முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் பள்ளியின் முன்பு வாகனங்களை நிறுத்தாமல் இருக்க தலைமையாசிரியர் அதிரடி விளம்பர போர்டு.



முத்துப்பேட்டை, மார்ச் 10: பழைய பேருந்து நிலையத்தில் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அதன் அருகே காவல் நிலையம,; அரசு மருத்துவமனை, ரிஜிஸ்டர் ஆபிஸ் போன்றவைகள்  இருப்பதால் அலுவலகங்களுக்கு வருபவர்களும், மற்றும் அப்பகுதிக்கு பொருட்கள் வாங்க வருபவர்களும் தங்களது வானங்களை பள்ளியின் முன்பு நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இது மாணவ மாணவிகளுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் இடையூறாக தொடர்ந்து இருந்து வந்தன. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பலமுறை சம்பந்தப்பட்டவர்களை தடுத்தும் பயனில்லை. காவல் நிலையத்தில் புகார் கூறியும் யாரும் தங்களது பழக்கங்களை மாற்றிக் கொள்ளவில்லை. வெறுத்துப்போன பள்ளி தலைமையசிரியர் ராமலிங்கம் நீங்கள் மிகவும் நல்லவர். பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு இரைடயூறாக தயவு செய்து இங்கே வாகனங்களை நிறுத்தாதீர் என்று ஒரு விளம்பர போர்டை பள்ளி முகப்பு கேட்டில் மாட்டி உள்ளார். அதன் பிறகு வாகனங்கள் நிறுத்துபவர்கள் இந்த பக்கம் வருவதில்லை. தினமும் பள்ளி திறக்கும் நேரத்தில் அந்த விளம்பர போர்டை மாட்டி விடுவதும் பிறகு பள்ளி நேரம் முடிந்ததும் எடுத்து பள்ளிக்குள் வைத்துக் கொள்ளும் நடைமுறையை பள்ளி நிர்வாகம் செய்து வருகிறது. 

FLASH NEWS :மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஹைதர் அலி : இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான் :

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தங்களது வேட்பாளர் பெயர்களை அறிவித்துள்ளது  .



திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் விடுதலைசிறுத்தை கட்சிக்கு 2 தொகுதிகளும் ,புதிய தமிழகம்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ,மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன .



ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற சிதம்பரம் தொகுதியில்  விடுதலை சிறுத்தைகள்  கட்சியின் தலைவர் திருமாவளவனும் ,தென்காசி தொகுதில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியும் போட்டியிட உள்ளனர் .



இந்நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும்  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, தங்களின் வேட்பாளரின் பெயர்களை இன்று அறிவித்தது .



அதன்படி, ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற அப்துல் ரஹ்மான்  வேலூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் KM .காதர் மொஹைதீன் சென்னையில் இன்று அறிவித்தார் .



அதேபோல் ,மனித நேயமக்கள் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் ,அக்கட்சியின் மூத்த தலைவர் ஹைதர் அலி போட்டியிட உள்ளதாக ,அக்கட்சியின் தலைவர் ஜே .எஸ் .ரிபாயி சென்னையில் இன்று அறிவித்தார் .






முத்துப்பேட்டை சாலை ஓரத்தில் ஆண் உடல் ! விபத்தா ? அல்லது அடித்து கொலையா ? போலீசார் விசாரனை !

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலை, படித்துறை அருகே சாலை ஓர வாய்க்காலில் ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர். 

உடன் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப-;இன்ஸ்பெக்டர் சாமிநாதன், வருவாய் ஆய்வாளர் ராமசந்திரன், வி.ஏ.ஓ ஆகியோர் உடலை பார்வையிட்டு விசாரனை நடத்தினர்.
 அப்பொழுது கருப்பு சட்டை கைலி அணிந்து கிடந்த உடல் அருகே சால்வையும் அவரது செல் போனும் கிடந்ததை வைத்து விசாரித்ததில் அவர் வேதாரன்யம் தாலுக்கா, தென்னடார் நடுக்காடு, கிராமத்தை சேர்ந்த செவந்தான் மகன் சுப்பிரமணியன்(43) என்று தெரிந்தது. 


சுப்பிரமணியன் ஆலங்காடு பகுதியில் ஒரு துக்க வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்ததாக கூறப்படுகிறது. துக்க வீட்டிற்கு சென்று விட்டு சாலையை கடக்க முயன்றபோது அடயாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தாரா? அல்லது யாரும் அடித்து கொன்று விட்டார்களா ? என்ற பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளது. போலீசார் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு உள்ளனர்.

FLASH NEWS : ஆம் ஆத்மி கட்சியின் தஞ்சைபாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிரை உமர்தம்பி அறிவிக்கபட்டார் !!!! உமர்தம்பிக்கு முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் வாழ்த்து !!!



தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் ஆம் ஆத்மி  சார்பாக அதிரையை சேர்ந்த உமர்தம்பி போட்டியிட உள்ளதாக ஆம் ஆத்மியின் தலைமை அறிவித்துள்ளது .

கடந்த இரண்டு நாட்களுக்குமுன் நடந்த நேர்காணலின் பொழுது தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்பியவர்களிடம் ஆம் ஆத்மி தலைமை நேர்காணல் நடத்தியது இதில் கலந்து கொண்டவர்களில் தகுத்தியில் அடிப்படையில் இவரை தேர்ந்தெடுத்துள்ளதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது .

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பெண்களுக்கான வாராந்திர பயான்-- ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர் !!

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.03.2014 அன்று வாரந்திர பெண்கள் பயான் தமானியா தோப்பில் உள்ள சகோதரர் சமது அவர்கள் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது






பெண்களின் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததால் வீட்டுக்கு வெளியே பொதுக்கூட்டம் போல ஏற்பாடு செய்து சொற்பொழிவு நடத்தப்பட்டது பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர்

அதில் சகோதரி முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள் இதோடு பல சிறுமிகளும் ஆர்வத்துடன் உரைநிகழ்த்தினார்கள்

இதில் கிருஸ்த்துவ மதத்தை சேர்ந்த பழனி அவர்களின் மகள் காயத்திரி அவர்கள் தானாக முன்வந்து நான் இதுவரை அறிந்த இஸ்லாத்தை பற்றிகூறுகிறேன் என்று மேடையில் ஏறி மிக அருமையாக இஸ்லாத்தை பற்றி விளக்கிகூறினார்

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் 10–ந்தேதி அறிவிப்பு--மீண்டும் களத்தில் இரக்கபடுவாரா தமீமுன் அன்சாரி ?



சென்னை, மார்ச். 6–
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சி மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுகிறது.
மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் வருகிற 10–ந்தேதி (திங்கட்கிழமை) அறிவிக்கப்படுகிறது.
சென்னையில் நடைபெறும் அந்த கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தில் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படுகிறது.
கடந்த பாராளு மன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி மயிலாடுதுறை தொகுதியில் தனித்து போட்டியிட்டது. இதனால் அந்த கட்சி இந்த முறையும் அதே தொகுதியை தேர்வு செய்துள்ளது.
மயிலாடுதுறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பாரதிமோகன் போட்டியிடுகிறார்.

முஸ்லீம் லீக்கிற்கு வேலூர் --முத்துபேட்டை அப்துல் ரஹ்மான் MP மீண்டும் போட்டியா?

வேலூர், மார்ச்.6–
வேலூர் தொகுதியில் மீண்டும் அப்துல் ரகுமான் போட்டி?வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக அப்துல்ரகுமான் எம்.பி. மீண்டும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளன.
தி.மு.க. கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதியை ஒதுக்க தி.மு.க. தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அதைத் தொடர்ந்து ஒப்பந்த அறிக்கையில் கருணாநிதி முன்னிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் கையெழுத்திட்டார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் வேலூர் தொகுதியில் ஏற்கனவே காதர் மொய்தீன், அப்துல் ரகுமான் ஆகியோர் போட்டியிட்டு தொடர் வெற்றி பெற்றுள்ளனர். 3வது முறையாக அக்கட்சி வேலூர் தொகுதியில் களத்தில் இறங்கியுள்ளது.
கட்சியில் வேட்பாளர் தேர்வு மும்முரமாக நடக்கிறது. கட்சியின் மாநில தலைவர் காதர் மொய்தீன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அவரது உடல்நிலை கருத்தில் கொண்டு அவர் போட்டியிட சாத்தியமில்லை எனக் கூறுகின்றனர்.
இதனால் அப்துல் ரகுமான் எம்.பி. மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்ளூர் பிரமுகர்கள் தொடர்பு, வேலூர் தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து தெரிந்தவர் அப்துல்ரகுமான், மேலும் அவரது சாதனைகளை கூறி ஓட்டு கேட்டால் எளிதில் வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது என கட்சி மேலிடம் கருதுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் செயற்குழு கூட்டம் வருகிற 8ந் தேதி நடக்கிறது. இதில் வேலூர் தொகுதி வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் அப்துல் ரகுமான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓட்டு விவரம் வருமாறு:–

அப்துல் ரகுமான் – 3,60,474, எல்.கே.எம்.பி.வாசு (அ.தி.மு.க.) – 2,53,081, சவுகத் செரீப் (தே.மு.தி.க.) – 62,696, ஏ.கே.ராஜேந்திரன் (பா.ஜ.க.) – 11,184.

5 தொகுதிகளை கேட்டு அடம் பிடித்த திருமாவளவன் --2 தொகுதிகளை கொடுத்து விசுவாசத்தை நிரூபித்த கருணாநிதி !!

சென்னை, மார்ச். 6–
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 5 தொகுதிகள் கேட்டு கடிதம் கொடுத்திருந்தார்.


இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினருடன் திருமாவளவன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

அப்போது சிதம்பரம், திருவள்ளூர், காஞ்சீபுரம், தர்மபுரி, விழுப்புரம் ஆகிய 5 தொகுதிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தினார்.

ஆனால் 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் திருமாவளவன் சிதம்பரம், விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய 3 தொகுதிகளையாவது ஒதுக்கி தர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்த தொடங்கினார். இதனால் நேற்று உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நிலை ஏற்பட்டது. எந்த முடிவும் ஏற்படாததால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த திருமாவளவன் பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டார்.

இதன் பிறகு தி.மு.க. தலைவர் கருணாநிதி திருமாவளவனுடன் இரவில் போனில் பேசியதாக தெரிகிறது. இதில் 2 தொகுதிகளை பெற திருமாவளவன் சம்மதித்து விட்டார்.
அவருக்கு சிதம்பரம், திருவள்ளூர், தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இன்று அறிவாலயத்தில் இதற்கான உடன்பாடு ஏற்படுகிறது.

முஸ்லீம்களுக்கு மீண்டும் இதய சிறை --மனிதநேய மக்கள் கட்சிக்கும் ஒரு தொகுதி --இஸ்லாமியர்களை இளிச்சவாயர்களாக பார்க்க விரும்பும் கருணாநிதி !!

சென்னை, மார்ச்.5–
தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் மனிதநேய மக்கள் கட்சிக்கு மயிலாடு துறை, புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஒரு தொகுதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தொகுதி பங்கீடு: கூட்டணி தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனை

LAST UPDATED ( TUESDAY, 04 MARC


விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.
2–வது நாளான இன்று தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். தி.மு.க. சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கலிபூங்குன்றன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், பேராயர் எஸ்றா சற்குணம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் சந்தானம், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து மற்றும் பொன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன. தொகுதி பங்கீட்டை உறுதி செய்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்தது.

ஆண்மைக்குறைவும் -அதனை முறியடிக்கும் முறைகளும் !!

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.
ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல் !! ஆண்கள் anaivarum கட்டாயம் படியுங்கள் !! +18

முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.
ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.
விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.
துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.
ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்
* விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.
ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.
முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.
ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்.

குஜராத் கலவர வேட்டைக்காரன் மோச்சியும்-உயிர்பிச்சை கேட்ட அன்சாரியும் ஒரே மேடையில் தோன்றிய அதிசயம்-- கேராளாவில் நிகழ்ந்த அபூர்வம் !!

2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் நேரடி காட்சியாக மக்கள் மனங்களில் நிறைந்த இரண்டு பேர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரேமேடையில் தோன்றினார்கள்.
PEACE NOW: Qutubuddin Ansari (right) and Ashok Mochi, two faces of the 2002 Gujarat violence, at a function at Taliparamba in Kannur on Monday.
சங்க்பரிவார வெறியர்களுக்கு முன்னால் உயிர் பிச்சைக் கேட்டு கூப்பிய கைகளுக்கும், மிரட்சி மிகுந்த கண்களுக்கும் சொந்தக்காரரான குத்புதீன் அன்ஸாரியும், தலையில் காவி ரிப்பனும், இடது கையில் சூலமும் ஏந்தி ஆக்ரோஷமாக வெறிக் கூச்சலிடும் சங்க்பரிவார ஹிம்சையின் நேரடி காட்சியாக ஊடகங்களில் நிறைந்து காணப்பட்ட அசோக் மோச்சியும் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஒரே மேடையில் கலந்துகொண்டார்கள்.
பல்வேறு இடதுசாரி அமைப்புகளின் கூட்டமைப்பு கேரள மாநிலம் தளிப்பரம்பில் உள்ள சிரவக்கில் என்ற இடத்தில் “இனப்படுகொலையின் 12 ஆண்டுகள்” என்ற பெயரில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.
முஸ்லிம் இனப்படுகொலையின் வேட்டைக்காரனுடைய முகமாக உயர்த்திக் காட்டப்பட்ட தலித் இளைஞனான அசோக் மோச்சி மனம் வெதும்பி இறுதியில் சங்க்பரிவாரத்தின் துவேச அரசியலுக்கு எதிராக குரல் எழுப்ப முதன் முதலாக மேடையில் தோன்றியுள்ளார்.
வெறுப்பு அரசியலை வளர்த்தும் சங்க்பரிவாரத்தின் தந்திரங்களை குறித்து இருவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் அபூர்வமான காட்சியை காண ஏராளமானோர் நிகழ்ச்சியில் திரண்டிருந்தனர்.
கலவரத்தின் அக்னிக்கு பதிலாக நேற்று அன்ஸாரிக்கு, மோச்சி சுகந்தம் மிகுந்த ரோஜாப்பூவை வழங்கினார். அன்றும், இன்றும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக வாழ்ந்து வரும் மோச்சி, செலவுகள் தாங்க முடியாததால் திருமணம் கூட செய்யாமல் இருக்கிறார். அவருடைய முகத்தில் பழைய கொடூரம் இன்று இல்லை. புன்சிரிப்புடன் காணப்பட்டார். மோச்சியின் வார்த்தைகளில் அன்பு கலந்திருந்தது. மனிதநேயத்தை விளக்க எந்த மொழியும் தடையில்லை என்று கூறி அன்ஸாரியை கட்டி அனைத்து மோச்சி கூறினார்.
மோச்சி மேலும் கூறும்போது; ‘இனி மேலாவது நாம் வெறுப்பின் அரசியலை நிறுத்தியே தீரவேண்டும். இனப்படுகொலை ஏற்படுத்திய வேதனையால் விழிப்புணர்வு பெற்ற நான் அதன் பிறகு யாருக்கும் வாக்கு அளிக்கவில்லை. எனது மனதில் உள்ள எதிர்ப்பை நான் தெரிவித்தேன். நான் என்னையே கொள்ளையடித்தேன். இனியாவது எனக்கு அதில் இருந்து விடுதலை வேண்டும்.’ என உரக்கக் கூறினார்.
குத்புதீன் அன்ஸாரி பேசும்போது; ‘இது ஒரு மாற்றத்தின் துவக்கமாக அமையட்டும். கேரளாவின் அன்பு தாங்கமுடியாமல் தவிக்கிறேன். குஜராத் இன்று அமைதியாக உள்ளது. காரணம், மோடி பிரதமராக துடிப்பதே. வளர்ச்சியின் மந்திரங்களை அவர் கட்டவிழ்த்து விடுகிறார். அவ்வாறு குஜராத்தில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தால் எனது மாநிலத்தவரான அசோக் மோச்சிக்கு செருப்பு தைத்து பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டிருக்குமா?’ என்று கேள்வி எழுப்பிய அன்ஸாரி தனது உரையில் குஜராத் மோடியின் வளர்ச்சி என்ற மாயையை தோலுத்துக் காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் ஸஈத் ரூமி எழுதிய ‘நான் குத்புதீன் அன்ஸாரி’ என்ற சுய சரிதை நூல் வெளியிடப்பட்டது. பல்வேறு இடதுசாரி ஆர்வலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

வேலூர் கிடைக்காத விரக்த்தியில் முஸ்லீம் லீக் -நெல்லையை நோக்கி நகர்கிறது பிறைகொடி -ராமநாதபுரம் மற்றும் திருச்சி தொகுதிகளை கேட்டு பச்சைக்கொடி விடாப்பிடி !!

சென்னை, மார்ச், 4–
இன்று நடந்த தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம் லீக் கட்சி பிரதிநிதிகள் வேலூர் தொகுதியை ஒதுக்கும்படி கேட்டனர். ஏற்கனவே 2 முறை அந்த தொகுதியை கொடுத்து இருப்பதால் இந்த முறை ராமநாதபுரத்தில் போட்டியிடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அதை முஸ்லிம் லீக் ஏற்கவில்லை.

இதையடுத்து திண்டுக்கல் தொகுதியையும் ஏற்கவில்லை. திருச்சியை கேட்டனர். அங்கு மாநாடு நடத்தியதால் விட்டுக்கொடுக்க தி.மு.க. விரும்பவில்லை என்று தெரிகிறது. பின்னர், நெல்லை தொகுதியை ஒதுக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மாலை நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, புதிய தமிழகம் கட்சி தென்காசியும், மனிதநேய கட்சிக்கு மயிலாடுதுறையும் ஒதுக்கப்படலாம் என்று தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி -மகிழ்ச்சியளிக்கவில்லை என காதர் மொஹைதீன் பேட்டி!!

சென்னை, மார்ச். 4–
தி.மு.க. நேர்காணல் நேற்றுடன் முடிவடைந்தது. 40 தொகுதிகளுக்கு நடந்த நேர்காணலுக்கு 300 பெண்கள் உள்பட 1,500 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இதில் 887 பேர் நேரில் பங்கேற்றனர்.
நேற்று வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினரிடம் நேர்காணல் நடந்தது. இது வரை தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நடத்திய நேர்காணலுக்கு வந்தவர்களின் தகுதி அடிப்படையில் வேட்பாளர்கள் பட்டியல் தயார் ஆகி வருகிறது.
Prof. Kader Mohideen, president of the Indian Union Muslim League, confirmed that his party had received an invitation for talks. File Photo

நேர்காணலையடுத்து தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையில், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, வி.பி.துரை சாமி, கல்யாண சுந்தரம் ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது.

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளன. இந்த கட்சிகளின் பிரதிநிதிகள் அறிவாலயத்திற்கு தனித்தனியாக வந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மாநில தலைவர் காதர் மொய்தீன், பொது செயலாளர் அபுபக்கர், பொருளாளர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலேசனைக்குப்பின் காதர் மொய்தீன் நிருபர்களிடம் கூறியதாவாவது:–

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. இந்த கூட்டணியின் வெற்றிக்காக பாடுபட்டு வருகிறது. இந்த முறை சிறுபான்மையினருக்கு 4 தொகுதிகள் ஒதுக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.
எங்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம் ஒரு தொகுதி ஒதுக்குவதாக உறுதி அளித்தனர். இதில் மகிழ்ச்சி இல்லாவிட்டாலும் ஏற்றுக் கொண்டோம். வேலூர், மத்திய சென்னை, மயிலாடுதுறை, நெல்லை, திருச்சி ஆகிய தொகுதிகளில் ஒன்றை ஒதுக்கும்படி கேட்டிருக்கிறோம்.
இதில் எந்த தொகுதி என்பதை இன்று இரவு 7 மணிக்கு தெரிவிப்பதாக கூறி இருக்கிறார்கள். கடந்த முறை நாங்கள் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த முறை எங்கள் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த சின்னத்தில் போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

11.30 மணிக்கு விடுதலை சிறுத்தைகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. கட்சித்தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார், தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். 12.30 மணி வரை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மாலையில் மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.
நாளை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் அனைத்தும் கூடி தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

அதன் பிறகு ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதி; எந்த கட்சிக்கு என்ன தொகுதி என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை -முதல்வரை சந்திக்கும் இந்திய தேசிய லீக் மகளிரணியினர் - பெண்கள் திரளாக வரும்படி தடா ரஹீம் வேண்டுகோள் !!



\
அன்பு சொந்தங்களே அஸ்ஸலாமுஅலைக்கும் சுமார் 6 நாட்களுக்கு
பிறகு இன்று ஒரு பதிவு போடுகின்றோம் ....
இந்த 6 நாட்களாக நான் (தடா ஜெ.அப்துல்ரஹிம்) முகநூலை
பார்க்கவில்லை ! பதிவுகள் நான் போடவில்லை !! 
15 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லீம் சிறைவாசிகளின் விடுதலை கோரி உண்ணா நிலை போராட்டம் தொடர்ந்தேன் 
அல்லாஹ்வின் கிருபையால் அனைத்து அமைப்பு சகோதரர்களும் 
நேரில் வந்து அன்பான பல வேண்டுகோள்களும் உடல்நலம் பற்றியும் விசாரித்து பல கோரிக்கை வைத்தனர் ...

அதே போன்று தமிழ்தேசிய அமைப்புகளும் , வழக்கறிஞர்கள் , அரசியல் அமைப்புகள் என பல சகோதரர்கள் ஆதரவு கொடுத்தது சிறைவாசிகளின்
விடுதலையில் சுமார் 10% வெற்றி பெற்றதாக நம் இயக்க சகோதரர்கள்
கூறினாலும் இது ஒரு ஆரம்பமே என்பது உண்மை ...

அதே போன்று முகநூல் சகோதரர்களின் ஆதரவை பார்த்த நான் 
கண்கலங்கி விட்டேன் . அந்த அளவு ஆதரவு அல்லாஹ் போதுமானவன்

கண்ணியத்திற்குறிய இஸ்லாமிய சகோதரர்களே!
மதிப்பிற்குறிய தொப்புள்கொடி உறவுகளே!

தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைச்சாலையில் வாடிக்கொண்டிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகள் உள்பட அனைத்து சிறைவாசிகளையும் தமிழக அரசு விடுதலை செய்யவலியுறுத்தி கடந்த 24 ஆம் தேதி முதல் பாதிக்கப்பட்டவர்களின் விழிம்பு நிலை போராட்டமான காலவரையற்ற உண்ணா நிலை போராட்டத்தை தொடர்ந்தோம் 

அதன்பின் நேற்று 28 ஆம் தேதி மாலை அரசுக்கு சிறு அவகாசம் அளிக்கும் விதமாக தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைத்தது தாங்கள் அனைவரும் அறிந்ததே

இந்நிலையில் முஸ்லிம்களின் விடுதலை கோரி நாங்கள் எடுத்த இந்த விழிம்பு நிலை போராட்டத்திற்கு ஆதரவளித்து அரசின் கவனத்தை ஈர்க்க செய்த அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும்,,தமிழ் அமைப்புகளுக்கும்,குறிப்பாக மீடியா ஆதரவு இல்லாத நிலையில் இப்போராட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த முகநூல் சமுதாய போராளிகளுக்கும்,தமிழகத்தைசேர்ந்த அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு ஆதரவு அளித்த எம் சமூக சொந்தங்களுக்கும்,இப்போராட்டத்தில் கழந்து கொள்ள முடியாமல் தொலைவிலிருந்து துஆ செய்த சகோதரர்களுக்கும்,அயல்நாடுகளில் தன் இளமைகளை தொலைத்து வெளியுலக நவீன சிறைச்சாலையில் இருந்து கொண்டு போராட்டத்திற்கு துஆ செய்த நல்ல உள்ளங்களுக்கும்,மதங்களை கடந்து மனித நேயத்தோடு ஆதரவு அளித்த மாற்று மத சகோதரர்களுக்கும்,வழக்கறிஞர்களுக்கும்,சிறைச்சாலையில் இருந்து போராட்டகளத்திலுள்ளவர்களுக்காக துஆ செய்த சிறைவாசிகளுக்கும்,அவர்களின் குடும்பத்தாருக்கும் ,நாங்கள் அறியாபுரத்திலிருந்து உதவிகள் செய்தவர்களுக்கும், நாங்கள் சொல்லவிடுபட்டவர்களுக்கும்
மேற்சொன்ன அனைத்தயும் எங்களுக்கு உதவியாக செய்து கொடுத்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றி கூறிக்கொள்கிறோம்

அல்ஹம்துலில்லாஹ்..
எல்லாபுகழும் இறைவனுக்கே..

மேலும் சிறைவாசிகளின் விடுதலைக்காக நாங்கள் எடுக்கும் அடுத்த கட்ட அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

தடா ரஹீமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திருமாவளவன் மற்றும் சீமான் !!

தொடர்ந்து நான்காவது நாளாக சிறைவாசிகள் விடுதலைக்கான போராட்ட்டம் தொடர்ந்தது.இன்று ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள்,விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா,நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்,SDPI பொதுச் செயலாளர் நிஜாம்,அமீர் அம்ஸா உள்ளிட்ட தலைவர்கள் ரஹீமை சந்தித்து தங்கள் ஆதரவை தந்தனர்.ஆம் ஆத்மி கட்சி தோழர்கள் நமது அழைப்பை ஏற்று உடனே களத்துக்கு வந்தது மகழ்ச்சி அளித்தது.இரவு எட்டு மணி அளவில் மண்டபத்துக்கு மருத்துவர்களுடன் வந்த காவல்துறையினர் ரஹீம் பாயின் உடல் நிலையை பரிசோதித்து விட்டு அவரை இங்கிருந்து செல்லும்படியும் அல்லது கைது செய்து விடுவோம் என்று எச்சரித்தனர்.கைது செய்து கொள்ளுங்கள் என்று அறிவித்தவுடன் அவரை அங்கிருந்து ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்று ராயபேட்டை அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதித்து உள்ளனர்.இறைவன் நாடினால் நம் போராட்டம் வெல்லும். சிறைக் கதவுகள் திறக்கும்









ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ததுபோல் முஸ்லீம் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் -தடா ரஹீம் நடத்திய தொடர் உண்ணாவிரதம் !!

அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்திய தேசிய லீக் தலைவர் தடா அப்துல் ரஹீம் உட்பட 15 பேர் ஈடுபட்டு வரும் செய்தியோடு தொடர்புடைய சில விபரங்களை தமிழக மக்கள் அறிந்து கொண்டால், இப்போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பார்கள்.
1966884_619740544765340_740612368_n


1794539_431979430268537_1900100188_n

1656442_431982526934894_89525137_n

1621671_431978040268676_1226049586_n
நம் நாட்டின் சிறைச்சாலைகளில், விகிதாச்சார அடிப்படையில் அதிகமாக இருப்பது முஸ்லிம்கள் மட்டுமே என்ற ஒரு அறிக்கையை நீதிபதி சச்சார் கமிட்டி இந்தியா முழுவதும் மேற்கொண்ட ஆய்வின் இறுதியில் வெளியிட்டது. தமிழகத்தை பொறுத்தவரை மேற்கண்ட அதே நிலை தொடருவதை மனித உரிமை ஆர்வலர்  பேராசிரியர். அ. மார்க்ஸ் போன்றவர்கள் உறுதிபடுத்துகிறார்கள்.
சென்ற தி.மு.க ஆட்சியில் கலைஞர் அவர்களுடைய தலைமையிலான அரசு அண்ணா பிறந்த நாளில் 10 ஆண்டுகள் கழித்திருந்த சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்தது. இன்னும் ஒரு படி மேல் சென்று – மதுரை லீலாவதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கொடூர குற்றவாளிகளை 8 ஆண்டுகள் மட்டுமே சிறையில் கழித்திருந்த போதும் அவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
ஆனால், விடுதலை ஆவதற்கு முழு தகுதிகள் முஸ்லிம்கள் சிறைவாசிகளுக்கு இருந்தும் கலைஞர் அரசு இவர்களை விடுதலை செய்ய ஏனோ முன்வரவில்லை. அதற்காக புதிதாக சில காரணங்களை முன் வைத்தார்கள். அந்த காரணங்கள் அனைத்தும் சட்டத்தில் இடம் பெறவில்லை.
இத்தனைக்கும் கோவை உட்பட பல்வேறு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் அவை அனைத்தையும் மத பிரச்சினைகளால் ஏற்பட்ட மோதல்கள் அல்ல என்றே தங்களுடைய தீர்ப்புக்களில் குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
கலைஞர் அவர்களுடைய ஆட்சியில் நடைபெறாத விடுதலை ஜெயலலிதா அவர்களுடைய ஆட்சியில் நடக்குமா என்ன? என்ற கேள்வியை கொண்டே முஸ்லிம்கள் மௌனம் காத்து வந்தனர்.
ஆனால் சமீபத்தில் ஜெயலலிதா அவர்களுடைய அரசு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் மற்றும் ஆறு நபர்களுடைய விடயத்தில் எடுத்திருக்கும் முடிவை தமிழக மக்கள் அதிகமானோர் ஆதரிக்கும் பட்சத்தில் 16 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம்கள் மீதும் கருணை காட்டப்பட்டால் முஸ்லிம் சமுதாயம் மிகுந்த நன்றி உணர்வோடு பார்க்கும் அல்லவா ?
சிறையிலிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் மிக சாதாரண வருமானங்களை கொண்டவர்களாகவும், இன்னும் சில பேர்  தினக்கூலிகள் என்பதும், அவர்களை நம்பித்தான் அவர்களின் குடும்பங்கள் வாழ்கிறார்கள் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ளலாமே..
உண்ணாநிலை போராட்டத்தை தொடர்ந்துள்ள தடா. அப்துல் ரஹீம் அவர்கள் 13 ஆண்டுகளுக்குப்பின் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டவர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தன் வாழ்கையின் இளமை பகுதியை சிறையிலேயே கழித்தவர். அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கி விடுதலை பெற்றவர். தன்னை போன்றே சிறைச்சாலைகளில் இருக்கும் மற்ற சிறைவாசிகளும் விடுதலை பெற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவராக இருந்து களமாடி வருபவர். இவர் மேற்கொண்டிருக்கும் இந்த உண்ணாநிலை போராட்டத்தை நீதியின் முன் நம்பிக்கை கொண்ட மக்கள் யாவரும் ஆதரித்திட வேண்டும். குறிப்பாக இயக்கங்களாக பிரிந்து கிடக்கும் முஸ்லிம்கள் தங்களுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை கடந்து சகோ. ரஹீம் அவர்களுக்கு பின்னால் சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்யும் விடயத்திலாவது ஒன்றிணைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
இவரை போன்று சிறையில் இருக்கும் அப்பாவி சிறைவாசிகளை அவர்கள் சிறையில் இருந்த காலத்தை கணக்கில் கொண்டு நம் தமிழக அரசு விடுதலை செய்திட்டால், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அவர்கள் பெற்ற மகிழ்ச்சியை போன்று சிறையில் இருக்கும் அப்பாவி முஸ்லிம்களின் குடும்பங்கள் அனைத்தும் ஆனந்த கண்ணீரில் மிதக்கும் அல்லவா ?
ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம். ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்பதே நீதித்துறையின் தாரக மந்திரம். ஆனால், இன்று எத்தனை முஸ்லிம்கள் 16 ஆண்டுகள் கடந்தும் விடுதலை செய்யப்படாமல் இருக்கிறார்கள் என்பதை நேர்மையான உள்ளத்தோடு தமிழக மக்களாகிய நாம் சிந்தித்து பார்க்க கடமை பட்டுள்ளோம்.
சிறையின் ஒரு நிமிடமும் – நரக வாழ்வின் ஒரு பகுதியே என மகாத்மா காந்தி அவர்கள் குறிப்பிட்டதை நினைவில் கொண்டு, சிறைவாசம் என்ற இக்கொடுமையை களைய நம்மால் முடிந்த உழைப்பை செய்ய முன் வருவோம். வாருங்கள்! வாருங்கள்!!

பைத்துல் முக்கதஸ் தலைமை இமாம் சென்னை வருகை -நேரடி ஒளிபரப்பை காணதவறாதீர்கள்

முஸ்லீம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ்சின் தலைமை இமாம் நாளைய தினம் சென்னைக்கு வருகை தார் உள்ளார். பின்னர் மைய்லாப்பூர் பள்ளிவாசல்  ஒன்றில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார் .

இந்த நிகழ்ச்சியை  மக்கா பள்ளி இமாம்  சம்சுதீன் காசிமி தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய உள்ளார் . இந்த நிகழ்ச்சியை இஸ்லாமியர்கள் பெரும் ஆவலாக எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள முன்பதிவும் செய்து வருகின்றனர் .

இந்நிலையில் இந்த நிகழ்சியில் நேரலையை நமது தளத்தில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செயபட்டுள்ளன என்பதை  முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம் .

நேரலை இந்திய நேரப்படி மாலை 6 மணி முதல் ஒளிபரப்ப படும் இந்த நிகழ்ச்சியை கானதவராதீர்கள்!!

முத்துப்பேட்டையில் வெளுத்து வாங்கிய கன மழை-மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த பொதுமக்கள் !!

DSCF3554தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்ய வில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.
இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமானதால் பொது மக்கள் மழை பெய்யாதா என ஏங்கி கொண்டு இருந்தனர். விவசாயிகளும் மழை பெய்தால் பயிர்கள் புத்துயிர் பெறும் என்று மழையை எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை மேகம் கூடி விட்டு மழை பெய்யாமல் ஏமாற்றி வந்தது. ஆனால் இன்று காலை யாரும் எதிர்பார்க்காத நிலையில் சீர்காழி, தென்பாதி, சட்ட நாதபுரம் ஆகிய இடங்களில் காலை 4 மணி முதல் 5.30 மணி வரை பலத்த மழை பெய்தது.
இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், திருவெண்காடு ஆகிய இடங்களில் தூரல் மழை பெய்தது.
திருவாரூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களிலும் இன்று காலை மிதமான மழை பெய்தது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
வேதாரண்யம் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. காலை வரை மழை நீடித்தது. இதனால் மானவாரி நிலங்களில் சாகுபடி செய்து உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை காரணமாக வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. வேதாரண்யத்தில் 17.7 மி. மீட்டர் மழையும், தலை ஞாயிறில் 4.6 மி. மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
வேதாரண்யம் கடியபட்டினம் ரோட்டில் உள்ள மின் கம்பியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததால் அப்பகுதியில் உள்ள 5 வீடுகளில் மின் சாதன பொருட்கள் கருகி சேதமானது.
தஞ்சையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் காலை லேசான தூறல் மழை பெய்தது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று காலை தூறல் மழை பெய்தது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.DSCF3574
DSCF3560

DSCF3569


சிறுவன் தமீம் அன்சாரி விவகாரம். காவல்துறை சார்பில் பொய்யான தகவல் அளிக்கப்பட்டதாக இந்திய தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.


சென்னை பிப்ரவரி 22: சென்னை நீலாங்கரை அருகே கைதான சிறுவன் தமீம் அன்சாரி மீத் காவல்துறை அதிகாரியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் பொய்யான தகவல் அளிக்கப்பட்டதாக இந்திய தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:
் சேர்ந்த தமீம் அன்சாரி என்கிற 14 வயது சிறுவனை விசாரணைக்காக கடந்த ஜனவரி 7ம் தேதி அழைத்துச் சென்ற நீலாங்கரை காவல் நிலைய போலீசார், கோவில் உண்டியலை திருடிய குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்லி கடுமையாக மூன்றாந்தரச் சித்திரவதைகளைச் செய்துள்ளனர். இரண்டு போலீஸாக தொடைகளில் ஏறி நின்று கொள்ள, கிரைம் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் சிறுவன் அன்சாரியின் வாயில் வெறும் து
"சென்னை நீலாங்கரைக்கு அருகேயுள்ள வெட்டுவாங்கேணியில் ஒரு கோவிலின் உண்டியல் திருட்டு போனது சம்மந்தமாக அப்பகுதியை
ச்ப்பாக்கியை நுழைத்து மிரட்டி விட்டு, பின்னர் அவன் கண்ணெதிரே துப்பாக்கியில் குண்டொன்றை பொருத்தி வயிறு, நெஞ்சு, வாய் என பல இடங்களில் துப்பாக்கியை வைத்து மிரட்டி விட்டு, கழுத்தில் வைத்து மிரட்டியபோது துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு முன் கழுத்தில் நுழைந்து பின் கழுத்து வழியாக வெளியேறியுள்ளது.
கு தண்டனையாக சாதாரண சிறைவாசம் அல்லது வெறும் ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையுடன் குற்றவாளியை விடுதலை செய்து விடுதல் என்பதாக உள்ளது. காவல்நிலைய வன்முறை மற்றும் கொலை வழக்குகளில் ஆர்.டி.ஓ., மாஜிஸ்ட்ரேட் விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும். பாதிப்புக்குள்ளானவர் உயிருடன் இருந்தால் முதலில் அவரும், அவரது குடும்பத்தினரும், சாட்சிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை இருந்தும் சிறுவன் தமீம் அன்சாரி வழக்கில் இவையெல்லாம் மிக காலதாம
இத்தகைய கொடூர குற்றச் செயலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மீது அதற்குரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல், பணி இடைநீக்க உத்தரவோடு, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 388வது பிரிவின் கீழ் மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவு, கொடூரமான காயத்தை ஏற்படுத்துதல்; இத
ற்தமாக நிகழ்ந்துள்ளன. இது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பேரம் பேசவும், மிரட்டி ஒப்புதல் பெறுவதற்குமே வழி வகுக்கும். இந்த வழக்கிலும் இப்படி நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது. இச்சூழலில் தனது மகனை ஆய்வாளர் புஷ்பராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்; இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறுவனின் தாய் சபீனா பேகம் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
த்தியது' என்று பொய்யான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சட்ட நெறிமுறைகளைப் பேணாமல், மனித உரிமை மீறலில் ஈடுபட்டு, வன்முறைத்தனமாக விசாரணை நடத்தி தமீம் அன்சாரி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய இன்ஸ்பெக்டர் புஷ்பராஜை காப்பாற்றும் நோக்கில் போலீசாரின் மேற்கண்ட விளக்க அறிக்கை அமைந்துள்ளது. * காவல்துறையின் இந்தப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. * இந்த சம்பவத்தில் வெறும் 1000 ரூபாய் அபராதத்துடன் குற்றவாளி விடுதலையாகி விடும் வாய்ப்புள்ள 388வது பிரிவில் வழக்குப
கடந்த 12ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீலாங்கரை ஆய்வாளர் பாஸ்கர் காவல்துறை சார்பில், "சிறுவன் தமீம் அன்சாரி உணவு உண்டு விட்டு தரையில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தனது துப்பாக்கியைத் துடைத்து சுத்தம் செய்து விட்டு உறையினுள் வைத்தபோது துப்பாக்கி தவறி கீழே விழுந்து விட்டது. அப்போது அதிலிருந்த குண்டு சிறுவனின் கழுத்தில் பாய்ந்து காயம் ஏற்ப
டு பதிவு செய்திருப்பதை நீக்கி விட்டு, கொலை முயற்சி மற்றும் சிறப்பு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கை மாற்றி, இன்ஸ்பெக்டர் புஷ்பராஜை கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். * இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ஏனைய காவல்துறை அதிகாரிகளுக்கு படிப்பினையாக இருக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜுக்கு அதிகப்பட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும். * இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதால், "துப்பாக்கி தரையில் விழுந்து வெடித்தது' என்று காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிவுக்கு புறம்பான அறிக்கையை நீதிமன்றம் ஏற்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும். * இந்த சம்பவத்தில் ஆர்.டி.ஓ. விசாரணையை மாற்றி நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். * தமீம் அன்சாரிக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையான ஒரு லட்ச ரூபாய் போதுமானதாகாது என்பதால் இழப்பீட்டை அதிகப்படுத்தி தர வேண்டும்.
உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் தலைவர் பேரா. அ. மார்க்ஸ் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், தமீம் அன்சாரியின் வழக்கில் ஆஜராகி வ
* ஆய்வாளர் புஷ்பராஜை காப்பாற்றும் முயற்சியை கைவிட்டு சட்டப்படி அவர் மீது கடும் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமை முன் வர வேண்டும். * தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ச்சியாக காவல்துறை வன்முறைகளை கண்டித்தும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தும் வருகிறார். இந்நிலையில் குற்றவாளியை காவல்துறை காப்பாற்ற முயற்சிப்பது முதல்வரின் விருப்பத்திற்கு மாற்றமானதாகும் என்பதை காவல்துறை தலைமை உணர வேண்டும். என்பன போன்ற கோரிக்கைகளையும், கண்டனத்தையும் பதிவு செய்து, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று (20-02-2014) பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நீதிக்குப் புறம்பான காவல்துறையின் போக்கை கண்டித்தும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர், மனித
ருபவருமான சங்கர சுப்பு ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். இந்த நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட சிறுவனான தமீம் அன்சாரியும் தனக்கு நேர்ந்த சித்திரவதைகள், துப்பாக்கிச் சூடு நடந்த விதம் குறித்து செய்தியாளர்களிடம் நேரடியாக வாக்குமூலம் அளித்தான். இந்நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளான ஃபிர்தவ்ஸ், அபு ஃபைஸல், முஹம்மது ஷிப்லி, முஹம்மது முஹ்யித்தீன், சிராஜ் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்."
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

எனது திருமணத்திற்கு அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள்: K. சாகுல் ஹமீது அழைப்பு...





முத்துப்பேட்டை,பிப்ரவரி 22: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ரபிவுல் ஆஹிர் பிறை 29,  அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 02-03-2014 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை குத்பா பள்ளிவாசலில்  எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன். 

இப்படிக்கு:  K. சாகுல் ஹமீது 

மேலும் தொடர்புக்கு:

K. சாகுல் ஹமீது 


துபாய் தொடர்புக்கு: 00971 - 56 33 360 93..

முத்துப்பேட்டை தொடர்புக்கு: (விரைவில் தெரிவிக்கப்படும்)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)