முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பில் களம் இறங்கிய MMK வினர்!






முத்துப்பேட்டை,அக்டோபர் 09 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் MMk வின் வேட்பாளாரான எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் மாசா மாலிக் என்ற முஹம்மத் மாலிக் அவர்கள் பேருந்து சின்னத்தில் போட்டியிடுகிறார். அதன் அடிப்படையில் முத்துப்பேட்டையில் உள்ள 18 வார்டு மக்களிடமும் கடந்த 5 நாட்களாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், தலித், மேலும் வர்த்தக நண்பர்கள், விவசாய்கள் ஆகிய அனைத்து மக்களிடமும் சென்று தனக்கு வாக்கு சேகரித்தார்.
Source from muthupettai express
நமது நிருபர்

முத்துப்பேட்டை முஹைதீன், லக்கி சித்திக், K . முஹம்மது யாசின்

முத்துப்பேட்டை அரசர் குளம் மின்கம்பி குறித்த ம.ம.க. புகார்! நிறைவேற்றிய மின்சார வாரியம்!





முத்துப்பேட்டை,அக்டோபர் 09 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பல ஆண்டுகாலமாக குட்டியர் பள்ளி முஹல்லாவிருக்கு சொந்தமான அரசர் குலம் இருந்து வருகின்றது. இந்த குலத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், தலித் ஆகிய அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்த கூடிய ஒரு குலமாக இன்றுவரை திகழ்கிறது. எனவே இக்குளத்தில் குளிக்கும் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் மின்னழுத்த உயர் (HP) என்ற லயன் கம்பி அக்குலத்தின் நடுவே கடந்து செல்வதால் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக மின்சாரதுறை உயர் அதிகாரிகளுக்கு தா.மு.மு.க. மற்றும் ம.ம.க வின் திருவாரூர் மாவட்ட பொருளாளர் ஜனாப். ஜெகபர் சாதிக் என்பவர் பல முறை மனுக்களை அனுப்பி உள்ளார். அதன் விளைவாக மின்சார வாரியத்தின் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர் இதற்கு தேவையான தடவாள பொருட்கள் அனைத்தும் பெறப்பட்டு விரைவில் பனி செய்து முடிக்கப்படும் என மனுதாரருக்கு மின்சாரத்துறை கடிதத்தின் மூலம் அனுப்பப்பட்ட மனுவின் விபரம் பின் வருமாறு.

Source from muthupettaiexpress
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.அபு மர்வா

முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளியும் ,கேளி சித்திரமும்?


முத்துப்பேட்டை, அக்டோபர் 08 : கண்ணியத்திற்குரிய முஸ்லிம் சமூகமே திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 15 ஆண்டாக ரஹ்மத் அறக்கட்டளை சார்பாக செயல் பட்டு வரக்கூடிய ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு மலரின் மூன்றாம் பதிப்பில் "முஹம்மத் நபி (ஸல்) அவர்களை தெரிந்து கொள்ளுங்கள்" என்ற பகுதியில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை பற்றி சுயசரிதையாக வெளியிடப் பட்டிருந்தது. 

அதில் கார்டூன் ஒன்றும் இடம் பெற்றிருந்தது. அதில் உள்ள கார்டூனை அகற்ற வேணுமாய் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வருகிற 10 .10 .2011 ஆம் தேதியன்று மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபரை இஸ்லாமிய இயக்கம் ரீதியாக தொடர்பு கொண்டு பேசினார்கள் அது பின்வருமாறு. முஹம்மத் நபி ஸல் அவர்களின் விசயமாக ரமலான் மாதம் 06 .08 .2011 தேதியன்று இஸ்லாமிய இயக்கத்தை சார்த்த சகோதரர்கள் தற்போது முத்துப்பேட்டையில் ரஹ்மத் பள்ளிகூடத்தின் கவுரவச் செயலாளர் ஜனாப் 3M பசீர் அவர்களை சந்தித்து இது விசயமாக எடுத்துரைத்ததோடு மட்டுமல்லாமல் இந்த ஆண்டு 2011 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ஆண்டு மலரின் பிரதிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டுமாய் மனுவையும் கொடுத்துள்ளார்கள். 

அந்த மனுவை பள்ளிக்கூடத்தின் தாளாளர் ஜனாப் MA .முஸ்தபா அவர்களுக்கு அனுப்பப்பட்டது. அப்போது அவர் சிங்கபூரிலிருந்து தாயகம் வந்து இவற்றை செய்தது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கின்றது என்றும் எனவே அல்லாஹ் விற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்றும் ஊர் மக்களிடமும் இஸ்லாமிய இயக்கத்திரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அப்போது அவர் ஒரு கடிதம் மூலம் எழுதியும் கொடுத்துள்ளார்.




மேலும் இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர்கள் பள்ளியின் கவுரவ செயலாளர் 3M பசீர் அவர்களை நேரில் சென்று சில வினாக்களை தொடுத்தனர். இதற்கு பின்னர் பதிலளித்த அவர், இந்த விஷயம் குறித்து நானும் மன வேதனை அடைந்தேன் என்றும் இது போன்ற சம்பவம் இனி நடக்காது என்றும் அவர் தெருவித்தார். மேலும் காலாண்டு பருட்சை லீவ் முடிந்தவுடன் மீத முல்லா அனைத்து பதிப்பிணையும் திரும்ப பெற்று அப்படத்தை அகற்றுவோம் என்றும், அந்த பதிப்பினை திரும்ப பெறுவதற்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜாமத் அவர்களிடம் சில மாதம் அவகாசம் கேட்டோம், அனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் வருகிற 10 ஆம் தேதியன்று ஆர்பாட்டம் நடத்த உள்ளனர் என்று அப்போது அவர் தெருவித்தார்.

 இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப். அப்துல் ரஹ்மான் அவர்கள், எங்கள் உயிரிலும் மேலான முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேலிசித்திரம் வரைந்த நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் விதத்தில் வருகிற 10 .10 .2011 ஆம் தேதியன்று போராட்டம் நடத்துவோம் இதற்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் அவர் தெருவித்தார். 

மேலும் இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் அப்பள்ளியின் தாளாளர் ஜனாப் M .முஹம்மத் யாசின் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், இது இரண்டு மாதங்கள் முன்பே நடைபெற்ற ஒரு சம்பவம் என்றும், என்னுடைய உயிரிலும் மேலான முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை உலக தமிழ் மக்கள் அனைவரும் அறிந்து கொள்வதற்காக எங்களுடைய ட்ரஸ்ட் மூலம் நாங்கள் அவற்றை அரபிளிருந்து தமிழாக்கம் செய்து கொண்டு வரக்கூடிய நாங்கள் முஹம்மத் நபியை எப்படி இழிவு படுத்த எங்களுக்கு மனம் வரும் என்றும், மேலும் இந்த பதிப்பினை பொறுப்பேற்று நடத்திய பொறுப்பாளரையும் கண்டித்துள்ளோம் என்றும், இந்த விஷயம் எங்களுக்கு அப்பொழுதே தெருந்திருந்தால் அவற்றை கண்டிப்பாக தடுத்து நிருத்திருப்போம் என்றும், மேலும் நமது சமுதாயத்திற்கும், குறிப்பாக முத்துப்பேட்டை மக்களுக்கும் பல்வேறு விதமான உதவிகளையும் முஹம்மத் நபி ஸல் அவர்கள் காட்டித்தந்த முறைப்படி செய்து வருகிறோம் என்றும், இது குறித்து சில ஹதீஸ்களை எங்களிடம் அவர் தெருவித்தார்.

ஒரு முஸ்லிமுடைய ரத்தமும், அவர்களுடைய மானமும், அவர்களுடைய பொருளும் பாது காக்கப்படவேண்டும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள், நூல்: முஸ்லிம்,

யார் ஒரு முஸ்லிமின் மானத்தையும் கண்ணியத்தையும் குலைத்தனோ அல்லாஹ் அவனுடைய கண்ணியத்தையும் மானத்தையும் வேறொரு இடத்தில் வைத்து கேவலபடுத்துவான். நூல்: அபூதாவூத்
ஆதமுடைய மக்கள் அனைவர்களும் தவறு செய்யக் கூடியவர்கள், அதிலே சிறந்தவர்கள் (தவ்பா) அல்லாஹ் விடத்தில் பாவ மன்னிப்பு தேடக்கூடியவர்கள்! நூல் : திர்மிதி, இபுனுமாஜா,

இதனைத்தொடர்ந்து அவர் அனைத்து மக்களிடமும் இந்த செயலுக்காக அல்லாஹ் விற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அல்லாஹ் விடம் எனக்கு மன்னிப்பு கிடைக்க அனைத்து மக்களும் இறைவனிடம் துவா செய்யுங்கள் என்றும் இதன் மூலம் கேட்டுக்கொண்டார்.
Source from www.Muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹம்மது இல்யாஸ்.

முத்துப்பேட்டை உ.தே.வாக்கு சேகரிப்பில் களப்பணி யாற்றும் நியூ மெடிக்கல் சகப்தீன்!





முத்துப்பேட்டை, அக்டோபர் 08 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளாரான நியூ மெடிக்கல் சகாபுதீன் அவர்கள் கைபம்பு சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு முத்துப்பேட்டை யில் உள்ள 18 வார்டு மக்களிடமும் கடந்த 5 நாட்களாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . அப்போது வீடுவீடாக சென்றும் கடைகளுக்கு சென்றும் மக்களிடமும் வாக்கு சேகரித்தார்.
source from muthupettai express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், AKL .அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டை உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பில் களப்பணி யாற்றும் SDPI யினர்!











முத்துப்பேட்டை, அக்டோபர் 08 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் SDPI யின் வேட்பாளாரான சித்திக் மச்சன் என்கிற அபூபக்கர் சித்திக் அவர்கள் கைக் கெடிகாரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு முத்துப்பேட்டை யில் உள்ள 18 வார்டு மக்களிடமும் கடந்த 5 நாட்களாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . அப்போது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், தலித் ஆகிய மக்களிடமும் வாக்கு சேகரித்தார்.
source from muthupettai express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்,அச்ன்ஸ்.அப்துல் பாரி, ஏக.முனவ்வர் கான், AKL .அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு மகாராஜா தமீம் போட்டி: தி.மு.க.தகவல்!!




முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு மகாராஜா தமீம் போட்டி: தி.மு.க.தகவல்!!
முத்துப்பேட்டை,அக்டோபர் 08: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை யில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு தி.மு.க சார்பில் கட்சியின் முன்னால் மாவட்ட பொருளாளரும், வேட்பாலருமாகிய மகாராஜா தமீம் அவர்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடப் போவதாக அவர் தெருவித்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர். முத்துப்பேட்டையில் குடிநீர் பற்றாக்குறையில் நிரந்தர முடிவு எடுக்கப்படும் என்றும், மருதங்கவளி மாற்று குடிநீர் திட்டம் ஏற்படுத்த முயற்ச்சி செய்வேன் என்றும், சாக்கடை வடிகால் பல இடங்களில் கழிவு நீர் சேருவதற்கு நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், அனைத்து வாய்க்கால்கலையும் தூர் எடுத்து மலை நீர் அவற்றை நோக்கி செல்ல வடிகள் தூர் வாரி தரப்படும் என்றும், மேலும் முத்துப்பேட்டை பேரூராட்சி யில் ஆட்கள் பற்றாக் குறையை அதிகப் படுத்த முயர்த்சிப்பேன் என்றும், ஒவ்வொரு வார்டில் உள்ள குறைகளை கண்டறிய பொது மக்களிடம் குறைகள் கேட்க மக்களிடம் காலை 6 மணி முதல் 10 மணி வரை நேரிலே சென்று குறைகளை கேட்டு அதை நிறைவேற்ற பாடுபடுவேன். மேலும் கடந்த ௧௫ வருடம் கவுன்சிலராக இருந்து பணியாற்றிய அனுபவம் இருப்பதால் அவற்றை முளுமைபட பாடுபடுவேன் என்றும், முத்துப்பேட்டை பேரூராட்சியில் எந்த ஒரு ஊழலும் நடக்காமல் இருக்க மிக கவனமாக இருப்பேன் என்றும், முத்துப்பேட்டை மக்களுக்காக நவீன கழிப்பறை உறுதி செய்து தரப்படும் என்றும் அவர் கூறினார்.
source from muthupettai express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்.ASNS .அப்துல் பாரி.EK . முனவ்வர் கான். AKL. அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டை பேரூராட்சி 15 வது வார்டுக்கு சுயேட்சையாக தம்பிமரைகையர் போட்டி !




முத்துப்பேட்டை,அக்டோபர் 07 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை 15 வது வார்டுக்கு உறுபினராக சுயேச்சையாக தென்னைமரம் சின்னத்தில் கோல்டன் S .தம்பிமரைகையர் அவர்கள் போட்டியிடப் போவதாக அவர் தெருவித்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், நமது வார்டு எல்லா நிலைகளிலும் ஏற்றம் பெறவும் எல்லா வார்டுகளிலும் எடுத்துக் காட்டாக திகல்திடவும் ஊழலுக்கு இடம் கொடுக்காமல் உண்மையாக பாடு பட்டு பணிசெய்வேன் என்றும், குறிப்பாக நமது வார்டில் பாதாள சாக்கடைத் திட்டத்தை முறையாக கொண்டு வரவும் தட்டுப் பாடு இல்லாமல் முறையாக குடிதண்ணீர் கிடைக்கவும், தேவையான நேரத்தில் தேவையானதை செய்திட முயற்சிப்பேன் என்றும் அவர் தெருவித்தார். அகவே எனக்கு அதிக படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Source from muththupettai
தொகுப்பு.
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.

முத்துப்பேட்டை பேரூராட்சி 13 வது வார்டுக்கு சுயேட்சையாக முஹம்மத் உமர் முக்தர் போட்டி !


முத்துப்பேட்டை,அக்டோபர் 07 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை 13 வது வார்டுக்கு உறுபினராக சுயேச்சையாக வைரம் சின்னத்தில் வழக்கறிஞர் முஹம்மத் உமர் முக்தர் அவர்கள் போட்டியிடப் போவதாக அவர் தெருவித்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், எனது வார்டு மக்களுக்காக கடுமையாக உழைப்பேன் என்றும், அவர்களின் குறைகளை எந்த நேரமும் பார்க்காமல் அவற்றை நிறைவேற்றி கொடுப்பேன் என்றும், மக்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் எனது வார்டுக்கு பெற்றுக் கொடுப்பேன் என்றும் அகவே எனக்கு அதிக படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Source from muththupettai
தொகுப்பு.
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.

மவுத்து அறிவிப்பு:"ஊன.மூனா. ஷாகுல் ஹமீது"



முத்துப்பேட்டை, அக்டோபர் 07 : முஹைதீன் பள்ளி தெரு மர்ஹும் ஊன.மூனா.முஹம்மத் சதகத்துல்லாஹ் ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹும் ஊன.மூனா. நெய்னா முஹம்மத் அவர்களின் சகோதரரும், மர்ஹும் மு.க. முஹைதீன் பக்கீர் அவர்களின் மருமகனும், S . ஹபீப் கான் அவர்களின் தகப்பனாருமாகிய, "ஊன.மூனா. ஷாகுல் ஹமீது" அவர்கள் இரவு 9 .30 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னாஹ் லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப் படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்

S .ஹபீப் கான் அவர்கள்.

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு அ.அப்துல் சலீம் போட்டி:வி.சி தகவல்!!!




முத்துப்பேட்டை, அக்டோபர் 06 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக அ. அப்துல் சலீம் அவர்கள் போட்டியிடப் போவதாக விடுதலை சிறுத்தை கட்சி தெருவித்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்டக் கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், முத்துப்பேட்டை பேரூராட்சி உட்பட அணைத்து வார்டுகளிலும் குடியிருக்கும் குடிமனைப்பட்டா இல்லாதவர்களுக்கு குடிமனைப் பட்ட வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றும், முத்துப்பேட்டையில் மின்தடை இடையூரை தடுக்க (110 கிலோ வாட் ) 1/10 பவர் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முத்துப்பேட்டை அனைத்து வார்டுகளிலும் இலவச கழிவறைகள் கட்டி பேரூராட்சி பராமரிப்பில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெருவித்தார். மேலும் குடிதண்ணீர் வசதி, தெருவிளக்கு வசதி அனைத்து வார்டுகளிலும் உள்ள தெருக்களுக்கு குறைகள் இல்லாதபடி தினந்தோறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பேரூராட்சி உட்பட்ட அனைத்து குளம், குட்டைகளையும் ஆய்வு செய்து பொது மக்கள் பயன்பெரும் வகையில் நடைமுறை படுத்தப்படும் என்றும், முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் மருத்துவர்களைக் கொண்டு இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மக்கள் குடியிருக்கும் தெருக்களில் (சாலைகளிலும்) மழைநீர் தேங்கமல் வடிக்கால் அமைத்து தரப்படும் என்றும்,முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பொது வழிப்பாட்டு தளங்களுக்கும் சோடியம் லைட் வசதி செய்து தரப்படும், அரசு வழங்கும் நிவாரணங்கள் மற்றும் சலுகைகள் அனைத்தும் உரியவரிடம் முழுமையாக வழங்கப்படும் என்றும் அவர் தெருவித்தார். முத்துப்பேட்டை நகரத்தை தாலுக்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆதரவற்ற முதியோர்களுக்கு இலவச சிகிச்சை மற்றும் முதியோர் இல்லம் பராமரிப்பு செய்து தரப்படும் என்றும், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற சமுதாய கூடங்கள் அமைத்து தர ஆவன செய்யப்படும் என்றும் அப்போது அவர் தெருவித்தார்.
Source from muthupettai express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ். ASNS .அப்துல் பரி.EK . முனவ்வர் கான். அபு மர்வா (துபாய்)

முத்துப்பேட்டை பேரூராட்சி 8 வது வார்டுக்கு SDPI சார்பாக பஜாரிய அம்மாள் போட்டி!!



முத்துப்பேட்டை, அக்டோபர் 06 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை 8 வது வார்டுக்கு உறுபினராக சோசியல் டெமோக்ரடிக் கட்சி (SDPI ) சார்பாக தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிடும் அ.பஜாரிய அம்மாள் அவர்கள் போட்டி இடுகிறார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நான் வெற்றி பெற்றால் நமது வார்டுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன் என்றும், பெண்களுக்கு பொது நவீன கழிப்பறை கட்டித் தர முயற்ச்சி செய்வேன் என்றும், முதியோர், விதவைப் பெண்களுக்கு பென்சன் பெற தகுதி உள்ளவர்களுக்கு பெற்று தர பாடு படுவேன் என்றும் அனைத்து வடிகால்கலையும் புதிபித்து vadikkal வசதி செய்து தருவேன் என்றும் அவர் தெருவித்தார். மேலும் குடிநீர் வசதி இல்லாத அனைத்து தெருக்களிலும், குடிநீர் வசதி செய்து தருவேன் என்றும், அடிப்பைப்பு பொது குடிநீர் குழாய் தெருக்களுக்கு உடனடியாக அடிபைப்பு குடிநீர் குழாய் அமைத்து தருவேன் என்றும், கொத்பா பள்ளி எதிபுரம் உள்ள ஆண்கள் படித்துரயையும், பெண்கள் படித்துரயையும் புது பொலிவுடன் கட்டித் தர பாடுபடுவேன் என்றும், கொத்பா பள்ளி மய்யத்தாங் கொள்ளையில் சோடியம் விளக்கு வசதி செய்து தருவேன் என்றும், அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பேன் என்றும் சமுதாய பொது பணிகளையும் தொடர்ந்து தொய்வின்றி செய்து தருவேன் என்றும் அவர் தெருவித்தார்.
Source from muthupettai express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ். ASNS .அப்துல் பரி.EK . முனவ்வர் கான். RAR .அப்துல் ரஹ்மான்,

முத்துப்பேட்டை பேரூராட்சி 8 வார்டுக்கு M .ஷாஜஹான் பீவி இரட்டை இலை சின்னத்தில் போட்டி!!



முத்துப்பேட்டை, அக்டோபர் 06 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை 8 வது வார்டுக்கு உறுபினராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. ந.து.செ. ஜ. மைநுர்தீன் (லக்கி கேபிள் விசன் ) அவர்களின் தங்கை மு. ஷாஜஹான் பீவி அவர்கள் போட்டி இடுகிறார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சிலர் சொல்வதை செய்ய மாட்டார்கள், அனால் நான் சொல்லாமலே செய்து முடிப்பேன் என்றும், மேலும் முத்துப்பேட்டை 8 வது வார்டு மக்களுக்கு அதிகமான நன்மைகளை செய்து தருவேன் என்றும், அவர் தெருவித்தார். எனவே என்னை அதிக படியான வாக்கு வித்தியாசலத்தில் வெற்றி பெற செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
source from muthupettai express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ். ASNS .அப்துல் பரி.EK . முனவ்வர் கான். லக்கி சித்திக் அஹ்மத்

முத்துப்பேட்டை பேரூராட்சி 7 வது வார்டுக்கு ஜபருல்லா போட்டி:


முத்துப்பேட்டை, அக்டோபர் 06 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற 7 வது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு சுயேட்சையாக போட்டியிடும் மு.ஜபருல்லா அவர்களுக்கு தண்ணீர் குழாய் சின்னம் அதுக்கபட்டுள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் எனதல நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், கடந்த 5 ஆண்டுகளாக 7 வது வார்டின் அனைத்து பகுதிகளையும் சுத்தமாக வைத்து பராமரித்ததை போல், சுத்தமான சுகாதரமான பகுதியாக தொடர்ந்து பராமரிப்பு செய்வேன் என்றும், முதியோர் உதவி தொகை, விதவை பென்சன் ஆகியன கிடைக்க முயற்ச்சி செய்வேன் என்றும், சீர்கெட்டு கிடக்கும் வடிகால்களை சீர் செய்தும் வடிகால் வசதி இல்லாத பகுதிகளுக்கு வடிகால் வசதி செய்து தர பாடுபடுவேன் என்றும், டெண்டர் விடப்பட்டு வேலை நடக்காமல் உள்ள சிமென்ட் சாலைகளை உடனே வேலை தொடங்க முயற்ச்சி செய்வேன் என்று அவர் தெருவித்தார். மேலும் இதனை ஏற்று என்னை அதிகபடியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
Source from muthupettai Express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி.EK .முனவ்வர் கான். RAR .அப்துல் ரஹ்மான்

துபாய் அமீரக வாழ் முத்துப்பேட்டை சகோதரர்கள் பேரூராட்சி தேர்தலில் ம.ம.க வுக்கு ஆதரவு!!




துபாய், அக்டோபர் 04 : சார்ஜா மு.மு.க மர்கசில் முத்துப்பேட்டை பேரூராட்சி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற தலைப்பில் முத்துப்பேட்டை சகோதரர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் மேலே உள்ள தலைப்பின் கீழ் அனைத்து சகோதர்களிடமும் கருத்து கேட்கப் பட்டு விவாதம் நடைபெற்றது. இதில் சமீபகாலமாக அரசியலில் எழுச்சிபெற்று வரும் மனித நேய மக்கள் கட்சியின் சமுதாய பணிகளையும், கடந்த கால சமூக பனி மற்றும் சமுதாய சேவைகளையும் கருத்தில் கொண்டதோடும், அந்தந பேரூராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் மாஷா மைலிக் என்று அழைக்கப்படும் ஜனாப முஹம்மத் மாலிக் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றிவரும் தன்னலமற்ற சமுதாய சேவைகளை பற்றியும் அலசி ஆராய்ந்து எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் நமது முத்துப்பேட்டை சகோதரர்கள் ம.ம.க வேட்பாளர் முஹம்மத் மாலிக் அவர்களை ஆதரிப்பது என்று ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதனை கருத்தில் கொண்டு முத்துப்பேட்டை சகோதரர்கள் அனைவரும் நமது வேட்பாளர் முஹம்மத் மாலிக் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெரவைப்போம். மேலும் இந்த கூட்டத்தில் அமீரகத்தில் வாழும் நமது ஊர் சகோதரர்களை தொடர்புகொண்டும், நேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டாலும் மாலிக் அவர்களுக்கு வாக்கு சேகரிப்பது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவரின் வெற்றிக்கு அனைத்து முத்துப்பேட்டை மக்களும் துவா செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு.
அமீரக வாழ் முத்துப்பேட்டை சகோதரர்கள்...

நமது நிருபர்

இனிய இளவல்(துபாய்)

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு நியூ மெடிக்கல் சகாப்தீன் போட்டி!



முத்துப்பேட்டை, அக்டோபர் 04 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளாரான நியூ மெடிக்கல் சகாப்தீன் அவர்கள் போட்டியிட போவதாக அவர் தெருவித்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நிருபர் கேட்ட கேள்விக்கு. பின்னர் பதிலளித்த அவர். முத்துப்பேட்டை மக்களுக்கு குடிநீர் இருவேளையும் கிடைக்க கடுமையாக முயர்த்சிப்பேன் என்றும், எரிவாய்வு எந்த தடங்களும் இல்லாமல் விநியோகம் செய்ய முழு ஏற்பாடு செய்வேன் என்று அவர் தெருவித்தார். முத்துப்பேட்டை மேன்கள் தற்போது வெளிவூரில் சென்று படித்து வருவதை மாற்றி உள்ளூரிலேயே அவர்கள் படிக்க பெண்களுக்கென ஒரு தனி கல்லூரி அமைக்க அரசோ, அல்லது தனியரிடமோ முயற்ச்சி செய்து அவற்றை நிறைவேற்ற பாடுபடுவேன், முத்துப்ப்ட்டைஈல் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டால் பல்வேறு வர்த்தகங்கள் பாதிக்கப் பட்டு வருவதால் இதனை ந்தானே தடை இன்றி கிடைக்க பாடுபடுவேன் என்றும் அவர் தெருவித்தார். மேலும் தகுதிஉள்ள மாணவர்கள் பெற்படிப்பிற்காக வெளிநாடு சென்று படிக்க ஜாதி மத வேறுபாடின்றி அதற்கான வழிமுறைகளை செய்வேன். முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் தண்ணீர் வசதி, சாலைவசதி, மிசார வசதி. இல்லாமல் இருப்பதை ஆராய்ந்து அதற்க்கு தக்க நடவடிக்கை எடுத்து உடனே அமல் படுத்துவேன் என்றும், முத்துப்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயிலில் போக்கு வரத்து தடை செய்யப் பட்டுள்ளதை மீண்டும் அகல ரயில் பதாக தொடங்க அதற்குண்டான துறையை அணுகி அதனை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றும் அப்போது அவர் தெருவித்தார். விநாயகர் சதுர்த்தி அன்று வியாபாரிகள் கடைகளை அடைப்பதினால் மக்கள் பொருட்கள் வாங்குவதற்கு சிரமபடுகிரார்கள், அந்த நிலை மாற்றி சுமூகமான முறையில் ஊர்வலத்தை நடத்தி தர சம்மந்தப்பட்ட வர்களை அணுகி ஒத்துழைப்பு கோரி ஊர்வலம் செல்லும் பொது கூட கடைகளும் திறந்து இருக்க ஏற்பாடுகள் செய்வேன். அப்போது மைதீன் மாமா என்கிற முஹம்ம்மத் மைதீன் அவர்கள் உடனிருந்தார்.
குறிப்பு:
ஜாதி, மத வேறுபாடு அன்றி அனைத்து மக்களிடமும் ஓட்டு வாங்கக் கூடிய எந்த பிரச்சனையும் அல்லாத ஒரே வேட்பாளர் என்பதாலும், ரோட்டரி கிலபின் முன்னால் உறுப்பினர் என்ற காரணத்தினாலும், பல சமூக சேவை செய்திருப்பதாலும் காங்கிரஸ், ம.தி.மு.க அதரவு தந்து எல்லா தரப்பு மக்களின் வாக்குகளை சேகரிக்க பாடுபடுவார்கள். மேலும் இவர் கடந்த 43 ஆண்டுகள் தி.மு.க வில் நிலையாக இருந்து எந்த பதவியையும், பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தனது திறன்பட செய்து வந்த அவருக்கு முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு முனு செய்தும் மறுக்கப் பட்டதால், பல பேருடைய வேண்டுதலுக் கிணங்க சுயேட்சையாக இருபெறம் கட்சிகளின் ஒத்துளைப் போடு கைபம்பு சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
Source from muthupettai express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.

முத்துப்பேட்டை பேரூராட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரின் பட்டியல்!



முத்துப்பேட்டை, அக்டோபர் 04 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சியின் வார்டு எண்: 01 முதல் 18 வரைக்கான தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் கீழ் வருமாறு.

போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்:

1 ) அபூபக்கர் சித்திக். 8 , ஆசாத் நகர் முத்துப்பேட்டை. இவருக்கு (கை கடிகாரம்) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

2 ) அப்துல் சலீம், கோவிலன் தோப்பு, செம்படவன்காடு முத்துப்பேட்டை.இவருக்கு (பேட்டரி விளக்கு) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

3 ) அருணாச்சலம், செம்படவன்காடு முத்துப்பேட்டை. இவருக்கு (இரட்டை இல்லை) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

4 ) சகாபுதீன், குண்டாங்குலத் தெரு முத்துப்பேட்டை. இவருக்கு (கைபம்பு) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

5 ) சிவகுமார், எஸ்.வி. தெரு பேட்டை முத்துப்பேட்டை. இவருக்கு (தாமரை) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

6 ) தமீம், ரஹ்மத் நகர் முத்துப்பேட்டை. இவருக்கு (உதய சூரியன்) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

௭) பத்மநாதன், கொசாகுலத் தெரு முத்துப்பேட்டை. இவருக்கு (முரசு) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

8 ) முகைதீன் அடுமை, திருத்துறைப் பூண்டி ரோடு முத்துப்பேட்டை. இவருக்கு (சாய்வு மேசை) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

9 ) முஹம்மத் மாலிக், கோதப பள்ளி சந்து முத்துப்பேட்டை. இவருக்கு (பேருந்து) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

10 ) லெப்பை தம்பி.SMM காளியம்மன் கோவில் தெரு முத்துப்பேட்டை. இவருக்கு (கணிப்பொறி) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

11 ) ஜெயச்சந்திரன், மருதன்காவலித் தொப்ப்பு முத்துப்பேட்டை. இவருக்கு (சட்டை) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

12 ) ஹாரூன், ஆசாத் நகர் முத்துப்பேட்டை. இவருக்கு (கோப்பையும் கப்பும்) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

13 ) ஹாஜ மைதீன், பகுருதீன் கலனை, காளியம்மன் கோவில் தெரு முத்துப்பேட்டை. இவருக்கு (டிஸ் ஆண்டன) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

குறிப்பு:
இந்த பேரூராட்சி தலைவர் பதவிக்கு மொத்தம் 21 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர், இதில் 8 வேட்பாளர் தனது மனுவை திரும்ப பெற்றனர். மேலும் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 9 முஸ்லிம் வேட்பாளர்களும், 4 இந்து வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்காக அறிவிக்கப் பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் 17.10.2011 ஆம் நாளன்று கலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவுகள் நடை பெரும் என தேர்தல் ஆணையம் தெருவித்துள்ளது.
Source From Muthupettai Express.
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், 

முத்துப்பேட்டையில் SDPI யின் நகர தேர்தல் அலுவலகம் நேற்று திறப்பு!





முத்துப்பேட்டை, அக்டோபர் 04 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் SDPI யின் நகர தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப் பட்டது. இதற்கு சிறப்பு விருந்தினராக துபாய் மண்டல பொறுப்பளார் ஜனாப் யூசுப் சுகைல் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய மனித உரிமை மக்கள் கனநிப்பின் மாநிலத் தலைவர். பசீர் அஹ்மத், பல தியாகங்களை செய்திருக்க கூடிய அபூபக்கர் சித்திக் அவர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்புத் தந்து ஒருத்தியாக செயல் பட்டு வெற்றிக்கனியை பெற வைத்திட அனைவரும் பாடுபட வென்றும் என்று உரை நிகழ்த்தினர். அதற்கு பிறகு பேசிய ம.செ. பாவா பஹுருதீன் அவர்கள் இது சாதாரண விஷயம் அல்ல தேர்தல் என்றால் என்பது திருவிழா என்பார்கள் அனால் நம்மை பொருத்தவரையில் மிக கடினமாக உழைத்து முயற்ச்சி செய்யகூடிய ஒரு போராட்டக் களம் அதை நம்மளுடைய தியாகத்தின் அர்பணிப்பு பொறுத்துதான் வெற்றி என்பது தீர்மானிப்பது, நமக்கு வெற்றிக்கான வாய்ப்பு மிக எளிதாக இருக்கின்றது. ஆனால் அதற்கு கடின உழைப்பு அவசியம் என்று கூறினார். பின்னர் இன்னகழ்ச்சி முடிவின்போது சித்திக் மச்சன் என்கிற அபூபக்கர் சித்திக் அவர்கள் நன்றிவுரை கூறி நிறைவு செய்தார். இதில் தர்ஹா மேனேஜிங் டிரஸ்ட் தலைவர். ஜனாப் SS .பக்கர் அலை சாகிப் அவர்கள். SDPI மாநில தலைவர். தப்ரே ஆலம் பாதுஷா. SDPI ம.செ. பாவா பஹ்ருதீன், நகர தலைவர் ரஹ்மத்துல்லாஹ், து. த. பாசித், ந.இ.செ.நிஜாம், நகர பொறுப்பாளர், நிசார், தமீம் நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Source from muthupettai Express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, EK . முனவ்வர் கான்

முத்துப்பேட்டை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு:


முத்துப்பேட்டை,அக்டோபர் 03 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பேரூராட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் முத்துப்பேட்டையில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர் வேட்பாளரின் பட்டியல் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளரின் இறுதி பட்டியல் நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் நாளை வெளியிடப்படும் என்பதை இதன் மூலம் தெருவித்துக் கொள்கிறேன். எனவே முத்துப்பேட்டை மக்கள் மற்றும் வெளி ஊரு நண்பர்கள் இதற்கு முழு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்.

முத்துப்பேட்டை பேரூராட்சியின் தேர்தல் வாக்குறுதி! மாவட்ட SDPI கட்சி வெளியீடு:


முத்துப்பேட்டை, அக்டோபர் 03 : சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் தேர்தல் பணிக்குழுக் கூட்டம் 01.10.2011 ஆம் தேதியன்று இக்கட்சியின் மாவட்ட தலைவர். தப்ரே ஆழம் பாதுஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.அதில் மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பல முக்கிய பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப் பட்டு, பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சித்திக் மச்சன் என்கிற அ.அபூபகர் சித்திக் அவர்கள் சார்பாக தேர்தல் வாக்குறுதியாக பின் வருபவன் வற்றை செய்து கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் வாக்குறுதிகள்:
1 ) முத்துப்பேட்டை பேரூராட்சியில் சேரக் கூடிய மக்களின் வரிப்பனமான பொது நிதிலிருந்து இறைவன் மீது ஆணையாக ஒரு ருபாய் கூட ஊழல் செய் மாட்டோம்.
2 ) முத்துப்பேட்டை மக்களின் கனவான, முத்துப்பேட்டையை தாலுக்கவாக மாற்றும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசை அணுகி எல்லாவிதமான முயர்த்சிகளும் மேற்கொள்ளப் படும்.
3 ) முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் பணிகள் முடிக்கப் படாமல் உள்ள சிமென்ட் சாலைகளை உடனடியாக விரைந்து பணிகள் நடக்க உரிய நடவடிக்கை எடுப்போம்.
4 ) முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் உடைந்து பழுதான கழிவு நீர் வடிக்கால்களை முன்னுரிமை அடிப்படையில் சீர் செய்து பொது சுகதரத்தை பாதுகாப்போம்.
5 ) வடிக்கால் வசதியில்லாத அனைத்து வார்டுகளிலும் உடனடியாக வடிகால் வசதி அமைய நடவடிக்கை எடுப்பது.
6 ) ஆங்காங்கே சேரும் குப்பை, கூளங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த அதிக கவனம் செலுத்துவது.
7 ) பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க, ஊர் எல்லைக்குள் பன்றிகள் இல்லை என்ற நிலைமையை ஏற்படுத்துவது.
8 ) பேட்டை, செம்படவான்கடு, மருதங்காவளி, தேற்குகாடு மக்களின் குடிநீர் பிரச்சனையை கவனத்தில் கொண்டு புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைப்பது.
9 ) செயல் இலக்கச் செய்யப்பட பரக்கலக்கோட்டை நீரேற்று நிலையத்தை, அவசிய நேரங்களில் பயன்படுத்தும் வகையில் புதுப்பித்து செயல்பட்டு நிலைமைக்கு கொண்டு வந்து தினமும் இருமுறை தண்ணீர் கிடைக்க வழிவகை செய்வது.
10 ) சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம் நடைபெறாமல், சுகாதாரமான குடிநீர் விநியோகம் கிடைக்க ஆவண செய்வது.
11 ) இந்து. முஸ்லிம், கிருஸ்தவ, தலித் மக்களிடயே ஒற்றுமையை ஏற்படுத்தி, முத்துப்பேட்டையை அமைதி பூங்காவாக மாற்றுவோம்.
12 ) பிறப்பு, இறப்பு பதிவேடுகள் பராமரிப்பு முறையை (சப்ரிஜ்ஸ்டர் ஆபிசில் ஒப்படைக்கப் பட்ட பதிவேடுகளை திரும்பப் பெற்று) மக்களை அலைகளிக்காமல் மக்களுக்கான சேவையாக செய்து வருவோம்.
13 ) எந்த காரணம் கொண்டும் (வரிவித்திபு முறையிலும் மக்களுக்கான சேவைகள் கிடைப்பதிலும்) நிர்வாகத்தால் மக்களை அவத்திக்குள்ளக்கும் எவ்வித சிலையும், செய்ய அனுமதிக்க மாட்டோம்.
14 ) பேரூராட்சிக்கு வரவேண்டிய பல லட்ச ரூபாய் வாரக் கடனை வசூல் செய்து, மக்கள் மக்கள் நலத்திட்டங்களை செய்வோம்.
15 ) சொத்து வரி விதிப்பதில் ABC மண்டல பிரிப்பு முறையை அரசாணைபடி மாற்றியமைப்போம், இனி வருங்காலங்களில் எக்காரணம் கொண்டும் சொத்து வரி விதிப்பு உயர்வு செய்ய அனுமதிக்க மாட்டோம்.
16 ) அரசு ஆண்கள், மேன்கள், மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர், மாணவியர், ஆசிரியர் நலன் கருதி குடிநீர், கழிவறை வசதிகளை உடனடியாக செய்து தர முழு முயற்ச்சி எடுப்போம்.
17 ) அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ள மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும், அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி செயல் பட முழு கவனம் செலுத்துவோம்.
18 ) அரசு அறிவிக்கும் அனைத்து வித நலத்திட்டங்களும் (இலவசங்கள் உள்பட) மக்களுக்கு டிரைவில் விடுபடாமல் கிடைக்க முழு கவனம் செலுத்துவோம்.
19 ) பேரூராட்சிக்கு சொந்தமான அனைத்து குளங்களையும் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றி தருவோம்.

இவன்
சோசியல் டெமாக்ரடிக் கட்சி (SDPI)
தேர்தல் பணிக்குழு, முத்துப்பேட்டை
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், அச்ன்ஸ்.அப்துல் பாரி, ஏக.முனவ்வர் கான், அபு மர்வா (துபாய்)

முத்துப்பேட்டை ஒன்றிய குழு உறுபினருக்கு IR . ரவி போட்டி: தே.மு.தி.க. தலைமை தகவல்!!



முத்துப்பேட்டை, அக்டோபர் 03 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு தே.மு.தி.க சார்பில் போட்டியிடப் போவதாக தே.மு.தி.க. தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர். மேலானம்ம குறிச்சி, பெத்தலவின் கோட்டான், கீழ நம்மங்குரிட்சி, மங்களூர், தம்பிக் கோட்டைக் கீழக்காடு, ஆகிய இடங்களில் ஆற்று ஓரமாக இருக்கக் கூடிய குடிசை வாழ் மக்களுக்கு வெல்ல நேரத்தில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதவாறு அவற்றை சுற்றி சுவறுகள் கட்டப்படும் என்றும், மேலும் இதற்கு முறையாக நடவடிக்கை எடுக்கப் பட்டு அந்த கரைகள் சீரமைக்கப்படும் என்றும் அவர் தெருவித்தார். விவசாயம் செய்யக் கூடிய நபர்களுக்கு அவர்களின் தேவைகளை புரிந்து அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அவற்றை பெறுவதற்கு ஏற்பாடு செய்வேன் என்றும், கிராம மக்களின் ஏழை எளிய மாணவ, மாணவியருக்கு கணினி மையம் அமைத்து தரப்படும் என்றும் அவர் தெய்ருவித்தர். பெத்தளக் கோட்டம், நம்மங்குறிச்சி ஆகிய இரு இடங்களுக்கு சாலைகள் சீரமைக்கப் பட்டு பேர்ந்து வசதிகளை அதிகப் படுத்த ஏற்பாடு செய்வேன் என்றும், குடிசை வாழ் மக்களுக்கு மலைகலத்தில் வீடுகளில் தண்ணீர் புகதவரு சுற்றுச் சுவர் அமைத்து தரப் படும் என்றும் அவர் தெய்ருவித்தர். பேலும் பித்தலவான் கோட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சுத்தமான குடிநீர் மற்றும் சுகதரமான களிவறியும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அப்போது அவர் தெய்ருவித்தர்.

தொகுப்பு
ரிபோர்ட்டர் இல்யாஸ், EK . முனவ்வர் கான், N .ராம்குமார் (சிங்கப்பூர்)

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு Ps . பத்மநாபன் போட்டி:தே.மு.தி.க.தகவல்!!!



முத்துப்பேட்டை, அக்டோபர் 03 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு தே.மு.தி.க. வின் நகரச் செயலாளர் திரு. PS. பத்மநாபன் அவர்கள் போட்டியிடப் போவதாக தே.மு.தி.க தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர். முத்துப்பேட்டை நகர மக்களுக்கு மிகவும் முக்கிய அடிப்படை வசதியான சாலை வசதி, மற்றும் நிரந்தரமான குடிநீர் வசதி இவை இரண்டையும் பெறுவதற்கு மிகவும் பாடுபடுவேன் என்றும், மேலும் முத்துப்பேட்டை நகரை சுத்தமாகவும், பசுமை நகரமாக மற்ற கடுமையாக பாடுபடுவேன் என்றும், மத நல்லிணக்க ஒற்றுமையை முத்துப்பேட்டையில் மலர நான் கடுமையாக பாடுபடுவேன் என்றும் அவர் தெருவித்தார். மருதங்காவளி, தேற்குகாடு, மேல்நிலைத் தோப்பு ஆகிய இடங்களுக்கு குடிநீர் முழுமையாக கிடைக்க பாடுபடுவேன் என்றும், தேற்குகாடு ஆரம்ப பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன் என்றும், மேலும் கொய்யா தோப்புக்கு புதிய சாலை வசதி ஏற்பாடு செய்து அதனை தார் சாலையாக அமைத்து கொடுப்பேன் என்றும், முத்துப்பேட்டையை தாலுக்காவாக மற்ற அனைத்து வேலைகளும் நடைமுறைபடுத்த கடுமையாக முயற்சிப்பேன் என்றும், முத்துப்பேட்டையில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் அனைத்தையும் அங்கு சென்று வர ஏற்பாடு செய்வேன் என்றும் அவர் தெருவித்தார்.மேலும் அ.தி.மு.க. உடனான கூட்டணி பற்றி முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர். அ.தி.மு.க. உடனான கூட்டணி குறித்து தற்போது எங்கள் கேப்டன் எந்த ஒரு பதிலும் தர வில்லை என்றும் கேப்டனின் முடிவுதான் எண்களின் முடிவு என்றும் அப்போது அவர் தெருவித்தார். முத்துப்பேட்டை மக்கள் அனைவரும் என்னை ஏற்று வருகிற தேர்தலில் அதிக படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செயுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
Source from Muthupettai Express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK . முனவ்வர் கான்

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு மாஷா மாலிக் போட்டி: ம.ம.க தலைமை தகவல்!!


முத்துப்பேட்டை, அக்டோபர் 02 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் மாஷா மாலிக் என்கிற S . முஹம்மத் மாலிக் போட்டி இடப் போவதாக மனித நேய மக்கள் கட்சி தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், கடந்த 14 ஆண்டுகளாக இன்று வரை சமுதாயப் பணியிலும், முத்துப்பேட்டையின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து TMMK சார்பாக பணியாற்றி வருகிறேன் என்றும், தற்போது நடைபெற இருக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு தான் போட்டி இடுகிறேன் என்றும் அவர் தெருவித்தார். மேலும் தொடர்ந்து மக்கள் சேவையில் TMMK ரத்ததானம், மருத்துவ சேவை, ஆம்புலன்ஸ் சேவை, அனைத்து தரப்பு மக்களிடமும் TMMK வின் சேவைகள் பரவி உள்ளது என்றும் எனவே இந்த தேர்தலில் MMK இன்ஷா அல்லா அமோக வெற்றி பெரும் என்றும் அவர் தெருவித்தார்.மேலும் கடந்த 5 ஆண்டுகாலமாக பேரூராட்சி நிர்வாகத்தின் குறைகள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெருவித்தார். மேலும் MMK கட்சியுடைய தேர்தல் வாக்குறிதிகள் இன்ஷா அல்லா விரைவில் வெளியிடப் படும் என்றும் அப்போது அவர் தெருவித்தார். மேலும் சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க உடனான கூட்டணி வைத்த நீங்கள் ஏன் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அ.தி.மு.க உடன் கூட்டணி வைக்க வில்லை என்ற முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர். ச.ம.தேர்தலில் அ.தி.மு.க உடன் கூட்டணி வைத்து உண்மைதான் எனினும், முஸ்லிம்களின் பிரதிநிதித்த்துவத்தை அதிகப்படுத்துவது தான் MMK வின் நோக்கம் என்றும், அந்த நோக்கத்தை சிதைக்கும் விதமாக நாங்கள் கோரிய இடங்கள் முழுமையாக அ.தி.மு.க தலைமை ஒதுக்காததால் தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டி இடுகின்றோம். மக்கள் சேவையில் சாதி மதம் வேறுபாடின்றி செயல்படும் மனித நேய மக்கள் கட்சிக்கு முத்துப்பேட்டை மக்கள் அனைவரும் ஆதரவு தந்து வெற்றிப் பெறச்செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,ஊழலற்ற உள்ளாட்சி அதுவே "மனித நேய மக்கள் கட்சியின்" மனசாட்சி என்று அவர் தெருவித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நகர தலைவர். M . சம்சுதீன் உடனிருந்தார்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, அபு மர்வா (துபாய்)

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு கி. முஹைதீன் அடிமை போட்டி: இ.யூ.மு.லீ, தகவல்!!!


முத்துப்பேட்டை, அக்டோபர் 02 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவருக்கு பதவிக்கு போட்டியிட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைமை என்னை பணிந்துள்ளது என்று கட்சியின் வேட்பாளரும், கட்சியின் மாவட்ட செயலாளருமாகிய கி. முஹைதீன் அடுமை தெருவித்துள்ளார். இதுகுறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர். முத்துப்பேட்டை நகர மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் அனைத்தும் தாமதமின்றி செய்து கொடுப்பேன் என்றும்,நான் அரசியல் வாழ்கையில் இ.யூ.மு.லீக்கில் 42 ஆண்டுகாலம் ஜாதிமத பேதமின்றி தான் பாடு பட்டு வருவதாகவும், குறிப்பாக மாநில மத்திய அரசு நலத் திட்ட உதவிகளை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்தந்த திட்டங்களை நிறைவேற்றி கொடுத்திருக்கிறேன் என்றும் அவர் தெருவித்தார். மேலும் கல்வியின் பிளிப்புனர்வை முத்துப்பேட்டை மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்த மேலும் ஏழை மாணவ மாணவிகளுக்கு ப அறக்கட்டளை மூலமாக உதவிகளையும், மேலும் அவர்கள் மேல்படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வந்துள்ளேன் என்றும் அவர் தெருவித்தார். தமிழ் நாடு ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்வோருக்கு குழுக்கள் மூலமாக தேர்ந்தெடுப்பதற்கு அவர்களுக்கு சிரமமின்றி அவர்களுக்கு பாடுபட்டு வருகிறேன் என்றும் தெருவித்தார். மேலும் தி.மு.க. உடனான கூட்டணி பற்றி முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த 10 ஆம் தேதி அன்று ஆடுதுறை அடுத்து திருமங்கலக் குடியில் முஸ்லிம் லீக்கின் முதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுத்ததில், தி.மு.க கட்சியுடன் முஸ்லிம் லீக் தொடர்ந்து கூட்டணி வைக்கும் என்றும் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 10 % விழுக்காடு முஸ்லிகளுக்கு ஒதுக்கி தரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டு முஸ்லிம் லீக் தமக்கு வாய்ப்புள்ள இடங்களில் அவற்றை பெற்றுத்தர வேண்டி அவர்களிடம் தீர்மானம் நிறைவேற்றப் பட்டன. அவற்றை தி.மு.க. தலைவர் கலைங்கருக்கும் அந்த தீர்மானம் அனுப்பி உள்ளோம் என்றும் அவர் தெருவித்தார்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ். ASNS .அப்துல் பாரி, EK . முனவ்வர் கான்

துபாய் வாழ் முத்துப்பேட்டை நண்பர்கள் பேரூராட்சி தேர்தலில் SDPI க்கு ஆதரவு!!



துபாய், அக்டோபர் 02 : துபாய் ஹோர் அல் அன்ஜ் முத்துப்பேட்டை நண்பர்கள் ரூமில் நடை பெற்ற கூட்டத்தில் நமதூர் ஊராட்சி மன்ற தேர்தலில் யாருக்கு நமது வாக்கு என்ற தலைப்பில் விவாதிக்க பட்டது அதில் தேர்தலில் பங்குபெறும் அணைத்து சகோதர்களும் நல்ல நிய்யதோடு செயல் படுகிரவர்கல்தான் என்றும் அதே சமயத்தில் கடந்த சில ஆண்டுகளாக சமுதாயத்திற்காக சிறப்பாக செயல் படுபவர் யார் என்று அனைவரிடமும் தனி தனியாக கேட்டு, ஒருமனதாக முடிவெடுக்கபட்டது அதில் மச்சான் என்று அழைக்கப்படும் எஸ் டி பி ஐயின் வேட்பாளர் அபு பக்கர் சித்திக் அவர்கள் தான் நமதூருக்கு சரியான வேட்பாளர் என்று முத்துப்பேட்டை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்துள்ளனர் ஆகையால் முத்துப்பேட்டை வாசிகள் அனைவரும் நமது வேட்பாளர் சித்திக் அவர்களுக்கு வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் இங்கு அணைத்து ரூமிற்கும் சென்று எடுத்து சொல்வதற்காக ஒரு கமிட்டியும் தேர்ந்தெடுத்துள்ளனர். இப்படிக்கு கடல் கடந்து வாழும் முத்துப்பேட்டை நலன் விரும்பிகள்.
source from muthupettai express

நமது நிருபர்

தண்டைய (எ) ஷாகுல் ஹமீது ( துபாய் )

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளரின் பேட்டி!


முத்துப்பேட்டை, அக்டோபர் 02 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட அ.தி.மு.க. தலைமை என்னை பணிந்துள்ளது என்று கட்சியின் நகரச் செயலாளரும், வேட்பாலருமாகிய கோ. அருணாச்சலம் தெருவித்துள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர். அ.தி.மு.க. அரசு தற்போது ஆட்சியில் இருப்பதால் அந்த அரசு மக்களுக்கு செய்யும் பல்வேறு நலத்திட்டங்களை முத்துப்பேட்டை மக்களுக்கு மிக எளிதில் கிடைக்க மிகவும் பாடுபடுவேன் என்றும் அதில் எந்த ஒரு பாரபட்சமும் பார்க்க மாட்டேன் என்றும் அவர் தெருவித்தார். மேலும் முத்துப்பேட்டை மக்களுக்கு இருக்கின்ற அடிப்படையான பிரச்சனை என்னவெனில் குடிநீர் பிரச்சனை தான், அதில் 18 ஆயிரம் மக்களுக்கு 18 லட்சம் லிட்டர் தேவைபடுகின்றது. தற்சமயம் 9 லட்சம் லிட்டர் தான் குடிநீர் வடிகால் வாரியத்தால் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இரண்டு மேல்நிலைத்தொட்டிகள் முத்துப்பேட்டையில் கட்டுவதற்கான செயல்களை செய்யப் போவதாகவும், அவர் தெருவித்தார். மேலும் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள மக்கள் குறுப்பிட்ட அளவிற்கு மேற்பட்ட மக்கள் வெளிநாட்டில் இருப்பதால் கியாஸ் பெறுவதற்கு கூடுதல் செலவு செய்து இடைதரகர் மூலம் பெற்று வருகின்றனர் என்றும், இதனை அரசுக்கு நான் வகிக்கின்ற பல்வேறு பொறுப்புகளின் அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து கேட்ட தின் விளைவாக கேஸ் ஏஜென்ட்டை முத்துப்பேட்டைக்கு வளங்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டையில் முதன் முதலில் STD உருவாக்கித்தந்ததும் முத்துப்பேட்டையில் 33 KV தடையற்ற மின்சாரம் கிடைக்க இங்கு மின்சார துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. மேலும் 100 KV துணை மின்நிலையம் அமைக்க பவேறு வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெருவித்தார். மேலும் முத்துப்பேட்டைக்கு பாதாள சாக்கடை திட்டத்தை அரசுக்கு கொண்டு சென்றுள்ளேன் என்றும் தெருவித்தார். முத்துப்பேட்டையை சுற்றுலாத் தலமாக மற்ற கண்டனத 10 ஆண்டுகளாக முழு மூச்சாக செயல் பட்டு வருவதாகவும், மேலும் சிறுபான்மை உடைய சொத்து, நலன்கள் ஆகியவிகள் பாதிக்கப் படாத வண்ணம் 38 ஆண்டுகளாக பாடுபட்ட வந்த நான் வருகின்ற காலங்களிலும் அந்த நிலையை பேணுவேன் என்றும் அவர் தெருவித்தார்.

Source from muthupettai express

தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ். EK.முனவ்வர் கான்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)