முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துபேட்டையில் நடைபெற்ற வாக்கு விபரங்கள் 1 முதல் 18 வார்டு! ஒரு பார்வை!




முத்துப்பேட்டை, அக்டோபர் 18 : திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 1 முதல் 18 வரைக்கான வார்டுகளின் வாக்குப் பதிவுகள் பற்றிய தகவலை முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று திருவாரூர் மாவட்டம் தேர்தல் ஆணையத்திடம் கேட்டறிந்த விபரங்கள் பின் வருமாறு. முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள மக்களின் மொத்த வாக்குகள் 13 ,183 ஆகும், இதில் ஆண்கள் தரப்பில் 3948 வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், மேலும் பெண்கள் தரப்பில் 5197 வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், மேலும் முத்துப்பேட்டையில் 9145 மொத்த ஓட்டுகள் 65 சதவீதம் பதிவாகி உள்ளதாகவும் தெருவித்தார். வார்டு வாரியான வோட்டுகளின் விபரம் பின் வருமாறு.

வார்டு வாரியான ஆண், பெண் ஒட்டு பதிவுகளின் விபரம்:

1 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 842 , அதில் ஆண்கள் தரப்பில்: 314 பெண்கள் தரப்பில்: 334 , மொத்தம் பதிவானவை: 648

2 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 779 , அதில் ஆண்கள் தரப்பில்: 209 பெண்கள் தரப்பில்: 325 , மொத்தம் பதிவானவை:534

3 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை:840, அதில் ஆண்கள் தரப்பில்: 264 பெண்கள் தரப்பில்: 344, மொத்தம் பதிவானவை:598

4 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 601, அதில் ஆண்கள் தரப்பில்:253 பெண்கள் தரப்பில்: 206, மொத்தம் பதிவானவை: 459

5 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 642, அதில் ஆண்கள் தரப்பில்: 202 பெண்கள் தரப்பில்: 244 , மொத்தம் பதிவானவை: 446

6 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 563, அதில் ஆண்கள் தரப்பில்: 126 பெண்கள் தரப்பில்: 169, மொத்தம் பதிவானவை: 295

7) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 886, அதில் ஆண்கள் தரப்பில்: 220 பெண்கள் தரப்பில்: 334, மொத்தம் பதிவானவை: 554

8 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை:626, அதில் ஆண்கள் தரப்பில்: 147 பெண்கள் தரப்பில்:239, மொத்தம் பதிவானவை: 386

9 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 789, அதில் ஆண்கள் தரப்பில்: 185 பெண்கள் தரப்பில்: 315 , மொத்தம் பதிவானவை: 500

10 ) வது வார்டு;
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 637, அதில் ஆண்கள் தரப்பில்: 227 பெண்கள் தரப்பில்: 247 , மொத்தம் பதிவானவை: 474

11 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 599, அதில் ஆண்கள் தரப்பில்: 128 பெண்கள் தரப்பில்: 259, மொத்தம் பதிவானவை: 387

12 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 856, அதில் ஆண்கள் தரப்பில்: 313 பெண்கள் தரப்பில்: 346 , மொத்தம் பதிவானவை: 659

13 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 1001, அதில் ஆண்கள் தரப்பில்: 255 பெண்கள் தரப்பில்: 404 , மொத்தம் பதிவானவை: 659

14) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 856, அதில் ஆண்கள் தரப்பில்: 313 பெண்கள் தரப்பில்: 346 , மொத்தம் பதிவானவை: 659

15 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை:599, அதில் ஆண்கள் தரப்பில்: 128 பெண்கள் தரப்பில்: 259 , மொத்தம் பதிவானவை: 387

16 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 572, அதில் ஆண்கள் தரப்பில்: 147 பெண்கள் தரப்பில்: 228, மொத்தம் பதிவானவை:375

17 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 889, அதில் ஆண்கள் தரப்பில்: 309 பெண்கள் தரப்பில்: 373, மொத்தம் பதிவானவை: 682

18 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 606, அதில் ஆண்கள் தரப்பில்: 208 பெண்கள் தரப்பில்: 225, மொத்தம் பதிவானவை: 443
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், AKL .அப்துல் ரஹ்மான்,

முத்துப்பேட்டை: பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 13 வேட்பாளர்களின் ஓட்டு ஒரு பார்வை!














முத்துப்பேட்டை,அக்டோபர் 18 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 13 வேட்பாளர்களும் மிக சிறப்பாக தனது வாக்குகளை பதிவு செய்தார்கள். முத்துப்பேட்டையில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்காக 8 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் பேட்டை பள்ளி, மதியலன்காரம் பள்ளி, ஆ.நே.பள்ளி, புதுத்தெரு பள்ளி, யூனியன் அலுவலகம், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செம்படவன் காடு பள்ளி, மருதன்காவெளி பள்ளி ஆகும். மேலும் அதில் 1 முதல் 18 வரைக்கான அந்தந்த வார்டுக்குரிய வாக்காளர்கள் மிகசிறப்பாக வாக்களித்துவிட்டு சென்றனர். மேலும் சென்ற தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்று கணித்துவிட முடிந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற கேள்வி முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து மக்களிடமும் நிலவி வருகிறது. வருகிற 22 .10 .2011 ஆம் தேதி அன்று வெற்றி வாய்ப்புகள் தெரியவரும். இதனால் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை கட்சி வேட்பாளர்களுக்கு மத்தியில் ஓர் பரபரப்பான சூழ்நிலையில்தான் காணப்படுகிறார்கள். பொறுத்திருந்து பாப்போம் யார் வெல்வார்கள் என்று?
www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK .முனவ்வர் கான், AKL .அப்துல் ரஹ்மான்.

முத்துப்பேட்டை: தள்ளாத வயதிலும் ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுக்காத முதியோர்கள்!



முத்துப்பேட்டை,அக்டோபர் 17 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில், சென்ற தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக படியான வாக்குகள் பதிவாகி உள்ளது என்று தேர்தல் ஆணையம் தெருவித்துள்ளது. மேலும் குறிப்பாக அதில் பெண்களின் ஓட்டு சுமார் 65 சதவீதத்தை தாண்டும் என்றும் கூறப் படுகிறது. முத்துப்பேட்டையில் உள்ள 18 வார்டுகளிலும் அதிகமாக பெண்கள் ஆர்வத்துடன் வந்து தனது வாக்குகளை பதிவு செய்த வண்ணம் உள்ளார்கள். அதற்கு உதாரணமாக முஹைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்த உம்மாகுள் அம்மாள், வயது 98 , பஜாரியா அம்மாள் வயது 92 , முஹைதீன் பள்ளி தெருவை சேர்ந்த பல்கீஸ் அம்மாள் வயது 90 ஆகிய மூவரும் இந்திய ஜனநாயக வாக்குரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்ற உறுதி பாட்டுடன் வந்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார்கள்.
Source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,AKL .அப்துல் ரஹ்மான்,EK .முனவ்வர் கான்,அபு மர்வா,

முத்துப்பேட்டையில் ஓட்டு போடா வந்த பெண்ணை போலிஸ் தள்ளிவிட்டதால் பரபரப்பு!




முத்துப்பேட்டை, அக்டோபர் 17 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் விறுவிறுப்பாக மக்கள் வாக்கு அளித்தனர், இந்த நிலையில் பெரிய கடைதெருவில் உள்ள ஆ,நே, பள்ளியில் பேரூராட்சிக்குட்பட்ட 6 ,7 ,8 , 9 ஆகிய வார்டுகளுக்கு வாக்கு சாவடி அமைக்கப்பட்டிருந்தனர். அப்பொழுது மரைகாயர் தெருவை சேர்ந்த முஹம்மத் அஜீஸ் மனைவி ஷகீலா பானு (27) தனது அண்ணன் மனைவியான முஹம்மத் ஃபாத்திமா உடன் வந்த அவர் ஷகீலா பானு ஓட்டு போட்டுவிட்டு தனது அண்ணன் மனைவி முஹம்மத் ஃ பாதிமாவிர்காக பின் பக்க வாசலில் நின்று கொண்டிருந்தார்,அப்போது அந்த வாக்கு சாவடியில் பாதுகாப்பில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஷகீலா பானுவை தரைக்குறைவாக திட்டி அவமதித்து தள்ளி விட்டு கதவை சாத்தியதாக தெரிகிறது . இதனால் கூட்டத்திற்கு மத்தியில் தன்னை கேவலப்படுத்தி விட்டாரே என்று கண்கலங்கி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்கு சாவடி முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் கூடி ஷகீலா பாணுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் செந்தில் நாதன், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், வருவாய் ஆய்வாளர் கிருஸ்ணகுமார், கிராம நிர்வாக அதிகாரி தியாகராஜன், ஆகியோர் வாக்காளர் ஷகிலா பானு மற்றும் அவரது சகோதரர் முகைதீன் பிச்சை ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஷகீலா பானு சம்பந்தப்பட்ட போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தார், பின்னர் வட்டாட்சியர் சம்பத்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று இதற்காக வர்த்தம் தெருவித்து கொள்கிறேன் என்று கூறியதால் ஷகீலா பானு திரும்பி சென்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், AKL .அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டையில் அமைதியாக நடைபெறும் பேரூராட்சி தேர்தல் ஒரு பார்வை!






முத்துப்பேட்டை,அக்டோபர் 17 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று மிக சுமூகமாக உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. சென்ற தேர்தலைவிட இந்த தேர்தல் மிக அற்புதமாக நடைபெற்று வருகிறது. அனைத்து மக்களும் தங்களுடைய ஓட்டை பதிவு செய்ய மிக நீண்ட வருசைளும் காத்திருந்து வாக்களிக்க தயாராகி உள்ளனர், எனவே இந்த தேர்தல் மிக சிறப்பாக அமைய வாய்ப்பு உள்ளது. தற்போது 12 மணியளவில் (முத்துப்பேட்டையில் மட்டும்) எடுத்த மொத்த ஓட்டுகள் பதிவின் விபரம் சுமார் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தெறுகிறது. எனவே அனைத்து மக்களும் தங்களுடைய ஓட்டை பதிவு செய்யும்படி எல்லா ஓட்டு பூத்துகளிலும் சுவரொட்டி விளபரமும் தேர்தல் ஆணையம் ஒட்டி இருக்கிறது.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்.AKL . அப்துல் ரஹ்மான், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்,

ரத யாத்திரையை நிறுத்துவிட்டு அத்வானி மன்னிப்புக்கோர வேண்டும்: எஸ்.டி.பி.ஐ


புதுடெல்லி,அக்டோபர் 16 : ஊழலுக்கு எதிராக ரதயாத்திரை நடத்தும் அத்வானி யாத்திரையை நிறுத்திவிட்டு மக்களிடம் மன்னிப்புக்கோர தயாராக வேண்டும் என சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கூறியுள்ளார்.வளர்ச்சியின் இரண்டாவது அப்போஸ்தலராக பா.ஜ.க உயர்த்திக் காட்டிய கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா கைதான சூழலில் ஊழல் எதிர்ப்பு முழக்கத்தை எழுப்ப பா.ஜ.கவுக்கு உரிமையில்லை. எடியூரப்பாவை தவிர அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மேலும் 3 பேர் சிறையில் இருப்பது பா.ஜ.கவின் கொள்கை வறட்சியை வெளிச்சம்போட்டு காட்டுகிறது என இ.அபூபக்கர் கூறினார்.அன்னா ஹஸாரேவை முன்னிறுத்தி ஊழல் எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தேசிய அரசியலில் எழுச்சிப்பெற நடத்திய பா.ஜ.கவின் முயற்சி தோல்வியை தழுவியுள்ளது.சங்க்பரிவார் அமைப்புகள் பிரசாந்த் பூஷணின் மீது தாக்குதல் நடத்திய பிறகு ஹஸாரேவின் சாயம் மேலும் வெளுத்துள்ளது. இதர வழிகள் ஒன்றும் இல்லாததால் ஹஸாரே மெளன விரதத்தை கடைப்பிடிக்கிறார். அத்வானி ரதத்தை கர்நாடகாவுக்கு திருப்பி மக்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும்.’ இவ்வாறு அபூபக்கர் கூறினார்.

நமது நிருபர்

சித்திக் அஹ்மத் (லண்டன்)

ரதயாத்திரையை வெற்றிப்பெறச்செய்ய லஞ்சம்: பா.ஜ.க தலைவர் சஸ்பெண்ட்


புதுடெல்லி, அக்டோபர் 16 : ஒரு புறம் பா.ஜ.கவின் தென்னக ஹீரோ எடியூரப்பா ஊழல்புரிந்து சிறையில் அடைக்கப்பட்ட வேளையில் ஊழலுக்கு எதிராக எல்.கே.அத்வானி நடத்தும் காமெடி யாத்திரையை குறித்து பரபரப்பான செய்திகளை வெளியிட பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் அளித்தது தொடர்பாக பா.ஜ.க ஊடக பிரிவு தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஊடக பிரிவைச் சார்ந்த சியாம் குப்தாதான் லஞ்சம் அளித்தது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதேவேளையில் லஞ்சம் கொடுத்து பத்திரிகையாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க எம்.பி கணேஷ்சிங், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நாகேந்திர சிங் ஆகியோர் மீது பா.ஜ.க நடவடிக்கை எடுக்கவில்லை.ஊழலுக்கு எதிராக அத்வானி நடத்தும் ரதயாத்திரையை வெற்றிப் பெறச்செய்ய பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் வழங்கியது சர்ச்சையை கிளப்பியிருந்தது.கடந்த புதன்கிழமை பா.ஜ.க எம்.பி நாகேந்திரசிங் அழைத்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் லஞ்ச பணம் விநியோகிக்கப்பட்டது. பத்திரிகையாளர்களுக்கு பத்திரிகை அறிக்கைகளுடன் அளித்த உறையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும் வழங்கப்பட்டிருந்தன.

நமது நிருபர்

புர்கானுதீன் (கனடா)

முத்துபேட்டையில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் SDPI கட்சியினர்!







முத்துப்பேட்டை, அக்டோபர் 16 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு சித்திக் மச்சன் என்கிற அபூபக்கர் சித்திக் அவர்கள் வாக்கு சேகரித்தார் இதன் பின்பு பேசிய அவர், அரசியல் என்பது மிகப் பெரிய ஒரு அறியானத்திற்கு சொந்தமானது என்றும், நமது பகுதிகளில் இருக்கக் கூடிய மாவட்ட ஆட்சி தலைவராக இருக்கட்டும், காவல் துறை அதிகாரிகளாக இருக்கட்டும், வருவாய்துறை அதிகாரியாக இருக்கட்டும் இவை அனைத்தையும் ஆட்டிப்படைக்க கூடிய சக்தி அரசியலுக்கு உண்டு என்றும், நல்லவர்கள் ஒதுங்கிக் கொண்ட காரணத்தினால்தான் கெட்டவர்களின் கூடாரமாக மாறிவிட்டது என்றும், நாம் இதை பார்த்து கொண்டு இருந்தோமையானால், இதற்கு ஒரு சிறிய உதாரணம் நம்மளுடைய பகுதிகளில் சாக்கடை நீர் ஓடிக் கொண்டிருக்கின்றது, மறு நாள் பார்த்தல் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது, எனவே இதை கேட்பதற்கு நாதி இல்லை என்று மக்கள் தவித்துக் கொண்டு இருந்தார்கள். இதை அரசியலில் மலிந்து கொண்டிருக்கின்ற சாக்கடைகளை துடைத்தெரிவதற்குத் தான் SDPI கட்சியானது அரசியலில் களம் இறங்கி உள்ளது. மேலும் ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவரவர் சதவீதத்திற்கு தகுந்தார் போல் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி துவக்கப்பட்டதுதான் இந்த SDPI . மேலும் முத்துப்பேட்டையில் வசிக்கும் மக்களின் சொத்து வரிகளை இந்த பேரூராட்சி நிர்வாகம் சொத்து வரிகளில் முறைகேடு, குடிநீர்களில் முறைகேடு, இன்னும் மக்களுக்கு சேவைபுரிவதில் முறைகேடு, கல்விக்குழு தலைவராக இருக்கக் கூடிய பேரூராட்சி தலைவர் பள்ளிகளுக்கு செய்ய வேண்டிய பல நலத்திட்டங்களை செய்யவில்லை என்றும் பள்ளிகளில் படிக்ககூடிய மாணவர்களுக்கு ஆசிரியர்களை நியமிப்பதும் இல்லை என்றும், இதை எல்லாம் போக்குவதற்கு இறைவன் மீது ஆணையாக எந்த நிதியிலும் ஒரு ரூபாய் கூட ஊழல் செய்ய மாட்டோம் என்று வாக்குறிதி கொடுக்கின்றேன் என்றும் அவர் தெருவித்தார்.சிலர் நீ எப்படி ஊழல் செய்யாமல் இருக்க போகிறாய் பாப்போம் என்று கேட்டார்கள், அதற்கு ஒரு உதாரணம் அன்ன துறை அவர்களும், கக்கன் அவர்களும், ஜீவா அவர்களும், காமராஜ் அவர்களும் ஊழால் செய்யாமல் இருந்து தனது பணியை திறன்படா செய்த வரலாறு உண்டு, இவர்களுக்கு முடியும் என்றால் நான் முஹம்மத் நபி வரலாறை படித்தவன், இந்த அபூபக்கர் சித்திகள் ஊழல் செய்யாமல் இருக்க முடியும், எனவே என்னை வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி.EK .முனவ்வர் கான்.அபு மர்வா

முத்துப்பேட்டையில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் மனித நேய மக்கள் கட்சியினர்!






முத்துப்பேட்டை,அக்டோபர் 15 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு மனித நேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் மாஷா மாலிக் என்கிற முஹம்மத் மாலிக் அவர்களை ஆதரித்து மாநில துணை பொதுசெயலாளர் தமீமுன் அன்சாரி அவர்கள் ஆசாத் நகரில் பிரச்சாரம் செய்தார் அதில் பேரூராட்சி குருத்து மக்கள் குறைகளை கூற தொலைபேசி மூலம் SMS வசதியை கொண்டு வரப்படும் என்றும், மேலும் பேரூராட்சியின் செயல்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக, பேரூராட்சிக்கு என்று தனிதொரு இணையலதளம் உருவாக்கப் போவதாகவும் அவர் தெருவித்தார். முத்துப்பேட்டையின் அமைதி, நல்லிணக்கம், முன்னேற்றம் என்ற 3 அம்ச திட்டத்தின் படி, முத்துப்பேட்டையை முழுமையாக முன்னேற முயற்ச்சிகள் மேற்கொள்ளப் படும் என்றும் அவர் தெருவித்தார்.ரத்த தானம் முகாம், மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் சேவை, அவசரகால பாதுகாப்பு, இப்படிப்பட்ட சேவைகளை கடந்த ௧௬ ஆண்டுகளாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் செய்து வருகிறது. இவற்றை மக்கள் அன்கிகரிப்பால் மனித நேய மக்கள் கட்சி முத்துப்பேட்டை உள்பட பரவலாக வெற்றி பெரும் என்றும் அவர் தெருவித்தார். இந்த கூட்டத்தில் TMMK வின் மாநில செயற்குழு உறுப்பினர் தாஜுதீன், TMMk நகர தலைவர் சம்சுதீன், மற்றும் கழக தொண்டர்கள், மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான். AKL .அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டையில் முடிவுற்ற தேர்தல் பிரச்சாரம் ஒரு பார்வை!







முத்துப்பேட்டை, அக்டோபர் 16 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்களுடைய வாக்குகளை மக்களிடம் கேட்கும் விதமாக வாகன ஏற்பாடு செய்தனர், அதில் நேற்று மலை முதல் தேர்தல் வாக்கு சேகரிப்பு 5 மணியளவில் முடிவு பெற்றது அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட சில கட்சிகளின் போட்டோ உங்கள் பார்வைக்கு...

தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்.ASNs .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான், அபு மர்வா, AKL .அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டையில் 10 லட்சம் மதிப்புள்ள வெளி மாநில மது பாட்டில்கள் பறிமுதல்!





முத்துப்பேட்டை,அக்டோபர் 16 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு முத்துப்பேட்டை பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாட பண்ணுவது போல் வந்த தகவலை அடுத்து, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சேவியர் தன்ராஜ் அவர்களின் உத்தரவின் படி முத்துப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.கோபி. (DSP ) . அவர்களின் மேற்பார்வையில் எடையூர் இன்ஸ்பெக்டர் திரு. ஆறுமுகம் சிறப்பு SI திரு.ராஜேந்திரன், செல்வம், தெட்சனமூர்த்தி, சண்முகம் இவர்களின் மூலம் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இடையூறு அருகே திடீர் சோதனையில் இடுபட்டனர். அப்போது மிக வேகமாக வந்த காரை மறைத்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 500 க்கும் மேற்பட்ட குவாட்டர் சாராய பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டிவந்த SP பட்டினத்தை சேர்ந்த ஷேக் தாவூத் வயது 35 , மற்றும் முஜூபூர் ரஹ்மான் வயது 35 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதனைதத் தொடர்ந்து மேலும் ஒரு கரை போலிசார் சோதனை செய்ய அந்த காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார், இந்த காரிலும் சுமார் 500 க்கும் மேற்பட்ட குவாட்டர் சாராய பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. தப்பியோடிய டிரைவர் போலீசார் தேடிவருகின்றனர். இதனைத் தொடர்ந்து இரு சக்கர வாகனமான பைக்கையும் அப்போது சோதனை செய்ததில் ஒரு பைக்கில் சுமார் 50 குவாட்டர் சாராய பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது இதில் அந்த பைக்கை ஓட்டி வந்த தாமரைக்கோட்டையை சேர்த்த கிஸ்சர் வயது 40 என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.அபு மர்வா, AKL .அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டை பேரூராட்சி 16 வது வார்டுக்கு போட்டியிடுகிறார் மெட்ரோ மாலிக்!




முத்துபேட்டை,அக்டோபர் 15 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள பேரூராட்சி மன்ற தேர்தலில் 16 வது வார்டுக்கு காங்கிரஸ் சார்பாக போட்டியிடப் போவதாக மெட்ரோ மாலிக் அவர்கள் தெருவித்துளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணயதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தான் வெற்றி பெற்றால் பல்வேறு நன்மைகளை எனது வார்டு மக்களுக்கு செய்வேன் என்றும், அதற்கு உதாரம் சென்ற தேர்தலில் நான் சாதித்தது தங்களுக்கு தெரியும் என்றும், கூப்பிட்ட குரலுக்கு எப்படி எல்லாம் ஓடி வந்தேன் என்றும் அவர் தெருவித்தார். மேலும் எல்லா விதமான மத்திய மாநில அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை வீடு தேடிவந்து தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்றும் எனவே ௧௬ வார்டு மக்களாகிய நீங்கள் என்னை அதிகபடியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எட்ன்ரும் அவர் தெருவித்தார். மேலும் தனது வார்டுக்கு சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பும் செய்துள்ளார். இதில் காங்கிரசின் நகர தலைவர்.ராஜேந்திரன், சட்ட மன்ற இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர். முஹைதீன் பிச்சை, மாவட்ட முன்னாள் இளைஞர் காங்கிரசின் செயலாளர். கந்தவேல், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர். தாஜுதீன், இளைஞர் காங்கிரசை சேர்ந்த தமீம், தாமரைசெல்வன்,மூத்த காங்கிரஸ் உறுப்பினர்.மாரிமுத்து, சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா, AKL .அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவி யாருக்கு?





முத்துப்பேட்டை, அக்டோபர் 15 : களத்தில் 13 பேர்...! கலக்கத்தில் கட்சிகள்...! குழப்பத்தில் மக்கள்...! திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தேர்தலுக்கு போட்டியிட 22 பேர் மனு கொடுத்து இருந்தனர். பின்னர் 9 பேர் வாபஸ் வாங்கி கொண்டனர் போட்டியில் 13 பேர் உள்ளனர். இது முத்துப்பேட்டை பேரூராட்சியில் இது வரை இல்லாத வரலாறு என்று சொல்லப்படுகிறது. காரணம் நமது சமுதாயத்தினர் தான் வரணும் என்று ஒவ்வொரு சமுதாயத்தவரும் நினைத்ததின் விளைவும் நமது சமுதாயத்தில் நான்தான் நியாயமானவன் என்று காட்டிக் கொண்டதின் விளைவும் தான் இந்த போட்டிக்கு காரணம்.அதன் வகையில் களத்தில் உள்ள 13 பேர் உறவினர்களும், நண்பர்களும் யாருக்கு வாக்கு சேகரிப்பதில் பெரும் சங்கடத்தில் பலரும் உள்ள நிலையில், பேரூராட்சியில் உள்ள 18 வார்டுக்கும் கவுன்சிலர் பதவிக்கு சுமார் 80 பேர் போட்டி போடுவதால்முத்துப்பேட்டை நகரத்தில் தேர்தல் வேலை மிக சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒவ்வொரு வேட்பாளருக்கு பின்னால் சென்று வாக்கு கேட்கும் தனது நண்பர்கள், மறுநாள் வேறு வேட்பாளருக்கு முன்னாடி சென்று வாக்கு கேட்பதால் வேட்பாளர்களுக்கு மத்தியில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப் பட்ட சூழ்நிலையில் ஒவ்வொரு வேட்பாளரிடமும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்கள் பின் வருமாறு. source from www.muthupettaiexpress.blogspot.com

1 ). அபூபக்கர் சித்திக்: நான் பேரூராட்சி நிதியிலிருந்து இறைவன் மீது ஆணையாக ஒரு ரூபாய் கூட ஊழல் செய்ய மாட்டேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

2 ). அப்துல் சலீம்: என்னை தலித் மக்கள் தேர்வு செய்து நிற்க வைத்துள்ளனர் என்றும், எனது பணி மக்கள் பாராட்டும் வகையில் அமையும் என்றும் அவர் கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

3 ) கோ.அருணாச்சலம்: நான் நீண்ட காலமாக நகர செயலாளராக இருக்கிறேன், அதற்கு காரணம் எனதின் திறமையான செயல்பாடு. நாங்கள் எதிர்கட்சியாக இருந்தபோது முத்துப்பேட்டை மக்களுக்கு போராட்ட குரல் கொடுத்துரிக்கிறேன் என்றும் அவர் கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

4 ) முகைதீன் அடுமை: நான் இப்பகுதி மக்களுக்கு தேவை படுகிற பல விசயங்களையும், பல நல்ல காரியங்களையும், இஸ்லாமிய மக்கள் மக்கா செல்ல பல்வேறு சேவைகளையும் செய்துள்ளேன் என்றும், நமது பேரூராட்சியை நல்ல நிர்வாகமாக மாற்றுவேன் என்றும் அவர் கூறினார்.source from www.muthupettaiexpress.blogspot.com

5 ). முஹம்மத் மாலிக்: மக்களின் முக்கிய பிரச்சனையான, குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு இதனை முன்னிருமை படுத்தி கவனம் செலுத்துவதோடு மக்களின் தேவையை நன்கு அறிந்து திறமையாக செயல்பட பாடு படுவேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

6 ). பத்மநாபன்: என்னை முத்துப்பேட்டை மக்கள் தேர்வு செய்தால் மக்களுக்கு சேவை செய்வதே எனது வாழ்க்கையாக மாற்றிக் கொள்வேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

7 ). சிவக்குமார் பேட்டை: என்னை தேர்வு செய்தால் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக அமையும் என்று கூறினார்.source from www.muthupettaiexpress.blogspot.com

8 ). எஸ்.தமீம்: நான் தி.மு.க.வின் உண்மையான விசுவாசி, நான் கவுன்சிலராக இருந்து பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறேன்,என்னை தேர்வு செய்தல் சரித்திரத்தில் சாதனை படிப்பேன் என்று கூறினார்.source from www.muthupettaiexpress.blogspot.com

அதே போல சுயேச்சை வேட்பாளரான:

9). சஹாப்தீன்: மொத்தம் உள்ள 18 வார்டுகளையும் என் நேரடி கண்காணிப்பில் இணைத்து அந்த அந்த வார்டு உருபினர்கலையும், முக்கிய பிரமுகர்களையும் கலந்து ஆலோசித்து, தேவைகளை அறிந்து உடனுக்குடன் செய்து கொடுப்பதற்கு ஏற்பாடு செய்வேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

10 ). ஹாரூன்: முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு தகுதியானவர் எல்லோருக்கும் அறிமுகமானவராக இருக்க வேண்டும் என்றும், அதற்கு தகுதியானவர் நான்தான் என்றும் கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

11 ). லெப்பைத் தம்பி: மக்கள் பணியில் முறையான சேவை செய்யாமல் மக்களை அலைகழிக்கும் நேர்மையற்ற அதிகாரிகளை அகற்றி, நேர்மையான அதிகாரிகளை அமைத்து மக்கள் பணி தாமதமின்றி நடந்திட ஏற்பாடு சென்வேன் என்று கூறினார்.

12 ). ஜெயச்சந்திரன்: எல்லா மக்களுக்கும் பயன் பெரும் விதமாக பல்வேறு நல திட்டங்களை முத்துப்பேட்டை மக்களுக்கு கொண்டு வருவேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

13 ). ஹாஜ மைதீன்: மிக முக்கியமாக குடிநீர் வசதி, தங்கு தடையின்றி முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்வேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

இந்த நிலையில் நமது சமுதாயத்தினர் தான் வரணும் என்று ஒவ்வொரு சமுதாயத்தினரும் நினைக்கின்றார்கள். ஆனால் அதற்கு மாறாக ஒரு சமுதாயத்தில் பலரும் போட்டியிடுவதாலும், ஆளு ஆளுக்கு வித்தியாசமான வாக்குறுதி வழங்குவதாலும் மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.யார் ஓட்டை யார் பிரிப்பார்? ஒவ்வொரு வேட்பாளர்களும் தனக்கு கிடைக்கும் வாக்குகளை கூறும் போது 13 வேட்பாளர்களுக்கு 48 ஆயீரம் ஓட்டுகள் கணக்கு வருது ஆனால் பேரூராட்சியில் 13 ஆயிரம் வாக்குதானே இருகின்றது. அதில் எத்தனை பதிவாகுமோ.. இதன் கணிப்பு யாருக்கு சாதகமோ என்ற குழப்பத்தில் கட்சியினர் உள்ளனர். இதே நிலைமைதான் 18 வார்டு கவுன்சிலர்கள், வேட்பாளர்களுக்கும் ஆனால் முத்துப்பேட்டை மக்கள் வேட்பாளர்களில் தனது சொந்த நடைமுறையில் யாரை பிடிக்கிறதோ அவர்களை தேர்வு செய்ய தயாராகி விட்டார்கள். முத்துப்பேட்டையில் யாரை நிலைமையை தற்போது கணித்து பார்க்கும் போது இரு சமுதாயத்தின் வாக்குகளையும் யார் அதிக அளவில் வாக்கு வாங்குவார்களோ அவர் தான் முத்துப்பேட்டையின் பேரூராட்சியின் தலைவர் ஆவார். பொறுத்திருந்து பாப்போம்!!! ஒற்றுமையின் குரல் ஓங்க.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK .முனவ்வர் கான்.ASNS .அப்துல் பாரி.AKL .அப்துல் ரஹ்மான்.அபு மர்வா, முஹைதீன்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)