முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் உள்ள லகூனை 2 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த தமிழக முதல்வர் உத்தரவு...




முத்துப்பேட்டை, செப்டம்பர் 10: முத்துப்பேட்டையில் உள்ள மாங்குரோவ் சதுப்புநிலக்காடு உலக வரலாற்றில் எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது. இதன் அளவு 11,885 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. முத்துப்பேட்டை கழிமுகத்தில் மாங்குரோவ் காடுகள், சிற்றோடைகள், கடற்கரைக் காயல், மணல் மேடுகள் அமைந்துள்ளன. குளிர்காலத்தில் இப்பகுதியில் வாழ்வதற்கென நூற்றுக் கணக்கான விதவிதமான வெளிநாட்டு நீர்ப்பறவைகள் வருகின்றன. அவற்றில் கிரே பெலிக்கன் பழுப்பு கூழைக்கடா), கிரேட்டர் பிளம்மிங்கோ (பூநாரை), டார்டர் (பாம்புத் தாரா), பிண்டெயில் டக் (ஊசி வால் வாத்து), பெயின்டட் ஸ்டாக் (செங்கால் நாரை) ஆகியவைகள் முத்துப்பேட்டையில் காணப்படும்  பறவை இனங்களாகும். குள்ளநரி, பழந்தின்னி வெளவால் ஆகிய பாலூட்டி பறவைகளும்  வாழ்கின்றன.  

மேலும் முத்துப்பேட்டை கழிமுகத்தில் உள்ள முள்ளிப்பாலம் காயல் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை காயல் ஆகும். இது 11 சதுர கிலோ மீட்டர் பரப்புடையது. காவேரி ஆற்றின் கிளை நதிகளான நசுவினியாறு, பட்டுவாஞ்சியாறு, பாமினியாறு, கோரையாறு, கிளைத்தாங்கியாறு, மரக்காக்கோரையாறு ஆகிய ஆறுகள் இங்குள்ள மாங்குரோவ் காடுகளுக்கு நீர்வளம் தருகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தப் பகுதியை சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு களிக்கும் வகையில் மேம்படுத்தி அழகிய சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக உருவாக்குவதற்காக 2 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இந்த ஒதுக்கீட்டின் மூலம் கண்ணாடி இலைப் படகுகள் வாங்குதல், மர வீடுகள் அமைத்தல்,  வரவேற்பு மையம் கட்டுதல், காட்சி கோபுரம் அமைத்தல், அனுகுசாலை அமைத்தல்,  குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் ஆகிய மேற் கொள்ளப்படும். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் முத்துப்பேட்டையில் சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

தொகுப்பு: ஜே: சேக் பரீத் 




பிள்ளையார் ஊர்வலம் எதற்காக?



தமிழகம், செப்டம்பர் 10: பிள்ளையார் வழிபாட்டை, வாதாபியிலிருந்து இறக்குமதி செய்து தமிழர்கள் மத்தியில் புகுத்தியது (கி.பி. ஏழாம் நூற்றாண்டில்) பரஞ்சோதி என்ற பார்ப்பன தளகர்த்தன் ஆவார். (பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் பிறந்தது எப்படியோ? என்ற பல்கலைக் கழகப் பாட நூலில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது). 
 இங்கே பரவிய - பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாக பிள்ளையார் வழிபாடு, விநாயகர் சதுர்த்தி - ஏதோ ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் முதல் 5 ரூபாய் பிள்ளையார்வரை களி மண்ணால் செய்யப்படுவதை வாங்கி வீட்டில் வழிபட்டு, ஆற்றிலோ, குளத்திலோ, கிணற்றிலோ போடுவது வழமை.

அண்மைக்காலங்களில் - வடக்கே இருந்து ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்புகள் தாங்கள் பெறும் பெரும் பணத் திற்காக, வட முதலாளிகள் உதவியால் தமிழ்நாட்டில், மும்பை யைப் போலவே, 10 அடி, 15 அடி ராட்சசப் பிள்ளையார் என்று வேடிக்கை - விநோத உருவங்களைச் செய்து, ரசாயனக் கலவை கள் - வண்ணங்களைப் பூசி, அப்பாவி ஏழை எளிய அடித்தட்டு வறுமையாளர்களான மக்களுக்கு கைநிறையப் பணம் கொடுத்து, அவர்களும் பக்தி - போதை - இரண்டுக்கும் ஆளாகி, பெரும் பிரச்சினைகளை உருவாக்கி, கடலில் - ஆற்றில் கரைக்கும் வகையில், இந்து மதப் பண்டிகைகளால் தங்கள் கட்சிகளை வளர்த்து, மதவெறியைக் கிளப்பிடும் அருமையான, எளிமையான வழியாக ஆக்கி குளிர்காய்கின்றனர்!

வேண்டுமென்றே இஸ்லாமியர்களின் பள்ளி வாசல் வழியே செல்வது, சமூக நல்லிணக்கத்தைக் குலைப்பது போன்ற அடா வடித்தனத்தில் ஈடுபட்டு, அரசுகளுக்கு மிகப்பெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை ஏற்படுத்திடுவதை ஆண்டு தவறாத வாடிக்கையாக்கி வேடிக்கை காட்டுகின்றனர்

வாக்கு வங்கிகளுக்கு அஞ்சி - பல அரசுகள் இது ஏற்படுத் தும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையையோ, மாசு கட்டுப்பாட்டினைப் பற்றியோ கவலைப்படாது, சுற்றுச் சூழலைக் கெடுக்க பிள்ளை யாரைக் கரைக்கும் விசர்ஜன வேடிக்கைக் கூத்தினைத் தடுக்காமல், மயிலே, மயிலே இறகு போடு! என்கின்றனர்!

உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் பல தெளிவாகவே, கடலில் - ஆற்றில் இரசாயனக் கலவைப் பிள்ளையார்களைக் கரைத்து மாசுபடுத்தக் கூடாது என்று தீர்ப்புகள் - சட்டப்படி தடுக்க வாய்ப் பினை அள்ளித்தரும் வகையில் இருந்தும் கைபிசைந்து வேடிக்கை பார்க்கின்ற பரிதாப நிலையே நீடிக்கிறது!

மாசு கட்டுப்பாட்டு வாரியச் செயலாளர் ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரி - வேண்டுகோள்தான் விடுக்கிறார். அவர் சட்டப்படி தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாமே!

முன்பு தமிழ்நாட்டில் இருந்ததுபோல, சிறுசிறு பிள்ளையார் பொம்மைகளை வாங்கி வைத்து உங்கள் பிள்ளை விளையாட்டை, பக்தித் திருவிழாவான சதுர்த்தியைக் கொண்டாடலாமே தவிர, பொதுமக்களுக்கு இடையூறு, பொதுச்சொத்து நாசம், பொது அமைதிக்குக் கேடு - மத நல்லிணக்கத்திற்கு மாசு - இவைகள் கூடாது என அரசு கூறி அதைத் தடுக்க முன்வரவேண்டும்.

                                              



நீதிமன்றங்கள் ஆணையிட முடியும். அதனைச் செயல்படுத் தித் தடுப்பது அரசு அதிகாரிகள் - காவல்துறை அதிகாரிகள் - மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கையில்தான் உள்ளது. எனவே, பெரிய பெரிய கிரேன்கள், பல்லாயிரக்கணக்கில் காவல்துறைக் குவிப்பு இதனை மிச்சப்படுத்தலாமே!

எனவே, வருமுன்னர்க் காப்பது இத்துறையிலும் அவசியம்.

மத உணர்வு புண்படுகிறது என்பதைவிட, மதவெறியை மக்களிடையே பரப்புவது எவ்வளவு ஆபத்து என்பதை உணர வேண்டாமா? நடவடிக்கை தேவை! தேவை!!

எடையூரில் விநாயகர் சிலைகள் பறிமுதல் 24 பா.ஜ.,வினர் அதிரடி கைது...



முத்துப்பேட்டை, செப்டம்பர் 10:  பிரதிஷ்டை செய்ய எடுத்துச் சென்ற, 23 விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்த போலீஸார், பாரதிய ஜனதா மாநில செயலாளர் உள்பட, 24 பேரை கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா முத்துப்பேட்டையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலை ஊர்வலம், 17ம் தேதி நடக்கிறது. அதற்கு பிரதிஷ்டை செய்வதற்காக நேற்று மாலை, 23 விநாயகர் சிலைகளை பாரதிய ஜனதா கட்சியினர் எடுத்து வந்தனர்.

அப்போது, எடையூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே, டி.எஸ்.பி., பாஸ்கர், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீஸார் அவர்களை வழி மறித்து, "கடந்த ஆண்டு, 16 சிலைகள் மட்டுமே வைக்க அனுமதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கூடுதல் சிலைகள் வைக்க அனுமதிக்க முடியாது' எனக்கூறி, சிலைகளை பறிமுதல் செய்தனர்.

இதை கண்டித்து, பாரதிய ஜனதா மாநில செயலாளர் முருகானந்தம், பொறுப்பாளர்கள் ராமலிங்கம் உள்பட பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி., மகேஷ்குமார் காளிராஜ் உத்தரவின்படி, முருகானந்தம் உள்பட, 24 பேரை போலீஸார் கைது செய்தனர். பறிமுதல் செய்த சிலைகள், எடையூர் ராம மடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

கண்ணை மறைக்கும் காவிப்புழுதி - ஆர்எஸ்எஸ் -இன் பொய்யும் புரட்டும் !!












முத்துப்பேட்டை, செப்டம்பர் 10: மசூதிக்கு முன்னால் மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்து மதவெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம்.

”நாடு முழுவதிலும் எங்கெல்லாம் ஒரு மசூதி அல்லது ஒரு முசுலீம் பேட்டை இருக்கின்றதோ, அந்தப் பகுதியை உண்மையில் தமக்கே சொந்தமான சுதந்திரமான பிரதேசமாக முசுலீம்கள் கருதுகின்றனர். ஹிந்துக்களின் ஊர்வலம் இசைக் கருவிகளுடனும் பாட்டுக்களுடனும் அவ்வழியே சென்றால், அவர்கள் தமது மத உணர்ச்சிகள் புண்படுத்தப்பட்டதாகச் கடுங்கோபம் கொள்கின்றனர். இனிய இசையைக் கேட்டுப் புண்படும் அளவிற்கு, அவர்களுடைய சமய உணர்ச்சி தொட்டால் சிணுங்கியாக இருக்குமானால் தமது மசூதிகளைக் காடுகளுக்கு மாற்றி அமைத்துக் கொண்டு அங்கு மௌனமாகத் தொழுகை நடத்தக் கூடாதா? சாலை ஓரத்தில் ஒரு கல்லை நட்டு அதற்கு வெள்ளையடித்து, அதனைத் தொழுகைத் தலம் என்று அறிவித்துவிட்டு, அங்கு இசை பாடப்படுவது தமது தொழுகையைக் கலைப்பதாகும் எனக் கூப்பாடு போடுவானேன்?”
ஆர்.எஸ்.எஸ்.-இன் இரண்டாவது தலைவர் கோல்வால்கர், ‘ஞானகங்கை‘ இரண்டாம் பாகம் –பக்.170.
மசூதிக்கு முன்னால் நடக்கவோ, பாடவோ மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்து மத வெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம். மசூதிகளின் தொழுகைக் காலத்தோடு பிரச்சினை இல்லாமல் நல்லிணக்கத்தோடு இயங்கி வந்த மக்களிடையே – இல்லாத ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி, முசுலீம் எதிர்ப்புக் கலவரம் நடத்துவதே அவர்கள் நோக்கம். அதைப் பல இடங்களில் ஆண்டுதோறும் செய்தும் வருகிறார்கள்.
முதலில் மசூதிகள் பிரபலமான, பரபரப்பான தெருக்களிலும், சந்தைகளிலும், வணிக முக்கியத்துவம் மிகுந்த இடங்களில் இருப்பது உண்மைதான். காரணம், அவ்வட்டாரத்தில் கணிசமான முசுலீம்கள் வாழ்வதும், அதிலும் வணிகர்களாக இருப்பதும், தமது வேலை நேரத்தில் குறிப்பாக வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்து போக வசதியாக இருக்கவும்தான் அப்படி கட்டப்படுகின்றன. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.
அதேசமயம் மசூதிகள் முன்பு மாணவர்கள், தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் ஊர்வலமாய்ப் போகிறார்கள். ஏன், கோவில் திருவிழாக்கள் கூட இடையூறின்றிச் செல்லுகின்றன. மசூதி அருகே பொதுக் கூட்டங்கள் நடப்பதும், பாங்கு ஓதும் நேரம் ஓரிரு நிமிடம் அமைதி காப்பதும் தமிழகத்தில் இயல்பான காட்சிகள்தான். இதனாலெல்லாம் எங்கும் கலவரம் ஏற்பட்டதில்லை. 1980-களில் தோன்றிய இந்து முன்னணி, மசூதி முன்பு விநாயகர் ஊர்வலத்தை வம்படியாக நடத்திய போதுதான் இக்கலவரங்கள் ஆரம்பித்தன. சரியாகத் தொழுகை நேரத்தில் ஊர்வலம் நடத்துவது, ”துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியைக் கட்டு, அல்லாவுக்குக் குல்லா போட்டு அரேபியாவுக்கு அடிச்சுத் துரத்து, இந்த நாடு இந்து நாடு இல்லேங்கிற துலுக்கன் யாரு” போன்ற ‘இனிய இசை மொழிகளை’க் கூவுவது இவற்றினால்தான் தகராறுகள் ஆரம்பித்துக் கலவரங்களாய் முடிகின்றன.
பம்பாய், ஹைதராபாத், சென்னை மூன்று நகரங்களிலும் ஆர்.எஸ்.எஸ். வானரங்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலங்கள் மசூதி வழியாகச் சென்று முசுலீம் மக்களைத் தாக்குவதற்கான அவலங்களாய் மாறிவிட்டன. தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் இந்த நோய் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. எனவே மசூதி முன்பு ஊர்வலம் நடத்தும் இந்து மதவெறி அமைப்புக்களை முழுமையாகத் தடை செய்யும் போதுதான் இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்ட முடியும். பெரும்பான்மை இந்துக்களின் ஏகபோகப் பிரதிநிதிகள் என உரிமை கொண்டாடும் சிறு கும்பலான பார்ப்பன – இந்து மதவெறி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி முறியடிப்பது உழைக்கும் மக்களின் கடமையாகும்.
மசூதியை வைத்து உரிமைக்குரல் எழுப்பும் இவர்கள்தான் அக்கிரகாரம், ஊர், தேரோட்டம் போன்றவற்றில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கிறார்கள். கேவலம், தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து தேரை இழுக்க முடியாது என் கண்டதேவியில் சில ஆண்டுகளாய் நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தேர் இந்த மரமண்டைகளின் யோக்கியதைக்குச் சமீபத்திய சான்று.


கோலாகலமாக நடைபெற்ற கொய்யா இல்லத் திருமணம் - களைகட்டியது கொய்யா மஹால் !!























முத்துப்பேட்டை,செப்டம்பர் 09: செல்வந்தர் கொய்யா   NA ரெஜாக் ஹாஜியார் அவர்களின் பேரனும், நேனா மோட்டார்ஸ் உரிமையாளர் புது தெரு  ASN முஹம்மது இப்ராஹீம் A. ஹஜ் அவர்களின் செல்வப் புதல்வனுமாகிய,   மௌலவி M  முஹம்மது முஜாஹிதீன் அவர்களுக்கும், செல்வந்தர் கொய்யா ஹாஜி SMKN முஹம்மது தாவுது மரைக்காயர் அவர்களின் பேத்தியும், பூக்கொய்யா ஹாஜி செய்யது அப்துல் ரஹ்மான் அவர்களின், செல்வப் புதல்வியுமாகிய S.ரஹ்மத் நிஷா அவர்களுக்கும், கடந்த 01-09-2013 அன்று கொய்யா மஹாலில் நிக்காஹ் நடைபெற்றது. சரியாக காலை 11 மணிக்கு நிக்காஹ் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை ஜமால் பாய் அவர்களின் மகனார் மௌலவி இத்ரீஸ் ஆலிம்   சுமார் 40 நிமிடங்கள் சிறப்பு பயான் நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பல்வேறு சமுதாய அமைப்புகளை சார்ந்தவர்கள் ,வர்த்தகர்கள் ,உலமா பெருமக்கள் ,பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . குறிப்பாக இந்தியன்  யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் mp , நாகை நாடாளுமன்ற  உறுப்பினர் AKS விஜயன் ,MP, தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோ. பழனிசாமி, பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் NR ரங்கராஜன், பட்டுக்கோட்டை நகரமன்ற உறுப்பினர் SR ஜவஹர்பாபு, திருத்துறைபூண்டி  சட்டமன்ற உறுப்பினர் கே. உலகநாதன், மற்றும் பலர் கலந்துகொண்டனர் .



வந்திருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் பல்வேறு பணிகளின் காரணமாக திருமணம் முடிந்த பின்னரே வந்து கலந்துகொண்டனர் . 



ஆயிரக்கணக்கானோர் வருகை தந்ததால்  கொய்யா மஹால் நிரம்பி வழிந்தது. ஆண்களுக்காக மதிய விருந்து கொய்யா மஹாலிலும், பெண்களுக்காக மதிய விருந்து கொத்பா பள்ளிவாசலிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இதனால் கூட்ட நெரிசலை தவிர்த்து தொய்வின்றி உணவு பரிமாற்றம் நடப்பதற்கு ஏதுவாய் அமைந்தது .மேலும் அனைவரது தாகம் தீர்க்க குளிர்பானமும் விநியோகிக்கப்பட்டது . இதற்காக பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட குளிர்பான கம்பெனி ,கொய்யா மஹால் நுழைவு வாயிலில் பிரத்தியேகமாக ஸ்டால் அமைத்திருந்தது முத்துப்பேட்டை திருமண வரலாற்றில்  புதுமை என  வந்திருந்தவர்கள் கூறினார்கள் . 



திருமண மாப்பிள்ளை அரபுகள் அணியக்கூடிய தோப்பு  மற்றும் தலையில் கருப்பு நிற தலைப்பா அணிந்து மிகவும் எளிய  தோற்றத்தில் காட்சியளித்தார். மணமக்கள் நீடூழி வாழ வல்ல இறைவனிடம் நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.



மெளத்து அறிவிப்பு: "அபூ ஆஃப்ரின் என்கின்ற ரபீக் ஜெக்கரிய்யா"



முத்துப்பேட்டை, செப்டம்பர் 09: குண்டாங் குலத்தெரு மர்ஹும் M. முஹம்மது காசிம் அவர்களின் மகனும், பாபு மெஹராஜ் என்கின்ற M. முஹம்மது அலி, M. சுல்தான், M. சவுக்கத் அலி ஆகியோரின் அண்ணன் மகனும், ரம்ஜான் அலி, நக்கம்பாடி அஸ்ரப் அலி, N. சாதிக் இவர்களின் மைத்துனரும், RMK. N. சேக் மன்சூர் சகோதரர்களின் அக்கா மருமகனும், M. முஹம்மது இபுராஹிம் இவர்களின் சகலையும், R. முஹம்மது காசிம் அவர்களின் தகப்பனாருமாகிய "முத்துப்பேட்டை ORG இணையத்தள ஆசிரியருமான அபு ஆப்ஃரின் என்கின்ற ரபீக் ஜெக்கரிய்யா" அவர்கள் இன்று காலை 6.30 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணியளவில் முஹைதீன் பள்ளி கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் கபரு, மற்றும் மறுமை வாழ்க்கைகாக துவா செய்யுமாறு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அறிவிப்பவர்:

பாபு மெஹராஜ் என்கின்ற M. முஹம்மது அலி சகோதரர்கள்.

தொகுப்பு:

K.M. காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டையில் நடந்து கொண்டிருப்பது என்ன.? ஒருவர் மீது ஒருவர் புகார்.! எக்ஸ்பிரஸ் தரும் ரிப்போர்ட்..



முத்துப்பேட்டை, செப்டம்பர் 08: முத்துப்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சியன் மாவட்ட செயலாளர் S. முஹம்மது மாலிக் அவர்களைப்பற்றி அவதூறான செய்திகளை SDPI கட்சியினர் பரப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் துபாயிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட கேள்விக்கு பதிலளித்த MMK கட்சியன் மாவட்ட செயலாளர் S. முஹம்மது மாலிக் அவர்கள், முத்துப்பேட்டையில் நடந்தேறிய விரும்பத்தாகத சம்பவங்கள் நடந்து முடிந்து சில நாட்கள் ஆகின்றன என்றும், அந்த சம்பவத்தை இணைத்து பொய் பிரச்சாரங்கள் மட்டும் நீடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். இதில் நடந்து முடிந்திட்ட கலவர சம்பவங்களுக்கு இன்னார் காரணம் என காவல்துறையால் அறியப்பட்டு இருதரப்பிலும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பட்டது யாவரும் அறிந்ததே. 

அப்படி சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டவர்கள் SDPI கட்சியை சார்ந்தவர்கள் என்பதால் அவர்களை நான் ஏதோ போலீசாரிடம் அடையாளம் காட்டி கொடுத்துவிட்டதாக ஒரு பொய்யான தகவலை முன் வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், முத்துப்பேட்டையில் நடந்து வந்துள்ள கலவர சம்பவங்களுக்கு சம்பந்தமே இல்லாத அப்பாவிகள் தான் இதுவரை கைது செய்யப்பட்டு வந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். இதற்க்கு உதாரணமாக 2005 ஆம் ஆண்டு அப்பாவியான தண்டாயுதபாணியை வெட்டிவிட்டு ஓடியவர்களை யாரும் கைது செய்யப்படாமல், அப்பாவியான 32 பேர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் என்மீது குற்ற எண் 329/2005ல் 147, 148, 341, 324, 397 ஆயுத சட்டம் ஆகிய பிவிவுகளின் கீழ் நானும் கைது செய்யப்பட்டு 43 நாட்கள் சிறையில் இருந்தேன் என்றும், இப்போதாவது முஹம்மது மாலிக் M M K மாவட்ட செயலாளர் என்று மாவட்டத்துக்கே தெரியும் என்றும், அப்போது என்னை பற்றி அதிகம் தெரியாது அப்படி இருக்கும் போது என்னை காட்டிகொடுத்தது யார்? என்றும் கேள்வி எழுப்பினார். இப்போது என்னை கைது பண்ணினால் நான் இந்த கேள்வியை கேட்க்க மாட்டேன் ஏனெனில் இப்போது என்னைப்பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீங்கள் ஆங்கங்கே தங்களை பற்றி விளம்பரம் படுத்தி கொள்ள புகைப்படம் தாங்கிய பிளெக்ஸ் பேனர்கள் விளம்பர சுவரொட்டிகள் பெயர்தாங்கிய துண்டு பிரசூரங்கள் இவைகள் மூலம் தங்களை விளம்பரப்படுதிக் கொண்டு பெயர்களை அவன் சொல்லி விட்டான் இவன் சொல்லி விட்டான் என்று சொல்லி கொண்டு அலைவது ஒரு விளம்பரமே தவிர என்றும், விபரம் புரிந்த எவரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் உண்மையை உடைத்து சொல்ல வேண்டு மென்றால் இந்த முறை நடந்தேறிய கைது சம்பவங்கள் யாவும் காவல்துறை முன் ஏற்பாடாக பதிவு செய்து வைத்திருந்த வீடியோ பதிவில் இடம் பெற்றவர்களை இனம் கண்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பதுதான் அப்பட்டமான உண்மை என்றும், எந்த தவறும் செய்யாமல் நான் கைது செய்யபட்ட காலத்தை ஒப்பிடும் போது இந்த முறை பெரிய அளவில் அப்பாவிகள் யாரும் கைது செய்யப்படவில்லை, யாருடைய வீட்டு கதவும் உடைக்கப்படவில்லை, யாருடைய தகப்பனாரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல வில்லை, வெளியில் நடமாட்டம் இல்லாமல் நம்மை வீட்டுக்குள் முடக்கி விடவில்லை, தப்பித்தோம் பிழைத்தோம் என்று அப்பாவிகள் யாரும் வெளி ஊர்களுக்கு ஓடிவிடவில்லை, எந்த கடையும் ஒருநாள் கூட அடைக்கப் படவில்லை, பேருந்துகள் இயக்கப்படமால் இல்லை, அவர் அவர் வேலைகளை அவரவர்கள் பார்த்தோம் என்பது தானே உண்மை என்றும் அவர் தெரிவித்தார்.

 மேலும் நான் ஒன்று கேட்கிறேன் கலவர சம்பவம் நடந்து விட்டது அதற்க்கு சம்பந்த பட்ட வர்கள் மீது கைது நடவடிக்கை வரத்தானே செய்யும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் கைது நடவடிக்கைக்கு உட்பட்டுதானே ஆகா வேண்டும் என்றும், எனது சமுதாய சொந்தங்களே நான் இந்த ஊரையும், இந்த ஊர் ஜமாஅத் உறவுகளையும், இந்த ஊரில் உள்ள அனைத்து தரப்பு மனிதநேயம் கொண்ட மக்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என்ற வகையில் சொல்கிறேன் நான் யாரையும் வசைபாடி வம்புக்கு இழுத்து கொண்டும் கடின தொந்தரவு கொடுத்து கொண்டும் ஜமாத்தின் கட்டுப்பாட்டுக்கு கட்டுங்கடங்காமல் ஊரின் அமைத்திக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டும் சிலரை போல் செல் போன் வைத்து அதன் மூலம் உளவு வேலை பார்த்துக் கொண்டும் தெரு தெருவாக திரிபவன் நான் அல்ல என்றும், அவர் தெரிவித்தார். 

இதிலும் நீங்கள் குறை கண்டு இல்லை இல்லை நீதான் காரணம் என்று சொல்பவர்கள் யாராவது இருந்தால் என் மீதுள்ள குற்றம் சாட்டுகளை முன் வைத்து என்னிடம் நேரடியாகவோ அல்லது பொது இடத்திலோ இது சம்பந்தமாக விவாத்திக்க எந்த குற்றமும் செய்யாத நான் தாயாராக இருக்கிறேன் என்றும் இதற்க்கு நீங்கள் தயாரா.? என்றும் அப்போது அவர் கேள்வி எழுப்பினார். இந்த செய்திகள் அனைத்தையும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்துத்துடன் பகிருந்து கொள்ள காரணம் நமது சமுதாய இளைஞர்களிடம் என்னை பற்றி தவறான பொய் பிரச்சாரம் செய்து அதனை நம் சகோதர்கள் புறம்தள்ளி அவரவர்கள்தான் உண்மையை விளக்க சொல்லி சொன்னதால்தான் நான்  இவற்றை உங்கள் முன்பு எடுத்துரைக்கிறேன் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். 

நானும் என்னை சார்ந்தவர்களும் முன் வைத்த கருத்துகளை உங்கள் முன்பு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றும், அவையாவது ம.ம.க. மாவட்ட செயலாளர் முஹம்மது மாலிக் ஆகிய நான் என் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் SDPI கட்சியினருக்கு பகிரங்க சவால் விடுகிறேன் என்றும், நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகளை பொது இடத்தில் வைத்து ஆதாரத்தோடு நிரூபிக்க தயாரா? என்றும் அப்படி நிரூபித்துவிட்டால் நான் பொதுவாழ்க்கையில் இருந்து விலகிக்கொள்ள தயார் என்றும், இதனை ஏற்றுக்கொண்டு முன்வர SDPI கட்சியின் நிர்வாகிகள் தயாரா என்றும் அவர் சவாலை முன்வைத்துள்ளார். 


இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட்  ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர்  A. அபூபக்கர் சித்திக் அவர்களிடம் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் துபாயிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், மனித நேய மக்கள் கட்சியினர், SDPI கட்சியின் மீது கூறப்பட்டுள்ள அவதூறு சம்பந்தமாக SDPI கட்சியின் பொறுப்பாளர்கள், உறுபினர்கள் யாரைப்பற்றியும் எந்தவிதமான அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை என்றும், தன்னை பற்றிய ஓர் மளிவான விளம்பரத்திற்காகவே அவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என்றும், அவர் தெரிவித்தார்.

மேலும் இது போன்ற செயல்பாடுகளில் ஒருக்காளும் SDPI கட்சியினர் ஈடுபடவில்லை என்றும், யாரேனும் MMK கட்சியின் மீது அவதூறான செய்திகளை பரப்பிருந்தாள் மாவட்ட நிர்வாகிகள் இதே ஊரான முத்துப்பேட்டையில் தான் இருந்து வருகிறார்கள் என்றும், அந்த மாவட்ட நிர்வாகிகளை நேரடியாகவோ, அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்களுடைய விளக்கங்களை அறிவித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுவது சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல அவரை சார்ந்திருக்கக்கூடிய கட்சிகளும் இழுக்கானது என்றும் மேலும் அவர் தெரிவித்தார். 

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தின் வேண்டுகோள்: 

அன்பிற்கினிய சகோதரர்களே நமதுதூரில் உள்ள மதவாத சக்திகளுக்கு மத்தியில் நமதூர்  ஓர் மாபெரும் வளர்ச்சியை மேற்கொண்டு வரும் இந்த தருணத்தில் நமக்குள் ஏன் இந்த சண்டை சச்சரவுகள்? மேலும் மதவாதிகளுக்கு தக்க செருப்படி கொடுக்கும் நிகழ்வு நமதூரில் மாற்று மத சகோதரர்கள் மூலம் நடத்திய மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சியே ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.அவர்களுக்கு நாம் ஓர் எடுத்துக்காட்டாக நடந்து கொள்ள வேண்டும்.  அதை விட்டுவிட்டு இப்படிபட்ட சூழ்நிலையில் நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்வது நமது மார்கத்தில் இடமில்லை. ஆகவே யாரையும் யாரும் பகைவராக கருதாமல், தனது கூட பிறந்த சகோதரர்கள் போல வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. மேலும்  ஏக நாயனானாக அந்த அல்லாஹ்வின் கைற்றை வலுவாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் இறைவனின் உதவி என்றும் நமக்குத்தான். 

தொகுப்பு:

A. முஹம்மது இலியாஸ். MBA., MA. (Journalism & Mass Communication) 



முத்துப்பேட்டை: PFI வின் மாநில செயற்குழு உறுப்பினரை கைது செய்ய முயற்சி, இளைஞர்கள் திரண்டதால் பரபரப்பு:








முத்துப்பேட்டை, செப்டம்பர் 07: முத்துப்பேட்டையில் PFI வின் மாநில செயற்குழு உறுப்பினரை  போலீசார் கைது செய்ய முயன்றதால் 100 க்கும் மேற்பட்ட மேற்பட்ட இளைஞர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முத்துப்பேட்டையில் ரம்ஜான் பண்டிகை அன்று பாரதிய ஜனதா கட்சி, SDPI கட்சி சார்பில் தனித்தனியாக நடைபெற்ற பேரணியால் கலவரம் வெடித்தது. இது தொடர்பாக பாஜக மாநில செயலாளர் முருகானந்தம் உட்பட 50  மீதும், PFI வின் மாநில செயற்குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் தலைமையில் 150 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 இருதரப்பிலும் 20 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மீதமுள்ளவர்கள் தலைமறைவாகி முன்ஜாமினுக்கு சென்னை ஐகோர்டில் தாக்கல் செய்திருந்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அபூபக்கர் சித்திக், சேக் முஹைதீன், மாலிக், சர்தார்,  முன்ஜாமீன் கிடைத்தது. இவர்கள் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜராக தயார் நிலையில் இருந்தனர். இதனால் அபூபக்கர் சித்திக்கை கைது செய்ய முத்துப்பேட்டை ஒ,பி,எம், தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன், முத்துப்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் பால்ராஜ், இளங்கோ மற்றும் போலீசார் சென்று அபூபக்கர் சித்திக்கை காவல்நிலையம்  அழைத்தனர். இதனால் போலீசாருக்கும் அபூபக்கர் சித்திக்குக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இது  பற்றி தகவல் அறிந்ததும் SDPI கட்சியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை மோசமானதால் அங்கிருந்து போலீசார் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து  A. அபூபக்கர் சித்திக் கூறுகையில் திட்டமிட்டு பிரச்சனையை தூண்டி எங்களை பலிகடவாக்க நினைக்கிறது என்றும், இந்த வழக்கில் பாஜக பிரமுகரும் தான் உள்ளார் என்றும்  தெரிவித்தார்.

நமது நிருபர்:  

O.M. சுபைத் கான். BE

எனது திருமணத்திற்கு அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள் H. ஹமீது சுல்தான் அழைப்பு..


முத்துப்பேட்டை, செப்டம்பர் 07: முத்துப்பேட்டையில் உள்ள  அனைத்து சகோதரர்களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1434 துல்கஃதா  பிறை 1, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 08-09-2013 ஞாயிற்று கிழமை காலை 11:00 மணியளவில் பெரியோர் களால் நிச்சயித்த வண்ணம் நாச்சிக்குளம் லெப்பை தெரு மணமகள் இல்லத்தில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன். 
  
இப்படிக்கு: 

S/O: ஹுமாயுன் கபீர் 
0091 - 90439 40334...

குறிப்பு:

 காலை 9 மணியளவில் I.O.B. பேங்க் அருகில் வேன் புறப்படும்...

முத்துப்பேட்டையில் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாமிய (தாவா) நடமாடும் நூலகம் அறிமுகம்..






முத்துப்பேட்டை, செப்டம்பர் 05: முத்துப்பேட்டை TNTJ  கிளை 2 சார்பாக மாற்றுமத சஹோதரர்களுக்கு அல்லாஹ்வின் உதவியால் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் அறிந்துகொள்ளும் வகையிலான நடமாடும் நூலகம் அமைத்து இஸ்லாமிய புத்தகம் வழங்கப்பட்டது. 

கணவரை போலீசார் கைது செய்ததால், தஞ்சாவூரை சேர்ந்த பெண் 3 குழந்தைகளுடன் ஷார்ஜாவில் தவிப்பு:


ஷார்ஜா, செப்டம்பர் 04: ஷார்ஜா நேஷனல் பெயிண்ட் பகுதியில் வாடகை வேன் ஓட்டி வந்த சுதீஷ் என்பவரை போலீஸார் கைது செய்து விட்டதால் அவரது மனைவி தனது 3 குழந்தைகளுடன் தவிப்புக்குள்ளாகியுள்ளார்.தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதீஷ். இவர் நம்பர் பிளேட் வாங்கிய நிறுவனத்தில் கொடுத்த செக்யூரிட்டி செக்கை வங்கியில் டெபாசிட் செய்து செக் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டார்.

கணவர் கைதாகி விட்டதால் அவரது மனைவி சுந்தரி தனது 3 குழந்தைகளுடன் நடுரோட்டில் விடப்பட்டுள்ளார். பெரும் அதிர்ச்சியிலும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமலும் அவர் தவித்து வருகிறார். இவரது மூத்த மகள் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் நன்றாக படித்து வருவதால் பள்ளி நிர்வாகமே இவரது கல்விக் கட்டணத்தை செலுத்தி வருகிறது.உணவுக்காக அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உதவி செய்து வருகின்றனர். 

இந்தப் பெண்ணுக்கு உணவுப் பொருட்களோ அல்லது பிற உதவிகளோ செய்ய விரும்புவோர் 055 524 8000 / 055 53 89 276 எனும் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு உதவிடலாம்.

மதுரை சுங்கம் பள்ளிவாசலில் கேமரா: அதிருப்தியில் ஜமாத் உறுப்பினர்கள்.!!!



மதுரை, செப்டம்பர் 04: மதுரையில் உள்ள பிரபலமான சுங்கம் பள்ளி வாசல் வளாகத்திற்குள் 12 ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது தொடர்பாக ஜமாத் உறுப்பினர்கள் பலரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

போலீஸாரின் ஆலோசனைப்படி இந்த பள்ளிவாசலுக்குள் ரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும், சுங்கம் பள்ளிவாசல் ஜமாத் உறுப்பினர்கள் பலரும் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். அதேசமயம், முஸ்லீம் ஐக்கிய ஜமாத், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் ஆகியவை இந்த கேமரா பொருத்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் முஸ்லீம் சமுதாயத்தினரிடையே கருத்து பிளவு ஏற்பட்டுள்ளது.

*இந்த செய்தியை ஆகஸ்ட் 16 தேதியிட்ட ஒரு சில நாளிதழ்களும்,இணையதளங்களும் வெளியிட்டிருந்தன.

வழிபாட்டு தளங்களில் கண்காணிப்பு காமெரா பொருத்தவேண்டும் என்பது காவல்துறையின் வாய்மொழி உத்தரவுதான். அப்படியே பொறுத்தவேண்டும் என்றாலும் அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் பொருத்தவேண்டும் என காவல்துறை அறிவுறுத்த வேண்டும். இதை கூட காவல்துறை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் பள்ளிவாசலில் மட்டும் பொறுத்த வேண்டும் என்பது உள்நோக்கம் கொண்டதும் ஒரு சமுதாயத்தை அவமதிப்பதும் ஆகும்.

நெல்லை மேலப்பாளையம், மதுரை நெல்பேட்டை ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் மீது காவல்துறை நிகழ்த்தி வரும் வரம்பு மீறல் நடவடிக்கைகள் குறித்த உண்மை நிலையை அறிய மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தைச் சேர்ந்த பேரா.அ.மார்க்ஸ் தலைமையில் சென்ற மனித உரிமை ஆர்வலர்கள் குழு மதுரையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி, மதுரை காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்தது.

இதில் பேசிய பேரா.மார்க்ஸ், ''போலீசாரின் (மறைமுக) உத்தரவின் பேரில் முஸ்லிம் பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப் பட்டிருப்பதாக உள்ளூர் முஸ்லிம்கள் கூறுகின்றனர். இப்படி சிவில் சமூக மக்களின் (அன்றாட) வாழ்க்கையை கண்காணிப்பது சட்டவிரோத நடவடிக்கையாகும்'' எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

முஸ்லிம்களை குற்றப்பரம்பரை போல் சித்தரிக்கும் போக்கை காவல்துறை நிறுத்திக்கொள்ள வேண்டும்.எங்கேனும் பள்ளிவாசல்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்தும் படி காவல்துறை கட்டாயப்படுத்தினால் சம்மந்தப்பட்ட ஜமாத்துகள் நீதிமன்றத்தில் காவல்துறைக்கு எதிராக வழக்கு தொடுக்க தயங்கக்கூடாது.
காவல்துறை இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தை தமிழக காவல்துறை தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறோம்.

நன்றி: INTJ  

முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் குறித்த INTJ வின் மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி அவர்களின் பேட்டி.


முத்துப்பேட்டை, செப்டம்பர் 04: முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி விநாயகர் ஊர்வலத்திற்கு முன் செல்லும் பிரசார வாகனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாத் கேட்டுக் கொண்டுள்ளது. முத்துப்பேட்டையில் மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:  

முத்துப்பேட்டையில் வரும் 7 ஆம் தேதி பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர். வருடந்தோறும் நடைபெறும் இந்த விநாயகர் ஊர்வலத்தில் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன் இந்திய தவ்ஹீத் ஜமாத் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் முடிவில், திருவாரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு விநாயகர் பாதையை மாற்றம் செய்ய உத்தரவிட்டது.

 அதன்படி மாற்றுப்பாதையில் ஊர்வலம் சென்று வந்த நிலையில் சில கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டன. இருப்பினும் தொடர்ந்து நடைபெறும் விநாயகர் ஊர்வலமும், ஊர்வலத்திற்கு முன் செல்லும் வாகன பிரசாரமும், இன உணர்வுகளை தூண்டும் விதமாகவும், ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. அதனை தடை செய்ய வேண்டும். மேலும், முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கக்கூடிய பகுதிக்குள் வரும்போது, கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால்தான் இப்பகுதியில் பதற்றம் ஏற்படுகிறது. இன உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் செயல்படுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் அமைதியை நிலை நாட்டி சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். 

சாதி, மத ஊர்வலங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை பின்பற்றி உத்திரபிரதேச மாநிலத்திலும் மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநில அரசை பின்பற்ற அனைத்து மத ஊர்வலங்களை தமிழகத்திலும் தடை செய்வது குறித்து தமிக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். முத்துப்பேட்டையில் பெறும் எதிர்பார்ப்போடு நடக்க இருக்கும் ஊர்வலத்தை காவல்துறை எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் முடித்துத்தர வேண்டும் என்றார்.  

source from: www.muthupettaiexpress.com 


கூத்தநல்லூர்: முஸ்லிம் மாணவிகளை தலையில் முக்காடு போட தடைவிதித்த ஃபாசிஸ தலைமை ஆசிரியர்...


கூத்தநல்லூர், செப்டம்பர் 03:  திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மாநகராட்சி உட்பட்ட முஸ்லிம் மாணவிகள் பெரும்பாலானவர்கள் படிக்கும் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர், இனிமேல் பள்ளிக்கு வரும் முஸ்லிம் மாணவிகள் தலையில் முக்காடு (ஸ்கார்ஃப் ) அணியக்கூடாது என்றும், அப்படி அணிந்து வந்தால் முட்டி போட வைப்பேன் என்றும் முஸ்லிம் மானவிகை பார்த்து கடுமையாக மிரட்டி உள்ளார். இவரின் மிரட்டலுக்கு பயப்படாத மாணவிகள் இன்று தலையில் முக்காடு (ஸ்கார்ஃப்) அணிந்து சென்றுள்ளனர். இதனைக் கண்ட தலைமை ஆசிரியர் தலையில் முக்காடு (ஸ்கார்ஃப்) அணிந்துள்ள மாணவிகளுக்கு தண்டனை அளித்துள்ளார். இந்த தகவல் அறிந்த பெற்றோர்கள், ஊர் ஜமாத்தார்கள், மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் உட்பட அனைவரும் பள்ளியின் முன் திரண்டனர். தகவல் அறிந்த காவல்துறை பிரச்சனை இல்லாமல் சுமுக முடிவு எடுக்க தலைமை ஆசிரியரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

நன்றி: தடா அப்துல் ரஹீம் 

முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வல கலந்தாய்வு: கூட்டத்தை புறக்கணித்தது முஸ்லிம் ஜமாஅத்...



முத்துப்பேட்டை, செப்டம்பர் 03: முத்துப்பேட்டையில் அடுத்த மாதம் நடக்கும் விநாயகர் ஊர்வலம் குறித்து கருத்தாய்வு கூட்டம் நேற்று காலை தாசில்தார் ராஜகோபால் தலைமையில் ஒரு பிரிவினருக்காக நடத்தப்பட்டது. நேற்று மாலை முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகிகளுக்குகான கூட்டம் நடக்க இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் முத்துப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தர்ஹா பகுதியிச் சேர்ந்த முஹம்மது அப்துல்லா என்பவரது டூவீலரில் சைலன்சரில் ஓட்டை இருப்பதாக பறிமுதல் செய்தார். இதனால் இதனால் அதிருப்தி அடைந்த முஸ்லீம் ஜமாஅத் நடக்க இருந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அவிவித்தனர். இதுகுறித்து ஐக்கிய ஜமாஅத் தலைவர் பாக்கர் அலி கூறுகையில் சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தொடர்ந்து இஸ்லாமிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரை பணி மாற்றம் செய்ய வேண்டும் என்பதை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்தோம். பால்ராஜின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 10 ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார். 


நமது நிருபர்: பரக்கத்து நிஷா 





உயிருக்கு போராடிய இஞ்சினியரிங் கல்லூரி மாணவி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்ப்பு சுகாதராத்துரை நடவடிக்கை.








முத்துப்பேட்டை, செப்டம்பர் 02: முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு, பத்தாங்காடு சாலையில் வசிப்பவர் ராஜேந்திரன். இவர் விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி திலகவதி, இவரது மூத்தமகள் நிவேதிதா (21). அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் இஞ்சினியரிங் கல்லூரியில் 2010-ம் ஆண்டு டிப்ளோமோ படித்து வந்தார். தற்பொழுது கல்வி இறுதியாண்டு அவர் படித்து வந்த நிலையில் கல்லூரி விடுதியில் படித்து வந்த அவருக்கு ஓராண்டு முன் கடும் வையிற்றுவலி ஏற்பட்டது. இதனால் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். மீண்டும் கல்லூரிக்கு சென்ற நிவேதிதாவுக்கு வயிற்றுவலி அதிகமானது.  இதையடுத்து ஊர் திரும்பிய அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் சளித்தொல்லை, அல்சர் பின்னர் புற்றுநோய், மஞ்சள் காமாலை, தொண்டையில் நோய் என்று ஆளாளுக்கு ஒரு வியாதியை கூறி வந்தனர். 

இப்படி பல மருத்துவரிடம் காட்டியும் பயனில்லாமல் எந்த நோயால் நிவேதிதா பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியாத நிலையில் தற்பொழுது நிவேதிதா 50 கிலோ எடையுடன் இருந்த அவர் இன்று 25 கிலோவாக மாறி உடல் மெலிந்து உயிருக்கு போராடி வருகிறார். அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது. சிகிச்சைக்காக அவரது பெற்றோர் வட்டிக்கு 2 இலட்சம் வரை கடன் வாங்கி கடனாளியாக தவிக்கிறது. அவரது குடும்பம். 

முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை பெற அடையாள அட்டை இல்லாததால் விண்ணப்பித்து ஒரு மாதத்திற்கு முன்புதான் அடையாள அட்டை பெற்ற நிலையில் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது என்று விபரம் தெரியாமல் பெற்றோர் தவித்து வருவதாகவும் அவர்களுக்கு சிறு செலவு செய்வதற்கு கூட பொருளாதார வசதி இல்லாமல் தவித்து வருவதாக நேற்று தனியார் நாளிதழ் ஒன்றில் படத்துடன் செய்தி வெளியானது. இந்த செய்தியை கண்ட பொதுமக்கள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உதவி செய்ய முன்வந்து குவியத்துவங்கினர். 

நிவேதிதாவுக்கு ரோட்டரி சங்கம், வர்த்தக கழகம் மற்றும் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் நிதி உதவி அளித்தனர். தாசில்தார் ராஜகோபால் மாணவியை நேரில் கண்டு பல்வேறு உதவிகள் அளிப்பதாக உறுதி கூறினார். இந்த நிலையில் உயிருக்கு போராடி வரும் மாணவி நிவேதிதாவின் பரிதாப நிலையை அறிந்த தமிழ்நாடு அரசு சுகாதரா துறை சேவை செய்ய முடிவு செய்தது. அதன் படி தமிழக அரசு சுகாதார துறை செயலாளர் ராதாகிருஸ்ணன் நிவேதிதா பெற்றோரிடம் பேசி சென்னைக்கு அழைத்துவர உத்தரவிட்டார்.

 இதனை அறிந்த தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சென்னைக்கு அழைத்துச் சென்று சேர்க்கும்வரை அனைத்து செலவினத்தையும் ஏற்றது. மேலும் அனைத்து கட்சியை சார்ந்தவர்களுக்கும் மாணவி நிவேதிதாவுக்கு பொருளாதார் உதவிகளை வாரி வழங்கினர். சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

நமது நிருபர்:

முஹைதீன் பிச்சை


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)