும் பேருந்தை அறிந்த இவர் திடீர் ப்ரேக் போட்டுள்ளார். உடனே வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி தூரத்தில் உள்ள (மருத்துவர் ராஜு அவர்களின் கிளினிக் எதிரே) மின்கம்பத்தில் மோதி விபத்தானது.
இதில் மின்கம்பம் சேதமடைந்தது. இடது பக்கம் இருந்த கழிவு நீர் வாய்க்காலில் இறங்கியதில் வாகனத்தின் முகப்பு பகுதி, கதவுகள், கண்ணாடி உள்ளிட்டவை சேதமடைந்தது.
மின்கம்பத்தில் மோதியதால் நிகழ இருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டது. லேசான காயமடைந்த அஷ்ரப் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
தகவலறிந்த மின்சார ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்கம்பதை சரிசெய்தனர். விபத்து குறித்து அதிரை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனால் இந்தப்பகுதி முழுதும் சில மணிநேரங்கள் பரபரப்பாக காணப்பட்டது.
முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு பொருத்தமானவர்கள் யார் ? கருத்து கணிப்பு நடத்துகிறது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் ?

முத்துப்பேட்டை, ஜனவரி 08:
முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு யார் தகுதியானவர் யார் என்பதனை தெரிந்துகொள்ள கருத்து கணிப்பு நடத்துகிறது எக்ஸ்பிரஸ், உங்களின் கருத்துக்களை facebook இல் உள்ள முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் கணக்கில் பதிவு செய்யுங்கள்.
ஒரு காலத்தில் இஸ்லாமியர்கள் வசம் இருந்த முத்துபேட்டை பேரூராட்சி ஒரு சில சமுதாய துரோகிகளின் பண போதையாலும், வெத்து பந்தா மற்றும் போலி செல்வாக்கை நிரூபிப்பதற்காகவும் மாற்று மதத்தவரிடம் அடகு வைத்துவிட்டனர் .
மாற்று மதத்தவர் ஆட்சிக்கு வருவதில் நமக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்றாலும் கடந்த கால வரலாறுகளை புரட்டி பார்த்தோமேயானால்,ஆட்சியில் ஆமர்ந்திருந்த அனைவரும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராகத்தான் செயல் பட்டுள்ளனர் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.
எந்த வருடமும் இல்லாத அளவிற்கு முத்துபேட்டையில், கடந்த முறை நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தல் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இஸ்லாமியர்களில் ஒரு சிறந்த நபர் தலைவராக வர வேண்டும் என்பதுதான் நம் முத்துபேட்டை மக்களின் கனவாகவும் நீண்ட நாள் ஆசையாகவும் இருந்து வருகிறது.
பொதுவாக பேரூராட்சி தலைவர்களுக்கு இது வரை அதிக பட்சமாக 3 அல்லது நான்கு பேர்கள் மட்டுமே போட்டியிடுவார்கள். ஆனால் கடந்த முறையோ முத்துபேட்டையில் வராலாறு காணாத வகையில் 13 பேர் போட்டியிட்டனர்.
அதில் SDPI கட்சியின் சார்பில் அபூபக்கர் சித்திக் அவர்களை களமிறக்கியது.இவரை எதிர்த்து போட்டியிட இருந்த பல்வேறு நபர்களிடமும் வேட்பு மனுவை வாபஸ் வாங்க கோரி பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் வேட்பு மனுவை வாபஸ் வாங்க யாரும் முன் வரவில்லை.
இளைஞர்களின் தீவிர கள பனியாலும் சூறாவளி பிரசாரத்தின் காரணமாகவும் முத்துபேட்டை பேரூராட்சி மன்ற தேர்தலில் சித்திக் வெற்றி பெறுவார் என எக்ஸ்பிரஸ் முன் கூட்டியே கருத்து கணிப்பை வெளியிட்டது. துரதிஷ்டவசமாக களத்தில் 13 பேர் போட்டியிட்டதால், அந்த 13 பேரையும் எதிர்த்து களத்தில் நின்ற சித்திக் இரண்டாவது இடத்திற்கு வந்தார். அதிகார பலம் மற்றும் பண பலத்தால் ஆதிமுக அருணாசலம் வெற்றி பெற்றார்.
நல்லாட்சி கொடுப்பேன் என்ற அருணா நிர்வாக திறமையின்மையால் மிகவும் மோசமான ஆட்சியை நடத்தி கொண்டு இருக்கிறார். எங்கு பார்த்தாலும் சாக்கடை,மலைபோல் குவியும் குப்பை மேடுகள், கொசுத்தொல்லை, குடி நீர் பிரச்சனை,வீட்டு வரி உயர்வு, உள்ளிட்ட பிரச்சினைகளால் அல்லல்படுகிறது பேரூராட்சி.
களத்தில் நின்ற 13 வேட்பாளர்களில் யாரேனும் இந்த அவல நிலைக்கு எதிராக தீவிரமாக போராடி இருப்பார்களா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் SDPI கட்சியினரோ இந்த அவலநிலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
எனவே அடுத்து யார் பேரூராட்சி தலைவராக அமைய வேண்டும் என்பதற்காக நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் கருத்து கணிப்பை நடத்துகிறது. கருத்து கணிப்பை நடத்துவது மட்டுமல்லாமல் களம் அமைக்கவும் தயாராக இருக்கிறது.
உங்களின் கருத்துக்களை முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் என்ற FACEBOOK மூலமாகவோ அல்லது public.mttexpress@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கலாம். உங்களின் கருத்துக்கள் அனைத்தும் நமது இணையதளத்தில் வெளியிடப்படும் .
பெரும்பான்மை மக்கள் யாரூக்கு ஆதரவு தெரிவிக்கின்றார்களோ அவர்கள் தான் முத்துபேட்டை பேரூராட்சி தலைவர் பொறுப்புக்கு தகுதியானவர் என்று எக்ஸ்பிரஸ் தீர்மானிக்கும் செய்திகள் வெளியிடும்.
குறிப்பு :அடுத்து நடைபெற இருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் தலை சிறந்த ஐ .ஏ .எஸ். அதிகாரிகளான வே. இறையன்பு ஐ .ஏ .எஸ் ப. சிவகாமி ஐ .ஏ .எஸ் மற்றும் உமாசங்கர் ஐ .ஏ .எஸ் ஆகிய அதிகாரிகளை முத்துபேட்டைக்கே அழைத்து வந்து நிர்வாக திறன் மற்றும் ஆளுமை திறன் ஆகிய பயிற்சிகள் கொடுக்க முழு முயற்சி எடுக்கும் என்பதனையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்
மௌத்து அறிவிப்பு "ஹாஜா அலாவுதீன் "
முத்துப்பேட்டை, ஜனவரி 06: (S.K.M) சின்ன கட்சி மரைக்கா தெரு, மர்ஹும் அபு பக்கர் - ஹதிஜா அம்மாள் இவர்களின் புதல்வர், தஞ்சை நேஷனல் பார்மா L.கமால் பாட்சா அவர்களின் சகோதரியின் மகனும், H.அபூ பக்கரின் தகப்பனாரும், சென்னை A.K.அஹமது உசேன் அவர்களின் மூத்த சம்மந்தியும், A.பகருதீன் அலி அஹ்மத்தின் மாமனாருமாகிய “ஹாஜா அலாவுதீன்” அவர்கள் இன்று (05.01.2014) காலை 7 மணியளவில் கூத்தாநல்லூர் (லெட்சுமாங்குடியில் மாரடைப்பின் காரணமாக) மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.....
அன்னாரின் ஜனாசா இன்று (05.01.2014) ஞாயிற்றுக் கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின் அங்கேயே அடக்கம் செய்யப் படுகிறது. அன்னாரின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
நன்றி..Dr.முஜீபுர் ரஹ்மான் S/O. L.கமால் பாட்சா.
A.H.பகுருதீன் அலி அஹமத்.
தஞ்சையில் மனித நேய மக்கள் கட்சி நகர தலைவர் வெட்டி கொலை-பதற்றம்
தஞ்சாவூர், ஜனவரி 05: தஞ்சை பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் உள்ள குண்டு தைக்கால் சின்ன புதுப்பட்டினத்தை சேர்ந்தவர் சையத் ஜமாலூதீன் (58). இவர் தஞ்சை நகர மனித நேய மக்கள் கட்சி தலைவராகவும், மாவட்ட அமைப்பாளராகவும் இருந்து வந்தார். வக்பு வாரியத்துக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள 31 ஏக்கர் நிலத்தையும் பராமரித்து வந்தார். அந்த நிலத்தில் குடிசை அமைத்து குடியிருந்து வந்தார். மேலும் தஞ்சை பூ மார்க்கெட்டில் பூ வியாபாரமும் செய்து வந்தார்.
இன்று அதிகாலை சையத் ஜமாலூதீன் பூ வியாபாரத்திற்காக தனது மோட்டார் சைக்கிளில் மார்க்கெட்டுக்கு புறப்பட்டு வந்தார். வீட்டின் அருகில் அமைக்கப்பட்டுள்ள பூந்தோட்டத்தில் உள்ள பூக்களையும் பறித்து கொண்டு சென்றார்.
பட்டுக்கோட்டை பைபாஸ் சாலை அருகே சென்ற போது 2 பேர் கும்பல் அவரை வழி மறித்து தலையில் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் பலத்த வெட்டு விழுந்த அவர் மூளை சிதறி சம்பவ இடத்திலே பலியானார். இந்த சம்பவம் அதிகாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. இதனை யாரும் கவனிக்கவில்லை. இதனால் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த கொலை குறித்து தஞ்சை தாலுகா போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட சையத் ஜமாலூதீன் உடலை ஆம்புலன்சில் ஏற்றி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இக்கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 2 பேர் தஞ்சை தாலுகா போலீசில் சரண் அடைந்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது சையது அமீர் என்பவரது மகன்கள் சையது உசேன் (47), சையது பாபு(42) என்பது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் சையத் ஜமாலூதீன் உறவினர்கள் ஆவார்கள்.
வக்பு வாரிய சொத்தை பரமாரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடைபெற்றது தெரிய வந்தது. மேலும் அவரது உறவினர்கள் வக்பு வாரிய சொத்தை விற்க முயன்றதை தட்டிக் கேட்டதால் இந்த கொலை நடந்துள்ளது.
கொலையாளி சையது உசேன் சென்னை தாம்பரத்தில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
சையது பாபு விவசாயம் செய்து வருகிறார். கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட சையத் ஜமாலூதீனுக்கு அலிமா என்ற மனைவியும், சையத் காதர் என்ற மகனும், நசீனா பானு, பர்வீன் பானு என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. அவர்கள் சென்னையில் வசித்து வருகிறார்கள்.
மனித நேய மக்கள் கட்சி நகர செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய “பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு கவுன்சிலிங் நிகழ்ச்சி"
முத்துப்பேட்டை, ஜனவரி 05: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பொதுமக்கள் நலன் கருதி “பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு கவுன்சிலிங் நிகழ்ச்சி” 31.12.2013 அன்று மாலை 4.30 மணியளவில் முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் மாலிக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக Dr.K.இளங்கோ அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் அக்சஸ் இந்தியாவின் ஆராய்ச்சியாளர் முகைதீன் மற்றும் கனி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜ் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட Dr.இளங்கோ அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் நினைவு பரிசு வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்ச்சியில் 700க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
சாலை விபத்தில் படுகாயமடைந்த திருப்பூர் குலாம் முஹம்மது விற்கு உதவிகரம் நீட்டுங்கள்
திருப்பூரில் தேவராம் பாளையம் ஏரியாவில் வசிக்கும் குலாம் முஹமது என்ற சகோதரன் தனது நண்பர்களுடன் பொள்ளாச்சி செல்லும் வழியில் மாருதி ஜென் வாகனம் விபத்துக்குள் ஆகி மிக மோசமான நிலையில் கோவை கேஜி மருத்துவ மனையில் உள்ளார் .

அவருடன் சென்ற இரண்டு சகோதரர்கள் வாபாத் ஆகி விட்டனர் ....குலாம் குடும்பத்தில் அவருடையே தந்தை ஆறு மாதத்திற்கு முன் வபாத்தாகி விட்டதால் ஏழ்மையான சூழ்நிலையில் உள்ளது குலாமிருக்கு திருமண வயதில் இரண்டு சகோதரிகள் உள்ளனர் இப்போது வரைக்கும் அவருக்கு இரண்டு லட்சம் செலவிட பட்டு உள்ளது இன்னும் ஐந்து லட்சம் தேவை படுகிறது. குலாமிருக்கு இரண்டு விரல்கள் துண்டு ஆகி உள்ளது ஒரு பக்கம் தலையில் பயங்கர அடிபட்டு மண்டை ஓடு பிராக்ச்சர் ஆகி உள்ளது இந்த இரண்டு லச்சதையும் இந்திய தவ்ஹித் ஜமாஅத்,தமுமுக ,தேவராம் பாளையம் சுன்னதுள் ஜமாஅத் பள்ளி நிர்வாகம் சேர்ந்து மிக கஷ்ட்ட பட்டு திரட்டி உள்ளோம் அந்த சகோதரன் நிவராணம் அடைய அனைவரும் துவா செய்யுங்கள் ....வாய்ப்பு உள்ளவர்கள் உதவும் மாறு கேட்டு கொள்கிறோம் ....
குலாம் விபத்து ஆன புகை படமும் அவருடைய தலை ஸ்கேன் செய்த புகை படமும் இணைக்க பட்டு உள்ளது ......
தொடர்புக்கு ......
இப்படிக்கு
A.யாசர் அரபாத்
மாவட்ட செயலளார்
இந்தியதவ்ஹித் ஜமாஅத்
திருப்பூர்
8525086016

அவருடன் சென்ற இரண்டு சகோதரர்கள் வாபாத் ஆகி விட்டனர் ....குலாம் குடும்பத்தில் அவருடையே தந்தை ஆறு மாதத்திற்கு முன் வபாத்தாகி விட்டதால் ஏழ்மையான சூழ்நிலையில் உள்ளது குலாமிருக்கு திருமண வயதில் இரண்டு சகோதரிகள் உள்ளனர் இப்போது வரைக்கும் அவருக்கு இரண்டு லட்சம் செலவிட பட்டு உள்ளது இன்னும் ஐந்து லட்சம் தேவை படுகிறது. குலாமிருக்கு இரண்டு விரல்கள் துண்டு ஆகி உள்ளது ஒரு பக்கம் தலையில் பயங்கர அடிபட்டு மண்டை ஓடு பிராக்ச்சர் ஆகி உள்ளது இந்த இரண்டு லச்சதையும் இந்திய தவ்ஹித் ஜமாஅத்,தமுமுக ,தேவராம் பாளையம் சுன்னதுள் ஜமாஅத் பள்ளி நிர்வாகம் சேர்ந்து மிக கஷ்ட்ட பட்டு திரட்டி உள்ளோம் அந்த சகோதரன் நிவராணம் அடைய அனைவரும் துவா செய்யுங்கள் ....வாய்ப்பு உள்ளவர்கள் உதவும் மாறு கேட்டு கொள்கிறோம் ....
குலாம் விபத்து ஆன புகை படமும் அவருடைய தலை ஸ்கேன் செய்த புகை படமும் இணைக்க பட்டு உள்ளது ......
தொடர்புக்கு ......
இப்படிக்கு
A.யாசர் அரபாத்
மாவட்ட செயலளார்
இந்தியதவ்ஹித் ஜமாஅத்
திருப்பூர்
8525086016
நிக்காஹ் "EK உமர் முக்தார் "

மர்ஹூம் தியாகி EK முஹம்மது இஸ்மாயில்,மர்ஹூம் ஆலிம் EK முஹம்மது தமீம் ஆகியோரின் பேரனும் ,EK மஹபூப் அலிகான் அவர்களின் செல்வ புதல்வனுமாகிய
EKM உமர்முக்தார் மணாளருக்கும்,
மர்ஹூம் UK உதுமான்கனி மற்றும் PSN சாகுல் ஹமீத் அவர்களின் பேத்தியுமாகிய
சுமையா பாத்திமா மணாளிக்கும்
கடந்த 29-12-13 ஞாயிறு அன்று முத்துப்பேட்டை கொய்யா மகாலில் மிக விமர்சையாக நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் M .தமீமுன் அன்சாரி ,வெல்பேர் பார்டியின் தமிழக தலைவர் SN .சிக்கந்தர் ,பத்திரிக்கையாளர் சுதாங்கன் ,மூன் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் .ஷாநவாஸ் கான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் .மணமக்கள் எல்லாம் வளமும் பெற்று வளமோடு வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக ஆமீன் ......
முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகிருக்காது!
இந்திய, ஜனவரி 03: இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே! முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது.
இந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை. இந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான்.
இதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டினர் என்றாயிற்று. அது தான் இன்றுவரை தொடர்கிறது.
ஒருகால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம். இவ்வாறு இந்தியா என்றொரு நாடு உருவாக காரணமாக இருந்த கோரி முகம்மது, குத்பு தீன் ஐபெக், பக்தியார் கில்ஜி, இல்டு மிஷ், பால்பன், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் தொண்டு உயரிய சரித்திர ஆசிரியர்களின் மனதிலே பதிந்ததேயல்லால் பாமரர்களிடத்தில் அது சென்றடையவில்லை.
நம்முடைய பாடத்திட்டங்கள் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் படையெடுப்பாளர்களாக போதிக்கப்படுகிறார்கள். எனினும் படையெடுப்பென்பது அன்றைய நியதி என்பதையும், அப்படி படையெடுத்து வந்த முஸ்லிம் அரசர்கள் இந்தியாவையே தங்கள் தாய்நாடாக கொண்டார்கள்.
இவர்களில் பலர் இந்தியாவிலேயே பிறந்து, இந்தியாவிலேயே வளர்ந்தவர்கள் என்பதையும், இவர்கள் எப்பகுதியிலிருந்து வந்தார்களோ அப்பகுதிகளை இவர்களின் எதிரிகள் கைப்பற்றி விட்டதால் அவை இவர்களின் எதிரி நாடுகள் ஆகிவிட்டன என்பதையும், இவர்கள் அவற்றோடு போரிட்டார்கள் என்பதையும், இவர்கள் இங்குள்ள செல்வத்தை (ஆங்கிலேயர் போல) தங்கள் மூதாதையர் நாட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை என்பதையும், இங்குள்ள செல்வத்தை இந்நாட்டின் வளத்திற்கே உபயோகித்தார்கள் என்பதையும், இவர்கள் இங்கிருந்த பிற மன்னர்களை வென்றது தான் நாட்டின் ஒருங்கிணைப்பை கொண்டு வந்தது என்பதும் சொல்லப்படுவதில்லை.
ஆம். கோரி முகம்மது கூர்ஜர – பிரதீஹரர்கள் நாட்டை, கன்னோசி நாட்டை வென்றது படையெடுப்பாக சொல்லப்படுகிறதேயல்லால், அதனால் கூர்ஜர பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு என்பது மறைந்து டெல்லியை தலைநகராகக் கொண்ட அரசோடு அவை இணைந்து இந்தியா என்றொரு நாடு உருவாக அவர் வித்திட்டார் என சொல்லப் படுவதில்லை.
அவ்வாறே இல்டுட்மிஷ் ஒரு படையெடுப்பாளனாக சொல்லப் படுகிறாரேயல்லாமல் டெல்லி பேரரசிற்கு அப்பால் இருந்த பகுதிகளை வென்று இந்திய டெல்லி பேரரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர் என்பதும் சொல்லப்படுவதில்லை. அவ்வாறே அலாவுதீன் கில்ஜியும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஆப்கானிஸ்தான் முதல் வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஒவ்வொன்றாக வென்று டெல்லியை தலைநகராகக் கொண்ட இந்திய அரசோடு இணைத்து, தன் ஆட்சியின் கீழ் ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி கொண்ட இந்தியா என்று திகழச் செய்தவர்.
எனினும் முஸ்லிம்கள் படையெடுப்பாளர்கள் என்று பாட நூல்கள் கூறுகின்றனவேயல்லால் அவர்கள் தங்கள் ரத்தம் சிந்தி, சிறிதும் பெரிதுமான நாடுகளை வென்று, மத்திய அரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி தங்கள் உதிரத்தால் அது சிந்தாமல் சிதறாமல் கட்டிக்காத்தவர்கள் என்று சொல்லப்படுவதில்லை. ஆனால் உண்மை நீண்ட நாட்களுக்கு உறங்காது. அது விழித்தெழும் போது வீரிட்டு எழும்.
எனவே ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் வராமல் இருந்திருந்தால் ஒன்றுபட்ட இந்தியா உருவாகாமல் போயிருக்கக் கூடும்.
இந்தியாவை ஒன்று படுத்தியதோடு அதனை மிக நீண்டகாலம், சுமார் 500 ஆண்டுகள், ஒன்றாகவே கட்டிக் காத்தது தான் இந்தியன் என்ற உணர்வு வளர காரணமாயிற்று. இது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய மகத்தான தொண்டு.
இந்தியாவை பாதுகாத்தல்: ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அரும் பெரும்தொண்டென்றால், அவ்விந்தியாவை அவர்கள் மங்கோலியர் படையெடுப்பிலிருந்து பாதுகாத்தது இன்னும் சற்று உயரிய தொண்டாகும்.
ஆம் 13-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டெல்லியில் முஸ்லிம்கள் தங்கள் பேரரசை உருவாக்கி, இந்தியாவை ஒன்றுபடுத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் மங்கோலியாவிலிருந்து வெகுண்டெழுந்த முரட்டு இனத்திரான மங்கோலியர்கள் தங்கள் மாபெரும் தலைவன் செங்கிஸ்கான் தலைமையில் டெல்லி பேரரசை போன்று பன்மடங்கு விரிந்த, பன்மடங்கு வலிமை பெற்றிருந்த பேரரசுகளான சீனப் பேரரசு, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா பகுதிகளை வென்றுக் கொண்டு இந்தியாவிற்கு அருகில் இருந்த மிக வலிமை பெற்ற குவாரசைம் பேரரசை நெருங்கியபோது அதன் வலிமை பொருந்திய மன்னன் அலாவுதீன் (டெல்லியின் அலாவுதீன் கில்ஜி அல்ல) மங்கோலியர் வலிமைக்கு அஞ்சி காஸ்பியன், பகுதிக்கு ஓடிவிட, குவாரசைம் அரசின் வாரிசு ஜலாலுத்தீன் பஞ்சாப் வந்து டெல்லியின் முஸ்லிம் மன்னன் இல்டுமிஷ்ஷிடம் அடைக்கலம் கோரியபோது, இல்டுமிஷ் மதியூகத்துடன் அதை நிராகரித்துவிட, ஜலாலுத்தீனை துரத்தி வந்த செங்கிஸ்கான் டெல்லியை தாக்காமல் திரும்பிச் சென்றார். இல்லையேல் இந்தியா மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டு ஒரு மங்கோலிய காலனியாகியிருக்கும்.
இல்டுமிஷ்ஷின் மதியூகம் இந்தியாவை காத்தது. மங்கோலிய படையெடுப்பு இல்டுமிஷ் காலத்தில் மட்டும் நடைபெறவில்லை. அது டெல்லி சுல்தான்கள் பால்பன், அலாவுதீன் கில்ஜி காலத்திலும் தொடர்ந்தது. மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் எல்லைப்புரத்தில் வலிமையான கோட்டைகளைக் கட்டி அதில் தீரமிக்க படையை நிறுத்தினான். இவரின் வல்லமை மிக்க ஆளுனன் ஷேர்கான் மங்கோலியர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான். ஷேர்கானின் இறப்பிற்கு பின் மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் தன் மைந்தர்கள் முகம்மது கான் மற்றும் புக்ராகானை எல்லைப்புற கவரனர்களாக நியமித்தான். வலிமையும் தீரமும்மிக்க முகம்மதுகான் மங்கோலியருடன் நடைபெற்ற யுத்தத்தில் மாண்டான்.
தன் 80வது வயதில் முதியோனாகிய பால்பனுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்தது. இந்தியாவை காப்பதில் தன் அன்பு மகனை பறிகொடுத்த பால்பன் தன் பணியில் சற்றும் தளர்ச்சியடையாமல், உடன் மேல் நடவடிக்கை எடுத்து மங்கோலியர்களை வென்று இந்தியாவை காத்தான், ஏனோ இந்திய பாடநூல்கள் இத்தியாகத்தை போற்றுவதில்லை.
அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் மங்கோலியர் அடுக்கடுக்காய் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர். இரண்டு முறை அவர்கள் டெல்லியையும் கைப்பற்றினர். ஆனாலும் அலாவுதீன் கில்ஜி மனம் தளரவில்லை. தன் உயரிய அதிகாரிகளான ஜாபர் கான், காஜிமாலிக், மாலிக் காபூர் ஆகியோரைக் கொண்டு மங்கோலியர்களை மிரண்டு ஒடச் செய்தான்.
மங்கோலியர்களை வீழ்த்தி இந்தியாவை காத்ததில் மேற்சொன்ன மூன்று அதிகாரிகளின் பங்கு மகத்தானது. இலட்சக்கணக்கில் திரண்டு வந்த வீரமிக்க மங்கோலியர்களை தாக்கி, சின்னாபின்னப்படுத்தி, சிதறி ஓடச்செய்தான் ஜாபர்கான். அதனால் நீர் நிலைகளில் தாகம் தீர தண்ணீர் பருக குதிரைகள் தயங்கினால். “ஏன் ஜாபர்கானை கண்டு விட்டீர்களா?” என மங்கோலியர் கேட்டதாக ஒரு கூற்று.
அது போன்றதே காஜி மாலிக் மற்றும் மாலிக் காபூரின் ஆற்றலும், டெல்லியை கைப்பற்றிய மங்கோலியர்களை தாக்கி, இடுப்பொடிந்து சிதறி ஓடச் செய்தனர் இவர்கள். மங்கோலியர்களைப் போன்றே அலாவுதின் கில்ஜியும் ஒரு போர் விரும்பியாக (War Lord), தீரனாக, அஞ்சாநெஞ்சினனாக, போர் தந்திரம் மிக்கவனாக இருந்ததே மங்கோலியர் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.
இத்தகைய முஸ்லிம் சுல்தான்களும், தளபதிகளும் இல்லாதிருந்தால் இந்தியா மங்கோலியரால் கைப்பற்றப்பட்டு, அது ஒரு மங்கோலியக் காலனியாகியிருக்கும். அவ்வாறின்றி ஒன்று படுத்திய இந்தியாவை மங்கோலியரிடமிருந்து பாதுகாத்து இந்தியாவாகவே திகழச் செய்தது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அளவிடற்கரிய பெருந் தொண்டாகும். (இன்ஷாஅல்லாஹ் தொடரும்) - பேரா. ஏ. தஸ்தகீர் – (முன்னாள் வரலாற்றுத் துறை தலைவர், அரசு கல்லூரி
முத்துப்பேட்டை அலையாத்தி காடு லகூனுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை: ஏக்கத்தில் ஊர் மக்கள்..
முத்துபேட்டை, ஜனவரி 03: முத்துபேட்டை அலையாத்தி காட்டுக்கு (லகூன்) செல்ல வனத்துறை திடீர் தடையினால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
முத்துப்பேட்டை அலையாத்தி காடு ஆசியாவிலேயே மிகப்பெரிய காடாகும் இப்பகுதியில் இருக்கும் லகூன் தீவுகள் இந்தியாவில் எங்கும் காண முடியாத பகுதி இதனை தமிழக அரசு சமீபத்தில் சுற்றுலா தளமாக அறிவித்து பல்வேறு வசதிகளை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ப்படுத்தி குடுத்தார்கள் அதனால் இந்தியா முழுவதிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கிறார்கள்.
அவர்கள் வசதிக்காக ஆசாத் நகர் ஜம்புவானோடை பேட்டை போன்ற பகுதிகளிலிருந்து கோரையாற்று வழியாக பிளாஸ்டிக் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் நேற்று புத்தாண்டு என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் முத்துப்பேட்டையில் குவிந்தனர் இந்த நிலையில் இப்பகுதி பதட்டமான பகுதி என்பதாலும் சென்ற ஆண்டு இதே பகுதியில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்ததால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி அலையாத்தி காட்டுக்குள் செல்ல வனத்துறையினர் தடை உத்தரவு போட்டனர் இதனால் குவிந்த சுற்றுலா பயணிகள் காட்டுக்குள் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர் , படகுகளும் வனத்துறை உத்தரவால் செல்லவில்லை.
இதுகுறித்து சுற்றுலா பயணி மனோஜ் கூறுகையில் நான் சென்னையிலிருந்து புத்தாண்டுக்காக நானும் எனது நண்பர்களும் இந்த அறிய அலையாத்தி காடை காண வந்தோம் வனத்துறை எந்தவித முன் அறிவிப்பு இல்லாமல் தடை செய்துள்ளனர் இதனால் எங்களுக்கு பெரும் ஏமாற்றம் தந்துள்ளது இதுகுறித்து வனத்துறை அதிகாரி அயூப்கான் கூறுகையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படிதான் நாங்கள் தடை செய்துள்ளோம் சென்ற ஆண்டு நடந்த பல்வேறு சம்பவங்கள் காரணமாக இந்த திடீர் உத்தரவு என்றார்.
ஆயிரக்கணக்கானவரை கொன்றவன் நான் அல்ல: பிரதமர் மன்மோகன் சிங்..
குஜராத், ஜனவரி 03: குஜராத் கலவரத்திற்கு காரணமான மோடிக்கு என்னை விமர்சிக்க தகுதியில்லை எனவும் ஆயிரக்கணக்கானவரை கொன்றவன் நான் அல்ல எனவும் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
தான் பலவீனமான பிரதமர் என்ற மோடியின் கருத்துக்கு பதில் அளித்து இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நன்றி: PM. ஜாஹீர் உசேன்
முத்துப்பேட்டை மதுக்கடையில் தகராறு: தம்பிக்கோட்டையை சேர்ந்த வாலிபருக்கு சோடாபாட்டில் குத்து!!
முத்துப்பேட்டை, ஜனவரி 02: முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக் கோட்டை மரவாக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (31). இவர் தனது நண்பர்கள் சிங்காரவடிவேலு, மணி ஆகியோருடன் முத்துப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு மது குடிக்க வந்தனர். அப்போது முத்துப்பேட்டை கல்கோனி தெருவை சேர்ந்த பைசூல் அகமதும் மது கடைக்கு வந்தார். மது குடித்து கொண்டிருந்த போது அவர்களுக்குள் தகராறு உருவானது.
இதில் ஆத்திரம் அடைந்த பைசூர் அகமது சோடா பாட்டிலை உடைத்து ரமேஷ், சிங்கார வடிவேலு, மணி ஆகியோரை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பைசூல் அகமதை தேடி வருகிறார்கள்.
தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி மீது பொய் வழக்கு போட்ட இராமநாதபுர துணை ஆய்வாளர் இந்திரா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் -தமுமுக தலைமையகம் அறிவிப்பு !!
7:20 PM
No comments
தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டதோடு மட்டுமின்றி, கொச்சையாக இழிவுபடுத்திப் பேசிய இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல்துறை துணை ஆய்வாளர் இந்திராவைக் கண்டித்தும், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
இவண்
தமுமுக தலைமையகம்

இவண்
தமுமுக தலைமையகம்
பாப்புலர் பிரண்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் சன் டிவியிலிருந்து நீக்கப்பட்டார் வீர பாண்டியன் -சன் டிவியின் மதவாத போக்கை கண்டிக்குமா ஊடகங்கள் ?
சென்னை, ஜனவரி 01: உங்கள் முன்னால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட மிக பிரமாண்டமாக ஒரு நரேந்திர மோடி என்கிற ஒரு பலூன் நின்றுகொண்டிருக்கிறது. அதை,ஒற்றுமை என்ற சின்ன ஊசி எடுத்து குத்தி உடைக்க வேண்டும்.இந்த பலூனை நீங்கள் உடைக்க வில்லையென்றால்... நண்பர்களே ஒருவேளை,மோடி வந்து இந்தியாவில் உட்கார்ந்து விட்டால்,ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்திற்கு அந்த கும்பலை நீங்கள் அரியாசனத்தை விட்டு இறக்கவே முடியாது!இதை நான் உங்களை அச்சப்படுத்த சொல்லவில்லை..நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்'' -இந்த ரீதியில் பேசிய தோழர் சண் டி.வி வீர பாண்டியன்,
நான் எந்த இயக்கத்தையும் சாராதவன்.ஊடகம் தான் எனது இயக்கம்.எனது நிகழ்ச்சியில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் வருகிறார்கள்;எனக்கு தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு.அது வேறு விஷயம்;ஆனாலும்,நீங்கள் சார்ந்திருக்கிற (முஸ்லிம்)சமூகம் என்ன கருதுகிறது;என்ன செய்ய வேண்டும்?உங்கள் முன் இருக்கும் கடமை என்ன என்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்தியாவில்,குறிப்பாக தமிழகத்தில்,முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியில் இருக்கின்ற பலவீனமாக நான் கருதுவது ஊடகத் துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாதது தான்.
முஸ்லிம்களிடம் வலிமையான ஊடகங்கள் இல்லை;முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளை குறித்த செய்திகளை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்த முஸ்லிம்கள் ஊடகத்துறையில் பங்கெடுப்பது அவசியம்;என்றெல்லாம் எஸ்.டி.பி,ஐ கட்சி சென்னையில் நடத்திய கருத்தரங்கு ஒன்றில் பேசிய பேச்சுக்களுக்காக சங்க பரிவாரம் அவர் மீது நாலாபுறங்களிலுமிருந்து தாக்குதல்களை துவங்கி இருக்கிறது.
கருத்தை கருத்து தளத்தில் எதிர்கொள்ளாமல்,அவரை நோக்கி ஆபாச அர்ச்சனைகளையும் துவங்கி இருக்கின்றன சங் கும்பல்.பொதுவாக முஸ்லிம் அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும்,அனைத்து தரப்பினரிடமும் இயல்பாக பழகக்கூடியவர் தோழர்.வீர பாண்டியன்.தமிழ்அமைப்புகள்,இடதுசாரிகள்,சமூகவியலாளர்கள்,பி.ஜே.பி உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்பினர்,பத்திரிகையாளர்கள் என அனைவரோடும் எந்த வேறுபாடும் பாராமல் நட்பு பாராட்டுபவர்.தான் இன்ன சமூகத்தின் ஆதரவாளன் என்கிற வண்ணப்பூச்சுக்கு உட்படுத்திக்கொள்வதை தவிர்த்து வருபவர்.இவை அவர் சண் டி.வி.யில் அவர் நடத்தும் நிகழ்சிகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது;தமது நடுநிலை தன்மை சந்தேகத்திற்குள்லாகிவிடக்கூடாது என்பதில் அவர் எடுக்கும் கவனம் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.இதை புரிந்தவர்கள் தான் தமிழக ஹிந்துத்துவா அமைப்பினரும்.ஆயினும்,அவர் முஸ்லிம்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்தியதையும்,மோடியை பற்றி விமர்சனம் செய்ததையும் தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் மீது பாய்ந்து பிறாண்டுகிறார்கள்.
சண் டி.வி நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள சங் கும்பல் அந்த டி.வி நிர்வாகத்தை சந்தித்து,வீர வீர பாண்டியனை நீக்கவில்லையென்றால்,சன் டி.வி நிகழ்ச்சிகளில் ஹிந்துத்துவாக்கள் யாரும் பங்கெடுக்க மாட்டார்கள் என அந்த நிர்வாகத்தை நிர்பந்தப்படுத்தியுள்ள செய்தி,ஹிந்துத்துவாவினரின் சகிப்புத்தன்மையற்ற தன்மைக்கு சான்று மட்டுமல்ல அவர்களின் வெறித்தனத்திற்கும்,குரூர சிந்தனைக்கும் சான்றுகள் தான்.
சண் டி.வி நிர்வாகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று வந்தவர் யார் தெரியுமா? தோழர் வீர பாண்டியன் நடத்தும் நிகழ்ச்சிக்கு, தோழர்.வீர பாண்டியனால்-முஸ்லிம்களைவிட,இடது சாரிகளை விட,காங்கிரஸ் காரர்களை விட சமூகவியலாலர்களை விட,மனித உரிமை ஆர்வலர்களை விட அதிகமாக அழைக்கப்படும் ப.ஜ.க.வின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.டி.ராகவன் தான்.(இது குறித்து நேரடியாகவே தோழர் வீர பாண்டியனிடம் நான் விமர்சனம் வைத்திருக்கிறேன்.)நிகழ்ச்சி முடிந்த பின்பும், இயல்பாக ராகவனிடம் பேசிக்கொண்டிருப்பார் வீர பாண்டியன்.அந்த ராகவன் தான் இன்று இவருக்கு எதிரான கும்பலுக்கு தலைமை தாங்கி வந்திருக்கிறார்.
இந்த விஷயத்தில் முஸ்லிம் அமைப்புகள் உள்பட பல தரப்புகள் மீது வருத்தம் ஏற்படுகிறது.ஒரு ஊடகவியலாளர் பகிரங்கமாக மிரட்டப்பட்டிருக்கிறார்,அவரை பனி நீக்கம் செய்யவேண்டும் என நிர்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது;ஆபாச தொலைபேசி தாக்குதல்கள் நடத்தப் பட்டிருக்கிறது; கருத்து சுதந்திரம்,ஜனநாயகத்தன்மை மீதெல்லாம் தாக்குதல் தொடுக்கப் பட்டிருக்கிறது ஆயினும் ஊடகங்கள் 'நமக்கென்ன' என அசாத்திய அமைதி காக்கின்றன.
இடது சாரிகளோ,தமிழ் அமைப்புகளோ,இஸ்லாமிய அமைப்புகளோ உரிய வகையில் இதை கண்டிக்க முன் வரவில்லை.
கவுண்டர் ஆச்ஷனாக,ஹிந்துத்துவாவினரின் நெருக்கடிக்கு பணிந்து வீர பாண்டியனின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யும் நிலை வந்தால்,ஹிந்துத்துவாவினர் கலந்து கொள்ளும் நிகழ்சிகள் மட்டுமல்ல;சன் டி.வியின் வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் கூட நாங்கள் பங்கு பெற மாட்டோம் என்று அறிவிக்க வேண்டியவர்கள் மௌனம் காக்கிறார்கள்;அவ்வளவு கூட வேண்டாம்,குறைந்த பட்சம் ஒரு கன்னடன அறிக்கை கூட வெளியிடவில்லையே.முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டுமே கருத்து சுதந்திரம் பேசும் எழுத்தாளர்கள்/கவிஞர்கள் கூட்டமைப்பு எல்லாம் எங்கே போயின ? குறிப்பிடும் படியாக,இந்த விஷயத்தில் இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க வில்லையே ஏன்?இதை நாம் கண்டித்துதானே ஆகவேண்டும்?.
முஸ்லிம்கள் விஷயத்தில் கருத்து சுதந்திரம்,படைப்பு சுதந்திரம்,புடலங்காய் என்றெல்லாம் கொந்தளிக்கும் ஊடகங்கள், சக ஊடகவியலாளரின் கருத்து சுதந்திரம் மீதும்,ஜனநாயக உரிமை மீதும் பட்டவர்த்தனமாக தாக்குதல் நடந்ததை மெளனமாக அங்கீகரிப்பது ஊடகங்களின் கமர்ஷியல் ரீதியான காழ்ப்புணர்ச்சி என்பதா?நாங்களும் காவிக்கு மாறிட்டோம் என்று சொல்வதாக எடுத்துக்கொள்வதா?
எதுவாக இருந்தாலும் 'நெருக்கடி கொடுக்க எங்களுக்கும் தெரியும்' என்பதை இடது சாரிகள்,தமிழ் அமைப்புகள், ஏனைய பிற அமைப்புகளைக் காட்டிலும் முஸ்லிம் அமைப்புகள் காட்டியிருக்க வேண்டிய தருணம் அது !
இஸ்லாத்தை ஏற்க துடிக்கும் யுவன்சங்கர் ராஜா -எத்தி வைக்குமா இஸ்லாமிய அமைப்புக்கள் ?
சென்னை, ஜனவரி 01: இசையே கோவில்… இன்ஸ்ட்ரூமென்டுகளே தெய்வம்…! எல்லா இசையமைப் பாளர்களுக்கும் இதுதான் கடவுளின் ஃபார்முலா என்றாலும், அதையும் தாண்டி அவர்களை இயக்குவது ஏதோ ஒன்று. அதைதான் அவர்கள் வெவ்வேறு வடிவங்களில் கும்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அல்லது வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது தொழுது கொண்டிருக்கிறார்கள்.



ஆனால் அவர்களை சரணாகதியடைய வைக்கிற அந்த சக்தியை விட அதற்கான நெருக்கடிதான் மிக மிக முக்கியமானது. இந்த நெருக்கடிக்கு ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் ‘மன அமைதி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். யுவனும் அப்படியே.
மன அமைதியை தேடிய யுவனுக்கு அந்த இஸ்லாமே சிறந்த அமைதியை கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத சில திரையுலக நண்பர்கள். பரபரப்பான இந்த விஷயத்தை முதன்முதலில் நாட்டுக்கு தெரிவிப்பதில் பெருமை கொள்கிறது நமது நியூதமிழ்சினிமா.காம். அதற்கு முன் யுவன் பற்றி….
மிக இளம் வயதிலேயே இசைஞானியின் பெயரை காப்பாற்றப் போகும் வாரிசு இவர்தான் என்று அடையாளம் காணப்பட்டவர் யுவன். வெஸ்டர்ன் இசை என்றாலும் சரி, அப்பாவை போல கிராமிய இசை என்றாலும் சரி. யுவனுக்கு இதெல்லாம் எப்படி சாத்தியம் என்கிற அளவுக்கு மனதை மயக்கிவிடுகிற வல்லமை வந்தது. இசையில் கொடிகட்டி பறந்தார் யுவன். நிற்க நேரமில்லாமல் உறங்க நேரமில்லாமல் எந்நேரமும் இசை ஒலித்துக் கொண்டிருந்தது அவரது ரெக்கார்டிங் ஸ்டுடியோவில்.
இந்த நேரத்தில்தான் எல்லா வாலிபர்களுக்கும் வருவதை போல அவருக்கும் அது வந்தது… காதல்! மகனின் சந்தோஷமே நமது சந்தோஷம் என்று கருதிய அப்பா இசைஞானி எவ்வித முணுமுணுப்பும் காட்டாமல் சம்மதம் தெரிவிக்க, சந்தோஷமாக இல்லறத்தில் அடியெடுத்து வைத்தார் அவர்.
இந்த பந்தம் நெடுநாட்கள் நிலைக்காமல் போனது பூர்வ ஜென்ம பூஜ்யமா, அல்லது நிகழ்கால ஜோசியமா தெரியாது. இருவரும் பிரிந்துவிட்டார்கள். அதற்கப்புறம் தனிமை யுவன்சங்கர்ராஜாவை கவலைப் படுகுழியில் தள்ளவில்லை. மிக மிக உற்சாகமாகதான் இருந்தார். மீண்டும் ஒரு காதல் முளைக்கக் கூடாது என்கிற சட்டம் ஏதாவது இருக்கிறதா? முளைத்தது.
இந்த முறை ஊரை கூட்டி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் யுவன். இந்த நேரத்தில் மிக கசப்பான அதே நேரத்தில் துடிப்பான உண்மையை சொல்ல வேண்டும். ஜோதிடம் பொய் என்பவர்கள் கூட சிலரது குடும்ப வாழ்க்கையும் அவர்கள் படுகிற பாட்டையும் பார்த்தால், அட ஈஸ்வரா என்று கவலை கொள்வார்கள்.
யுவனுக்கும் திருமண கட்டத்தில் எந்த பூதம் வந்து அமர்ந்திருக்கிறதோ, தெரியவில்லை. இந்த திருமணத்திலும் சிக்கலாம். அவரது இரண்டாவது மனைவியையும் அவர் பிரிந்துவிட்டதாக கூறுகிறார்கள் அவருக்கு அருகில் இல்லாவிட்டாலும் அவரை நோட்டமிடுகிற சினிமாக்காரர்கள்.
இதில்தான் அதிகம் உடைந்தாராம் யுவன். இருந்தாலும் மனதை தேற்றிக் கொண்டு இசையோடு பயணித்துக் கொண்டிருந்தார். அன்பான அம்மா இருந்தார்கள் அவருக்கு. எந்த நேரத்தில் அவர் வந்தாலும் பாசத்தோடு அரவணைத்துக் கொள்கிற அளவுக்கு ராஜாவின் இல்லம் இருந்தது.
அதற்கும் கொடுத்து வைக்கவில்லை யுவனுக்கு. அம்மாவின் மரணம் அவர் எதிர்பாரதது. முற்றிலும் உடைந்து போன யுவன் பெரும்பாலும் வீட்டுக்கு வருதை தவிர்த்து ரெக்கார்டிங் தியேட்டரிலேயே கிடந்தார். உடன் பிறந்த சொந்தங்களால் கூட அவருக்கு அமைதியில்லை என்று கூறப்படுகிறது.
நடுவில் சில நாட்கள் அவர் உறங்கவே இல்லையாம். இரவில் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்குதான் அந்த வேதனை தெரியும். அதை நான்கைந்து நாட்கள் தொடர்ச்சியாக அனுபவித்தாராம் அவர். மனமே அமைதி கொள்… என்று விரும்பி விரும்பி கேட்டாலும், சட்டென கேட்டுவிடுமா அது?
இவரது வேதனையை அருகிலிருந்து கவனித்த நண்பர் ஒருவர், இஸ்லாமியர்களின் வேத புத்தகமான குர் ஆன் புத்தகத்தை கொடுத்து ‘இதை படி. மனம் அமைதியடையும்’ என்றாராம். உறக்கம் வராத ஒரு ஐந்தாவது நாளில் அந்த புத்தகத்தை விரித்தார் யுவன். மனம் விரட்டிக் கொண்டேயிருந்தது அவரை. மெல்ல அதை கயிற்றுக்குள் கட்டி இறுக்கினார் யுவன்.
ஏதோ ஒரு கட்டத்தில் அப்படியே மனம் உடைந்து அந்த புத்தகத்தின் மீது முகத்தை வைத்து அழ ஆரம்பித்தாராம்…. அதற்கப்புறம் அவர் எப்போது உறங்கினார் என்பது தெரியவில்லை. மீண்டும் அவர் எழுந்தபோது மனம் முற்றிலும் சாந்தமாகியிருந்ததாம். அவர் தேடிய நிம்மதி அன்றுதான் கிடைத்தது அவருக்கு.
இதற்கப்புறம் அவர் தீவிரமாக அந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தாராம். இப்போது தினமும் ஐந்து வேளை தொழுகிற அளவுக்கு அவர் இஸ்லாம் மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். விரைவில் அதிகாரபூர்வமாக தன்னை அந்த மதத்தில் இணைத்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறாராம் யுவன்.
அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். எதுவாக இருப்பினும் நல்லதே. யுவன் எந்த மதத்திலிருந்தாலும், அவரது இசை எல்லா மதத்தினர் மத்தியிலும் இருக்கும். அது போதும்!
மௌத்து அறிவிப்பு "ஹபீப் கனி "
முத்துப்பேட்டை, ஜனவரி 01: கிட்டங்கித் தெரு மர்ஹூம் முஹம்மது ஷேக் அலி அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கொடை கமால் அவர்களின் மாமியாரும், முஹம்மது இக்பால், ஜப்பார் இவர்களின் தாயாருமான ஹபீப்கனி அவர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா இன்று ( 1.1.14 புதன்கிழமை) காலை 10 மணிக்கு முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
நமது நிருபர்:
K.M. காதர் கனி (பாடகர்)
நமது நிருபர்:
K.M. காதர் கனி (பாடகர்)
முத்துபேட்டையில் பொது மக்களை கவர்ந்த குரங்கு !மீன் வியாபாரிக்கு உதவி செய்யும் மனிதநேயம் !!!
முத்துப்பேட்டை, ஜனவரி 01: முத்துப்பேட்டை பேட்டை கிராமத்தில் உள்ள மீன் அங்காடியில் ஒரு குரங்கு 7 மணிக்கு மீன் அங்காடிக்கு வந்து அங்கு மீன் வியாபாரம் செய்யும் நாடாவி என்பவருக்கு உதவி செய்து வருகிறது.சில நேரங்களில் மீன் வியாபாரமும் செய்கிறது. மீனை பைகளில் எடுத்து போடுவது, பணத்தை வாங்கி போடுவது, மீனை சுத்தம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருவதாக அதனை பணிக்கு வைத்து கொண்டு இருக்கும் நாடவி
பெருமிதத்தோடு சொல்கிறார்.
பெருமிதத்தோடு சொல்கிறார்.
அது யாருக்கும் தொந்தரவு கொடுப்பது இல்லை. வியாபாரம் முடிந்ததும் நான் வீட்டுக்கு புறப்பட்டு விடுவேன். அது காட்டுக்கு புறப்பட்டு விடும். மறு நாள் தான் எங்களின் சந்திப்பு நிகழும் என்று கூறுகிறார். எங்களின் உறவு என்பது தொழில் சம்பந்த பட்டது மட்டுமே என்பதுடன் மனிதனை விட எனக்கு குரங்கு மேலானது என்று அதன் மீது எனக்கு அதீத பிரியம் என சொல்லி சிரிக்கிறார் நாடாவி.
துபாயில் நிறைவேறிய புத்தாண்டு கின்னஸ் சாதனை வீடியோ, மற்றும் புகைப்படங்கள் இணைப்பு.
துபாய், ஜனவரி 01: அமீரகம் துபாயில் ஆங்கில வருடம் 2014 ன் முதல் நாளான நேற்று இரவு உலக கின்னஸ் சாதனை படைக்கவேண்டி உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா டவர் மற்றும் பால்ம் ஜுமேரா ஆகிய இடங்களில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு குவைத் நாட்டின் 50வது தேசிய நாள் கொண்டாடப்பட்ட போது 60 நிமிடங்கள் வானவேடிக்கை நடத்தப்பட்டது. அதற்கு சுமார் 77,000 வெடிகள் பயன்படுத்தப்பட்டது.
இதனை மிஞ்சும் அளவுக்கு, ஆறு நிமிடங்களில் 400 இடங்களிலில் இருந்து 450,000 வெடிகளை வெடித்தனர். இதற்கு முன் பார்த்திராத அளவுக்கு வானவேடிக்கையை நிகழ்த்தப்பட்டது. மணல் பாறைகளை கொண்டு உறுவாக்கப்பட்ட பாம் ஜுமேரா தீவிலும் இந்த வானவேடிக்கை நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான அமீரக வாழ் பொதுமக்கள் மற்றும் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா வாசிகளும் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
நமது நிருபர்:
AKL. அப்துல் ரஹ்மான்.BBA,
Subscribe to:
Posts (Atom)
.gif)


























.jpg)






