முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை பேரூராட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரின் பட்டியல்!



முத்துப்பேட்டை, அக்டோபர் 04 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சியின் வார்டு எண்: 01 முதல் 18 வரைக்கான தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் கீழ் வருமாறு.

போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்:

1 ) அபூபக்கர் சித்திக். 8 , ஆசாத் நகர் முத்துப்பேட்டை. இவருக்கு (கை கடிகாரம்) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

2 ) அப்துல் சலீம், கோவிலன் தோப்பு, செம்படவன்காடு முத்துப்பேட்டை.இவருக்கு (பேட்டரி விளக்கு) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

3 ) அருணாச்சலம், செம்படவன்காடு முத்துப்பேட்டை. இவருக்கு (இரட்டை இல்லை) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

4 ) சகாபுதீன், குண்டாங்குலத் தெரு முத்துப்பேட்டை. இவருக்கு (கைபம்பு) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

5 ) சிவகுமார், எஸ்.வி. தெரு பேட்டை முத்துப்பேட்டை. இவருக்கு (தாமரை) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

6 ) தமீம், ரஹ்மத் நகர் முத்துப்பேட்டை. இவருக்கு (உதய சூரியன்) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

௭) பத்மநாதன், கொசாகுலத் தெரு முத்துப்பேட்டை. இவருக்கு (முரசு) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

8 ) முகைதீன் அடுமை, திருத்துறைப் பூண்டி ரோடு முத்துப்பேட்டை. இவருக்கு (சாய்வு மேசை) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

9 ) முஹம்மத் மாலிக், கோதப பள்ளி சந்து முத்துப்பேட்டை. இவருக்கு (பேருந்து) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

10 ) லெப்பை தம்பி.SMM காளியம்மன் கோவில் தெரு முத்துப்பேட்டை. இவருக்கு (கணிப்பொறி) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

11 ) ஜெயச்சந்திரன், மருதன்காவலித் தொப்ப்பு முத்துப்பேட்டை. இவருக்கு (சட்டை) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

12 ) ஹாரூன், ஆசாத் நகர் முத்துப்பேட்டை. இவருக்கு (கோப்பையும் கப்பும்) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

13 ) ஹாஜ மைதீன், பகுருதீன் கலனை, காளியம்மன் கோவில் தெரு முத்துப்பேட்டை. இவருக்கு (டிஸ் ஆண்டன) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

குறிப்பு:
இந்த பேரூராட்சி தலைவர் பதவிக்கு மொத்தம் 21 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர், இதில் 8 வேட்பாளர் தனது மனுவை திரும்ப பெற்றனர். மேலும் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 9 முஸ்லிம் வேட்பாளர்களும், 4 இந்து வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்காக அறிவிக்கப் பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் 17.10.2011 ஆம் நாளன்று கலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவுகள் நடை பெரும் என தேர்தல் ஆணையம் தெருவித்துள்ளது.
Source From Muthupettai Express.
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், 

முத்துப்பேட்டையில் SDPI யின் நகர தேர்தல் அலுவலகம் நேற்று திறப்பு!





முத்துப்பேட்டை, அக்டோபர் 04 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் SDPI யின் நகர தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப் பட்டது. இதற்கு சிறப்பு விருந்தினராக துபாய் மண்டல பொறுப்பளார் ஜனாப் யூசுப் சுகைல் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய மனித உரிமை மக்கள் கனநிப்பின் மாநிலத் தலைவர். பசீர் அஹ்மத், பல தியாகங்களை செய்திருக்க கூடிய அபூபக்கர் சித்திக் அவர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்புத் தந்து ஒருத்தியாக செயல் பட்டு வெற்றிக்கனியை பெற வைத்திட அனைவரும் பாடுபட வென்றும் என்று உரை நிகழ்த்தினர். அதற்கு பிறகு பேசிய ம.செ. பாவா பஹுருதீன் அவர்கள் இது சாதாரண விஷயம் அல்ல தேர்தல் என்றால் என்பது திருவிழா என்பார்கள் அனால் நம்மை பொருத்தவரையில் மிக கடினமாக உழைத்து முயற்ச்சி செய்யகூடிய ஒரு போராட்டக் களம் அதை நம்மளுடைய தியாகத்தின் அர்பணிப்பு பொறுத்துதான் வெற்றி என்பது தீர்மானிப்பது, நமக்கு வெற்றிக்கான வாய்ப்பு மிக எளிதாக இருக்கின்றது. ஆனால் அதற்கு கடின உழைப்பு அவசியம் என்று கூறினார். பின்னர் இன்னகழ்ச்சி முடிவின்போது சித்திக் மச்சன் என்கிற அபூபக்கர் சித்திக் அவர்கள் நன்றிவுரை கூறி நிறைவு செய்தார். இதில் தர்ஹா மேனேஜிங் டிரஸ்ட் தலைவர். ஜனாப் SS .பக்கர் அலை சாகிப் அவர்கள். SDPI மாநில தலைவர். தப்ரே ஆலம் பாதுஷா. SDPI ம.செ. பாவா பஹ்ருதீன், நகர தலைவர் ரஹ்மத்துல்லாஹ், து. த. பாசித், ந.இ.செ.நிஜாம், நகர பொறுப்பாளர், நிசார், தமீம் நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Source from muthupettai Express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, EK . முனவ்வர் கான்

முத்துப்பேட்டை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு:


முத்துப்பேட்டை,அக்டோபர் 03 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பேரூராட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் முத்துப்பேட்டையில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர் வேட்பாளரின் பட்டியல் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளரின் இறுதி பட்டியல் நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் நாளை வெளியிடப்படும் என்பதை இதன் மூலம் தெருவித்துக் கொள்கிறேன். எனவே முத்துப்பேட்டை மக்கள் மற்றும் வெளி ஊரு நண்பர்கள் இதற்கு முழு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்.

முத்துப்பேட்டை பேரூராட்சியின் தேர்தல் வாக்குறுதி! மாவட்ட SDPI கட்சி வெளியீடு:


முத்துப்பேட்டை, அக்டோபர் 03 : சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் தேர்தல் பணிக்குழுக் கூட்டம் 01.10.2011 ஆம் தேதியன்று இக்கட்சியின் மாவட்ட தலைவர். தப்ரே ஆழம் பாதுஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.அதில் மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பல முக்கிய பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப் பட்டு, பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சித்திக் மச்சன் என்கிற அ.அபூபகர் சித்திக் அவர்கள் சார்பாக தேர்தல் வாக்குறுதியாக பின் வருபவன் வற்றை செய்து கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் வாக்குறுதிகள்:
1 ) முத்துப்பேட்டை பேரூராட்சியில் சேரக் கூடிய மக்களின் வரிப்பனமான பொது நிதிலிருந்து இறைவன் மீது ஆணையாக ஒரு ருபாய் கூட ஊழல் செய் மாட்டோம்.
2 ) முத்துப்பேட்டை மக்களின் கனவான, முத்துப்பேட்டையை தாலுக்கவாக மாற்றும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசை அணுகி எல்லாவிதமான முயர்த்சிகளும் மேற்கொள்ளப் படும்.
3 ) முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் பணிகள் முடிக்கப் படாமல் உள்ள சிமென்ட் சாலைகளை உடனடியாக விரைந்து பணிகள் நடக்க உரிய நடவடிக்கை எடுப்போம்.
4 ) முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் உடைந்து பழுதான கழிவு நீர் வடிக்கால்களை முன்னுரிமை அடிப்படையில் சீர் செய்து பொது சுகதரத்தை பாதுகாப்போம்.
5 ) வடிக்கால் வசதியில்லாத அனைத்து வார்டுகளிலும் உடனடியாக வடிகால் வசதி அமைய நடவடிக்கை எடுப்பது.
6 ) ஆங்காங்கே சேரும் குப்பை, கூளங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த அதிக கவனம் செலுத்துவது.
7 ) பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க, ஊர் எல்லைக்குள் பன்றிகள் இல்லை என்ற நிலைமையை ஏற்படுத்துவது.
8 ) பேட்டை, செம்படவான்கடு, மருதங்காவளி, தேற்குகாடு மக்களின் குடிநீர் பிரச்சனையை கவனத்தில் கொண்டு புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைப்பது.
9 ) செயல் இலக்கச் செய்யப்பட பரக்கலக்கோட்டை நீரேற்று நிலையத்தை, அவசிய நேரங்களில் பயன்படுத்தும் வகையில் புதுப்பித்து செயல்பட்டு நிலைமைக்கு கொண்டு வந்து தினமும் இருமுறை தண்ணீர் கிடைக்க வழிவகை செய்வது.
10 ) சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம் நடைபெறாமல், சுகாதாரமான குடிநீர் விநியோகம் கிடைக்க ஆவண செய்வது.
11 ) இந்து. முஸ்லிம், கிருஸ்தவ, தலித் மக்களிடயே ஒற்றுமையை ஏற்படுத்தி, முத்துப்பேட்டையை அமைதி பூங்காவாக மாற்றுவோம்.
12 ) பிறப்பு, இறப்பு பதிவேடுகள் பராமரிப்பு முறையை (சப்ரிஜ்ஸ்டர் ஆபிசில் ஒப்படைக்கப் பட்ட பதிவேடுகளை திரும்பப் பெற்று) மக்களை அலைகளிக்காமல் மக்களுக்கான சேவையாக செய்து வருவோம்.
13 ) எந்த காரணம் கொண்டும் (வரிவித்திபு முறையிலும் மக்களுக்கான சேவைகள் கிடைப்பதிலும்) நிர்வாகத்தால் மக்களை அவத்திக்குள்ளக்கும் எவ்வித சிலையும், செய்ய அனுமதிக்க மாட்டோம்.
14 ) பேரூராட்சிக்கு வரவேண்டிய பல லட்ச ரூபாய் வாரக் கடனை வசூல் செய்து, மக்கள் மக்கள் நலத்திட்டங்களை செய்வோம்.
15 ) சொத்து வரி விதிப்பதில் ABC மண்டல பிரிப்பு முறையை அரசாணைபடி மாற்றியமைப்போம், இனி வருங்காலங்களில் எக்காரணம் கொண்டும் சொத்து வரி விதிப்பு உயர்வு செய்ய அனுமதிக்க மாட்டோம்.
16 ) அரசு ஆண்கள், மேன்கள், மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர், மாணவியர், ஆசிரியர் நலன் கருதி குடிநீர், கழிவறை வசதிகளை உடனடியாக செய்து தர முழு முயற்ச்சி எடுப்போம்.
17 ) அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ள மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும், அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி செயல் பட முழு கவனம் செலுத்துவோம்.
18 ) அரசு அறிவிக்கும் அனைத்து வித நலத்திட்டங்களும் (இலவசங்கள் உள்பட) மக்களுக்கு டிரைவில் விடுபடாமல் கிடைக்க முழு கவனம் செலுத்துவோம்.
19 ) பேரூராட்சிக்கு சொந்தமான அனைத்து குளங்களையும் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றி தருவோம்.

இவன்
சோசியல் டெமாக்ரடிக் கட்சி (SDPI)
தேர்தல் பணிக்குழு, முத்துப்பேட்டை
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், அச்ன்ஸ்.அப்துல் பாரி, ஏக.முனவ்வர் கான், அபு மர்வா (துபாய்)

முத்துப்பேட்டை ஒன்றிய குழு உறுபினருக்கு IR . ரவி போட்டி: தே.மு.தி.க. தலைமை தகவல்!!



முத்துப்பேட்டை, அக்டோபர் 03 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு தே.மு.தி.க சார்பில் போட்டியிடப் போவதாக தே.மு.தி.க. தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர். மேலானம்ம குறிச்சி, பெத்தலவின் கோட்டான், கீழ நம்மங்குரிட்சி, மங்களூர், தம்பிக் கோட்டைக் கீழக்காடு, ஆகிய இடங்களில் ஆற்று ஓரமாக இருக்கக் கூடிய குடிசை வாழ் மக்களுக்கு வெல்ல நேரத்தில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதவாறு அவற்றை சுற்றி சுவறுகள் கட்டப்படும் என்றும், மேலும் இதற்கு முறையாக நடவடிக்கை எடுக்கப் பட்டு அந்த கரைகள் சீரமைக்கப்படும் என்றும் அவர் தெருவித்தார். விவசாயம் செய்யக் கூடிய நபர்களுக்கு அவர்களின் தேவைகளை புரிந்து அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அவற்றை பெறுவதற்கு ஏற்பாடு செய்வேன் என்றும், கிராம மக்களின் ஏழை எளிய மாணவ, மாணவியருக்கு கணினி மையம் அமைத்து தரப்படும் என்றும் அவர் தெய்ருவித்தர். பெத்தளக் கோட்டம், நம்மங்குறிச்சி ஆகிய இரு இடங்களுக்கு சாலைகள் சீரமைக்கப் பட்டு பேர்ந்து வசதிகளை அதிகப் படுத்த ஏற்பாடு செய்வேன் என்றும், குடிசை வாழ் மக்களுக்கு மலைகலத்தில் வீடுகளில் தண்ணீர் புகதவரு சுற்றுச் சுவர் அமைத்து தரப் படும் என்றும் அவர் தெய்ருவித்தர். பேலும் பித்தலவான் கோட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சுத்தமான குடிநீர் மற்றும் சுகதரமான களிவறியும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அப்போது அவர் தெய்ருவித்தர்.

தொகுப்பு
ரிபோர்ட்டர் இல்யாஸ், EK . முனவ்வர் கான், N .ராம்குமார் (சிங்கப்பூர்)

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு Ps . பத்மநாபன் போட்டி:தே.மு.தி.க.தகவல்!!!



முத்துப்பேட்டை, அக்டோபர் 03 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு தே.மு.தி.க. வின் நகரச் செயலாளர் திரு. PS. பத்மநாபன் அவர்கள் போட்டியிடப் போவதாக தே.மு.தி.க தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர். முத்துப்பேட்டை நகர மக்களுக்கு மிகவும் முக்கிய அடிப்படை வசதியான சாலை வசதி, மற்றும் நிரந்தரமான குடிநீர் வசதி இவை இரண்டையும் பெறுவதற்கு மிகவும் பாடுபடுவேன் என்றும், மேலும் முத்துப்பேட்டை நகரை சுத்தமாகவும், பசுமை நகரமாக மற்ற கடுமையாக பாடுபடுவேன் என்றும், மத நல்லிணக்க ஒற்றுமையை முத்துப்பேட்டையில் மலர நான் கடுமையாக பாடுபடுவேன் என்றும் அவர் தெருவித்தார். மருதங்காவளி, தேற்குகாடு, மேல்நிலைத் தோப்பு ஆகிய இடங்களுக்கு குடிநீர் முழுமையாக கிடைக்க பாடுபடுவேன் என்றும், தேற்குகாடு ஆரம்ப பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன் என்றும், மேலும் கொய்யா தோப்புக்கு புதிய சாலை வசதி ஏற்பாடு செய்து அதனை தார் சாலையாக அமைத்து கொடுப்பேன் என்றும், முத்துப்பேட்டையை தாலுக்காவாக மற்ற அனைத்து வேலைகளும் நடைமுறைபடுத்த கடுமையாக முயற்சிப்பேன் என்றும், முத்துப்பேட்டையில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் அனைத்தையும் அங்கு சென்று வர ஏற்பாடு செய்வேன் என்றும் அவர் தெருவித்தார்.மேலும் அ.தி.மு.க. உடனான கூட்டணி பற்றி முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர். அ.தி.மு.க. உடனான கூட்டணி குறித்து தற்போது எங்கள் கேப்டன் எந்த ஒரு பதிலும் தர வில்லை என்றும் கேப்டனின் முடிவுதான் எண்களின் முடிவு என்றும் அப்போது அவர் தெருவித்தார். முத்துப்பேட்டை மக்கள் அனைவரும் என்னை ஏற்று வருகிற தேர்தலில் அதிக படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செயுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
Source from Muthupettai Express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK . முனவ்வர் கான்

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு மாஷா மாலிக் போட்டி: ம.ம.க தலைமை தகவல்!!


முத்துப்பேட்டை, அக்டோபர் 02 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் மாஷா மாலிக் என்கிற S . முஹம்மத் மாலிக் போட்டி இடப் போவதாக மனித நேய மக்கள் கட்சி தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், கடந்த 14 ஆண்டுகளாக இன்று வரை சமுதாயப் பணியிலும், முத்துப்பேட்டையின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து TMMK சார்பாக பணியாற்றி வருகிறேன் என்றும், தற்போது நடைபெற இருக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு தான் போட்டி இடுகிறேன் என்றும் அவர் தெருவித்தார். மேலும் தொடர்ந்து மக்கள் சேவையில் TMMK ரத்ததானம், மருத்துவ சேவை, ஆம்புலன்ஸ் சேவை, அனைத்து தரப்பு மக்களிடமும் TMMK வின் சேவைகள் பரவி உள்ளது என்றும் எனவே இந்த தேர்தலில் MMK இன்ஷா அல்லா அமோக வெற்றி பெரும் என்றும் அவர் தெருவித்தார்.மேலும் கடந்த 5 ஆண்டுகாலமாக பேரூராட்சி நிர்வாகத்தின் குறைகள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெருவித்தார். மேலும் MMK கட்சியுடைய தேர்தல் வாக்குறிதிகள் இன்ஷா அல்லா விரைவில் வெளியிடப் படும் என்றும் அப்போது அவர் தெருவித்தார். மேலும் சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க உடனான கூட்டணி வைத்த நீங்கள் ஏன் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அ.தி.மு.க உடன் கூட்டணி வைக்க வில்லை என்ற முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர். ச.ம.தேர்தலில் அ.தி.மு.க உடன் கூட்டணி வைத்து உண்மைதான் எனினும், முஸ்லிம்களின் பிரதிநிதித்த்துவத்தை அதிகப்படுத்துவது தான் MMK வின் நோக்கம் என்றும், அந்த நோக்கத்தை சிதைக்கும் விதமாக நாங்கள் கோரிய இடங்கள் முழுமையாக அ.தி.மு.க தலைமை ஒதுக்காததால் தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டி இடுகின்றோம். மக்கள் சேவையில் சாதி மதம் வேறுபாடின்றி செயல்படும் மனித நேய மக்கள் கட்சிக்கு முத்துப்பேட்டை மக்கள் அனைவரும் ஆதரவு தந்து வெற்றிப் பெறச்செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,ஊழலற்ற உள்ளாட்சி அதுவே "மனித நேய மக்கள் கட்சியின்" மனசாட்சி என்று அவர் தெருவித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நகர தலைவர். M . சம்சுதீன் உடனிருந்தார்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, அபு மர்வா (துபாய்)

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு கி. முஹைதீன் அடிமை போட்டி: இ.யூ.மு.லீ, தகவல்!!!


முத்துப்பேட்டை, அக்டோபர் 02 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவருக்கு பதவிக்கு போட்டியிட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைமை என்னை பணிந்துள்ளது என்று கட்சியின் வேட்பாளரும், கட்சியின் மாவட்ட செயலாளருமாகிய கி. முஹைதீன் அடுமை தெருவித்துள்ளார். இதுகுறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர். முத்துப்பேட்டை நகர மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் அனைத்தும் தாமதமின்றி செய்து கொடுப்பேன் என்றும்,நான் அரசியல் வாழ்கையில் இ.யூ.மு.லீக்கில் 42 ஆண்டுகாலம் ஜாதிமத பேதமின்றி தான் பாடு பட்டு வருவதாகவும், குறிப்பாக மாநில மத்திய அரசு நலத் திட்ட உதவிகளை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்தந்த திட்டங்களை நிறைவேற்றி கொடுத்திருக்கிறேன் என்றும் அவர் தெருவித்தார். மேலும் கல்வியின் பிளிப்புனர்வை முத்துப்பேட்டை மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்த மேலும் ஏழை மாணவ மாணவிகளுக்கு ப அறக்கட்டளை மூலமாக உதவிகளையும், மேலும் அவர்கள் மேல்படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வந்துள்ளேன் என்றும் அவர் தெருவித்தார். தமிழ் நாடு ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்வோருக்கு குழுக்கள் மூலமாக தேர்ந்தெடுப்பதற்கு அவர்களுக்கு சிரமமின்றி அவர்களுக்கு பாடுபட்டு வருகிறேன் என்றும் தெருவித்தார். மேலும் தி.மு.க. உடனான கூட்டணி பற்றி முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த 10 ஆம் தேதி அன்று ஆடுதுறை அடுத்து திருமங்கலக் குடியில் முஸ்லிம் லீக்கின் முதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுத்ததில், தி.மு.க கட்சியுடன் முஸ்லிம் லீக் தொடர்ந்து கூட்டணி வைக்கும் என்றும் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 10 % விழுக்காடு முஸ்லிகளுக்கு ஒதுக்கி தரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டு முஸ்லிம் லீக் தமக்கு வாய்ப்புள்ள இடங்களில் அவற்றை பெற்றுத்தர வேண்டி அவர்களிடம் தீர்மானம் நிறைவேற்றப் பட்டன. அவற்றை தி.மு.க. தலைவர் கலைங்கருக்கும் அந்த தீர்மானம் அனுப்பி உள்ளோம் என்றும் அவர் தெருவித்தார்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ். ASNS .அப்துல் பாரி, EK . முனவ்வர் கான்

துபாய் வாழ் முத்துப்பேட்டை நண்பர்கள் பேரூராட்சி தேர்தலில் SDPI க்கு ஆதரவு!!



துபாய், அக்டோபர் 02 : துபாய் ஹோர் அல் அன்ஜ் முத்துப்பேட்டை நண்பர்கள் ரூமில் நடை பெற்ற கூட்டத்தில் நமதூர் ஊராட்சி மன்ற தேர்தலில் யாருக்கு நமது வாக்கு என்ற தலைப்பில் விவாதிக்க பட்டது அதில் தேர்தலில் பங்குபெறும் அணைத்து சகோதர்களும் நல்ல நிய்யதோடு செயல் படுகிரவர்கல்தான் என்றும் அதே சமயத்தில் கடந்த சில ஆண்டுகளாக சமுதாயத்திற்காக சிறப்பாக செயல் படுபவர் யார் என்று அனைவரிடமும் தனி தனியாக கேட்டு, ஒருமனதாக முடிவெடுக்கபட்டது அதில் மச்சான் என்று அழைக்கப்படும் எஸ் டி பி ஐயின் வேட்பாளர் அபு பக்கர் சித்திக் அவர்கள் தான் நமதூருக்கு சரியான வேட்பாளர் என்று முத்துப்பேட்டை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்துள்ளனர் ஆகையால் முத்துப்பேட்டை வாசிகள் அனைவரும் நமது வேட்பாளர் சித்திக் அவர்களுக்கு வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் இங்கு அணைத்து ரூமிற்கும் சென்று எடுத்து சொல்வதற்காக ஒரு கமிட்டியும் தேர்ந்தெடுத்துள்ளனர். இப்படிக்கு கடல் கடந்து வாழும் முத்துப்பேட்டை நலன் விரும்பிகள்.
source from muthupettai express

நமது நிருபர்

தண்டைய (எ) ஷாகுல் ஹமீது ( துபாய் )

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளரின் பேட்டி!


முத்துப்பேட்டை, அக்டோபர் 02 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட அ.தி.மு.க. தலைமை என்னை பணிந்துள்ளது என்று கட்சியின் நகரச் செயலாளரும், வேட்பாலருமாகிய கோ. அருணாச்சலம் தெருவித்துள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர். அ.தி.மு.க. அரசு தற்போது ஆட்சியில் இருப்பதால் அந்த அரசு மக்களுக்கு செய்யும் பல்வேறு நலத்திட்டங்களை முத்துப்பேட்டை மக்களுக்கு மிக எளிதில் கிடைக்க மிகவும் பாடுபடுவேன் என்றும் அதில் எந்த ஒரு பாரபட்சமும் பார்க்க மாட்டேன் என்றும் அவர் தெருவித்தார். மேலும் முத்துப்பேட்டை மக்களுக்கு இருக்கின்ற அடிப்படையான பிரச்சனை என்னவெனில் குடிநீர் பிரச்சனை தான், அதில் 18 ஆயிரம் மக்களுக்கு 18 லட்சம் லிட்டர் தேவைபடுகின்றது. தற்சமயம் 9 லட்சம் லிட்டர் தான் குடிநீர் வடிகால் வாரியத்தால் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இரண்டு மேல்நிலைத்தொட்டிகள் முத்துப்பேட்டையில் கட்டுவதற்கான செயல்களை செய்யப் போவதாகவும், அவர் தெருவித்தார். மேலும் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள மக்கள் குறுப்பிட்ட அளவிற்கு மேற்பட்ட மக்கள் வெளிநாட்டில் இருப்பதால் கியாஸ் பெறுவதற்கு கூடுதல் செலவு செய்து இடைதரகர் மூலம் பெற்று வருகின்றனர் என்றும், இதனை அரசுக்கு நான் வகிக்கின்ற பல்வேறு பொறுப்புகளின் அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து கேட்ட தின் விளைவாக கேஸ் ஏஜென்ட்டை முத்துப்பேட்டைக்கு வளங்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டையில் முதன் முதலில் STD உருவாக்கித்தந்ததும் முத்துப்பேட்டையில் 33 KV தடையற்ற மின்சாரம் கிடைக்க இங்கு மின்சார துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. மேலும் 100 KV துணை மின்நிலையம் அமைக்க பவேறு வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெருவித்தார். மேலும் முத்துப்பேட்டைக்கு பாதாள சாக்கடை திட்டத்தை அரசுக்கு கொண்டு சென்றுள்ளேன் என்றும் தெருவித்தார். முத்துப்பேட்டையை சுற்றுலாத் தலமாக மற்ற கண்டனத 10 ஆண்டுகளாக முழு மூச்சாக செயல் பட்டு வருவதாகவும், மேலும் சிறுபான்மை உடைய சொத்து, நலன்கள் ஆகியவிகள் பாதிக்கப் படாத வண்ணம் 38 ஆண்டுகளாக பாடுபட்ட வந்த நான் வருகின்ற காலங்களிலும் அந்த நிலையை பேணுவேன் என்றும் அவர் தெருவித்தார்.

Source from muthupettai express

தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ். EK.முனவ்வர் கான்

துபையில் வாழும் முத்துபேட்டை மக்களுக்கு ஒரு முக்கியச் செய்தி!



துபாய் அக்டோபர் 01 : அஸ்ஸலாமு அழைக்கும், அன்பார்ந்த முத்துப்பேட்டை சஹோதரர்கலே இன்ஷா அல்லா இன்று மலை 6 மணியளவில், முத்துப்பேட்டை நண்பர்கள் தங்கியுள்ள இடமான துபாய் "ஹோர் அல் ஆன்ஸ்" ஆல் குரைர் பில்டிங்கில் ரூம் நம்பர் 217 லில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி மன்ற தேர்தல் சம்பந்தமாக, யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பன பல்வேறு கருத்துகளை ஆலோசனை செய்ய இருப்பதால் அனைத்து நண்பர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம் முத்துப்பேட்டை நலன் விரும்பும் சகோதரர்கள்.
Source from muthupettaiexpress
நமது நிருபர்

S.ஷாகுல் ஹமீது (துபாய்)

உள்ளாட்சி தேர்தல் குறித்து மக்கள் மன்றத்தை சந்திப்பது என SDPI முடிவு: மா.செ. பேட்டி!!!



முத்துப்பேட்டை 01 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்று நடைபெற்ற வேட்பு மனு பரிசிலனையில் தாக்கல் செய்த அனைத்து மக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒரு நபர் மட்டும் வாபஸ் பெற்றுள்ளார், அதன் அடிப்படையில் தற்போது 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலைத்த SDPI யின் மாவட்ட தலைவர் ஜனாப் தமரே ஆலம் அவர்கள் அளித்த பேட்டி பின் வருமாறு, முஸ்லிம்களில் இருக்கக் கூடிய நபர்கள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த ஏற்பாடு செய்தனர். அதில் தகுதியான வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்குவதை விட்டு விட்டு கடந்த 5 ஆண்டுகளில் சட்ட மன்ற தேர்தலில் அனைத்து மக்களால் துடைத்தெரியப்பட்ட முத்துப்பேட்டை பேரூராட்சியை நிர்வாகித்து மக்கள் பணத்தை சூறையாடிய தி.மு.க.விற்கு ஆதரவான நிலையை மக்கள் மீது திணித்தனர், அதனால் இந்த கருத்துக்கு SDPI வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட தலித்துகள், கிருஸ்தவர்கள், இன்னும் குறைவாக இருக்கக் கூடிய பல்வேறு சாதியினரை ஆதிக்க சாதியினரால் தொடர்ந்து அடக்கு முறைக்கு உள்ளக் கப்பட்டு வருகின்றனர். மேலும் கட்சி தனக்கு போட்டியிட வாய்ப்பு தந்ததை வேட்பாளர் தனது கட்சி தலைவர்களிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெரும் அவல நிலையம் நடந்தேறியது என்பது மிகவும் வேதனைக் குரிய விஷயம், அல்லாஹ் விற்கு அடிபணிய வேண்டிய நாம் இவர்களின் காலில் விழுவது மிகவும் வேதனை. (muthupettai express) இதிலிருந்து மீட்டெடுத்து ஒட்டு மொத்த மக்களுக்கும் அவர்களுடைய உரிமைகள் கிடைபதற்காக தேர்தல் களத்தில் SDPI இறங்கியுள்ளது. எனவே முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து மக்களும் ஆதரவு தந்து வெற்றி பெற செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெருவித்தார். SDPI யின் மாநிலச் செயலாளர் ஜனாப்.A. அபூபக்கர் சித்திக் உடனிருந்தார்.
Source From Muthupettai Express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்

TNTJ நடத்திய மாபெரும் காவல் நிலையம் முற்றுகை போராட்டம்!!!






சேதுபாவாசந்திரம், அக்டோபர் 01 : புதுபட்டினம் மஸ்ஜிதுர் ரஹ்மான் புது பள்ளி வாசலைத் தாக்கிய காவி தீவிர வாதிகளை உடனே கைது செய்யக்கோரியும், அதற்கு உறுதுணையாக செயல் பட்ட சேது பாவாசத்திரம் காவல் துறை ஆய்வாளர் ரவீந்திர பூபதியை பனி நீக்கம் செய்யக் கோரியும், TNTJ (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்) மாநில தலைமையகம் மாபெரும் முஸ்லிம்களின் காவல் நிலையம் முற்றுகை போராட்டத்தை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் (30.09.2011) சுமார் 5 மணியளவில் திருவாரூர், ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் சுமார் 15 ஆயரம் முஸ்லிம் ஆண்களும் பெண்களும் சேதுபாவா சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்து கலந்து கொண்டு சம்மந்தப்பட்ட அதிகரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் காவி தீவிர வாதிகளின் அட்டூளியத்திருக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றும் மேலும் இது போன்ற கோசங்களை எழுப்பியது. இந்த கோசம் விண்ணை பிளக்க வைத்தது.muththuppettai express இது குறித்து அப்போது அங்கு பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மை குழு உறுப்பினர்,ஜனாப். பக்கீர் முஹம்மத் அல்தாபி பேசும் போது, நாங்கள் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை என்றும் இந்திய மண்ணிற்கு சொந்தகாரவர்கள் என்றும், கூறினார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரியையும், காவி தீவிர வாதிகளையும் உடனே நடவடிக்கை எடுக்க வில்லை என்றாள் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய காலங்களில் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டத்தை இந்த TNTJ தலைமையகம் அறிவிக்கும் என்பதை இதன் மூலம் தெருவித்துக் கொள்கிறேன்.
Source from muththuppettai express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்

நமது நிருபர்

ஹாஜா மைதீன்

முத்துப்பேட்டையில் 7 வது வார்டுக்கு சுயேட்சையாக போட்டி இடும் கருதப்ப என்கிற முஹம்மத் சித்திக்:




முத்துப்பேட்டை, அக்டோபர் 01 : திருவர்ரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 7 வது வார்டுக்கு போட்டியிடப் போவதாக கருத்தப்ப என்கிற முஹம்மத் சித்திக் தெருவித்துள்ளர். இதுகுறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், நான் எந்த அரசியல் கட்சிகளுக்கு விலை போக மாட்டேன் என்றும், 7 வது வார்டு மக்களுக்குகாக கடுமையாக உழைப்பேன் என்றும், அவர்களின் தேவையை நிறைவேற்றி தருவேன் என்றும் அவர் தெருவித்தர். ,மேலும் சிமென்ட் சாலை, தார் சாலை அமைக்க போராடுவேன் மேலும் இவைகளைக் கொண்டு சம்பாதிக்கும் எண்ணம் என்னிடம் இல்லை என்றும் அவற்றைஇ முறையாக செயல் படுத்துவேன் என்றும் அவர் தெய்ருவித்தர். கிட்டங்கி தெருவில் போடப் பட்ட அந்த சிமன்ட் சாலை மக்களுக்கு பயன் தரக் கூடியது இல்லை என்றும் முழுக்க முழுக்க அந்த சாலை தனது சம்பாத்தியத்தை இலக்காக கொண்டுதான் போடப் பட்டுள்ளது என்றும் அவர் தெருவித்தார். அரசு பணத்திற்காக லாபம் தேடும் ஒரு அரசியல் வாதி நான் அல்ல என்பதை இதன் மூலம் தெருவித்துக் கொள்கிறேன்.பஞ்சாயத் போர்டு கோட்டம் கூடும் போதெல்லாம் 7 வது வார்டு முக்கியஸ்தர்களை அழைத்து அவர்களின் ஆலோசனைகளை ஏற்று அந்த கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற பாடுபடுவேன். மேலும் வீடு வீடாக சிலிண்டர் கொடுப் பதற்கு என்ன என்ன வழிமுறைகள் இருக்கின்றதோ அவற்றை மக்களின் ஒத்துளைப் போடு தொடர்ந்து அறவழி போராட்டங்களின் மூலம் முயற்ச்சி செய்வேன் என்றும் அவர் தெருவித்தார். (source from muththuppettai எக்ஸ்பிரஸ்)
குறிப்பு: மருத்துவம், ரெத்தம், ஆம்புலன்ஸ், இரவு நேர வாகன ஏற்பாடு, தொழில் பற்றிய கருத்துரை, மேலும் எல்லாவிதமான தகவல்களையும் இதன் மூலம் செய்ய உள்ளதாகவும் அப்போது அவர் தெருவித்தார். இதனை பற்றிய தகவல் தெரிய பொது மக்கள் அழைக்க வேண்டிய தொலை பேசி எண் : 9171929248

source from muththuppettai express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்

பேரூராட்சி தலைவர் பதவிக்கு SDPI சார்பாக போட்டியிட சித்திக் வேட்பு மனு தாக்கல்



முத்துப்பேட்டை, செப்டம்பர் 29 : SDPI யின் மாநிலச் செயலாளர் ஜனாப். அ.அபூபக்கர் சித்திக் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டி இட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் SDPI மாவட்ட தலைவர் ஜனாப் தப்ரி ஆலம் பாதுஷ , மா.செ. பாவ பஹுருதீன், மா. பொ. நெய்னா முஹம்மத், மாவட்ட மீனவர் சங்கத் தலைவர், நகரத் தலைவர், ரஹ்மத்துல்லாஹ், ந.செ.மைதீன். மாவட்ட செயற்குழு உறுப்பினர். நிசார் அஹ்மத், அப்துல் மாலிக், நெய்ன முஹம்மத் பசீர் அலி, தமீம் நியாஸ், மற்றும் தொண்டர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Reporter ilyas, MA.Journalism & Mass Communication

மேயர் தேர்தலுக்கு 14 பிற அமைப்புகள் SDPI க்கு ஆதரவு: தொல்திருமா அறிவிப்பு!

சென்னை, செப்டம்பர் 29 : தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி, கிருஸ்தவ அமைப்புகளின் கூட்டணி சார்பாக சென்னை மேயர் வேட்பாளராக சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்திய (SDPI) வின் வாடா சென்னை மாவட்டத் தலைவர் ச. அமீர் போட்டியிடுகிறார். இக்கட்சியை ஆதரிக்கும் அமைப்புகள் பின் வருமாறு.
1. தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை
2. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
3. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா
4. இந்தியன் நேஷனல் லீக்
5. சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை
6. தேசிய லீக் கட்சி
7. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
8. ஜம்மியதுல் உலமாயே ஹிந்த்
9. ஆல் இந்தியா மில்லி கவுன்சில்
10. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
11. ஷரிஅத் பாதுகாப்பு பேரவை
12. வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா
13. இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்
14. இஸ்லாமிய இலக்கிய கழகம்
மற்றும் 6 கிறிஸ்துவ அமைப்புகள்

தே.மு.தி.கா சார்பில் 7 வது வார்டுக்கு ஓவன என்கிற LMO .ஹபீப் கான் போட்டி: தே.மு.தி.க தகவல்:

முத்துப்பேட்டை,செப்டம்பர் 29 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை யில் நடை பெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் 7 வது வார்டு கவுன்சிலராக தே.மு.தி.கா.சார்பாக போட்டி இட போவதாக முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு ஓவன என்கிற LMO .ஹபீப் கான் பேட்டியளித்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், என்னுடைய பனி 7 வது வார்டு மக்களுக்கு நல்ல முறை யில் பணியாற்றுவேன் என்றும், அரசாங்கம் தரக்கூடிய உதவிகளை ஏமாற்றாமல் அவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்வேன் என்றும், மேலும் அரசாங்கத்தின் பணத்தை எதிபார்த்து பணியாற்ற மாட்டேன் என்றும் என்னுடைய பணத்தை என்னுடைய வார்டு மக்களுக்கு கொடுத்து உதவி செய்வேன் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். மேலும் எனது வார்டை மிக சுத்தமாகவும், சுகதரமகவும் பேணி காக்குவேன் என்றும் அவர் கூறினார்.

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர்

ரிபோர்ட்டர் இல்யாஸ், ASNS அப்துல் பாரி, EK . முனவர் கான்

SDPI கட்சியின் முத்துப்பேட்டை வார்டு வேட்பாளர்களின் பட்டியல்!!!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 6 வார்டு வேட்பாளர்களின் பட்டியலை திருவாரூர் மாவட்ட SDPI செயலாளர் ஜனாப். தமரே ஆலம் பாதுஷா, அவர்கள் இன்று வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வார்டுகளில் போட்டி இடும் ச்ட்பி வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி வாகை சூட அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி தங்களிடம் கேட்டுக் கொள்கிறோம். குறிப்பு: வெளி நாட்டில் வாழும் முத்துப்பேட்டை நண்பர்கள் அனைவரும் தன் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் சொல்லி SDPI கட்சி வாக்களிக்க கூறும்படி கேட்டுக் கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ் முத்துப்பேட்டை பேரூராட்சி உட்பட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தமாகவும், சுகதரமகவும் வைத்துக் கொள்ள பாடுபடுவோம்.

வேட்பாளர்களின் பட்டியல்:

2 வது வார்டு
N . ரிஹானா பர்வீன்
C/O: A . நிஜாம்
ஆசாத் நகர், முத்துப்பேட்டை.

3 வது வார்டு
A .நிஜாம் (SDPI முன்னால் நகரச் செயலாளர்)
S/O: அப்துல் அஜீஸ்
ஆசாத் நகர், முத்துப்பேட்டை.

8 வது வார்டு
A .பஜாரியா அம்மாள்
C/O: அப்துல் கரீம், (மதுரா சில்க்ஸ் & ரெடிமேட்ஸ் )
மறைகையர் தெரு, முத்துப்பேட்டை

9 வது வார்டு
M .பாவா பஹ்ருதீன் (SDPI மாவட்டச் செயலாளர்)
S/O: முஹம்மத் யூசுப்
நடுத் தெரு, முத்துப்பேட்டை.

13 வது வார்டு
M .முஹைதீன் பிச்சை மறைகையர்
S/O: முஹம்மத் ஷேக் தாவூத்
தெற்குத் தெரு, முத்துப்பேட்டை.

15 வது வார்டு
M . நெய்னா முஹம்மத் (SDPI மாவட்ட பொருளாளர்)
S/O: முஹைதீன் பக்கீர்,
ஜமாலியாத் தெரு, முத்துப்பேட்டை.

நன்றி- SDPI செய்தி தொடர்பாளர் ஜனாப். நெய்னா முஹம்மத் (ஆசாத் நகர்)
எஹ்யாக் கான். ஆசாத் நகர்.

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர்
EK . H . தமீம் நியாஸ்

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு SDPI சார்பாக சித்திக் (மச்சான்) போட்டி! SDPI தகவல்:

முத்துப்பேட்டை, செப்டம்பர் 27 : திருவாரூர் மாவட்ட முத்துப்பேட்டை யில் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு SDPI சார்பாக எல்லோராலும் செல்லமாக அழைக்கப் படும் சித்திக் மச்சன் என்கின்ற A .அபூபக்கர் சித்திக் மாநிலச் செயலாளர் SDPI அவர்கள் போட்டியிடப் போவதாக நேற்று SDPI தலைமையகம் தெரிவித்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் SDPI யின் மாநில செயலாளரும், வேட்பாளரும்மாகிய A . அபூபக்கர் சித்திக் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு பின்னர் பேட்டியளித்த அவர், இந்த தேர்தலின் மூலமாக நீதி நிலைநாட்டப்படும், எந்த மக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல், அதாவது இந்து முஸ்லிம், கிறிஸ்தவர், தலித் ஆகிய அனைத்து மக்களுக்கும் அவர்களுடைய உரிமைகளை பெற்று றுவதற்கு முயற்சிகள் செய்வோம் என்றும், மேலும் அவற்றை முழுமையாக பெற்றுத்தர போராட தயாராகுவோம். அதே போல எந்த சமூகமும் பாதிக்கப் படாத அளவுக்கு பாரபட்சம் பார்க்காமல், எங்களுடைய கட்சி செயல்படும். நம்ம ஊரில் பாசிசம் தலை எடுக்காத அளவுக்கு என்னென்ன வழிகள் இருகின்றதோ அவற்றை தடுக்க முயற்சிகள் எடுப்போம் என்றும், முத்துப்பேட்டையில் உள்ள பொதுவான பிரட்சனைகலான குளங்கள், சாலைகள், பராமரிப்புகள் குறித்தும் நல்ல முடிவுகள் எடுக்கப் படும் என்றும்,தமிழகத்தில் எந்த இடங்களிலும் இல்லாத மனிதர்களை கண்காணிக்கக் கூடிய அதிநவீன கேமராக்களை தெருக்களில் முத்துப்பேட்டை ஊராச்சி மன்றத்திற்கு உட்பட்ட 4 இடத்தில் அப்பாவி மக்களை கண்காணிக்க இருக்கும் இந்த கேமராக்களை உடனே அகற்ற நடவடிக்கை எடுப்போம் என்று அவர் தெருவித்தார்.மேலும் SDPI கட்சியானது பணத்திற்கோ அல்லது பதவி, பட்டத்திற்கோ துனைபோகது என்பதை உறுதிபட நான் இங்கே கூறுகிறேன். இந்த அரசியல் காலத்திற்கு SDPI இறங்கியதற்கு முக்கிய காரணமே பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! நமது சமுகத்திற்கு எதாவது இந்த அரசியல் மூலம் செய்யலாம் என்ற ஓர் ஏக்கத்தில்தான் இந்த அரசியலில் இறங்கி உள்ளோம் . அதற்காக முத்துப்பேட்டை மக்கள் அனைவரும் என்னை மனமார ஏற்று என்னை வெற்றிபெற செய்யும்படி தங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அழைக்கும் வராஹ்.

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர்

தொகுப்பு: ரிபோர்ட்டர் இல்யாஸ்,

செய்தியாளர்: H . தமீம் நியாஸ்.
SDPI மாவட்ட செயற்குழு உறுப்பினர்

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு:

முத்துப்பேட்டை செப்டம்பர் 27 : அன்பார்ந்த சஹோதர சகோதரிகளே அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக. நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தில் வர இருக்கின்ற உள்ளாச்சி மன்ற தேர்தலின் நிலவரம் குறித்து வெளியிடப்படும் என்பதை இதன் மூலம் தெருவித்துக் கொள்கிறோம். தேர்தல் நிலை குறித்து உடனுக்குடன் தெரியப் படுத்துவோம் இன்ஷா அல்லாஹ். அனைத்து வாசகர்களும் இதற்கு நல அதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மவுத் அறிவிப்பு: "MM .முகைதீன் பிச்சை"

முத்துப்பேட்டை, செப்டம்பர் 26 : தெற்குத் தெரு மர்ஹும் நெய்னா மலை அவர்களின் மகனும் மர்ஹும், S .முஹம்மத் ரஜாக்,MM . முஹம்மத் அலி, MM . கமல் முஹிதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் M . நெய்னா முஹம்மத் இவர்களின் மட்சனும், அஸ்ரபலி, பரக்கத்தலி, இவர்களின் தகப்பனாரும் மாகிய "MM . முகைதீன் பிச்சை" அவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணியளவில் அரபு சாகிப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்

MM .கமல் முகைதீன்

முத்துப்பேட்டையில் SDPI யின் நகர நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது!

முத்துப்பேட்டை, செப்டம்பர் 24 : முத்துப்பேட்டை யில் SDPI யின் நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் நகர தலைவர் ஜனாப். ரஹமதுல்லாஹ் தலைமை யில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜனாப். தப்ரே ஆலாம் பாதுஷ, மாவட்ட துணைச் செயலாளர், பாவா பஹுருதீன், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் அனைத்து வாடுகளில் SDPI சார்பாக போட்டி இட வேட்பாளர்கள் நேர்காணல் மிக சிறப்பாக நடைபெற்றது. முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கட்சியின் மாவட்ட செயலாளர், வார்டு வேட்பாளர்கள் தங்களுடைய மனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள். அந்த மனுக்களை தலைமையகத்திற்கு அனுப்பி வைத்து தலைமை எடுக்கும் முடிவை இன்ஷா அல்லாஹ் வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி அன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளி இடப்படும் என்றும், முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு முஸ்லிம்கள் தரப்பில் 5 பேர் போட்டி இடுவது மிகவும் வேதனைக் கூறியதே, இதனை SDPI வன்மையாகக் கண்டிக்கிறது என்றும், மேலும் தலைவர் பதவிக்கு போட்டி இடும் 5 வேட்பாளர்களை சந்தித்து பேசுவது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் முன்னால் நகர தலைவர், ஜனாப் ஆசாத் நகர் எஹ்யா கான், மற்றும் PFI நகரச் செயலாளர் ஜனாப் நிஜம்,முத்துப்பேட்டை நகர செயற்குழு உறுப்பினர் ஜனாப். நிசார் அஹ்மத், தமீம் நியாஸ், SLM . தம்பி மரைகாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர்

EK .H தமீம் நியாஸ்
source from Muthupettai Express

நீ எதற்கு புகைப்படம் எடுக்கிறாய் சகோதரி ...?


குஜராத், செப்டம்பர் 24 : தன் இனத்தை கருவறுக்க துடிக்கும் ரத்த வெறியர்களின் உண்மை முகத்தை கூட புரிந்துகொள்ள முடியா சமூகமடா நாம்...:-/நீ எதற்கு புகைப்படம் எடுக்கிறாய் சகோதரி ...?உன்னை போல் எங்களை வாழவிடு என்பதற்காகவா ? அல்லதுநல்ல வேலை நீ எங்களை விட்டுவைத்தாய் என்று,நன்றி சொல்வதற்காகவா ....?நீ வெகுளியாக நிற்கிறாய் - அவன் வெறியோடு நிற்கிறான்...மிரட்டலுக்கு பணிந்தீர்களா ? அல்லது பணத்திற்கு பணிந்தீர்களா ?வேறென்ன சொல்வதற்கு புதிதாக...
2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் நரேந்திர மோடிதான் - முன்னாள்
குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா.
சட்டமன்ற உறுப்பினர் ஹரேஷ் பட்:
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பா.ஜ.க. பிரமுகர்கள், பஜ்ரங் தள், வி.ஹெ.ச்பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் பேசிய மோடி, ‘நான் உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால்,மூன்று நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும்என்றார். அதன்பிறகு பெரிய அளவில் கொலைச்சம்பவங்கள் நடந்த பிறகு எங்களை அழைத்த மோடி, எல்லோரையும் பாராட்டினார்.
மதன் சாவல் பா.ஜ.க. தொண்டர்:
முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஓடினோம். அவர்களை எல்லாம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜாப்ரி தன்னுடைய வீட்டுக்குள் அழைத்துப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உடனே நாங்கள் ஆயுதங்களுடன் அந்த வீட்டை முற்றுகையிட்டோம். உடனே அவர் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்து எங்களையெல்லாம் கலைந்து போகச் சொன்னார். நாங்களும் சரி என்றோம்.
அவர் பணத்தைத் தருவதற்காகக் கதவைத் திறந்ததும் விருட்டென வீட்டுக்குள் நுழைந்துவிட்டோம். உடனடியாக இருவர் அவரை மடக்கிப் பிடிக்க, அவருடைய கையை நான் வெட்டினேன். அவருடைய ஆண்குறியையும் வெட்டினேன். பிறகு அவரைத் துண்டு துண்டாக வெட்டி வீசிவிட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம். மோடியின் முயற்சியால்தான் எங்களால் சிறையில் இருந்து வெளியே வர முடிந்தது. நீதிபதிகளை இடமாற்றம் செய்து, வசதியான நீதிபதிகளை பணியிலமர்த்தியதால் எங்களுக்கு சுலபமாக ஜாமீன் கிடைத்தது.
பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி:
வழியில் தென்பட்ட கர்ப்பிணிப் பெண் முஸ்லிம் என்று தெரிந்ததும் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவளுடைய வயிற்றில் குத்தினேன். உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்து வீசி எறிந்தேன்.
அணில் படேல் மற்றும் தபால் ஜெயந்தி படேல்:
எனக்குச் சொந்தமான தொழிற்சாலையில்தான் கலவரத்தின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. அந்தப் பணியில் வி.ஹெச்.பி. தொண்டர்கள் ஈடுபட்டனர். எல்லா விஷயமும் போலீஸாருக்குத் தெரியும். ஆனால், அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், விஷயம் வெளியே கசியாதவாறு அவர்கள்தான் பார்த்துக்கொண்டனர். அந்தக் குண்டுகளை வைத்துத்தான் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.
பிரகர்ஷ் ரத்தோட்:
பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாயா பென் தெருத்தெருவாகச் சென்று தொண்டர்களைக் கலவரம் செய்வதற்கு ஊக்கப்படுத்தினார். முஸ்லிம்கள் ஒருவரைக் கூட விடக்கூடாது. வேகமாகக் கொன்று குவியுங்கள்என்று ஆவேசமாகக் கூறிக்கொண்டே நடந்தார்.
சுரேஷ் ரிச்சர்ட்:
முஸ்லிம் மக்கள் இருக்கும் இடங்கள் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் நாங்கள் திணறியபோது போலீஸாரே சில இடங்களைச் சுட்டிக் காட்டினர். நாங்கள் அங்கு சென்று கதவுகளை மூடிவிட்டு, அவர்களை உள்ளேயே வைத்து எரித்துவிட்டோம்.
அரசு வக்கில் அரவிந்த் பாந்த் பண்டைய:
கலவரத்தில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு எதிரான வழக்குகள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மோடி சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். காவல்துறை அதிகாரிகள் இந்துக்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
கோத்ரா சம்பவம் மோடியை ரொம்பவே வருத்தப்பட வைத்திருந்தது. அகமதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால், முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட தினத்தை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாட வேண்டும் என்றார் மோடி.
VHP பொதுச் செயலாளர் திலிப் திரிவேதி :
மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்குச் சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்குச் சாதகமாக அவர்கள் வாதாடினர்!

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர்

தமிசுதீன் (Chef reporter of Dubai)



முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸின், சவுதி வேலை வாய்ப்புகள்!!!




Saudi Arabia
Direct Client Interview on 27 – 09 – 2011 (Tuesday) at Chennai
Position No Of Position Salary SR
STOCK MAN (Milk stock) 20 S.S.L.C or 12th SR 900
ACCOUNTANT 5 B.Com SR 2500
SALES MAN 50 GCC License SR 1200
WAITER 6 SR 1200

3+ years exp in 3 Star Hotel / House. Gulf Exp preferred
PLUMBER 5 ITI/DIP 800 – 1000
WELDER – TIG & MIG 5 ITI 800-1000
ELECTRICIAN 5 Diploma in Electrician SR 1500

Free Food & Accommodation
8 Hours Duty + OT
Contact : Feroz : 9789981786
நமது நிருபர்

EK .யாசர் அரபாத்
source from Muthupettai Express.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)