முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முஸ்லீம்கள் மீது பழி போடுவதை ஆர்.எஸ்.எஸ்.நிறுத்திக் கொள்ள வேண்டும் !!!

கடந்த வாரம் வேலூரில் ஆர்.எஸ்.எஸ்.மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் படுகொலையைத் தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 90 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளதற்கான புள்ளி விவரங்களை காவல்துறை வைத்துள்ளது.

குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் படுகொலையின் பின்னணியில் முஸ்லிம் அமைப்பினரே இருப்பதாக ரமகோபாலன் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இதில் வெள்ளையப்பனின் படுகொலையிலும் அது பிரதிபலித்துள்ளது. கடந்த சில நாட்களாக 'லவ் ஜிஹாத்' திற்கு எதிராக வெள்ளையப்பனின் கடும் எச்சரிக்கையே அவரின் படுகொலைக்குக் காரணம் என்று முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ்.

ஆனால் வேறு கோணங்களில் ஏன் இவர்கள் சிந்திப்பதில்லை என்று தெரியவில்லை. இந்து முன்னணியினருக்கு வேறு எதிரிகளே இல்லையா? அவர்களும் மனிதர்கள் தானே.! வட்டி, சொத்துப் பிரச்சனை, இன்னபிற தொடர்புகளில் எதிரிகள் எல்லோருக்கும் உண்டு.

ஆனால் மதப் பிரச்சனைதான் ஒரு மதம் சார்ந்த அமைப்பினரின் மரணத்திற்கு காரணம் என்று கூறுவதை முதலில் தவிற்க வேண்டும். எதிரிகளை அருகில் வைத்துக் கொண்டு எங்கேயோ தேடுவதுதான் தற்போதைய பல இழப்புகளுக்குக் காரணம். இது இந்து அமைப்பினர் என்று இல்லை. எல்லா அமைப்பினருக்கும் இது பொருந்தும்.

இந்தியா, ஜூலை 12: எதிரி இவனாகத்தான் இருக்கக் கூடும் என்று தன் பார்வை வேறொரு புறம் இருக்க உண்மையான எதிரி இதை சாதகமாகப் பயன் படுத்தி வெற்றி பெற்றுவிடுகிறான். இதை ஏன் நம் மக்கள் உணர்வதில்லை?

முஸ்லிம்களை சினிமா உள்ளிட்ட மீடியாக்கள் ஒட்டுமொத்தமாக தீவிரவாதியாக குத்தகை எடுத்துள்ளது அதைவிட கொடுமை.

இந்தியாவின் பெருந்தலைவர்களை கொன்றவர்கள் லிஸ்டில் எந்த முஸ்லிமும் இல்லை. காந்தி முதற்கொண்டு ராஜீவ் காந்தி கொல்லப் பட்டது வரையிலான வரலாற்றில் முஸ்லிம் அல்லாதவர்களே கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர்.

தற்போது எங்கு அசம்பாவிதம் நடந்தாலும் அதில் முஸ்லிம்களை சம்மந்தப் படுத்தி திசை

திருப்புவதை அரசு முதற்கொண்டு செய்து வருகிறது.

ஏறகனவே பல ரூபங்களில் பழியை தாங்கி நிற்கும் முஸ்லிம்கள். தன் மீதுதான் பழி வரும் என்று அறிந்தும் இதுபோன்ற காரியங்களில் இறங்குவார்களா? என்ற நுண் அறிவுகூட இல்லாத அரசும் அதிகாரிகளும் இருக்கும் வரை இழப்புக்கள் தவிர்க்கமுடியாததாகிவிடும்.

கல்வியிலும் ஜாதியிலும் மேலோங்கி நிற்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கவாதிகளுக்குமா இது புரியவில்லை?

முஸ்லிம்கள் மீது பழி போடுவதை முதலில் நிறுத்திவிட்டு உண்மையான குற்றவாளியை கண்டுபிடுக்க முனைப்புடன் களமிறங்க வேண்டியது அரசின் கடமை. பொதுமக்களும் இதில் அரசுக்கு உதவ வேண்டும். ஆர்.எஸ்.எஸும் இதற்கு விதிவிலக்கல்ல.


 தொகுப்பு:ஜே :ஷேக் பரீத் 

டீ கடை பெஞ்ச் : தமுமுக - ஜெயலலிதா: மோதலின் பின்னணி என்ன?







சென்னை, ஜூலை 11: படித்ததில் பிடித்தும்! தெரியாத தகவலும்? பேரணிக்கு தடை ஏன்? சவுக்கு பார்வையில் ”தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தோட கோரிக்கைப் பேரணியை தடை பண்ணிட்டாங்களே.. ஏன் மச்சான் ? எவ்வளவு ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. தப்பு இல்லையா ? ” என்று வருத்தப்பட்டான் அப்துல் காதர்  .

”அதிமுகவோட வாக்குகளையும் வாங்கி 2 எம்.எல்ஏ சீட்டுல ஜெயிச்சு, கனிமொழிக்கு ஆதரவு குடுத்தாங்களே அது தப்பு இல்லையா” என்றான்அப்துல் நாசர்  .


”என்னதான் ஆச்சு… ? ஏன் அனுமதி குடுக்கலை ? ” என்று கேட்டான் ஹபீபுல்லா  .

”அனுமதிக்காக வியாழக்கிழமை காலையிலேர்ந்து தமுமுக நிர்வாகிகள் கமிஷனர் அலுவலகத்துலயே காத்துக் கிடந்தாங்க. எப்படியாவது கமிஷனரை சந்திச்சுடனும்னு முயற்சி பண்ணாங்க. ஆனா, கமிஷனர் இருந்துக்கிட்டே இல்லன்னு சொல்லச் சொல்லிட்டாரு. அரசாங்கத்துலேர்ந்து, பேரணிக்கு அனுமதி குடுக்கக் கூடாதுன்னு உத்தரவு வந்துடுச்சு. ”

”இந்த அளவுக்கு ஏன் ஜெயலலிதா உறுதியான நிலைபாட்டை எடுத்தாங்க.. ? ”

”ஜெயலலிதா தமுமுக, தனக்கு துரோகம் இழைச்சுட்டதா நினைக்கிறாங்க. பெரும்பான்மை இந்துக்களோட விரோதத்தை சந்திச்சுக்கிட்டு, விஸ்வரூபம் படத்தை இஸ்லாமியர்களுக்காக தடை செஞ்சு கெட்ட பேர் வாங்கிக்கிட்டேன். ஆனா, கனிமொழிக்கு ஆதரவு குடுத்து, தனக்கு துரோகம் இழைச்சுட்டதா நெனைக்கிறாங்க”

”சரி.. அந்த ரெண்டு ஓட்டு ஜெயலலிதாவுக்கு அவசியம் இல்லையே.. ”

”அவசியம் இல்லதான்.. ஆனா அந்த ரெண்டு ஓட்டு இல்லாம கனிமொழியும் தோத்துருந்தா, ஜெயலலிதாவுக்கு இரட்டிப்பு சந்தோஷம் இல்லையா ? நான்தான் உன்னை ஜெயிக்க வச்சேன்… இப்போ எதிர் முகாமுக்கு போறியா… நான் ஏன் உன் பேரணிக்கு அனுமதி குடுக்கணும் அப்படின்னு ஜெயலலிதா நெனைக்கிறாங்க

அரசு விதிச்ச தடையை மீறி, தமுமுக பேரணிக்கு நீதிமன்றத்துலயும் அனுமதி கிடைக்காம போனதுக்கு முக்கிய காரணம், தமுமுக அமெரிக்க தூதரகத்துல நடத்துன தாக்குதல். இந்த தாக்குதல் தொடர்பான புகைப்படங்களை பார்த்த நீதிபதிகள்தான், பேரணிக்கு அரசு விதிச்ச தடை சரிதான்னு தீர்ப்பளிச்சாங்க”

”சரி தமுமுகவுல என்ன நினைக்கிறாங்க… ? ”

”பேரணிக்கு அனுமதி குடுக்காததுக்கும், தங்களை அலைக்கழிச்சதுக்கும் சேத்து, கமிஷனர் ஜார்ஜ் மேல கடுமையான கோவத்துல இருக்காங்க… ஜார்ஜுக்கு சரியான பாடம் கத்துக்குடுக்கனும்னு நினைக்கிறாங்க..



தொகுப்பு:

ஜே :ஷேக் பரீத் 

முத்துப்பேட்டையில் வி.சி பிரமுகரை வெட்டியவனை உடனே கைதுசெய். கிராம மக்கள் சுடுகாட்டில் போராட்டம்






முத்துப்பேட்டை, ஜூலை 11: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடகாட்டை சேர்ந்தவர் வெற்றி (32) இவர் திருவாரூர் மாவட்ட விடுதலைகச் சிறுத்தை கட்சியின் துணைச் செயலாளராக உள்ளார். கடந்த 5-ம் தேதி இரவு முத்துப்பேட்டையிலிருந்து வீட்டுக்கு திரும்பும்போது காரில் வந்த 7 பேரைக்கொண்ட மர்ம கும்பல் வெற்றியை சரமாரியாக வெட்டியது. படுகாயமடைந்த வெற்றி தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதன் எதிரொலியாக அன்றைய தினம் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. 

அதனை தொடர்ந்து போலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரை பிடித்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்யாத காவல் துறையை கண்டித்தும் இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு கோரியும் கம்மாளதெரு உட்பட 3 கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து,வீரப்பன், முருகானந்தம், சுந்தரி, வசந்தா, சரோஜா, முருகேஷ் உட்பட 30 குடும்பத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் குடியேறி போராட்டம் நடத்தினர். 

மேலும் சமையல் செய்தும் சாப்பிட்டனர். இதனால் அப்பகுதியில் மேலும் பதட்டம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருவாய் துறையினரும், உயரதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தி ஈடுபட்டவர்களிடம் சுமூகம் ஏற்பட்டதால் போராட்டம் முடிவுற்றது. 


புத்தகயா குண்டு வெடிப்பு: தமீமுன் அன்சாரி பரபரப்பு பேட்டி...





சென்னை, ஜூலை 09: புத்தர்களின் புதின பூமியாக கருதப்படும் புத்தகயாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற குண்டுவெடிப்பு கடும் கண்டனத்திற்குரியது. ஆரியர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த சீர்திருத்தவாதிதான் புத்தர். இந்தியாவில் புத்த மதம் தான் ஒரு காலத்தில் பெரும்பான்மை மதமாக இருந்தது.


பார்ப்பனீயம் புத்த மதத்திற்குள் ஊடுருவி அதை ஹீனயானம், மஹாயானம் என இரண்டு பிரிவாக உடைத்து. இதில் ஒரு தரப்பு புத்தரை சீர்திருத்தவாதியாக அறிவித்தது. இன்னொரு பிரிவு அவரை கடவுளாக அறிவித்தது.

பிறகு பார்ப்பனியம் புத்த மதத்தை மெல்ல அழித்து புத்தரை விஷ்ணுவின் அவதாரம் என்று கூறியது. இந்தியாவில் பார்ப்பனர்களால் பலவீனமடைந்த புத்த மதம் சீனா, ஜப்பான், பர்மா, கொரியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவியது.

இன்று கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்திற்கு அடுத்த பெரிய மதம் எண்ணிக்கையின் அடிப்படையில் புத்த மதம்தான்.

உலகெங்கும் வாழும் புத்தர்கள் புத்தர் ஞானம் பெற்றதாக கூறப்படும் போதி மரம் நிற்கும் பீகார் மாநிலத்தில் இருக்கும் கயாவிற்குதான் வருகை தருகின்றனர்.

அங்கு நடைபெற்ற குண்டு வெடிப்பு நுட்பமான பின்னணியில் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் புத்தர்களால் முஸ்லிம்கள் தாக்கப்படும் நிலையில் இச்சம்பவத்தை முஸ்லிம் அமைப்புகள் தான் செய்திருக்க வேண்டும் என தினமணி, Times of India போன்ற ஏடுகள் விஷத்தை கக்கி இருக்கின்றன.

இதற்கு பின்னணியில் RSS இன் ஆதரவோடு செயல்படுவதாக கூறப்படும் அபினவ் பாரத் என்ற பயங்கரவாத அமைப்பை கூர்ந்து புலன் விசாரணை செய்ய வேண்டும். காரணம் நேற்று இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக காவி பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஒருவரின் அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு புலனாய்வு துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

எனவே, முற்போக்கு பார்ப்பனராக தன்னை காட்டி கொள்ளும் தினமணி ஆசிரியர் சற்று நிதானமாக, நடுநிலையாக தங்கள் தலையங்கத்தில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

புத்தர் பார்ப்பனியத்திற்கு எதிராக கழகம் செய்தவர். அவர் பீகாரில் பிறந்த ஒரு பெரியார். அவர்களது கருத்துக்களோடு கொள்கை அளவில் பல மாறுபாடுகள் நமக்கு உண்டு. அதே நேரம், பர்மா, இலங்கையை தவிர மற்ற ஏராளமான புத்த நாடுகளில் முஸ்லிம்களும், புத்தர்களும் சகோதரர்களாக வாழ்கிறார்கள்.

அந்த உறவை பாழ்படுத்து யார் முயற்சி செய்தாலும் அதை கண்டிப்போம். புத்த கயாவில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் உண்மையான பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

அமைதியை குலைக்கும் யாருக்கும் இந்த மண்ணில் இடமில்லை.

முத்துப்பேட்டையில் பெட்டிக்கடை கமால் அவர்களின் கடையில் திடீர் தீ விபத்து!!!



முத்துப்பேட்டை, ஜூலை 09: முத்துப்பேட்டை மஜீதியா தெருவை சார்ந்த கமால்  முஹம்மது அவர்களுக்கு சொந்தமான  வெளிநாட்டு பொருட்கள் விநியோகம் செய்யும் கடையில் திடீர் மின்கசிவு காரணத்தால் அதிகாலை பெரிய கடைத்தெரு மீன் மார்க்கெட் அருகில் உள்ள கடையில் நேற்று முன்தினம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

இதில் அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின இதனுடைய மொத்த இழப்பீடின் பதிப்பு சுமார் 50 ஆயீரம் ஆகும் என்று கடை உரிமையாளர் தெரிவித்தார். 

தொகுப்பு:

பரக்கத்து நிஷா

பூரண குணமடைய பிரார்த்திப்போம்...


முத்துப்பேட்டை, ஜூலை 08: முத்துப்பேட்டை ORG என்ற இணையத்தளத்தின் நிருபரும், சிறந்த சமூக சேவகருமான சகோதரர் அபு ஆஃப்ரீன் என்கிற ரஃபீக் ஜக்கரியா அவர்கள் சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள ஓர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சகோதரர் அபு ஆஃப்ரீன் அவர்களுக்கு விரைவில் பூரண குணமடைய வல்ல இறைவனிடம் அனைவரும் பிரார்த்திப்போம்.

இப்படிக்கு:

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்.

நூர் பள்ளிவாசல் அருகில் உள்ள காடுகளை அப்புறப்படுத்திய அப்பகுதி கவுன்சிலர்


முத்துப்பேட்டை, ஜூலை 08: முத்துப்பேட்டை கல்கெனி தெரு நூர் பள்ளிவாசல் அருகில் கருவைக்காடுகள் நிறைந்து காணப்பட்டன.மேலும் இரயில்வே தண்டவாளம் அருகில் குப்பை கூளமாக காட்சியளித்தது. மேலும் இன்னும் சில நாட்களில் ரமலான் மாதம் துவங்க இருப்பதால் பள்ளிவாசலுக்கு வரும் மக்களுக்கு சிரமமாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்ற முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் துப்புறவு பணியாளர்களை கொண்டு அப்பகுதிகளில் உள்ள கருவைக்காடுகளை அகற்றி, குப்பைக் கூளங்களை சுத்தம் செய்தனர். மேலும் ரமலான் மாதம் முழுவதும் இந்த பகுதியை தினமும் சுத்தம் செய்யப்பட்டு பிளிச்சிங் பவுடர் அடிக்கப்படும் என்றார். அப்பகுதி பேரூராட்சி கவுன்சிலர் செய்புநிஷா பகுருதீன். 

முத்துப்பேட்டை நகரில் காசுக்காக உலா வந்த யானை...



முத்துப்பேட்டை, ஜூலை 08: யானையின் பலம் யானைக்கே தெரியாதாம் ஆனால் யானையின் உருவத்தை கண்டு அஞ்சாதவர்கள் யாருமில்லை. எனினும் நமது அருகாமையில் உள்ள நாடான இலங்கையில்  யானைக்கு என தனியாக ஆசிரமம் வைத்து அவற்றை பாதுகாத்தும், கெளரவ படுத்தியும் வருகிறார்கள். 

நமது நாட்டில் மிருகவதை சட்டம் அமல் படுத்தப்பட்ட நிலையில் நமதூர் முத்துப்பேட்டையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக வந்த தனியாருக்கு சொந்தமான யானையை வைத்து முத்துப்பேட்டை நகரில் வியாபாரிகளிடமும், பொது மக்களிடம் காசுகளை பெற்றுக்கொண்டு தெருக்களில் உலா வந்தது. இப்படி காசுக்காக ஒரு உயிரினத்தை பிச்சை எடுக்க வைக்கும் யானை பாகன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வாளர்கள் கூறினார்கள்.

தொகுப்பு:

J. பரக்கத்து நிஷா 

முத்துப்பேட்டையில் இளம் பெண்ணை கிண்டல் செய்த 2 வாலிபர் கைது!


முத்துப்பேட்டை, ஜூலை 08: முத்துப்பேட்டை செம்படவான்காடு பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் மகள் பாகாம்பிரியாள் (20) இவர் தஞ்சாவூர் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் குளிப்பதற்காக அருகே உள்ள குளத்திற்கு சென்றபோது  6 இளைஞர்கள் பாகாம்பிரியாளை கிண்டல் செய்துள்ளனர்.

உடனே பாகாம்பிரியாள் இளைஞர்களை தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் பாகாம்பிரியாளை  தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பாகாம்பிரியாள் கொடுத்த புகர் அடிப்படையில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த மிச்வர்கான் (18), எர்சாத் அஹ்மத் (18)  இருவரையும் கைது செய்து மேலும் இதில் சம்பந்தப்பட்டுள்ள 4 இளைஞர்களையும் பொலிசார் தேடிவருகின்றனர். 

தொகுப்பு:

J. பரக்கத்து நிஷா 

விடுதலை சிறுத்தை பிரமுகருக்கு அரிவாள் வெட்டு!!! முத்துப்பேட்டையில் பரபரப்பு!!!





முத்துப்பேட்டை, ஜூலை 08: முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவான் ஓடையை சேர்ந்தவர் வெற்றி (35). இவர் திருவாரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளராக இருந்து வருகிறார். நேற்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் முத்துப்பேட்டைக்கு பொருட்கள் வாங்க வந்தார். பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிரே ஒரு கார் வந்தது. அந்த கார் திடீரென வெற்றி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். 


அந்த சமயத்தில் காரில் இருந்து இறங்கிய 7 பேர் கும்பல் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் வெற்றியை அரிவாளால் சரமாரி வெட்டியது. இதில் அவரது இடதுகை, கால் ஆகியவற்றில் பலத்த வெட்டு விழுந்தது. இது குறித்து முத்துப்பேட்டை போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. குற்ற வாளிகளை கைது செய்ய்க்ககோரி விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் 50 க்கும் மேற்பட்டோர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்கு  வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் முத்துப்பேட்டையில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.



த.மு.மு.க வை சீண்டிப்பார்த்த ஜெயலலிதா!!! தலைநகரம் திணறியது!!!






சென்னை, ஜூலை 07: இறைவனின் பெரும் கிருபையினால் மிக மோசமான அடக்கு முறைகளையும் தாண்டி, காவல்துறையின் அராஜகங்களையும் மீறி, தடையை உடைத்து பல்லாயிரக்கணக்கான தமுமுக வினர் சென்னை எக்மோரில் குழுமினர். 


சென்னை நகரில் வரும் வழியெல்லாம் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தபோதும் காவல்துறையின் கண்களின் மன்னை தூவி விட்டு அவர்கள் சம்பவ இடத்தை நோக்கி விரைந்தனர். பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் வந்திறங்கிய தமுமுகவினரை காவல் துறையினர் கைது செய்து மண்டபங்களுக்கு இழுத்து சென்றனர். 

இதையெல்லாம் மீறி காவல்துறையின் அராஜகங்களை கண்டித்து தமுமுகவினர் நகரின் பல இடங்களின் சாலை மறியல் செய்தனர். ஒரு வழியாக 3 மணிக்கெல்லாம் தக்பீர் முழக்கங்களோடு அதிரடிப்படை போல பாய்ந்து வந்த தமுமுகவினரை தடுக்க முடியாமல் காவல் துறை திணறியது. அடுத்த அரைமணி நேரத்துக்குள் கூட்டத்தின் எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியதும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினர். 

ஆண்களும் பெண்களும் காவல்துறையின் பேருந்துகளில் கைதாகி முழக்கங்களை எழுப்பிக் கொண்டே சென்றனர். காவல் துரையின் மண்டபங்கள் எல்லாம் நிரம்பி வழிந்ததும் இனி எங்களால் கைது செய்ய முடியாது என்று காவல்துறை கூறி விட்டது. உங்கள் மக்களை நீங்களே களைந்து செல்ல சொல்லுங்கள் என்று தலைவர்களிடம் கெஞ்சினர். கூட்டத்தினரோ 6 மணி வரை கலையாமல் அங்கேயே முழக்கமிட்டபடி நின்றனர். தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்ட காவல்துறையினர் தாங்களாகவே கலைந்த பின்னர் தான் மக்கள் கலைந்தனர் என்பது ஒரு புதிய சரித்திரம் ஆகும். 

"புயல் காற்றை தடுத்திட: விஞ்ஞானத்திற்கு வழியில்லை! 
தமுமுகவினரை அடக்கிட: தமிழ்நாட்டில் யாருமில்லை!
வாகனங்களை தடுத்து விட்டால்: வரும் வழி தெரியாதோ!
அடக்கு முறைகளை ஏவினால்: அதை தடுக்கும் முறை தெரியாதோ!

போன்ற முழக்கங்கள் உற்சாகத்தோடு முழங்கப்பட்டன. அப்போது காவல்துறையும், உளவுத்துறையும் தலைகவிழ்ந்து நின்றதை பத்திரிக்கையாளர்கள் மிகுந்த நகைப்போடு ரசித்தனர். 

ஜெயலலிதா நாடாளுமன்ற தேர்தலில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் தனக்கான தோல்வியை தேவை இல்லாமல் ஏற்படுத்திக் கொண்டார் என இப்பேரணியை பார்வையிட்ட மூத்த பத்திரிக்கையாளர் கூறினார்.

தேசிய நெடுஞ்சாலைகள் எங்கும் அனைத்து வாகனங்களையும் தடுத்த நிலையில், ரயிலில் வந்தவர்களையும் கைது செய்த நிலையில் 2000 பேருக்கு மேல உங்களை கூட விட மாட்டோம் என்று சவால் விட்ட சூழலில் தமுமுக வினர் தங்கள் போர் குணத்தின் மூலம் தங்கள் பலத்தை வெளிக்காட்டி உள்ளனர்.

உரிய நேரத்தில் இப்பேரணியை தடை செய்த தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து கலைஞர் வெளியிட்ட அறிக்கை பேரணிக்கு மற்றொரு விளம்பரத்தையும், பலத்தையும் பெற்றுக் கொடுத்தது. 

காட்சி ஊடகங்களான சன்டிவி, கலைஞர் டிவி, மக்கள் டிவி, புதிய தலைமுறை, தந்தி டிவி, பாலிமர் டிவி போன்றவை தடையை மீறி நடந்த பேரணியின் நீளத்தையும் அகலத்தையும் சிலிர்ப்புடன் காட்டி உற்சாகமான வர்ணனைகளை கொடுத்தது குறிப்பிட தக்கது. குறிப்பாக கேப்டன் டிவி ஒன்றரை மணி நேரம் நேரலையாக காட்டியது. 

இப்போது குளுகுளு கொடநாட்டில் கோடை வெயில் கொளுத்துவதாக தெரிகிறது.

யாரோடு மோத வேண்டும் என்ற விவரம் தெரியாமல் மோதியவர்கள் இப்போது தோல்வியை ஒப்புக் கொள்வார்களா?

நாங்கள் காற்றில் உதிரும் புளியம்பூக்கள் அல்ல... காண்டாமிருகத்தின் பிடரியை உலுக்கும் சிங்கக் குட்டிகள்! 

பகை எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் அதை பந்தாடிய பிறகுதான் எங்களுக்கு ஓய்வு என்பது தெரியாதா? இறைவன் பெரியவன்! அவனே அனைத்தையும் தீர்மானிப்பவன்!

மவுத்து அறிவிப்பு: "N.A.ஹாஜா நஜிபுதீன்"


முத்துப்பேட்டை, ஜூலை 06: முத்துப்பேட்டை, புதுத்தெரு P.K.T ரோடு,மர்ஹூம் N.அஹமது உசேன் அவர்களின் மகனும், மர்ஹூம் N.அஹமதுஜலாலுதீன், L.M.முஹம்மதுகாசிம் அவர்களுடைய மருமகனும் N.A.,ரபாயிதீன், N.A.ரஹ்மத்துல்லாஹ், N.A.லியாக்கத் அலி இவர்களுடைய சகோதரரும், J.M.முஹம்மது அலி, J.M.மஜ்ஹர் அலி இவர்களுடைய மச்சானும், களஞ்சியம் ஆட்டோ S.அப்துல் வாஹித் அவர்களுடைய மாமனாரும், H.பரக்கத்துல்லாஹ், H.ஜாகிர் உசேன் ஆகியோரின் தகப்பனாருமாகிய N.A.ஹாஜா நஜிபுதீன் அவர்கள் மவுத்தாகி விட்டார்கள். 

(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்றிரவு வெள்ளிக் கிழமை கொத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


அன்னாரின் உறவினரின் தொடர்புக்கு 
N.A.,ரபாயிதீன் : 00971 – 055 – 3876123
N.A.லியாக்கத் அலி : 00971 – 050 – 8166938
N.A.ரஹ்மத்துல்லாஹ் .... : 0091 95002 53513.
H.பரக்கத்துல்லாஹ் : 0091 – 9842248698
H.ஜாகிர் உசேன் : 0091 – 7200248845

தகவல்: 
ரஷித் அலி - முத்துப்பேட்டை 

4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி முத்துப்பேட்டையில் நடைபெற்ற SDPI ஆர்பாட்டம்




முத்துப்பேட்டை,ஜூலை 05: முத்துப்பேட்டையில் SDPI கட்சி சார்பில் நடைபெற்ற 4 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற S. நிசார் அஹ்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் சிறப்பு விருந்திராக இக்காட்சியின் மாநில பொது குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். அப்போது நடைபெற்ற ஆர்பாட்டத்தின் புகைப்பட காட்சிகள்..

நமது நிருபர்:

இபுராஹிம்...

தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினராக எம்.அப்துல் ரஹ்மான் MP தேர்வு அமீரக காயிதெமில்லத் பேரவை வாழ்த்து.



சென்னை,ஜூலை 02:  தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினராக எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தேர்வு  அமீரக காயிதெமில்லத் பேரவை வாழ்த்து. தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினராக காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்தற்கு அமீரக காயிதெமில்லத் பேரவை வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி,பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா,பொருளாளர் கீழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முஸ்லிம்களின் அன்றாட வாழ்வோடு இரண்டற கலந்திருக்கும் மஸ்ஜித்,மஹல்லா ஜமாஅத் இவைகளின் கண்ணியத்தை ஒற்றுமையோடு நிலை நிறுத்த அயராது பாடுபட்டு வரக்கூடிய பேரியக்கமான தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரதிநிதி வக்ப் நிர்வாகத்திற்கு தேர்வாகி இருப்பது ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹல்லா ஜமாத்துக்களில் ஏற்படும் பிரச்சினைகள்,நிர்வாகத் தேர்தல்களில் குளறுபடிகள், அதிகாரங்களை பயன்படுத்தி வக்ப் சொத்துக்களை தாரை வார்ப்பது போன்ற  நிலைகள் இனி நிகழாது என்கிற நம்பிக்கை சமுதாய மக்களுக்கு மிளிர்ந்திருப்பதை வரக்கூடிய தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

புதிதாக வக்ப் வரிய நிர்வாகத்தில் அடியெடுத்து வைத்துள்ள  நமது சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ்.எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்கள்  சமுதாயம் எதிர்பார்க்கும் பங்களிப்பை சிறப்பாக வழங்க நெஞ்சார வாழ்த்துகிறோம்.



முத்துப்பேட்டையில் 04.07.13 ஆம் தேதி அன்று SDPI சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.





முத்துப்பேட்டை, ஜூலை 02: முத்துப்பேட்டையில் SDPI கட்சி சார்பில் வருகிற 04.07.13 அன்று நான்கு  அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி S நிஷார் தலைமையில் நடைபெற உள்ளது, இதற்க்கு கண்டன உரை நிகழ்த்த இக்கட்சியின் தேசிய பொது குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். அதில் முத்துப்பேட்டையில் நிலவும் குடி தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வலியுறுத்தியும், முத்துப்பேட்டை பேரூராட்சி நிரந்தர செயல் அலுவலரை (E.O) பணியமர்த்த கோரியும், முத்துப்பேட்டை பகுதிகளில் குப்பைகளை அகற்றாமல் தொடரும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும், முத்துப்பேட்டை பகுதிகளில் சாக்கடை பகுதிகளை சுத்தம் செய்யாததை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலருக்கும், திருத்துறைப்பூண்டி வட்டாச்சியர் அலுவலருக்கும் கடிதங்களும் அனுப்பாட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

நமது நிருபர்
i
ஷேக், கபீர்  

சென்னையில் உள்ள ஓர் புதிய நிறுவனத்திற்கு CCTV கேமரா டெக்னிசியன் உடனடி தேவை...


சென்னை, ஜூலை 01: சென்னையில் உள்ள புதிய நிறுவனமான CCTV கேமரா மற்றும் தொழிலுக்கு பாதுகாப்பு அளிக்கும் செகியூரிட்டி ஆண்டி தெப்ட் போன்ற சாதனைகளில் பனியாற்ற உடனடி ஆட்கள் தேவை. இந்த பணிகளில் குறைந்தது ஒருவருடம் அனுபவம் தேவைப்படுகிறது. அவரவரின் பணியை  பார்த்து நல்ல முறையில் சம்பளம் வழங்கப்படும். மேலும் தொடர்புக்கு: நூருல் அமீன், 978 88 07 607

தொகுப்பு:

ஜே. ஷேக் பரீது 

துபாயில் உள்ள சில நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது


துபாய், ஜூலை 01: அன்பார்ந்த முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு துபாயில் உள்ள சில நிறுவனத்திற்கு கீழ் கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது. 

1) A LEADING HOTEL SUPPLIES,
    SALES EXECUTIVE IN (Hotel Supplies Field, Hospitality Supplies),
    3 Years Experience Must,
    Valid: U.A.E Driving license 
தொடர்புக்கு: ahmarzuk.deen@gmail.com 

2) IT Professional Required,
    With Experience in Networking & Hardware Troubleshooting,
    Need for Only Female,
தொடர்புக்கு: logistics@rastilari.com

3) ENERGY DRINK SALES, (in Abu Dhabi, And Dubai),
    Sales Man Cum Driver Required,
    Good English Communication Skills 
    Position Dubai,
தொடர்புக்கு: slsmndxb@gmail.com

4) SPARE PARTS COMPANY,
    Sales Executive Required,
    Age 25-35, Indian, Pakisthani, Nepalese, Computer Literate,
    Well Educated, Hard-Working,
    With Sharp intellect, Visa Provided,
    Excellent Package for the Right Candidate,
தொடர்புக்கு: alrabeh@eim.ae

5) Outdoor Sales Executive Required, 
     Young Professional, with 2 years UAE experience,
     Good Contacts with Consultants and Contractors,
     Trainee Package: 10,000,
தொடர்புக்கு: hr@bohec.com

6) Outdoor & Indoor Salesman Required urgently,
    for a Trading Company in Dubai, 
    Dealing in industrial tools, building materials tools,
    building materials & Welding Accessories, 
தொடர்புக்கு: hr@aljameatrading.com

7) Van Salesman required for a Trading Company in Dubai,
     Looking for Salesman 
     1 Nos in Alain 
     2 Nos in Dubai 
     Northern Emirates, with good experience in food and 
     Beverages preferably with a manual driving License.
தொடர்புக்கு: tradesalesman@gmail.com

8) Telemarketing Staff Female & Accounting Assistant (Male, can read Arabic),
    Required for an insurance broker based in Dubai,
    with excellent communication Skills, Organized & flexible,
    can start immediately.
தொடர்புக்கு: applicant@ugib.com

9) Administrative Assistant,
    with good Communication skills, excellent in PC,
    has a background working in a contracting company, & can work with 
    minimal supervision. 
தொடர்புக்கு: info@tornado-group.com

10) ERP SOFTWARE COMPANY, 
      Marketing & Sales executive required with experience for a Sharjah,
      Those who have 3 to 5 years experience in the same field & having 
      own car is an added advantage. 
தொடர்புக்கு: uaeerpsoftware@gmail.com

நன்றி 

மல்லிப்பட்டினம் ஷாகுல் ஹமீது (அஜ்மான்)


முத்துப்பேட்டை அரசு புதிய மருத்துவமனை திறப்பு விழாவும், தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் வருகையும்



முத்துப்பேட்டை ஜூலை 01: முத்துப்பேட்டையில் அரசு மேம்படுத்தப்பட்ட புதிய மருத்தவ மனை திறப்பு விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது . மாவட்ட வருவாய் அலுவலர் மணிமாறன் தலைமை வகித்தார் .மாவட்ட துணை இயக்குனர் பரனிதரன் வரவேற்று பேசினார். மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் தொகுப்புரை ஆற்றினார் . நிகழ்ச்சியில் புதிய மருத்துவ மனை கட்டிடத்தை தமிழக உணவுதுறை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்து பேசுகையில். இந்த மருத்துவமனை 62 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது.

இன்னும் 40 லட்சத்தில் கட்டிடங்கள் கட்டப்பட இருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் காப்பீடு திட்டத்தில் 12 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பயன் பெற்று இருக்கிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த மாவட்டத்தை போல் பயன் பெற்றதில்லை. நான் சிறு வயதாக இருந்த போது இந்த மருத்துவ மனைக்கு எனது தாயின் கையை பிடித்துக்கொண்டு வந்து வைத்தியம் செய்திருக்கிறேன்.
இப்போ நமது தாய் அதே மருத்துவமனையை எனது கையால் திறந்து வைக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதான் முதல்வரின் சாதாரண நபரை கூட முன்னுரிமை படுத்தும் பெருந்தன்மை என்றார்.
விழாவில் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் , ஒன்றிய குழு தலைவர் நடராஜன் , துணைத் தலைவர் தெட்சினா மூர்த்தி. பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் சண்முகம், மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலெட்சுமி  அம்பிகாபதி, மாவட்ட கவுன்சிலர் முருகையன், பேரூராட்சி துணை தலைவர் அப்துல் வகாப், ஒன்றிய கவுன்சிலர் ஜகன், நகர அவைத் தலைவர் கோவிந்தராஜ்,
வீட்டு வசதி வாரிய தலைவர் மைநூர்தீன் , துணை தலைவர் முத்து ராமலிங்கம் ,இயக்குனர்கள் குறிஞ்சி சங்கர், கரிகாலன்,முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அம்பிகாபதி ,மங்கள் கூட்டுறவு வங்கி தலைவர் அன்பழகன் துணை தலைவர் கோவி பிரபு , நில வள வங்கி துணை தலைவர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
படம் , செய்தி : முத்துப்பேட்டையில் புதிய மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்து மாணவர்களுக்கு தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் கண்ணாடி அணிவித்தார்.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை   .

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)